Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Neeyindri Vaazhveno

Neeyindri Vaazhvaeno 27 2

அதை கேட்டு சாதனாவிற்கு  ஒரு மாதிரி ஆகி விட்டது. அன்று இரவு தனிமையில் சாதனா ரிஷியிடம் காய்ந்தாள். “நான் உங்ககிட்ட  பாட்டி பத்தி எதாவது சொன்னேனா….”

 

“இல்லை, ஏன் கேட்கிற?”

 



Advertisement

“அப்புறம் ஏன் மாமா பாட்டியையும் சேர்த்து கூடிட்டு போறாரு. நீங்க தான் எதோ சொல்லி இருக்கீங்க.”

 

“ஆமாம்,  சாதனா கிட்ட குழந்தையை பத்தி பேசாதீங்கன்னு நான் தான் சொன்னேன். இப்ப என்ன அதுக்கு?”

Advertisement

 

Advertisement

“என்னை எல்லோரும் தப்பா நினைக்க மாட்டாங்களா…”

 

“இதுக்கே இப்படின்னா…. நீ விவாகரத்து கேட்டது தெரிஞ்சா…. இன்னும் காரி துப்புவாங்களே…. அப்ப என்ன செய்வ?” ரிஷி கேட்க….

Advertisement

 

“அது அவங்களுக்காகவும் தான் சொன்னேன்.”என மெலிந்து விட்ட குரலில் சாதனா சொல்ல….

 

“வீட்ல பெரியவங்கன்னு இருந்தா பேரன் பேத்தி வேணும்னு தான் ஆசைப்படுவாங்க. அதுக்காக உன்னை வீட்டை விட்டு விரட்டனும்னு அவங்க ஒருநாளும் நினைக்க மாட்டாங்க.”

 

“அவங்க தான் அந்த காலத்து ஆளு எதோ பேசுறாங்கன்னு விடாம…. நீதான் லூசு மாதிரி யோசிக்கிறியே… அப்ப வேற என்ன பண்றது? அவங்களை தான் அடக்கி வைக்கணும்.” அவன் சொன்னதை கேட்டு சாதனா கண் கலங்க…. ரிஷி அவளை சமாதானம் செய்யவில்லை.

 

“பாட்டி இங்க இருக்கட்டும் அத்தை நான் பார்த்துகிறேன்.” சாதனா ஜோதியிடம் மெல்ல சொல்லிப் பார்த்தாள்.

“அவங்களுக்கு உடம்பு சரியில்லை சாதனா. அதனால… அவங்க எதாவது வெடுக்குன்னு பேசிடுவாங்க. அவங்க எங்களோட இருக்கிறது தான் சரி வரும்.” என ஜோதி முடித்துக் கொண்டார்.

 

மறுநாள் சென்னை கிளம்புவதால்… அன்று இரவு வீட்டினர் எல்லோருக்கும் பெரிய விருந்தே தயாராகியது. எல்லோரும் சேர்ந்து உணவு அருந்தினர். வெற்றி கூட வந்திருந்தான்.

 

சாப்பிடும் போது சாதனா கொறிப்பதை பார்த்த பாட்டி “நல்லா நறுக்குன்னு அள்ளி சாப்பிட்டானே தானே பிள்ளை பெற உடம்புல தெம்பு இருக்கும்.” என்றார்.

 

ரிஷிக்கு எரிச்சல் வந்தது. அவன் எதோ பதில் சொல்ல வந்தான்.  அதை உணர்ந்த சாதனா இருக்கைக்கு அடியில் அவனின் கையை பிடித்து அழுத்தினாள்.

 

ரிஷி அவளைப் பார்க்க…. “ப்ளீஸ் எதுவும் சொல்லிடாதீங்க…” என அவள்  பார்வையால் கெஞ்ச…. ரிஷியும் விட்டு விட்டான். அதை மற்ற அனைவருமே கவனித்தார்கள்.

 

“அம்மா நீங்க எல்லாம் இல்லாம எனக்கு ரொம்ப போர் அடிக்கும்.” ப்ரீதா சொல்ல……

 

[the_ad id=”6605″]

 

“போர் அடிச்சா ஒரு பிள்ளையை பெத்து வளர்க்க வேண்டியது தான…” என்றார் பாட்டி.

 

“அதுக்குள்ளவா… போங்க பாட்டி.” ப்ரீதா சிணுங்க….

 

“ஏன் உனக்கு பிள்ளை பெத்துகிற வயசு இல்லையா? உன் புருஷனை சொல்லணும், உன் இஷ்ட்டத்துக்கு விட்டிருக்காரு இல்லை….” என வெற்றிக்கும் ஒரு குட்டு விழுந்தது.

 

அமிர்தா பாட்டியின் பேச்சே அப்படித்தான். அவர் எல்லோரிடமுமே வெடுக்கென்று தான் பேசுவார். ஏற்கனவே உடலும் மனமும் பலகீனமான நிலையில் சாதனாவிற்கு அவரின் பேச்சு பெரிதாக தோன்றி விட்டது.

 

மறுநாள் ராஜ்மோகனும்  ஜோதியும் சென்னை கிளம்பி விட… வீடே வெறிச்சென்று இருந்தது. சாதனாவிற்கு  ஒரே போர். ரிஷியும் அவளோடு பேசுவதில்லை. அவ்வளவு பெரிய வீட்டை சுத்தி சுத்தி வருவதும், டிவி பார்ப்பதுமாக பொழுதை போக்கினாள்.

 

ஒருநாள் மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த ரிஷி, அவர்கள் அறையில் வைத்து “சாதனா, உன்கிட்ட ஒரு பொறுப்பு கொடுத்தேனே…. அதுக்கு எதாவது செஞ்சியா?” என கேட்க…. எதை பற்றி என சாதனாவிற்கு  புரியவில்லை… அவள் கேள்வியாக அவனைப் பார்க்க….

 

“எனக்கு பொண்ணு பார்க்க சொன்னேனே சாதனா…. அதுக்குள்ள மறந்துட்டியா… நான் உன்னை மாதிரி இல்லைப்பா….” என்றவன், “நான் உனக்கு சில போடோஸ் வாட்’ஸ் அப்ல அனுப்புறேன். பார்த்திட்டு எப்படி இருக்குன்னு சொல்லு?” என்றான்.

 

அவன் பேச்சை கேட்டு சாதனாவிற்கு  கொதித்துக் கொண்டு வந்தது. ஆனால் வெளிகாட்டவில்லை…. எதாவது பெண்கள் படமாக இருக்கும், இதை வேறு பார்க்கனுமா என விருப்பம் இல்லாமல் அவள் பார்க்க… வந்தது எல்லாம் ஆண்களின் புகைப்படங்கள்.

 

தப்பா அனுப்பிட்டானா என குழம்பியவள், ரிஷியிடம் சென்று காட்ட… “ஹான்  வந்துடுச்சா….இவர் லண்டன்ல பெரிய டாக்டர். அடுத்து இருக்கார் பாரு… இவர் இங்க சென்னை தான். ஆனா ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்.”

 

இப்படியே ஒவ்வொருவராக சொல்லிக்கொண்டு வந்தவன், “இவங்க யாரும் குழந்தை வேணும்னு உன்னை கட்டாய படுத்தவே மாட்டாங்க. ஏன்னா ஏற்கனவே எல்லோருக்கும் குழந்தை இருக்கு. அவங்களும் டைவேர்ஸ் ஆனவங்க தான். அதனால பிரச்சனை இல்லை…”

 

இதுவரை அவன் பேசுவதை வேற்று கிரகவாசி போல் புரியாமல் பார்த்தவளுக்கு, அவன் கடைசியாக சொன்னதும் புரிய ஆரம்பிக்க… அவள் ரிஷியை வெறித்து பார்த்தாள். அதை கண்டும் காணாதது போல் ரிஷி பேச்சை தொடர்ந்தான்.

 

“எனக்கும் பொறுப்பு இருக்கு. உன்னை மட்டும் டைவேர்ஸ்கு  அப்புறம் அப்படியே விட முடியுமா சாதனா…. அவங்க எல்லாம் உனக்கு நான் பார்த்த மாப்பிள்ளைங்க. உனக்கு யாரை பிடிச்சிருக்கு சொல்லு? என அவன் சொல்லி முடிக்கவில்லை….

 

சாதனா கையில் இருந்த செல்லை ஆத்திரத்தில் தூக்கி அடிக்க… அது பறந்து சென்று எதிரில் இருந்த சுவற்றில் மோதி சுக்கு நூறாக உடைந்தது.

 

ரிஷிக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. அவன் எதுவும் சொல்லாமல் மெளனமாக இருக்க….

“இப்படி பண்ண உங்களுக்கு வெட்கமா இல்லை…. என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி இருக்கு?”  சாதனா கொதித்து போய் கேட்க…..

 

“இதை நான் உன்னைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வி. உனக்கு என்னை பார்த்தா எப்படி இருக்கு? என்னை மட்டும் ரொம்ப ஈஸியா வேற கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்ன…. எனக்கு எப்படி இருந்திருக்கம்? அது உனக்கும் புரியணும் இல்லை… அதுக்குத்தான் இப்படி பண்ணேன்.” என்ற ரிஷி சாதனாவிற்கு ம் மேல் கொதிப்புடன்  இருந்தான்.

 

 

[the_ad id=”6605″]

 

“அதுக்காக இப்படி பண்ணுவீங்களா?”

 

“என்னை வேற என்ன பண்ண சொல்ற? நீ தான் வேற என்ன சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்டேங்கிறியே…. எனக்கு உன்னை மாதிரி நினைச்சதும் கண்ணீர் எல்லாம் வராது. அதனால நான் எனக்கு தெரிஞ்ச வழியில புரிய வைக்க நினைச்சேன்.”

 

ரிஷி என்ன சொன்ன போதிலும் சாதனாவிற்கு  மனமே ஆறவில்லை…. என்னை போய் இன்னொருத்தரோடசேர்த்து வச்சு  எப்படி இவன் பார்க்கலாம்? என அவளுக்கு ஆத்திர ஆத்திரமாக வர…. அங்கிருந்து விரைந்து சென்றாள்.

 

வேகமாக படிகளில் கீழே இறங்கியவள், வெளியே சென்று காரில் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து கதவை மூட…. அவளால் மூட முடியவில்லை… ரிஷி கதவை பிடித்திருந்தான்.

 

“என்னை விடுங்க நான் போகணும்.” சாதனா சீற….

 

“எங்க போறேன்னு சொல்லு? நானே அனுப்பி வைக்கிறேன். இப்ப இருக்கிற நிலைமையில நீ காரை ஓட்ட வேண்டாம். அது உனக்கும் நல்லது இல்லை…. எதிரில் வர்றவங்களுக்கும் நல்லது இல்லை…” ரிஷி பொறுமையாக பேச….

 

அவனைப் பார்க்காமல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு “நான் எங்க வீட்டுக்கு போறேன்.” என அவள் சொல்ல…. ரிஷி அவளை மறுத்து எதுவும் பேசவில்லை. ஓட்டுனரை அழைத்து காரை எடுக்க சொல்லி… அவளை அனுப்பி வைத்தான்.

 

வீட்டிற்குள் வந்தவன் உடனே வெற்றியை அழைத்தான்.

 

“இப்ப என்ன பிரச்சனை?” வெற்றி சரியாக கேட்க….

 

“ம்ம்… உன் தங்கச்சி என் மேல கோவிச்சிகிட்டு அங்க தான் வர்றா….”

 

“நல்லா தானே இருந்தா… திரும்ப என்ன ஆச்சு?

 

“எங்க நல்லா இருந்தா…. உன்னை மெண்டல் ஆக்கின மாதிரி தான் என்னையும் ஆக்கிட்டு இருந்தா….”

 

“ஐயோ ! அவ அதை விடவே மாட்டாளா…”

 

“இல்லை இனிமே டைவேர்ஸ்ன்னு அவ பேச மாட்டா…  அதுக்குத்தான் அவளுக்கு அதிர்ச்சி வைத்தியம் செஞ்சேன். கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிடுச்சு. ரெண்டு நாள் யோசிச்சா சரி ஆகிடுவா…”

 

“அப்படி என்ன பண்ண?”

 

“சிம்பிள்… அவ என்னை வேற கல்யாணம் பண்ணிக்க சொன்னா… பதிலுக்கு நான் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்தேன். கோவிச்சிக்கிட்டு வந்திட்டா….” ரிஷி சொல்ல…

 

[the_ad id=”6605″]

 

 

“அவளுக்கு ரொம்ப கஷ்ட்டமா இருந்திருக்கும் ரிஷி. அப்பா அவளுக்கு மாப்பிள்ளை பார்த்த போது எல்லாம், உன்னை மனசுல வச்சிக்கிட்டு தான் தட்டி விட்டுட்டே இருந்தா….” வெற்றி வருத்தமாக சொல்ல….

 

“எனக்கு மட்டும் சந்தோஷமா என்ன? ஆனா என்னை இப்படி அவ தான பண்ண வைக்கிறா…” என்றான் ரிஷி.

 

அவளுக்கு  நல்லா வேண்டியது தான் என நினைத்த வெற்றி“சரி இப்ப நான் என்ன பண்ணனும்?” என கேட்க….

 

“இப்பதான் சரியா கேட்கிற? அவ ரெண்டு நாளைக்கு மேல அங்க இருக்க கூடாது.”

 

“அவளை திட்டடுமா… இல்லை அடிகட்டுமா…” வெற்றி வேண்டுமென்றே கேட்க….

 

“ஹலோ…. அவ என் பொண்டாட்டி நியாபகம் இருக்கட்டும். கல்யாணத்துக்கு முன்னாடி கையை நீட்டின பழக்கமோ… அதெல்லாம் ஒன்னும் பண்ண வேண்டாம். ஏன் வந்தேன்னு காரணம் கூட அவகிட்ட கேட்க வேண்டாம். அவளாவே இங்க வர்ற மாதிரி பண்ணனும்.” என்றான் ரிஷி.

 

“அது எப்படி?”

 

“அது உனக்கு தான் தெரியனும். அதெல்லாம் நான் சொல்லித்தந்தா நல்லா இருக்காது. வச்சிடுறேன்.” என ரிஷி வைத்து விட….

 

“என்ன இவன் லூசா…. எதுவும் கேட்காம எப்படி அவளை திருப்பி அனுப்ப முடியும்?” என வெற்றி தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!