Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Neeyum Seiyya Vaa Kaathaal

Neeyum Seiyya Vaa kaathal 2 2

 

அன்றொரு  நாள் ஹாலிவுட் பக்கம் பேச்சு போக… யாரோ அனகோண்டாவை இழுக்க கொஞ்சம்கூட ஈவு இறக்கமின்றி “எங்க தோட்ட வீட்லயும் இருந்தது..” என்று தொடங்கியவர் அனகோண்டாவில் இருபது சீரீஸ் எடுக்கமளவு கண்டெண்ட்டை அவிழ்த்துவிட… நொந்து நொறுங்கியவளின் மனம் முடிவே செய்துவிட்டது.. வந்ததல்ல அனகோண்டா.. இப்பொழுது பேசிக்கொண்டிருப்பதுதான் என…

 

இத்தனை வருடங்கள் கழிந்தும் அவள் அந்த அனகோண்டாவை மட்டும் மறந்தபாடில்லை!



Advertisement

 

“எல்லாரும் சௌக்கியம் சர்விமா.. நீ எப்படியிருக்க? அம்மா எப்படியிருக்கா? என் அம்மா எப்படியிருக்காங்க?” என்று விசாரிக்க

 

Advertisement

“ஆல் ஃபைன் மாம்ஸ்! இதானே வேணாங்கறது.. ஆச்சி எனக்கு அர்ச்சனை பண்ணதாலதான கூப்பிட்டீங்க? அப்பறம் ஏன் இப்படி?” என்றவளின் குரலில் கேலியிருந்தாலும் நீ அழைத்த காரணத்தை நானறிவேன் என்ற பொருள் மறைந்திருந்தது.. அதை ஆதவனும் அறிவார்.

Advertisement

 

“அப்படியில்லடா… என்னாச்சு? என்ன ப்ரச்சனை? அந்த அரவிந்த் எதாவது ப்ரச்சனை பண்ணாரா?” என்று பொறுப்பான தாய்மாமனாய் மாறிட இவளோ,

 

Advertisement

“ப்ரச்சனைலாம் ஒன்னுமில்ல மாம்ஸ்… எப்பவும்போலதான்… ஆச்சி ஒரு பக்கம்.. நான் இன்னொரு பக்கம்.. அரவிந்த் ஆ? அவரென்ன அவ்ளோ பெரிய அப்பாட்டக்கரா?”

 

“சர்விமா.. எல்லாரையும் அவ்ளோ ஈசியா எடுத்துக்கக்கூடாதுடா! ஆச்சிக்கிட்ட நான் பேசறேன்..”

 

“அதெல்லாம் வேண்டாம் மாம்ஸ்… ஆர்க்யூமெண்ட் இல்லாத வீடெது? இல்ல difference of opinion இல்லாத உறவுதான் இருக்கா? என் ஆச்சி என்ட்ட கோச்சிக்கறாங்க…” என்றுவிட

 

“அடேங்கப்பா!! உன் ஆச்சியாமா? அதுசரி…” என்று கிண்டலாய் இழுத்தவர் கணப்பொழுதில் சீரியஸாய் மாறினார்,

 

[the_ad id=”6605″]

 

 

 

“ஆனா இத கேட்டா அம்மா நிஜமாவே சந்தோஷப்படுவாங்க… இவ்ளோ பேசறல்ல   ஆச்சிட்ட ஆர்க்யூ பண்ணாம இருந்தாதான் என்ன?” என்க கடகடவென சிரித்தவள்,

 

“அது வேற டிபார்ட்மெண்ட் மாம்ஸ்! பாசத்துக்காக பாய்ண்ட்ஸ விட்டுகுடுக்க முடியுமா?”

 

“உன்ன உங்கம்மா லா சேர்த்திருக்கனும்!! தப்பி BBAல சேர்த்துட்டா..”

 

“ஹா..ஹா.. மாம்ஸ்! எங்கம்மா சேர்த்துவிட்ட படிப்பு அழைக்கிறது… கிளம்பறேன் பை…” என்றாள் மணியை பார்த்துவிட்டு.

 

“ஓகேடா! ஹேவ் எ க்ரேட் டே அஹெட்! பை” என்றபடி அழைப்பை துண்டித்தவரினுள் சிறு துளி இதம்..

 

கண்ணாடியில் ஒருமுறை தன்னை சரிபார்த்துக் கொண்டாள் சர்வி. நேவி ப்ளூவிலான பலாஸோ பேண்ட்டும் பிங்க் நிற ஷார்ட் டாப்பிலுமாய் இருந்தவள் பாதி முடியை  இழுத்து க்ளிப்பிற்க்குள் அடக்கியபடி தோள் பையை தூக்கிக்கொண்டு வெளியேறினாள்.

 

“என்னாச்சு? ஏன் லேட்?” என்ற ஆதிராவிடம் கண்ணசைவிலேயே லோகநாயகியின் அறையை காட்டியவள், “மாம்ஸ் கூப்ட்றுந்தாங்க.. அதான் லேட்!” என்றாள் செருப்பை மாட்டிக்கொண்டே.

 

“சரி நீ ஆச்சிட்ட சொல்லிட்டு கீழ என்ட்ரன்ஸ்ல வெய்ட் பண்ணு நான் வண்டியெடுத்துட்டு வரேன்..” என்றவள் சாவியை தூக்கிக்கொண்டு வெளியேறிவிட ஆச்சியிடம் சொல்லிவிட்டு குடுகுடுவென ஆதிராவிற்கு முன் என்ட்ரன்ஸிற்கு வந்து காத்திருக்க தொடங்கினாள் சர்வி..

 

என்றும் இந்நேரத்தில் அவளுக்கு கம்பனி குடுக்கும் நிலாவை அன்று வெகு நேரமாகியும் காணவில்லை. நிலா அதே அபார்ட்மெண்ட்டில் குடியிருக்கும் குட்டி தேவதை… மூன்றாம் வகுப்பு மாணவி.. அவளும்  இதே நேரத்தில்தான் ஸ்கூல் பஸ்ஸுக்காக அங்கு காத்திருப்பது.

 

அபார்ட்மெண்ட் பொடிசுகளுக்கு சர்வியக்கா ஃபேவரெட் என்றால் சர்விக்கோ நிலா ஸ்பெஷல்!

 

அன்று சர்வி வந்ததிற்கு பிறகு  வந்த நிலாவின் வதனத்தில்  பொலிவில்லை..

 

அவளுயரத்திற்கு குனிந்தமர்ந்தவள் “மூனுக்கு என்னாச்சு?” என்று பரிவாய் விசாரித்தாள்.

 

கொஞ்ச நேர மௌனத்திற்கு பிறகு வாயைத் திறந்தாள் நிலா “ஹோம் வர்க் எழுதல.. “என்று உள்ளே சென்றுவிட்ட குரலுடன்.

 

அவளது பதிலில் சட்டென சிரித்துவிட்டவள் நிலா முறைக்கவும்

 

“ச்ச! இவ்ளோதானா? இதுக்கா ஃப்யூஸ் போன பல்ப் மாதிரி மூஞ்ச வச்சிருந்த?” என்று வேறு சொல்லிவிட அவள் எதிர்பார்த்ததிற்கு நேரெதிராய் நிலாவின் முகம் சுருங்கியது.

 

அதற்குள் வந்துவிட்ட ஆதிரா வேறு “சர்வி” என்று அவளை அழைத்துக்கொண்டிருக்க

 

“ஒரு நிமிஷம் பட்டூஸ்” என்றவள் நிலாவிடம்

 

“நான்லாம் எத்தனை தடவை எழுதாம போய் அடிவாங்கிருக்கேன் தெரியுமா? ஆனா இப்பொல்லாம் ஒழுங்கா எழுத ஆரம்பிச்சிட்டேன்… பேசாம இனி ஈவ்னிங் வீட்டுக்கு  வா நாம சேர்ந்து உக்காந்து ஹோம் வர்க் எழுதிடுவோம்ன?” என்றவள் இளையவள் முகத்தில் புன்னகை மலரவே நிம்மதியுற்றவளாய் ஆதிரா கொடுத்த ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு வண்டியில் ஏறினாள்.

 

ஆதிரா கல்லூரியில் இறங்கிக்கொள்ள  சர்வியோ நடுரோடென்றும் பாராமல் அன்னையின் கன்னத்தில் இதழ் பதித்தது மட்டுமின்றி அவளிடமிருந்தும் பெற்ற பின்னரே அவளை அவ்விடமிருந்து நகரவிட்டாள்.

 

முதலில் எத்தனையோ முறை ஆதிரா சொல்லிப் பார்த்துவிட்டாள்.. இது ஸ்கூல் வாசலில்லை காலேஜ் வாசல் என அவள் கேட்டாதானே!? ” என் பட்டூஸ்க்கு நான் குடுக்கறேன்..” என்று மறு கன்னத்திலும் கொடுத்துவிட்டு செல்வாள்.

 

ஆதிரா காம்பஸினுள் நுழைய  சர்வி  வண்டியில் தான் படிக்கும்  கல்லூரியை நோக்கிப்  பறந்தாள்.

 

இதுதான் அவர்களது வழக்கம். தினமும் காலையில் வண்டியை எடுக்கும் ஆதிரா அவள் காலேஜில் இறங்கிக்கொள்ள சர்வி அங்கிருந்து தன் காலேஜிற்கு சென்றிடுவாள். ஏனெனில் ஆதிரா ப்ரொஃபஸர் ஆதலால் அவர் கிளம்ப கொஞ்சம் நேரமெடுக்கும். முதலில் கிளம்பும் சர்வி பொறுமையாய் ஆதிராவின் காலேஜ் வாசலில் வந்து காத்திருக்கவும் ஆதிரா வரவும் அவள் ஓட்டுவதற்காக பின்னால் தள்ளி அமர்ந்துக் கொள்வாள்.  பின் இருவருமாய் சேர்ந்து மாலை நேரத்திற்கு இதமாய் பக்கத்து கடையில் டீ குடித்துவிட்டு மனசாட்சியே இல்லாமல் அடுத்த ஐந்து நிமிடத்தில் ஒரு ஐஸ்க்ரீமையும் உள்ளே தள்ளிக்கொண்டே வீட்டிற்கு செல்வர்.

 

[the_ad id=”6605″]

 

 

 

ஆதிராதான் ஒற்றை காலில் நின்று சர்வியை வேறு காலேஜில் சேர்த்தது. ஏனெனில் அவளுக்காகவென அவள் சண்டையிட்டதைவிட ஆதிராவிற்காக சர்வி சண்டையிட்டதே அதிகம்.. இதில் இருவரும் ஒரே இடத்தில் என்றால்? நிச்சயம் மூன்று வருடங்களில் யார் மண்டையையாவது சர்வி உடைத்திருக்கக்கூடும்.

 

வண்டியை ஸ்டூடண்ட்ஸுக்கான பார்க்கிங் லாட்டில் நிறுத்திவிட்டு குட்டி ஓட்டத்துடன்  க்ளாஸினுள் நுழைந்த சர்வியின் முகம் முழுதும் சிந்தனை ரேகைகள் படர்ந்திருந்தன.. அவளிடத்தில் சென்று அமர்ந்தவள் தீவிர யோசனையில் இருப்பதின் அடையாளமாய் ஒரு காதில் மட்டும் இயர்ஃபோனிருந்தது. அவளது எண்ணம் முழுதும் நிலாவைச் சுற்றியே வந்தது.

 

சற்று நேரம் அமைதியாய் பொறுத்துப்பார்த்தவர்களோ அவள் இன்னும் அதே யோசனையில் இருக்கவே எப்பொழுதும்போல முதல் பெஞ்சில் இருந்தவர்கள் பின்னாலும் மூன்றாவது பெஞ்சிலிருந்தவர்கள் முன்னாலும் திரும்பி அமர்ந்தவர்களாய் பேசிக்கொண்டிருந்தவர்களில் இருந்து பூரணி சர்வியின் இயர்ஃபோனை எடுத்து தன்  காதில் வைத்துக்கொண்டாள்.

 

“மெல்லச் சிரித்தாய்..

என் உள்ளம் சரித்தாய்..

விழியாலே என்னை நீ தீண்டினாய்…” என்ற வரிகள் அவள் செவி வழி செல்ல கண்களிரண்டும் குறும்பில் மின்ன ஃபோனிலிருந்த இயர்ஃபோனை பிடுங்கியவள்,

 

“மேடம் என்ன பாட்டு கேக்கறாங்க பாருங்க!” என்று கத்த அப்பொழுதே சர்வியும் கவனித்தாள் அப்பாட்டை..!!

 

சிந்தனைக் கடலில் நீந்திக் கொண்டிருந்தவளுக்கு பாட்டு  “மார்கழி பூவே”விலிருந்து “மெல்லச் சிரித்தாய்”க்கு மாறியதை அவள் உணர்ந்திருக்கவில்லை.

 

“ஆஹா…” என்று ஐவரும் ஒரு சேர இழுக்க தலையிலடித்துக் கொள்ளாத  குறையாக அமர்ந்திருந்தாள் சர்வி.

 

சஹி “இவ மட்டும் எப்படி எப்பவும் பக்கீஸ் லவ் மோட்லையே இருக்கா?” என்க அதற்கு தியாவோ,

 

“ஒன்பது கிரங்களும்  ஓரே நேர்கோட்ல நின்னா அப்படிதான் சஹி..”

 

நிது” அப்போ நம்ம கிரகம்லாம் எப்படி நிக்கும் தியா?” என்று சீரியஸாய் வினவ

 

கடுப்பிலிருந்த தியா “நடுரோட்ல நிக்கும் நிது!”என்றுவிட அத்தனை நேரம் அமைதியாய் இருந்த சர்விக்கு அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்தது.

 

“ஏன் லேட்? காலைலயே உன் ஆள க்ரௌண்ட்ல பாத்தேன்..” என்ற தியாவைக் கண்ட சர்வியின் கண்கள் இரண்டும் மின்னியது  அச்செய்தியில்.

 

“அவன் ஒன்னும் என் ஆளுலாமில்ல!” என்றவளின் குரலை அப்படியே ஒதுக்கினர் மற்ற ஐவரும்.

 

அதில் பூரணியோ

 

“சக்தி நீ அழகா இருக்கனு நினைக்கல..

உன்ன நான் லவ் பண்ணுவேன்னு நினைக்கல..

ஆனா இதெல்லாம் நடந்திருமோனு பயமாயிருக்கு..” என்று ஆண் குரலில் வேறு பேச அருகில் இருந்தவளை கழுத்தோடு சேர்த்திழுத்து இவள் கொட்ட முயல பூரணியோ…

 

“ஏ..ஏ! அவன் போறான் பாரு” என்க அதை முதலில் நம்பாமல் போனவள் பின் ஏதோ தோன்ற எழுந்து குடுகுடுவன வகுப்பறை வாசலுக்கு ஓடினாள்.

 

அங்கிருந்தபடியே அவள் வெளியே எட்டிப் பார்க்க கண்ணுக்கெட்டிய தூரம்வரை அவன் இருப்பதற்கான அறிகுறியே இருக்கவில்லை. சிறு ஏமாற்றம் துளிர்த்தது.

 

முதன் முதலாய் அவனை தீம் பார்க்கில்தான் அவள் சந்தித்தது.

 

[the_ad id=”6605″]

 

 

 

முதல் வருடத்தில் எக்ஸ்கர்ஷன் என்றப் பெயரில் அவர்கள் கல்லூரி நிர்வாகம் தீம் பார்க்கை செலக்ட் செய்திருக்க.. அதே பார்க்கிற்கு நாலைந்து முறை சென்று வந்திருந்தாலும் நண்பர்களுடன் என்று அவள் பெயரை கொடுத்திருக்க மற்ற ஐவரும்கூட அதே தான் செய்திருந்தனர். அதில் பூரணி மட்டும் முதலில் “இந்த பழைய பாடாவதி ஐடியாவ முதல்ல பேன் பண்ணனும்!!” என்று பொங்கிவிட்டே கிளம்பினாள்.

 

முதலில் கேம்ஸை முடித்துவிட்டு மதிய சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு வாட்டர் கேம்ஸிற்கு போகலாம் என்பது அவர்களது திட்டம். அதே போல் ஒவ்வொன்றாய் விளையாடியபடி வந்தவர்கள் ஒரு கேமிற்காக வரிசையில் நின்றிருந்தப் பொழுதுதான் அவள் அவனைப் பார்த்தது.

 

இவர்கள் மூணாவது வளைவில் நிற்க முதல் வளைவில் நின்றிருந்தவன் சர்விக்கு நேர் பக்கவாட்டில் நின்றிருந்தான். வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தவளின் கவனத்தில் முதலில் பதிந்தது.. ஆழமாய் பதிந்தது அவனது புன்சிரிப்பு..!!

 

அப்படியொரு சிரிப்பு… அவளால் மறக்க முடியாத… மறக்ககூடாதென்று அவள் நினைக்குமளவு அவளை ஈர்த்த புன்னகை அது..!! அவனது புன்னகை அவளுக்கு ஒருவித ப்ளஸன்ட் ஃபீலைக் கொடுத்தது.. அவளை ரசிக்க வைத்தது.. அவனையே கவனிக்க வைத்தது.

 

முதல் வரிசையில் நின்றிருந்தவனின் முறை வந்துவிட அந்த கேம் முடிந்து அவன் அவ்விடம்விட்டு நகரும்வரை அவனையேதான் பார்த்திருந்தாள் அவள்.. அந்த புன்னகைக்காகவே..!! இவள் முறை வருவதற்கு முன்பே  அவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.

 

பின் அவளும் விளையாட்டில் கவனமாகிவிட்டாள்தான்.  ஆனால்  அவனை மறுபடியும் அவளது கல்லூரி வாசலிலேயே  பார்ப்பாள் என்று சர்வி  நினைத்திருக்கவில்லை..

 

அவன் வெளியாள் என்று அவள் நினைத்திருக்க அவனோ அத்தனை நாள் அதே காலேஜில்தான் இருந்திருக்கிறான்.

 

அதற்கு பிறகு எப்பொழுதாவது அவள் கண்ணில் படுவான். இவளும் அவன் முகத்தில் அந்த புன்னகையை தேடுவாள்.. ஆனால் சர்வி செய்த மாபெரும் பிழை, இதை பூரணியிடம் பகிர்ந்தது.

 

வெளியில் அவன் இல்லாமல் போகவே இது பூரணி செய்த சதியெனப் புரிந்தவளோ அங்கிருந்தபடியே உட்புறமாய் திரும்பி நின்று,

 

“இந்த பூராண இன்னைக்கு நான் நசுக்கல..” என்று சொல்லிக்கொண்டே போனவளின் வார்த்தைகள் உறைந்தது அவள் பின்னிருந்து “எக்ஸ்க்யூஸ் மீ” என்று ஒலித்த ஆண் குரலில்..

 

தொடரும்…..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!