Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Nimir Episode 5.1

சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி.  இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உங்க கமெண்ட் தான் என்னோட எனர்ஜி ட்ரிங்க். : ).

அங்கு இவளுக்காக கவிதா காத்துக் கொண்டிருந்தாள்.  பின் இருவரும் சேர்ந்து பக்கத்தில் இருந்த பேருந்து நிலையத்திற்கு சென்று ஒரு பேருந்தில் ஏறி சென்றனர்.  ஒரு நிறுத்தத்தில் இருவரும் கீழே இறங்கி  அடுத்த பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தனர். அப்போது வெண்மதி  தன் கைப்பையில் எதையோ தேடினாள். அதைப் பார்த்த கவிதா “என்னடி தேடற?”

“என்னோட தண்ணீர் பாட்டில் எடுத்துட்டு வர மறந்துட்டேன்.”



Advertisement

“நீ தண்ணி எடுத்துட்டு வந்திருக்கியா?”

“இல்லடி நான் தண்ணி பாட்டில் வாங்கிக்கலாம்னு வந்துட்டேன்.”

“எனக்கு ரொம்ப தாகமா இருக்கு. சரி. கவி நீ இங்கேயே இரு. நான் அங்க  ஒரு கடையில தண்ணி பாட்டில் தெரியுது. நான் போய் வாங்கிட்டு வந்துடுறேன்.”

Advertisement

“சீக்கிரம் வந்துடு டி. பஸ் வந்துட போகுது.”

Advertisement

“நான் ஓடிப் போயி வாங்கிட்டு வந்துடறேன்.” என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடி போய் அந்த கடையில்

“அண்ணா எனக்கு ஒரு தண்ணி பாட்டில் கொடுங்க.” என்று கேட்டாள். அந்தக் கடைக்காரர் வேறு  ஒருவருக்கு எதையோ கொடுத்துக்கொண்டிருந்தார்.

“அண்ணா எனக்கு பஸ்சுக்கு டைம் ஆயிடுச்சு. சீக்கிரம் குடுங்க அண்ணா.” என்று அவசரபடுத்தினாள் வெண்மதி.

Advertisement

கடைக்காரர் தண்ணீர் பாட்டிலை எடுத்து கொடுத்தார். அவள் 500 ரூபாய் நோட்டை  நீட்டினாள்.

“என்னமா ஒரு தண்ணீர் பாட்டில்  வாங்குறதுக்கு 500 ரூபாய் நோட்டை  நீட்டினா, நான் எப்படி சில்லறை தருவது?” என்று சலித்துக்கொண்டே அவரிடம் இருந்த மொத்த  சில்லறையையும் தேடிப்பிடித்து அவளிடம் நீட்டினார்.

அதே நேரத்தில் கவிதா அங்கிருந்து  “மதி பஸ் வந்துருச்சுடி. அங்க பாரு.” என்று கூற வெண்மதி அவள் காட்டிய திசையை பார்த்தாள்.

அங்கு அந்த பேருந்து வந்து கொண்டிருந்தது.  அவரிடம் சில்லறையையும் தண்ணீர் பாட்டிலையும் வாங்கிக்கொண்டு  வேகமாக திரும்பி  பேருந்து நிலையத்தை நோக்கி ஓடினாள்.

அப்போது எதிரில் வந்த  யார் மீதோ  வேகமாக  இடித்தாள்.  அப்போது அவள் கையில் இருந்து தண்ணீர் பாட்டிலும்  சில நூறு ரூபாய் நோட்டுகளும் கீழே விழுந்து  பறந்தோடியது. அதனை பின்தொடர்ந்து போய்  அந்த பணத்தினை எடுத்து கொண்டு திரும்பினாள். அப்போது, இவள் கவனிக்காமல் ஓடிச்சென்று இடித்த அந்த ஒருவன் கீழே குனிந்துகொண்டு  முகத்தில் பதட்டத்தோடு சேற்றில் விழுந்த எதையோ தேடிக்கொண்டிருந்தான். பக்கவாட்டில் இருந்து பார்த்த இவளுக்கு அவனது முகம் ஓரளவு தெரிந்தது.  அவன் முன்பு சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்று  ஒரு கணம் நினைத்தாள் வெண்மதி.

அதேநேரம் கவிதா “மதி பஸ்  கிளம்பப் போகுது. வாடி சீக்கிரம்.” என்று கத்த இவள் வேறு வழியின்றி ஓடிச்சென்று பஸ்ஸில் ஏறினாள். பேருந்து நகரத் தொடங்கியது. வெண்மதி அவனை திரும்பி பார்த்தாள். அவன் பதட்டத்துடன் எதையோ தேடுவது அவளுக்கு தெரிந்தது. அவளுக்கு சிறிது குற்ற உணர்வாக இருந்தது.

“என்னடி அங்கே எட்டிப் பார்த்துட்டு இருக்க?”

“இல்லடி. நான் வரும்போது  ஒருத்தன் மேல தெரியாம  மோதிட்டேன். அவன் கிட்ட சாரி கேட்கணும்னு நினைச்சேன். ஆனா அதுக்குள்ள பஸ் வந்துடுச்சு. அதான் வந்துட்டேன் அதான் கொஞ்சம் கில்டியா இருக்கு.”

“அட போடி.  இதுக்கு  எதுக்கு நீ பீல் பண்ற? நீ போய் அவன்கிட்ட சாரி  கேளு. அவன் உனக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு வழிஞ்சிகிட்டு நிப்பான். இவனுங்க எல்லாம் இப்படிதான் ரோட்ல போற ஏதாவது பொண்ணுங்க மேல  இடிக்கிறதே வேலையா சுத்திக்கிட்டு இருப்பானுங்க.”

“இல்லடி நான் தான் அவனை கவனிக்காமல் மேலே போய் மோதி அவன் கையில் இருந்த எதையோ கீழே தள்ளி  விட்டுட்டேன்.”

“சரி பரவாயில்லை விடு மதி. அவனை வேறு எங்கேயாவது பார்த்தால் சாரி சொல்லிடு. இப்போ, இத மறந்துட்டு வேற வேலைய பாரு.” என்று முடித்து விட்டாள் கவிதா.

 

பேருந்திலிருந்து இறங்கி இருவரும் பேசிக்கொண்டே நடந்து சென்று கம்பெனியை அடைந்தனர். உள்ளே சென்று இருவரும் வந்திருந்த காரணத்தை கூறிவிட்டு ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு இருந்தனர். இவர்களைப் போலவே வெவ்வேறு கல்லூரியிலிருந்து இந்த கம்பெனிக்கு பல மாணவர்கள் ப்ராஜக்ட் செய்ய வந்திருந்தனர். அவர்களும் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தனர். ஒரு சிலர் தங்களை மற்றவர்களிடம் அறிமுகப் படுத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஒரு இளைஞன் “ஐ அம் ரமேஷ், அசிஸ்டன்ட் மேனேஜர்” என்று தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டான். “ஃபர்ஸ்ட் ஆப் ஆல் ஐ வெல்கம் எவ்ரி ஒன் டு அவர் கம்பெனி.  இந்த கம்பெனியில் நீங்க உங்களோட  வேலையை சுதந்திரமா பண்ணலாம். உங்களுக்கு எந்த ஹெல்ப் வேணும்னாலும் என்னை கேட்கலாம்.” என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே அந்த அறைக்கு இன்னொரு இளைஞன் வந்தான்.

“இவர் சுந்தர்.  உங்களுக்கு ஏதாவது டெக்னிக்கல் ஹெல்ப் வேணும்னா இவர் கிட்ட கேளுங்க.” என்றான் ரமேஷ்.

“ஹாய்  எவ்ரி ஒன் “ என்றான் சுந்தர்.

“நீங்க எல்லாரும் சுந்தர் கூட போங்க.  அவர்  உங்களுடைய கேபினை காட்டுவார்.”  என்று கூறினான் ரமேஷ்.

எல்லோரும் எழுந்து சுந்தர்  பின் சென்றனர்.

சுந்தர்  எல்லோருக்கும்  அவரவருடைய கணினியைக்  காண்பித்தார். சுந்தருக்கு நன்றி கூறிவிட்டு மாணவர்கள் அனைவரும் அவரவர் கணினி முன்பு இருந்த நாற்காலியில் உட்கார்ந்தனர்.

வெண்மதி ஒரு இடத்தில் உட்கார கவிதா அவளுக்கு அடுத்து இருந்த கணினியின் முன்பு இருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள்.

“மதி நம்ம  காலேஜ் லேபை விட இந்த இடம் பெருசாவும் அழகாவும் இருக்கு  இல்லடி?”

“ஆமா அழகாதான் இருக்கு.”

“நல்ல வாசனையா இருக்கு இல்ல டி மதி ?”

“ஆமா கவி.  ஏசி கூட ஜாஸ்தியா இருக்கு.”

“சரி சரி வேலையை பாரு கவி.” என்று விட்டு தன்னுடைய கணினியை உயிர்ப்பித்தாள் வெண்மதி.

“கவி முதல்ல இந்த கம்ப்யூட்டரில் நாம பாஸ்வேர்ட் செட் பண்ணனும்.” “ஆமாம் மதி. ஓகே டன்.  நான் பாஸ்வேர்ட் செட் பண்ணிட்டேன் மதி. இங்க பாருடி ஹெட்போன். பாட்டு கேட்டுக்கொண்டே வேலை செய்யலாம். நீயும் போட்டுக்கோ.” என்று வெண்மதியின் ஹெட்போனை காட்டினாள் கவிதா.

வெண்மதி அந்த ஹெட்போனை எடுத்து காதில் மாட்டிக் கொண்டாள். அவளுக்கு பிடித்த பாடலை அதில் கேட்டுக்கொண்டே தன் வேலையை ஆரம்பித்தாள். அரைமணி நேரம் சென்ற பிறகு பார்வையை கணினியின் திரை மீது வைத்தபடியே

“கவி இங்க பாருடி.” என்று  கூறியபடியே கவிதாவின்  கையை பிடித்தாள் வெண்மதி. கவிதாவின் கையில் முரட்டுத்தனம் தெரிய யோசித்தபடியே கவிதாவின் புறம் திரும்பி “என்னடி  அமைதியா…..” என்று ஆரம்பித்தவள் திகைத்துப் போனாள்.  அங்கு ஒரு அழகான இளைஞன் உட்கார்ந்து கொண்டிருந்தான்.  வெண்மதி அதிர்ச்சியாக அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.  ‘இவன் இங்கே எப்போ வந்தான்?  கவிதா தானே இங்கே உட்கார்ந்து இருந்தாள்’ என்று யோசித்தபடியே அவனை பார்த்துக்  கொண்டிருந்தாள். அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்த அழகான பெண்ணை பார்த்து லேசாக  முறுவலித்தாள் அவன்.

கருவிழி,  கூர்மையான நாசி,  கோதுமை நிறம், ஒல்லியான உடல்வாகு என்று அவளை பார்வையாலேயே அளந்தான். ‘80  மார்க் போடலாம்’ என்று நினைத்துக்கொண்டான்.

“ஐ அம் விஜய்.” என்று கைகுலுக்க  கையை நீட்டியபடி அவளை பார்த்தான். அப்போதுதான் அவளுடைய கை இன்னும் அவனுடைய இன்னொரு கையின் மீது இருப்பதை உணர்ந்தாள்  வெண்மதி. சட்டென்று தன் கையை அவன் மீதிருந்து  எடுத்தவள்.

“ஐ ஆம் வெண்மதி.” என்று அவன் கையை குலுக்கினாள்.

“சாரி என்னோட ஃப்ரெண்ட் கவிதா இங்கே உட்கார்ந்து இருந்தாள். அவன்னு நினைச்சு நான் உங்களை கூப்பிட்டேன்.”

“இட்ஸ் ஓகே.  நோ ப்ராப்ளம்.  உங்க ஃப்ரெண்ட் இங்கே  இருந்தாங்களா? நான் இங்கே வரும்போது யாருமே இல்லை. நான் ஏ ஆர் இன்ஜினியரிங் காலேஜில் பைனல் இயர் படிக்கிறேன். கம்ப்யூட்டர் சயின்ஸ் டிபார்ட்மென்ட்.  இங்க ப்ராஜெக்ட் பண்றதுக்கு வந்திருக்கேன்.  இந்த கேபினில் இருக்கும்  கம்ப்யூட்டரில் தான்  வொர்க் பண்ணனும்னு சொன்னாங்க.  அதான் இங்கே வந்தேன். இந்த கம்ப்யூட்டர் ப்ரீயா  இருந்துச்சு. அதான் உட்கார்ந்தேன்.”

“அப்படியா ? “என்று கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது கவிதா அங்கு வந்தாள் தன் கணினி முன்பு நாற்காலியில் உட்கார்ந்திருந்த  புதியவனை பார்த்த கவிதா “ஹலோ நீங்க யாரு? என்னோட சீட்ல ட்கார்ந்து இருக்கீங்க.”  என்று விசாரித்தாள்.

அவன் எல்லாவற்றையும் திரும்பவும் கூற

“இது என்னோட கம்ப்யூட்டர்.  நான் ரெஸ்ட் ரூம்  போயிட்டு இப்பதான்  வருகிறேன்.”

“ஓ அப்படியா?  சாரி.  சரி நான் வேற கேபினுக்கு போய் பார்க்கிறேன்.” என்று அங்கிருந்து சென்று விட்டான்.

“பையன் , ஹாண்ட்சம் இல்லடி மதி ?”என்று கவிதா வெண்மதி இடம் கேட்க

“ரொம்ப முக்கியம்.  வேலைய பாருடி.” என்று அவளுடைய உதடுகள் கூறினாலும் மனதினுள் ‘உண்மைதான்’ என்று  நினைத்துக்கொண்டாள்.

அன்று மதிய உணவு இடைவேளையின் பொழுது தங்களுடைய சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வெண்மதி கவிதா கேன்டீனில் அமர்ந்தனர்.

அங்கு “ஹாய்” என்று கூறியபடியே வந்தான் விஜய்.

“நான் இங்கு உட்காரலாமா?” என்று கேட்டான்.

“தாராளமா உட்காருங்க.”  என்று கவிதா அனுமதி கொடுக்க..

அவன் எதிரில் இருக்கும் ஒரு நாற்காலியில் உட்கார்ந்தான். வெண்மதி, கவிதா இருவரும் தங்களுடைய டிபன் பாக்சை  திறந்தனர். விஜய் கேன்டீனில் வாங்கியிருந்த  சாப்பாட்டை சாப்பிட ஆரம்பித்தான்.

 

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!