Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nin Ninaivugalil Naanirukka

Nin Ninaivugalil Naanirukka 26

அத்தியாயம்…26 

“அண்ணி நீங்க மேல்  ரூம்ல தங்கிறதுன்னாலும் தங்கிக்கோங்க…இல்ல உங்களுக்கும் அண்ணாவுக்கும் கீழ் ரூம் தான் வசதின்னா… அங்கே கூட தங்கிக்கலாம்.” என்று சங்கரி தன் அண்ணி வரலட்சுமியிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்.

ஆனால்   சங்கரியின் எதிரில் நின்றுக் கொண்டு இருந்த வரலட்சுமிக்கும், கமலக்கண்ணனுக்கும், ஏதோ நெருப்பின் மீது நிற்பது போல் ஒரு அசவுகரியத்துடன் தான் அந்த இடத்தில் நின்றுக் கொண்டு இருந்தனர்.

வரலட்சுமிக்கும் சரி கமலக்கண்ணனுகும் சரி. இன்றைய நாள் இப்படி இருக்கும் என்று ஐந்து மணி நேரத்திற்க்கு முன் கூட அவர்கள் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். எல்லாம் நாளும் அவர்களுக்கு இன்பத்தை வாரி கொட்டி விடவில்லை தான்.



Advertisement

ஆனால் இது போல் துன்பம் என்பதை விட அதிர்ச்சி… மக்கள் இப்படியும் இருப்பார்களா…?என்ற ஆச்சரியம். கூடவே இனி என்ன…?என்ற ஒரு முழிப்பு இது தான் வரலட்சுமி கமலக்கண்ணன் தம்பதியர்களின் தற்போதைய நிலமை.

என்ன தான் சங்கரி நல்லவர்கள் என்றாலும், எத்தனை நாள் இங்கு இருப்பது. அதுவும் பெண் கொடுத்த இடத்தில் ஒரு வேளை விருந்து.  மறு வேளை மருந்து என்று  சொல்லுவாங்க.

அங்கு இனி ஒரு நிமிடமும் இருக்க  முடியாது என்ற காரணத்தினால் தான், சங்கரி அழைக்கவும் வரலட்சுமி தன் கணவன் கைய் பற்றி இங்கு  அழைத்துக் கொண்டு வந்து விட்டார்.

Advertisement

ஆனால் இங்கயே இருக்கும் எண்ணம் எல்லாம் வரலட்சுமிக்கு கிடையாது. ஆனால் அடுத்து என்ன…?அதுவும் இது வரை  வரலட்சுமிக்கு பிடி படாத ஒன்று.

Advertisement

தன் கணவருக்கு என்ன தெரியும் என்று நான் துணிந்து இது செய்யலாம் என்று முடிவு எடுப்பது. அது தான் கொஞ்ச நேரம் முன் அந்த அம்மா தெய்வநாயகி கமலக்கண்ணனை எதற்க்கு எதுக்கும் லாயக்கு இல்லாதவனாய் வளர்த்தேன் என்று  பிட்டு பிட்டு சொல்லி விட்டார்களே…

இது வரை வரலட்சுமிக்கும் தன் கணவன் மேல் மலை அளவு கோபம் இருந்தது.கடவுள் தனக்கு ஒரு குறை கொடுத்தாலும், நமக்குள் நிறை   எவ்வளவு இருக்கிறது.ஏன் அதை வைத்து அவர் எதுவும் செய்யவில்லை என்று வரலட்சுமி அவ்வபோது நினைப்பது உண்டு. வேறு ஒன்றும் வேண்டாம் அவர்களிடம் இருக்கும் விவசாய நிலத்தில் வேலை பார்த்தாலே போதுமே…?என்று தான் நினைப்பதை கணவனிடம் கேட்டும் இருக்கிறாள் வரலட்சுமி.

ஆனால் அதற்க்கு தன் கணவன் தன்னை பார்த்த பார்வையின் அர்த்தம் அப்போது விளங்கவில்லை. இப்போது அனைத்தும் விளங்கி விட்டது. விளங்கியது எல்லாம் சரி தான். ஆனால் இனி என்ன செய்வது…?அது தான் வரலட்சுமியின் முன் இருக்கும் மிக பெரிய வேள்வியே…

Advertisement

தன் அத்தையின் முக சங்கடத்தை பார்த்த வீரேந்திரன், அவர்  பக்கம் வந்து வராவின் கைய் பற்றியவனாய்… “அத்த இது மருமகன் வீடுன்னு நினச்சா தான். இந்த தயக்கம் எல்லாம் வரும். என்னை மகனா நினச்சி பாருங்க…இந்த வீட்டில் தயக்கத்திற்க்கு பதில் உரிமை வரும்.” என்று சொன்னதும் வரலட்சுமி லேசாக சிரித்தாளே ஒழிய…வீரேந்திரனின் பேச்சை முழுவதுமாகா ஏற்காது தான் இருந்தார்.

சங்கரியின் கணவர் கூட… “ஏம்மா தங்கச்சி…உன் நாத்தனாரை கட்டிட்டு நான் அங்கு வரல…உன் கையால உரிமையா எத்தனை தடவை… அது செஞ்சு கொடும்மா இது செஞ்சு குடும்மான்னு கேட்டு இருக்கேன். சொல்லும்மா…

நான் அப்போ நினச்சேனா…மாமியார் வீட்டில் இருந்தா மரியாதை இல்லேன்னு. எனக்கு அப்பா அம்மா இல்ல. அதான் என்  மனைவியின் சொந்தத்தை என் சொந்தமா ஏத்துட்டு அங்கு உரிமையுடன் இருந்தேன். அது போல் நீயும் இரும்மா…” என்று உரிமையுடன் அவர் சொன்ன போதும் முன்பு சிரித்த அதே சிரிப்பையே தான் வரலட்சுமி அனைவருக்கும் தந்தார்.

“அம்மா ஒரு வாரம் இங்கு இருங்க…வேறு ஏதாவது ஏற்பாடு செய்யலாம்.” என்ற மணிமேகலையின் பேச்சு வரலட்சுமிக்கு இப்போது கொஞ்சம் நிம்மதியை கொடுத்தது.

“சரி மணி.” என்ற வரலட்சுமி…சங்கரியிடம் “நான் கீழ் அறையிலேயே தங்கிக்கிறேன் சங்கரி. ஒரு வாரம் தானே…” 

நான் இங்கு ஒரு வாரம் தான் இருப்பேன் என்பதை உறுது படுத்திக் கொண்டே தங்களுக்காக ஒதுக்கப்பட்ட  அறைக்குள் கணவனோடு வரலட்சுமி சென்றாள்.

அவர்கள் சென்றதும்… வீரேந்திரனின் தந்தை தான்… “என்ன வீரா சிட்டு ஒரு வாரம் தான்னு சொல்றா…அவங்களும் ஒரு வாரம் தான் இருப்பேன் என்பது போல சொல்லிட்டு போறாங்க.” என்று கேட்டதற்க்கு….

மணிமேகலை தயக்கத்துடன் வீரேந்திரனை பார்த்தாள். அவனோ கண் மூடி நான் பார்த்துக் கொள்கிறேன் என்பது போல் சமிஞ்சை செய்தவனாய் தன் தந்தையிடம்..

“அவங்க  இடத்தில் இருந்து யோசிங்கப்பா… இது வரை சொந்தம் என்று இருந்த இடம் அவங்களுக்கு சொந்தம் இல்ல. அவங்க பெண்ணையே சொந்தம் நினச்சி தான் எனக்கே கொடுத்தாங்க. இப்போ அதுவும் இல்ல.. கமலா மாமா…அவர் நிலையில் இருந்து கொஞ்சம்  யோசிச்சி பாருங்கப்பா உங்களுக்கு நல்லா புரியும்.

இது வரை அவங்க இரண்டு பேருமே ஒரு கவுரவமான வாழ்க்கை வாழ்ல..நாம அவங்க கவுரவ குறச்சலா நடத்த மாட்டோம். ஆனாலும் இங்கு இருப்பது அவங்களுக்கு ஒரு அசவுகரியத்தை தாம்பா கொடுக்கும்.” என்று  வீரேந்திரன் வரலட்சுமி கமலக்கண்ணனின் நிலையில் இருந்து பார்க்க  சொன்னான்.

மகனின் பேச்சுக்கு… “அது தான் உன் பொண்டாட்டி கிட்ட கண்ணாலேயே நான் பாத்துக்குறேன்னு  சொல்லிட்டியே பொரவு என்ன இப்படி தான் சொல்லுவே…” என்ற மாமனாரின் பேச்சில் பதறி போன மணிமேகலை…

“அய்யோ மாமா அப்படி எல்லாம் இல்ல மாமா.” என்று பயத்துடன் பேசிய பேச்சில் வெடி சிரிப்பு சிரித்தவர்…

“சும்மாம்மா…இதுக்கு எல்லாம் பயந்துப்பியா…?அவர்  என் கணவர். என் கிட்ட தானே கண்ணால பேசுறாரு. அப்படி பேசுவியா…நீன்னா பொசுக்குன்னு பயந்துடுற…” என்று தன் மருமகளை கிண்டல் செய்தவர்.

வீரேந்திரனை பார்த்து… “அடுத்து என்ன செய்யிறதா உத்தோசம் வீரா…அவங்கல பாத்தா இங்கு ரொம்ப நாள் இருக்க மாட்டாங்கன்னு தோனுது. அடுத்து அவங்க தங்க ஏற்பாடு செய்யனும். அடுத்து அவங்களுக்கு வழி செய்யனும்.” என்று தங்கள் கடமைகளை தான் வீரேந்திரனின் அப்பா சொன்னார்.

ஆனால் அதை கேட்க கேட்க மணிமேகலைக்கு சங்கடமாக இருந்தது.  முன்போடு அப்போது தான் தான் செய்த செயலின் வீரியமே அவளுக்கு பலமாக தாக்கியது.

“நான் மட்டும் என் படிப்பு. அடுத்து வேலை என்று இருந்து இருந்தால், இன்று  என் பெற்றோருக்கு இப்படி அடுத்தவர் வழி செய்யும் நிலை ஏற்பட்டு இருக்காதே…”

என்ன தான் சொன்னவர் தன் மாமனார் என்று இருந்தாலும், தன் பெற்றோர்  மற்றவர்களின் தயவை எதிர் பார்க்கும் படி ஆகி விட்டதே…நான் மட்டும் சரியாக இருந்து இருந்தால்…அனைத்தையும் நான் பார்த்து  கொண்டு இருப்பேனே என்று நினையாமல் அவளாள் இருக்க முடியவில்லை.

மணிமேகலையின் வாடியா  முகத்தை பார்த்த வீரேந்திரன்.. “என்ன சிட்டு…?” என்று கேட்டான்.

“ஒன்னும் இல்லே.” என்று சொன்ன மணிமேகலையின் அந்த வார்த்தையில் ஓராயிரம் அர்த்தம் ஒலிந்து இருப்பது போல் வீரேந்திரனுக்கு தோன்றியது.

இருந்தும் மீண்டும் என்ன ஏது…?என்று கேளாது. கேட்கும் இடம் இது இல்லை என்று கருதியவனாய்… “எல்லாம் நான் பாத்துக்குறேன்  சிட்டு.” என்று வீரேந்திரன் சொன்னாலுமே மணிமேகலையின் முகத்தில் இது வரை இருந்த  ஒரு துடிப்பு இல்லாது அங்கு வெறுமையே காட்சி அளித்தது.

முதலில் அத்தை மாமாவுக்கு ஏதாவது வழி செய்து விட்டு இவளை கவனிக்கனும். தன்னுடன் இருக்கும் போதே ஒரு சில நேரத்தில் இருக்கும் அவள் முகத்தில் இருக்கும் உயிர்ப்பு. பல நேரத்தில் இல்லாது, அந்த இடத்தில் ஏதோ ஒரு மாற்றம். அது நல்ல மாற்றம் இல்லை என்று அவன் அறிவு எடுத்துரைத்தாலும், அது என்ன என்று அவனுக்கு விளங்கவில்லை.

“என்ன..ஏது…?” என்று கேட்டால்.. இதே போல் தான்… “ஒன்னும் இல்லே…” என்ற பதிலே அவளிடம் இருந்து வரும். அவளை பற்றி அனைத்தும் அவனுக்கு தெரியும் தான். 

அவள் மனதில்  இருப்பதை அவளே என்ன என்று சொன்னால் தானே…அவன் ஏதாவது செய்ய முடியும். இப்படி மனதிலே நினைத்து மருகுபவளை என்ன தான் செய்வது…?என்று  நினைத்தவன் மனதில் ஏதாவது செய்து தான் ஆக வேண்டும். இப்படியே விட இயலாது என்ற முடிவோடு  அடுத்து தன் மாமன் அத்தை தங்க…புதியதாக வாங்கிய தோட்டத்து வீட்டை ரெடி செய்து அடுத்த நாள் விடியற் காலையில் அந்த வீட்டில்  பால் காய்ச்ச வேண்டும் என்ற முடிவோடு இருக்க…

அன்றைய இரவில் மணிக்கு ஏனோ தன் கணவனோடு முழுமனதோடு ஒன்ற வில்லை என்று  தான் சொல்ல வேண்டும்.

தன் மனைவியின் வாசத்தை தன் சுவாசக்காற்றுக்குள் உட்புகு முயற்ச்சியில் ஈடுப்பட்டுக் கொண்டு இருந்த வீரேந்திரனுக்கு, அப்போது தான் தன் சிட்டுவின் உடல் விரைத்த தன்மை உணர..

சட்டென்று தன்  உடல் முழுவதும் பரவியிருந்த மோகவலை அறுப்பட்டவனாய் அவளிடம் இருந்து எழுந்தவன்…அவள் மேல் ஒரு துணியை போர்த்தி விட்டு…

விளக்கை எரிய விட்டவன்… “என்ன சிட்டு உடம்பு சரியில்லையா…?” என்று கேட்டான்.

“உடம்பு நல்லா தான் இருக்கு.” என்ற மணிமேகலையின் பதிலில்…

“அப்போ மனசு சரியில்லையா…?” என்ற வீரேந்திரனின்  வார்த்தையின் சட்டென்று அவன் முகத்தை பார்த்த மணிமேகலை ஏதோ சொல்ல முயன்று..

பின் எப்போதும் போல அவள்… “ஒன்னும் இல்ல.” என்ற வார்த்தையில் முடித்தாள்.

“இப்போ கூட உன் மனச என் கிட்ட பகிர்ந்துக்க மாட்டல…கல்யாணம்னா என்ன சிட்டு…? “அவர்கள் இருந்த நிலையை சுட்டி காட்டி… “இது தானா…இது  மட்டும் பகிர்ந்துக்க இல்ல. நம்ம மனசையும் சேர்த்து தான். ஆனா நான் எதிர் பார்க்காதது கல்யாணம் ஆன அன்னைக்கே உன்னை எனக்கு கொடுத்தது.” என்ற தன்  வார்த்தையில் கூச்சத்துடன்  தன்னை பார்த்த மணிமேகலையின் முகத்தை பிடித்துக் கொண்டு…

“அது எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்டா சிட்டு. ஆனால் அதுக்கும் மேல உன் மனசுல  இருக்குற எல்லாத்தையும் என் கிட்ட சொல்லனுமுன்னு நான் நினைக்கிறேன். அது தப்பா சிட்டு…?” என்ற வீரேந்திரனின் வார்த்தையில்  ஒன்று கூட தவறு இல்லை என்னும் போது மணிமேகலை மட்டும் என்ன சொல்வாள்.

சுருங்க… “உங்க மேல தப்பு எதுவும் இல்ல வீர் அத்தான்.” என்ற வார்த்தையில்…

“அப்போ யாரு மேல தப்புடா …எங்க அம்மா அப்பா…” அது இல்லை என்று தெரிந்து அவள் மனதில் இருப்பதை கொட்டினால்  தான் இனி அவள் அவளாய் இருப்பாள். என்று நினைத்தவனாய் இவ்வாறு கேட்டான்.

“அய்யோ அத்தை மாமா எல்லாம்  ரொம்ப நல்லவங்க வீர் அத்தான். அவங்கல பத்தி எல்லாம் தப்பா சொல்லாதிங்க.” என்று அவனிடமே அவன்  தாய் தந்தைக்கு  அவள்  பரிந்துக் கொண்டு பேசினாள்.

“ஓ அப்போ நான் தான் தப்பா…” என்ற அவன் வார்த்தையில் இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த குற்றவுணர்ச்சி வார்த்தைகளாய்…

“இல்ல வீர் அத்தான். நீங்க தப்பானவங்க இல்ல. நீங்க தப்பானவங்க இல்ல. நான்…நான் தான் ரொம்ப ரொம்ப பெரிய தப்பு பண்ணிடேன்.” என்று தன் நெஞ்சில் அடித்துக்  கொண்டு கதறி அழுபவளை வாறி அனைத்துக் கொண்டவனாய், அவள் முதுகை துடவி விட்ட வாறே…

“என்னடா தப்பு என்ன தப்பு செஞ்ச…?” என்று தன்மையாக கேட்டவன்… மீண்டும்.. “அப்படி ஏதாவது செய்து இருந்தாலும் அது தெரியாது தான் செஞ்சி இருப்ப… நீ  எல்லாம் தப்பு தெரிஞ்சி எல்லாம் செய்ய மாட்ட.” என்ற அவன் வார்த்தைகள் மீண்டும் மீண்டு அவள் மனதை குத்த…

“எல்லா ஆம்பிளைங்களையும் பார்ப்பது சின்ன தப்பா வீர் அத்தான்…?” என்ற அவளின் இந்த வார்த்தையில் வீரேந்திரன் நிஜமாகவே  ஆட்டம் கண்டவனாய்…

“எ..ன்..ன… சொல்ற…?” என்று கேட்டான்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!