Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Niththirai Kalaiththa Maayaval

Niththirai Kalaiththa Maayaval 10

 

கண்ணுகொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில்

நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா

கண்ணுகொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில்



Advertisement

நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா

தத்தித் தவழும் தங்கச் சிமியே

பொங்கி பெருகும் சங்கத் தமிழே

Advertisement

முத்தம் தர நிதம் வரும் நட்சத்திரம்

Advertisement

யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு

நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு

வாழ்த்தாக வேண்டும் வாவா கண்ணே

Advertisement

 

நடப்பவை எதுவும் முதலில் புரியாமல் போனாலும்…. வீட்டினர் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியே அன்பிற்கு இதமாக இருந்தது…. 

 

தலையை தேய்த்து கொண்டு வாசலில் நின்று இருந்த அன்பை பார்த்தவன்… 

 

“டேய் அண்ணன்… பாருடா… உன் பொண்ணு மாட்டி விட்டதுக்கு… உன் அம்மா என்னை அடிக்குராக” இன்னொரு டம்ளர் பறந்து வந்தது… 

 

இது எதுக்கு என்பதை போல் இலக்கியன் அன்பை பார்க்க…. 

 

அவனோ நமட்டு சிரிப்புடன்… “ஏன் உனக்கு அம்மா இல்லையா” என்றான் 

 

“ஓஹோ…. இது பாசமா… நல்லா இருக்குடா உங்க பாசம் ” சலித்து கொண்டே போய் முற்றத்தில் லக்ஷ்மணன் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்…. 

 

பின் வைஷுவை தூக்கியவன்… கொள்ளை புறம் போய் நடந்தவற்றை கேட்டு தெரிந்து கொள்ள… 

 

இவன் பங்கிற்கு வைஷுவின் காதில் எதையோ  ஓதியும் விட்டான்….. 

 

உள்ளே வந்தவள்… தன் இருகைகளையும் இடுப்பில் வைத்து கொண்டு 

 

“டேய் சித்தா… முற்றத்தில் நின்று கத்தினாள் ” வைஷு 

 

அவள் கோவமாக நிற்பதை பார்த்தவன்… 

 

“ஹையோ….. மாட்டிகிட்டோம் போலயே ” அவள் அவனை நெருங்க அதற்கும் இவன் எழுந்து ஓட… 

 

வைஷு அவனிடம் துரத்தி வீடெங்கிளும் ஓட…. வீடே நிறைந்து இருந்தது….. 

 

பின் இனியவளை பார்க்க தன் அறை சென்றான் அன்பு…. 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

அறையில் நுழைந்தவன் பார்வையில் அலமாரியின் மேலே இருக்கும் பைலை எடுக்க முயற்சி செய்து கொண்டு இருந்தாள் இனியவள்….ஒற்றை கையில்…. 

 

“என்ன பண்ணிக்கிட்டு இருக்க… கூப்பிட்டா நாங்க யாராவது வந்து எடுத்து குடுத்து இருப்போம் இல்லை… ” உரிமையுடன் வந்தது அன்பின் குரல்… 

 

திடுக்கிட்டு திரும்பியவள் முகத்தில் பயம் மட்டுமே இருந்தது… 

 

“இல்லை எனக்கு சிகிச்சை பார்த்த பைலை பாக்கணும்… என்ன சிகிச்சை குடுத்தாங்கனு தெரியணும்…. ” தயங்கியபடியே கூறினாள்… 

 

“அதை பார்த்து நீங்க என்ன பண்ண போறீங்க? ஏன் எங்க மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? அப்டியே இருந்தாலும் அதுல எதுவும் புரியல… நானும் பார்த்தேன்” சந்தேகமாய் ஆரம்பித்தவன் அமைதியாய் முடித்தான்… 

 

“நம்பிக்கையா அதெல்லாம் அவுங்களுக்கு இருக்கு…. நமக்கு தான் அண்ணன் புரியாது… ஆனா அவுங்களுக்கு நல்லாவே புரியும்… எடுத்து குடு… அவுங்களே பாதிப்பாக” கண்ணில் கோவமும் பேச்சில் ஏகதளத்துடன் கூறினான் இலக்கியன் வாசலில் நின்ற படி….. 

 

அவன் கூறியதை பார்த்து என்ன என்பதை போல் அன்பு பார்க்க… அவனுக்கு பதில் கூறும் விதமாக பார்த்த இலக்கியன்…. 

 

“ஆமாம் அண்ணா…. அவுங்க தான் டாக்டர் ஆச்சே… அவுங்களுக்கு புரியாமல் போகுமா” சமீபத்தில் வைஷுவிடம் இருந்து தான் தெரிந்து கொண்ட விவரத்தை கூறினான்…. 

 

“என்ன” ஆச்சர்யமாய் பார்த்தான் அன்பு….. 

 

“ஆம்” என்பதை போல் இனியவளும் ஆமோதித்தாள்….

 

பின் இனியவளை நெருங்குங்கிய இலக்கியன்…. 

 

உங்க கண்ணாம்பூச்சி ஆட்டத்தை இதோட நிறுத்திக்கோங்க… இந்த வீட்டுல இருக்கீங்க… ஆனால் உங்களை பற்றி எதுவுமே எங்களுக்கு தெரியாது…. இத்தனைக்கும் பேர் கூட சரியா தெரியல… 

 

உங்களோட வாழ்க்கைல எது நடந்து இருந்தாலும்… இனி இது நீங்க வாழுற வீடு இது… இது தான் உங்களோட வாழ்க்கை… அதை புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க…. கடலையாகவே முடித்தான் இலக்கியன்… 

 

[the_ad id=”6605″]

 

 

 

கதவு வரை சென்றவன்… திரும்பி…” இங்க இருந்து போறது பற்றி யோசிக்காதீங்க… எனக்கு நீங்க தான் அண்ணி… வைஷு தான் எங்க வீட்டோட மூத்த வாரிசு” உறுதியுடன் கூறினான் இலக்கியன்…. 

 

அவன் சென்ற பின் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்களே தவிர… ஒரு வார்த்தையும் பேசி கொள்ள வில்லை… அன்பும் எதுவும் அவனிடம் கேட்டு கொள்ளவும் இல்லை…. 

 

இனியவள் வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஆகி இருக்க… 

 

குடும்பமே அவளை நன்கு கவனித்து கொண்டது… 

 

வேலுசாமியும், லக்ஷ்மணனும் குளித்தி முடுத்தவுடன் இவளை வந்து பார்த்து நலம் விசாரித்து விட்டு செல்வது தான் வழக்கம்… அதற்கு பின் தான் சாமி அறை பிரவேசம் கூட…. 

 

இந்த ஒரு வாரத்தில் சகுந்தளவிற்கு தான் எள்ளும் கொள்ளும் பொரிந்து….. அவராள்  இதை எதையும் ஏற்று கொள்ள முடியவில்லை… ராணி போல அவள் உபசரிக்க படுவதை பொறுத்து கொள்ள முடியவில்லை அவளால்… 

 

ஆனால் முன் போல் அவரால் எதுவும் எதிர்த்து பேசவும் முடியவில்லை… 

 

மருத்துவமனையில் விஷயம் அறிந்த வேலுசாமி… வீட்டிற்கு வந்தவர் கண்ணில் சிக்கிய சகுந்தலாவையும், மீனுவையும் 

 

“என்னோட தங்கச்சியா இருந்துகிட்டு எப்படி இப்டி ஒரு காரியத்தை செய்ய தைரியம் வந்தது…. அதுவும் மகளுக்கு ரொம்ப நல்ல குணங்களை சொல்லி குடுத்து வளத்து இருக்க… உன்னை என்னோடவே வெச்சுக்கணும்னு நான் எடுத்த முடிவு தப்போனு எனக்கு இப்போ எனக்கு வருத்தமா இருக்கு” முகம் திருப்பி கொண்டு சென்று விட்டார் அவர்.. 

 

அன்றில் இருந்து சகுந்தலாவின் குரல் குறைந்தே ஒலித்தது வீட்டில்… ஆனால் அடிபட்ட சிங்கம் போல் நேரம் பார்த்து காத்து கொண்டு இருந்தார்…. அதற்கான நேரத்தையும் காலம் அவர் கையில் கொடுத்தது…. 

 

ஒரு நாள் அன்பு, அவன் தந்தை, ராமன் மூவரும் எதோ கலகத்துடனும் கவலையுடனும் வீட்டிற்கு வர… 

 

வீட்டு பெண்கள் என்ன என்று விசாரிக்க… ஒன்றும் இல்லை என்று சமாளித்தாலும்… கடந்த இரண்டு நாட்களாக அவர்களுள் இருக்கும் குழப்பம் எதோ சரி இல்லை என்பதை மட்டும் புரிந்து கொண்டனர்… 

 

அடுத்த நாள் இரவு….. அண்ணி அண்ணி என்று கத்தி கொண்டு வேர்த்து விறுவிறுத்து வீட்டிற்கு ஓடி வந்தார் லக்ஷ்மணன்… 

 

அந்த தேவா ஆளுங்க… அண்ணனையும், ராமனையும் வளைச்சி புடிச்சிட்டாக… அன்பும் எங்க இருக்கான்னு தெரியல… அவன் போன்னுக்கு கூப்பிட்டாலும் எடுக்கல… பதற்றமாய் விஷயத்தை கூறினார்…. 

 

[the_ad id=”6605″]

 

 

 

அவர் கூறிய நிமிடத்தில் இருந்து…. அமைதி கொள்ள வில்லை பெண்களின் மனம்… புஜை அறையில் இருந்து வாசலுக்கும்… வாசலில் இருந்து புஜை அறைக்கும் சென்று அனைவரின் நலனையும் காக்கும் படி வேண்டி கிண்டு இருந்தனர்…. 

 

இதில் இனியவள் தான் மிகவும் பயந்து போய் இருந்தாள்… இருந்து இருந்து கிடைக்க பெற்ற நிம்மதியும், சந்தோஷமும் இன்று விலகி விடுமோ என்ற பயம்… தன் கால் பட்டதால் தான் இப்டி நடக்கிறதோ என்ற குற்ற உணர்வு…. 

 

மறு புறம்…. சகுந்தலாவோ…. “எந்த நேரத்துல கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்குள்ள கால் வெச்சலோ…. எல்லார் நிம்மதியும் மொத்தமா முழுங்கிட்டா” தன் வேலையை ஒரு புறம் செய்து கொண்டு உருந்தார்…. 

 

ஒரு மணி நேரத்தின் போராட்டத்தின் பிறகு… அவர்களுக்கு நிம்மதி அளிக்கும்  வகையில்… வீட்டு வாசலில் வந்து நின்றது ஒரு ஜீப்…. 

 

அதில் இருந்து வேலுச்சாமி, ராமன் இருவரும் சில ஆட்களோடு இறங்க…. அவர்களை பார்த்த உடன் தான் நிம்மதி அடைந்தனர் குடும்பத்தினர்…. இருவர் முகத்தில், கை, கால்களில் சிறு காயங்கள் இருக்க… பெரிதாக எதுவும் ஆகவில்லை என்ற நிம்மதியே நிறைவாக இருந்தது…. 

 

இதற்கிடையில் அன்பை பற்றி யாரும் கவனிக்க வில்லை… அவனை பற்றி வாய் திறந்தே கேட்டு விட்டாள் இன்னியவள்…. 

 

அவளுக்கு பதிலாய்…. ஓடி வந்து கொண்டு இருந்தான்… வீட்டின் காவலாளி… 

 

“அம்மா…. அம்மா…. அன்பு தம்பிய பலத்துக்கிட்ட வச்சி மடக்கிட்டாகமா… நம்ப ஆளுங்க யாரும் தம்பி கூட இல்லை… அவர் அங்க இருந்து தப்பிக்கிறது கஷ்டம்மா ” இறங்கியது அடுத்த குண்டு….. 

 

 

அனைவரின் முகத்திலும் பதற்றத்தை எதிர் பார்க்க… ஆனால் யாரிடமும் அது இல்லாமல் போக… யோசிக்கும் சமயத்தில் 

 

அவ்விடம்… தலையில் கை வைத்து கொண்டு… கண்ணில் நீர் பெறுக… அவ்விடம் மயங்கி விழுந்தாள்… இனியவள்…. 

 

                       மயக்கம் தொடரும்…… 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!