Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Niththirai Kalaiththa Maayaval

Niththirai Kalaiththa Maayaval 18

ஒரு நிமிஷம் கூட என்னைப் பிரியவில்லை

விவரம் ஏதும் அவள் அறியவில்லை

என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே

மறந்து போ என் மனமே…



Advertisement

 

வெண்மதி வெண்மதியே நில்லு – நீ

வானுக்கா மேகத்துக்கா சொல்லு

Advertisement

வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்

Advertisement

மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் – உன்னை

இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே – உன்னாலே

நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்…

Advertisement

 

யாரோ ஒருவன் இருட்டில் தடமாடி கொண்டு இருப்பதை கண்ட அன்பு…வீட்டினர் யாரோ தான் என்று இருக்க… 

 

அவர் கையில் இருக்கும் பாய்சன் பாட்டிலை பார்த்தவன் அதிர்த்துவிட்டான் என்பதை விட… இந்த வீட்டில் தற்கொலை செய்யும் அளவிற்கு யாருக்கு என்ன குறை என்று தான் மனது ஆராய்ந்தது… 

 

மனம் போக்கில் யோசித்து கொண்டு நிற்க… ஒரு வேலை இனியவளாக இருக்குமோ, என்ற எண்ணமே அவனை பரிதவிக்க வைக்க….அதற்குள் அந்த நிழல் நபர் திறந்து இருந்த பாட்டிலை வாயின் அருகில் கொண்டு சென்று அதை கிட்ட தட்ட வாயில் ஊற்றும் தருணம்… மடி படி இறுதியில் நின்று இருந்தவன்… ஒரே எட்டில் அதை தட்டி விட்டு விட… அதில் அந்த பாட்டில் இரண்டடி தள்ளி போய் விழ… 

 

அடுத்த நொடி….தன் முழு பலத்தையும் கையில் கொண்டு வந்து…ஐந்து விரல் தடங்கலும் படும் படி….. கன்னத்தில் ஒரு அறை விட்டான் அன்பு…. 

 

அவனின் அந்த தாக்குதலில் அந்த நபர் உருண்டு போய் விழ…முற்றத்தில் எரிந்து கொண்டு இருந்த அந்த சிறு விளக்கின் ஒளியின் அந்த நபரை பார்த்தவன்….ஸ்தம்பித்து அவ்விடம் நின்று விட்டான்… 

 

விக்கி….  வாயை விட்டு வார்த்தைகள் வெளியேற தவித்து தத்தளித்து நம்ப முடுயாமல்…. பாதி வெளி வந்தும்… மீதி முழுங்க பட்டும்… அதிர்ச்சியில் வந்தது அன்பிற்கு பின்னால் இருந்து வந்த நபரின் குரலில்… 

 

யார் என்று திரும்பி பார்க்க…. அங்கே அந்த இருட்டோளியில் மேல் தட்டு இரவும் ஒளியில்… கையில் தண்ணீர் பாட்டிலுடன் நின்று இருந்தாள்… இனியவள்… 

 

“இவ எப்படி இங்க” அன்பு யோசிக்கும் தருணத்தில் விக்கியை நெருங்கிய இனியவள்…

 

“என்ன விக்கி இதெல்லாம்… அன்பு மட்டும் வராமல் போய் இருந்தால்… என்ன ஆகி இருக்கும்… ஏன் இப்டி பன்ன?”கேள்விகளால் அவனை உலுக்கி கொண்டு இருக்க…. 

 

அப்போது தான்… கவனிக்க வேண்டிய விஷயம் விக்கியை பற்றி… இனியவளை ஆராய்வது இல்லை என்பது அன்பின் மூளைக்கு எட்ட… 

 

விக்கியை நெருங்கியவன்..அவன் பதில் பேச வாயயை திறக்கும் முன்பே.. மறு கன்னத்தில் அவனின் விரல் தடத்தை பதித்து இருந்தான்…. 

 

மேலும் அடிக்க கை ஓங்கியனின் கையை பற்றி அமைதி ஆக்கிய இனியவள்… அவனை அமைதியாய் இருக்கு என்று விழி மொழியில் கூற… அவனும் அமைதியானான்…. 

 

“இங்க நின்னு எதுவும் பேச வேணாம்….என்னோட ரூமுக்கு வாங்க வாங்க ரெண்டு பேரும்… அங்கேயே பேசிக்கலாம்” கட்டளை இட்ட படி மாடி படி  ஏறி சென்றான்… 

 

அறை நெருங்கும் முன்.. இனியவளை பார்த்து “நீங்க போங்க… நான் இதோ வரேன்” என்றவன் வேறு திசையில் போக… 

 

அறையை அடைந்தவர்கள்… உள்ளே சென்று அமர்ந்து இருக்க… விக்கியின் அழுகை மட்டும் அடங்கவே இல்லை… அவன் மறுபடியும் மறுபடியும் சொன்னது ஒரே விஷயத்தை தான் 

 

“என்னை ஏன் காப்பாத்துனீங்க? அப்படியே விட்டு இருக்கலாம் இல்ல…எனக்கு வாழ இஷ்டம் இல்லை” என்றான் பொங்கிய அழுகையில் தேம்பி தேம்பி அழுது கொண்டு 

 

இதுவரை இலக்கியனுடன் சேர்ந்து சேட்டைகள் செய்து கொண்டு… குறும்புத்தனங்களுடன் வீட்டை மகிழ்ச்சியில் ஆழ்த்தியவன்… இன்று சிறு பிள்ளை போல் ஒரு நாளு சுவற்றுக்குள் தேம்பி அழுவதை கண்ட இனியவளுக்கு மனம் கொள்ள வில்லை… ஆனால் அதிலும் அவளுக்கு புரியாதது 

 

“இப்டி சந்தோசமா வெகுளியா இருக்க பையனுக்கு என்ன கவலை வந்துட போகுது… விஷம் குடிக்கும் அளவிற்கு என்ன சோகம்” யோசித்து கொண்டு இருந்தவள்… அன்பு வரட்டும்… அதன் பின்னே விசாரிப்போம் என்று முடிவு எடுத்தவள்… அவனை தேற்றும் பணியில் இறங்கினாள்… 

 

மறுபுறமோ அறையை விட்டு வேறு புறம் சென்றவன்…. வேறு இரு அறையின் கதவை தட்டி கொண்டு இருக்க… இரண்டு முறை தடியும் திறக்காமல் போக…இதற்கு மேல் தட்டினால் பக்கத்து அறையில் உறங்கி கொண்டு இருக்கும் தாய் தந்தை விழித்து கொள்ள வாய்ப்பு உள்ளது என்பதற்காக… தன்னிடம் இருந்த மற்றொரு சாவியால் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான் 

 

சென்றவன் கண்ட காட்சி.. அவனை “அடப்பாவி” என்று வியக்க தான் வைத்தது… 

 

மூன்று பேர் படுத்து உறங்க கூடிய கட்டிலில்…. வைஷு குட்டி ஓரமாக… கட்டிலின் இறுதியில் பூனை குட்டி  போல் உறங்கி கொண்டு இருக்க….

 

அந்த கட்டிலில் குறுக்காக… கை கால்களை பரப்பி கொண்டு…. விசாலமாக உறங்கி கொண்டு இருந்தான் இலக்கியன்… 

 

அவனை கண்ட அன்பிற்கு” இது மனித இனம் தானா… இல்லை நாம் தவறாக அமேசான் விலங்கை வீட்டில் வளர்கிறோமா” என்று இருந்தது 

 

அவன் எதோ காற்றில் கைகளை அசைத்து காற்றில் படம் வரைந்து கொண்டு இருக்க… வாய் வேறு முணுமுணுக்க… என்ன என்று அருகில் சென்று உற்று கவனித்த பின் தான் அவனின் பிதற்றல்கள் அன்பின் காதில் விழுந்தது… 

 

“கிட்ட வாடி திரிஷா குட்டி… மாமா பக்கத்துல வர வேகமா…. வாங்க வாங்க ஓடி வாங்க…. ஹையோ நாஸு குட்டி… நீங்க ஏன் வெக்க பட்டுக்கிட்டு அங்கேயே நின்னா எப்படி… இதோ வாங்க… மாமா கன்னத்துல ஆளுக்கொரு கன்னத்துல உம்மா குடுங்க பாப்போம்…கமான்… கமான்” என்று பிதற்றிக்கொண்டு இருந்தவனை கண்ட அன்பு 

 

“இவனை” என்று பல்லை கடித்து கொண்டு கோவத்தை கட்டு படுத்தி கொண்டு… கையால் தட்டி எழுப்ப… 

 

அதற்கு அவனோ “நாஸு டார்லிங்… மாமாவை தட்டி எல்லாம் விளையாட கூடாது….” என்றான் மீண்டும் கிசுகிசுப்பாக… 

 

அதில் வெறுப்பானவன் “அடச்சி” என்று பக்கத்தில் இருந்த தனியாய் முகத்தில் ஊற்ற… அதற்கும் அசராமல் ரொமான்ஸ் செய்து கொண்டு இருந்தவனை கொலை வெறியுடன் பார்த்தவன்…. 

 

ஒரே எத்தாக அவன் இடுப்பில் எட்டி மிதிக்க…. அதில் ஹையோ அம்மா என்று அலறி கொண்டு எழுந்தவன்… அப்போதும் சும்மா இல்லாமல் 

 

“எங்க என் நஸ்ரியா… எங்க என் திரிஷா.. ஹையோ இங்க நின்னுட்டு இருந்த அனுஷ்கவையும் காணோமே” என்று அக்கம் பக்கம் பார்த்து கதறியவனை முறைத்த அன்பு 

 

அவுங்க எல்லாம் அவுங்க அவுங்க வீட்டுல இருப்பாகடா… மனித குரங்கே என்றான்… 

 

அப்போது தான் சுற்றம் முற்றம் பார்த்தவன்.. அன்பு தான் அறையில் இருப்பதை கண்டவன்… “வாட் நான்சென்ஸ் இஸ் திஸ்? நீ இங்க என்ன மேன் பண்றே” என்றான் திமிராக ஒரு கை இடுப்பை தடவி குடுத்த படி 

 

“என் கூட எழுந்துவா. என்னோட ரூம்ல கொஞ்சம் பேசணும்” என்றான் அன்பு… மிகவும் சீரியஸ்சாக… 

 

“யூ கோ மேன்… வய் மீ”என்றான் இலக்கியன் அதே திமிருடன்… இது சரி வராது…. என்றவன் அவனை தூக்க முயற்சித்தவனை தடுத்த இலக்கியன் 

 

“ஹை இருடா… என்னடா ஆள்ஆளுக்கு எதோ ரொமான்ஸ் பன்ன வந்த பொண்ணு மாதிரி இஷ்டத்துக்கு தூக்கிட்டு போறீங்க? ஒரு ஆம்பள பையன்ற மரியாதையே இல்லாமல் போச்சே? எடுடா கைய” என்றவன் அவனே எழுந்து அவனுடன் நடக்க துவங்கினான்… 

 

வாசல் வரை சென்றவன் எதோ நினைவு வந்தவனாய்… பதறி கொண்டு கட்டிலை நோக்கி ஓட…. 

 

என்ன என்று பின்னால் சென்ற அன்பை பார்த்தவன்… “இங்க வைஷு குட்டி படுத்து இருந்தாலேடா. அவ எங்க” இப்பொது இவன் சீரியஸ்சாக 

 

முகத்தில் நக்கல் சிரிப்புடன்… அது மகாராஜா மாடு மாதிரி பரப்பி விரிச்சி தூக்கிகிட்டு இருந்தீர்களா !!!குட்டி கீழ விழுற மாதிரி கட்டிலோட கடைசியில இருந்தா… அதான் அவளை சோபாவில் படுக்க வெச்சி இருக்கேன்” என்றான் இளக்காரம் மாறாத குரலில்… 

 

ஈஈஈஈ… என்று இளித்தவனை… சட்டையை பிடித்து இழுத்து கொண்டு சென்றான் அன்பு… 

 

அறையில் அவனை தள்ளி… கதவை தாழிட்டவன்…. இனியவளின் பக்கம் திரும்ப… அப்போது தான் அழுது கொண்டு இருக்கும் விக்கியை பார்த்த இலக்கியன் பரிதவித்து போய் அவன் அருகில் செல்ல….அதற்குள்  என்ன நடந்தது என்பதை இனியவள் விலக்கினாள்…. 

 

அதை கேட்டவன்… கோவத்தில் அவனும் இரண்டடி போட… இப்போதும் விக்கியை இனியவள் தான் காப்பாற்றினாள்… 

 

“அண்ணனுக்கும் தம்பிக்கும் அறிவே இல்லையா… அவன் ஏன் இப்டி பண்ணினான்ணு யோசிக்க மட்டக்களா… வரவங்க எல்லாரும் அடிக்குறீங்க? ” எகிறினாள் இனியவள் 

 

அதில் அமைதி ஆனா இருவரும்.. ஒருவரை இருவர் பார்த்து கொண்டு அமைதியாய் நிற்க… 

 

விக்கியை  நெருங்கிய இனியவள்… “என்ன ஆச்சு விக்கி… எதனால இப்டி ஒரு முடிவு எடுத்த” ஆதரவாய் தலையை வருடிய படி அவள் கேட்க 

 

அதற்கும் பதில் சொல்லாமல்… அவனின் அழுகை மேலும் அதிகம் ஆக….அதில் இன்னும் கோவம் கொண்ட இலக்கியன் 

 

“அவனை ரெண்டு போட்டு ஏன்டா இப்டி பண்ணணு கேக்குறத விட்டுட்டு கொஞ்சிகிட்டு இருக்க” மேலும் அவனை அடிக்க நெருங்கியனை தன் முறைப்பில் கட்டுப்படுத்தினாள் இனியவள் 

 

பின் அன்பு அருகில் சென்று ஆதரவாய் கேட்க 

 

“அன்பு அத்தான்… நான் செஞ்சது தப்பு தான்.. ஆனால் எனக்கு வேறு வழி தெரியல அத்தான்… என்னால அவள் இல்லாம ஒரு வாழ்க்கையை நெனச்சி கூட பார்க்க முடியல… இத்தனை னால் எதோ விளையாட்டா அவளை காதலிக்கிற மாதிரி சுத்திகிட்டு இருந்த அப்போ ஒன்னும் தெரியல.. ஆனால் இனி அவள் என் வாழ்க்கையிலேயே இருக்க மாட்டேன்னு நினைக்கும் போது என்னால தாங்கமுடில அத்தான்”கேவி கேவி அழுது கொண்டு 

 

இதை கேட்டு கொண்டு இருந்த இலக்கியன்.. அவன் அருகில் வந்து… அவனுக்கு ஆறுதலாய், அவன் பக்கம் அமர்ந்தவன்… 

 

“என்னாது பொண்ண… என்னடா சொல்லுற… இத்தனை நாள் எனக்கு கூட சொல்லவே இல்லை… யாருடா அந்த பொண்ணு? “

 

பதில் கூற தயங்குபவனை… ஆறுதல் படுத்தி பதில் கூற சொன்னவர்களை பயத்துடன் பார்த்தவன்…. அவள் பேரை சொல்ல வாய் எடுக்கும் போது 

 

“காயத்திரி” என்றாள் இனியவள்… உறுதி பார்வை ஒன்றை விக்கியின் மேல் பதித்த படி…. 

 

அன்பிற்கும் இலக்கியனுக்கும் முதலில் இது அதிர்ச்சியாக இருந்தாலும்… இத்தனை நாள் இதை எப்படி கவனிக்காமல் விட்டோம்… என்று விக்கியை கேள்வி பார்வை பார்த்தவர்கள் 

 

“ஆம்” என தலை அசைத்து… இனியவள் சொன்னது உண்மை தான் என்று உறுதி படுத்தினான்….. 

 

“அப்போ காயத்ரியும் உன்னை…. ” இழுத்த இலக்கியனை பார்த்த விக்கி….. “அவளுக்கும் என்னை பிடிக்கும்டா.. ஆனால் அன்பு அண்ணன் விசயத்துல எங்க அம்மாக்கும் மீனுவும் பண்ணது எல்லாம் உங்களுக்கு தெரியும்ல… அதனால பயப்படுறாடா… அதனால சொல்ல மாட்டேங்குறா” என்றான் உறுதியாய் 

 

இப்பொது என்ன செய்ய என்று யோசித்தவர்களிடம் பேச துவங்கிய இனியவள் 

 

“இன்னைக்கு இந்த விஷயம் இப்படியே இருக்கட்டும்.. நாளைக்கு பொண்ணு தானே பாக்க வராங்க… வந்துட்டு போகட்டும்.. நானே காயத்ரி கிட்ட பேசுறேன்” என்றாள் இனியவள் 

 

அதுவே சரி என்று நினைத்தவர்கள்… அவர் அவர் அறை செல்ல… விக்கியை மட்டும் அன்பின் அறையிலேயே தூங்கும் படி கூறி விட்டு கலைந்தனர்…. 

 

இனியவள் சென்றதை உறுதி படுத்தி கொண்ட இலக்கியன்.. அன்பின் அருகில் வந்து… 

 

“நல்லா தூங்கு ராஜா… என்னை பகைக்காமல் இருந்து இருந்தா… இதோ இந்த பண்ணிக்கூட எல்லாம் தூங்க வேண்டிய நிலைமை வந்து இருக்காது… பெரியவங்க சொல்லுறத எல்லாம் யார் கேக்குறா” இல்லாத காலரை தூக்கி வீட்ட படி அவன் பேச 

 

“டேய்… இவன் கூட படுக்குறது கூட கஷ்டமா இல்லடா… ஆனால் நீ எல்லாம் என்னை கலாய்க்குற அளவுக்கு என் நிலைமை ஆகிடுச்சு பாத்தியா… அது தான்டா கஷ்டமா இருக்கு” நெஞ்சில் கையை வைத்து கொண்டு அவன் சொன்ன விதத்தில் விக்கிக்கே சிரிப்பு வந்து விட்டது… அதே சிரிப்புடன் இலக்கியன் தன் காதல் ராணிகளுடன் தன் கனவை தொடர்ந்தான்… 

 

அடுத்த நாள் காலை விடிந்த உடன்…குளித்து முடித்து சமையல் அறை புகுந்த இனியவள்… எதோ இரண்டு நிமிடம் அங்கு பேசி கொண்டு இருந்து விட்டு… செல்லம்மாவிடமே அன்பு எங்க என்று கேட்டாள்… 

 

இதில் இதிகைத்த ஜானகி… செல்லம்மாவை பார்க்க.. அவருக்கும் அதே திகைப்பு தான்….பின்னாடி தோட்டத்து பக்கம் போனான்மா… 

 

பதில் கூறினாலும்.. அவள் கண்ணில் இருந்த படபடப்பு… கால்களில் இருந்த அவசரம்…. முகத்தில் இருந்த புதுமையை யாரும் கவனிக்காமல் இல்லை 

 

அன்னை நோக்கி ஓடியவள்….அங்கு இரண்டு பூச்செடுகளுக்கும் பாதி கட்டி விட்டு கொண்டு இருந்தவனை பார்த்தவள்… 

 

அன்பு என்று அவன் பின்னால் இருந்து ஒளி எழுப்ப.. அதில் திரும்பியவன்… மேல் சட்டை இல்லாமல்… வேஷ்டுயை மடித்து கட்டி கொண்டு… தலை முடி எல்லாம் கலைந்து… முகம் துவண்டு வேலை செய்தவனை பார்த்தவள்… 

 

அவன் நின்று இருக்கும் கோலத்தில் எந்த விதமான அச்சமும் இல்லாமல்.. நாணமும் இல்லாமல்… அவனை சகஜமாய் பார்த்தாள் 

 

இந்த கட்சியை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டு இருந்த இலக்கியன்… 

 

“அட பாவிகளா… இது என்ன வீட்டுல நடக்குற கொடுமை.. அவன் நின்னுகிட்டு இருக்க நிலை என்ன… இவள் பக்கத்துல போய் கொஞ்சிகிட்டு நிக்குற அழகு என்ன… ஆனால் நம்ம போய் கேட்டா காதல்  இல்லைணு நம்ப கிட்டயே போய் சொல்லுவாங்க”தலையில் அடித்த படி அருகில் அன்பு கழட்டி வைத்த சட்டையை அவனிடம் கொண்டு சென்றான்… 

 

இலக்கியன் சட்டையை கொடுத்த பின்னர் தான் இருவரும் நிலையை உணர… அவன் சட்டை அணியும் வரை திரும்பி நின்றவளை பார்த்த இலக்கியன் 

 

“பாராரா… இப்போதான் தெரியுதாம்… ரொம்ப எல்லை மீறி போறீங்கடா… ஒரு சின்ன பையன கூட வெச்சி இருக்கோம்ன்ற எண்ணம் கூட இல்ல உங்களுக்கு” தனக்கு தானே புலம்பி கொண்டு இருந்தான் இலக்கியன் (அதாவது சின்ன பிள்ளை இலக்கியனாம்… வைஷு குட்டின்னு யாராச்சும் நெனச்சி இருந்தா தலைல ஒரு கொட்டு போட்டுக்கோங்க)

 

நேத்து ராத்திரி நாம தூங்க போனோம் இல்லை… அதுக்கு அப்றம் இரண்டு மணி நேரம் கழிச்சி நான் கண் திறந்து பார்த்த அப்போ காயத்ரி ரூம்ல இல்லை… அவளும் விக்கி மாதிரி ஏதாச்சும் பணிக்க போறான்னு பயந்து வீடு எல்லாம் பார்த்தேன்… 

 

அப்போ வீட்டோட மூலையில உக்காந்து இதோ இந்த சட்டையை வெச்சி முகத்துல மூடி… கட்டி அணைச்சி அழுது கிட்டு இருந்தா… ரொம்ப நேரம் அழுதுட்டு ரூம்க்கு வந்து இந்த சட்டையை ஒளிச்சும் வெச்சிட்டா… 

 

காலைல நான் அவள் எழுந்து குளிச்சிட்டு வந்த அப்றம் நீ யாரையாவது காதலிக்குறியாணு கேட்டேன்…. அதுக்கு அவ இல்லவே இல்லைணு சொல்லிட்டா… மேலும் அவளை போட்டு வாங்க பேச்சு கொடுத்தும்…. அவ பிடி கொடுத்தே பேசலை…. என்று நடந்ததை கூறியவளின் கையில் இருந்த சட்டையை வாங்கி ஆராய்ந்தான் அன்பு 

 

“இது என்னோட சட்டையாச்சே… அத்தான் உங்க கிட்ட எப்படி வந்துது… எத்தனை நாள் இதை தேடிகிட்டு இருந்தேன் தெரியுமா? ” சோம்பலை முறித்து கொண்டு சகஜமாக.. இரவு இருந்த எந்த கவலையும் இல்லாமல் வந்தான் விக்கி 

 

வந்தவனிடம் விஷயத்தை கூற… ஆமாம் அத்தான்… இது லக்ஷ்மணன் மாமா எடுத்து கொடுத்த சட்டை தான்…. என்று உறுதி படுத்தினான்..  

 

அவனையே பார்த்து கொண்டு இருந்த இலக்கியன் ஏன்டா… “சட்டையை திருடி வெச்சி ரசிக்குற அளவுக்கு நீ ரொமான்டிக் ஹீரோவாடா… இந்த மாதிரி எந்த விஷயமும் தவறுதலா கூட நம்ப வாழ்க்கைல நடக்க மாட்டேங்குதே” யோசித்து கொண்டே பார்வையை சுழற்றியனுக்கு அவ்வழி சென்ற மீனு கண்ணில் பட… 

 

ஆத்தாடி…”இவள மாதிரி தப்பு என் வாழ்க்கைல வராம கூட வேண்டாம்டா சாமி” என்று திரும்பி விட்டான் 

 

“இப்போ காயத்திரியை எப்படி உண்மையை சொல்ல வெக்குறது… அவள் பேசாமல் நாம ஒன்னும் பண்ண முடியாதே!!” என்றான் அன்பு 

 

அவன் கூறுவதும் சரி தான் என்று அம்மோதிதான் இலக்கியன்..  

 

அதுக்குத்தான் நான் ஒரு பிரில்லியண்ட்டான ஐடியாவோட வந்து இருக்கேன்…. இல்லாத காலரை தூக்கி விட்டு கொண்டு கையில் நான்காய் மடிக்க பட்ட பேப்பர் துண்டுடன் கூறினால் இனியவள் 

 

“அடடே… வீட்டுல அடுத்த அறிவாளி உருவகிடாக போலயே…. இனி வீடு தாங்காதுடா சாமி” என்றான் இலக்கியன் வெளிப்படையாக 

 

                மாயம் தொடரும்…..   

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!