Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Niththirai Kalaiththa Maayaval

Niththirai Kalaiththa Maayaval 20

 

கண்ணாளனே கண்ணாளனே

உன் கண்ணிலே என்னை கண்டேன்

கண் மூடினாள் கண் மூடினாள்



Advertisement

அந்நேரமும் உன்னை கண்டேன்

 

ஒரு விரல் என்னை தொடுகையில்

Advertisement

உயிர் நிறைகிறேன் அழகா

Advertisement

மறு விரல் வந்து தொடுகையில்

விட்டு விலகுதல் அழகா

 

Advertisement

உயிர் கொண்டு வாழும் நாள் வரை

இந்த உறவுகள் வேண்டும் மன்னவா

 

கடிதத்தை படித்து முடிக்கவும்… “விக்கி” என்று கத்தி கொண்டு இரண்டு குரலொலிகள் இலக்கியன் காதில் விழாவும் சரியா இருக்க…. 

 

“ஹப்பாடா… திட்டம் வேலை செய்யுது… இதோ வரேன்டி என் கொத்தமல்லி கொழுந்தே”… என்று குஷியாக இலக்கியன் காயத்ரி பக்கம் திரும்ப

 

அவளோ இதை நம்பலாமா வேணாமா என்ற யோசனையில் சிறிதே சிரிது அதிர்ச்சியில் அங்கு நின்று இருந்தாள்… 

 

அதை பார்த்த இலக்கியன்… இனியவளை பார்க்க… அவளும் அதே ஆராய்ச்சியில் தான் காயத்திரியை பார்த்து கொண்டு இருந்தாள்…. 

 

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு… கோரஸாக அன்பை பார்க்க…. அவனோ “இதுக்கு தான் முன்னவே சொன்னேன்” என்பதை போல் பார்த்து வைத்தான்… 

 

“அப்போ கத்துனது யாரு”… என்று பார்வையை திருப்ப…அங்கு ஒரு புறம் ஜானகி சுவற்றை தாங்கி கொண்டு அதிர்ச்சியில் நின்று இருக்க… மறுபுறமோ… மீனு கிட்ட தட்ட மயங்கி நிலையில் தரையில் விழுந்து அழுது கொண்டு இருந்தாள்… 

 

அதை கண்ட இலக்கியனுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை… “உன்னை ரொமான்டிக் ஹீரோ ரேஞ்சுக்கு கற்பனை பண்ணேனேடா… டம்மி பீஸ் தானா நீயு…கடைசியில நீ சாகுறனு சொன்ன அப்றம் கூட… உன் அம்மா கிட்டயும் ஒரு ரியாக்ஷனும் இல்லை… மீனுவும் அசராம நிக்குறா… என்ன இருந்தாலும் பாவம்டா நீயு…” யோசித்தவனுக்கு சிரிப்பு முகத்தில் தெரிய ஆரம்பிக்க… 

 

அதை கண்ட இனியவள்… அவன் காலில் ஒரே ஓங்கி ஒரு மிதி மிதித்தாள்… அதன் வலியில் முகம் சுருங்கி அடுத்து என்ன என்று யோசிக்கும் போதே… அவனிடம் நெருங்கிய காயூ…. 

 

[the_ad id=”6605″]

 

 

 

“அந்த லெட்டரை குடு அண்ணா… அவன் அப்படி எல்லாம் பண்ண மாட்டான்… அந்த அளவுக்கு கோழை இல்லை அவன்” நம்பிக்கையாய் பேசியவள்… அந்த லெட்டரை வாங்கி படித்தாள் 

 

அவள் பேசியதை கேட்ட இலக்கியன்… இனியவள் பக்கம் திரும்பி “அவரு கோழை இல்லையாம்….கேட்டுக்கோ… அன்னைக்கு நீ பாட்டிலோட பார்த்ததை இவ பார்த்து இருக்கனும்… எவ்ளோ நம்பிக்கை” சலித்து கொண்டான் 

 

பின் பெருமாள் பக்கம் திரும்பியா காயு…. “பெருமாள் அண்ணா… கடைசியா எங்க பார்த்தீங்க விக்கியை? ” என்றாள் இப்பொது தான் சிறு பதட்டத்தோடு… 

 

அவர்விவரம்சொல்லவும்….இலக்கியனிடன்””அண்ணா  என்னை அங்க கூட்டிட்டு போங்க… ப்ளீஸ் என்றாள்”

 

சரி என்று காயு, இலக்கியன், இனியவள், அன்பு அனைவரும் கிளம்ப…. அவர்களை மறித்த மீனு தானும் வருவதாக கூற… அவளின் கண்ணில் எப்போதும் இருக்கும் ஆணவம் தவறி தவிப்பே அதிகம் தெரிந்தது… “சரிவா ” என்று அவளையும் அழைத்து கொண்டு கார் இருக்கும் இடம் அடைந்தார் 

 

காரில் ஏரி அனைவரும் கிளம்பும் முன்…. வேலுச்சாமியிடம் வந்த அன்பு… முடிந்த வரை சுருக்கமாக நடந்ததைக்கூறி விட்டு… “பயப்படாதீங்க அப்பா… நான் பாத்துக்குறேன் “நம்பிக்கை அளித்த படி அங்கு இருந்து சென்றான் 

 

“எதிர் பார்த்த ரியாக்ஷன் எதுவுமே இல்லையே….வேடிக்கை பார்த்து கிட்டு வரா”காயுவை பார்த்து இலக்கியன் நினைக்க 

 

மறுபுறமோ “இதோ பாருடா…. இந்த கொடுமையை… இத்தனை நாள் எங்கம்மா போச்சு உன் பாசம் எல்லாம்…. இன்னைக்கு ஓவரா துடிக்குற” படபடப்புடன் கை கூப்பி  இஷ்ட தெய்வங்களை எல்லாம்  பிராத்தனை செய்து கொண்டு இருந்தாள் மீனு 

 

அந்த வயலின் அருகில் இருந்த கிணற்றை அடைந்தவர்கள்… இடத்தை காட்டி விட… அப்போதும் எந்த சலனமும் இன்றி தேடினாள் காயு… 

 

மறுபுறம்… மீனுவோ….”விக்கி விக்கி” என்று கூக்குரல்லிட்டு கொண்டு இருந்தாள்… 

 

அப்போதும் விக்கி தென்படாமல் போக… அப்போது தான் உண்மையான பயம் காயுவை தாக்கியது… 

 

“விக்கி… எங்க இருக்க… இப்டி எல்லாம் விளையாடாதடா….எனக்கு பயமா இருக்கு… தயவு செஞ்சி வந்துடுடா” கதற ஆரம்பித்தாள் காயு…. 

 

கேட்டு கொண்டு இருந்த… இலக்கியன், அன்பு இருவரும்… தங்கை அழுவதை பார்க்க முடியாமல்… அவளிடம் உண்மையை சொல்லி விடலாம் என்று எத்தனித்த போது…..தடுத்தாள் இனியவள் 

 

“உங்க பாச சாரையெல்லாம் இப்போ ஒன்னும் புழிய வேண்டாம்… நாம எதிர் பார்த்தது இன்னும் நடக்கல… அவ காதலிக்குறாளா இல்லையானு அவளே அவ வாயால சொல்லட்டும்” என்று விட்டு காயு பக்கம் போய் அவளுடன் அமர்ந்து கொண்டாள் 

 

“அவள் கூறுவதும் சரி தான் “என்று தோனிய இலக்கியன்… வெளியில் சொல்ல முடியாமல்… வருத்தத்தை தன்னுள் வைத்து கொள்ளவும் முடுயாமல் தவித்து கதறும் மீனுவை தான் பார்த்து கொண்டு இருந்தான்… இந்த மீனுவை இதுவரை அவன் பார்த்தது இல்லை… வியப்பாக இருந்தது அவனுக்கு…. 

 

“பாரேன்… இவளுக்கு அழ கூட தெரிஞ்சி இருக்கு… மத்தவங்கள அழ வெச்சி பாக்குறது தானே அவளுக்கும் அவ அம்மாக்கும் வழக்கம்…இது என்ன புது கதை” வாயை விட்டே வந்தது வார்த்தை…. 

 

இனியவளை பார்த்து கொண்டு இருந்த அன்போ “கல்நெஞ்சக்காரி…அது சரி எல்லாரும் நம்பள மாதிரி இருப்பாகனு நெனச்சது தப்பா போச்சு” புலம்பி கொண்டு இருந்தான் ஒரு புறம் 

 

[the_ad id=”6605″]

 

 

 

“காயுவிடம் சென்ற இனியவள்… தன் அம்பை எய்ய துவங்கினாள்… “இப்போ அழுது என்ன பண்ண முடியும் காயு… காலைலயே அதுக்கு தான் பார்த்து முடிவு பண்ணுனு சொன்னேன்… அது இல்லாமல் நீ தான் அவனை காதலிகளையே… அப்றம் என்ன… வா போகலாம்” கையை பிடித்து இழுத்தவளை உதறி விட்டு… கடும் கோவத்தில் முறைத்தாள் காயு 

 

“நான் சொன்னேனா… காதலிக்கலைனு…. அவன் தான் என்னோட உயிர்… சின்ன வயசுல இருந்தே எனக்கு அவனை ரொம்ப பிடிக்கும்… இன்னைக்கு கூட பொண்ணு பாக்க தானே வராங்க… நிச்சயம் ஆகுற மாதிரி இருந்தா அப்பா கிட்ட சொல்லலாம்னு தன் இருந்தேன்… அதுக்குள்ள இந்த லூசு இப்டி பணிக்குச்சி” என்று அழுது கொண்டு இருந்தவளை அதிர்ச்சி பார்வை பார்த்தாள் மீனு 

 

“என்ன… நீயும் காதலிக்குறியா!!”” அதிர்ச்சி கலந்த நிலையில் காயுவை அவள் நெருங்கும் வேளையில் 

 

தங்களின் திட்டம் வெற்றி பெற்றது என்று மற்ற மூவரும் நினைத்து கொண்டு இருக்கும் போதே 

 

“என்னாலயும் அவன் இல்லாமல் வாழ முடியாது… அதுக்கு நான் அவன் கூடவே செத்துடுறேன்” கிணற்றை நோக்கி ஓடினாள் காயூ 

 

அதில் அனைவரும் அவளை நெருங்கி இருக்க… கிணற்றின் அருகில் சென்ற க்யூவை இழுத்தான் அன்பு….

 

“போதும்டா இந்த விஷப்பரீட்சை…இவ இவ்ளோ அழுவர்த பாக்குறதுக்காகவாடா நம்ம அண்ணனுகனு ரெண்டு பேர் இருக்கோம்… முடிலடா இவளை இப்டி பார்க்க” க்யூவை அனைத்த படி கூறினான் அன்பு 

 

அந்த நேரம் புத்தரின் பின்னால் ஒளிந்து கொண்டு நின்று இருந்தவனை அழைத்தாள் இனியவள்… 

 

வெளியே வந்தவனை குழம்பி போய் பார்த்தனர்  மீனுவும் காயுவும்… 

 

ஆனால் அவனை கண்ட சந்தோஷத்தில்… முதலில் அவனிடம் ஓடி போய் அணைத்து கொண்டு அழுது தீர்த்தாள் மீனு …. 

 

“என்ன அண்ணா… என்ன என்னமோ சொன்னாங்க தெரியுமா… எனக்கு எவ்ளோ பயம் ஆயிடுச்சி தெரியுமா? இப்போ என்ன பார்த்ததும் நிம்மதியா இருக்கு” புன்னகைத்த படியே அவனை அனைத்தவள் 

 

“எதுக்கு இப்டி பண்ண” என்று அடிக்கவும் தவற வில்லை” கொடுக்க பட்ட அணைத்து அடியையும் வாங்கி கொண்டு மீனுவை பார்த்தவன் 

 

“என்னடி… திடீருனு அண்ணான்னு எல்லாம் சொல்லுறே… அப்டியே காத்துல பறக்குற மாதிரி இருக்குடி… நீ இப்டி பாசத்தை பொழிவனு தெரிஞ்சி இருந்தா ஒரு நாளைக்கு ஒரு தடவையாச்சும் செத்து இருப்பேனே” வாஞ்சையாய் அவளை அனைத்தவனை, கண் ஜாடையில் அங்கே பார் என்று அவள் காட்ட… மீனு கூறும் திசையில் பார்த்தவன் 

 

பேய் அறைந்தார் போல்… கள்ளாய் அமர்ந்து கொண்டு.. உக்கிர கோவத்தில்… எங்கோ வெறித்த படி அமர்ந்து இருந்தாள் காயு… 

 

அவளை கண்டவனுக்கு லேசாக பயம் கிளம்ப…..”நீ தினமும் எனக்காக சாகுரியோ இல்லையோ… இப்போ காயு உன்னை சாகடிக்க போற… பார்த்துடா விக்கி… உயிரோட இருந்தா மீட் பண்ணலாம்…”என்ற படி அவள் இனியவள் பக்கம் போய் நின்று கொள்ள 

 

காயுவை அவன் நெருங்க… அதை உணர்த்த அன்பு எழுந்து… இருவருக்கும் தனிமை கொடுக்க நினைத்து… சிறிது தள்ளி நிற்க… 

 

“காயூ” என்று அழைத்தது தான் தாமதம்… 

 

பேய் பிடித்தவள் போல் எழுந்தவள்… அவனை நெருங்கி… அதே வேகத்தில்… தன்னுடைய மொத்த கோவத்தையும் தன் கையில் கொண்டு வந்து தன் அறையில் காண்பித்தாள்… ஒன்றோடு நிறுத்தி கொள்ளாமல்… இரண்டு மூன்று என்று அவளின் ஆத்திரம் தீரும் வரை அடித்தாள்…. 

 

“ஏய்… என்ன அடிக்காதடி… வலிக்குது… இருடி” என்று அவள் கையை புடித்து அவளை அடக்கியவன் 

 

“எதுக்குடி இப்போ அடிக்குற… அதான் உனக்கு என்னை பிடிக்கலல… அப்றம் என்ன… நான் எத்தனை தடவை உன்னை கேட்டு இருப்பேன்… நீ பதிலே சொல்லல.. அப்றம் என்னோட பாவமான நிலைமையை பார்த்து…. இனியா அக்கா தான் இப்டி ஒரு சூப்பர் ஐடியா குடுத்தாங்க… பத்தியா நீயும் என்னை காதலிக்குறேனு ஓத்துக்கிட்ட” என்றான் இனியவளை கோர்த்து விட்டது கூட தெரியாமல் பெருமிதமாய் 

 

“ஆத்தாடி…எங்கயோ போற ஆவிய என் மேல ஏவி விடுறானே… போனா போகுது தம்பின்னு இவனுக்கு உதவி பண்ண… இவன் நமக்கு கருமாதி பண்ணாம விட மாட்டான் போலயே” காயுவின் கனல் பார்வையில் இருந்து தப்பிக்க அன்பின் பின் ஒளிந்தாள் 

 

அவளை கண்ட இலக்கியன்…” உன்னையும் மாட்டி விட்டுடுச்சா அந்த கொரங்கு… பாரு..  கோர்த்து விட்டுட்டு அங்க ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கறத… நம்மள மாட்டிவிடாம இருந்தா சரி” வேறு புறம் திரும்பி கொண்டு தனக்கும் இங்கு படிப்பதற்கும் சம்மந்தம் இல்லை என்பது போல் இருந்தான் இலக்கியன்…. 

 

அழுது… விக்கியை அடித்து கொண்டு இருக்கும் காயுவை நெருங்கினான் அன்பு … 

 

“உண்மையிலேயே இவனை உனக்கு பிடிச்சி இருக்கா காயூ…. இது கல்யாண விஷயம்… அதனால யோசிச்சி முடிவு எடு” ஆறுதலாய் தலை கோதி கூறியவனை பார்த்த விக்கி 

 

“என்ன அத்தான் அவளே இப்போ தான் சரின்னு சொல்லி இருக்கா…. அது உங்களுக்கு பொருகலாய…. அதுக்குள்ள பல்டி அடிக்குறீங்க” அவசரமாய் கேட்டான் விக்கி 

 

“அவசர படாதடா… ஒருவேளை காயு ஒரு வேகத்துல கூட சொல்லி இருக்கலாம்ல… இப்போ யோசிச்சா… இப்டி ஒருத்தனை கல்யாணம் பணிக்குறதானு கூட யோசிக்கலாம்… அதான்…மறுபடியும் கேக்குறோம் ” என்றான் வம்பிழுக்கும் விதமாக இலக்கியன்… 

 

அதில் கோபமுற்ற மீனு “ஏ… ஏ… என் அண்ணனுக்கு என்ன கொறச்சல்… இவனை கட்டிக்க பொண்ணுக இவன் பின்னாடியே சுத்துறாங்க…தெரியுமா ” என்றாள் மிடுக்காக 

 

“வாடி விக்கியோட புது தங்கச்சி… இன்னைக்கு தான் அண்ணன் கண்ணுக்கு தெரியுறானா… பொங்குறத பாரு “என்றவன் விக்கியின் பின்னால் பார்த்து கொண்டே… “காலி கிரௌண்ட் தானே இருக்கு” என்றான் மீனுவை சீண்டும் விதமாய் 

 

அமைதியா இருங்க ரெண்டு பேரும்… “காயு நீ உங்க அண்ணன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு… நல்ல யோசிச்சி”என்றாள் அழுத்தமாக, காயுவின் அருகில் வந்த இனியவள் 

 

[the_ad id=”6605″]

 

 

 

“சம்மதம் இனியா”… என்றவள் முகம் முழுக்க சிவக்க… வெட்கத்துடன்… இனியவளை ஓடி வந்து கட்டி கொண்டாள் 

 

அதை பார்த்த அன்பிற்கு… “மொதல்ல கேட்டது நானு… ஆனால் பதில் மட்டும் இனியா கிட்ட தான்  சொல்லுவாங்கலாம் இல்ல…. இவளும் காட்சி மாறிட்டாலே” என்று இருந்தது..  

 

விக்கியோ அவனை தான் காயு கட்டி பிடிக்க வருகிறாள் என்று நினைத்து இருக்க.. அவள் இனியவளை கட்டி கொண்டு நிற்க… “வடை போச்சே” என்று இருந்தது….. 

 

இலக்கியனும், மீனுவும் ஆளுக்கொரு புறம் முகத்தை சுளித்து கொண்டு வெவ்வேறு பக்கம் திரும்பி நின்று கொண்டனர்… 

 

வீட்டை அடைந்து… வீட்டினர் அனைவரிடமும் விசயதற்கு கூற… முதலில் அனைவரும் கோவம் கொள்ள… ஜானகி தான் அதிக பட்ச கோவத்தில் இருந்தார்… 

 

பின் இது அனைத்தும் இனியாவின் திட்டம் என்று தெரிந்த பிறகு….. “பரவாயில்லை விடுங்க அண்ணி… பசங்க நல்லதுன்னு நெனச்சி தானே பண்ணாங்க…. என்ன நம்ப கிட்ட முன்வே சொல்லி இருந்தா நல்லா இருந்த்து இருக்கும்… அதான் எல்லாம் சரி ஆகிடுச்சே… அப்றம் என்ன” என்று ஜானகியே பல்டி அடிக்க… 

 

அவரை ஆமோதிக்கும் விதமாய் அனைவரும் சமாதானம் ஆக… சரி என்று ஒப்புக்கொண்டனர்….. 

 

அதை பார்த்து கொண்டு இருந்த அன்பிற்கோ ” என்னடா நடக்குது இங்க.. குடும்பத்தை எப்படி சரி பண்ண போறோம்… எல்லாரையும் எப்படி சம்மதிக்க வெக்க போறோம்னு பயந்து கிட்டு வந்தா….இவ பேரை சொன்னா உடனே கைல வெச்ச ஐஸ் மாதிரி எல்லாரும் உருகுராக” அதிருப்தியுடன் அவன் இருக்க 

 

“இதெல்லாம் சரி பட்டு வராது… எதோ மாயம் மந்தாரம் பண்ண மாதிரி இருக்காங்களே எல்லாரும் அவளுக்கு… நம்மள யாரும் கண்டுக்காம போய்டுவாங்க அன்பு… உன்னோட கெத்தை விட்டு குடுத்துடாத” அவனுக்கு அவனே அறிவுரையையும் வழங்கி கொண்டான்… 

 

அவனை கவனித்து கொண்டு இருந்த இலக்கியன்… இவனை வழிக்கு கொண்டு வந்தே ஆக வேண்டும் என்று தீர்மானித்து, அவனை நெருங்கியவன் 

 

“அண்ணா…. எனக்கும் கூட இப்டி கல்யாணம் பனிக்கனும்னு ஆசையா இருக்குடா” என்றான் குதர்க்கமாக

 

“அதுக்கு” என்றான் அன்பு ஒற்றை வார்த்தையில் 

 

“எனக்கும் இனியவளுக்கும் நீதான் வீட்ல பேசி கல்யாணம் பண்ணி வெக்கணும்டா” என்றான் வெட்க பட்டு கொண்டே 

 

முதலில் “ஓஒ சரி” என்றவன்… பின் சுதாரித்து கொண்டு … அவன் கேட்டது புரிய.. “என்னடா சொல்லுற என்றான்”பீதியாய்

 

“ஆமாம்டா… அதான் உனக்கு அவளை பிடிக்கலல… அவளுக்கும் எப்படியும் கல்யாணம் நடக்கணும்… வைஷு குட்டியும் நானும் கூட நல்லா நெருங்கிட்டோம்… இனியவளை வீட்ல இருக்க எல்லாருக்கும் பிடிச்சி இருக்கு… அப்றம் என்ன… நீ அந்த மீராவோ, ஜீரவோ எதையோ கல்யாணம் பணிக்கோ… அதுக்கு அப்றம் எங்களுக்கு பண்ணி வெச்சா போதும் ” என்றான் பெருமிதமாய் 

 

“டேய் ச்சீசீ… அசிங்கமா பேசாதடா… இதெல்லாம் தப்பு… இதெல்லாம் நடக்காது… நடந்தா நல்லது இல்லை…அவளை நீ அண்ணின்னு கூப்பிட்டு இருக்கடா.. அவளை போய்”முகத்தை அஷ்ட கோணலில் மாற்றி,  படபட வென பேசியவனை பார்த்து கொண்டு இருந்த இலக்கியன் 

 

“யாருக்கு நல்லது இல்லா… அது என்னடா தங்கச்சிக்கு மட்டும் ஹெல்ப் பண்ணி கல்யாணம் பண்ணி வெக்குற… தம்பிக்கு மட்டும் பண்ணி வெக்க மாட்டியா” என்றான் இறுதியில் தன் குரலின் ஒளியை உயர்த்திய படி 

 

“கத்தாதேடா… யாருக்காவது கேட்டுட போகுது” என்றவன்…

 

 “இதெல்லாம் நடக்காது இலக்கியா… தேவை இல்லாமல் மன கோட்டை கட்டி பின்னாடி வருத்த படாதே” முடிக்கும் போது பேச்சில் வருத்தம் தெரிய தான் செய்தது… பேசி விட்டு அவ்விடம் அகன்றான் அன்பு 

 

செல்பவனை விஷம பார்வை பார்து சிரித்தவன்… “போடி போ… எங்க போய்ட போற… உன்னை கதற வெச்சாவது உண்மையை வெளிய வர வேகாமல் விட மாட்டேன்” சமபதமிட்டான் இல்லக்கியன் 

 

                 மாயம் தொடரும்…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!