Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Niththirai Kalaiththa Maayaval

Niththirai Kalaiththa Maayaval 28

வானம்நீ வந்து நிக்க

நல்லபடி விடியுமே விடியுமே

பூமிஉன்

கண்ணுக்குள்ள சொன்னபடி



Advertisement

சொழலுமே சொழலுமே

 

அந்தி பகல் ஏது

Advertisement

ஒன்ன மறந்தாலே

Advertisement

அத்தனையும் பேச

பத்தலயே நாளே

 

Advertisement

மனசே தாங்காம

நான் உன் மடியில் தூங்காம

கோயில் மணி ஓசை

நெதம் கேட்பேன் ரெண்டு விழியில்

 

ஒன்ன விட்ட யாரும்

எனக்கில்ல பாரு பாரு

என்னை கண்டேன்

நானும் உனக்குள்ள

 

நாங்க பொண்ணு வீட்டு தரப்பில இருந்து சடங்கு எல்லாம் செய்தாள் பரவாஇல்லையா? ” என்று கேட்ட படி நால்வர் வாசலில் நிற்க.. 

 

அது யார் என்பது மட்டும் யாருக்கும் புரியவில்லை… உற்று நோக்கிட… அதில் இருவர் மட்டும் யாரோ தெரிந்த முகங்களாய் தெரிய… சிறிது சிந்தித்த வீட்டினர்.. 

 

அவர்களை பிரேம், கீதா என்று அடையாளம் கண்டு கொண்டனர்… இனியாவை பத்திரமாக அன்பிடம் சேர்த்தவர்கள் அவர்கள் தானே 

 

ஆனால் மற்ற இருவர் யார் என்பது புரியாமல் போக.. சரி இனியவளை கேட்போம் என்ற படி அன்பு அவளை திரும்பி பார்க்க 

 

அவளோ கண்ணில் அதிர்ச்சி பொங்க… அழுகை கண்ணில் முட்டி கொண்டு நிற்க.. அழவும் முடியாமல். கண் இமைக்கும் மறந்து. எதோ பேய் அடித்தார் போல அவர்களை பார்த்து கொண்டு இருந்தாள் 

 

இரண்டு நிமிடம் தான் அவளின் அந்த அதிர்ச்சி எல்லாம்… அடுத்த நொடி தரையில் விழுந்து கைகளை முகத்தில் மூடு கொண்டு அழவே ஆரம்பித்து விட்டாள் 

 

இவள் நடந்து கொள்ளும் விதம் புரியாமல் அன்பு அவளை தவிப்புடன் நெருங்க.. மற்றவரும் புரியாத பார்வை பார்த்து கொண்டு இருக்க.. 

 

அனைவரும் சந்தேகத்தை தீர்த்து வைத்தது வைஷு தான் 

 

இலக்கியன் கையில் அழகாக அமர்ந்து இருந்தவள்… அந்த புதிதாக வந்த இருவரையும் பார்த்த உடன்… எந்த அதிர்ச்சியும் இல்லாமல்…. எதோ எதிர் பார்த்தவர்கள் வந்து விட்டனர் என்ற குஷியில் 

 

இலக்கியனை விட்டு ஒரே தாவில் கீழே இறங்கியவள் 

 

“அம்மா” என்ற படி அவர்களை நோக்கி ஓட ஓடி போனாள் வைஷு 

 

அப்போதும் யாருக்கும் அதிகம் விளங்காமல் போக.. எதோ சிறிது விளங்கிய அன்பு… இனியாவை பார்க்க 

 

அவள் “ஆம்”என்பது போல் தலை அசைத்து வைக்க…”எப்படி இவர்கள்” இங்கு என்று அன்பு வியந்த சமயம், பின் அவனே சுதாரித்து 

 

அவர்களின் நோக்கி “வாங்க வாங்க” என்று வரவேற்க 

 

“யார் தம்பி இவங்க.. உன்னோட கூட வேலை செய்யுறவங்களா? ” என்றார் வேலுச்சாமி புரியாமல் 

 

[the_ad id=”6605″]

 

 

 

“இவங்க… இனியாவோட அக்காவும் மாமாவும்பா” அனைவரையும் ஒரே நேரத்தில் அதிர்ச்சியில் ஆழ்த்தினான் அன்பு 

 

முதலில் திகைத்தலும்… பின் நால்வரையும் வரவேற்த குடும்பத்தினர் 

 

உள்ளே வந்த செழியனும், யாழினியும் நேரே சென்றது இனியவளிடம் தான்… 

 

வைஷுவை இலக்கியன் தூக்கி கொண்டு பின் புறம் சென்று விட… வீடு முழுவதும் இனியாவின் அழுகை சத்தம் தான் நிறைந்து இருந்தது 

 

அவள்  அப்டி அழுவதை  பார்க்க முடியாமல்.. அன்பு கூட அவளை சமாதானம் செய்ய போக எண்ணினான் தான்.. ஆனால் இப்போது இனியாவிற்கு தேவை தன்னுடைய ஆதரவு இல்லை… 

 

அவளின் அக்கா மாமவின் அணைப்பு தான் என அமைதியாக நின்று விட்டான் 

 

செழியனுக்கு தான் ஒரு கையில் அடி பட்டு.. அந்த கையை கழுத்து சுற்றி கட்டி மாவு கட்டு போட பட்டு இருந்தது 

 

அவர்களை பார்த்த சந்தோசத்தில், அதிர்ச்சியில், சொல்ல முடியாத அந்த உணர்வில் சிக்குண்ட இனிய.. செழியனின் கையை கவனிக்க வில்லை 

 

“இதோ பாரு.. அம்மு… இங்க பாரு… எங்களுக்கு ஒன்னும் இல்லடா… இதோ பாரு நாங்க நல்லா தான் இருக்கோம்… அன்னைக்கு வந்தது தப்பான தகவல்டா… இப்டி அழுகாத குட்டி… உனக்கு உடம்புக்கு இதுக்காது” என்று எப்படி கூறினாலும் இனியாவின் அழுகை நின்ற பாடில்லை 

 

“பாப்பு.. இதோ பாரு… அழுகாதடா.. மாமாவோட செல்ல பொண்ணு தானே நீயு…இங்க பாரு… மாமாவுக்கு கைல அடி பட்டு இருக்கு.. ஆனா நீ அழுகத்தே குறியா இருக்க” என்றார் அவர்.. இனியாவின் மனதை திசை திருப்பும் பொருட்டு.. 

 

அவர் கூறிய பின்னர் தான்.. கையில் இருக்கும் அவ்வளவு பெரிய கட்டு கண்ணிற்கு தெரிய… “ஹையோ மாமா.. என்ன ஆச்சு… இது எப்போ எப்படி நடந்தது.. யார் பண்ணாது… அதை மூதேவி மோகன் வேலைய? ” என்று பதறிய படி அவள் கேட்டு கொண்டே போக 

 

[the_ad id=”6605″]

 

 

பதில் எதுவும் வராமல் போக… செழியனை பார்த்தவள்… “என்ன மாமா நான் எவ்ளோ கேள்வி கேக்குறேன்… நீங்க அமைதியா இருக்கீங்க” என்றாள் குற்றம் சாட்டும் வகையில் 

 

“நீ பதில் சொல்ல விட்டா தானே பாப்பு குட்டி” என்றபடி அவளை அணைத்து கொள்ள… சிறிது இயல்புக்கு வந்து இருந்தாள் இனியா 

 

அவள் அருந்துவதற்கு தண்ணீர் கேட்க… பெருமாள் கொண்டு வந்து கொடுக்க… அதை இனியாவிற்கு கொடுத்தவர்… 

 

அவளை எழுப்பி தனருகிலேயே வைத்து கொண்டார் செழியன் 

 

இதை பார்த்த அன்பிற்கு… எதோ ஒன்று தன்னிடம் இருந்து தூரம் செல்வது போல் உணர்வு வர… அதுவும் செழியன் வந்ததில் இருந்து இனியா வான் பக்கம் திரும்பவும் இல்லை… அவனை பார்க்கவும் இல்லை 

 

செழியன் இனியாவிற்கு ஒரு தகப்பன் ஸ்தானம் தான்… அவர்களின் சந்தேக படும் அளவிற்கு அன்பு இழிவானவன் இல்லை தான்… 

 

ஆனால் இனி தனக்கு மட்டுமே சொந்தமானவள் என்று நினைத்து இருக்கும் போது… அவனை கண்டு கொள்ளவும் இல்லாத அந்த உணர்வு தான் அவனை வாட்டியது… 

 

இனியாவும் இதை அறிந்து செய்யவில்லை… சூழ்நிலை போக்கில் போய்க்கொண்டு இருக்கிறாள்… 

 

“என்ன நடந்தது… அவர்கள் இறந்ததாக சொல்ல பட்டது ஏன்… இப்போது உயிருடன் எப்படி… அதுவும் கீதா பிரேமுடன் எப்படி” என்ற கேள்விகள் அனைவரின் மனதிலும் இருந்தாலும் 

 

இனியாவின் மன நிலை சரி ஆகட்டும் என்று அனைவரும் அமைதி காத்தது தான் நிஜம்… 

 

“சரி வாங்க… எல்லாரும் சாப்பிடலாம்… சாப்பாடு எல்லாம் தயாரா இருக்கு” என்று  படி ஜானகி கூற 

 

அனைவரும் எழுந்து உணவு உன்ன சென்று விட..  போதும் இலக்கியன் வைஷுவை வெளியே விளையாட்டு காட்டி கொண்டு… அவளின் கவனத்தை வீட்டிற்குள் செல்லாமல் பார்த்து கொண்டான் 

 

சாப்பிடும் போதும்… இனியாவை தன் அக்கா மாமாவிற்கு நடுவில் அமர்ந்து கொண்டு சாப்பிட… அன்பிற்கு தான் சப்போன்று போனது 

 

சாப்பிடும் போது… மீனில் முள் எடுத்து… வெறும் சதை பகுதியை மட்டும் பார்த்து பார்த்து வைப்பது… கறி துண்டுகள் வந்தாள்… அதிலும் எலும்புகளை அகற்றி.. சுத்தம் செய்து குடுப்பது என்று அன்பு செழியன் அன்பை பொழிந்து கொண்டு இருக்க… 

 

“அன்பிற்கு தான்… இவளுக்கு மீன்ல முள் எடுத்து சாப்பிட தெரியாதுன்னு நம்ப கிட்ட சொல்லவே இல்லையே… அது சரி நாமா சாப்பிட பிறகு கடைசியா சாப்பிடுறா.. நாம தான் கவனிக்காம விட்டுட்டோமோ” என்று தன்னை தானே நொந்து கொண்டான் அன்பு 

 

சாப்பிட்டு முடித்து… கை கழுவவும் தன் மாமனோடே சென்றவளை பார்க்க தந்தையின் வேஷ்டியை பிடித்து கொண்டு… வளம் வரும் சிறு பிள்ளை போல் தெரிந்தால் இனிய, அனைவரின் கண்ணிற்கும்.. 

 

அனைவரின் கண்ணிலும் தெரியும் அந்த மாற்றத்தை உணர முடிந்தது யாழினியால்… நேற்று வரை எப்படி இருந்து இருந்தாலும் பரவா இல்லை.   இன்றோ இனியா இந்த வீட்டின் மருமகள்… சிறு பிள்ளை போல் நடந்து கொள்வதும்.. மாமாவையே பிடித்து கொண்டு செல்வதும்… அவரும் கவனித்து கொண்டு தான் இருக்கிறார் 

 

“அது மாமாவை இத்தனை நாள் பார்த்த சந்தோசத்தில தான் அவ அப்டி மடந்துக்குறா.. மத்த படி பொறுப்பான பொண்ணு தான்” என்றார் தன்னிலை விளக்கமாய் 

 

“எங்களுக்கு தெரியாதா… இத்தனை நாள் எங்களோட தானே இருந்தா..அவ சந்தோசமா இருந்தா எங்களுக்கு அதுவே போதும்” என்றார் ஜானகி 

 

ஏனோ ஜானகியை பார்த்த மாத்திரத்திலேயே புடித்து போனது யாழினிக்கு… தன் தங்கை…நல்ல குடும்பத்தில் தான் திருமணம் ஆகி வந்து இருக்கிறாள் என்ற நிம்மதியே யாழினிக்கு போதுமானதாக இருந்தது

 

“எவ்வளவு நேரம் தான் இங்கயே நிக்குறது… யாராவது வந்து நம்மளை கூப்பிடுறாங்களா பாரு” என்று சலித்த படியே இலக்கியன் வைஷுவுடன் உள்ளே செல்ல 

 

தன் அண்னையை பார்த்தவுடன்… யாழினிடம் தாவினாள் வைஷு 

 

“அம்மா… எங்க போன… நானும் அம்முவும் உன்னை எங்க எல்லாம் தேடுனோம் தெரியுமா? அம்மு தான் நீ சம்மி கிட்ட போயிருக்க.. வந்துடுவா அப்ட்னு சொன்னாங்க” மழலை அவள் பேச… அவளின் பேச்சிலேயே இனியா இத்தனை நாள் எவ்வளவு துயரத்தை அனுபவித்து இருப்பாள் என்பது நான்கு புரிந்தது அனைவர்க்கும்… 

 

இருந்தும் சிறு இடுக்கம் இருக்க தான் செய்தது  அனைவரிடத்திலும் 

 

[the_ad id=”6605″]

 

 

 

எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்பது புரியாமல் வீட்டினர் யோசித்து கொண்டு இருக்க… அப்போது தான் சாப்பிட்டு முடித்து விட்டு அனைவருடனும் அமர்ந்தனர் செழியன், பிரேம் தம்பதியினர் 

 

“தம்பி… எப்படி சொல்லுறதுனு தெரில.. இன்னைக்கு காலைல தான் இனியாவுக்கும் அன்புக்கும் கல்யாணம் நடந்துச்சு..நீங்க இருக்கறது எங்களுக்கு தெரியாது… இறந்துட்டதா தான் தெரியும்…இனி மேற்கொண்டு பேச வேண்டியதை நாம தான் பேசணும்” என்று பேச்சை ஆரம்பித்தார் வேலுச்சாமி 

 

அனைவரும் செழியன் மற்றும் யாழினியின் பதிலை எதிர் பார்க்க…”இனியா எனக்கு மச்சினிச்சி முறை தான்.. ஆனால் அவளை நான் இது நாள் வரைக்கும் அப்டி பார்த்தது இல்லை.. என்னோட மூத்த பொண்ணு மாதிரி தான் நெனச்சி இருக்கேன்… அவளோட கல்யாணத்தை எப்படி எல்லாமோ நடத்தணும்னு நெனச்சி இருந்தேன்…ஆனால்” 

 

என்று இழுத்தவர் என்ன பேச போகிறாரோ என்ற பயத்தை அனைவர்க்கும் குடுத்து இருக்க 

 

“இனியா கண்ணுல எங்களுக்கு வருத்தம் தெரியல… அவன் சந்தோஷமா தான் இருக்கா.. அதனால எங்களுக்கு இதில் சம்மந்தம் தான்…கல்யாணம் மட்டும் கொஞ்சம் நல்லா பண்ணனும்னு என்னோட ஆசை” என்றார் செழியன் தன்னுடைய விருப்பத்தை கூறிய விதமாய் 

 

அதுவே அனைவர்க்கும் மகிழ்ச்சியை கொடுத்து இருக்க…

 

ஆமாம்… உங்களுக்கு என்ன தம்பி ஆச்சு… எப்படி நீங்க… இத்தனை நாள் எங்க இருந்தீங்க” இனியாவின் கேள்வியை கேட்டே விட்டார் வேலுச்சாமி 

 

செழியனின் பதிலுக்கு அனைவரும். காத்திருக்க… நமக்கு காத்திருப்போம் 

 

                    மயக்கம் தொடரும்….. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!