Niththirai Kalaiththa Maayaval 5 & 5.1
இதுவரை :
ரயிலில் சந்தித்த பெண்ணை காப்பாற்றுகிறான் அன்பு… அவன் ஊரில் இறங்கும் போது அவளை அன்பின் மனைவி என்று தவறாக புரிந்து கொள்ளும் அவனின் சொந்தம்… அன்புடன் வீட்டிற்கு செல்கிறாள் அவள்
இனி:
Advertisement
எப்போதுமே இன்பம் என்றாள்
முன்னேற்றமே எது
Advertisement
எப்போதுமே பகலாய் போனால்
Advertisement
வேட்கை தாங்காது
மனசை சலவை செய்ய
Advertisement
ஒரு காணீர் துளி தான் உண்டு
உன் உயிரை சலவை செய்ய
ஒரு காதல் நாடி உண்டு
உன் சுவாசாத்தீயை மாற்று
அதில் சுற்ற காற்றி ஏற்று
நீ இன்னோர் உயிரில்
இன்னார் பெயரில் வாழ்ந்து வீடு
நடப்பது எதுவும் புரியும் முன்பே….. தன் கையை பற்றி இழுத்தவன் தன் வண்டியை நோக்கி அவளை கூட்டி சென்றவன்… அவளை வண்டியில் அமரும் படி கட்டளையும் இட்டான்….
அதன் படி… பெருமாள் வண்டி ஓட்ட… ராமன் அவருக்கு பக்கத்து சீட்டில் அமர்ந்து கொள்ள….. அன்பு, குழந்தை அவள் மூவரும் பின் சீட்டில் குடும்பமாய் அமர்ந்தனர்…
பயணிக்கும் நேரம் முழுவதும் நடப்பது புரியாமல்…. தெரியாதவர்களோடு செல்வது சரியா… அதுவும் பழகி நான்கு மணி நேரமே ஆன இவனுடன் தான் செல்வது பாதுகாப்பானதா என்ற கேள்விகளும் பயங்களும் அவளுக்கு அதிகரித்து கொண்டே போக….
வைஷுவோ தான் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து கொண்டு வழியை வேடிக்கை பார்ப்பதும்…. சந்தோஷத்தில் கத்துவதாகவும் இருந்தாள்…
அதை பார்த்த ராமனுக்கும் பெருமாளுக்கும் மன நிறைவு அதிகமாகவே இருந்தது…. அதே மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு அழைத்து தகவல் கூறினான்….
அவன் பேசி கொண்டு இருக்கும் போதே பின்னால் வைஷுவோ “அம்மு பாரு தேங்காய் மரம்,…அம்மு பாரு பிளாக் காக்க,…. அம்மு பாரு பிக் வீடு என்று பார்க்கும் அனைத்தையும் அவளுக்கு காம்பித்து கொண்டு இருக்க…
அவளுக்கோ தான் செய்வது சரியா… உண்மையை கூறி விடுவோமா என்ற எண்ணம் வர… அன்பை இரண்டு முறை திரும்பி பார்த்தவள்… அவன் எதோ அந்த பக்கம் திரும்பி கொண்டு வந்து கொண்டு இருந்தான்….
விளையாடி கொண்டு இருந்த வைஷுவை, ராமன் தன் இடம் அழைத்தவர்….. அவளோ தயங்கிய படி தன் அம்முவை பார்க்க….
அதை பார்த்த ராமன்… “என்ன குட்டி அம்மாவை பார்க்குறீங்க… நான் உங்களோட தாத்தா தான்.. வாங்க என்று அழைக்கவும் “
ஹேய் புது தாத்தா வா… அம்மு நான் போட்ட? என்றாள் திக்கி திணறி….
சரி என்பது போலவே அவளை தூக்கி ராமனிடம் கொடுத்தவள்… பின் நோக்கி அமரும் முன் எதர்ச்சியாக அன்பை பார்க்க… அவனோ ஒரு கண்ணில் கண்ணீர் வடிந்து… மறு கண் கண்ணீரை துடைத்து கொண்டு இருந்தான்….
இவள் பார்ப்பதை கண்டு கொண்ட அவன்… தன் நிதான படுத்தி கொண்டு…. ராமனிடம் பேச்சு கொடுப்பது போல் சகஜமாக முயற்சிதான்….
இதை பார்த்தவளுக்கு மனம் எதோ போல் ஆகி விட… எதோ ஒன்று அவளை உறுத்த ஆரம்பித்தது…..
ராமனிடம் சென்ற வைஷுவோ…. தாத்தா இதோ பாரு கண்ணாடி.. இதோ பாரு சாமி என்று காரில் இருந்த அனைத்துக்கும் பெயர் சூட்டி கொண்டு இருந்தாள்….
சிறிது நேரம் பேசியவளுக்கு அலுத்து போய் துக்கம் வந்து விட… அவர் மேலே தூங்கி விட… அந்த நிறைவில் அவரும் சிறிது நேரம் கண்அயர்ந்தார்…
ஆனால் பின்னால் அமர்ந்த இருவருக்குமே மறந்தும் தூக்கம் வர வில்லை… அதே நேரம் இருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவும் இல்லை….
ஐந்து மணி நேரம் ஐந்து நிமிடத்தில் முடிந்தது போல் இருந்தது இருவருக்குமே… அதற்குள் வீடு வந்து விட….
ராமன் இறங்கி வீட்டிற்குள் தகவல் கொடுக்க… அன்பு இறங்கி அவள் இறங்க தன் ஒரு கையை நீட்ட… அவளோ அவனை அதிகபட்ச கோவத்தில் முறைத்து… அவனின் கையை உதறியவள் குழந்தையுடன் தானாக இறங்க முயற்சிக்க… இறங்கிய அடுத்த நொடியே கால் இடறி தடுமாற… அதன் விளைவாய் அவன் மேலே போயி விழுந்தவளை நிலை படுத்தியவன்….
[the_ad id=”6605″]
இதுக்கு தான் கையை பிடிச்சிக்க சொன்னேன் என்பது போல் பார்த்து வைக்க
“ஒன்னும் தேவை இல்லை….. இது வரைக்கும் பண்ணது பத்தாதா… ரயில்ல ஒரு தடவை கை பிடிச்சதுக்கு தான் இப்போ இங்க இருக்கேன்… மறுபடியு கை பிடிச்சி வேற்று கிரகத்துக்கு கூட்டிட்டு போக போறியா? ” என்று பொரிந்து தள்ளினாள்…
“நான் கை கொடுக்கலனா இந்த உலகத்துலயே இருந்து இருக்க மாட்டே” என்பதை போல் இருந்தது அவனின் பார்வை
அதற்குள் வீட்டில் இருக்கும் அனைவரும் வந்து விட… அவர்களை பார்த்து அன்பு உணர்ச்சிவசம் அடைய… கிட்ட தட்ட இரண்டு வருடம் கழித்து பார்பவனின் பாசம் அல்லவா…
முதலில் ஓடி வந்தது அவனின் தங்கை தான்… வந்தவள் அன்பை கூட முழுதாக கவனித்தாலோ இல்லையோ.. அவன்பின் குழந்தையுடன் இருந்தவளுக்கு தான் அதை பார்வையும்….
அவளின் பார்வையை கண்டவள்…. “என்ன இது கண்ணுலயே ஸ்கேன் மெஷின் வெச்சி இருப்ப போல… இப்டி பாக்குறாளே….ஆமா யார் இந்த பொண்ணு ” அவள் யோசிக்கும் முன் அவள் முன் வந்தவள்….
“அண்ணி நான் காயத்திரி….உங்க முதல் நாத்தனார்….ஆனால் பயப்படாதீங்க… உங்கள கொடுமை எல்லாம் பண்ண மாட்டேன்” வேலென்தியாக முகம் முழுதும் மகிழிச்சியுடன் பேசியவளை பார்த்த மாத்திரத்திலேயே பிடித்து போனது அவளுக்கு….
“இது யாரு நம்ப குட்டியா” தாங்க நான் தூக்கிக்குறேன் என்றவளை தயக்கமாய் பார்க்க
புது இடம்…அதுவும் தான் வாழ்ந்த இடத்த்தில் விழாவிற்கு கூட இத்தனை ஆட்களை ஒரே இடத்தில் பாத்தது இல்லை….. அப்டி இருக்க வைஷு எப்படி ஏற்று கொள்வாளோ என்று இவள் தயங்க
வைஷுவோ சமத்தாக கூப்பிட்ட உடனே காட்சி தாவி விட்டால்….
“இந்த பயபுள்ளய நம்பி எதுவும் பண்ண முடியாது போலேயே” எண்ணி முடிக்கும் முன் வீட்டின் உள் இருந்து ஒரு வயதில் பெரியவர் வந்தார்
அவனை கண்ட அன்பு “அப்பா” என்று கிட்ட தட்ட அழுதே விட்டான்… அவனை ஆசை தீர கட்டி தழுவி மகிழ்ந்தான்….
அத்தியாயம் 5.1
இவர்களின் அன்பு போராட்டத்தை கண்டு கொஞ்சம் அசந்து தான் போனாள் அவள்….
“ஒருத்தி வாசலையே நிக்குறேனே யாராச்சும் கண்டுக்குறாங்களா பாரு” இவள் எண்ணிய எண்ணத்தை அப்படியே கூறினார் பெண் ஒருத்தி கையில் ஆரத்தை தட்டுடன்…
“மைன்ட் வாய்ஸ்னு சத்தமா பேசிட்டோமோ”
இவள் நினைக்கும் முன்னபே அன்பையையும் தன்னையும் குழந்தையுடன் ஜோடியாக நிற்க வைக்க சொல்லி கூற….
நின்றகத்தானே வேண்டும்… சலிப்புடனே அன்பின் பக்கத்தில் நின்று கொண்டாள்..
வந்த பெண் ஆரத்தி எடுப்பார் என்று பார்த்தாள்… அவரோ ஜானகி வந்து இவங்களுக்கு ஆரத்தி சுத்தி வீட்டுக்குள்ள கூப்பிடு….என்று யாரையோ அழைக்க…
அந்த கூட்டத்தில் இருந்து ஒரு பெண்மணி வெளியே வந்து… “அண்ணி நீங்களே உங்க புள்ளைக்கும் மருமகளுக்கும் ஆரத்தி எடுங்க.. அது தான் முறை “
“என்னாது இவங்க தான் இந்த முசுடோட அம்மாவா…பாக்க அழகா இருக்காங்க… இந்த அன்பு தெய்வத்தின் மகனா இவன் ” என்றது அவளின் மைன்ட்
அனைத்து சம்பர்தாயமும் முடிந்து, அவளை உள்ளே அழைத்து செல்ல பட
“இந்த குட்டி பாரு காயத்ரி கையில் வாங்குன அப்புறமும் நம்பள தேடவே இல்லை… அவுங்க கூட உக்காந்து விளையாடிகிட்டு இருக்காத பாரு… பசிக்கும் போது கூப்பிடுவா இல்லை… அப்போ சொல்லுறேன் ” யார் மீதோ இருந்த கோவம் வைஷு மேல் தாவியது….
“அம்மா… இப்போயாச்சும் பேசுங்க மா…. என்னை மாணிக்க மாட்டிங்களா? என்னை இப்டி பிரிச்சி வெச்சிடாதீங்க மா.. என் கிட்ட பேசுங்க” கெஞ்சி(கொஞ்சி) கொண்டு இருந்தான் அன்பு தன் தாயிடம்
“நீ தான்டா என்னை தள்ளி வெச்சு இருக்க இரண்டு வருஷமா…. கல்யாணம் பணிக்க அனுமதி கேட்க தானே பொண்ணை கூட்டிட்டு வரேன்னு சொன்னா… இப்போ குழந்தையுடன் குடும்பமா வந்து இருக்க… இரண்டு வருஷமா என்னை ஏமாத்திட இல்லை…. என்னிடம் இனி நீ பேசாதே” கோபத்துடன் படி ஏறி முதல் தளத்தின் ஒரு அறையில் புகுந்தார் அன்பின் தாய்
வருந்தி வாட்டமாய் நின்றாய் அன்பை சமாதானம் செய்ய வேண்டும் என்று அங்கு மூன்றாம் மனிஷியாய் நின்று வேடிக்கை பார்த்த அவளுக்கே தோன்ற தன் ஒரு கையை உயர்த்தியவள்….
“ஏய்… உனக்கு என்ன பைத்தியமா… அவன் என்ன உனக்கு தாலி கட்டின கணவனா… இனி உன் வாழ்வில் திருமணம் என்ற வார்த்தை கூட நுழைய முடியாது….”
“இது ஒரு கனவு உலகம்… இதில் நீ அங்கம் இல்லை… முடிந்த வரை இங்கு இருந்து செல்ல முயற்சி செய்” அவள் இத்தனை நேரம் மறந்து இருந்த நிஜத்தை நினைவு படுத்தியது அவளின் மனசாட்சி….
அதில் மனம் சோர்ந்தவள்… தனியே நின்று கொண்டு இருக்க….
“அண்ணி… என்ன ஆச்சு…. இவங்க பாசத்தை ஓவரா பூழியூராக இல்லை… எங்களுக்கும் உங்களை மாதிரி தான் போர் அடிக்குது ” பேசி கொண்டே அவளை பார்க்க… அவளோ வேறு ஒரு உலகில் நிற்க… “அண்ணி… அண்ணி” என்று இரு முறை அழைத்த பின்பு
“யாரு டா அது அண்ணி பண்ணினு….” கொஞ்சம் எரிச்சலுடனே பார்க்க… தன் இரு பக்கமும் இருவர் நின்று இருக்க…
“ஓஹோ நம்மளை தான் அண்ணின்னு கூப்டுறார்களா?” என்பதை புரிந்து கொள்ள ரொம்ப நேரம் எடுத்து கொள்ள வில்லை அவள்
இன்னொருவன்…. “அக்கா குட்டி ரொம்ப கியுடா இருக்கா… பேர் என்ன” என்றான்
அக்காவா என்று விழித்தவனை… அவன் தான் உங்களை அண்ணின்னு கூப்பிடனும்… இதெல்லாம் நான் அப்றம் சொல்லுறேன்… பாப்பா பேரு சொல்லுங்க… எதோ அது தான் முக்கியம் போல் கேட்டான்…
“வைஷு… வைஷ்ணவி” என்றாள்…..
[the_ad id=”6605″]
“உங்க பேரை சொல்லவே இல்லையே” அவளும் கேட்டு வைத்து கொண்டாள்
“நான் விக்கி… அன்பு அத்தானுக்கு அத்தை பையன்”
“விக்கி”…. நைஸ் நேம் என்றவளை
“விக்கி.. பக்கினு நீங்க எப்படி வேணும்னாலும் கூப்பிடலாம்” என்றான் இன்னொருவன்…
“நான் ஆதவன்….அன்பு அண்ணனோட கூட பிறந்த தம்பி”
அவர்கள் இருவரும் எதோ கேட்க முற்பட…அதற்குள் அழைத்த அன்பின் அப்பா
இருவரையும் சோபாவில் அமர சொன்னவர்…. அன்பிடம் ஏதேதோ பேசி கொண்டு இருந்தவர்….
இவளிடம் திரும்பி… “அம்மாடி மருமகளே நான் உன்னோட மாமனாரு… இப்போ கோச்சிக்கிட்டு உள்ளே போனாலே அவள் உன்னோட மாமியார்… மீதி குடும்பத்தை பத்தி அன்பு சொல்லுவான்மா என்றார்” அவள் எதிர் பார்க்காத நேரத்தில்…
“மருமக மருமகனு தான் கூப்பிடணுமா… இல்லை பெத்தவங்க பேர்னு எதுவும் வெச்சி இருக்காங்களா?” அங்கு இருந்த பெண்மணி ஒருவர் முகத்தை திருப்பி கொண்டு கேட்க
அன்பை அனைவரும் கேள்வியாய் அவன் பதிலுக்காக பார்க்க….
அவனோ யோசனையாய் அமர்ந்து இருந்தான்…
“ஹையோ… இவ்ளோ நேரத்துல பேர் கூட தெரிஞ்சிக்காம விட்டுட்டோமே… இப்போ என்ன சொல்லி சமளிக்குறது” அவன் வாய் திறக்கும் முன்
“பொண்டாட்டி பேரை தானே கேட்டோம்… எதோ பழக்கம் இல்லாத யாரையோ பத்தி கேட்ட மாதிரி முழிக்குற… முறை படி கல்யாணம் பண்ணி தானே வாழுறீக… இல்லை”….. என்று பேச போனவரை தடுத்த அன்பின் தந்தை…. அவர் கக்க போகும் விஷ வார்த்தையை அறிந்தவராய் அன்பை பார்க்க
“அவனோ… அவசரமாய்… அது வந்து… பேருருரு வந்து” என இழுபவனை முத்தி கொண்டு எதோ கூற வாய் எடுத்தவள்… வாய் அடைத்து போனால்… அவனின் பதில் கேட்டு
“இனியாள்” என்று கூறி முடித்தவனை…. இந்த பேர் எப்படி இவனுக்கு தெரியும்… என எண்ணியவளாய் அவனை ஆச்சர்யத்துடன் பார்த்தாள்….
மாயம் தொடரும்……
