Niththirai Kalaiththa Maayaval 9
உயிர் கொண்டு வாழும் நாள் வரை
இந்த உறவுகள் வேண்டும்
மன்னவா
Advertisement
நூறாண்டுக்கு ஒரு முறை
பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம்
Advertisement
செய்பவன் நீ அல்லவா
Advertisement
எதோ ஒரு விபரீதம் நேரும் என்று யூகித்த அன்பு…. தன் தாயிடம் விவரம் சொல்லி வர சொல்லும் படி தம்பியிடம் கூறியவன்….
Advertisement
வீட்டின் கொள்ளை புறத்திற்கு ஓட…. அங்கு அவன் செலவும் மீனு இனியவள் நின்று கொண்டு இருந்த அந்த ஏணியை வேண்டும் என்றே அசைக்கவும்….
அதில் நிலை தடுமாறியவள்…. தன்னை விழாமல் காப்பாற்றி கொள்ள முயற்சித்தும்… முடியாமல் போக….
கீழே விழ…. இதில் துரதிஷ்டம் சேர்க்கும் வகையில்… அவளின் தலை கீழே போட பட்டு இருந்த கல்லில் பட்டு…. கைகள் இரண்டும் மடங்கிய நிலையில் அவ்விடமே சுயநினைவு இன்றி விழுந்தாள்….
அவள் கீழே விழுவதை கண்டவனுக்கு உயிர் நாடி ஒரு நிமிடம் நின்று செயல் பட்டது என்று தான் சொல்ல வேண்டும்….
இனியா என்று அவன் கத்திக்கொண்டு ஓடி போய் அவளை தூக்க…. அவளோ தலையில் நல்ல முடியுடன்… ரத்தம் வடிய…மயக்க நிலையில் கிடந்தாள்….
அவன் கத்திய சத்தம் கேட்டு வீட்டில் இருந்த அனைவரும் அவ்விடம் வர… இலக்கியன் செல்லம்மாவை அழைத்து வரவும் சரியாக இருந்தது…..
வந்தவர்கள் அனைவரும் பதறி… இனியவளை மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல…. இலக்கியனோ வைஷுவை பார்த்து கொள்ள அங்கேயே தங்கி விட்டான்…
இனியவளை பரிசோதித்த மருத்துவர்… அவள் தலையில் நல்ல அடி என்றும்… அதற்கு தையல்கள் போட பட்டு உள்ளதாகவும்…
வலது கையில் ஒரு எலும்பு முறிந்து இருப்பதாகவும்… அதற்கு அறுவை சிகிச்சை தேவை என்றும் கூறியவர்…
மேலும்… அவள் இன்னும் மயக்கத்தில் இருப்பதாகவும்….. அவள் மயக்கம் தெளியாத வரை அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்றும் கூறி சென்றார்…
அவளின் மயக்கம் தெளிய காத்திருந்தவர்கள்…. ஆறு மணி நேரம் ஆகியும் அவள் மயக்கம் தெளியாமல் போக…. பயம் கொண்டு மருத்துவரை கேட்க….
இன்னும் ஆறு மணி நேரத்தில் மயக்கம் தெளியா விட்டால் கோமாவில் செல்ல வாய்ப்பிருக்கிறது… இல்லை என்றால் உயிர் பிரியவும் வாய்ப்புள்ளதாக கூறினார்….
இதை அறிந்த பின் அன்பு இனியவளை காண உள்ளே அறைக்கு செல்ல….
தலையில் கட்டுடன்… கையில் கட்டுடன்… அவள் படுத்து இருந்த கோலத்தை கண்டவனுக்கு தன்னில் ஒரு பாகம் துன்புறுவது போலவே உணர்ந்தான்….
அவள் அருகில் சென்றவன்… அவளையே அமைதியாக பார்த்து கொண்டு நின்றிருக்க….
“என்னை மன்னிச்சிடுங்க இனியா…. எல்லாம் என்னோட தப்பு தான்… என்னோட சுயனனுக்காக யாருன்னே தெரியாதா உங்களை இங்க கொண்டு வந்து இப்போ இப்டி உயிருக்கு போராடும் நிலைமைக்கு கொண்டு வந்துட்டேன்…. இந்த தப்புக்கு இவ்ளோ பெரிய தண்டனை குடுக்காதீங்க…. உங்க குழந்தைக்காகவாவது எழுந்துக்கொக….
[the_ad id=”6605″]
நான் மீராவையும் மறந்துட்டு.. உங்களையே கல்யாணம் பணிக்குறேன் இனியா… இப்டி பாதியிலேயே விட்டுட்டு போகாதீங்க”
தன் மன குமுறல்களை கூறி அழுது கொண்டு இருக்க…
அவனின் தோலில் கை வைத்தான் இலக்கியன்….
“என்ன அண்ணன் சொல்லிறே? அப்போ இவங்க நீ டெல்லில காதலிச்ச பொண்ணு இல்லையா? யாரோனா யாரு அண்ணன்? ” அவன் கேட்கும் கேள்வியில் இருந்தேன் அவன் இதுவரை பேசிய அனைத்தும் கேட்டு விட்டான் என்பதை புரிந்து கொண்ட அன்பு.. வேறு வழி இன்றி மீராவை பற்றியும்… இனியவளை சந்தித்த நிலைமையையும் கூறியவன்…. குழப்பத்துடன் நின்று கொண்டு இருக்க….
அதற்குள் இனியவள் முழித்து விட…. அதை கண்ட இருவரும்… இதைப்பிறகு பேசிக்கொள்ளலாம் என்று முடிவு செய்து டாக்டரை அழைத்து கூற… அவர் அறுவை சிகிச்சை நாளை காலை வைத்து கொள்ளலாம் என்று கூறி சென்று விட..
பாவம் இனியவள் தான் இரவு முழுவதும் தூங்காமல் வலியில் அவதி பட்டால்…. எவ்வளவு மருந்துகள் குடுத்தாலும்… சிறிது நேரம் கழித்து மறுபடியும் வலி ஆரம்பித்து கொள்ள…. அவளால் பொறுக்க முடியாமல் அழுபவளை பார்க்க அன்புக்கு தான் எதோ ஒரு சொல்ல முடியாத உணர்வாக இருந்தது…..
அவளை வலியில் காண முடியாமல் செல்லம்மாள் தான் தவித்து போனார்… அவள் அருகிலேயே அமர்ந்து கொண்டு அவளை கணணிகவும் செய்தார் அவர்…..
இறுதியில் அனைவரும் எதிர் பார்த்த அந்த காலை பொழுதும் வந்து விட.. இனியவளை அறுவை சிகிச்சைக்கு அழைத்து செல்ல பட்டாள்….
அவளுக்கு அறுவை சிகுச்சை நடந்து கொண்டு இருக்கும் வேளையில்…
மிகவும் கவலையுடனும் வருத்தத்துடனும் அமர்ந்து இருந்த செல்லம்மாவை கண்ட வேலுச்சாமி…
“மருமகளுக்கு ஒன்னும் ஆகாது செல்லோ… நீ தேவை இல்லாம கவலை படாத… எதோ எதிர் பார்க்காத அசம்பாவிதம்… நடந்துடுச்சி… கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு பிள்ளை சீக்கிரம் குணம் ஆகணும்னு வேண்டிக்கோ”
எதிர் பார்க்காம நடந்தது இல்லைங்க…. தெளிவா பிளான் பண்ணி நடந்தது….
[the_ad id=”6605″]
இத்தனை நாட்கள் மீனு இனியவளை படுத்திய பாடும்…..இறுதியில் அவள் ஹாஸ்பிடல் வர நிகழ்த்த சம்பவம் என இலக்கின் தன்னிடம் கூறிய அனைத்தையும் வேல்முருகனிடம் கூறினார்…
அதை கேட்ட அவருக்கோ கோவம் தலைக்கேறியது… வீட்டில் அமைதி நிலவுகிறது என்று தானே தான் வெளியில் இருக்கும் வேலையையும்… ஊர் விசேஷத்திலும் கவனம் செலுத்துவது….
தன் வீட்டில் வாழ வந்த பெண்ணிற்கே பாது காப்பாற்ற நிலை எனும் போது… ஊர் வேளையில் தான் பங்கு கொண்டு என்ன பயன்….. உடனே சகுந்தலாவை அழைக்கலாம் என்று யோசித்து கொண்டு இருக்கும் போதே….
அன்பு அவரை தடுத்தவன்…..இதை இனி தான் பார்த்துக்கொள்வதாக கூறி விட்டான்… தன் மனைவிக்கும் தன் மகளுக்கு பாதுகாப்பை இனி தானே பார்த்து கொள்வதாக அவன் கூறி அங்கிருந்து நகர…
இவற்றை கேட்ட இலக்கியனுக்கு தான் மண்டை குழம்பியது…. ஒரு புறம் தெரியாதா பெண்ணை கூட்டி கொண்டு வந்ததாக கூறினான்… இப்பொது தன் மனைவி என்கிறான் .. அவன் மனதில் இருக்கும் எண்ணம் என்ன என்பது அவனுக்கு புரியவே இல்லை….
அறுவை சிகிச்சை முடித்து வந்தவளின் மயக்கம் தெரியவே ஆறு மணி நேரம் ஆனது…
அதுவரைக்கும் அவளின் கையை பற்றி கொண்டு அவளின் அருகிலேயே அமர்ந்து இருந்தான் அன்பு…
இனியவள் கண் விழுந்ததும் முதலில் பார்த்தது… தன் கையை பற்றி கொண்டு அமர்ந்து இருக்கும் அன்பை தான்…
எதோ பேச அவள் முயற்சிக்க… அதை புரிந்தவன்… அவளின் அருகே செல்ல…
துவண்டு போன முகம்…. கருவளையம் வேறு மெலிதாக தோன்ற ஆரம்பித்து இருந்தது… எப்போதும் சிரித்து கொண்டு இருக்கும் இதழ்கள்… இன்று வலியில் சிணுங்கி கொண்டு இருக்க…. இவை அனைத்தும் தன்னால் தான் என்ற எண்ணமே அவனை வருத்தியது….
அவனின் வேதனையை ஒரு புறம் வைத்து… அவள் கூற வருவதை கவனித்தான்
“வைஷு எங்கே என்பதையே அவள் கேட்டாள்”
நாவறண்டு பேச முடியாமல் அவள் கேட்ட…. அதிலும் அவள் வைஷுவை பற்றியே கேட்க… அலுத்து கொண்டது அவன் மனம்…
“இலக்கியனோட அவள் வீட்டுல தான் இருக்கா…கூட்டிட்டு வர சொல்லி சொல்லுறேன் ” என திரும்ப போனவனை… அவனின் சட்டையை பிடித்து தடுத்தவள்
“வேண்டாம்… அவளை கூட்டிட்டு வராதீங்க.. அவளுக்கு ஹாஸ்பிடல், விபத்து இதெல்லாம் பார்த்து பயப்படுவா…..அக்காவும் மாமாவையும் அப்டி பார்த்தவளுக்கு, அதில் இருந்து இந்த பயம்.. கூட்டிட்டு வராதீங்க…. என்னை கேட்டாள்… நான் எக்ஸாம் எழுத போயிருக்கேன்… ஒரு வாரத்தில் வந்துடுவேன்னு சொல்லுங்க “
அவள் பேசியதை கேட்டு… எதோ ஒரு யோசனையோடு தன் தாயை அவளிடம் விட்டு விட்டு…. இலக்கியனை அழைத்தான்….
அவனுக்கு தகவல் அளித்தவன் பேச்சு எதோ வித்யாசமாக இருக்க…. அதை அவனிடமே கேட்டவன்….
இனியவள் பேசியதில் அவளின் அக்கா மாமாவை பற்றி அவள் கூறிய வர்த்தகர்களை நினைவு கூர்ந்தவன்…. இலக்கியனிடம் கூற…
அவள் வீடு வந்ததும்… அவளின் விவரங்களை இப்போதாவது கேட்டு வாங்கி கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர் இருவரும்…
வைஷிவிடம் இனியவள் கூறியது போலவே கூற…அவளும் சொன்னவுடன் சரி என்று சாதாரணமாக எடுத்து கொள்ள… அதை மேலும் ஆராய விரும்பிய இலக்கியன்…
“வைஷு குட்டி… உன்னோட அம்மு அடிக்கடிக்கு இப்டி தான் எக்ஸாம் எழுத போவார்களா”
என்று கேட்டவனுக்கு வைஷு அளித்த பதில் தான் அதிர்ச்சியாக இருந்தது….
மேலும் ஒரு வாரம் இனியவள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்ற நிலை வர…
ஜானகியும், செல்லம்மாவும் ஒருவர் மாற்றி ஒருவர் வீட்டிலும், மருத்துவமனையிலும் இருந்தனர்….
செல்லம்மாள் மறந்தும் சகுந்தலாவையும், மீனுவையும் மருத்துவ மனை பக்கம் வர விட வில்லை….
“என் மருமகள்” என்று கண்டிப்புடனே ஒதுக்கி வைத்தால்
[the_ad id=”6605″]
வீட்டில் இருக்கும் அனைவர்க்கும் மீனுவின் வேலைகள் தெரிந்து விட….அனைவரும் மீனுவிடம் ஒதுக்கம் காட்ட… விக்கியோ அவளை வெறுத்தே விட்டான்….
ஜானகி மருத்துவமனையில் இருக்கும் போது காயத்ரி அவளுக்கு துணையாகவும்… செல்லம்மாள் இருக்கும் போது விக்கி அவருக்கு துணையாகவும் இருந்தனர்….
ஒரு வாரம் கழித்து வீடு வந்தாள் இனியவள்…
அவளை தன் அறைக்கு கொண்டு விட்டு… ஓய்வு எடுக்க சொல்ல…. ஓய்வுலயே அடுத்த ஒரு வாரம் ஓடியது… இடையில் அவள் வெளியே வர முயற்சி செய்தால் தான்… தலை சுற்றல் வரவும் அறையிலேயே இருந்து விட்டாள்…..
இந்த ஒரு வாரம் வைஷுவின் சேட்டைகள் தான் அதிகமாகி போயின…. இப்பொது இந்த வீட்டில் ஒன்றிய விட்டவள்… அனைவரிடமும் சேட்டையை செய்ய ஆரம்பித்து விட்டாள்..
இலக்கியன் வெளியே செல்ல வேண்டும் என்று சொன்னால்… அவன் பைக் சாவியை எடுத்து கொண்டு ஓடி விடுவது…
விக்கியின் கைபேசியை ஒளித்து வைப்பது… அதுவும் அதை சிலேண்ட்டில் போட்டு…
காலையில் கண் விழிபவள்…. அருகில் சுற்றி பார்த்து…..அன்பை தவிர யார் பக்கத்தில் இருந்தாலும் முகத்தில் தண்ணீர் ஊற்றுவது…. இன்னும் நெறைய…
அன்பு மேல் மட்டும் அவளுக்கு எதோ மரியாதை கலந்த பாசம்… அவனிடம் எந்த சேட்டையும் செய்ய மாடல்…
ஆனால் அவளிடம் சொல்லாமல் யாராவது வீட்டை விட்டு வெளியில் சென்றாள் மட்டும் அவளுக்கு பிடிக்காது… அவர்கள் வரும் வரை கோவமாக… உணவு உண்ணாமல் அமர்ந்திருப்பாள்…. இது அன்பிற்கும் பொருந்தும்….
இனியவளையும் கவனித்து கொண்டு இந்த குட்டியின் பின்னாலும் ஓடுவதற்குள் போதும் என்றானது அனைவர்க்கும்…
இவள் இம்சை போதாது என்று.. இலக்கியன் வேறு… இவளை வைத்து வீட்டில் சேட்டைகள் செய்ய ஆரம்பித்து விட்டான்….
ஒரு முறை… வைஷு, இலக்கியன்,விக்கி அமர்ந்து முற்றத்தில் விளையாடி கொண்டு இருக்க…
“சித்து…எனக்கு பசிக்குது….என்ன சாப்பிடலாம்” என்று அவனை கேட்டவள்….
குசும்பு பார்வையுடன் அவளை பார்த்தவன்… அவள் காதில் எதையோ சொல்லி…. தன் பாட்டியிடம் கேட்குமாறு அனுப்பினான்…
செல்லம்மாவின் பணி போரை முடிக்க ஏவி விட பட்ட அம்பு தான் வைஷு
“சமையல் அறை செம சென்றவள்….பாட்டி பாட்டி என்று இரு முறை அழைக்க… அவர் பதில் தராமல் போக….
அருகில் இருந்த ஜெயந்தி அவளிடம்
” என்ன குட்டி வேணும் என்று கேட்க”
அவளோ நான் பாட்டிகிட்ட தான் சொல்லுவேன் என்றாள்
வேறு வழி இன்றி தன் மௌனத்தை உடைத்த செல்லம்மாள் என்ன என்று கேட்க
“எனக்கு பசிக்குது பாட்டி… தவுடும் புண்ணாகும் வேணும்… சீக்கிரம் தங்க என்றாள்”
அதில் திகைத்தனர்… என்ன வேணும் என்று மீண்டும் கேட்க
அவள் அதையே மீண்டும் தான் கண்களை உருட்டி கொண்டு…..முகத்தை பாவமாக வைத்து கொண்டு அப்பாவியாய் கேட்கும் போதே புரிந்து விட்டது
அவள் அர்த்தம் புரியாமல் கேட்கிறாள் என்று…
அவளின் அழகில் சொக்கி போனவர்… அவளை அப்படியே கையில் அள்ளி எடுத்து முத்தங்களால் அவளின் முகத்தை நிறைத்து விட்டாள்….
இலக்கியன் ஏவி விட்ட அம்பு கட்சிதமாக கூறியை தாக்க… அதில் மகிழ்தவன்….
வைஷு அமையல அறையில் பேசி கொண்டு இருப்பது…முற்றம் வரை கேட்டது….
அதை கேட்ட அனைவரும் சிறிது கொண்டு இருக்க… இலக்கியனோ வயிற்றை பிடித்து கொண்டு சிரித்து கொண்டு இருந்தான்….
குழந்தையை தூக்கி கொண்டு முற்றம் வந்தவர்… மேஜை மேல் இருக்கும் டம்ளரை எடுத்து இலக்கியன் மேல் அடித்தார்…
இதை எதிர் பார்க்காதவன்…. தலையை தேய்த்து கொண்டு எழுந்து அமர… இதை கண்ட வைஷுவோ கை தட்டி சிரிக்க… முற்றத்தில் இருந்த அனைவரும் சிரித்து கொண்டு இருக்க
அப்போது தான் எங்கோ வெளியே சென்று வந்த அன்பிற்கு இதை பார்க்க மன நிறைவும்…அமைதியும் அடைந்தான்
பாவம் இலக்கியனுக்கு தான் மயக்கம் வராத குறை
மாயம் தொடரும்…..
