Skip to content
Post Views: 550
“ஏய் இமை… இமைவிழி.. லூசு என்னடி பண்ற” என பிரம்மை பிடித்தது போல் நின்றவளின் கையைப் பிடித்து இழுத்து கன்னத்தில் ஓங்கி அறைந்தான் செலின்.
கன்னத்தில் விழுந்த அறையால் சுயநினைவுக்கு வந்தவள் தன் முன்னே பதட்டமாக நின்று கொண்டிருந்தவனை பார்த்த பிறகு தான் சற்று முன் நடந்தது நினைவிற்கு வந்தது.
Advertisement
செலினிடம் தேவையில்லாமல் சண்டை போட்டுவிட்டு காரிலிருந்து இறங்கி எதிலிருந்தோ தப்பிப்பது போல் வேகமாக நடந்து மெயின் ரோட்டிற்கு வந்தவளை, “விழிமா….. விழிக் குட்டி…” என்ற குரலில் இருந்து ஏதோ ஒன்று அவளின் மூளையை பாதித்தது சில வருடங்களுக்கு முன்பு கேட்ட அதே குரல் அதே மென்மையும் பாசமும் அதில் அடங்கி இருக்க தான் நிற்கும் இடத்தை மறந்து அப்படியே அதிர்ந்து போய் தனக்கு எதிர்புரம் வந்து கொண்டிருந்த அந்த கனரக வாகனத்தை கவனிக்காமல் அப்படியே நின்று விட்டாள்.
செலின் ஒரு நொடி தாமதமாக அவளை இழுத்து இருந்தாலும் அவள் கேட்ட அந்த விடுதலையை கடவுள் கொடுத்து இருப்பரோ என்னவோ ஆனால் ஒரு நொடி கூட தாமதிக்காமல் அவளின் உயிரை காப்பாற்றி விட்டான் என்று தான் சொல்ல வேண்டும். தனக்கு நடக்கவிருந்த அசம்பாவிதத்தை நினைத்து அவளின் உடல் நடுங்கத் தொடங்கியது.
Advertisement
அவளின் அந்த நடுக்கத்தை பார்த்த செலின்,“ஏன் டி அர மெண்டல் இப்படி பண்ற எங்க நிக்கனுக் கூடவா உனக்கு தெரியாது . இது என்ன உங்க அப்பன் வீட்டு ரோடுன்னு நினைச்சியா. இல்ல அதோ போகுதே அந்த லாரி அதை ஓட்றது உங்கப்பன் நெனச்சியா. உங்கப்பனா இருந்தா கூட கடைசி நிமிஷத்துல பிரேக் போட முடியாதுடி அர மெண்டல் என்ன முறைக்க ஆளையும் மண்டையும் பாரு குள்ள வாத்து கொஞ்ச நேரத்துல என் உசுர கையோட எடுத்துட்டா” என்று அவளை தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.
Advertisement
அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு அமைதியாக இருந்தவள் கொஞ்சம் கொஞ்சமாக சுற்றத்தை உணரத் தொடங்கினாள்.
Advertisement
அப்படி உணர தொடங்கியவள் காதில் மறுபடியும் அந்த குரல் தீண்டி சென்றது. அதில் அவளையும் அறியாமல் செலினை விட்டு விலகி நின்றாள்.
“விழிமா விழிக் குட்டி எங்க இருக்கீங்க. எப்படா என்ன பாக்க வருவீங்க. உங்களுக்காக இங்க எல்லாரும் வெயிட் பண்றோம் சீக்கிரமா வாங்க”
“…..”
“சரிடா நீங்க வரதுக்கு முன்னாடி இங்கே எதுவும் நடக்காது. நீங்க வந்த பிறகுதான் எல்லாமே நடக்கும்”
“….”
“ ஓ செல்லத்துக்கு டிரஸ் இல்லாமையா எத்தனை டிரஸ் வேணும். உங்களுக்கு தான் இங்க எல்லாத்தோட நிறைய டிரஸ் எடுத்து வச்சிருக்கேன். உங்களுக்கு பிடிச்ச பேபி பிங்க் கலர்ல கண்டிப்பா டிரஸ் இருக்குடா. நீங்க சீக்கிரமா வாங்க டா உங்களுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்”
“….”
“உம்மா… மிஸ் யூ டா தங்கம்… ஐ லவ் யூ டா செல்லம்… சீக்கிரம் வாங்க டா குட்டிமா” என்று தனது மொபைலில் பேசிவிட்டு திரும்பியவன் அங்கே நின்றவளை பார்த்து, “ஏய் விழி” என்று புன்னகையுடன் அவளை நோக்கி வேகமாக நடந்து வந்தான் அன்பரசன்.
அவனின் வருகையைக் கண்ட செலின் விழியை விட்டு விலகிச் செல்ல பார்க்க அதனை உணர்ந்தவள் போல் அவன் கைகளை இறுக்கமாக பற்றி கொண்டாள். அவன் குரலைக் கேட்டே தன்னை விலகிச் சென்றவள் இப்போது தன் கைகளைப் பிடித்து இருப்பதை ஆச்சரியமாக பார்த்தவன் அவள் முகத்தில் இருந்த அமைதியின்மையை பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் நடப்பதை வேடிக்கை பார்ப்பது போல் நின்று கொண்டான்.
“விழிமா எப்படிடா இருக்க. உன்ன பாத்து எவ்வளவு நாளாச்சி பைனல் இயர் லாஸ்ட் டே பார்த்தது அதுக்கப்புறம் இப்பதான் மீட் பண்றோம். கல்யாணத்துக்கு வரமாட்டேன்னு நினைச்சேன் ஆனா தேங் காட் நீ வந்துட்ட. நீ வந்தது எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா.ஒரு மாதிரி லோன்லியா பீல் பண்ணிட்டு இருந்தேன். இப்போ உன்ன பார்த்த பிறகு தான் ஒரு தைரியம் வந்த மாதிரி இருக்கு. என்னடா நானே பேசிட்டு இருக்கேன் நீ எதுவுமே பேசாம இருக்க” என்று வழமை போல் பேசிக்கொண்டு அவள் கையை பிடிக்க வந்தவன் அப்போதுதான் அவள் இறுக்கமாக பற்றிருந்த கையை பார்த்துவிட்டு “யாரது” என்பது போல் குழப்பமாக அவளை நோக்கினான்.
அவனது கேள்வி தாங்கிய பார்வைக்கு எந்த பதிலும் சொல்லாமல் அதுவரை அவன் கைவிரல்களை மட்டும் பற்றி இருந்தவள் தனது இரு கையையும் சேர்த்து அவன் முழங்கையில் பிடித்து தனது நெஞ்சோடு சேர்த்து அனைத்துக் கொண்டாள்.
அவளின் இந்த செய்கையை அன்பு வித்தியாசமாக பார்த்துவிட்டு செலினை நோக்கி பார்வையை திருப்பினான். அதுவரை விழியின் செய்கை புரியாமல் இருந்தவன் அன்பு தன்னை நோக்கியதும், “ஹாய் ப்ரோ நான் செலின். இமைவிழியோட ஃப்ரெ….” என்று சொல்ல வந்தவனை சொல்லவிடாமல் தடுத்தவள், “இவர் செலின் கண்மணி என்னோட ஃபியான்சி”என்று அறிமுகம் செய்தாள் விழி .
அதுவரை விழியே கண்ட மகிழ்ச்சியில் இருந்தவன்,“என்ன உனக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிட்டா” என்று அதிர்ச்சியாக கேட்டான்.
“என்ன ப்ரோ எதுக்கு இந்த அதிர்ச்சி. என்ன விழிமா உன் பிரண்டுக்கு நம்மளோட மேரேஜ் பத்தி சொல்லவே இல்லையா இப்படி அதிர்ச்சி ஆகுறாரு” என்று எதுவும் தெரியாதவன் போல் அன்பரசனை நோக்கி கேட்டான் அவன்.
அவனின் அந்தக் கேள்வியில் சுதாரித்துக் கொண்ட அன்பு, “இல்ல சார் எனக்கு இது பத்தி எதுவும் தெரியாது. அதனாலதான்….” என்று திணறியவன், “எனி வே இரண்டு பேருக்கும் என்னோட வாழ்த்துக்கள். கல்யாணத்துக்கு என்ன கூப்பிடுவீங்க தான” என்றான் சந்தோசமாக
என்னதான் தன்னிடம் பதில் சொன்னாலும் அவன் பார்வை முழுவதும் விழியிடம் இருப்பதை கண்டுகொண்ட செலின்,“என்ன ப்ரோ நீங்க இல்லாமையா உங்கள கூப்பிடாம நாங்க கண்டிப்பா கல்யாணம் பண்ண மாட்டோம். அப்படித்தான விழி மா” என்று தங்களின் பேச்சை கவனிக்காமல் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்த விழியின் தோளைத் தட்டி கேட்டான்.
அதில் அவன் முகத்தைப் பார்த்து புரியாமல் முழித்தவளை, “உன்ன தான் கேட்டேன் பாஸ்ஸ நம்ம கல்யாணத்துக்கு கூப்பிடுவ தான” என்றான் மீண்டும் ஒரு முறை
“ஆங்.. ஆமா கண்டிப்பா கூப்பிடுவேன்” என்று அவனிடம் பதில் சொல்லிட்டு மீண்டும் அதே திசையை பார்க்க
“அப்படி அங்க என்ன தான் தெரியுது யாரு இருக்கா அங்க” என்று அவள் பார்த்த திசையை செலினும் பார்த்து கேட்டான்.
“இல்லைங்க அங்க ஒரு குட்டி பொண்ணு நிக்கா. அதோ அந்த குட்டிய பாருங்க எவ்வளவு அழகா இருக்கா. அப்படியே டால் மாதிரி இருக்கா. அந்த பொண்ண பார்க்கும்போது எனக்கு எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு” என்றாள் அங்கே விளையாடிக் கொண்டிருந்த குட்டிப் பெண்ணை பார்த்து
“ஆமா இல்ல செம க்யூட்டா இருக்கா அப்படியே பேபி டால் மாதிரி இருக்கா இல்ல” என்று இருவரும் தங்களுக்கு முன்னே நின்றவனை பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருவரும் வேறு ஒரு உலகத்தில் இருப்பது போல் பேசிக்கொண்டே இருக்க
அவர்கள் இருவரின் பேச்சும் தன்னிடம் இல்லாததை கண்டு சிறிது எரிச்சல் பட்ட அன்பு அப்படி யாரைப் பற்றி பேசுகிறார்கள் என்று திரும்பி பார்த்தான்.
அங்கே நின்று தனது உதிரத்தை கண்டவன், “விழியம்மா” என்ற சந்தோஷ கூச்சலுடன் இருவரையும் மறந்து விட்டு அந்த பூஞ்சிட்டு நோக்கி ஓடினான்.
அவனின் இந்த செய்கையை புரியாமல் செலினும் விழியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இவனின் குரலைக் கேட்ட அந்த பூஞ்சிட்டும், “ஐய் டாடிமா” என்று ஆர்ப்பரிக்கும் சத்தத்துடன் அவனை நோக்கி ஓடி வந்தாள்.
தன்னை நோக்கி ஓடி வந்தவளை வாரி அணைத்துக் கொண்டு அவள் முகத்தில் முத்தமழையை பொழிந்து அவளிடம் இருந்தும் பெற்றுக் கொண்டான் அன்பு.
“செல்லம் எப்படா வந்தீங்க. யார் கூட வந்தீங்க அப்பா கிட்ட சொல்லவே இல்ல வந்தத” என்று குழந்தை தனியாக நிற்பதை பார்த்து அவளுடன் வந்தவர்களை சுற்றிலும் தேடிக்கொண்டு கேட்டான்.
“டாடிமா நான் மாமா கூட தான் வந்தேன் அதோ அங்க நிக்காங்க மாமா” என்று அவளின் தாய் மாமாவை கை காட்டினாள் குழந்தை.
“ஏன் டா மாமா கூடவா வந்த உங்க மம்மி வரலையா” என்று மனைவியை தேடும் மனதை குழந்தையிடம் மறைத்துக்கொண்டு சாதாரணமாக கேட்டேன்.
“இல்ல டாடி மா மம்மி கிளம்பி தான் இருந்தாங்க. அதுக்குப் அப்புறம் பாட்டிகிட்ட இருந்து போன் வந்துச்சா. மம்மி திடீர்னு அழுதுட்டு நான் வரலைன்னு சொல்லிட்டா. மாமா எவ்வளவோ சொல்லி பார்த்தாங்க ஆனா மம்மி அழுதுகிட்டே வர மாட்டேன்னு சொல்லிட்டா.அதனால நானும் மாமாவும் சேர்ந்து வந்தோம்” என்றாள் குழந்தை
அதற்கு மேலும் குழந்தையிடம் கேட்க முடியாமல்,“சரி வாடா மாமாக் கிட்ட போவோம்”என்று குழந்தையை தூக்கிக்கொண்டு தனது நண்பனும் மச்சானும் ஆகிய பிரதாப்பை நோக்கி சென்றான்.
தன்னை நோக்கி வந்தவனை சிறிதும் கண்டு கொள்ளாமல் அவன் கையில் இருந்த குழந்தையை வாங்கிக் கொண்டு சற்று தள்ளி நின்றவர்களை நோக்கி, “தங்கச்சிமா எப்படி இருக்கம்மா” என்று விழியைப் பார்த்துக் கேட்டுக்கொண்டு அவளிடம் சென்றான் பிரதாப்.
“அண்ணா நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க. அண்ணி எப்படி இருக்காங்க இது இந்த குழந்தை… நான் தூக்கவா இவள” என்றாள் அவன் கையில் இருந்த குழந்தையை பார்த்து
அவள் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்தவன்,“இது….இது…. ஆங்….என் தங்கச்சி குழந்தை என்னோட மருமக தான். பிடி இவள நீயே வச்சுக்கோ” என்று அவளிடம் குழந்தையை கொடுத்தான்.
அவன் சொன்னதைக் கேட்டு சிறிது சந்தேகத்துடன், “ஓ.. அப்படியா ண்ணா செல்லக்குட்டி உன்னோட பெயர் என்ன. உங்க அம்மா, அப்பா எங்கடா.”
“அவ பேர் என்னன்னு அப்புறமா அவகிட்டயே கேட்டுக்க இது யாரு” என்று செலினை பார்த்து அவளிடம் கேட்டான்.
அவள் அதற்கு பதில் சொல்வதற்கு முன்பாக,“ஹாய் மச்சான் நான் செலின் உங்க தங்கச்சியோட பியான்சி” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் செலின்.
“ஏய் சூப்பர் மாப்ள கங்கிராஸ் எப்ப மேரேஜ். தங்கச்சி மா அண்ணன் கிட்ட சொல்லவே இல்ல பாத்தியா” என்று விழியிடம் குறைபட்ட கொண்டான்.
“ஐயோ அண்ணா இப்ப தான் எல்லாம் ஓகே ஆகி இருக்கு. இன்னும் மேரேஜ் டேட் பிக்ஸ் பண்ணல. பண்ண உடனே கண்டிப்பா உங்களுக்கு இன்பார்ம் பண்ணுவேன். நீங்க எல்லாம் இல்லாம என் கல்யாணம் நடக்காது” என்றவள்
மீண்டும் குழந்தையை பார்த்து,“பாப்பா பெயர் என்னடா” என கேட்டாள்.அதற்கு பதில் சொல்லாமல் குழந்தை தனது மாமன் முகத்தை பார்க்க,“தங்கம் ஆன்ட்டிக்கு உங்களோட பேர் என்னன்னு சொல்லுங்க” என்றான் குழந்தையை பார்த்து
“என் பேரு வி…லி …விலி ..க்குட்..டி” என்றாள் மழலை மொழியில்
“சோ ஸ்வீட் செல்லக்குட்டி உங்க ஃபுல் நேம் சொல்லுங்கடா தங்கம்” என்று குழந்தையை கொஞ்சினான் செலின்.
விழியின் கையில் சமத்தாக இருந்த குழந்தை செலின் கொஞ்சியதும் மிரண்டு அழ ஆரம்பிக்க அப்போது விழியின் கையில் இருந்து குழந்தையை வாங்கிய அன்பரசு, “இவ பேரு மான்விழி அன்பரசன்” என்றான் அன்பு
அவன் சொல்லியதில் முழு அர்த்தம் புரியாமல் அன்புவின் முகத்தை நோக்கினாள் விழி.
அவள் கண்களை ஆழமாக பார்த்துக் கொண்டு, “இவ என்னோட பொண்ணு மான்விழி அன்பரசன்” என்றான் அழுத்தமாக
error: Content is protected !!