Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Amuthangalaal Nirainthaen

Thazhampoo Vaasam Nee 23 2

தீபக் ஒத்துக் கொள்ளவில்லை… “நீங்க புல்லா கவுண்ட் பண்ணலை… “ என்றான்.

இப்போது தன் அப்பா பின்னால் போய் நின்று கொண்டான் “ப்பா.. சித்தி என்னை சீட் பண்றாங்க” என்றான்.

சக்தி சிரித்தாள்… லிங்காவும் வந்து சேர… கூடவே காவ்யாவும் வந்தாள். எல்லோரும் தீபக்கை பார்த்து சிரிக்க… 

தீபக் அழ தொடங்கினான்.. “நான் அவுட் இல்ல.. சித்தி கவுண்ட் பண்ணவே இல்லை..” என மீண்டும் சொல்ல… 



Advertisement

சக்தி “சரி வா… நானே கண்மூடிக்கிறேன்… பிக் பாய் அழுதா.. அம்மு சிரிப்பா…” என அவனை சமாதானப்படுத்தினாள். இப்போதுதான் அருகில் வந்தான் தீபக்.

காவ்யா “என்ன அண்ணி.. அண்ணன்கள் எல்லாம் இன்னிக்கு வீட்டில் முற்றுகை… என்ன விசேஷம்…” என வினவ… அப்போதுதான்.. அண்ணனும் தம்பியும் உணர்ந்தனர் இருவரும் அலுவலகம் செல்லவில்லை என்பதை.

லிங்கா “நீ இரு இளா… நான் போறேன்..” என்றான்.

Advertisement

இளா “விடுடா… செந்தில் சார்க்கு போன் செய்து சொல்லிடு.. காலையில் பார்க்கலாம்..” என்றான். அப்படியே நடந்தது. 

Advertisement

அப்படியே எல்லோரும் அமர்ந்தனர்.. காமாட்சி உள்ளிருந்து ஏதோ ஸ்நாக்ஸ் எடுத்து வந்தார்… அவரும் அமர்ந்து கொள்ள… தீபக், பற்றி பேசினர்.. அம்மு.. காமாட்சி… அடுத்து காவ்யா என எல்லோரையும் பற்றி பேச்சு சென்றது. ஒரு வழியாக பெண்கள் எழுந்து வேலையை பார்க்க செல்ல அண்ணன், தம்பி இருவரும் மட்டும் தனித்து அமர்ந்தனர்.

 

ஏதோ ஒரு தடுமாற்றம் இருவர்க்குள்ளும். இத்தனை நாட்கள் தெரியவில்லை.. திருமணம் முடிந்த உடன் தம்பி தன்னை விட்டு தள்ளி போய்விட்டது போல் ஒரு எண்ணம் இளாக்கு. தன்னிடம் ஏதும் சொல்லவில்லை.. தன் தந்தையிடம் தானே சொன்னான்… என ஒரு எண்ணம் அண்ணனுக்கு. 

Advertisement

லிங்காக்கு, அண்ணன் ஏதும் தன்னிடம் கேட்கவில்லை.. அப்பா சொன்னதை அப்படியே செய்கிறான்.. நான் சொல்லி இருக்க வேண்டுமோ.. என ஒரு குற்ற உணர்ச்சி.. எல்லோரும் இருந்த வரை தெரியவில்லை.. இப்போது தனியே அமர்ந்ததும் என்ன பேசுவது என தெரியவில்லை.. அமைதியாகினர் இருவரும்.

ஆனால் மனம் முழுவது பேச வேண்டும் என எண்ணம் இருவருக்கும்… நிமிடம் கரைய… அங்கேயே அமர்ந்து வேடிக்கை பார்த்தனர் இருவரும் எழுந்து செல்லவில்லை.

மெல்ல… லிங்கா “இளா… அது.. அது… அன்னிக்கு ரொம்ப டிப்ரஷனில் இருந்தேன். அதான், அப்பா வேற பேசல… உனக்கும் இந்த கல்யாணத்தில் சம்மதமில்ல.. அதான், என்னக்கு என்னவோ மாதிரி..” என நிறுத்த 

இளா “நானும் உன்கிட்ட பேசாம விட்டுட்டேன்… நீ இப்படிதான் யோசிக்கிறேன்னு தெரியும்.. ஆனா, என்ன செய்ய வேற நம்மகிட்ட அப்போ.. இப்போ மாதிரி தைரியம் இல்லை… ஏதோ இந்த சரக்கு அங்க போச்சே.. அதுவரை தாமுக்கு நன்றி சொல்லனும்… விடு.. டா…” என்றான்.

லிங்கா “நீ பீல் பண்ணாத டா.. உனக்கு முகமே சரியில்ல” என்றான் எப்போதும் போல அண்ணனை தாங்கும் தம்பியாக.

இளா சிரித்தபடி “அதென்ன டா.. என்னை மட்டும் எல்லோரும் கவனிக்கிறீங்க….” என்றான் தீவிரமாக.  

 

[the_ad id=”6605″]

 

 

 

 

லிங்கா அமைதியாக இருந்தான்.. இளா “நான் தைரியமாதான் இருக்கேன்.. சரியா, என் முகத்தை.. முகத்தை.. இனி யாரும் பார்க்க கூடாது… “ என்றான் சற்று கோவ குரலில். லிங்கா தலையசைத்தான் ‘சரி’ என்பதாக.

இளா “என்ன டா… சக்திக்கு இதெல்லாம் தெரியுமா… இது இப்போ மாறிடும்… இல்ல நாளைக்கு மாறிடும்… சின்ன பொண்ணு டா… மனசு சங்கடப்படும்… பார்த்து நடந்துக்கனும். ” என்றான் திடமான குரலில் அண்ணனாக.

லிங்கா “அதேதான்.. எப்போதும்… எந்த சூழ்நிலையிலும்… வந்திட கூடாது.. நம்ம வாயிலிருந்து வெளியே வந்திட கூடாது. இந்த பிஸினஸ் விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும்.. வீட்டு பெண்ணுங்களுக்கு தெரிய வேண்டாம்… எப்போதும். தாமுவும் அப்பாவும் சொல்ல மாட்டங்க… நாமதான்… சரியா இருக்கனும்..” என்றான் லிங்கா தலைவனாக.

ஆக அண்ணன் தம்பி இருவரும் இந்த விஷயத்தில் உருதியாகினர். நல்லதோ கெட்டதோ… ஆண்கள் எப்போதும் வீட்டை காப்பவர்கள்.. இந்த உலகை சமைப்பவர்கள். அவர்களிடம் குடும்ப ரசசியம் நிறைய இருக்கும். அது ரகசியமாக இருப்பதாலே பல பேரின் வாழ்க்கை நிம்மதியாக இருக்கிறது.

தீபக் இப்போது வந்து நின்றான் “சித்தப்பா… வெளிய போலாம் ரொம்ப நாள் ஆச்சு” என. லிங்காவும் சிரித்தபடி எழுந்து கொண்டான் அவனுடன்.. தன் அண்ணிடம் தலையசைத்து விடை பெற்றான்.

நேரம் சென்றது…. மூர்த்தி க்ளப்பிலிருந்து வந்தார்.. சீக்கிரமே உண்டு  வெளியே வாங்கிங் சென்றார்… மற்ற எல்லோரும் காவ்யாவை கிண்டல் செய்தபடி உண்டனர்.. 

அம்மு தூக்கத்திற்கு அழ தொடங்க.. லதா மேலே சென்றாள், கூடவே தீபக் சென்றான். லிங்கா உண்டு முடித்து மேலே சென்றான். இளா தன் தந்தையுடன் உலாவ சென்றான்.

காமாட்சியும், இளைய மருமகளும் பேசிய படியே உண்டனர். பாத்திரம் ஒதுங்க வைத்து, தேய்க்க போட்டாள் சக்தி. காலையில் நேரமே வேலைக்கு ஆட்கள் வந்துவிடுவார்கள்.. எனவே அதை முதலில் முடித்தாள். பின் டைனிங் டேபிள் துடைத்தாள். அதற்குள் பால் தந்தார் காமாட்சி.. தங்கள் இருவருக்கும் எடுத்து கொண்டு.. மேலே சென்றாள் சக்தி.

காமாட்சிக்கு நிம்மதி, முதலில் லதாவும் உடனிருப்பாள்.. இந்த இரவு வேலைக்கு. இப்போது அம்மு, தீபக் என வர, அவளின் நேரம் சுருங்கியது. இப்போது சக்தி சேர்ந்து கொள்ள… மாமியாருக்கு கொஞ்சம் ஆசுவாசம். 

பத்து நாட்களாக.. ஒதுங்காமல்.. சின்ன மருமகள் இந்நேரம் வரை கூடவே நிற்பது, அப்படி ஒரு நிறைவு அவருக்கு. அப்படியே அவளை பற்றி யோசித்தபடியே வெளியே சென்றார். கணவனுடனும்… பெரிய மகனுடனும் பேசிக் கொண்டிருந்தார்.

 

சக்தி மேலே தங்களின் அறைக்கு சென்றாள். அமைதியாக உள்ளே வர… லிங்காக்கு இது வழக்கமான நிகழ்வுதான் என்பதால்… கட்டிலில் அமர்ந்திருந்தவன் நிமிர்ந்து பார்த்து, லேபில் தன் வேலையை பார்க்க தொடங்கினான்.

சக்தி இரவு உடை மாற்றுவது இல்லை இங்கு வந்த நாட்களில்.. சுடியோ புடவையோ.. லிங்கா எப்போதும் இருப்பதால் அப்படியே படுத்துக் கொள்வாள். 

இத்தனை நாள் இதை கவனிக்காத லிங்கா இன்று கவனித்தான் போல, வந்தவள்.. கணவனுக்கு ஒரு கப் பாலை தந்துவிட்டு.. தனக்கு ஒன்று எடுத்துக் கொண்டு… அப்படியே சோபாவில் அமர்ந்து போன் பார்க்க தொடங்கினாள்.

இவர்களின் அறை.. பெரியது… இந்த திருமணத்தை முன்னிட்டு..  ஒரு கபோர்ட் வாங்கி போட வைத்திருந்தார் காமாட்சி… கூடவே ஒரு திவான். அமர்ந்து, பேச செய்ய… என வாங்கியவருக்கு தெரியவில்லை பாவம், அது… சக்தியின் இருப்பிடம் என.

இன்று லிங்கா “என்ன சக்தி.. டிரஸ் மாத்தலையா.. ஏன்.. சுடியோட தூங்கற… இது கம்போர்டாவா இருக்கு….” என்றான்.

சக்தி “ம்… பரவாயில்லை” என்றாள், சற்று உள்ளே போன குரலில். அவளுக்கும் ஓடியாடி விளையாடி.. கசகசவெனதான் இருந்தது.. என்ன சொல்ல முடியும் ஏதாவது.. சீண்டி பேசுவான் என ஒரு எண்ணம் தோன்ற… எப்போதும் அமைதிதான். 

லிங்கா “ஓ… நான் இருக்கிறதாலையா.. நான் போறேன்.. நீ மாத்திக்கோ..” என்றவன், தன்னறையில் இருந்து வெளியே சென்றுவிட்டான் அவளின் பதிலை எதிர்பாராமல். 

 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

சக்திக்கு அப்படி ஒரு ஆசுவாசம்.. ஆனாலும் ஏதோ கோவத்தில் செல்கிறான் எனதான் தோன்றியது அவளுக்கு… இருந்தும்.. படபடவென.. சின்ன குளியல் போட்டு.. ஒரு நைட் பேண்ட்க்கு மாறி.. அவசர அவசரமாக.. கதவை திறந்தாள்.. 

லிங்கா, அந்த அறை வாசலிலேயே… கால் நீட்டி அமர்ந்திருந்தான்.. கையில் லேப்டாப் உடன்.

சக்தி கதவை திறந்து “வாங்க லிங்கா” என்றாள் திடமாக.

லிங்கா “ம்..” என்றவன் இரண்டு நிமிடம் சென்றே உள்ளே வந்தான்.

சக்தி அதற்குள்.. தன் தலையணை.. விரிப்பு எல்லாம் விரித்து உறங்க ஆயத்தம் ஆனாள்.

லிங்கா பொறுமையாக அதனை பார்த்துக் கொண்டே வந்து அமர்ந்தான்.. நெற்றியில் பொட்டில்லாமல்… முதல் நாள்… பார்த்த பெண் போல.. அவ்வளவு ரிலாக்ஸாக இருந்தாள் சக்தி.

அவள் அமர்ந்து போன் பார்க்க தொடங்கினாள்.. சக்திக்கு உள்ளுக்குள் ஓடியது.. ‘ம்… ஏன், இவர் இன்னும் ஏதும் பேசலை.. கோவமோ…’ என நிமிர்ந்து பார்க்க… அவளையே பார்த்துக் கொண்டிருந்த லிங்காவின் கண்ணில் இது பட… அந்த பார்வை அன்று போல்.. முதல் முதலில் அவளை பார்த்த போது… ’கண்ணே பேசும் போல..’ என தோன்றியதே.. அதே நினைவு வந்தது..  இன்றும் அவனை ஈர்த்தது… ‘ஒருவேளை… இவளை நான் நல்ல நண்பனாகவோ.. காதலனாகவோ.. சந்தித்திருக்க கூடாதா’ என அவனின் காதலன் மனம் ஏங்க தொடங்கியது. அவளை பார்த்தவன்.. அவளை பேச வைக்கும் முயற்சியில்… இறங்கினான்.

 

 

 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

லிங்கா “எதுவுமே கேட்க மாட்டியா சக்தி.. சொல்லவே மாட்டியா… அப்படியே படுப்பியா…. எதா இருந்தாலும் சொல்லு.. நானே கேட்க முடியாது எப்போதும்” என்றான், எதன் வெளிபாடு இந்த பேச்சு… என அவனுக்கே வெளிச்சம்.. ஆனால், சக்தி எப்போதும் போல இருந்தாள்.

சக்திக்கு அவன் எதை சொல்லுகிறான்.. இந்த டிரஸ் விஷயம்தான்  என எண்ணி அமைதியாக அமர்ந்திருந்தாள். ‘என்ன பதில்’ சொல்லுவது என தெரியாமல். 

அது அவனிற்கு அழுத்தமாக பட… தோற்றே போனான் அந்த தந்திரக்காரன். அவளிடம் எப்படி நெருங்குவது என தெரியவில்லை அந்த தந்திரனுக்கு. என்னென்னமோ செய்து அவளை தன்னுடம் சேர்த்துக் கொண்டான். எல்லாம் அவனுக்கு சாதகமாக நடப்பது போல… இவளும் மாறிவிடுவாள் என எண்ணினான்… இப்போது… ‘நான் எப்படி மாறினால் அவளிடம் வார்த்தை வாங்கலாம்’ என தவித்துக் கொண்டிருக்கிறான்.

 

“புது பார்வை நீ பார்த்து…

புது வார்த்தை நீ பேசி…

இதயத்தை இடம்மாற செய்வாயடி…

மெல்லிடை கொண்டு நடைகள்போடும் அழகான பெண்ணே…

உன்மடை கொண்டு எனை சுற்றி வளைத்தாயடி…

என் உறக்கத்தை திருடி சென்று உறவாடும் பூவே…

உன் சிரிப்புகள் சிறை வைக்கிறாய்…

கொஞ்ச கொஞ்சமாய் என்னை வாட்டினாய்…

கொஞ்ச கொஞ்சமாய் என்னை மாற்றினாய்…

இதயத்தின் மறுபக்கம் நீ காட்டினாய்…

இனி என்ன சொல்லுவேன் இன்று…

நான் அமுத நஞ்சையும் உண்டு…

இனி ரெக்கை இன்றியே நான் போவேன் வான் மீதிலே…”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!