“எல்லாம் உன் பேரனை நினைச்சு தான் பாட்டி. என் பேச்சை கேக்கவே மாட்டுக்காங்க. எனக்கு என்ன செய்யன்னே தெரியலை. நாளைக்கு தான பாட்டி அத்தானோட பிறந்த நாள். இத்தனை நாள் லவ் பண்ணனும் அப்படிங்குற கனவும் போய், இப்ப எல்லா ஆசையும் போச்சு பாட்டி”
“எனக்கு உன்னை பிடிச்சிருக்கு டா மாங்கா மடையான்னு சொல்லிற வேண்டி தான?”
“அதை கூட சொல்ல விட மாட்டிக்கான் பாட்டி. கோபமா வருது”
சுற்றி தலையை திருப்பி பார்த்த பாட்டி அவள் காதில் “பேசாம அவனுக்கு முத்தம் கொடுத்துரு”, என்று சொன்னார்.
அவரை முறைத்தவள் “அதெல்லாம் பல தடவை கொடுத்தாச்சு”, என்றாள்.
“ஓ இதெல்லாம் நடக்குதா? அதுக்கு என்ன சொல்றான்?”
“என்ன சொல்றானா? மங்குனி மாதிரி ரசிச்சிட்டு நிக்குறது. அதுக்கு அப்புறம் நல்ல பிள்ளை மாதிரி பேசாம போறது. உன் பேரனுக்கு சுட்டு போட்டாலும் ரொமான்ஸ் வர மாட்டிக்கு பாட்டி”
“நீ சொன்ன பொய் அந்த மாதிரி மித்ரா. சரி சரி கவலை படாத. சரியா போகும். நீ எந்திச்சு வா”, என்று சொல்லி அவளை அழைத்து போனாள்.
அடுத்த நாள் அழகாக விடிந்தது. “முதல் வாழ்த்து சொல்லணும்”, என்று நினைத்து “அத்தான்”, என்று சொல்லி அவனை எழுப்பினாள் மித்ரா.
கண் விழித்து பார்த்தவன் “இன்னைக்கு சந்தோசமா இருக்கணும்னு நினைக்கிறேன். நீ எதுவும் என்கிட்ட பேசாம இருந்தா தான் அது நடக்கும்”, என்று சொல்லி விட்டு எழுந்து குளிக்க போனான்.
முகத்தில் அறைந்த மாதிரியான பதிலில் முகம் சுண்டி போனது மித்ராவுக்கு.
“இதே முகத்தோட போனா பெரியவர்கள் எதாவது கஷ்ட படுவாங்க”, என்று நினைத்து சிரிப்பை வர வழைத்து கொண்டு பார்வதியிடம் சென்றாள்.
குளித்து முடித்து வந்த பார்த்திபன், பார்வதி சொல்ல சொல்ல கேட்காமல் தனியாகவே கோயிலுக்கு சென்று விட்டான்.
“எருமை திட்ட கூடாதுன்னு பாத்தா, ரொம்ப பண்றான். உன்னையும் கூட்டிட்டு போக தான சொல்றேன். பேசாம போறான்”, என்று புலம்பினாள் பார்வதி.
“நான் இன்னும் கிளம்பவே இல்லையே அத்தை. அதான் அத்தான் கிளம்பிட்டாங்க. சாயங்காலம் அம்மா கூட போய்க்கிறேன்”, என்று சொன்னாள் மித்ரா.
“சரி டா. நீ வா. இன்னைக்கு உனக்கு பிடிச்ச எல்லாம் செய்றேன்”
“இல்லை அத்தை. இன்னைக்கு அத்தானுக்கு பிடிச்சது தான் செய்யணும்”, என்று சொல்லி கொண்டே பார்வதியுடன் அடுப்படிக்கு போனாள்.
எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருந்தாள் வள்ளி பாட்டி. அவள் அருகில் டிவி யை பார்த்து சிரித்து பேசி கொண்டிருந்தார்கள் மோகனும், நந்தினியும்.
“என் பிள்ளை இன்னைக்கு சிரிக்கிறதுக்கு காரணம் மித்ரா தான். ஆனா அவ நிம்மதி இல்லாம இருக்கா”, என்று நினைத்து கொண்டு “என்ன செய்யலாம்?”, என்று யோசித்து கொண்டிருந்தாள்.
காலையில் போனவன் பன்னிரென்டு மணிக்கு வந்து சாப்பிட்டு விட்டு மறுபடியும் சென்று விட்டான்.
மீண்டும் ஐந்து மணிக்கு வந்தவன், டிவி பார்க்க அமர்ந்தான்.
ஆறு மணிக்கு கோயிலுக்கு போகலாம் என்று நந்தினியும், மித்ராவும் கிளம்பி வந்தார்கள்.
“அவங்க கூட துணைக்கு போ டா பார்த்தி”, என்று சொன்னாள் பார்வதி.
“வேணும்னா நீ போ”, என்று முறுக்கி கொண்டான் பார்த்திபன்.
“கோயிலுக்கு தான எருமை போக சொன்னேன்”
“எருமையோட அம்மா தான நீ? நீயே துணைக்கு போ”, என்று சொல்லி விட்டு டிவி புறம் பார்வையை திருப்பி கொண்டான்.
“உடம்பெல்லாம் கொழுப்பு டா உனக்கு”, என்று முணுமுணுத்து விட்டு மோகனை அழைத்த பார்வதி கோயிலுக்கு அவர்களுடன் போக சொன்னாள்.
“சரிக்கா”, என்று சொல்லி அவர் கிளம்பினார்.
எல்லாத்தையும் பார்த்து கொண்டிருந்த பாட்டி, “குடும்பமா மூணு பேரும் போறீங்க. வந்து திஷ்டி சுத்தி போடணும். அம்மாடி மித்ரா. இன்னும் என்ன சுடிதாரை போட்டுக்கிட்டு சுத்திட்டு இருக்க? போய் சேலை கட்டிட்டு போ மா”, என்று சொன்னாள்.
திரு திரு என்று விழித்தவள் “எனக்கு சேலை கட்ட தெரியாது பாட்டி”, என்றாள்.
“ஆமா அத்தை அவ சேலை கட்டினது இல்லை”, என்று சொன்னார் மோகன்.
“என்ன வாய் அடிக்கிறா. இதுல சேலை கட்ட தெரியாதாம். பிள்ளைக்கு சேலையில் தொட்டில் கட்டுற வயசு வந்துட்டு. இன்னும் தெரியலைன்னா எப்படி? இதுல உன் பொண்ணுக்கு தெரியாதுன்னு நீ பெருமையா சொல்ற?”
“என்ன அத்தை செய்றது? அவளுக்கு சொல்லி கொடுக்க யார் இருந்தா? சொல்லுங்க?”
“அப்பா விடு பா. இந்த கிழவியை நான் பாத்துக்குறேன். என் பிள்ளைக்கு நான் எதுக்கு பாட்டி தொட்டில் கட்ட படிக்கணும். அதான் என் அத்தான் இருக்காரே. அவர் கட்டி தருவார்”
“அப்ப சேலையையும் அவனையே கட்டி விட சொல்ல வேண்டியது தான?”, என்று சொல்லி அவளை பார்த்து கண்ணடித்தாள் பாட்டி.
அழகாக வெட்க பட்டாள் மித்ரா. அதனை ரசனையாக ஒரு பார்வை பார்த்து விட்டு திரும்பி கொண்டான் பார்த்திபன்.
“நந்தினி உன் பொண்ணுக்கு நீ கட்டி விடு”, என்று சொன்னாள் பாட்டி.
“சரி மா. வா மித்ரா”, என்று அழைத்து கொண்டு போனாள் நந்தினி.
கல்யாணம் அன்று சேலையில் அழகு சிலை என வந்த மித்ரா, பார்த்தி மன கண்ணில் வந்து போனாள்.
“ராட்சசி அதுக்கு பிறகு தான் எல்லா மன நிலையையும் மாத்திட்டாளே”. என்று நினைத்து கொண்டு தலையை திருப்பி திருப்பி பார்த்து கொண்டிருந்தான் அவள் வருகைக்காக.
“இவ்வளவு ஆசைய வச்சிக்கிட்டு எதுக்கு டா இப்படி பண்ற?”, என்று நினைத்து கொண்டாள் வள்ளி பாட்டி.
சேலையில் அழகாக வந்தாள் மித்ரா. “அழகா இருக்க மித்ரா”, என்று சொன்னாள் பார்வதி.
“இப்ப தான் பொண்ணு மாதிரி இருக்கு”, என்று சொன்னாள் பாட்டி.
“அப்ப இத்தனை நான் எப்படி இருந்தேன் கிழவி?”
“ஹ்ம்ம் என்னை மாதிரி கிழவியா இருந்த”, என்று சிரித்தாள் பாட்டி.
“பாருங்க அத்தை. இந்த கிழவி எப்படி சொல்லுதுன்னு. நைட் கிழவிக்கு சாப்பாடு கட்”
“மித்ரா அது என்ன கிழவின்னு மரியாதை இல்லாம பேசிட்டு இருக்க? என்ன பழக்கம் இது?”, என்று திட்டினார் மோகன்.
“உடனே பாடம் எடுக்க ஆரம்பிச்சிராதப்பா. இனி பாட்டின்னே சொல்றேன். எல்லாம் இந்த அத்தான் அப்படி சொல்லி சொல்லி எனக்கும் அப்படியே வருது”, என்று அவனையும் மாட்டி விட்ட பின்னர் தான் கிளம்பினாள்.
மூவரும் கிளம்பி சென்றார்கள்.
“அத்தை இந்த வாழை பூவை உரிக்கணும் வாங்க”, என்று துணைக்கு அழைத்தாள் பார்வதி.
“இதோ வரேன்”. என்று சொல்லி பார்வதியுடன் தரையில் அமர்ந்த வள்ளி பாட்டி, அருகில் டிவியில் மூழ்கி இருந்த பார்த்திபனை ஒரு பார்வை பார்த்து விட்டு “ஏம்மா பார்வதி உன்கிட்ட ஒன்னு கேக்கணும்னு ரொம்ப நாளா நினைச்சிட்டு இருந்தேன். மறந்துட்டேன்”, என்று ஆரம்பித்தாள்.
“என்னது அத்தை?”
“இல்லை மித்ராவை, மோகன் கிட்ட பார்த்திபனுக்கு கேக்கணும் அப்படிங்குற எண்ணம் உனக்கு எப்படி வந்துச்சு?”, என்று பாட்டி கேட்ட பின்னர் பார்த்திபனின் கவனம் முழுவதும் அவர்கள் பேச்சில் திரும்பியது.
“அதை உங்க கிட்ட சொல்லலையா? அடுத்து ஒன்னு மாத்தி ஒன்னு வந்ததுனால மறந்துட்டேன் போல அத்தை”, என்று சொன்னாள் பார்வதி.
“நானும் அந்த வேலைல தான் கேக்க மறந்துட்டேன். ஆனா நல்ல காரியம் பண்ண. இல்லைனா இவனுக்கு பொண்ணு தேடுறதுக்குள்ள நாம ஒரு வழி ஆகிருப்போம். ஆனாலும் நீ மூளை காரி தான் மருமகளே”
“ஆமா அத்தை. இப்பவே ரோட்டுல போகும் போது, இவனுக்கு முறை பொண்ணு எல்லாரும் என்னை முறைச்சு முறைச்சு பாக்குறாளுக. ஆனா நீங்க இதுக்கு மித்ராவை தான் பாராட்டணும்”
“என்ன மா சொல்ற?”
“ஆமாங்க அத்தை. நான் அதெல்லாம் யோசிக்கவே இல்லை. அவளை பாத்தாலே படிச்சவ மாதிரி இருந்தது. அவ டாக்டர்ன்னு தெரியாட்டியும் பாத்தா நமக்கு தெரியாதா, படிச்சவங்களை பத்தி. அப்புறம் எப்படி நான் பொண்ணு கேப்பேன் சொல்லுங்க”
“அப்புறம் என்ன தான் நடந்துச்சு?”
“மோகன் வந்த சந்தோஷத்துல இருந்தேன் அத்தை. அப்ப இந்த மித்ரா குட்டி வந்து உனக்கு அறிவே இல்லை அத்தைனு சொன்னா”
“என்னது உன்னை பாத்து அப்படி சொன்னாளா? இந்த கழுதைக்கு இருந்தாலும் வாய் அதிகம் தான்”
“என் பொண்டாட்டி சரியா தான் சொல்லிருக்கா. என் பொண்டாட்டியை திட்டுது பாரு கிழவி”, என்று நினைத்து கொண்டே அவர்கள் பேச்சை கேட்டு கொண்டிருந்தான் பார்த்திபன்.
“அப்படி எல்லாம் இல்லை அத்தை. அவ சிரிச்சிட்டே தான் சொன்னா. நானும் எதுக்கு டி ன்னு கேட்டேன். அதுக்கு அவ என்ன சொன்னா தெரியுமா? இவ்வளவு அழகா அம்சமா ஒரு தம்பி பொண்ணு இருக்காளே. அவளை உன் பையனுக்கு பேசி மருமகளா ஆக்கிக்காம இருக்கன்னு சொன்னா”
“அப்படியா சொன்னா?”
“ஆமா அத்தை. எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு. என்ன மித்ரா சொல்றன்னு கேட்டேன். பின்ன உன் தம்பி கிட்ட போய், நம்ம சொந்தம் காலம் முழுக்க தொடரணும் டா. அப்படின்னு போய் நீலி கண்ணீர் வடிச்சு பொண்ணு கேக்காம இப்படி இருக்கியேன்னு சொன்னா”
“பாரு டா. அப்புறம் என்ன ஆச்சு?”
“என்ன ஆகும்? நான் சொன்னேன். என்ன மித்ரா செய்ய? உனக்கு பொருத்தமான பையனா இருந்தா நான் கேட்டிருப்பேன். ஆனா இப்ப எப்படி கேக்கன்னு கேட்டேன்”
முறைத்து கொண்டிருந்த தன் பேரனை திரும்பி பார்த்த பாட்டி “சரியா தான சொல்லிருக்க”, என்று சொல்லி மற்றொரு முறைப்பை அவனிடம் இருந்து பெற்று கொண்டாள்.
“ஆனா அவ அப்படி சொல்லலை அத்தை. அத்தானுக்கு என்ன குறைச்சல்ன்னு சொன்னா. நான் அதிர்ச்சியா அப்ப பார்த்திபனை பிடிச்சிருக்கான்னு கேட்டேன். ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னா. அவ தான் இப்பவே போய் மோகன் கிட்ட பேச சொன்னா. அதுக்கப்புறம் தான் நான் பேசவே செஞ்சேன்”
பார்த்திபனுக்கு தெரியாமல் அவனை நோட்டம் விட்ட பாட்டி, அவன் மனதில் ஓடும் விசயத்தை அனுமானித்தாள்.
“அவளோட எண்ணம் மாமாக்கும், அத்தைக்கும் கல்யாணம் செஞ்சி வைக்கிறது. அதுக்கு எங்க கல்யாணத்தை பிளான் செஞ்சிட்டா. இது தெரியாம இந்த அம்மா பேசுது”. என்று நினைத்து யோசித்து கொண்டிருந்தான்.
அதையே பாட்டியும், பார்வதியிடம் கேட்டாள்.
“பார்வதி, எனக்கு என்னமோ அந்த பிள்ளை நந்தினிக்கு கல்யாணத்தை செஞ்சி வைக்க தான் அவ பார்த்திபனை கட்டிக்கணும்னு நினைச்சிருப்பாளோ? எனக்கு என்னமோ அப்படி தான் தோணுது”
“என்ன? அத்தை… அவன் முன்னாடியே இப்படி பேசுறாங்க”, என்று நினைத்து கொண்டு கண்களால் என்னவென்று விசாரித்தாள்.
இப்போதும் மருமகளின் புத்திசாலித்தனத்தில் வியந்த வள்ளி பாட்டி மேலே பேசுமாறு கண்களை மட்டும் காட்டினார்.
“சரி எதுவோ ஒன்னு இருக்கு”, என்று நினைத்து கொண்டு, “எனக்கு என்னமோ அப்படி தெரியலை அத்தை. அவ சொல்லும் போது, உண்மையான வெக்கம் தெரிஞ்சது. பொண்ணுக்கு கல்யாணம் வேணும்னு கேக்க எவ்வளவு வெக்கம் இருக்கும்? அதை விட இவன் தான் மாப்பிள்ளையா வேணும்னு கேக்க கூச்சமா இருக்குமே. அந்த வெக்கத்தை அவ முகத்தில் நான் பாத்தேன் அத்தை. அது மட்டும் இல்லாம அவ என்ன சொன்னா தெரியுமா? எனக்கு அத்தான் தான் வேணும். அவரை தவிர வேற யாரையும் கல்யாணம் செஞ்சிக்க மாட்டேன்னு சொன்னா. அப்படி நடக்கலைன்னா நந்தினி மாதிரியே அவனையே நினைச்சிட்டு இருப்பேன்னு சொன்னா”, என்றாள் பார்வதி.
“அப்படியா சொன்னா?”
“ஆமா அத்தை. நான் கூட அவ வாயை பொத்தி அப்படி சொல்லாத மா. நம்ம வீட்டுக்கு ஒரு நந்தினி போதும். நான் உங்க அப்பா கிட்ட பேசுறேன்னு சொன்னேன். அவ தான் பேசுறேன்னு சொல்லிட்டு, என்ன நின்னுட்டு இருக்கீங்க. இப்பவே போய் பேசுங்கன்னு அனுப்புனா அத்தை”
பார்த்திபனுக்கு கல்யாண மேடையில் “அத்தானை தவிர வேற யாரையும் நான் கல்யாணம் பண்ண மாட்டேன். அத்தானும் என்னை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டாங்க”. என்று சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்தது.
“அப்ப அவ காதலை சொல்லிருக்கா. நான் தான் லூசு மாதிரி புரிஞ்சிருந்துருக்கேன்”, என்று நினைத்து கொண்டே யோசித்து கொண்டிருந்தவனின் முகத்தில் ஒரு தெளிவு வந்தது.
அவன் முகத்தில் இருந்த உணர்வுகளை படித்த பாட்டி நிம்மதியாக மூச்சு விட்டாள். “அப்பாடி பேராண்டி முகத்தில் பல்ப் எறிஞ்சிட்டு”, என்று நிம்மதியாக பார்வதியிடம் மற்ற விஷயங்களை பேச ஆரம்பித்தாள்.
மெதுவாக அந்த இடத்தை விட்டு எழுந்தவன், அவனுடைய அறைக்கு போய் கொண்டிருந்தான்.
காதல் தொடரும்….
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.