Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thedi Vantha Kaathal Nee

Thedi Vantha Kaathal Nee 10 2

இவன் ஏன் ஒரு மார்க்கமா பேசுறான்?”, என்று நினைத்து கொண்டு “காலைலே உங்களுக்கு வாழ்த்து சொல்ல வந்தேன். ஆனா நீங்க என்னை பேச விடலை. இப்பவும் திட்டிறாதீங்க. பிறந்த நாள் வாழ்த்துக்கள்”, என்று சொன்னாள்.


உன்னோட வாழ்த்தை இன்னும் ஒரு அஞ்சு மணி நேரம் கழிச்சு சொல்லு”, என்று சொல்லி விட்டு போய் விட்டான்.


எதுக்கு இப்படி சொல்றான்?”, என்று நினைத்து கொண்டு தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள். 


கீழே வந்தவுடன் அவளை பார்த்த பாட்டி, “என்ன மித்ரா சேலை மாத்தலையா?”, என்று கேட்டாள்.



Advertisement


மாத்தணும் பாட்டி. அம்மா, அப்பா வந்தாச்சா?”


வந்தாச்சு. இப்ப தான் உங்க அம்மா காபி கொண்டு போனா”


சரி பாட்டி நீ குடிச்சிட்டியா?”

Advertisement

 

Advertisement

ஹ்ம்ம் குடிச்சாச்சு. சரி அவன் கிட்ட சொன்னியா?”


என்னது பாட்டி?”

 

Advertisement

நீ அவனுக்கு மேல இரு”


திருவிழா பத்தியா பாட்டி?”

 

ஆமா மித்ரா”


பேசிட்டேன் பாட்டி”

 

என்ன சொன்னான்?”


போக மாட்டேன்னு சொன்னாங்க. எனக்கே ஆச்சர்யம் தான். உன் பேரன் ஒரு மாதிரியா இருக்கான் பாட்டி. வாயெல்லாம் பல்லு தான் தெரியுது போ”

 

நினைச்சது நடந்து விட்டது”, என்று நிம்மதியான பாட்டி “ஆமா மித்ரா. அங்க பாரு. இப்பவும் பல்லை கட்டிட்டு தான் வாரான்”, என்றாள்.


அங்கு சிரித்த  முகத்துடன் இறங்கி வந்தான் பார்த்திபன்.


வந்தவன் இருவரையும் பார்த்து சிரித்து விட்டு டிவி முன்னே போய் அமர்ந்து விட்டான்.


நான் சொன்னேன்ல? எப்படி சிரிச்சிட்டு போறான் பாரு பாட்டி”


ஆமா மித்ரா. இவனுக்கு வேப்பிலை தான் அடிக்கணும் போல”


என்ன பாட்டி பயமுறுத்துற?”


சும்மா சொன்னேன். நைட் தூங்கி காலைல வரும் போது சரியாகிருவான்”, என்று சிரித்தாள் வள்ளி பாட்டி.


பேரன் தான் லூசுன்னா, நீயுமா பாட்டி?”

அடி கழுதை”, என்று பாட்டி  அடிக்க கை  ஓங்கியவுடன் “நான் என் அத்தான் கூட சேந்து டிவி பாக்க போறேன்”, என்று சொல்லி விட்டு அவன் அருகே சென்று அமர்ந்தாள்.


அவளை திரும்பி பார்த்தவன் மறுபடியும் சிரித்தான். “கன்பார்மா லூசா ஆகிட்டான்”, என்று நினைத்து கொண்டு “அத்தான், எங்கயும் வெளிய போகும் போது தலையில் அடி பட்டுருச்சா?”, என்று கேட்டாள்.


இல்லையே. எதுக்கு மித்ரா அப்படி கேக்குற?”


இல்லை புன்னகை மன்னனா அவதாரம் எடுத்துருக்கீங்களே? அதான் ஏதும் விபரீதமா நடந்துருக்குமோன்னு கேட்டேன்”


என்னை மெண்டல்னு சொல்றியாஅப்படி எல்லாம் இல்லை. நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன். அதனால தான் இப்படி”


சந்தோசமா என்ன சந்தோசம்?”


அதை அப்புறமா சொல்றேன்”


ஹ்ம்ம்”


அப்புறம் மித்ரா உங்கிட்ட ஒரு மன்னிப்பு கேக்கணும்னு நினைச்சேன்”


மன்னிப்பா எதுக்கு?”, என்று அவள் கேட்கும் போதே “மித்ரா இங்க வாயேன்”, என்று பார்வதி அழைக்கும் சத்தம் கேட்டது.


இதோ வரேன் அத்தை. சரி அத்தான் அத்தை கூப்பிடுறாங்க. நான் போறேன்”, என்று எழுந்து போனாள்.

 

அன்று இரவு சாப்பிடும் போது அவள் அருகில் அமர்ந்தான். 


எல்லாரும் ஊர் கதையை பேசி கொண்டிருக்கும் போது, சாப்பிட்டு கொண்டே மித்ராவுக்கு மட்டும் கேட்கும் வகையில் “மன்னிப்புக்கான காரணத்தை நீ கேக்கவே இல்லை மித்ரா”, என்று சொன்னான்.


இவன் எதுக்கு இப்படி குசு குசுன்னு ரகசியம் பேசுறான்?”, என்று நினைத்து சாப்பிட்டு கொண்டே “எதுக்கு அத்தான்?”, என்று  கேட்டாள்.

 

அன்னைக்கு இடுப்புல தான் கிள்ள வந்தேன். ஆனா கை தெரியாம வேற இடத்தில் பட்டுருச்சு. வலிச்சிருக்கும்ல அதான் சாரி”. என்று அவன் சொன்ன அடுத்த நிமிஷம் மித்ராவுக்கு புரை ஏறியது. 


எல்லாருடைய கவனமும் அவள் மேல் திரும்பியது.


தண்ணி குடி மித்ரா”, என்றாள் நந்தினி.

 

பாத்து சாப்பிடலாம்ல மா”, என்று சொன்னார் மகேந்திரன். 


இவன் இப்படி எல்லாம் பேசுவானா?”, என்று நினைத்து அதிர்ச்சியாகஅவனை பார்த்து கொண்டிருந்தாள். அவன் எதுவுமே தெரியாதது போல நல்ல பிள்ளையாக சாப்பிட்டு கொண்டிருந்தான். 

 

பக்கத்துல தான டா இருக்க எருமை? அவ தலைல தட்டி விடு டா”, என்று சொன்னாள் பார்வதி.


சரி மா”, என்று நல்ல பிள்ளையாக திரும்பி சிரித்து கொண்டே அவள் தலையை மெதுவாக தட்டி கொடுத்தான். 


அவனுடைய தொடுகையை விட அதிகமாக பாதித்தது அவனுடைய பார்வை.

 

அவளை அப்படியே சாப்பிடும் பார்வையை பார்த்து கொண்டிருந்தான்.  அவன் பார்வையை தாங்க முடியாமல் அவஸ்தையில் நெளிந்தாள் மித்ரா.

 

சாப்பிட்டு முடித்த பின்னர் தன்னுடைய அறைக்கு சென்று விட்டான் பார்த்திபன்.


அவனை பற்றியே யோசித்து கொண்டு உள்ளே போகாமல் அமர்ந்திருந்தாள் மித்ரா.


அவளை பார்த்த பாட்டி “என்ன தூங்க போகாம இங்க உக்காந்துருக்க மித்ரா?”, என்று கேட்டாள்.


இல்லை பாட்டி சும்மா தான்”


என்ன சும்மா? சுமந்துக்கிட்டுன்னு. நேரம் காலத்துல போய் தூங்கு”


சரி பாட்டி போறேன்”. என்று எழுந்து போனவளுக்கு அறை வாசலை கடந்து உள்ளே போவதற்கு  கால்கள் தள்ளாடியது.


தைரியத்தை கூட்டி கொண்டு உள்ளே சென்றாள்.

 

உள்ளே வரும் அவளையே தான் பார்த்து கொண்டிருந்தான் பார்த்திபன்.


அவனை பாக்க கூடாது”. என்று நினைத்து கொண்டு வேறு உடை எடுத்து கொண்டிருந்தாள் மித்ரா.


அப்போது முதுகில் அவன் கரம் படிந்தது. அதிர்ச்சியாக அவனை திரும்பி பார்த்தாள். 


அவன் முகத்தில் இருந்த பாவனைக்கு விடை தெரியாமல் தலையை குனிந்து கொண்டாள்.


என்ன பண்ற மித்ரா?”, என்று கேட்டான் பார்த்திபன்.


டிரெஸ் மாத்த போகலாம்னு நினைச்சேன்”


நான் தான் சொன்னேன்ல? நான் சொல்லும் போது தான் மாத்தணும்னு”


சரி சொல்லுங்க அத்தான். நான் மாத்த போகட்டுமா?”

இங்க வா சொல்றேன்”, என்று சொல்லி அவளை கட்டிலில் அமர வைத்தவன் அவளை இடித்து கொண்டு அமர்ந்தான்.

 

நகர்ந்து அமர்ந்தாள் மித்ரா. மறுபடியும் அவளை நெருங்கினான். ஒரு மாதிரியான உணர்வை அனுபவித்தவள் “தள்ளி உக்காருங்க அத்தான்”, என்று சொன்னாள்.

 

நான் உன்னை விட்டு தள்ளி இருக்கணும்னு நீ நினைக்கிறியா மித்ரா?”

 

இல்லை”, என்னும் விதமாய் தலை அசைத்தாள்.

 

அப்பறம் என்ன தள்ளி போக சொல்ற?”. என்று கேட்டு கொண்டே அவள் கழுத்தை சுற்றி கையை போட்டான்.

 

சந்தோசமாக அவனை பார்த்தவள் “என் மேல உள்ள கோபம் போயிருச்சா அத்தான்?”, என்று கேட்டாள்.

 

ஹ்ம்ம் போயிருச்சு”

 

நான் வேணும்னு உங்களை ஏமாத்தலை அத்தான். அப்படி நினைக்கவும் இல்லை. நான் எதுக்கு அப்படி செஞ்சேன்னு உங்க கிட்ட சொல்ல வந்தேன். நீங்க தான் கேக்கலை”, என்று கண்ணீரோடு சொன்னாள்.

 

அவள் கண்ணீரை துடைத்தவன் “இப்ப சொல்லு நான் கேக்குறேன். என்னை விரும்பி தான் கல்யாணம் செஞ்சிருக்கன்னு இப்ப நம்புறேன். உன் மனசுல நான் மட்டும் தான் இருக்கேன்னும் இப்ப எனக்கு தெரிஞ்சிட்டு. ஏன் அப்படி சொன்ன, அப்படிங்குற காரணம் மட்டும் தான் தெரியலை”, என்றான். 

 

உங்களுக்கு எப்படி தெரிஞ்சது?”

 

அம்மா, பாட்டி கிட்ட நீ தான் என்னை முதலில் பிடிச்சிருக்குனு சொன்னதா பேசிட்டு இருந்தாங்க. நீயும் கல்யாணம்  அன்னைக்கு என்னை மட்டும் தான் கல்யாணம் செய்வேன்னு சொன்ன? அப்ப தான் புரிஞ்சது. அப்புறம் எதுக்கு அப்படி சொன்ன மித்ரா?”

 

நான் லூசு மாதிரி விளையாட்டா நினைச்சு சொன்னது இப்படி ஆகிருச்சு அத்தான். எனக்கு சின்ன வயசில் இருந்தே லவ் ரொம்ப பிடிக்கும். நிறைய லவ் ஸ்டோரி படிப்பேன். நிறைய படம் பாப்பேன். எந்த காதலும் தோக்க கூடாதுனு நினைப்பேன்.  நானும் லவ் பண்ணி தான் கல்யாணம் செய்யணும்னு நினைச்சிருந்தேன். அப்ப தான் அப்பா வோட காதல் தெரிஞ்சது. உடனே கீதா அத்தை கிட்ட அப்பாவையும், அம்மாவையும் சேத்து வைக்கட்டுமான்னு கேட்டேன். அவங்க சந்தோசமா சரின்னு சொன்னாங்க. அந்த மனநிலைல தான் வந்தேன். அப்ப தான் உங்களை பாத்தேன். எனக்கு பாத்த உடனே பிடிச்சிருச்சு”

 

….

 

அது காதலான்னு தெரியாது. ஆனா என் மனசு பாத்த உடனே உங்களை சைட் அடிக்க நினைச்சது. அப்புறம் தான் நீங்க அத்தை பையன்னே தெரிஞ்சது. அப்புறம் தான் நம்ம கல்யாணத்துல அவங்களை சேத்து வைக்கணும்னு நினைச்சு உங்களை சீண்டி விட்டேன். அப்புறம் நானே அத்தை கிட்ட பேசுனேன்”

 

ஏன் மித்ரா? என்னை விரும்புறேன்னு சொல்லி அப்பறம் கல்யாணம் செஞ்சிருக்கலாம்ல?”

 

எப்படி சொல்லன்னு தயக்கமா இருந்தது. அது மட்டும் இல்லாம அவங்க கல்யாணத்தை  சீக்கிரம் முடிக்கணும்னு நினைச்சேன். அதான்”

 

சரி அதுக்கப்புறம் எதுக்கு அப்படி பொய் சொன்ன? நான் நொந்தே போய்ட்டேன் டி. அப்புறம் தான் மனசை தேத்திக்கிட்டேன். ஆனா ஆல்பம் பாத்தப்ப பாதி சந்தோசம், பாதி கோபம்”

 

இன்னைக்கு உங்க பிறந்த நாள். இன்னைக்கு வரைக்கும் லவ் பண்ணனும்னு லூசு மாதிரி பிளான் செஞ்சு சொதப்பிருச்சு. இந்த அப்பா அவரச பட்டு என் போட்டோவை எடுத்து காமிச்சிட்டாரு”

 

லூசு, சொல்லிருந்தா லவ் பண்ணிருக்கலாம். இப்படி சண்டை போட்டிருக்க வேண்டாம்”

 

ஆமா பெரிய சண்டை நீங்க சண்டை போட்ட அழகு தெரியாதாக்கும். பிடிக்காதவங்க முத்தம் கொடுத்தா தள்ளி விடணும். இப்படி மண்ணு மாதிரி நிக்க கூடாது”

 

பிடிக்காதவங்க கொடுத்தா தான விலகனும்? பிடிச்சவங்க கொடுத்தா எப்படி விலக? இன்னும் வேணும்னு தான் தோணும்”

 

போங்க அத்தான்”

 

போகவா? இன்னும் போனா அவ்வளவு தான். சரி ஒரு முத்தம் கொடு”

 

அவன் கன்னத்தில் முத்த மிட்டாள் மித்ரா. அடுத்த கன்னத்தை காட்டியவன் “வேகமா கொடு”, என்று சொன்னான்.

 

அவன் முகம் முழுவதும் சிறு கூச்சத்துடன் முத்த மிட்டவளை அடுத்து அவன் முத்தத்தால் குளிப்பாட்டினான்.

 

அதில் மெய்  மறந்து ரசித்து கொண்டிருந்தவளின் காதில் முத்தமிட்டவன் அவன் உதடுகள் அவள் காதில் உரசுமாறு “கிள்ளுனது வலிச்சதான்னு கேட்டதுக்கு பதிலே சொல்லலை”, என்று கேட்டான்.

 

ஆசையாக அவன் நெஞ்சில் சாய்ந்தவள் “வலிக்கவே இல்லை”, என்று சொல்லி அவன் நெஞ்சில் முத்தம் கொடுத்தாள்.

 

நீங்க எதுக்கு சேலை மாத்த வேண்டாம்னு சொன்னீங்க?”

 

நானே மாத்தி விடணும்னு தான் உன்னை மாத்த வேண்டாம்னு சொன்னேன்”, என்று சொல்லி கொண்டே அவள் மேல் கவிழ்ந்தான் பார்த்திபன்.

 

அன்றைய இரவு இருவருக்கும் தூங்கா இரவாக அமைந்தது.

 

இந்த வருட திருவிழாவில் குடும்பத்துடன் சென்று பொங்கல் வைத்து சாம கொடையை பார்த்து விட்டு, கரி சோறு ஆக்கி சாப்பிட்டு விட்டு மஞ்சநீர் ஆடி கொண்டிருக்கும் போது, பார்த்திபன் மட்டும் தன்னுடைய அறையில், மித்ராவுடன் தன் காதல் நாடகத்தை அரங்கேற்றி கொண்டிருந்தான்.

 

தேடல் முடிந்தது!!!! முற்றும்!!!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!