Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thedi Vantha Kaathal Nee

Thedi Vantha Kaathal Nee 7 1

அத்தியாயம் 7

 

நந்தினி கழுத்தில் தயக்கத்துடன் அதே நேரம் மனம் நிறைய சந்தோசத்துடன் தாலியை காட்டினார் மோகன்.

 



Advertisement

ஆனந்தத்துடன் அனைவரும் அர்ச்சனை தூவினார்கள்.

 

அவர்கள் கல்யாணம் முடிந்த பின் பார்த்திபனையும், மித்ராவையும் அமர வைத்தார்கள்.

Advertisement

 

Advertisement

என் பொண்ணோட வாழ்க்கைல ஒளி ஏத்தி வச்சிட்டா. கொஞ்ச காலம் சேந்து வாழ்ந்தாலும் மனசுல நினைச்சவனோட வாழ்ந்துட்டோம் அப்படிங்குற நிறைவு என் பொண்ணுக்கு கிடைக்கும். ஆண்டவா. என் கவலைக்கு  மித்ரா மூலமா  முற்று  புள்ளி   வச்சிட்ட”, என்று கடவுளுக்கு  நன்றி  சொன்னாள் வள்ளி  பாட்டி.

 

நம்ம  யாருக்கும்  தோணாத  விஷயம்  இந்த  சின்ன  பொண்ணுக்கு  தோணிருக்கு  பாத்தியா  பார்வதி. எனக்கு சந்தோசமா இருக்கு”, என்று கண்களில்  நீருடன்  சொன்னார் மகேந்திரன்.

Advertisement

 

ஆமாங்க. பார்த்திபனை  விரும்புறேன், எனக்கு கல்யாணம் செஞ்சு  வைங்க  அத்தைன்னு  அவ  சொல்லும்  போது  கூட  நான் இப்படி எல்லாம்  யோசிக்கவே  இல்லை. ஆனா மித்ரா எல்லாரோட  மனசுலயும் சந்தோசத்தை  கொண்டு வந்திருக்கா. அத்தையை  பாருங்க  எப்படி  சந்தோசமா இருக்காங்கன்னு. அவங்க  மனசுல  எப்பவும்  நந்தினி  பத்தி  கவலை  இருந்துட்டே இருக்கும்  பா. இப்ப  தான் மனசார  சிரிக்கிறாங்க. கல்யாணம் வேண்டாம்னு  சொன்னாலும்  மோகன்  அப்புறம்  நந்தினி முகத்தை பாருங்களேன். ஏதோ சாதிச்சது  போல இருக்கு”, என்று சொன்னாள் பார்வதி.

 

ஆமா  பார்வதி. நம்ம  குடும்பத்துக்கு  வந்த எல்லா  கஷ்டமும்  இன்னையோட  விலகிருச்சு  மா. இத்தனை சந்தோஷத்துல  நீ  கூட  ரொம்ப  அழகா  மாறிட்ட  பார்வதி”, என்றார்  மகேந்திரன்.

 

பையனுக்கு  கல்யாணம். இதுல ஐயாவுக்கு  முதல்  ராத்திரி  கொண்டாட  ஆசை   வந்துருச்சு  பாரு”, என்று வெட்கத்துடன்  சிரித்தாள் பார்வதி.

 

எப்படியோ  புரிஞ்சிகிட்டா  சரி”, என்று மன  நிறைவுடன்  சிரித்தார்  மகேந்திரன்.

 

எல்லாருக்குமே இந்த நாள் சந்தோசம் தருவதாக இருந்தது.

 

ஏதோ சாதித்த மன நிலையில் சந்தோசத்துடன் பார்த்திபனை பார்த்து சிரித்த மித்ராவை பிரமிப்பாய் பார்த்தான் பார்த்திபன்.

 

தன் அம்மா மற்றும் பாட்டி முகத்தில் இருந்த சந்தோசத்தை பார்த்தவனுக்கு இதயம் குளிர்ந்து. “எல்லாத்துக்கும் காரணம் இவ தான். இவ என்னை தேடி வந்த தேவதை. இவளை கஷ்ட படுத்தாம சந்தோசமா என் உயிருக்குள்ள வச்சி பாத்துக்கணும்”என்று நினைத்து கொண்டு மனம் முழுக்க காதலுடன் மித்ரா கழுத்தில் தாலியை கட்டினான் பார்த்திபன்.

 

தலை   குனிந்து   அவன் கட்டிய   தாலியை  ஏற்று கொண்டாள் மித்ரா.

 

அவள் தலையை சுற்றி அவள் நெற்றியிலும் வகிட்டிலும் குங்குமம் வைத்தவன் அவளிடம் வம்பு பண்ண எண்ணி “எப்படி என்னோட சவாலில் ஜெயிச்சேன் பாத்தியா? உன்னை ஜெயிக்கணும்னு தான் டி கல்யாணம் செஞ்சேன்”, என்று அவள் காதில் சொன்னான்.

 

என்ன அத்தான் சொல்றீங்க?”, என்று ஆச்சர்யமாக கேட்டாள் மித்ரா.

 

ஆமா எத்தனை தடவை என்னை அசிங்க படுத்துன? உன்னை எல்லாம் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லி அசிங்க படுத்துனல்ல. அதுக்கு தான் உன்னை கல்யாணம் பண்ணனும்னு தான் தாலி கட்டினேன். எப்படி ஜெயிச்சேன் பாத்தியா?”, என்று கம்பீரமாக சொன்னான் பார்த்திபன்.

 

ஹா ஹா”, என்று சிரித்தாள் மித்ரா.

 

என்ன டி சிரிக்கிற?”

 

இல்லை ஜெயிச்சது நீங்கன்னு சொன்னீங்கள்ல? ஆனா ஜெயிச்சது நீங்க இல்லை அத்தான்”

 

அப்ப நீ தான் ஜெயிச்சேன்னு சொல்றியா?”

 

இல்லை. ஜெயிச்சது எங்க அப்பா”

 

எதுக்கு  அப்படி சொல்ற?”

 

ஆமா வயசுக்கு வராத பொண்ணை உங்க தலையில் கட்டி வச்சு அவர் கடமையை முடிச்சிட்டாரே”, என்று குண்டை தூக்கி போட்டாள்.

 

என்ன டி சொல்ற?”, என்று அவன் கேட்கும் போது “எல்லாரும் பாக்காங்க பார்த்தி. அமைதியா இரு”, என்று சொன்னான் ராசு.

 

சும்மா இரு டா. இவன் வேற”, என்று அவனை முறைத்து விட்டு “நீ இப்ப சொன்னது உண்மையா மித்ரா?”, என்று கேட்டான்.

 

ஹ்ம்ம் ஆமா. அப்பா இப்ப எப்படி சந்தோசமா சிரிச்சிட்டு இருக்கார் பாருங்க. அது என்னை பத்தின கவலை போனதால தான். நீங்க தோத்துட்டீங்க”என்று சிரித்தாள் மித்ரா.

 

அடுத்த நிமிடம் மயங்கி அதே இடத்திலே விழுந்தான் பார்த்திபன்.

 

இவர் வேற மயங்கி விழுந்துட்டாரா? ஐயோ இன்னைக்கு நாளை மறக்க முடியாது போல”, என்று நினைத்து கொண்டு பதட்டத்துடன் “ஐயோ அத்தான் என்ன ஆச்சு?” என்று அவன் கையை பிடித்து பார்த்தாள் மித்ரா.

 

ஐயோ இவனுக்கு என்ன ஆச்சு?”, என்று பதட்டத்துடன் தண்ணீர் எடுத்து வர ஓடினாள் பார்வதி.

 

முகத்தில் தண்ணீர் அடித்தவுடன் திகைத்து போய் எழுந்தவன், அருகில் இருந்த அவள் முகத்தை பார்த்தான்.

 

உனக்கு என்ன டா ஆச்சு?”, என்று கேட்டார் மகேந்திரன்.

 

தெரியலை பா. சாப்பிடலைல? அதான் போல?”, என்று சொல்லி கொண்டே மித்ராவை பார்த்தான்.

 

அவளும் அவனை தான் பார்த்து கொண்டிருந்தாள்.

 

அடுத்து இருவருக்கும் ஒரு ஜூஸ் கொடுக்க பட்டது. முதலில் மகேந்திரன், பார்வதி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள்.

 

அடுத்து நந்தினி, மோகன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள்.

 

வள்ளி பாட்டி காலில் விழும் போது “நீ தான் ஆத்தா என் குலதெய்வம்”, என்று சொல்லி கொண்டே கழுத்தில் கிடந்த ஏழு பவுன் செயினை மித்ரா கழுத்தில் போட்டு விட்டார்.

 

அடுத்து பொண்ணு, மாப்பிள்ளையை அழைத்து கொண்டு எல்லாரும் கோயிலுக்கு சென்றார்கள்.

 

போகும் போது கிடைத்த இடைவெளியில் “மித்ரா நீ சும்மா தான சொன்ன? விளையாட்டுக்கு தான சொன்ன? நீ  சொன்னது  உண்மை  இல்லை  தான?”, என்று கேட்டான் பார்த்திபன்.

 

இல்லை அத்தான். உண்மையிலே தான் சொன்னேன்.  ஏதோ ஹார்மோன் குறையாம்”என்று  சிரிப்பை  அடக்கி  கொண்டு  சொன்னாள் மித்ரா.

 

இல்லை நம்ப மாட்டேன். நீ  பொய்  சொல்ற. உன்னை பாத்தா  அப்படி  தெரியவே  இல்லை”, என்று சொல்லி  விட்டு  அவள் மீது  பார்வையை  மேய  விட்டான்.

 

அவன் பார்வையில்  வந்த வெட்கத்தை  மறைத்து   கொண்டு “உங்க  மாமனார்  கிட்ட  வேணும்னா  கேளுங்க”, என்று சொன்னாள்.

 

ச்சே ச்சே  இதை   போய் எப்படி  கேக்க  முடியும்  அவர்  கிட்ட? லூசா  நீ?”

 

சரி  வீட்டுக்கு போனதும் நான் புரூவ் பண்றேன்”என்று சொன்னாள் மித்ரா.

 

ஐயோ  இவ வேற இவ்வளவு  பெரிய  குண்டை  தூக்கி  போடுறாளே. மனசுக்குள்ள  எவ்வளவு  ஆசை  இருக்கு? எல்லாத்துக்காகவும்  காத்துட்டு  இருந்தேனே. பாவி  இப்படி சொல்றாளே. இப்ப  என்ன செய்ய?”, என்று மனதுக்குள்  புலம்பினான்  பார்த்திபன்.

 

கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு அனைவரும் வீட்டுக்கு வந்தவுடன், அவனை அழைத்து கொண்டு தன் அப்பாவின் முன்பு போய் நின்றாள் மித்ரா.

 

அவள் தலையை வருடி கொடுத்த மோகன் “என்ன டா?”, என்று பாசமாக  கேட்டு சிரித்தார்.

 

அப்பா என்னோட கல்யாணத்தை பத்தி நீ என்ன நினைக்கிறன்னு சொல்லேன்”,  என்றாள் மித்ரா.

 

என்ன சொல்றது? ரொம்ப சந்தோசமா இருக்கு. உன்னை எவன் தலையில் கட்டி வைக்கன்னு பயந்து  போய்  இருந்தேன். நெருப்பில் நின்னுட்டு இருந்த மாதிரி இருந்தது. கல்யாணமே ஆகாதுன்னு கூட நினைச்சேன். ஆனா இப்ப  சந்தோசமா இருக்கு. பார்த்தி தான் இளிச்ச  வாயன்  போல? செமையா  மாட்டிகிட்டான். ரெண்டு  பேரும்  சந்தோசமா இருக்கணும்”என்று சொல்லி  விட்டு  போனார்  மோகன்.

 

அவள் சேட்டைக்காரி என்ற அர்த்தத்தில் அவர் பேசியதை, தவறாக புரிந்து கொண்டு அவள் சொன்ன பொய்யை உண்மை என்று நினைத்து அதிர்ச்சியாக  விழித்தான் பார்த்திபன்.

 

அவர்  போன  பிறகு  “என்ன பார்த்தி இப்ப நம்புறீங்களா? அப்பா சொல்றதுக்கு அர்த்தம் புரிஞ்சதா?”, என்று கேட்டாள் மித்ரா.

 

ஹ்ம்ம்”என்று சொல்லி  முகத்தை தொங்க  போட்டு  கொண்டு சென்றான்  பார்த்திபன்.

 

அடுத்து இருவருக்கும் பாலும், பழமும் கொடுக்க பட்டது.

 

பார்வதியிடம் “அத்தை சடங்கு செய்றேன்னு அம்மா, அப்பாவை ஏதும் சொல்லிறாதீங்க. அவங்களை கண்டுக்காம விட்டுருங்க. எதுக்கு சொல்றேன்னா சங்கோஜமா உணருவாங்க”, என்று சொல்லி விட்டாள் மித்ரா.

 

சரி  டா தங்கம்”, என்று சிரித்தாள்  பார்வதி.

 

அடுத்து சகஜமாக அவரவர் அவர்களின் வேலையை பார்க்க மித்ராவும்  இதுவரை தங்கி இருந்த நந்தினி அறைக்கே சென்றாள்.

 

நந்தினி தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.

 

அவள் அருகில் அமர்ந்து “அம்மா”, என்று அழைத்தாள் மித்ரா.

 

அடுத்த நொடி “மித்துமா”, என்று கண்ணீரோடு மித்ரா தோள்களில் சாய்ந்தாள் நந்தினி.

 

அம்மா என்ன இது? எதுக்கு இந்த அழுகை? அழாதீங்க மா”

 

என்னோட வாழ்க்கையையே எனக்கு மீட்டு கொடுத்திருக்க மித்ரா நீ. இந்த உலகத்திலே ரொம்ப சந்தோசமா இருக்குறது யாருன்னு கேட்டா அது நான் தான்னு   சொல்லுவேன். என்னோட தாஸை எனக்கே கொடுத்திருக்க. தேங்க்ஸ் மித்ரா”

 

எனக்கு தெரியும் மா. உங்க காதலை பத்தி. அப்பா மேல நீங்க வச்சிருக்கிற காதல் ரொம்ப மதிக்க கூடியது மா. இன்னொரு உண்மை சொல்றேன் மா. அப்பாவுக்கும் உங்க மேல இருந்த காதல் அப்படியே தான் மா இருக்கு. அதை நீங்க நம்பணும். ஆனா அம்மாவை  கல்யாணம் செஞ்சு உங்களுக்கு துரோகம் செஞ்சிட்டோம்னு ஒரு குற்ற உணர்ச்சியும், அப்புறம் எங்க அம்மா கூட அவர் வாழ்ந்த குற்றவுணர்ச்சியும் அப்பாவுக்கு இருக்கும் மா. அது மாறுற வரைக்கும் நீங்க காத்திருங்க மா”

 

கண்ணீரை  துடைத்து  கொண்டு “ஏய் வாலு நீ எனக்கே பாடம் சொல்றியா?”, என்று சிரித்தாள் நந்தினி.

 

ஹ்ம்ம் ஆமா. உங்க லவ்க்கு நான் போராட  வேண்டி   இருக்கு. சரி வாங்க பாட்டியை போய் பாப்போம்”

 

அம்மாவை பாக்க எனக்கு கூச்சமா இருக்கு மித்ரா. எல்லாரையும் பாக்கவே அப்படி தான் இருக்கு. நான் அப்புறமா பாத்துக்குறேன்”

 

பாரு  டா  அம்மாவுக்கு  வெக்கத்தை. ஹ்ம்ம் சரி சரி. நடக்கட்டும்  நடக்கட்டும். நான்  போறேன். பாட்டியை  பாருங்க.  இத்தனை  வருசமா  கழுத்தை  விட்டு  இறக்காத  அவங்க  பேவரைட்  செயினை   கழட்டி  எனக்கு  போட்டுருக்காங்க. அதுக்கு தேங்க்ஸ் சொல்லணும்”என்று சொல்லி  விட்டு  எழுந்து  வள்ளி பாட்டி அறைக்கு  சென்ற மித்ரா அவர்  இருந்த  நிலைமையை  பார்த்து   “ஐயையோ”, என்று அலறினாள்.

 

எல்லாரும் “என்ன ஆச்சு?”, என்று பதறி கொண்டு ஓடி வந்தார்கள். அங்கே வள்ளி பாட்டி மூச்சு பேச்சு இல்லாமல் கீழே விழுந்து கிடந்தாள்.

 

பார்த்திபன் அவரை தூக்கினான்.  “கட்டிலில் படுக்க வை பார்த்தி”, என்று சொன்னார் மகேந்திரன்.

 

இல்லை பா ஆஸ்பத்திரிக்கு போவோம்”

 

இல்லை பார்த்தி. நீங்க முதலில் பாட்டியை படுக்க வைங்க. என்னனு பாக்குறேன்”, என்றாள் மித்ரா.

 

நீ என்ன பாப்ப? பெரிய டாக்டரா? போடி”, என்று  எரிச்சலாக  சொன்னான்  பார்த்திபன்.

 

அவளை பாக்க விடு பார்த்தி. மித்ரா  ஒரு டாக்டர் தான்”, என்று சொன்னார் மோகன்.

 

அதிர்ச்சியாக அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு, அவரை கட்டிலில் படுக்க வைத்து விட்டு ஒதுங்கி நின்றான்.

 

பாட்டிக்கு ரொம்ப சந்தோசம். அதனால தான் எமோஷ்னலா ஆகிட்டாங்க. அதான் மயங்கிருக்காங்க. அப்பா உங்க பி பி டேப்லெட் எடுத்துட்டு வாங்க”, என்றாள் மித்ரா.

 

அடுத்த அரை மணி நேரத்தில் அவள் கொடுத்த முதலுதவியில் பாட்டி சீராக மூச்சு விட துவங்கி ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாள். மூன்று மணி நேரத்தில் கண் விழித்து விட்டாள்.

 

அடுத்து தான் எல்லாரும் சகஜமாக ஆனார்கள்.

 

என்ன கிழவி இப்படி பய முறுத்திட்ட?”, என்று கேட்டான் பார்த்திபன்.

 

தலை சுத்தி விழுந்துட்டேன் பார்த்தி. கவலை படாத. உன் பிள்ளைகளை எல்லாம் தூக்கி கொஞ்சாம அவ்வளவு சீக்கிரம் போக மாட்டேன்”, என்று சிரித்தாள் வள்ளி பாட்டி.

 

உடனே மித்ராவை பார்த்தான் பார்த்திபன். அவளும் அவனை நிமிர்ந்து பார்த்தாள். “பிள்ளைக்கு எங்க போக?”, என்று நினைத்து கொண்டு அடுத்த நொடி அங்கு இருந்து எழுந்து சென்று விட்டான்.

 

அன்று இரவு மித்ராவுக்கும், பார்த்திபனுக்கு முதலிரவு ஏற்பாடு செய்ய பட்டது.

 

எதுக்கு டா இந்த வெட்டி வேலை?”, என்று நினைத்து கொண்டு மாலை மொட்டை மாடியில் அமர்ந்திருந்தான். அவன் நண்பர்கள் அவனை தேடி அங்கு வந்தார்கள்.

 

அப்புறம் மாப்பிள்ளை கொஞ்ச நேரம் தூங்கிருக்கலாம்ல? அப்ப தான நைட் முழிச்சிருக்க முடியும்”, என்றான் வினோத்.

 

ஆமா டா இல்லைன்னா முக்கியமான நேரத்தில் கண்ணை கட்ட போகுது”, என்றான் ராசு.

 

இவனுங்க வேற விஷயம் தெரியாம படுத்துறானுங்களே”, என்று நினைத்து கொண்டு சிரித்தே சமாளித்தான்.

 

பார்வதி அலங்காரம் செய்து மித்ராவை, பார்த்திபன் அறைக்கு அனுப்பி வைத்தாள்.

 

உள்ளே ஜன்னல் அருகே நின்று வெளியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான் பார்த்திபன்.

 

உள்ளே சென்ற மித்ரா, அவன் அருகில் போய் நின்றாள். அமைதியாக அவளை திரும்பி பார்த்தான்.

 

என் மேல எதாவது கோபமா அத்தான்?”, என்று கேட்டாள் மித்ரா.

 

அவளை தலை முதல் கால் வரைக்கும் பார்வையிட்டவனுக்கு, கடவுள் மேல் முழுகோபமும் வந்தது.

 

இல்லை மித்ரா. உன்மேல எனக்கு என்ன கோபம் வர போகுது?”, என்று அவள் முகம் பார்க்காமல் பதில் சொன்னான்.

 

உங்களை ஏமாத்தி கல்யாணம் பண்ணிருக்கேன்ல?”

 

அதெல்லாம் இல்லை மித்ரா. நீ இந்த உண்மையை என்கிட்ட சொல்லிருந்தாலும் நான் உன்னை தான் கல்யாணம் செஞ்சிருப்பேன்”

 

திகைப்பாய் அவனை பார்த்தாள்.

 

என்ன புரியலையா? எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு மித்ரா. பிடிச்சதுக்கு பின்னால உன்கிட்ட உள்ள குறையை பாத்தேன்னா, நான் நல்ல மனுசனா இருக்க மாட்டேன். இப்ப எனக்கு எதாவது குறை வந்தா நீ என்னை விட்டுட்டு போயிருவியா மித்ரா?”

 

அடுத்த நொடி அவன் நெஞ்சில் சாய்ந்தாள் மித்ரா.

 

அவளை பாசமாக அணைத்து கொண்டவன் “அழாத மித்ரா எனக்கு உன்னை நினைச்சா பெருமையா இருக்கு. அத்தையோட வாழ்க்கையை அப்படியே வண்ணமயமா மாத்திருக்க. நானே எதிர் பார்க்கலை  தெரியுமாஅதுக்காகவே உன்னை இன்னும் இன்னும் பிடிச்சிருக்கு”என்று சொல்லி கொண்டே அவள் முதுகை தடவி கொடுத்தான்.

 

அதில் காமம் இல்லாமல் காதலை உணர்ந்த மித்ரா “கடைசி வரைக்கும் நான் இப்படியே இருந்தேன்னா, என்ன செய்ய பார்த்தி? உங்களுக்கு குழந்தைங்க எல்லாம் வேணும்ல?”, என்று கேட்டாள்.

 

பரவால்ல டா. வேணும்னா குழந்தையை தத்து எடுத்துக்கலாம். இல்லைனா எனக்கு நீ குழந்தை. உனக்கு நான் குழந்தையா இருந்துக்கலாம் சரியா?”

 

ஐ லவ் யு அத்தான்”, என்று அவனிடம் சொன்னவள் “கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க அத்தான்”, என்று மனதினுள் சொல்லி கொண்டாள்.

 

வா இன்னைக்கு முழுவதும் அங்க இங்க அலைஞ்சது உடம்பெல்லாம் வலியா இருக்கும். தூங்கு மித்ரா”, என்று சொல்லி அவளை கட்டிலில் அமர வைத்தவன் அவளுக்கு அந்த பக்கம் வந்து படுத்து விட்டான். சிறிது நேரத்தில் உறங்கியும் விட்டான்.

 

ஆணழகனாக தூங்கி கொண்டிருந்த அவனை ரசித்து பார்த்து கொண்டே படுத்திருந்தாள் மித்ரா.

 

உள்ளே போ மா நந்தினி”, என்று சொல்லி கொண்டிருந்தாள் பார்வதி.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!