Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thenmazhai Thoovuthadi

Thenmazhai Thoovuthadi 10 1

மழைத்துளி 10

 

காதல் ….. அமிர்தா மெதுவாக சொன்னாள். ஆனால் அவள் விழிகளோ அதை பகிரங்கமாக ஆதியிடம் சொன்னது. அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கும் அந்த விழிகளில் பொங்கி வழிந்த காதல் ஆச்சரியத்தைக் கொடுக்க ,

 



Advertisement

“காதல்….அப்படினா… ” என அவன் மேலும் ஏதோ கேட்கப் போக , இயல்புக்கு வந்தவள்,

 

“அது…. அந்தப் படிப்பு மேல எனக்கிருந்த காதல் தான் … என்னைய பி.ஆர்க் படிக்கத் தூண்டிச்சு.” எனச் சொல்லி முடிக்கவும் . ஓர் அழகான சிரிப்பை அவளுக்கு தந்தவன் அவள் தோள் பற்றி ஹாலுக்கு அழைத்து வந்தான்.

Advertisement

 

Advertisement

” காதல்னு சொல்ற அளவுக்கு ரொம்ப பிடிக்குமா … முதல்லயே அம்மாவுக்கும் அனுவுக்கும்  தெரிஞ்சுருக்கும் தானே… ஏன்னா நான் என்னோட பிஸ்னஸ்க்கும் உதவுற மாதிரி பொண்ணதான் கல்யாணம் பண்ணுவேன்னு அம்மாகிட்ட சொல்லுவேன்…. கண்டிப்பா உன்னையும்  சாய்ஸ்ல வச்சுருந்துருப்பாங்க … சந்தர்ப்பம் அமையவும் கெட்டியா பிடிச்சுக்கிட்டாங்கப் போல…. உண்மைலயே எங்கம்மா கிரேட் தான் …..” என்றவன். அவளைத் தன் முன் நிறுத்தி ,

 

” மொத்தத்துல நான் ரொம்ப லக்கினு தான் சொல்வேன் , நான் என் மனைவியா வர்றவ எல்லா விதத்திலயும் எனக்கு சப்போர்ட்டா  இருக்கனும்னு அம்மாகிட்ட சொல்வேன்…. அம்மாவுக்கு இணை இந்த உலகத்துல யாருமே கிடையாதுங்கிறது உண்மை தான்…. அந்த இக்கட்டான நிலைலக் கூட நீ தான் எனக்குப் பொருத்தமா இருப்பனு யோசிச்சுருக்காங்க பாரேன்….”

Advertisement

 

அதுவரை அவன் கூறியதை எல்லாம் புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தவள்… இப்போது முகம் வாட “ஆம்” என்பதாக தலையாட்டினாள்.

 

[the_ad id=”6605″]

 

 

முகம் வாடவும் தான் ,அவள் மனதை உணர்ந்தவன், “சா…சாரி … ” என்றவன் மேலும் என்ன சொல்ல என்றுத் தெரியாததால் ,

 

“இன்டர்ன்ஷிப் கோவைல தானா… எந்தக் கம்பெனி ” ,எனவும்,

 

“ம்…. எங்கத்தைக் கம்பெனினு சேர்ந்தேன் … இப்ப அது என் புகுந்த வீட்டுக் கம்பெனி … ” எனப் புன்னகைக்க ,

 

“அட நம்ம கம்பெனி தானா:… அப்ப நல்லதாப் போச்சு  …. மூணு மாசம் தானே சர்டிஃபிகேட் ரெடி பண்ணிரலாம் … ”

 

புரியாமல் , “ஏன் ” எனப் புருவம் உயர்த்திக் கேட்டவளிடம்,

 

“ஏன்னு உனக்குத் தெரியாது… ” என அவனும் அதே போல் புருவம் உயர்த்திக் கேட்க ,

 

முதலில் புரியாமல் விழித்தவள் , புரிந்ததும் , முகம் சிவந்து ,” எ..எனக்குத் தெரியாது….. அங்க தான் என் ஃபிரண்ட்ஸ் ரெண்டு பேரும் பண்றாங்க….அப்படியெல்லாம் சர்டிஃபிகேட் தர வேண்டாம். அது தப்பு” என சைகையால் தலையையும் அசைத்துச் சொன்னவளின் அழகில் அவளின் அருகில் மிகவும் நெருங்கி நிற்க…

 

பின்னடைந்தவளிடம், “வேந்தன் கோவிலுக்கு போய்ட்டு வந்ததும் ஒரு வாராம் துபாய் போற வேலை இருக்கு… அப்ப நீ சென்னைல நம்ம வீட்டுல இருக்க வேண்டியிருக்கும். ”

 

தெரிந்தது தானே என்பதாக தலையசைக்க , “அதுக்கப்புறம் இரண்டே நாள்ல  பொங்கல்னு நாம கோயம்புத்தூர் கிளம்பிடணும்….அந்த டைம்ல எனக்கு இங்க நிறையவே வேலைகள் … உடனே இங்க வர வேண்டியிருக்கும் … ”

 

அவள் தலையை தலையை ஆட்டவும் , அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது. அவளுக்கும் சிரிப்பு வர திரும்பி மாடிப்படி ஏற ஆரம்பித்து விட்டாள் .

 

” நான் புலம்பிட்டு இருக்கேன் …. நீ ஒடுறியா…. ”

 

பின்னாலயே படி ஏறி வந்தவனிடம் , “குட் நைட்” என்று விட்டு அறைக்குள் நுழைந்து விட்டாள்.

 

உள்ளே சென்றவளுக்கு வானில் பறப்பது போல் ஓர் உணர்வு. நாணத்தால் தன்னாலயே கைகள் முகத்தை மூடிக்கொண்டன. ஆதிக்கும் அதே உணர்வு தான் .. இவ்வளவு இலகுவாக எப்படி என்னால் பேச முடிகிறது…. என்ற ஆராய்ச்சியில் இறங்கியிருந்தான்.

 

கோவையிலோ தக்ஷனும் அனுவும் கிளம்பி மருதமலைச் சென்றனர். இருவர் மனங்களுமே மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தது. அனு முதலிலேயே சொல்லியிருந்தாள், முருகனை நடந்து படியேறி தான் தரிசிப்பேன் என்று. தக்ஷனுக்கும் அவளுடன்   அதிக நேரம் இருக்க வாய்ப்புக் கிடைக்கும் என்பதால் வண்டி நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு இறங்கி படியேற ஆரம்பித்தார்கள்.

 

வண்டியில் ஏறியதுமே அனுவின் அக்கா பிரியா ஃபோன் செய்து விட்டாள். எனவே பாதி நேரம் அவளுடன் பேசுவதிலயே நேரம் சென்று விட்டது. அதன் பிறகு அப்பா அம்மா எனக் குடும்பத்தினர் அத்தனை பேரிடமும் பேசிக் கொண்டே வந்தவள் இறங்கும் போது தான் கைப்பேசியை வைத்தாள்.

 

எனவே அருகில் நடந்து வந்தவன் , “சரி எல்லார்கிட்டயும் பேசி முடிச்சாச்சு … இப்ப என்கிட்ட பேசலாம் தானே… ”

 

“அத்தா…ன் ” எனச் சிணுங்கியவளிடம்,

 

“நடந்தே போய் தரிசிக்கிற அளவுக்கு உனக்கு முருகன ரொம்பப் பிடிக்குமா … ”

 

“ம் ரொம்ப … ரொம்ப … தமிழ் கடவுள் முருகன யாருக்குத்தான் பிடிக்காது … , தாத்தா முருக பக்தர் தானே அவராலயே முருகன ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சது…. நம்ம கல்யாணம் நடக்கவே முருகன் தான் காரணம்னு சொல்வேன் …” என்றவள் நின்று அவனைப் பார்க்க , தக்ஷனும் நின்று முகம் பார்க்க , அவள் கண்களின் கலக்கம் அவனை மிகவும் பாதித்தது.

 

அதன் பிறகு பேசாமலயே முருகனை தரிசித்து விட்டுப் படியிறங்க ஆரம்பித்தனர். ஓரிடத்தில் அமர்ந்த அனுவுக்கு இளநீர் வாங்கித் தர , பழைய நினைவுகளில் அவளுக்கு மீண்டும் கண்ணில் நீர் தேங்க ஆரம்பித்தது.

 

 

[the_ad id=”6605″]

 

“ஷ் ….கேண்டி.. நடந்து முடிஞ்சத மறக்க முயற்சிப்போம், கோவிலுக்கு வந்துருக்கோம் இனி எல்லாம் நல்லதா நடக்கும்னு நம்பிக்கை வைப்போம். ப்ளீஸ் … நீ என்னைப் புரிஞ்சிக்க முயற்சி பண்ணு… ” என்றவன் அதற்கு மேல் எதுவும் பேசாது படியிறங்கி காரை எடுத்து வந்தான்.

 

அனுவுக்கும் அவன் வருந்துவது பிடிக்கவில்லை தான் … எனினும் அவளால் கடந்துப் போன நாட்களை மறக்க முடியவில்லை. கீழேயிருந்து கோபுரத்தைப் பார்த்தவள் , ஒரு தீர்மானம் எடுத்து முருகனை வணங்கி விட்டுக் காரில் ஏறிக் கொண்டாள்.

 

ஏறியவள் அவன் முகம் பார்த்து விட்டு மென்னகையோடு, அவனது அடர்ந்த கருமை நிற மீசையில் படிந்திருந்த விபூதியை புடவை முந்தானைக் கொண்டு துடைத்து விட ,

 

காரை ஸ்டார்ட் செய்வதில் கவனம் வைத்திருந்தவன் இந்தச் செய்கையில் கண்கள் மின்னஅனுவைப் பார்க்க ,

 

அவனது பார்வையில் கை அங்கிருந்து அகலாமல் நின்று விட , புடவையை எடுத்து விட்டு அவளது தளிர் விரல்களில் முத்தமிட்ட தக்ஷன்,

 

“தேங்க்ஸ் ” என , படக் கென கையை எடுத்தவள் ,

” என்ன என்னவோ டயலாக் விட்டு என்னை மயக்கி வச்சுட்டு … இப்ப எல்லாம் மறந்தாச்சு … ” எனக் கோபமாக முகத்தைத் திருப்பிக் கொண்டவளிடம் ,

 

“இரு போய் முருங்கை மரம் எங்கனு பார்த்துட்டு வாறேன்…” என இறங்குவது போல் செய்ய , தக்ஷனின் முதுகில் கைக் கொண்டு  அடித்து ,

 

“இது மட்டும் நியாபகம் இருக்கும் ” என்றுச் சிணுங்கிய அனுவின் இடக்கையைப் பிடித்துக் கொண்டவன் ,

 

“லவ் யூ கேண்டி . . . . லவ் யூ ..” என்றவன் மனம் மகிழ்ந்து ,

 

” எதுவுமே மறக்கல … எப்படி மறக்க முடியும் சொல்லு… ” என்றவாறே காரைக் கிளப்பிக் கொண்டு நகர,

 

“போங்கத்தான் …. புஷ்பா அத்தை மட்டும் வந்து பொண்ணு கேட்கலனா நம்ம கல்யாணமே நடந்திருக்காது … ” எனவும் , வண்டியை திடீர் பிரேக் போட்டு நிற்பாட்ட , இடித்துக் கொள்ளாமல் ஒரு குலுக்கலோடு  நிற்கவும் ,

 

” என்னாச்சு .. அத்தான் ” எனப் பதறியவள் முன்புறம் எதுவும் , குறுக்கே வந்ததோ என எட்டிப் பார்க்க , அங்கு எதுவுமில்லை … என்ன என்பதாகத் தக்ஷனைப் பார்க்க , அவன் விழிகளில் வியப்பு அதிர்ச்சி என எதை வேண்டுமானாலும் சொல்லலாம் , அந்தப் பார்வை அப்படித்தான் இருந்தது.

 

” எ… எ… என்ன சொல்ற கேண்டி … சித்தி பொண்ணு கேட்டாங்களா … எப்போ ” எனத் தடுமாற்றத்தோடு கேட்க ,

 

“அது … எனக்குத் தெரியல பாட்டிக்கு உடம்பு சரியில்லனு சித்தி பார்க்கப் போனப்போ கேட்டதா சொல்லிக்கிட்டாங்க….”

 

“ஓ… ஆனா எங்களுக்கு தாமரை அத்தை தான் என்னைய உனக்கு கேட்டதா சொன்னாங்க … பாட்டி … பாட்டியப் பார்க்க இந்த தடவை அம்முவும் போயிருந்தா… வந்ததும் எங்கிட்ட நான் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிறேன்…. ஆனா உங்களுக்கு கல்யாணமாகி நீங்களும் அண்ணியுமா தான் என் கல்யாணத்த நடத்தி வைக்கணும்னு கேட்டா ….” என்றவாறு, சாலையை வெறித்துப் பார்த்த தக்ஷன் ….

 

“ஆனா நான் அவ கல்யாணம் முடிஞ்ச பிறகு தான் … நான் பண்ணுவேன்னு சொல்லிட்டேன். ஏன்னா…. உன்னையத் தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் எனக்கு கிடையாது கேண்டி….. ” என்றவன் , அவள் முகம் பார்க்க ,

 

“அப்போதான் ….அத்தை உன்னை எனக்கு பேசலாமானு சித்திகிட்ட கேட்டதாவும் , சித்தியும் சித்தப்பாவும் அப்பாகிட்ட கேட்கப் போறதாவும் சொன்னா … என் ஃபிரண்ட் எனக்கு அண்ணியா வந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்னும் சொன்னா ….இதுக்கு மேல எனக்கு என்ன வேணும் சொல்லு….உடனே சரி ஏற்பாடு பண்ணுங்கனு சொல்லிட்டேன் ….” என்றவனிடம் ,

 

“என்னத்தான் சொல்றீங்க…. அப்பா அம்மா படிப்பே முடியல அதுக்குள்ள எப்படினு யோசிச்சாங்க ,தாத்தா தான் என் தங்கச்சி குடும்பத்துக்கு என் பேத்தியும் போறது சந்தோஷம் அவங்களுக்கு சம்மதம் சொல்லுனு சித்திக்கிட்ட சொன்னாங்க… எனக்குப் புரியவே இல்லை …யார் எப்படி …..” என அனு யோசிக்க , தக்ஷனும் யோசித்தவன் ,

 

“ஒரு நிமிஷம் ….கேண்டி நீ பாப்பாகிட்ட நாம விரும்பினத எப்போவாவது சொன்னியா…” வேகமாக தலையை இல்லை என்பது போல் அசைத்த அனு ,

 

“ஐயோ…  நானா…. அதுவும் உங்க தங்கச்சிக்கிட்ட…… அவளுக்கு மட்டும் நம்ம விஷயம் தெரிஞ்சிருந்தது ….நமக்கு கல்யாணம் எப்பவோ நடந்திருக்கும் … அவ வாய் தான் ….. ” என்றவள் நியாபகம் வந்தவளாக தக்ஷனின் விழிகளை நோக்கி…..

 

[the_ad id=”6605″]

 

“சா …. சாரி…. அவளுக்கு எப்படி இப்படி ஆச்சு … அக்கா கல்யாணம் முடிஞ்சு நாங்க ஊருக்கு கிஎம்பும்போதுக் கூட என்கிட்ட ஊருக்குப் போனதும் ஃபோன் பண்ணுறேன்னு சொன்னவ அதுக்கப்புறம் பேசவே இல்ல….” என்றவள் கண்கள் கலங்க ,

 

“நீங்களும் ஊருக்குப் போய்ட்டு போன் பண்றேன்னு சொல்லிட்டு போய்ட்டீங்க ….. உங்க ஃபோனுக்காகவும் … ஒரு சின்ன மெசேஜ்க்காகவும்… எவ்வளவு ஏங்கியிருப்பேன் தெரியுமா…. யாருகிட்டயும் என்னால கேட்க முடியல … வீட்லயும்  அக்காவ அமெரிக்கா அனுப்புறதுலயும் , மறு வீடு அது இதுனு பிஸியா இருந்தாங்க …

 

நாங்க கிளம்பின பிறகு மாமாவுக்கும் பாட்டிக்கும் ஏதோ வாய் தகராறு … அதுனால மாமா கோவிச்சுகிட்டு அன்னைக்கே உங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு கிளம்பிட்டதா அத்தை சொன்னாங்க….அதுக்கப்புறம் அதிகம் பேச்சு வார்த்தையே இல்லனு சித்தியும் சொன்னாங்க ….இப்ப பாட்டி படுக்கைல இருக்கவும் தான் மாமா திரும்ப வந்தாருனு கேள்விப்பட்டேன் ….

 

இங்கயும் யாரும் உங்க எல்லோரையும் பத்தியும் பேசல…. எவ்வளவு வேதனையா இருந்துச்சுத் தெரியுமா … ” என்றுக் கண்ணீரை அடக்கி  வேதனையோடு பேசிக் கொண்டிருந்தவள்,

 

” லீவுல அம்மா ஃபோன தானே வச்சுருந்தேன் .காலேஜ் போறப்ப  எனக்குனு புது ஃபோன் வாங்கி தந்தாங்க , முதல்ல அவளுக்கு ஃபோன் பண்ணேன் … ஃபோனேப் போகல ….

 

அப்புறம்  இந்தக் காலேஜ்ல ஜாய்ன் பண்ணப்போறேன்னு பயந்து பயந்து … உங்களுக்கு ஒரு மெசேஜ் போட்டேன். நானா உங்களுக்கு முதல் தடவயா மெசேஜ் பண்ணதாலயோ என்னவோ .. நீங்களும் பதில் கொடுத்தீங்க….” அனுப் பேச பேச  தக்ஷனின் முக மாற்றங்கள் அவளுக்கு விசித்திரமாகப் பட  ….., புரியாமல் பார்த்தவளிடம் ,

 

” கே … கேண்டி .. நான் .. நான் அனுப்பின மெசேஜ் உங்கிட்ட இருக்கா….”

 

“என்னத்தான்… இப்படிக் கேட்கறீங்க.. நீங்க பேசலனாலும் நீங்க எனக்கு கடைசியா அனுப்பின ஒரு மெசேஜ் தானே என்னைய இவ்வளவு தூரம் கொண்டு வந்துருக்கு …  ஃபோன்ல யாரும் பார்த்தா என்னப் பண்றதுனு அதை பத்திரமா மெய்ல  ஏத்தி வச்சுருக்கேன் …. ”

 

“அ… அம்மு ஏதாவது மெசேஜ் பண்ணினாளா ..” என வேதனைக் கலந்தக் குரலில் கேட்டவனிடம் ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!