Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thenmazhai Thoovuthadi

Thenmazhai Thoovuthadi 14 2

 

” பயமா இருக்கு ….” அந்தப்புறம் கேட்டவனுக்கும் சங்கடமாக ,

 

“ஷ் ….கேண்டி அழாதே காதலிக்கிறது தப்பே கிடையாது… உனக்குத் தெரியுமா தெரியல .. எங்கப்பாம்மாக் கூட லவ் மேரேஜ் தான்.”



Advertisement

 

“தெரியும் சித்தி சொல்லிருக்காங்க…. ஆனா.. ஆனா அதுனால நிறைய பிரச்சினைகளும் வந்துச்சுனு சொல்லிருக்காங்க….” என வித்யா சோகமாக சொல்ல ….

 

Advertisement

“ஹேய் கேண்டி அம்மா நார்த் இண்டியன் …அதுனால பிரச்சினை … நீ அப்படி இல்லயே…. வேணும்னா இப்பவே வீட்ல எல்லார்கிட்டயும் உன்னைய எனக்குப் பிடிச்சிருக்குனு சொல்லட்டுமா…..”

Advertisement

 

பதறி எழுந்தவள் , “அத்தா…ன்” என கத்தி விட்டாள். அவளது பதற்றம் உணர்ந்து ,

 

Advertisement

” கேண்டி… பயப்படாத …. சரி நான் சொல்லல… ஆனா நீ இன்னைக்கு இங்க வருவியா … உன்னையப் பார்க்கணும் போல இருக்கு …. நான் தான் என் விருப்பத்தை வெளிப்படுத்திட்டே இருக்கேன் …நீ ஒன்னுமே சொல்லலயே…. ”

 

கண்ணீரைத் துடைத்துக் கொண்டே ரோஷமாக , “என்ன நான் இப்ப பேசுறதே என் விருப்பத்தை சொல்லலயா , வேற யார் கையப் பிடிச்சிருந்தாலும் இந்நேரம் அந்தக் கையே இருந்திருக்காது ….அப்புறம் நேத்து நீங்க நெத்தியில….. ”

 

“நெத்தியில ” என அரவிந்த் கேட்க , முகம் சிவந்த வித்யா , மெளனமாக இருக்க ,

 

“ஓகே இன்னைக்கு நேர்ல பார்க்குறோம் … நான் நெத்தியில தந்தத …..நீ உன் வாயால ….”

 

” மாட்டேன் …மாட்டேன்.… ” எனச் சிணுங்கிய வித்யாவிடம்,

 

” என்ன ….. மாட்டேன்…. ஓ… நான் நீ சொல்லணும் தான் சொல்ல வந்தேன். நீ செய்கைலயே சொல்றேன் சொல்லிட்ட அப்படித்தானே …..”

 

“ம்…. ஐயோ ம்ஹூம்….” என இரண்டையும் சொன்னவள் கடைசியில் ,

 

“அ….த்தான்…. போங்க நான் வைக்கிறேன். அக்காவுக்கு துணையா என்னைய இருக்கச் சொன்னாங்க … எப்படி வர்றது… ”

 

” அது எனக்குத் தெரியாது… எப்படியோ உன்னை இன்னைக்குப் பார்க்கணும்” என்றவன் வைத்து விட்டான்.

 

மதியம் தான் விசேஷம் என்பதால் விக்ரமை அழைத்துக் கொண்டு லதா திருநெல்வேலிக்கு கிளம்பி விட்டார். திலீபனின் வீட்டிலும் அதற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன. ஒரு பக்கம் விருந்து தயாராகிக் கொண்டிருக்க , திலீபன் வீட்டின் ஹாலிலேயே ஜமுக்காளம் விரிக்கப்பட்டன. ஆசாரி வந்து தேவையானதை செய்ய , சங்கீதாவையும் வித்யாவையும் தவிர பெண் வீட்டார் சில பல முக்கிய சீர் தட்டுகளோடு வந்து அமர்ந்தனர்.

 

விக்ரம் வந்தவன் திலீபனருகில் வந்து நின்றுக் கொண்டான். பிரதாப்பும் வந்திருந்தான்.அரவிந்துக்கோ வித்யா வரவில்லை என்றதும் கூட்டத்தில் நிற்காமல் அறைக்குச் சென்று விட்டான்.

 

திலீபனையும் , தாய் மாமனாக விக்ரமின் தந்தையும் சடங்குகள் செய்ய அமர்ந்து விட , அவர்களோடு  வீட்டுப் பெரியவர்கள் அனைவரும் சுற்றிலும் அமர்ந்து கொண்டார்கள் .வரு , உறவுப்பெண்கள் சாரு ,அம்மு என தோழிகளோடு ஒரு ஓரமாக நின்றாலும் பார்வை விக்ரமை தழுவி தழுவி மீண்டது.

 

விக்ரம் பிரதாப் அருகில் நின்று , அவன் கையைக் காட்டிப் பேச வருவுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. இரவிலிருந்து அவன் நினைவாகவே இருந்தவளுக்கு தான் கடித்து வைத்ததை தான் அவன் சொல்லிக் கொண்டிருக்கிறான் என்பது புரிபட அவளது இளம் உள்ளம்  அவனுக்காக வருந்த ஆரம்பித்தது.

 

[the_ad id=”6605″]

 

 

என்ன செய்ய என்று யோசித்தவள் அரவிந்தைத் தேடிச் சென்றாள். அறைக்குச் சென்ற அரவிந்தோ , கைப்பேசியில் வித்யாவை அழைக்க … அவள் எடுத்து விட்டாள் தான்.. ஆனால் மெளனம் … அரவிந்தும் பேசவில்லை.… அவளைப் பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் அவனையும் மெளனமாக வைத்தது.

 

‘சந்திக்க துடித்தேன் பொன்மானே

சந்திக்க வருவாயா….

உன்னை எண்ணி உள்ளம் வாடும்

 

கண்கள் இரண்டும் சண்டை போடும் ….

கண்ணே மனமில்லயா …

காவல் விடவில்லயா…..

 

அரவிந்தைக் காணும் ஆவல் வித்யாவுக்கும் அதிகமிருந்தாலும் போக முடியாத நிலை அவளுக்கு அழுகையைத் தந்தது. திலீபன் வீட்டு நிகழ்வுகளை நேரலையாக தன் லாப்டாப்பில் பார்த்துக் கொண்டிருந்த சங்கீதா அதில் மூழ்கி விட , வித்யா அவளறியாமல் வேறொரு அறைக்குச் சென்று விட்டாள்.

 

அச்சத்தில் பாதி .. ஆசையில் பாதி

பெண்மை நடக்கின்றதோ

ஜீவன் துடிக்கின்றதா

தேகம் கொதிக்கின்றதா….

கைப்பேசி மெளனம் கலைக்க இருவருமே முற்பட்டு வாய் திறக்கப் போகையில் ,

 

பாதி திறந்திருந்த அரவிந்த் அறைக்கதவைத் தட்டி “அண்ணா” என கையை காட்டி அழைத்துக் கொண்டே வரு நுழைய… தங்கையின் அழைப்பில் ஃபோனைக் கூட கட் செய்யாமல் அவள் கையைப் பார்த்தவனிடம் ,

 

“அண்ணா பப்பு இருக்கான்ல… அவன் கடிச்சிட்டான் வலிக்குது….” குழந்தையாக அண்ணனிடம் சொல்ல … தங்கையின் கையில் பற்தடங்களையும் இரத்தத்தையும் பார்த்தவன் இவ்வளவு நேரம் காதலியை நினைத்து உருகியவனா என்று தான் கேட்கத் தோன்றும்.

 

கையிலிருந்த ஃபோனை கட்டிலில் வைத்துவிட்டு,

 

“என்ன பாப்பா… எப்படி பாப்பா ஆச்சு ..” எனப் பதறிக் கொண்டே , தண்ணீர் எடுத்து கழுவியவனிடம் ,

 

“அதான் சொன்னேனே பப்பு… திவாகர் அண்ணன் பையன் …” என்றதும் ,

 

“பப்பு… பல்படுறது நல்லதில்ல பாப்பா … இரு மெடிக்கல் போய்ட்டு சில மெடிசன்ஸ் வாங்கிட்டு வாறேன் …”

 

“அண்ணா எழுதிக் கொடு நான் டிரைவர் அங்கிள வாங்கிட்டு வரச் சொல்றேன் …” இவர்களது உரையாடலை ஃபோன் மூலமாக கேட்டுக் கொண்டிருந்த வித்யா .. ”

 

” தங்கச்சியப் பார்த்ததும் என்னைய மறந்தாச்சு … ” என புன்னகைத் தோன்ற நினைத்தவள் , அரவிந்தின் தங்கை மீதான பாசத்தில் அவனை அதிகம் பிடித்தது. அதற்குள் சங்கீதா அழைக்கும் சத்தம் கேட்க கைப்பேசியை அணைத்து விட்டுச் சென்று விட்டாள்.

 

அவளுக்கு அப்போது தெரியவில்லை தங்கைக்காக அரவிந்த் உயிரையும் தருவான்.. உயிரானவளையும் விட்டுத் தருவான் என்பதனை .

 

அண்ணனிடம் எழுதி வாங்கிக் கொண்டுப் போனவள் அதை விரைவாக வாங்கி வரச் செய்து விக்ரமிடம் சேர்ப்பிக்க முடிவு செய்து அவனைத் தேட , இப்போது அரவிந்த் மற்றும் திலீபனும் அவனருகில் நின்றிருந்தனர். விருந்து முடிந்து கிளம்பும் வரையிலுமே அவளால் விக்ரமை நெருங்க முடியவில்லை.

 

அவனருகில் யாருமில்லாத போது செல்ல முடிவு செய்தாள் எனில் பிரதாப் அவள் முன்பு பேசுவதற்கு வந்து வந்து நின்றான். வரு அவனைக் கண்டுக்கொண்டதாகவே தெரியவில்லை எனவும் சோர்ந்து போனவன்.

 

“சகல அங்கயிருந்து லட்சு என்னையப் பார்க்கிற மாதிரி தான் இருக்கு … ஆனா பக்கத்துல போனா கண்டுக்கவே மாட்டிக்கிறாடா .… ”

 

” எப்படியும் திலீபன் கல்யாணம் வரைக்கும் அவன் தங்கச்சிங்க எல்லாரும் இங்க தான் இருப்பாங்க … அதுக்குள்ள ஓகே வாங்கிரமாட்ட… கொஞ்சம் பொறுமையா இரு…”

விக்ரம் கிளம்பி விடுவான் என்று வேகமாக வந்து அமுதாவிடம் கொடுத்து அவர்களிடமிருந்து மறைவாக ஆனால் பேசினால் கேட்கும் தூரத்தில் நின்றுக் கொண்டாள்.

 

[the_ad id=”6605″]

 

 

 

அனைவரும் கிளம்ப,விக்ரம் கார் அருகில்  நின்றிருந்த அரவிந்திடம் வந்த அமுதா ,

 

” ண்ணா டிரைவர் அங்கிள் இதை உங்க கிட்ட தரச் சொன்னாங்க” என்றுத் தரவும் ,

 

தீலீபன் , ” இது விக்ரமுக்கா … சும்மா கையக் காட்டி கையக் காட்டி அழுதிட்டே இருக்கான். “எனக் கிண்டல் செய்ய , அவன் காதில் மெதுவாக ,

“கிண்டலா பண்ற… நேத்து உன் நிலமையக் கீதுக்கிட்ட சொன்னேன்னு வச்சுக்கோ…. நீ கே ஏ பி (KAB) தான் ….”

 

“டேய் மாப்ள … இருடா … இருடா… அரவிந்த் அவன் கையப் பாரு….”

 

“ஓ சாரி மச்சான் கையக் காட்டுங்க” என்றவன் ,

 

“நான் நைட்ல உங்கள வீட்ல விடும் போது இப்படி இல்லயே … பார்த்தா யாரோ கடிச்சு வச்சது போல தான் இருக்கு …. யார்” என அவன் முகம் பார்த்து கேட்டவனிடம் ,அக்கம் பக்கம் பார்த்து விட்டு ,

 

” மாப்ள….. நிஜமா சொல்றேன்…. குற்றாலத்துல குளிச்சிட்டு , நீங்க ஆப்பிள் ஜூஸ் குடிச்சது மட்டும் தான் தெரியும் …. காலையில கீது வந்து எழுப்பினதும் தான் நான் மொட்டை மாடியில … அதுவும் நான் போட்டுருந்த ஷர்ட் எங்கனு கூட தெரியாம வெறும் உடம்போட வந்து தூங்கி எந்திரிச்சுருக்கேன்னு நினைக்கிறப்ப … ரொம்ப கில்ட்டியா ஃபீல் பண்றேன்… அந்த அளவுக்கு போதையில இருந்துருக்கேன்…. வீட்ல தெரிஞ்சது ரொம்ப வருத்தப்படுவாங்க..” விக்ரம் பேசிக் கொண்டிருக்கும் போதே அரவிந்த் அவனுக்கு ஊசிப் போட்டு விட்டவன்.

 

“இல்லயே மச்சான் சட்டை போட்டுகிட்டு தான் நீங்க மாடியேறுனீங்க…. நடக்க கஷ்டபட்டீங்க… சோ ஏணிப்படில பாதிவரை நான் வந்துட்டுத்தான் கிளம்பினேன்… ”

 

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வருவுக்கு கண்களில் நீர் நிறைய ஆரம்பித்துவிட்டது.

 

“அப்ப விக்கி நேத்து பேசினது , நடந்துக்கிட்டது எதுவுமே அவனுக்கு ஞாபகமில்லயா ….” ஆனாலும் முகத்தில் சிறு முறுவல் தோன்ற,

 

“அப்ப நீ நல்லவன் இல்ல விக்கி …. ரொம்ப ரொம்ப நல்லவன் …சுய நினைவு இல்லாதப்பக் கூட எவ்வளவு கண்ணியம் … சோ க்ரேட் விக்ஸ்டப்பா நீ … “அதற்குள் பரணி ராணியிடம் ,

 

“மைனி ( அண்ணி)சங்கீதா தலையில இந்தப் பூவெல்லாம் வைக்க அவ நாத்தனார் எல்லாரையும் அழைச்சிட்டு போறேன் …சாயந்திரம் அனுப்புறேன்… ஆதி உன் கார்ல இந்த புள்ளங்கள கூட்டிட்டு வா….” என விக்ரமாதித்யனுக்கும் கட்டளை இட்டு விட்டுக் கிளம்பினார் பரணி என்றழைக்கப்படும் தாமரை பரணி (தாமிரபரணி அல்ல).

 

காரின் பின் சீட்டில் வரு ,சாரு, அம்மு என அமர்ந்துக் கொள்ள பரணி விக்ரமோடு அமர்ந்துக் கொள்ள , ரியர் வியூ கண்ணாடியில்  தெரிந்த விக்ரமாதித்யனை ரசித்துக் கொண்டே வந்தாள் அமிர்தவர்ஷினி. சிறிது தூரம் தான் , சாதாரணமாக கண்ணாடியைப் பார்த்தவன் அமிர்தா தன்னையேப் பார்க்கவும் இரண்டு புருவங்களை உயர்த்தி ‘என்ன’ என்பது போல் கேட்க ,

 

[the_ad id=”6605″]

 

 

 

திடுக்கிட்டவள் , ‘இல்லை’ என்பதாக கண்களிலயே பதில் சொன்னவளுக்கு ஏனென்று தெரியாமலயே கண்களில் நீர் சேர ஆரம்பித்தது. எண்ணம் முழுவதும் விக்ரமே ஆக்கிரமித்திருக்க , தன் மனதில் குடியேறியவனை நினைத்து குழப்பத்தில் இருந்தவளுக்கு அவன் தன்னைக் கண்டு கொண்டு அப்படி கேட்டது ஆனந்தத்தைக் கொடுக்க அது கண்களில் நீராக இறங்கியது.

 

‘எனக்கு என்னானது மனம் தடுமாறுது

 

விழி உனைத் தேடித்தான் ஓடுது தேடுது..’

 

தூவும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!