Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thenmazhai Thoovuthadi

Thenmazhai Thoovuthadi 25 1

தேன் துளி 25

 

                  சென்னை வந்து ஒரு மாதமாக இன்னும் இரண்டு மூன்று நாட்களே …. அன்று மாலை ஸ்பீச் தெரஃபி முடித்து வருவும் வித்யாவும் வீட்டுக்கு வர , வீட்டு வாசலில் அரவிந்த் மட்டுமே உபயோகிக்கும் காரைக் கண்டதும் வரு, வேகமாக இறங்கி வீட்டினுள் ஓடினாள். வித்யாவிற்கு சொல்லவா வேண்டும்வெளியேக் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் உள்ளம் துள்ள உள்ளேச் சென்றாள். காரிலேயே வந்திருக்கிறான் , தன்னிடம் ஒன்றுமே சொல்லாமல் கிளம்பி வந்தவன் மீது செல்லக் கோபம் உண்டாகியது.

 



Advertisement

அந்தப் பெரிய ஹாலில் அண்ணன் தன்னிடம் தந்த மிகப் பெரிய டெய்ரி மில்க் சாக்லேட்டை சுவைத்துக் கொண்டே பேசிய வரு, வித்யாவைப் பார்த்து ,

 

வித்… “என அழைக்கப் போனவள் , டிவி அருகே இருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஒரு நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த சங்கரியைக் கண்டதும்,

Advertisement

 

Advertisement

அண்ணி….அண்ணன் இன்னும் ஒரு மாசத்துக்கு இங்க இருக்கிற நவீன் அண்ணா கிளினிக்குக்கு போக வேண்டியிருக்காம், சோ … “எனக் கிண்டலடித்து , வித்யா அருகில் வந்துக் கண்ணடித்தவள் ,

 

என்ஜாய்என்று விட்டு நகர்ந்தாள்சென்னை வந்ததும் இருமுறை மட்டும் வந்த விக்ரம், ஒரு நாள் மட்டுமே தங்கிச் சென்றான். சனி இரவு வந்தால் திங்கள் காலையே ஓடி விடும் வேகம் தான்…. வருவிற்கு அவனது தொழில் மீதான பிடிப்பு தெரிந்த ஒன்று என்பதால் , அமைதியாகவே அவனுக்கு ஒத்துழைப்பு தந்தாள். ஆனால் சங்கரியும் லதாவும் அவனைப் பிடித்துக் கொள்வார்கள்.

Advertisement

 

வித்யாவாது இரு முறை கோவைச் சென்று இரண்டு மூன்று நாட்கள் இருந்து விட்டு வந்தாள். ஆனால் வரு சென்னையிலயே தான் இருக்கிறாள். அவனும் அழைக்கவில்லை , இவளும் வருகிறேன் என்று சொல்லவில்லை. பெரியவர்களும் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. அவன் ஃபோனில் பேசும் நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் படிப்பிலும் , எப்படியாவது தன் குரல் மீண்டுவிடாதா என்ற ஆசையில் குரல் பயிற்சியும் எடுத்துக் கொண்டிருந்தாள்.

 

சமையலறைச் செல்ல அங்கு வீட்டு மருமகனுக்கு விதவிதமாக லதாவும் பரணியும் சமைத்துக் கொண்டிருந்தார்கள்.

 

 அமிர்தாவைக் கண்டதும் லதா , ” நீ போய் ரிஃபிரஷ் பண்ணிட்டு வாம்மாஏம்மா மாப்ள பன்னீர் மசாலா சாப்பிடுவாங்க தானே…. ” எனக் கேட்க , அவள்ஆம்என தலையை அசைக்க , பரணி

 

அக்கா சாதாரண சமையலே போதும்னா கேட்க மாட்டிக்கிறிங்க … “

 

லதாவோ, “அதெப்படி பரணி , உனக்கு கூடப் பிறந்த அண்ண பையனா இருந்தாலும் , இந்த வீட்டு மாப்ள , நம்ம மருமகளுக்கு அண்ணன்நாம அந்த மரியாதையக் கொடுக்கணும்லமாமியார் விருந்துனா  தனி ஸ்பெஷல் தானே…. “

 

அதற்கு மேலும் அவர்கள் பேசிச் சிரித்துக் கொள்ள அறைக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டு  மாடியேறியவளுக்கு ,

 

இத்தனை வேலைக்காரங்க இருந்தும் வீட்டு மருமகனுக்கு அத்தை தான் சமைக்கிறாங்கவிக்கி அங்க வந்தா….. ம்மா … “கண்கள் கலங்க ,

 

உங்க மருமகனுக்கு ஸ்பெஷலா சமைக்க நீங்க ஏன்மா இல்லாம போனீங்க … “தாயின் நியாபகம் வரவும் கணவனை மனம் தேட , அறைக்கு வந்து விக்ரமை அழைக்க , உடனே எடுத்தவன் ,

 

ஹாய் பேபிஎன்ன இந்த நேரம் … ” என்ன சொல்வாள் , அம்மா நியாபகம் வந்ததும் உன்னைத் தேடினேன்என்றுச் சொல்ல இயலாமல் ,

 

என் பேச்சு இப்ப கேட்குதா… “

 

நல்லா கேட்குதேபட் முன்ன உன் வாய்ஸ் எப்படினு தெரியாது இல்லயாஅதனால  நார்மலா உன் குரல் எப்படினு தெரியலபழைய வாய்ஸ் ரெக்கார்டிங்ஸ்.. வீடியோஸ் எதுவும் இருந்தா அனுப்பு ….கேட்க ஆசைப்படுறேன் ….” என்றவனது பேச்சில் ,

 

புன்னகை எட்டிப் பார்க்க , ” இல்ல வேண்டாம்இப்ப பேசுறதே உங்களுக்கு புரிஞ்சாப் போதும்….. அப்புறம் அண்ணாஅண்ணா…” எனத் தடுமாறியவளிடம்,

 

என்னாச்சு மாப்ள நல்லா இருக்காருல….” என்றவனிடம் ,

 

நல்லா இருக்காங்கஅது…. இங்க அவங்க ஃபிரன்ட்க்கு இன்னும் பத்துநாள் கல்யாணம் …. அவங்களும் அண்ணா போல நியுராலாஜிஸ்ட் தான்அது தான் அவங்க கிளினிக்க பார்த்துக்க ஒரு மாசாம் அண்ணா இங்க தான் இருப்பாங்க….” அதற்கு மேல் அவளால் சுற்றி வளைத்துப் பேச முடியவில்லை ….

 

நீங்க எப்ப வருவீங்கஉங்கக் கூட இருக்கணும் போல இருக்குநான் வேணும்னா அடுத்த செம் கோர்ஸ் கம்ப்ளீட் பண்ணிக்கிட்டா ஸ்வர் ….நீங்க இங்க வர முடியாதுநான் வாரேனேஎனக்கு நான் பேசுறது உங்களுக்கு கேட்டா மட்டும் போதும்என்னால பேச முடியும்உங்கப் பக்கத்துல இருந்தாஇன்னும் ட்ரைப் பண்ணி பேசிருவேன்….ப்ளீஸ் மிஸ் யூ விக்கிமிஸ் யூ லாட்… ” என்ன முயன்றும் அழுகை வந்துவிட்டது.

 

ரிதூ….ஏன்டா இப்படி அழுகிற …. உன் நல்லதுக்காகத்தான் ….”

 

விக்கிஎன் சந்தோஷமே நீ தான் …. உன்கிட்ட பேசுறதுக்காகவே இத்தனை வருஷம் பேசாம இருந்தேன்…. உன்கிட்டதான் பேசிட்டேனே ….”

 

என்ன என்கிட்ட பேசுறதுக்காகவா…” அவன் குழப்பத்துடன் கேட்கவும் ,

 

அது…. அது…. என்னை நேசிக்கிறஎனக்கு கணவரா வர்றவங்ககிட்ட தான் பேசணும்னு இருந்தேன்…..”

 

ஒரு மனைவியாக கணவனிடம் தன் அன்பை, காதலை, அவனருகில்லாத வெறுமையை இதற்கு மேல் எப்படி தெரிவிப்பது என்று வருவிற்குத் தெரியவில்லை. அந்தப் பக்கம் ஆதியால் பேசவே முடியவில்லை .அவளது ஏக்கம் நிறைந்த குரல் மனதை பாதிக்க , அவளிடம் சில சமாதானங்கள் சொல்லி ஃபோனை வைத்தவன் , உடனேயே சில திட்டங்களை வகுத்து அதை செயல்படுத்தவும் ஆரம்பித்தான்.

 

ஃபோனை வைத்தவளோ , தான் சொன்ன வார்த்தைகளை அவன் புரிந்துக் கொண்டானா என்று யோசனையாகவும் இருந்தது. அதன் பிறகான நாட்களில் அவள் திரும்ப அதைப் பற்றிப் பேசவில்லை. இப்போது அரவிந்தே இருவரையும் அழைத்துக் கொண்டு சென்று வந்தான்.

 

அன்று சனிக்கிழமை இரவு , விக்ரம் வருவானா என்று காத்துக் கொண்டிருந்தாள். அவனிடம் கேட்டால் வருவேன் என்று விட்டு வர முடியாமல் போவதும் , வர முடியவில்லை என்று விட்டு சர்பிரைசாக வருவதுமாக இருப்பான் என்பதால் கேட்காமல் இருந்தாள்.

 

ஆனால் இரவு பத்து மணிக்கெல்லாம் வந்திறங்கினான். கூடவே வேந்தனும் அவன் மனைவி குழந்தையும் . கணவனைக் கண்ட உற்சாகத்தை வேந்தன் குழந்தையைக் கொஞ்சுவதில் காட்டிக் கொண்டிருந்தாள் வரு…. விக்ரம் வீட்டினர் அனைவருக்கும் வேந்தனை விக்ரமின் பள்ளிக் கல்லூரியில் உடன் படித்த நண்பன் என்ற முறையில் அறிந்திருந்ததால் அவனிடமும் அவன் மனைவியிடமும் நன்குப் பேசிக் கொண்டிருந்தனர்.

 

நன்குப் பேசக்கூடிய ராகவிக்கு, அமிர்தாவின் இப்போதையப் பேச்சுத்திறன் வியப்பளிக்க ,

 

அண்ணிஎப்படி அண்ணி அங்க ரொம்ப கம்மியா தான் சத்தம் வந்துச்சு , இப்போ நார்மலா பேசுற மாதிரி இருக்குநீங்க இங்க வந்ததும் பேசுறதுக்கு ஆள் இல்லாம ரொம்ப கஷ்டபட்டேன்…”

 

வரு புன்னகைக்க , அரவிந்த் ராகவியிடம் ,

 

அவ பேசினா ….ம்ஹும் பாடினா ரொம்ப நல்லாவே இருக்கும்ஹிந்துஸ்தானி மியூஸிக் கத்துக்கிட்டாஅதையும் பிராக்டிஸ் பண்ணுமாஉனக்கு இப்போ ஒன்னுமே இல்லநீ நார்மலா இருக்க… “

 

ஆதிக்கு இது புதுச் செய்தியே , மனைவியைப் பார்க்க, அவள் அண்ணனிடம் தலையாட்டி விட்டு குழந்தையோடு விளையாட ஆரம்பித்தாள்.

 

வித்யா கணவனைப் பார்த்தவள் , “அடடா அண்ணனும் தங்கச்சியும் பாட்டுப் பாட்டுப் பாடியே வசியம் பண்றதுல பெரியாளுங்க தான்என்னைய பாட்டு பாடியயே உங்கப் பக்கம் சாய்ச்ச ஆளு தானே நீங்க….” என்பதாக நினைத்தவள் ,

 

ஆமா ஆமா ராகவி அக்காஅண்ணன் தங்கச்சி ரெண்டு பேரும் பாட்டுப் பாடுறதுல கில்லாடிங்க … “

 

என கணவன் மட்டுமே அறியும் வண்ணம் ,கண்களைச் சிமிட்டி நாக்கை துருத்தியவள்..

 

அதுவும் எங்கண்ணி  ஹிந்திப் பாட்டுப்பாடினா ஹிந்தி தெரியாதவங்க கூட மயங்கிருவாங்க …” என ராகவியிடம் முடித்தாள்.

 

அரவிந்தோ மனைவியின் இந்த செயலில் எப்போதடா அறைக்குச் செல்வோம் என்ற நிலையிலிருந்தான். மெல்ல எழுந்து வந்து தங்கையிடம் இருந்த குழந்தையை வாங்கி முத்தமிட்டவன் ,

 

நாம போய் கேண்டிச் சாப்பிடலாமாஅதுவும் காட்டன் கேண்டி… ” என்றவன் ஒரு சின்ன டைரி மில்க் சாக்லேட்டை குழந்தை வாயில் வைக்க, ராகவியோ ,

 

டாக்டர் சார்உங்களுக்கேத் தெரியும் …. நீங்க சாப்பிடுங்க சாக்லேட்டகொஞ்சம் போதும் … ” என , அரவிந்தும் ,

 

ஷ்யர்கேண்டிய நானே சாப்பிட்டுக்கிறேன்….” என்றவன் வித்யாவைப் பார்த்துக் கொண்டே வாயில் போட ,

 

அவர்கள் காதல் மொழி அறிந்த வருவுக்கு சிரிப்பை அடக்க முடியாது தலையை நிமிர்த்தாமல் இருக்க , வித்யாவோ கணவனை முறைத்துக் கொண்டு நின்றாள்.

 

ராகவி ,”அண்ணி இவ்வளவு நாள் கேட்க சங்கடப்பட்டுக் கேட்கலஇப்ப தான் நல்லா பேசுறீங்களேஏன் இப்படி ஆச்சுஎப்போ இந்த மாதிரி ஆனது ….”

 

ஆதி இதுநாள் வரை கேட்கவே இல்ல , சொல்ல வந்தவர்களையும் தடுத்துவிட்டான். எனவே அமிர்தாவை நோக்க , வித்யா ராகவியிடம் ,

 

அக்கா நான் சொல்றேன்குட்டிக்கு தூக்கம் வந்துருச்சுப் போல , சாப்பிட என்னத் தர சொல்லுங்க….” என்பதாக பேச்சை திசை திருப்பியதோடு பெண்கள் அனைவரும் சமையலறை சென்று விட்டனர். அவர்கள் கிளம்ப ஆயத்தமாக அமிர்தாவிடம் வந்த ராகவி,

 

அண்ணி.. அவங்க ரெண்டு பேரோட நட்பும் நல்ல ஸ்ட்ராங்னு தெரியும்ஆனா அவங்க கட்டுற பில்டிங் போல இவ்வளவு உறுதியானதுனு எனக்கு இப்போதான் தெரியும்எவ்வளவு பெரிய பொறுப்பு …..” எனக்கண் கலங்கியவள், அமிர்தாவின் கைப்பிடித்து ,

 

ஓகேஃபங்ஷன்ல மீட் பண்ணலாம்நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலிநீங்க வந்த நேரம் அண்ணனுக்கு மட்டுமில்லம, இப்படி எல்லாருக்கும் நல்ல நேரமா இருக்கும்னு எதிர்பார்க்கல , இதுக்கெல்லாம் காரணம் நீங்க தான்வாரோம் அண்ணி … ” என்று விட்டுக் கிளம்பினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!