Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thenmazhai Thoovuthadi

Thenmazhai Thoovuthadi 27 2

 

அது போலவே ஊட்டிக்குச் சென்றதும் தகவல் தெரிவித்து ஃபோனை அணைத்ததோடு , மனைவியையும் அணைத்தவன் தான் … இரவா பகலா என்றுத் தெரியாத அளவிற்கு அந்த இளம் தம்பதியர் தங்கள் பொழுதுகளை கழித்தனர். விக்ரம் சொன்னது போல் கொண்டு வந்த ஆடைகள் கூட எடுக்கப்படவில்லை …. அவர்கள் தங்கியிருந்தது விக்ரம் வீட்டினர் வந்தால் தங்குவதற்காக வாங்கப்பட்ட ஆங்கிலேயர் கால கட்டிடம். காலத்திற்கேற்ப சரி செய்து வைத்திருந்தார்கள்.

 

வீட்டைப் பராமரிப்பவர்களும் செக்யூரிட்டிகளும் மட்டுமே இருந்தனர். அவர்கள் எப்போது சாப்பிடுகிறார்கள் என்பதே தெரியாது. ஆனால் மூன்று வேளையும் அவர்களுக்குப் பிடித்த உணவுத் தயாராகி மேசை மீது இருந்தது. எல்லாம் லதாவின் ஏற்பாடு என்பதை மறுக்க இயலாது.



Advertisement

 

இரு நாட்கள் வீட்டிலேயே இருந்தவர்கள் மூன்றாம் நாள் காலையில் வெளியேக் கிளம்பினார்கள். எவ்வளவு மெதுவாக கிளம்பினாலும் விக்ரம் தயாராகி நிற்கவும் , உடனே கிளம்ப வேண்டியதாகிவிட்டது.

 

Advertisement

அவனது பேச்சை ரசித்துக் கொண்டே ,விக்ரமின் கைப்பிடித்துக் கொண்டு அன்று முழுவதும் ஊட்டியை வலம் வந்தாள். அவனை கடைகளில் எதுவும் வாங்கும்போதுக் கூட பிடித்த கையை விடவில்லை. ஏரிக்குச் சென்று படகு சவாரி செய்யலாம் எனவும் மிகுந்த தயக்கம் வருவுக்கு .

Advertisement

 

“ஹேய் .. நான் துபாய்ல அன்டர் வாட்டர் ரெஸ்டாரன்ட் அழைச்சிட்டுப் போகலாம்னு நினைச்சிட்டு இருந்தா … நீ தண்ணிக்கு மேலே போட்டிங் போறதுக்கே இவ்வளவு பயப்படுற ….” எனக் கிண்டல் செய்ய ,

 

Advertisement

“நான் இருக்கும் போது என்ன பயம் ரிது…” அதற்கு மேல் தயக்கம் எப்படி வரும் . இருவரும் கால்களால் இயக்கும் படகை விக்ரம் தேர்வு செய்ய , பயத்தில் வேண்டாம் என்றவள் அவன் கைகளை கெட்டியாக பிடித்துக் கொள்ளவும்,இருவரும் அமர்ந்துக் கொண்டு, படகைச் செலுத்துபவரை வைத்து இயக்கும் படகை தேர்வு செய்தான் விக்ரம்.

 

படகு பாதி தூரம் தான் சென்றிருக்கும் , அவனைப் பிடித்திருந்த பிடி இறுக ஆரம்பித்தது. அவன் ஏதோ சொல்ல அவள் முகம் பார்க்க , கண்களை மூடி அவன் தோளிலேயே புதைத்துக் கொள்ள , அவள் கை மேல் கை வைக்க , சில்லிட்டுப் போய் இருந்தது .முகம் நிமிர்த்த அங்கும் அப்படி ஒரு சில்லிப்பு .

 

“ரிது ..ரிது .. ” என “ம்… ” என்ற முனங்கள் மட்டுமே வரவும் , அவள் கன்னம் தட்டியவன் , படகை கரைக்கு திருப்பச் சொல்லி விட்டான். படகைச் செலுத்துபவரும் அவளது நிலைக் கண்டு பயந்து கரைக்குச் செலுத்தி விட்டார்.

 

இறங்குகையில் அவள் பற்கள் தந்தியடிக்க , “வீ… வீ… வீட்டுக்குப் போவோமா ..” விக்ரமிற்கு மனதே கேட்கவில்லை.

 

“ஏன்டா… ஏன்… இப்படி பயப்படுவன்னு தெரிஞ்சா நான் கட்டாயப்படுத்திருக்க மாட்டேனே …சாரிடா…..” அவளிடம் பேசிக் கொண்டே தனது ஜெர்கினையும் அவளுக்கு அணிவித்து தூக்கிக் கொள்ள முயல , நடந்துருவேன் என்றவள் அவன் கைப்பிடித்துக் கொண்டே காருக்கு வந்து விட்டாள். மருத்துவமனை செல்ல முயன்றவனைத் தடுத்து வீட்டுக்கு அழைத்து வந்தவள், அவனை அணைத்துப் படுத்துக் கொண்டாள்.

 

சிறிது நேரத்தில் நடுக்கம் குறைந்து உறங்கியும் விட்டாள். அவளது கைப்பையில் மொபைல் ஒலித்துக் கொண்டே இருந்தது. அந்தப் பாடல் வித்யாவின் அழைப்பிற்கானது என்பதால் எடுத்துப் பேசலாம் என எழ முயல … வரு அவனை கெட்டியாகப் பிடித்திருக்கவும் எழாமல் தன் சட்டை பையில் இருந்த மொபைலை எடுத்தவன் ,

 

தங்கைக்கு அழைக்கலாம் என்று யோசித்து  அதன் பின் வேண்டாம் என்று வைத்தவன் , அலைச்சலில் கண்கள் செருக அவனும் உறங்கி விட்டான்.

 

வருவுக்கு விழிப்பு வந்தபோது நன்கு இருட்டி இருந்தது. விக்ரமிடமிருந்து பிரிய நினைத்தவளை விடாமல் பிடித்துக் கொண்டவனிடம் ,

 

“போய் டீ எடுத்துட்டு வாரேன்….” உடனே கையை விட்ட விக்ரம். அந்த அறையிலிருந்த பால்கனி போன்ற அமைப்புக் கொண்ட, ஆனால் முழுவதும் கண்ணாடி ஜன்னல்களால் மூடப்பட்டிருந்த இடத்தில் இருந்த சோஃபாவில் சென்று அமர்ந்துக் கொண்டான்.

 

டீ எடுத்து வந்தவளிடம் அருகில் அமர்த்தி அவனுக்கும் எடுத்து அவளைவும் அருந்த வைத்தவன் .அவள் காலி கோப்பையைக் கீழே வைத்ததும்,

 

“ரிது…. நம்ம ஊர் ஆறு எவ்வளவு பெரிசு , அதுவும் இப்ப நாம போனப்ப தண்ணீ நிறைய ஓடினது… நீயும் விது, கீதுலாம் கூட இறங்கி விளையாடுனீங்க …. நீ நீச்சல் அடிச்சதுக்கூடப் பார்த்தேன். அப்படியிருக்கும் போது …. ஏன் படகுனா பயமா … ”

 

” இ.. இல்லயே … கொச்சின்ல குட்டி குட்டி ஐலேண்ட் பங்களாக்கள் பார்க்க நான் போட்ல தான் போனேன்….. ரொம்ப நேரம் பூங்காவ சுத்தினோம் இல்லயா அந்த டயர்ட் …… டின்னர் ரெடியா இருக்கு போய் சாப்பிடுவோமா….” என்றவள் எழப்போக ,

 

” உண்மையச் சொல்லணும் ரிது…. உன் முகம் வெளுக்கிறதப் பார்த்து எப்படி பயந்துட்டேன் தெரியுமா…. அப்ப நான் தான் தப்பு செய்துட்டேனா … உன்னைய கட்டாயப்படுத்தினது தப்புதானே…. ”

 

வேகமாக தலையை இல்லை என்பது போல் அசைத்தவள்,

 

அவன் அருகே இருந்த ஜன்னல்கண்ணாடியில் படிந்திருந்த பனிப் புகையை தன் துப்பட்டாக் கொண்டு துடைத்து, அங்கே இருந்துப் பார்த்தாலேத் தெரியக்கூடிய , மலையரசியின் மடியில் ஒளிர்ந்த ஒரு தேவாலயக் கட்டிடத்தைக் கை நீட்டி காட்டியவள்,

 

.”அதோ ஒரு பெரிய சர்ச் தெரியுதா … அது பக்கத்துல தான் எங்கம்மாவுக்கு சொந்தமான டீ எஸ்டேட் இருக்கு. அங்க இது போலவே ஒரு அழகான குட்டி பங்களா … என்னோட பத்து வயசு வரை டெல்லிலருந்து தமிழ்நாடு வந்தா இங்க தான் தங்குவோம்.” என அழகிய புன்னகையுடன் சொன்னவள் ,விக்ரமிடம் திரும்பி …

 

“விக்கி நீ எங்கம்மா ஃபோட்டோ பார்த்திருக்க தானே , அவங்க எவ்வளவு அழகு பார்த்தியா …. என்னைய எங்கம்மாப் போல இருக்கன்னு தான் எல்லாரும் சொல்வாங்க , மற்றவங்கள விடு … பாட்டிக்கு அதுனாலயே முதல்ல என்னைய பிடிக்காதுனு தெரிஞ்சது…” என சொல்லிக் கொண்டு இருந்தவள் ,

 

“ப்ச்… அத விடு… உனக்குத் தெரியும் தானே அம்மா நார்த் இன்டியன்னு ,  தாத்தா காலமாகிட்டார்னு சொன்னதும் எங்களையும் கூட்டிட்டு அப்பா ஊருக்கு வந்தப்போ … பாட்டி அம்மாவ ரொம்ப திட்டி அனுப்பியிருக்காங்க , அம்மா அங்க இருந்தா அப்பாவும் அங்க இருக்கக் கூடாதுனு சொல்லிருக்காங்க. .. அதனால அம்மா என்னைய இங்க அழைச்சிட்டு வந்துட்டாங்க.… அப்போ இங்க எனக்கு ரொம்ப பிடிச்சு போயிருக்கு …..

 

“விக்கி அப்போ டெல்லில சம்மர்… நல்ல வெயில் , அப்பா தாத்தாவுக்கு பதினாறாம்  நாள் முடிஞ்சு கிளம்பணும்னு சொன்னதும் இங்கயே இருந்துட்டோம் … ” விக்ரமை இறுக கட்டிப்பிடித்துக் கொண்டவள் ,

 

” அண்ணாக்கு மெடிக்கல் என்ட்ரன்ஸ் எழுத வேண்டியிருந்ததால அப்பாக்கூட டெல்லிக்கு போய்ட்டாங்க…. அம்மா டாக்டரா இருந்தாலும் அவங்களும் பொண்ணுதானே … எதுக்கோ அழுதுட்டே இருந்தாங்க … அப்பதான் நான் அடம் பிடிச்சேன்னு போட்டிங் போனோம்… அப்ப….அப்ப …. விக்கி ….” என்றவள் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு மூச்சு வாங்கவும்  ,

 

விக்ரம் , “ரிது …ரிது… வேண்டாம் டா … நீ சொல்ல வேண்டாம் எனக்குப் புரிஞ்சுக்க முடியுது…” என அவள் முதுகை தடவிக் கொடுக்க ஆரம்பித்தவனிடம் ,தலையை இல்லை என்பதாக அசைத்துக் கொண்டே ,

 

“அது சாயந்திரம் நேரம் போட்டிங் டைம் முடியப் போகுது … ஆனா நான் ஆசைப்பட்டேன்னு அம்மாவும் நானும் உட்கார்ந்தோம்….நான் ஒரு பொம்மை வச்சிருந்தேனாம் … அது தண்ணீல விழவும் நான் எடுக்கப் போக அம்மா என்னையப் பிடிக்க… ரெண்டு பேரும் விழுந்துட்டோம் ….” அழுதுக் கொண்டே சொன்னவள்,

 

“அம்மா…. அம்மா…. விக்கி அவங்க என்னைய போட்ல தூக்கிப் போட்டாங்க …. நான்  அவங்க கிட்டப் போறேன்னு கத்துறேன். .. உடனே அவங்க சேலைய வச்சு என்னைய போட்ல கட்டி வச்சாங்க….. நான் கத்தினது தான் தெரியும் … அதுக்கப்புறம் நான் பார்த்தது ஆஸ்பிடல்ல என் கையப் பிடிச்சு , அம்மா எப்பவும் உன் கூட தான் இருப்பேன் …நீ எப்பலாம் அம்மா உன் பக்கத்துல வேணும்னு நினைக்கிறியோ அப்பலாம் யார் மூலமாவது நான் வந்து நிப்பேன்னு .. சொல்லிட்டு அம்மா தூங்குறேன்னு சொன்னாங்க விக்கி ….. அப்புறம் எழவேயில்லை…..” என்றவள் அப்படியொரு அழுகை அழுதாள்.

 

விக்ரமிற்கு எப்படி அவளை சமாதானம் செவதென்றேத் தெரியவில்லை. அப்படியே குழந்தைப் போல் அணைத்துக் கொண்டான்.

 

ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை

நீ எனக்கோர் குழந்தை

அன்பே ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை

நீ எனக்கோர் குழந்தை

 

மடியில் நான்..

 

உனை தாங்கி படிப்பேனே..

 

புதிதாய் இனிதாய் கவிதை…

 

” என்கிட்ட சொல்லிருக்கலாமே டா… இங்க அழைச்சிட்டு வந்திருக்கவே மாட்டேனே…. ஐ ம் ..சாரி டா…சாரி மை டியர்…..” அணைத்துக் கொண்டே சொன்னவனது நெஞ்சிலிருந்துபட்டென்று  முகத்தை எடுத்தவள் ,

 

“அது எப்படி விக்கி …. எங்கம்மா எனக்காக தான் உன்னை அனுப்பியிருக்காங்க… நீ ஆசைப்படுறதை எப்படி வேண்டாம்னு என்னால சொல்ல முடியும் ….  உன் சந்தோஷம் தான் என் சந்தோஷமும் ….நீன்னா எனக்கு உயிர் விக்கி …. .” மனைவியின் அன்பில் … அவளது பதிலில் காதல் பெருக , அவளுக்கு மேலும் சில முத்தங்களை தந்தவன் , சூழ்நிலையை மாற்றும் பொருட்டு,

 

“உங்கம்மா போலவா நீ …எனக்கு அப்படித் தெரியலயே … அவங்க டோட்டலா வேற மாதிரி இருக்காங்க …  கன்னக்குழி தான் அவங்களப் போல உனக்கும் அரவிந்துக்கும் இருக்குது..”

 

“ஓ…”என்றவள்… விரக்தி புன்னகை ஒன்றை உதிர்த்து ,ஆதியின் அருகே முகத்தைக் கொண்டு வந்தவள் , அவன் விழிகளோடு தன் விழிகளைக் கலந்துக் கொண்டே ,

 

” என் கண்கள் அப்படித் தெரியலயா விக்கி… ” கேட்கும்போதே கண்கள் கலங்க ஆரம்பித்தன .

 

அவள் முகம் பற்றி அந்த கண்களில் முத்தமிட்டவன் ….

 

“கல்யாணம் ஆன நாள்லருந்து இந்தக் கண்ணு என்னைப் படுத்தறப்பாடு உனக்குத் தெரியலயா….. எங்கயோ பார்த்த ஃபீலிங் தந்தது … அப்புறம் தான் திலீபன் அரவிந்த் தங்கச்சின்றதால அப்படித் தோணுதுனு நினைச்சுக்கிட்டேன்… ” அவளை குளிருக்கு இதமாக பிடித்துக் கொண்டவன் ,

 

“அவங்க ஃபோட்டோ சரியா பார்க்கல … நல்லா பார்த்தா தெரியும்னு நினைக்கிறேன் …ஏன்டா அம்மா ஞாபகம் ரொம்ப வந்துருச்சா ….”

 

“இல்லை” என்று தலையசைத்தவள் , “அவங்க என்கிட்ட சொன்னது போல நான் அவங்கள நினைக்கும் போதெல்லாம் என் முன்னால வந்து நின்னாங்க … உன் ரூபத்துல … என் விக்கி ரூபத்துல… என் பக்கத்துலயே தான அப்ப அவங்க இருக்காங்க ” என்றவளது இதழோடு இதழ் சேர்த்துக் கொண்டான்.

 

இருவர் வாழ்வில் இணையும் போது

விளையும் சோகங்கள்

இனிய காற்று வீசும் போது

களையும் மேகங்கள்

 

இலை உதிர்ந்த பின்பு

 

மீண்டும் பூக்கும் வசந்த காலங்கள்

அன்று உனது கண்கள் எழுதி பார்க்கும்

இளமை கோலங்கள்

 

இனிமேல் சொர்கம்தான்

 

அது நம் பக்கம் தான்

இணைந்தே புது பாடல்

இசைப்போம் குயிலே…..

 

தூவும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!