Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thenmazhai Thoovuthadi

Thenmazhai Thoovuthadi 34 2

 

” என்ன சொல்லாத…. உன் மவளும் அவ அம்மக்காரிய உரிச்சு வச்சு பொறந்துருக்கா … உடுப்பும் அவள மாதிரியே போட்டுட்டு திரிஞ்சா … ஏதோ நான் சொல்லப் போய் இப்ப ஒழுங்கா உடுத்துறா… இப்படியே இருந்தா தான் நல்லதும் அதான் உன் தங்கச்சியும் மருமகளாக்க ஆசைப்படுறா … அவ போக்குல விட்டனு…வை… நாளைக்கு உன் பொண்டாட்டி உன்னைய இழுத்துட்டு ஓடுன மாதிரி… அவளும் நாளைக்கு எவனையாவது இழுத்துட்டுத்தான் போவா…. ” என சொல்ல … அனைவரும் செய்வதறியாது பார்க்க … அப்போதுதான் உள்ளே வந்த வரு, இந்த வாக்குவாதத்தைக் கேட்டு திடுக்கிட்டு நிற்கும் போதே , விஸ்வனாதன் ,

 

“ம்மா…ம்மா…. ஏன்  மா… இப்படி பேசி பேசி ஒருத்திய இழந்தது போதாதா …. உனக்குத் தெரியும் தானே மா … நம்மள விட எவ்வளவு பெரிய கோடீஸ்வரி அவ …. ஃபாரின்ல போய் படிச்சுட்டு வந்தா மா ….அவளுக்கு காசு முக்கியமில்ல … மனுஷங்களுக்கு உதவுறது தான் பெரிசுனு சொல்வா….மருத்துவ உலகத்துல ஒரு முக்கியமான ஆராய்ச்சில இருந்தா … வெளிநாடு போனா அந்தக் குளிருல அந்த ட்ரஸ்தானம்மா போட முடியும்… என்னைய விரும்பின ஒரு காரணத்துக்காக… நீ அவளப் பார்க்குறப்ப சொல்லிக் காட்டுறனு சேலை கட்ட ஆரம்பிச்சா …. ஆனா ஆனா … ” என வருந்தியவர் பின் ,



Advertisement

 

” இப்பவும் சொல்றேன் மா … அவ சாவுக்கு நீ தான் மா காரணம்… அந்த ஊட்டி குளிருல புடவைய கட்டி மக கீழே விழாம காப்பாத்தினவ… அரைகுறை உடையில நிக்கிறோமேனு முதல்ல என் பொண்ண தூக்கிட்டுப் போங்க … அப்புறம் என்னையக் கூட்டிட்டுப் போங்கனு தண்ணில கை கால் விறைச்சு போற வரை யாரையும் பக்கத்துல விடலயாம்… என் பொண்ணு கத்தி கத்தி அவளால இயல்பா பேச முடியாம போயிருச்சுத் தெரியுமா ….. ”

 

Advertisement

“… நான் இப்படி ஒரு நிலைல செத்தாக்கூட நீ தான் அத்தைக் கிட்ட திட்டு வாங்குவனு … சாகும் போதும் சொல்றா ….அவள நாங்க மட்டும் இழக்கலமா … அவ இருந்தா எத்தனை உயிரை காப்பாத்தியிருப்பா … இப்ப என் பொண்ண அதே மாதிரி பேசுறியேமா…” எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே தொப்பெனச் சத்தம் .… வரு தான் கீழே விழுந்திருந்தாள் …

Advertisement

 

அவள் மனம் முழுவதும் மிகுந்த வலி , “எங்கம்மாவும் என்னைப் போல ஒரு நிலைல இருந்துருக்காங்க … மற்றவங்க அப்படி பார்க்க கூடாதுனு சாக துணிஞ்சாங்களா….. ஐயோ நான்…. நான் ….” என நினைத்தவள் , தன் கைக்கொண்டு தன் மார்பை மூடிக் கொண்டவள்….”

 

Advertisement

“அப்படி அந்த வெறிப் பிடிச்சவங்க முன்னாடி ரொம்ப நேரம் நின்னுருக்கேன் ….” என நினைக்கவும்  தான் தொப்பெனக் கீழே விழுந்தாள்.

 

பேசிக் கொண்டிருந்த அத்தனைப் பேரும் அவளைச் சூழ ,மகளின் கழுத்திலும் கன்னத்திலும் இரத்தத்தை கண்ட அந்த தகப்பனுக்கு , தான் ஒரு மருத்துவர் என்பதையும் மறந்து கண்ணீர் வந்தது …. அரவிந்தனுக்கும் அதிர்ச்சியே ,

 

“தக்ஷன் …. போய்  நம்ம திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு வா … இனி நாம இங்க ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க வேண்டாம் … என்றவர் மகளைத் தூக்க ,கையோடு அந்த பையையும் இறுக்கிப் பிடித்திருந்தாள்.

 

மகளைக் காரில் ஏற்றியவர்…” சிவா இனி எனக்கும் இந்த வீட்டுக்கும் சம்பந்தம் இல்ல …. என் மகளாவது எனக்கு உயிரோட வேணும்….என்னைய மன்னிச்சிரு … முன்ன மாதிரியே இருந்துக்கலாம் … ” என கரகரத்த குரலில் கூறியவறின் கையைப் பிடித்த சிவனாதனுக்கும் என்ன சொல்வதென்றேத் தெரியவில்லை.

 

அரவிந்த் பெட்டிகளை எடுத்து வைத்ததோடு முதலுதவிப் பெட்டியையும் தந்தையிடம் தந்தவன் .. காரை வேகமாக ஓட்ட , பின்னால் மகளின் தலையை மடியில் கொடுத்த விஸ்வனாதனுக்கு கைகள் நடுங்கினாலும் முதலுதவி அளிக்கும் போது தான் , அது தற்போது அவள் விழுந்ததால் இல்லை என்பதை உணர்ந்தவர் ,

 

“அரவிந்த் திருநெல்வேலில சுதாகர் கிட்ட போ….” என்றதும் பயந்தவன் என்ன என தந்தையைப் பார்த்தாலும் அங்குச் செல்ல , சுதாகரின் மனைவி முதலுதவி அளித்து தன் சந்தேகத்தையும் கூறவும் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோவைக்கு அவர்களது மருத்துவமனை அழைத்து வரப்பட்டாள்.

 

அங்கு தான் அவரது நண்பரின் மனைவியும் ,வருவின் தாயின் உறவினருமான கோமல் என்ற பெண் மருத்துவர் சிகிச்சை அளிக்க , அவளுக்கு ஏற்கனவே அவளது அம்மா இறந்தபோது அதிர்ச்சி.. மற்றும் அதிகம் கத்தியதால் குரல் நாண்கள் ஒன்றுடன் ஒன்று அழுத்தி பேச்சிழந்தாள். அப்போது குழந்தை என்பதால் விரைவில் மீட்டு விட்டோம் .இப்போதும் கழுத்து   எதனாலோ இறுக்கப்பட்டும் பின் மண்டையில் அடிபட்டும் இருப்பதால் அதே அபாயம் இருப்பதாக தெரிவித்தார்.

 

ஆனால் குணப்படுத்தி விடலாம் என்றுக் கூறியவர் , மேலும் கூறியது தான் அவர்களை அதிர்ச்சியடைய வைத்தது….. அது அவள் உடலில் உள்ள காயங்கள் அவளை பலாத்காரம் செய்ய முற்பட்டிருக்கிறார்கள் …. ஆனால் தப்பித்து விட்டாள் என்றுக் கூறவும், விஸ்வனாதனும் அரவிந்தும் இடிந்துப் போய் விட்டார்கள்.

 

மேலும் முகம் கழுத்து அறுவை சிகிச்சையில் தழும்புகள் தென்பட்டாலும் ,முக மாற்று அறுவை சிகிச்சை செய்து விடலாம் எனவும் , தனக்குத் தெரிந்த உலகளாவிய மருத்துவ வல்லுநர்கள் அனைவரையும் வரவழைத்தார்.

 

மயக்கத்தில் கை மூக்கில் டியுப்கள் செருகப்பட்டிருந்தாலும் , தன்னைச் சுற்றி நடப்பதை உணர்ந்துக் கொண்டவளுக்கு… விக்ரமின் பேச்சு ஞாபகம் வந்து ,

 

“கடவுளே என்னைக் காப்பாற்றி விடு” என்றுக் கேட்டவள் , தன் முன் கண் கலங்கி நின்ற அண்ணனிடம் மொபைலை வாங்கியவள் .

 

“அண்ணா …. ப்ளீஸ் … எனக்குப் பேச்சு வரலனாலும் பரவாயில்லை ….என் உயிரை காப்பாற்றி விடு… .” என எழுதவும் அடக்கி வைத்திருந்த அழுகை பொங்க , தங்கையின் கையை பிடித்து முத்தமிட்டவன் ,

 

“ம்மா … நீ வந்துருவ… இந்த அண்ணன் உன்னைய மீட்டு வந்துருவேன் …..” என அழவும் அங்கிருந்த அனைவருக்குமே சங்கடமாகி விட்டது. இப்படி ஆயிரம் வேதனைகளையும் , வலிகளையும் சுமந்துக் கொண்டு இருந்த வரு போராடி ஒரு மாதத்திற்குப் பின் தான் சாதாரண நிலைக்கு வந்தாள்.

 

அன்று என்ன நடந்தது என்று கேட்க பதில் தராமல் சிரித்தவள் , “கீழ விழுந்துட்டேன்” என மழுப்ப , அதன் பின் , அவள் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு , மேற்கொண்டு அவளிடம் எதுவும் கேட்கவில்லை.

 

அதற்குள் மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் முடிந்திருக்க … பணம் கொடுத்தாவது ஏதேனும் ஒரு மருத்துவ கல்லூரியில் சேர வாய்ப்பிருந்தாலும் தான் பி.ஆர்க் .. அதுவும் கோவையிலயே சேர முடிவு செய்தாள் .தன் எண்ணங்களை அண்ணனுக்குப் பகிரமொபைலை வாங்கியவளுக்கு அதிர்ச்சி , அதில் ஏகப்பட்ட மெசேஜ்கள் திறக்கப்பட வே இல்லை .

 

திறந்திருந்த மெசேஜில் வித்யா அரவிந்துக்கு,

“ஏன் அத்தான் பேசவில்லை … வரு ஏன் கவுன்சிலிங் வரவில்லை … ” என இருக்க , இருந்த சில புகைப்படங்கள் அரவிந்த் வித்யா காதலைச் சொல்ல , மகிழ்ந்தவளுக்கு .., அரவிந்த் பாதி எழுதி அனுப்பாமல் சேமித்திருந்ததைப் பார்த்து அதிர்ந்துவிட்டாள்.

 

”  என் தங்கை… என் குழந்தை ….அவளுக்காக மட்டுமே இனி வாழ நினைக்கிறேன் மன்னித்து விடு.. “என ஆரம்பித்து தன் உணர்வுகளைச் சொல்லியிருக்க , அண்ணனின் தன் மீதான அன்பை உணர்ந்தவள் , காதலின் வலியையும் அனுபவித்தவளாதலால் .. அண்ணனும் அதை அனுபவிக்கக் கூடாது … தன் தோழியும் காதலில் தோற்கக் கூடாது … என எண்ணியவள் அதை அழித்து விட்டு , அரவிந்த் அனுப்பியது போல் ஒன்றை அனுப்பினாள்.

 

அன்றிலிருந்து அவர்களது காதல் தோற்காமல் இருக்கும் பொறுப்பை தான் எடுத்துக் கொண்டாள். நிச்சியம் அரவிந்துக்கு வரு இருக்கும் நிலையில் வேறு யோசனைகள்  தற்சமயம் இருக்காது என்பதை உணர்ந்தவள் , இப்போது கடவுளிடம் …

 

“என்னைக் காப்பாற்றி விடு…. என்னால் யார் வாழ்வும் வீணாகக் கூடாது “என்று தான் வேண்டிக் கொண்டாள்.

 

அவளுக்கு பேச்சு முழுமையாக வரவில்லை … ஆனால் முயற்சித்துக் கொண்டிருந்தாள். அவளின் இந்த நிலை யாருக்கும் தெரிவதில் விருப்பம் இல்லை என்பதால் , உறவுகள் அனைவரோடும் அதிகமான தொடர்புகள் இல்லாமல் போனது. அவர்களது எண்ணம் கனிக்கும் விஸ்வனாதனுக்கும் பிரச்சினை அதனால் தான் இந்த இடைவெளி என்பதே …

 

அரவிந்துக்கு வித்யாவை மறக்காமல் இருக்க சென்னையில் சிகிச்சை , படிப்பு சம்பந்தமாக என அவனை வித்யாவைக் கண்டு மகிழச் செய்து உயிர்ப்போடு வைத்திருந்தவள் , விக்ரம் எங்கு இருக்கிறான் , என்ன செய்கிறான் என்பதையும் அறிந்துக் கொண்டே இருந்தாள்.

 

கன்னக்குழி இருந்த கன்னம் தவிர ஒருபுறம் முழுவதும் முகமாற்றம் அடைந்து , உணவு என்பது வெகு நாட்களுக்கு அவளுக்கு திரவமாகத் தான் சென்றது. அது உடல் மெலிவைக் கொடுக்க , கூந்தலை நீளமாக வளர்த்தாள். விக்ரம் சொன்ன ஆடைகள் மீது என்ன தவறு என்ற எண்ணம் அதிகமாக இருக்க, தன் வசதிக்கேற்ப எல்லா ஆடைகளையும் அணிந்தவள் , அவனது அன்றைய பாராட்டை மனதில் வைத்து புடவைகளை விரும்பி அணிய ஆரம்பித்தாள்.

 

இப்படி விக்ரம் ….. விக்ரம் …. விக்ரம் …. தான் … அவன் நினைவுகளும் வார்த்தைகளும் நினைவில் வந்து அவளை வாழவைத்தது … அந்தக் காதல் அவளை உயிரோடு வைத்தது.

 

யாரிடமும் சைகையால் தான் பேசினாள். இல்லை மொபைலில் டைப் செய்வாள். காரணம் விக்ரமிடம் மட்டுமே முதலில் பேச வேண்டும் என்றொரு எண்ணம் மனதில் வேரூன்றி விட்டது.

 

நான்காம் வருடத்தில் அவர்களது கல்லூரியில் சைட் விசிட் எங்கு செல்ல என்றக் கேள்வி வர ,  மும்பையில் இருந்த விக்ரமின் கன்ஸ்டரக்ஷன் பெயரைச் சொல்லி … அங்கு செல்வதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றது.

 

சென்றாள் … காதலனைக் கண் குளிரக் கண்டாள் …

 

என்னென்ன

தடை வந்த போதும்

 

காதல் இறப்பதில்லை

மேகங்கள் பொழிகின்ற

வெள்ளம் வானத்தை

நனைப்பதில்லை காலம்

இன்னும் கூடவில்லை

மாலை இன்னும் வாடவில்லை

நம்பிக்கை இழக்கவில்லை…..

 

தூவும் ….

 

 

.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!