Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Un Sari Paathi

Un Sari Paathi 10

அத்தியாயம்       10

வெங்கட் கல்யாணி தம்பதியினர்… கன்யாவை இங்கு அழைத்து           வர நாள் பார்க்கும்போதே… சாந்தி முகூர்த்தத்திற்கும் நாள்        பார்த்துதான் அழைத்து வந்திருந்தனர்.

எனவே அதற்கான நாளாக இன்று அமையவும்தான்… இன்று மீண்டும்  எல்லா சடங்குகளும் செய்துவிடலாம் என்றே நினைத்தனர்.



Advertisement

ஆனால், காலையில் கன்யாவின் பிறந்து வீடு சென்ற நிலையம்,      மாலை இருவரும் காரிலிருந்து இறங்கி உள்ளே வந்த நிலையும்,     சேர்ந்து… எதையுமே யோசிக்கவிடவில்லை கல்யாணியை…

இன்னும் ஏதோ தடங்கலாக இருப்பதாக தோன்றியது. மேலும் இப்போது  இந்த ஏற்பாடை செய்து, சதா ஏதாவது சொல்லிவிட்டால் என்ன    செய்தவது என்பதுதான் அவர்களின் முக்கிய பயமே எனவே      அமைதியாக இருந்தவிட்டனர்…

எனவே ஏதும் சொல்லாமல் கன்யாவை மேலே அனுப்பி வைத்தார் கல்யாணி… கன்யாவும் அமைதியான மனநிலையில்தான் உள்ளே    வந்தாள்…

Advertisement

ஆனால், சதா… அவனிற்கு… ’என்ன இருந்தாலும் எனக்காக அவள்    எதையும் செய்யவில்லை என்பதிலேயே நின்றது. என்னை அவள்     “வாங்க” என்று கூட அழைக்கவில்லை…

Advertisement

ஒரு சிரிப்பு… ஒரு பார்வை என எதையும் அந்த முகத்தில்     காட்டவில்லை… மேலும் சொல்லாமல் எங்கோ சென்றுவிட்டாள்..’   இதேதான் அவன் மனதில் ஓடியது போல…

எனவே அதனின் தாக்கம்தான் இப்போதுவரை வார்த்தையால்         அவளை வதைத்து கொண்டிருக்க… இதோ இப்போதும் அப்படிதான்…     “இங்க இருப்பதாக இருந்தால்” என்றான்…

ஆனால்… கன்யாவிற்கு சற்று நேரம் என்ன சொல்கிறார் இவர் என உள்வாங்க வேண்டி இருந்தது… ஏனெனில் அவளின் மனதில் இப்போது    சதா பாஸ் மார்க் வாங்கி… வாசற்படியில் நின்றிருந்தான் போல…

Advertisement

ஒரு நிமிடம் கன்யா, அவனின் வார்த்தைகளை உள் வாங்கி…        அடிபட்ட பார்வை பார்த்தாள்தான். ஆனால், எல்லாம் அந்த ஷணம்   மட்டுமே… பின் வீர ஆவேசமாக கீழே அமர்ந்திருந்தவள் துள்ளி எழ…

அவளின் துள்ளலில்… அவளின் டி ஷர்ட் டாப்பிலிருந்து… துள்ளி     வெளியே வந்து விழுந்தது அவன் நினைவாய் போட்டிருந்த டாலர் செயின்(தாலி).

சதா இப்போது அவளின் டாலரையே வெறிக்க தொடங்க… கன்யா      “என்ன சொன்னீங்க… உங்கள மாதிரி என்னை நினைத்தீங்களா…      விட்டுட்டு போக… யாரு.. என்னன்னு.. கூட திரும்பி பார்க்காமா…  போனவருதானே நீங்க… உங்களுக்கு இத சொல்ல எந்த ரைட்ஸ்சும்   இல்ல…

இப்பவும் என்னை பேசி பேசியே… ஏதோ விரட்ட பார்க்குறீங்க…        என்ன… சரிதானே.. என்ன அப்படி பார்க்குறீங்க, உண்மைய       சொல்லுங்க… வேற கல்யாணம் ஏதாவது செய்துக்கிட்டீங்ன்களா…     அங்..க்க”  கூடவே “பளார்…” என சத்தம்.

சதா “தட்ஸ் யுவர் லிமிட்..” என்றான் உறுமலாக.. இவளுக்கு,      சித்தம்தான் கலங்கியது. எங்கும் இருள் ஒரு நிமிடம்… விழுந்து விடுவோமோ… எனும் போது கண்களை மூடி திறந்தாள்…

இன்னும் அவளின் பார்வை மசமசப்பாக தெரிய… கண்ணை       கசக்கினால், எதிரில் அப்படியே அவளை பார்த்தது பார்த்தபடி    நின்றிருந்தான் அவள் கண்ணாளன்.

கன்யா அவனை திரும்பியும் பாராமல்… அங்கிருந்த மொட்ட மாடிக்கு சென்றாள். இவனிடம் இனி சண்டை போட்டும் பிரயோசனம் இல்லை    என்ற எண்ணம் அவளிற்கு.

கன்னமெல்லாம் சிவந்து கண்கள் சிவந்து மூக்கின் நுனி வரை        சிவந்து… விக்கிய படியே கீழே படுத்து அழ தொடங்கினாள்… இனி        என் வாழ்க்கை, அவ்வளவுதானா..

ஏதேதோ கற்பனைகள்… எங்கெங்கோ சென்றது கன்யாவின் பெண்    உள்ளம்… ஐந்து வருட பிரிவை விட… அதெல்லாம் துன்பமே இல்லை,   எனும் விதமாக… இந்த ஒருநாளில் எல்லாம் செய்தான் சதா…     எல்லோரும் பிடித்தவர்களைதான் காயபடுத்துவார்கள்… அப்படிதான் வாழ்க்கையும் போல…

கன்யாவிற்கு திருமணம் குறித்து நிறைய ஆசைகள் உண்டுதான்… எல்லோருக்கும் இருக்குமே.. என் சித்தி சித்தப்பா… போல வாழ      வேண்டும், இல்லை என் அக்கா மாமா போல வாழ வேண்டும் என   எண்ணம் வருமே அப்படிதான் அவளும்…

மனம் ஒன்றி, கரைந்து.. விழியால் பேசி… பொதுவில் தன்னை          விட்டு தராமல், எங்கயும் உடன் வந்து இப்படியான கனவுகள்தான் அவளிற்கும்… அதுவும் இந்த வருடங்களில், தன் கணவன் என    உரிமையுடன் ஒரு உறவு உள்ள நிலையில் அவளின் கற்பனைக்கு    பங்கமே இருந்ததில்லை…

ஆனால் எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கினான் சதா…         கன்யாவும், தனக்குள்ளே ஏதேதோ சமாதனம் செய்து கொண்டு,       அவனை நிமிர்ந்து பார்க்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும்…      வார்த்தை எனும் சாட்டையால் வலிக்க வலிக்க… விளாசும்         கணவனை இனி எப்படி ஏற்பது… தலை வலிக்க தொடங்கியது..

அப்படியே கீழே சாய்ந்தாள் இனி அழுவதற்கு கூட தெம்பில்லை        எனும் விதமாக… போய்விடு கன்யா போய்விடு… இவன் வேண்டாம்   உனக்கு… போய்விடு என மனம் அல்லாட தொடங்கியது

ஆனால் புத்தி விழித்துகொண்டது…. இவனை விட்டு தூர செல்ல  வேண்டும்…. எங்கே போவது… படித்த ஒரு பெண்ணாக யோசித்தது…  ஆபிஸ்ல… லீவ் தரமாட்டாங்க… அம்மா வீட்டுக்கு போனா..    அவ்வளவுதான் தொரத்தியே விட்டுடுவாங்க… எங்க போறது…         இப்போது புத்தியும் சேர்ந்து போராட தொடங்கியது அவளுடன்.       இதுதான் இயல்போ…

*$*$*$*$*$*$*$*$**$*

சதா, சற்று நேரம் பிரம்மை பிடித்து போல்தான் நின்றான். தான்      அடித்தது எல்லாம் அவனின் நினைவிலேயே இல்லை… அப்போ      அவளின் கழுத்தோடு நான் கட்டியது இருக்கிறதா… எனக்காகதான்…    என்னை பிடித்துதான்… என் வரவை எதிர்பார்த்துதான்… இருந்தாளா…

ச்சு… ஐயோ.. எங்கே என் பொறுமையெல்லாம்.. எல்லாம் இவளிடம்  தோற்றே போகிறதே.. எத்தனை வருட நிதானம் என்னுடையது. எல்லாவற்றையும் விட்டு, என் குணம் மாற்றி, என் இயல்பை    தொலைத்து… என எண்ணியபடியே அந்த டேபிளின் மேல் தன்      கைகளை ஓங்கி ஓங்கி அடிக்க… “டோம்…டோம்” என்ற சத்தம்தான்     வந்தது.

இன்னும் தன்னையே நம்ப முடியவில்லை அவனால்… இதுதான் வேண்டுமென… தெளிந்த அறிவு என்னுடையது… பிடியாக நின்று,      படித்து, இப்படியான படிப்புக்கு மீண்டும் வெளிநாடு போய்… அங்கு     வேலை செய்து, பயிற்சி எடுத்து இப்படி நடத்திக் கொள்ள தெரிந்த    எனக்கு.. கையில் கிடைத்ததை… தொலைக்கும் பாக்கியம் போல…         என எண்ணம் ஓட…

சதா, தலையை உதறி… எல்லாவற்றையும் ஒதுக்க நினைத்தான்.      ஆனால் மீண்டும்… அவள் வந்து நின்றாள் அவனின் தீட்சண்யமான நெற்றியின் நடுவே…

தான் அடித்ததில்… சிவந்த அவளின் மூக்கும்… கண்ணும், அவனிடம்     ஏதோ முறையிட்டதாகவே தெரிய…

இந்த ஒரு நாளில் மட்டும் எத்தனை பெரிய பெரிய வார்த்தைகள்…    பேசாமல் இருந்திருந்தால் கூட… ஏதோ சமாளிக்கலாம்… ஐயோ! எப்படி     சரி செய்வது…. என எண்ணியபடி.. வெளியே வந்தான். கன்யா, இருந்த  இடத்திற்கு… கீழே சாய்ந்து படுத்து விசும்பிக் கொண்டிருந்தாள்…

அருகில் சென்றவன் “கன்யா“ என்ரெழுப்ப… சத்தம் இல்லை. மீண்டும்  அவனே “இப்போது எழுந்தக்க… இல்ல, தூக்கிட்டுத்தான் போவேன்”   என்றான், இப்போதும் வார்த்தையால் மிரட்டி. கொஞ்சம் உரிமை  வந்திருந்தது, இப்போது அவளின் கழுத்தில் உள்ள டாலர் செயினை பார்த்ததும்…

இன்னும் நிமிரவில்லை அவள், சதா “அப்போ நான் ரெடி…” என்றவன் அவளின் தோளை பற்ற…

கன்யா இன்னும் நிமிராமல் “கையெடுங்க..” என்றாள் திடமான குரலில்.

சதா அசரவில்லை… “என்ன இப்போ… அதான், எல்லாம் கத்தி   தீர்த்துட்டியே… வா உள்ளே” என்றான் கீழே அமர்ந்திருந்தவன்         கையை அவளிடமிருந்து எடுத்தபடியே…

கன்யா “நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க… எனக்கு தெரியும்    என்ன செய்யணும்னு” என்றாள்.

சதா “சரி உள்ளே வா.. தரையெல்லாம் சுடுது…” என இயல்பாய்   சொன்னான்… சற்று நேரத்திற்கு முன் இவன்தான் அவளை அடித்தான்     என சொன்னால் யாரேனும் நம்புவார்களா… என இருந்தது அவனின்   பேச்சு…

கன்யாவிற்குதான் மீண்டும் குழப்பம்… என்ன மேக் நீ என நினைத்திருந்தாள்…

கன்யா, நிலை தடுமாறித்தான் நின்றாள்… சதா அவளையே பார்த்தபடியே நின்றிருந்தான் உள்ளே செல்லவில்லை… அவளுக்கு ஏதோ உறுத்த,   நிமிர்ந்து பார்த்தாள் கன்யா…

அவளின் தலைமாட்டில் அவளையே பார்த்தபடி கைகட்டி       நின்றிருந்தான் சதா. கன்யா, அவனை நிமிர்ந்து பார்க்க… சதா “என்ன… அப்படியே எங்கையாவது போயிடலாம்ன்னு தோணுதா” என்றான்  கோவமாக..

விருட்டென எழுந்தாள் அவள்… அவளின் பதறிய பார்வையே அவள் நிலையை சொல்ல… சதா அமர்ந்திருந்தவளை “வா, உள்ள போய் பேசிக்கலாம்” என்றான்.

கன்யாவிற்கு உள்ளே செல்லவேண்டும் எனதான் எண்ணம்… அவளால்   கீழே அமரமுடியவில்லை…. அவன் சொன்னது போல, வெயிலின் தாக்கத்தால் தரையெல்லாம் சூடு… அவனை பாராமல் எழுந்து உள்ளே சென்றாள்.

அவளை பின் தொடர்ந்து… அவனும் செல்ல… இப்போது அவனிற்கு   வீடியோ கால் அழைப்பு வந்தது. எனவே அங்கு சென்றுவிட்டான்.

ஸ்க்ரீன் போட்டு இருந்ததால்…கன்யாவிற்கு “அப்பாடா” என்றானது.    கட்டிலில் படுத்துக் கொண்டாள்… அவனின் குரலே கேட்டுக்   கொண்டிருந்தது..

மென்மையாய்… யாரோ ஒருவருக்கான விளக்க உரை போல…            மிக செழிப்பான ஆங்கில புலமையில்… அவர்களின் மொழியில்..      அதனுடைய தன்மை குறையாமல்… உரையாடிக் கொண்டிருந்தான்.

சற்று முன்பு பேசிய பேச்சுக்கும், இதற்கும் சம்மந்தமில்லா… குரல், உடல்மொழி என முற்றிலும் வேறான மேனரிஸத்தில் சதா, அங்கு அமர்ந்திருந்தான்…

கேட்க கேட்க… கன்யாவிற்கு இதமாகவே இருந்தது… அவனின்           குரல் ஏதோ தாலாட்டு போல… அவளை சூழ தொடங்கியது.         மெதுவாக கண் அயர்ந்தாள்…

சதாவிற்கு அந்த போன்கால் கிட்ட தட்ட ஒருமணி நேரம் சென்றது… அவனிற்கும் பசி வயிற்றி கிள்ள தொடங்க… பிரேக் கேட்டே உண்ண வந்தான்…

ஸ்க்ரீன்னின் இந்த பக்கம் வந்து பார்க்க… லைட் எரிந்து       கொண்டிருக்க… குழந்தையென.. எந்த சிந்தனையும் இல்லாமல்         கன்யா, லேசாக வாயை திறந்து கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள்.

அவளின் இடது கன்னம்… தனது கை தடத்தை காட்ட.. கணவனாக        ஒரு கோவம் தன் மேலேயே வர, திரும்பிக் கொண்டான்… அதனை பார்க்காமல். ஏதோ இவன் பார்க்கவில்லை என்றால், அடித்தது இல்லையென்று ஆகுமா…

ஏதாவது மாய்ஸ்டர் கிரீம் இருக்கிறதா என தேடி பார்த்து எடுத்து     வந்தான் ஏதோ ஒன்றை… மெல்லமாக தூங்கும் அவளின் தூக்கம்   கெடாமல்… கன்னம் தொட்டு, போட.. அவளின் மென்மை அவன்     கைகளை விடவில்லை…

வாய் திருந்து தூங்குபவளை பார்த்து “ஏதாவது பிரீதிங் ப்ராப்ளம்     இருக்கும் செக் பண்ணனும் என நினைத்தபடியே… மெதுவாக..        அவளின் இதழ்களை இணைத்து வைத்தான்… சற்று நேரம்        அவளருகில் அமர்ந்து நெற்றி வருடினான்…

கன்யாவிற்கு அசந்த தூக்கம்தான்… இன்று ஒருநாளின் தாக்கம்        நிறைய அவளிடம். அதனாலோ அல்லாது இயல்பாய் பெண்களுக்கு தோன்றுமே… இது பாதுகாப்பான இடம்… என் இடம் என தோன்றுமே அப்படியொரு எண்ணமோ என்னவோ அசந்த உறக்கம்… மேலும்,     சதாவின் வருடலும், கதகதப்பும் சேர்ந்து கொள்ள… கன்யாவிற்கு       ஒன்றும் தெரியவில்லை.. உறக்கம்தான்.

சதா, சற்று நேரம் சென்றுதான் உணவு உண்ண சென்றான்… பிறகு   கால்ஸ்… என அதிகாலை மணி மூன்ரறை நெருங்கும்போதுதான்      உறங்க வந்தான்.

கன்யாவின் அருகிலேயே உறங்க தொடங்கினான். இருவருக்கும் அமைதியினால் தூக்கம் வந்ததா தெரியாது… ஆனால் மனதின்    அசதியினால் உறக்கம் வந்தது.

காலை எழுந்து கன்யா குளித்து முடித்து ஒரு காட்டன் சுடியில் கீழே வந்தாள்… கல்யாணி, வரும் அவளை பார்க்க… முகம் இறுகி கிடக்க… கன்னத்தில் நேற்றளவு இல்லை என்றாலும் லேசான சிவந்த     தடையங்கள்… அவரிடம் ஏதோ சொல்லியது போல..

கல்யாணி “வாம்மா… காபி தரவா” என்றார்.

கன்யா “ம்… நான் கலந்துக்குறேன் அத்த” என்றவள் அவளும் உள்ளே செல்ல… ஏதேதோ அவருக்கு.. அழுத்தம். தன்னால் ஒரு பெண்ணின்   வாழ்வு மாறி போனதோ, தவறு செய்துவிட்டேனோ என எண்ணம்     அழுந்த தொடங்கியது.

ஏதும் பேசாமல் காபியை கலக்க தொடங்கினார். கன்யா “த்த… என்ன    டிபன்” என்றபடி பிரெஜ்சை திறக்க….. கல்யாணி சுதாரித்து “என்னமா    செய்ய உனக்கு. லஞ்ச், ஷன்முகத்துக்கும் உனக்கும்தான்… என்ன    வேணும்” என்றார் வாஞ்சையாய்…

இந்த பரிவு கன்யாவிற்கு புரிகிறதுதான்… ஆனால் அதுவும் ஒரு கோவத்தைதான் தந்தது அவளிற்கு… எதற்கு இந்த பரிவு, அவர்களின்    மகன் செய்யும் காரியத்திற்கு.. இவர்கள் செய்யும் பரிகாரமா என     எண்ணம் எழுந்தாலும்… ஏனோ தன் அத்தையை தவறாக எண்ண, முடியவில்லை. எனவே “ச்சு… ஏதாவது அத்த…” என்றாள் சலிப்பாக,       அவர் கையிலிருந்த காபியை வாங்கிக் கொண்டாள்.

ஷண்முகம் வந்தான் அப்போதுதான்… “ஹாய் அண்ணி… குட்       மோர்னிங்…” என்றான் பேப்பரை கையில் வைத்தபடி. தானும் ஒரு     பேப்பரை எடுத்தபடி “குட் மோர்னிங் சம்மு..” என்றாள்.

பின் யசோதா… வெங்கட் என ஒருவர் பின் ஒருவராக வர… அடுத்த அரைமணி நேரம் ஏதோ காய் நறுக்கி, மற்றவர்களுடனும் பேசியபடி     நகர…

கன்யா “அத்த நான் ரெடியாகி வரேன்.” என சொல்லி மேலே சென்றாள்…

இப்போது கட்டிலில் சதா இல்லை எழுந்து விட்டிருந்தான்…         அங்கிருந்த சின்ன… நிழலில் யோகா செய்து கொண்டிருந்தான்…       இவளும் அவனை பார்த்து திரும்பிக் கொண்டு… கிளம்ப       தொடங்கினாள்.

அவன் முடித்து வருவதற்குள்… இவள் கிளம்பி கீழே சென்றுவிட்டாள்.. பார்த்தால், பேசுவான்.. இல்லை இல்லை சண்டை போடுவான்…       நாமளும் பதிலுக்கு பேசுவோம்… என எண்ணி  கீழே சென்றாள்.

டேபிளில்… கன்யா, ஷண்முகம், வெங்கட் என எல்லோரும்    அமர்ந்திருக்க… இட்லியும் பூரியும்… ஓடிக் கொண்டிருந்தது.

இப்போது சதா இறங்கி வந்தான். சண்முகம் “அப்பா, சீக்கிரம், வரான்   வரான்… டாக்டர்… வரான்.. இதையெல்லாம் பார்த்தா… ரெண்டுநாளைக்கு உங்கள சாப்பிட விடமாட்டான்… இட்லி மட்டும் வைங்கம்மா…      அப்பாக்கு” என்றான் சின்ன குரலில் தன் அண்ணனை பார்த்தபடி…

இதில் கன்யாவிற்கு சிரிப்பு வந்தது… யசோதா ஏதும் சொல்லாமல்     உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள் சிரித்தபடியே செய்தாள்… சதா      “ம்மா… கிரீன் டீ” என்றான் அங்கே அமர்ந்தபடி…

சண்முகம் “என்ன ண்ணா… இன்னிக்கு அண்ணிய டிராப் செய்ய   போகலையா” என்றான்.

சதா “இல்லடா… நான் ஆப்டர்நூன்… டெல்லி போறேன்… பேக்கிங்      வொர்க் இருக்கு… அத்தோட, உங்க அண்ணி செம்ம.. பாஸ்ட், அவளே போய்டுவா… நான் வந்திட்டு கிளம்ப… டைம் எடுக்கும்” என்றான்.

இந்த செய்தி அனைவருக்கும் புதிது. எனவே எல்லோரும் கன்யாவை பார்க்க… அவள் என்ன செய்வாள்… தலையை நிமிராமல் உண்டு கொண்டிருந்தாள்.

சதா, டீயுடன் மேலே சென்றுவிட்டான். யாரையும் பார்க்கவில்லை. கன்யாவும் உண்டு முடித்து கிளம்ப… போன் வந்தது… யாரென          பார்க்க, சதாதான்… ஏனோ எடுக்க தோன்றவில்லை அவளிற்கு.     திரும்பவும் வாட்ஸ்அப்பில் மெசேஜ் வந்தது… “மேலே வா” என.

கன்யா “போடா, போடா… நீ கூப்பிட்ட உடனே வரணும்மா…”      என்றெண்ணி எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு            வண்டியெடுத்து கிளம்பிவிட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!