அப்படியே நான்கு நாட்கள் சென்றது.. பொருத்து பொருத்து பார்த்த கார்த்தி, அவளின் பாங்கிற்கே வந்தான் நின்றான். அதற்குமேல் சண்டை போட்டு பேசாமல் இருக்க தெம்பில்லை கன்யாவிடம்…
கார்த்தி “என்ன பாப்பா… “ என ஆரம்பிக்க கூட இல்லை… கன்யா “சாரி ண்ணா” என அவன் கை பிடித்துக் கொண்டாள்.
கார்த்தி ஏதும் பேசாமல் “வா வீட்டுக்கு போலாம்” என பெர்மிஷன் போட்டு, அழைத்து சென்றான் தன் தங்கையை.
ஆனால், சென்ற அவளால்தான் அங்கு ஓட்ட முடியவில்லை… இந்த ஒரு வாரத்தில், தன் வீடே அன்னியமாகியது. மைதிலி எப்போதும்போல் அவள் மேல் கோவமாகவே இருந்தார்…
கார்த்தியிடம் “ஏண்டா… முதல் முதலில் இவ வீட்டுக்கு வரும் போது, மாப்பிளையோட சேர்ந்துதான் வரணும் தெரியாதா அவளுக்கு” என்றார்.
கன்யா “ஏன் இத்தனை நாள் நான் தனியாதானே வந்தேன்…” என எப்போதும் போல் சட்டம் பேச, மைதிலி எதுவும் பேசாமல் உள்ளே சென்றுவிட்டார்.
ப்பா… இதென்ன… நான் அவ்வளவு பெரிய தப்பா செய்துவிட்டேன்… என முதல் முறை ஒரு தாக்கம் வந்தது கன்யாவினுள், ஏதும் பேசாமால் அமர்ந்து கொண்டாள்.
கார்த்திதான் “ம்மா, நான்தான் சும்மா கூட்டி வந்தேன், அவர்தான் ஊருக்கு போயிருக்காரில்ல அதான்” என்றான்.. சற்று கத்தி, சொன்னான் ரூமினுள் இருந்த தன் அன்னைக்கு கேட்கும் வண்ணம்.
அவளும் சென்று, வெளியே வர… அதுவரை கீர்த்தி வாவென சொல்லவில்லை… இப்போதுதான் “வாங்க அண்ணி” என்றாள். என்ன பாவம் முகத்தில், புரியவில்லை கன்யாவிற்கு.
தனது பெர்ப்யூம் செய்யும் பொருட்கள் எல்லாம் தனியே வைத்தி ருந்தனர். பார்க்கவே என்னவோ போல் இருந்தது. கார்த்தி வந்து அமர்ந்தான்… “என்னடா கனி… சதா எப்போ வருவாரு” என்றான்.
“பத்து நாள் ஆகும்னு சொன்னர் ண்ணா” என்றாள். கீர்த்தி பிரட் ப்ரை கொண்டு வந்து வைத்தாள்…
இப்போது கீர்த்தி தன் கணவனின் முகம் பார்த்தே நடந்தாள். மீண்டும் ஏதும் பேசவில்லை அவள். ஏதோ போல் ஆனது கன்யாவிற்கு, இந்த நிலையில் தன் அண்ணனுடனும் முன் போல பேச மனம் வரவில்லை… விலகிய நிலை, தங்கையான கன்யாவிற்கு.
கார்த்தி ஏதோ கேட்டுக் கொண்டே இருந்தான் “நல்லா இருக்கியாடா” என்றான் சின்ன குரலில்… முதலில் காதில் வாங்காதது போல் இருந்து விட்டாள்… சிறிது நேரம் கழித்தும் அதே கேள்வி வேறு வார்த்தைகளால்… தன் கைகளை பார்த்தபடி “ம்..” என்றாள்.
கார்த்திக்கு அவளது பதிலில் திருப்தியில்லை போல, யாரும் ஹாலில் இல்லை கார்த்தி “என்னடா” என்றான் அமைதியான குரலில். கன்யாவிற்கு இதற்குமேல் இங்கிருந்தால் எதாவாது உளறி விடுவோம் என எண்ணம் வர, நீண்ட நேரம் நிற்காமல் தனது பெர்ப்யூம் பாக்ஸ் எடுத்து கிளம்பிவிட்டாள்.
அடுத்து வந்த நான்கு நாளும் யோசனைதான் கன்யாவிற்கு, ஏன்… எங்கே தவறினேன்… என ஒரே யோசனைதான். ஆனால் இந்த நான்கு நாட்களில் அவளிற்கு எதோ ஒன்று புரிந்தே விட்டது.
ஆனால் அது புரிந்தது முதல், தன்னை தனியாக உணர தொடங்கினாள்… அமைதியானாள்… யாரிடமும் முன்போல் பேச்சில்லை, அதற்காக பேசாமலும் இல்லை… தேவையான அளவிற்கு பேச்சு சென்றதுதான்.
சதாவும், இந்த ஒருவாரத்தில் அன்று சண்டை போட்டதுடன் சரி, அதன்பிறகு அவனின் வேளையில் இவளை மறந்திருந்தான், அவ்வளவே.
ஆனால், இரண்டு நாளைக்கு ஒருதரம் அழைத்தான்… கன்யாவும் எடுத்து பேசினாள், முகத்தை தூக்கவோ.. என்னை புரிந்து கொள்ளவில்லை என, சண்டை போடவோ இல்லை… அமைதியானாள்.
எண்ணி நான்கே வார்த்தை, அத்தோடு வைத்துவிட்டாள், சதா “என்னாச்சு… ஏதாவது ஹெல்த் இஸ்சுவா..” என்றான் அவளிடம்.
“என்ன தீடீர் அக்கரை..” என கேட்பாள் என எதிர்பார்க்க… “அதல்லாம் ஒண்ணுமில்ல” என்றபடி போனை வைத்தாள்.
ஆனால் இந்த அமைதிதான் சதாவை உறுத்த தொடங்கியது… “நான் ஏதும் சொல்லிவிட்டேனோ… வீட்டில் யாரவது ஏதாவது சொல்லிட்டாங்களோ, இல்லை அவளிற்கு வீட்டு நினைவு வந்துவிட்டதோ” என எண்ணியபடியே மண்டை உடையாத குறையாக வந்து சேர்ந்தான் தன் வீட்டிற்கு..
முன்மாலை ஐந்து மணிக்கெல்லாம் வந்துவிட்டான் சதா… ஆராய்ந்த படியேதான் வீட்டினுள் நுழைந்தான்… அவ்வளவு கன்யாவின் தாக்கம் அவனிடமிருந்தது.
அவனது இயல்பு இது இல்லைதான், எவ்வழி புகுந்தாள்… என அவனிற்கு இன்னும் புரியவில்லைதான். இப்படி ஒருவரை தேடி… நிற்பேன் என அவன் நினைத்ததும் இல்லைதான். வீட்டை கண்களால் அலச தொடங்கினான், அவள் வேலைக்குதான் சென்றிருப்பாள் என தெரிந்தும்.
அவனின் ஆராய்ச்சியில் கல்யாணி “வாடா, என்ன பாக்கற” என்றார்.
ஒன்றுமில்லை எனும் விதமாக தலையை அசைத்தான்… பின் கல்யாணியின் உபசரிப்பில் லேசான டிபன் முடித்து அமர்ந்திருந்தான். பின் தானே “ம்மா… கன்யா எப்போ கிளம்புவா” என்றான் சிந்தனையுடன், தன் அயர்வையும் எண்ணாமல்…
ப்பா, கல்யாணிக்கு நிரம்ப நிம்மதி “எப்போதும் ஆறரைக்கு வந்துடுவாப்பா… நீ போறியா “ என்றார்.
சதா “ம்… ஆமாம் “ என்றான்.
“நீ போன் செய்து சொல்லிட்டு போ, இல்லனா அவ கிளம்பிடுவா” என்றார்.
சதாவிற்கு யோசனை போன் பண்ணா எடுப்பாளோ மாட்டாளோ என அப்படியே அழைத்தும் விட்டான் அவளிற்கு… “ஹலோ .. ம்..” என்றாள் மெல்லிய குரலில்.
சதாவிற்கு எப்படியோ இருந்தது. என்ன மென்மை என எண்ணியபடியே இருக்க… மீண்டும் சலிக்காமல் “சொல்லுங்க” என்றாலே பார்க்கலாம்… சதா அங்க அவுட்…
“நான் வரேன் பிக்கப் பண்ண… வெயிட் பண்ணு” என்றான் இவனும் சின்ன குரலில் சந்தேகமாக, அவள் எங்கே ஏதாவது சொல்லிவிடுவாளோ என… படபடவென இருதையம் அடிக்க தயங்கி தயங்கியே சொல்லி, காத்திருந்தான்…
“சரி சொல்லிடறேன்… பைய்..” என்றான், அதன்பின் சத்தமில்லை வைத்துவிட்டான். இப்போதும் யோசனைதான் ஏன் அமைதி என. ஆனால், ஏதோ ஒரு வாரம் முன்பிருந்த கசப்பு.. ஒருமாதிரி ஒட்டாத நிலை இப்போது இல்லை என உணர்ந்தான்.
சற்று நேரம் உறங்குவதாய் பேர் செய்து, அவளின் நினைவில் தொலைந்து… கிளம்பினான், அவளை அழைத்து வர. சரியாக ஏழு மணிகெல்லாம் அங்கு சென்றுவிட்டான். இவனிற்காவே காத்திருந்தான் கன்யாவுடன் யெஸ்வந்த்வும்.
இவனின் காரை பார்த்துவிட்டு அருகில் வந்தனர் இருவரும்… கன்யா “யெஸ்வந்த்… என் சீனியர்… என் பிரெண்ட்” என்றாள் நண்பனை பார்த்து சிரித்தபடி…
சதாவிற்கு தன் மனையாளை பார்வையால் அளந்துவிட்டுதான் திரும்பினான் யெஸ்வந்திடம்…
சதா, இயல்பாய் பேச தொடங்கினான்… எங்க இருக்கீங்க, என்ன ஸ்டேட் என எல்லாம் அந்த பத்து நிமிட சந்திப்பில் கேட்டுக் கொண்டான். கன்யா, வேடிக்கை மட்டும் பார்த்தபடி நின்றிருந்தாள்.
இருவரும் சொல்லிக் கொண்டு கிளம்பினர்… வழி முழுவதும் ஏதும் பேசவில்லை… எதோ தயக்கம் இருவரிடமும் வந்து அமர்ந்து கொண்டது. பயணம் தூரமாய் தெரிந்தது…
இருவரும் வீடு வந்ததும் எப்போதும் போல் கன்யா தன் அத்தையின் பின்னால் சென்றாள்… இன்று ஹாலிலேயே அமர்ந்து கொண்டான் சதா… இரவு பன்னீர் மசாலாவுடன் சப்பாத்தி… வெங்கட் ஆவலாக காத்திருக்க… கல்யாணி, சதாவை பார்த்தபடியே உண்ண அழைத்தார் அனைவரையும்…
அமர்ந்த உடன் சதா கேட்ட முதல் கேள்வி “அப்பாக்கு என்ன பண்ணீங்க” என்றுதான். கன்யா, புதிதாக அவனை பார்க்க… சம்மு சத்தமில்லாமல் சிரித்தான்…
வெங்கட், உணவு உடற்பயிற்சி விஷயத்தில் சற்று அலட்சியம்… கூடவே கல்யாணிக்கும்தான்… இவன் வெளிநாடு சென்ற புதிதில்… அதாவது இவர்களின் திருமணம் நடந்து, இவன் அங்கு சென்று பேச்சிய பேச்சில் அவருக்கு மையில்ட் அட்டாக் வந்திருந்தது… அவன் ஊரில் இருந்தவரை எப்படி என தெரியாது. ஆனால் இவன் வந்த நாள் முதல் வீட்டில் கெடுபிடி அதிகம்…
கல்யாணி “சப்பாத்திதானே டா… அதுவும் ரெண்டே ரெண்டு “ என சமாதானம் செய்ய… உண்ணாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.
பின் ஒன்னும் சொல்லாமல் கல்யாணி தன் கணவருக்கும் மட்டும் தோசை அதுவும் எண்ணையில்லாமல் தோசை… மதியம் வைத்த சாப்பாரை தந்தார்…
கல்யாணி “அதான் அவருக்கு வேற கொடுத்தாச்சில்ல.. நீ சாப்பிடு” என்றார் கோவமாக.
கன்யா, எப்போதும் எல்லோருடனும் உண்ணுவாள்தான், ஆனால் இன்று பரிமாறியபடியே நின்றாள். உள்ளுக்குள் “இவரோட அப்பாதானே இவர், கொஞ்சம் பொறுமையா சொல்லலாமில்ல” என்தான் தோன்றியது. ஆனால், வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தாள்.
வெங்கட் அந்த இரண்டு தோசையை கடனே என உண்டு எழுந்து சென்றார். அவர் வெளியே போகவும் தன் அம்மாவை இன்னும் பேசினான் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க… அவர் உடம்பு மேல அக்கறை இல்லையா… கால் வீங்கி நடக்க முடியாமாதான் அவரை பார்க்கனுமா என ஒருபாடு சத்தம் போட்டான்.
யசோ, கல்யாணி, கன்யா எல்லோருக்கும் பயமே, கூடவே இவன் எப்போதடா உண்டு கிளம்புவான் என்றானது. ஒருவழியாக சதா அளவாக உண்டு கிளம்ப, சம்மு அடக்கப்பட்ட சிரிப்புடன் பெண்கள் மூவரையும் பார்க்க… கன்யாதான் முதலில் சிரிக்க தொடங்கினாள்..
சம்மு “அண்ணி உங்க புருஷன் செம்ம ஷர்ப்ப், பார்த்து சிரிங்க… வந்திடுவான்…” என்றான். அவன் வாக்கு பலித்தது.
சிரிப்பு சத்தம் கேட்டு “என்ன “ என்றான் சதா… கன்யாவிற்கு ஏனோ வார்த்தை திக்க “ஒண்ணுமில்ல” என்றாள். சம்மு அவளை பார்த்து இன்னும் வாய்க்குள் சிரிக்க.. கன்யாவிற்கு ஐயோ என்றானது.
சதா “ம்…” என்றவன் இப்போதுதான் மேலே சென்றான். அவன் செல்லும் வரை சத்தமில்லை அங்கு. அதன் பிறகு… யசோ, “ப்பா… போயிட்டான் டா” என்றார் விளையாட்டாய்.
சம்மு போயி தன் தந்தையை சமாதானபடுத்த சென்றான். பெண்கள் உண்ண தொடங்கினர் இப்படியாக நேரம் சென்றது.
வெங்கட் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை, தன் இரண்டாவது மகனிடம் பெருமையே பேசினார் “பாத்தியாட உங்க அண்ணன… என்னையே விரட்ரான்” எனதான்.
சம்மு “சரி சரி போய் படுங்க… அதுக்கும் சத்தம்போட போறான்” என்றான் விரட்டும் குரலில்.
வெங்கட் “நேரம்… படுத்துது” என்றபடி உள்ளே சென்றார்.
சதா மேலே சென்றவன், அங்கிருந்த மொட்ட மாடியில் நடக்க தொடங்கினான். அவனுள் இப்போது கன்யா மட்டுமே, தவிர்க்க முடியாதவளாக..
கன்யா மேலே வர… தனது துணிகளை அடுக்க தொடங்கினாள்… சலவைக்கு, தனியாக எடுத்து வைக்க தொடங்கினாள். இப்படியே ஒரு அரை மணி நேரம் செல்ல சதா, கன்யாவையே பார்த்திருந்தான்.
அவளிற்கு, என்னாச்சு என்றுதான் அவனிற்கு எண்ணம்.. மனம் இயல்பாய் அவன், சம்மதம் இல்லாமல் முதல் முறை பெயர் சொல்லி “கன்யா“ என்றழைத்தான்.
சத்தம் வந்த வழி கன்யா பார்க்க… அங்கு பால்கனி வாசலில் நின்றிருந்தான். கன்யாவின் மனம் “பேரெல்லாம் தெரியுமா” எனதான் நினைத்தது. வெளியே சொல்லவில்லை.
சதா கையை கட்டிக் கொண்டு அவளையே பார்த்திருக்க.. “என்ன..” என்றாள் சதா “என் பேரு சதாசிவம்… உனக்கு எப்படி பிடிக்குதோ அப்படி கூப்பிடு… எப்படி யாரோ மாதிரி… என்ன, சொல்லுங்க அப்படின்னு சொல்லாத” என்றான் தன்மையான குரலில்
கன்யாவிற்கு வாய் வரை வந்துவிட்டது… “இவ்வளோ நாள் அப்படி தானே, நீங்க கூப்பிட்டீங்க” என. ஆனால், வாய் திறக்கவில்லை. அவளின் மனம் ஸ்திர பட்டுவிட்டது.
சதா “ஏன் பதில் கூட சொல்லமாட்டியா “ என்றான்.
கன்யா “ம்.. சரி..” என்றாள்.
சதா “இங்க வா“ என்றான்.
“சொல்லுங்க கேட்க்குது” என்றாள் அவனை பார்க்காமல் கைகளை பார்த்தபடி.
“என்னாச்சு, யாராவது.. ஏதாவது சொன்னாங்களா ஏன் டல்லா இருக்க” என்றான்.
“ஐயோ அப்படியெல்லாம் இல்ல… நா…நான் எப்போதும் போலதான் இருக்கேன்” என்றாள்.
“இல்லையே… ஏதோ டிபரென்ட் தெரியுதே” என்றான்.
அதற்குமேல் கன்யாவிற்கு பொறுமையில்லை “நான் எப்படி இருந்தா… உங்களுக்கு என்ன” என்றாள் வெடுக்கென
கோவம் வரவில்லை சதாவிற்கு “ஹ.. ஹ… பாக் டு போர்ம்” என்றான்
கன்யா, அவனை பார்ப்பதை விடுத்து திரும்பி நின்று கொண்டாள்… சதா இன்னும் சிரித்தான் “பெப்பி…” என்றழைத்தான் இப்போது.
கன்யா “ஹலோ, என்ன பேர் இது… சகிக்கல” என்றாள்.
“அப்போ கண்டிப்பா இப்படிதான் கூப்பிடுவேன்..” என்றான். கூடவே “என்னை பேர் சொல்லி கூப்பிடு, இப்படி ஹலோ… என்ன, என்று பேசாத” என்றான் எரிச்சலாய்.
தொடர்ந்து “நீ எப்போதும் இப்படிதானா, யாரையும் மதிக்கவே மாட்டியா… எப்படி வீட்டில் வைத்து சமாளிச்சாங்க” என்றான் ரசனையாக.. இப்போது அவளிடம் வார்த்தையாடுவதும் பிடித்தது போல…
கன்யா அவனை முடிந்த மட்டும் முறைத்தாள்… “ஐயோ பயமா இருக்கே” என்றான் அவளின் கணவன்.
இப்போது கன்யா மீண்டும் தன் துணிகளை எடுக்க… சதா “அப்படியே என் க்ளோத்தையும் வாஷ் செய்ய எடுத்து போ..” என்றான்.
விடமாட்டான் போல் என்றபடி அவனின் ட்ரவல் பாக்கை எடுக்க… எல்லாம் சலவை செய்ததாகாகவே இருந்தது. ஏதும் அழுக்கோ, கசங்கலோ இல்லை, சதாவை திரும்பி பார்க்க அதற்குள்… உள்ளே வந்திருந்தான் சதா.
தனது லாப்டாப்பை துடைத்தபடி “என்ன பார்க்குற” என்றான்.
கன்யா “நான் அமைதியா தானே இருக்கேன்… ஏன் என்னை வம்புக்கு இழுக்கிறீங்க” என்றபடி கீழே செல்ல கதவை திறக்க..
“எங்க போற” என்றான்.
“கீழ மெஷின் போட்டு வரேன்… நாளைக்கு கொஞ்சம் ப்ரீயா இருப்பேன்… இப்பவே போட்டுட்டா… நாளைக்கு லேட்டா எழுந்துக்கலாம்.. “ என்றாள் சலிப்பான குரலில்.
சதா “சரி இங்கயே வை, நாளைக்கு மெஷின் வாங்கி நம்ம ரூம்மில் வைக்கிறேன்… எதுக்கு நைட் போய், வெயிட் பண்ற” என்றான்.
அவன் முடிக்க கூட இல்லை, கன்யா ”ஹையோ… வேண்டாம் வேண்டாம்… நான் எப்போதும் வீக்லி ஒன்ஸ்தானே வாஷ் செய்வேன், அதுக்கெதுக்கு தனியா மெஷின்… “ என்றாள் படபடப்பாக
கன்யா எல்லாவற்றையும் வைத்துவிட்டு கட்டிலில் அமர்ந்து கொண்டாள். சதா “என்ன.. என்ன.. யோசனை டைம்ம வேஸ்ட் பண்ணாத தூங்கு” என்றான் சிரித்தபடி.
“ம்..” என்றபடி உறங்க சென்றாள்… அவன் ஏதோ புக், லாப் என வேலை செய்வது தெரிந்தது… ஏதோ மூச்சு முட்டிய நிலை மாறி… இயல்பாய் மூச்சு விட முடிந்தது கன்யாவால்… உறக்கமும் சத்தமில்லாமல் வந்தது.