Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Un Sari Paathi

Un Sari Paathi 5

அத்தியாயம்       5

 

கண்ணில் நீர் வழிய, அவனின் அணைப்பில் நின்றிருந்தார் கல்யாணி… எத்தனை வருடங்கள்… பெரிதாக ஒட்டுதல் இல்லைதான்… சதாக்கு குடும்பத்தாருடன்…

அதனாலேயே, திரும்பி வருவானோ, மாட்டானோ எனதான்        திருமணம் செய்து பிள்ளையை அனுப்பினர்… வெளிநாட்டிற்கு.        அதுவும் தப்பாகி போனது. எங்கே என் மகன்.. கண் நிறைந்து         வாழவே மாட்டானோ… வரவே மாட்டானோ என்ற நினைப்பில்        இருந்த தாய்க்கு  அவனின் வருகையும் அணைப்பும்பேரானந்தமே…



Advertisement

வந்துவிட்டான்… அதுவே போதுமானதாக இருந்தது கல்யாணிக்கு.. அணைத்திருந்த அவனை தள்ளி நிறுத்தினார். அருகில் வெங்கட்        நிற்க… “அப்பா “ என அவரையும் நலம் விசாரித்தான் மகன்.

பெரிதாக பாசம் காட்டாவோ, உணர்ச்சி வசப்படவோ இல்லை அவன் இத்தனை நாள் பிரிந்திருந்த வருத்தமோ, ஏக்கமோ சதா முகத்தில்  இல்லை… இயல்பாய் வார வாராம் ஹாஸ்டலில் இருந்து வந்து     செல்லும் பிள்ளையின், விசாரிப்பாகதான் இருந்தது.

அதை வெங்கட் கவனித்தார். ஒன்றும் காட்டிக் கொள்ளவில்லை..       அவன் அப்படிதான் அந்த நொடியில் தெளிந்து கொண்டவரின்          முகம், அடுத்த நிகழ்வுகளை நினைத்து வருந்தியது போல..

Advertisement

பிறகு உள்ளே சென்று அமர்ந்தனர்… அனைவரும். மைதிலிதான்        குடிக்க கொண்டு வந்தார்.

Advertisement

இப்போது, இவர் யாரென சதாவிற்கு தெரியவில்லை, ஒரு சங்கடமாக   சூழல்.. மற்றவர்களுக்கு. சதா, கையில் வாங்கியபடி “தேங்க்ஸ்”      என்றான். அவனிற்கு ஒன்றும் தெரியாததால்.

அனைவரும் பார்த்திருந்தனர்… வெங்கட், இப்போது சுதாரித்தார்.         எனவே, தன் மனைவியை தனியே அழைத்து சென்றார்… “இப்போ      எதுவும் பேச வேண்டாம்… சொந்தமெல்லாம் இங்கதான் இருக்கு…            நீ அமைதியா இரு.. கன்யாவ இப்போ இழுக்காத…” என்றார்.

கல்யாணி “ஏங்க…” என்றார். ஆசையெல்லாம் வடிந்த குரலில்.

Advertisement

வெங்கட் “இப்போ… சூழ்நிலை சரியில்ல…. சென்னை போய்    பார்த்துக்கலாம்” என்றார் சற்று கடுமையாக…

கல்யாணி அமைதியாக நிற்க “போ… சம்மந்தியையும் கார்த்தி     தம்பியையும் வர சொல்லு” என்றார்.

முகமே வாடி போனது அவருக்கு, எத்தனை ஆசையாக தன்       மருமகளை அழைத்தார், இப்போது தன் கணவர் இப்படி சொல்லவும்,   ஒன்றும் செய்ய முடியாமல், சென்றார்.

கணவனனும் மனைவியும் தோட்டத்தில் அட்டனாஸ் போட்ட       இடத்தில்     பேசிக் கொண்டிருந்ததால் உள்ளே நடந்தது     தெரியவில்லை.

அது ஒரு தோட்டத்து ஒட்டு வீடு… சிறிய அளவிலானது, ஆனால்    தோட்டம் மட்டும் பெரியதாக இருந்தது. அதில் வீடு நடுவில்   அமைந்திருக்க, சுற்றிலும் வாழை மரம்… அதனை அடுத்து காடு      போன்று கொய்யா மரம், இது கார்த்தி வீட்டுக்கு சொந்தமானது.

அவர்கள் பங்காளி முறையில் ஒருவர் பார்த்துக் கொள்ளவதால்,      சிறப்பாக இருந்தது அந்த இடம். எனவே அங்கு இடது புறமாக         இருந்த வெற்று பகுதியில்… அட்டனாஸ் போட்டு விருந்து, சமையல் எல்லாம் நடந்தது.

இங்கு வீடு, ஒரு பெரிய ஹால்.. இடது புறம் சின்ன அறை,           அதனை அடுத்து ஒரு பெரிய சமையல் அறை… அவ்வளவே.

எனவே ஹாலில் அமர்ந்திருந்தான் சதா… ஒரே ஒரு ப்பேன்           மட்டும் அவன், தலைக்கு மேலே ஓடிக் கொண்டிருக்க… வந்து           ஐந்து நிமிடத்தில் வியர்வை கொட்ட தொடங்கியது அவனுக்கு..

உயரமான ப்ளாக்ஸிபிளான மெல்லினம் அவன். அதனாலோ       என்னவோ  “நான் எப்போதும் உதவ தயார்” என்பதான உடல்         மொழி…

கொஞ்சம் கூடிய நிறமாய்… வழுவழுப்பான தாடை…  சற்று             ஏரிய நெற்றி… கண்ணில் தெரியும் தீட்சன்யம்… எப்போதும்              அந்த முகத்தில் கனிவு… என சதா தன் நெற்றியில் வழிந்த     வியர்வையை துடைத்தபடி பொறுமையாக தன் தம்பியுடன்         பேசியபடி அமர்ந்திருந்தான்..

அவன் அணிந்திருந்த பாசிப்பருப்பு நிற லினென் ஷர்ட் கொஞ்ச    கொஞ்சமாக அவன் வியர்வையில், நிறம் மாற தொடங்கியது…

கார்த்தி, இப்போது சதாவை பார்த்தபடி நின்றிருந்தான். தன் தங்கை கணவரிடம் எப்படி சென்று பேசுவது என்பதை விட… அவன் வந்து   விட்டான், தன் தங்கை வாழ்வில் இனி நல்லதே நடக்கும் என்ற இந்த நொடியை அனுபவிக்க சென்றுவிட்டான். அங்கே நின்று என்ன        செய்வது என தெரியாமல்.. தானும் வெளியே தோட்டத்திற்கு உணவு உண்ணும் இடத்திற்கு வந்துவிட்டான் கார்த்தி.

சண்முகம்தான் அங்கு சதாவின் அருகில் நின்றிருந்தான்.. கார்த்தி    சென்றதை கவனித்தவன், சதாவிடம் மெதுவான குரலில்…     “அண்ணியோட, அண்ணன், கார்த்தி“ என்றான். வெளியே செல்லும் கார்த்தியை கண்ணால் காட்டியபடி…

ஷண நேரம் சதாவிற்கு ஒன்றும் புரியவில்லை… பிறகு “ஒ..” என்றான்.   வேறு எப்படி ரியாக்ட் செய்வது என தெரியவில்லை. அதில் பேச    வேண்டும் என்ற ஆவல் இருப்பதாக தெரியவில்லை.

சண்முகம் “உ.. உங்களுக்கு, அண்ணிய நி..” என ஏதோ சொல்ல வர, அப்போது கன்யா… ஒரு பளீர் ரோஸ் கலர் சுடியில்… ஏதோ    யோசனையுடன்  பாதி அளவில் தண்ணியிருக்கும், அந்த வாட்டர் கேன்னை(பெரியது) இடுப்பில் தூக்கியபடி.. அமைதியாக படியேறி        வந்து கொண்டிருந்தாள் ஹாலினுள்.

சதா வந்ததோ… இங்கு உள்ளே நடப்பதோ ஏதும் தெரியாமல்,        எப்போதும் போல அவளின் இயல்பான நடையில் ‘அவர்கள்            யாரோ அமர்ந்த்திருக்கின்றனர்’ என எண்ணி அவர்களை கடக்க…

அந்த நேரம் சரியாக ஷண்முகம் “அண்ணி..“ என்றான். சதாவிடம்       பேசிக் கொண்டிருந்தவன், சதாவிடம் சொன்னானா… இல்லை     அண்ணியை அழைத்தனா… தெரியவில்லை.

கன்யா, முன்னே சென்றவள் திரும்பி பார்க்க… சதாவிற்கு        சட்டெனதான் புரிந்தது… அதுவரை, யாரென சத்தியமாக       தெரியவில்லை, புரியவில்லை… அவனிற்கு.

சண்முகம் அழைத்ததில் லேசாக சிரித்தபடியே  திரும்பியவளுக்கு… அமர்ந்திருந்தவன் யாரென தெரியைல்லை… சண்முகத்திற்கு என்ன    சொல்லி புரியவைப்பது என தெரியவில்லை…

சண்முகம் ஏதும் சொல்லாததால் சதா  சுதாரித்தான். இயல்பாய்        “ஹாய் ..” என்றான். ஏதோ தெரியாத நபரிடம் சொல்லும் முதல்    வார்த்தை.

சண்முகம் ஏன்… எனக்கு அறிமுகம் செய்கிறான் என புரியாது        நிமிர்ந்து போர்மளாக கன்யா “ம். ஹலோ..” என சொல்லி திரும்பி       நடக்க தொடங்கியவள், ஏதோ தோன்ற சட்டென திரும்பி மறுபடியும்      சதா முகம் பார்த்தாள்… புரிந்துவிட்டது யாரென… யார், யார் இது…    அவனா… அவனேதானா… என மனம் அல்லாட…

சதாவும் சின்னதாக சிரித்தபடி அவளையே பார்த்தான்.

சதாவை பார்த்து, அவன் கண்ணை பார்த்து ஏதும் கேட்க பிடிக்காமல்  அருகில் நின்ற சண்முகத்தின் முகத்தை பார்த்து “அப்படியா “ எனும்   விதமாக இறைஞ்ச்சுதலாக கன்யா, கண்ணால் கேட்க..

சண்முகமும் மேலும் கீழும் தலையசைத்து ஆம் என்பதாக கூற..  கன்யாவின் உள் ஏதோ இறங்க தொடங்கியது. தன் போல் குபுக் என   கண்ணீர் நிறைந்த கண்களை, யாருக்கும் காட்டாதபடி… மறைத்தபடியே திரும்ப,

அவளின் இடுப்பில் இருந்த கேன் சற்று இறங்கியது… அவளின்       நடையும் சற்று தள்ளாட,

சதா “ஹேய்… கேர்புல்..” என்றான் அனிச்சையாய்.. கட்டியவளின் பெயர் தெரியவில்லை இன்னும்…

சண்முகம் அருகில் வந்து “விடுங்கண்ணி…” என்றவன் அதை வாங்க கை நீட்ட…

கன்யா “விடுங்க சண்முகம்..” என்றவள் தானே, நேரே கிட்சேனுக்கு     எடுத்து சென்றுவிட்டாள். இப்போது நடையில் எந்த தயக்கமும்       இல்லை.

கேனை அங்கிருந்த மேடையில் வைத்துவிட்டு.. அங்கு சுவர் ஓரமாக   சாய்ந்து அமர்ந்து கொண்டாள்… கண்ணீர் அவளின் எல்லா வழியையும் மறைத்தது…

மூச்சே சற்று நேரம் நேராகவில்லை… ஏதோ அழுத்தம், மூச்சு       காற்றுக்கு தவித்தவள் வாயை திறந்து சற்று இழுத்து.. இழுத்து..         மூச்சு விட்டாள். ஆனாலும் கண்கள் மட்டும் தன் வேலையை        செய்தது.

மனமெல்லாம் இறுக்கமாக… இழுத்து பிடித்தது… இன்னும் தான், பார்த்த  அந்த கனிவான முகத்திலேயே நின்றது, அவளின் நினைவு. எத்தனை  வருடம்  தன்னுள் அழுத்தி அழுத்தி பாதுகாத்து வைத்த முகம்….

இதுதானே… இதேதான்.. ஆனால், இப்போது கண்முன் வரவும்…        இருந்த சக்தியெல்லாம் வடிந்து போய்… தொய்வாக அப்படியே        சாய்ந்து கொண்டாள் சுவற்றில்…

கண்கள் நீரை வார்க்க.. உதடுகள் சின்னதாக சிரிக்க..      தொண்டையிலிருந்து கேவல் சப்தம் வர… ஒருமாதிரி                 ஆனந்த அதிர்ச்சி கலவையில் கன்யா…

வந்துவிட்டானே.. என்று சந்தோஷ படுவதா… தன்னை தெரியவில்லை     என துக்க படுவதா.. புரிவில்லை பேதைக்கு… இது நிஜமா.. என       முதலில் தெரியவில்லை…

மேலும் என் கணவனை எனக்கு தெரியவில்லை… யாரிடமோ          கேட்டு தெரிகிறேன்… என எண்ண… எண்ண… இன்னும் இன்னும்       கண்ணீர் வர, கேவல் பெரிதாக தொடங்கியது…

அழுது ஏதேனும் கலவரம் செய்து, தன்னை தானே காட்டிகொடுத்து விடுவேனோ என எண்ணம் வர வர… அந்த இடம் இப்போது தனக்கு சாதகமில்லை என புரிந்தது…

தன்னை தானே அடக்கிக்கொள்ள நினைத்தவள்… பின்பக்கம் வழியாக.. கண்களை துடைத்தபடி… உணவு உண்ணும்மிடம் வந்தாள்…

தன் அண்ணனிடம் தங்களின் கார் சாவி வாங்கிக் கொண்டு…   இன்னோவாவை எடுத்து கொண்டு, அந்த தோட்டத்து வீட்டை          விட்டு வெளியே சென்றுவிட்டாள்.

அந்த சூழ்நிலையின் கனத்தை அவளால் தாங்க முடியவில்லை…      யாரும் தன்னை புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை.. என்ற     நினைப்பில், வெகுதூரம் பறந்த பறவை நிழல் தேடுவது போல்….      எங்கோ சென்றது அந்த சாம்பல்நிற இனோவா…

இப்போதுதான்… கல்யாணி வெளியே வந்தவர்… கார்த்தியிடம்        வெங்கட் அழைப்பதாக சொல்ல… மைதிலி கார்த்தி இருவரும் அங்கு சென்றனர். வெங்கட் அவர்களிடம் “இப்போ எதுவும் சொல்ல வேணாம் தம்பி… சென்னை போய் வைச்சிக்கலாம்… இங்க ஏற்கனவே எல்லார் வாயிலையும் புள்ளைங்க விழுந்தாச்சு… இன்னும் ஏதாவது பிரச்சனை பெருசாகிட போகுது…

நீங்க எல்லோரும் சாப்பிட்டு கிளம்புங்க… நாங்க இங்க, அண்ணனும்,    (கீர்த்தி அப்பாவும்) நானும் எல்லாம் முடித்து வரோம்… “ என்றார்

மைதிலி “இல்ல ண்ணா, நான் இருக்கேன், என் மாப்பிள்ளை செந்தில் இருப்பார்… கார்த்தி, கீர்த்தி, சண்முகம், அண்ணி, கன்யா எல்லோரும் கிளம்பட்டும்… நம்ம… நாளை போகலாம்” என்றார் வீட்டு       பெண்மணியாக.

இப்படி இங்கே இவர்கள் பேசிக் கொண்டிருக்க… கார்த்தி ஏதும்     சொல்லாமல் வெளியே வந்தான்.

ஹாலில் அப்போதுதான் உள்ளே வந்த கீர்த்தி, சதாவை பார்த்து “என்னை தெரியுதா…” என கேட்டாள்.

கீர்த்திக்கும் முதலில் தெரியவில்லை சதாவை… ஆனால், அந்த       இடத்தில் கொஞ்சம் கூட ஒட்டாமல்… முற்றிலும் உயர் சாயலில்,      வேர்க்க விருவிருக்க நின்றிருந்தவனை பார்த்ததும், கூடவே        ஷண்முகம் நிற்கவும் ஒரு யூகத்தில் அருகில் சென்று பார்த்து கண்டுகொண்டாள் கீர்த்தி.

சதா டாக்டர் “ம்…” என்றபடி ஷ்ம்முவை பார்க்க… “கீர்த்தி, ண்ணா”      என்றான் சம்மு…

இப்போது அவனிற்கு புரிய “கங்ராட்ஸ் ம்மா… கல்யாணத்திற்கு            வர முடியல… சாரி…” என்றவன்

திரும்பவும் “கிப்ட் எல்லாம் அங்க சென்னையில் இருக்கு… சாரி ம்மா..” என்றான் வெறும் கையுடன் அவளிற்கு ஷேக்ஹாண்ட்ஸ் தந்தபடி.

கீர்த்தி “ஐயோ எத்தனை, உங்களுக்கும் சேர்த்து அண்ணி ரிங் போட்டுட்டாங்க…” என சொல்லி அவனிடம் தன் கைகளில்        போட்டிருந்த வெள்ளை கள் வைத்த ரிங்கை காட்டினாள்.

கூடவே “இருங்கண்ணா, அவர கூப்பிடுறேன்” என சொல்லி கார்த்திகை அழைத்து வர சென்றாள்.

சதா “அண்ணி… “ என கேள்வியாக நிருத்த..

சண்முகம் “உங்க வ்ய்ப் ண்ணா… இ.. இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பார்த்தோமே… எங்களுக்கு அண்ணி” என்று நிறுத்த..

சதா கண்மூடி திறந்து ம்.. என்பதாக சொல்லி அமர்ந்து கொண்டான்..     ஏதும் பேச தோன்றவில்லை…

கல்யாணி, மைதிலி என எல்லோரும் பேசி முடித்து வர கல்யாணி, கன்யாவை தேட தொடங்கினார்… வெங்கட் “எல்லோரும் சாப்பிட்டு கிளம்புங்க… ஆர்பாட்டம் வேண்டாம் கலை” என்றார். தன் மனைவியிடம் கண்டிக்கும் குரலில்.

அவருக்கு தன் மருமகளின் நிலை புரிவதால்… அவளை சங்கடபடுத்த வேண்டாம்… என எண்ணித்தான் இந்த ஏற்பாடு.

கல்யாணியும் “சாப்பிட தாங்க தேடுறேன்… வேற ஒன்னும் இல்ல”      என்றார் கொஞ்சம் கோவமாக.

வெங்கட் “இவ திருந்த மாட்டா” என்றபடி தன் அண்ணனுடன்          சென்று கலந்து கொண்டார்.

பந்தி முடிந்திருந்தது முக்கால்வாசி பேர் கிளம்பியிருந்தனர்… இன்னும் மாமன் மச்சான் சொந்தமும், பங்காளி முறையும் மட்டும் இருந்தனர்… எனவே வெங்கட் சென்று அதில் கலந்து கொண்டார்.

இன்னும் பாதி பேருக்கு சதா வந்தது தெரியவில்லை… எனவே       வெங்கட் “சதாவை கூப்பிட்டு வா கலை” என்றார் மற்றவர்களுக்கு அறிமுகபடுத்தும் எண்ணத்துடன்.

சதாவை கூப்பிட கல்யாணி சென்றார். அங்கே கார்த்தியுடன்            பேசிக் கொண்டிருந்தான் சதா… கீர்த்தியின் உபயத்தில்… அந்த          நிகழ்வு நடந்திருந்தது.

முதலில் கார்த்தி முகத்தை கடுகடுவெனவே வைத்திருந்தான்… ஆனால் சதாவிடம் லேசாக அறிமுகம் செய்த கீர்த்தி “இவங்க அண்ணியோட அண்ணன்” என சொல்லி கண்சிமிட்டினால்…

அதன்பின் சதா “அப்போது எனக்கு இரண்டு வழி சொந்தம்” என   அமைதியான குரலில் அலட்டாமல் சொல்லி… ஏற்பது போல்        பேசவும்…

கார்த்தி வீழ்ந்தான்… கோவம் ஆற்றாமை எல்லாம் எங்கோ சென்றது…  கார்த்தி, தொடர்ந்து என்ன பேசுவது என தெரியாமல், இப்போதுதான் கேட்டான் “என்ன ஸ்பெஷலிஸ்ட் நீங்க” என..

சதாவின் கலையான முகம்… இன்னும் அமைதியை தத்தெடுத்தது…       “ம்… ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்…” என்றான் கார்த்தி… ’வாய் திறந்து     பார்த்தான்’ எனதான் சொல்லவேண்டும்.. பார்வையை விளக்க   முடியவில்லை அவனால்.

எல்லோரும் டாக்டர் என சொல்லி கேள்வி… ஏதோ ஆராய்ச்சி        சார்ந்தது படித்துக் கொண்டிருக்கிறான் எனதான் தெரியும் கார்த்திக்கும்… மேலும் சதாவின் மீது உள்ள வெறுப்பில் எதை பற்றியும் கேட்டு       தெரிந்து கொள்ளவில்லை அவன்.

,மேலும் சதாவை பற்றி பேச்சே இயல்பாய் உறவுகளிடம் எழுவதில்லை.. அப்படியிருக்க… எங்கும் அவன் இருதயம் சார்ந்த இவ்வளவு பெரிய    டாக்டர் என தெரியவில்லை… எனவே ஒரு மரியாதை வந்தது     தன்போல்…

பின் இயல்பாய் முகம் ஒளிபெற தன் தங்கையின் காத்திருப்பு வீண் போகவில்லை என்று தோன்றியது, அது குரலிலும் தெரிய “வாங்க சாப்பிடலாம், மணியாச்சு…” என்றான்.

இப்படி மாமன், மச்சான் உறவுகளாக மரியாதையுடன் கூடி        பேசியபடியே நடந்து வர… கல்யாணி எதிரே வந்தார்… தன் மகனிடம்    “என்ன தம்பி, கார்த்திய தெரியுதா” என்றார்.

இப்போது கார்த்தி “அதெல்லாம் நாங்க அறிமுகம் ஆயாச்சு அத்த…      வாங்க சாப்பிடலாம்” என்றான். கார்த்திக்கு தன் தங்கை அங்கு       இருப்பாள் என எண்ணம். எல்லோரும் அங்கு செல்ல..

கல்யாணி கண்ணால்… தேடியபடி கார்த்தியிடம் “எங்க கார்த்தி, கன்யா” என்றார்.

இங்கே யாருக்கும் எதுவும் தெரியவில்லை. முதலில் கார்த்திக்கு,       அவள் தன் கணவனை பார்த்தது, தெரியாமல் சாவியை கொடுத்து    விட்டான். எனவே இப்போது கல்யாணி வந்து கேட்க… விழிக்கக் தொடங்கினான்.

இப்போதுதான் எல்லோரும் ஒரே இடத்தில் இருக்க… கன்யா மட்டும் இல்லை… என்ற விஷயம் எல்லோருக்கும் தெரிய தொடங்கியது.

கார்த்திக்கு இப்போதுதான் தான், கார் சாவி கொடுத்தது நினைவில்     வந்தது. எல்லோரின் கண்ணிலும் ஒரு பரபரப்பு…

மைதிலிக்கு “ஐயோ பெண்ணே!” என கோவம். முதலில் எப்படி    சொல்லாமல் செல்லலாம் எனதான்.

கார்த்திக்கும், சண்முகத்திற்கும் “தேவையில்லாமல் சதாவை இங்கு வரவைத்து விட்டோமோ” என்ற எண்ணம்.

வெங்கட் கல்யாணியை பார்த்து முறைத்தார். கல்யாணிக்கு, என்ன  செய்வது, என்ன சொல்லுவது என புரியவில்லை… பாவம், அன்னையாக    தன் மகன் அருகில் சென்று நின்று கொண்டார்.

உறவுகளின் இந்த பரபரப்பு சதாவுக்கு புரிய தொடங்கியது “என்னம்மா… என்னாச்சு” என இயல்பாய் கேட்டான்.

கல்யாணி “ஒன்னுமில்லப்பா… இப்போ எல்லோரும் கிளம்பனும்,       இன்னும் நம்ம மட்டும்தான் சாப்பிடல, அதான்… வேலையாட்கள்     எல்லாம் நேரமாச்சுன்னு சொல்றாங்க…

“நீ வா முதலில் சாப்பிடு” என அழைத்து அமர்த்தினார் பந்தியில்.

சதா “ம்மா… சம்முவ வர சொல்லுங்க…” என்றான்.

“அவன் வருவான் வா… கொஞ்சம் வேலையிருக்கு அவனிற்கு… எல்லோரையும் பஸ் ஏத்தி ஊர் போய் சேர்க்கனுமில்ல…” என தன்       போல், பதில் சொல்லியபடி பரிமாறினார் தன் மகனிற்கு.

அவருக்கு கன்யா காணவில்லை என சொல்லமுடியவில்லை             தன் மகனிடம்… என்றாக இருந்தாலும்.. அவளின் காத்திருப்பு            பொய் இல்லையே, ஏதோ கோவம், வருத்தம்.. அது இருக்கத்தான்       செய்யும்.

இந்த பசங்க.. இப்படி சொல்லாமல் அவனை கொண்டுவந்து     நிறுத்தினால்… எனக்கே அவனை அடையாளம் தெரியல, அவ என்ன பண்ணுவா.. என எல்லோர் மீதும் கோவம் வந்தது கல்யாணிக்கு..

எனவே இப்போதுக்கு ஏதும்.. தன் மருமகள் மேல் தவறு வந்துவிட    கூடாது என அமைதியாக காட்டிக் கொண்டு சதாக்கு பரிமாற     தொடங்கினார்..

இப்போது கார்த்தி, சண்முகத்திடம் “கார் சாவி எங்கிட்ட வாங்கினா…    சதாவ, இவர்.. வந்தது தெரியுமா” என்றான்.

சண்முகம் “ம்… பார்த்தாங்களே.. பேசவெல்லாம் இல்லை.. ஏன் கார்த்தி.. போன் செய்து பார்க்கலாம்” என்றான்.

கார்த்தியின் கைகளும் அதையே இவ்வளவு நேரமும் செய்து கொண்டிருந்தது… ஆனால், போன் சுவிட்ச் ஆப் என வந்தது. கார்த்தி      உதடு பிதுக்கி “இல்லை” என்பதாக தலையாட்ட… இருவருக்கும்..      கலக்கம் வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!