Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Un Vizhigalin Mozhi Ennavo

Un Vizhigalil Mozhi Ennavo 26

ஜெய் ஸ்ரீ ராம்

 

EPI-26

தன்னை சுற்றிய கலகலவென்று பேச்சுக் குரல்களும் சிரிப்பு சத்தம் கேட்டு ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த மதுஸ்ரீ கண்விழித்தாள்  அவள் விழிகளை திறக்கும்போது அவள் முன்பெட்டில் குப்புற படுத்து  கையில் போனோடு ஒரு பெண் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள்



Advertisement

 

 

 

Advertisement

இரவு மது உறங்க ஆரம்பிக்கும் போதும் இதே போஸில் தான் இருந்தாள்  இவள் உறங்கி இருப்பாளா மாட்டாளா என்ற சந்தேகத்தோடு மறுபுறம் திரும்பி பார்க்க    ஒருத்தி வேகவேகமாகக் குளித்து முடித்து தலையில் தண்ணீர் சொட்டிக் கொண்டிருக்க

Advertisement

 

 

 

Advertisement

பாண்ட் அணியாமல் வெறும் சுடிதார் டாப்ஸ் மட்டும் அணிந்து கொண்டு வெளியில் வந்தாள்  மதுவின் எதிர்ப்புறம் இருக்கும் கண்ணாடியில் ஒருத்திநிதானமாக மேக்கப் போட்டுக் கொண்டிருந்தாள்

 

 

 

இவர்கள் மூவரும் தனித் தனியாய் தனது வேலைகளை செய்து கொண்டிருந்தாலும் மூவரும் வாய் ஓயாமல் ஒருவரை மற்றொருவர் கேலி செய்து சிரித்துக் கொண்டிருந்தனர்  தன் மொபைலில் எடுத்து மணியை பார்க்க மணி ஆறு என்றது  அவள் வாழ்நாளில் ஆறு மணிக்கெல்லாம்  எப்போது எழுந்தாள் என்று  ஞாபகமில்லை

 

 

 

ஆனால் இங்கு வந்த நாளிலிருந்து இப்படிதான்  இன்றாவது பரவாயில்லை ஆரம்பத்தில் தூக்கமே வந்ததில்லை ஒருவழியாய் குப்புறப்படுத்து போன் பேசிக் கொண்டிருந்தவள் மொபைலை சார்ஜ் போட்டுவிட்டு குளிக்க சென்றாள்

 

 

 

முன்பே குளித்து முடித்து வந்தவள் ஆடையை சரியாக அணிந்து கொண்டு தன் தோள் வரை மட்டுமே இருக்கும் முடியை பாண்டை போட்டு உச்சியில் போனிடெயிலாய் மாற்றியவள்  பொட்டு வைக்க கண்ணாடியின் முன்னால் போக மேக்கப் போட்டு கொண்டிருந்தவள்  அலங்காரம் இன்னும் முடிந்தபாடில்லை

 

 

 

அவளுக்கு முன்னால் சென்று அவளை தள்ளி விட்டு நெற்றியில் பொட்டை வைத்தவள் மணியை பார்க்க 6 30am அயையோ 7க்கு தியேட்டர்ல இருக்கணும் என்று பதறியவள் வேகமாய் பொருட்களை எல்லாம்  பாகில் வைத்து  எல்லோருக்கும் பொதுவாக பாய் என்று விட்டு  ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டாள் வருனி

 

 

 

வருனி என்றுதான் அவளை அறிமுகப்படுத்தி கொண்டதாய் மதுவிற்கு ஞாபகம் அறையில் இருந்த மேலும் இருவரும் வெளியில் செல்லும் வரை பெட்டில் படுத்து இருந்தவள் எழுந்து குளித்து தயாராகி

 

 

 

ரூமை விட்டு வெளியில் வந்தாள்  கல்லூரி செல்ல இன்னும் நேரம் இருப்பதால் அமைதியாக அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டாள்  அவள் படிக்கும் போது ஒன்பது மணி  கல்லூரிக்கு 8 மணிக்குதான் தூங்கி எழுவாள்  பின்பு அந்த வருனியை  போலவே அடித்துப்பிடித்து செல்வாள்

 

 

 

ஆனால் இப்போது பேராசிரியர் பணி புரியும்போது ஆறு மணிக்கே எழுந்து தயாராகி நின்று கொண்டிருக்கிறாள்  அதுவும் புடவையில் தன்னை நினைத்து அவளுக்கு சிரிப்பு ஒன்று உதிர்ந்தது

 

 

 

ஒரு பெருமூச்சோடு அங்கிருந்த மெசினுள் நுழைய கல்லாய் இறுகிப் போயிருந்த இட்லியும்   ஆறி போயிருந்த சாம்பாரும் ஏற்கனவே காலியாக இருந்த சட்னியின் வாளியும் வரவேற்றது

 

 

 

விதவிதமாய் சூடாய் சமைத்து சாப்பிட்டு போடா என்ற அத்தையையும் அம்மாவையும் புறக்கணித்ததற்கான தண்டனை தான் போலும்  இட்லியையும் சாம்பாரையும் தட்டில் வைத்து ஓரமாய் ஒரு மேஜையில் அமர்ந்து உண்ண தொடங்கினால் உணவு தொண்டையில் இறங்க மறுக்க

 

 

 

“ம்ம்ச்” சலிப்போடு தட்டை கழுவி அதனிடத்தில் வைத்துவிட்டு தன் மொபைலை எடுத்துக் கொண்டு வெளியேறினாள்

 

 

 

அந்த நேரம் குறுஞ்செய்தி வர எடுத்துப் பார்க்க குட் மார்னிங் ஹவ் எ நைஸ் டே என்ற மெசேஜ் வந்திருந்தது  அதற்கு ரிப்ளை எதுவும் அனுப்பாமல் அனைத்து தன் ஹேன்ட் பேக்கில் போட்டு விட்டு பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்கத் தொடங்கினாள் அவள் வரவும் பேருந்து வரவும் சரியாக இருக்க அந்த அரசு பேருந்தில் ஏறி நின்றவள்

 

 

 

அடுத்த பத்தாவது நிமிடம் அவள் இறங்கும் இடம் வர கோவை மாநகரின் ஒரு புகழ் பெற்ற பொறியியல் கல்லூரி வாயிலில் வந்து இறங்கினாள்  கடந்த 2 மாதத்தில் அவளின் 23 வருட வாழ்க்கை அடியோடு மாறி விட்டிருந்தது

 

 

 

அன்று அண்ணன் மகன் பிறந்தநாள் விழா முடிந்ததும் தன் ஊருக்கு செல்ல ஆவலாக கணவனோடு செல்ல ஆயத்தமாக அவனோ  இன்னும் ஒரு வருடம் வேறொரு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரி என்று விட்டான்

 

 

 

முதலில் அவன் விளையாடுகிறான் என நினைத்து அவள் மறுத்து விட்டு விட  அவளின் resume சில கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டு இரண்டு கல்லூரியிலிருந்து நேர்முகத்தேர்விற்கும் அழைப்பு விடுத்தனர்

 

 

[the_ad id=”6605″]

 

 

 

இவன் என்னை பற்றி என்ன தான் நினைச்சுட்டு இருக்கான் என்ற மதுவின் ஆத்திரம் தலைக்கேற   முடியாது என்று இவள் மறுக்க    தன் ஆயுதமான அமெரிக்கா செல்வதை கையில் எடுத்தான்

 

 

 

இந்த முறை ஏற்கனவே மதுவின் எதிர்ப்பை உறுதி செய்து பைந்தமிழிடம் முதலிலேயே பேசி விட்டு இருந்தான்  அவன் இவனுக்கு தகுந்தாற்போல் பேச போனை புடுங்கி தரையில் வீசியவள்

 

 

 

“எங்க போனாலும் போங்க திரும்பி வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி  ஆனால் நான் வேலைக்குப் போக மாட்டேன்  வேலைக்கு போய் தான் சாப்பிடணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை என்று விட்டாள்   இவளிடம் மிஞ்சினால் சரிவராது என யோசித்தவன் கெஞ்ச ஆரம்பித்து விட்டான்

 

 

 

“இங்க பாரு ஸ்ரீ  உனக்காக நம்ம காலேஜ்ல ஜாப்  ரெடியாயிருக்குனு உனக்கு தெரியும்    அட்லீஸ்ட் வெளியில ஒரு ஆறு மாசமாவது ஒர்க் பண்ணு  அப்போது தான் உனக்கும் ஒரு ஐடியா கிடைக்கும்

 

 

 

நாளைக்கு நீ பொறுப்பு ஏத்துக்கும் போது உனக்கு கஷ்டம் இல்லாம இருக்க தானிப்படி சொல்றேன்  நீ அங்க ஜாயின் பண்ணும் போது எக்ஸ்பீரியன்சோட இருக்கணும்னு ஆசைப்படறேன்  ப்ளீஸ்மா என்று அவன் இறங்கி வர

 

 

 

அர்ஜுனும் சக்தி சொன்னதையே சொல்ல

 

 

 

மதுவிற்கு யாரும் தன்னை புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்களே என்று ஆற்றாமையாக இருந்தது  அனைவரையும் முறைத்து விட்டு தன் அறைக்குள் சென்று விட்டாள்  அவளைத் தொடர்ந்து அறையில் சக்தி நுழைந்ததும் அவன் சட்டையைப் பிடித்து “உன் கூடவே இருக்கணும்

 

 

 

உன்னை மாதிரி பாப்பா பெத்துக்கணும்னு ஆசை படுவது தப்பா  ஏன்டா என்ன புரிஞ்சிக்க மாற்ற   நம்ம ஊர்ல உன்கூட படிச்சவங்க பிள்ளைங்க எல்லாம் ஸ்கூலுக்கு போறாங்க

 

 

 

ஏன் அண்ணனுக்கும் உன் வயசுதானே ரெண்டு குழந்தை இருக்காங்க இல்ல   உனக்கு அந்த மாதிரி வாழணும்னு ஆசையா இல்லையா  எனக்கு வேலை எல்லாம் வேண்டாம் வாழ்கை முழுசா உன்கூடவே இருந்துடறேன்  ஒருவேளை உனக்கு என்ன பிடிக்கலையா அதான் கல்யாணம் ஆன நாளிலிருந்து என்ன விட்டு தள்ளி தள்ளி போறியா ”  என்று அவனை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள்

 

 

 

இதைக் கேட்ட சக்தியின்  இதழ்களில் இளநகை தோன்றியது “லூசு” என்று அவள் முகத்தை நிமிர்த்தியவன்  உன்னை பிடிக்காமல் தான் உனக்காக எல்லாம் பண்றேனா வாழ்க்கையில் காதலும் ஒரு அங்கம் தான் ஆனால் அதையும் தாண்டி நமக்கு ஒரு சுயம் இருக்கு

 

உன்னோட இந்த வயசுல உன் மனசு காதலுக்கு தான் முதல் இடம் குடுக்கும் அதை நான் தப்புனும் சொல்லலை அனால் கொஞ்ச நாள் கழிச்சு உன்வாழ்க்கையை திரும்பி பாத்தால் நானும் குழந்தைகளும் இருப்போம் ஆனா நீ ஆசைப்பட்ட   சின்ன வயசுல இருந்து கனவு கண்ட உன் வேலை      உனக்குன்னு தனிப்பட்ட அடையாளம்     என்று புருவம் உயர்த்தி கேட்டவன்

 

 

 

மச்சான உதாரணம் சொன்னியே அப்படிப் பார்த்தா  அவன் ஒரு அசிஸ்டென்ட் கமிஷனராக இருந்தாலும் அவன் மனைவி தமிழினி கமிஷனரின் மனைவியா இந்த சமூகத்தில் பார்க்கப்படாமல் ஒரு மகப்பேறு மருத்துவராக தான் பார்க்கப்படுறா அவளுக்குனு ஒரு தனி அடையாளம் இருக்கு

 

 

 

மாமா இப்போ உயிரோட இல்லை நாளும் அத்தை  ஒரு ஆசிரியரா தான் அடையாளம் காணப்பட்றாங்க   அந்த மாதிரி ஒரு அடையாளத்தை உருவாக்க தான் நான் ஆசைப்படறேன் புரிஞ்சுக்கோடா

 

 

[the_ad id=”6605″]

 

 

 

என் பிள்ளைகளுக்கு அம்மா என்பதைவிட அதுக்கு முன்னாடி நீ எல்லார் முன்னாடியும் ஒரு கல்லூரி நிர்வாகியா   அடையாளம் காணப்படணும்னு  நான் ஆசைப்படறேன்

 

 

 

மச்சானும் தமிழ்  படிச்சு முடிச்ச பின்னாடி தானே குழந்தை பெற்றுக் கொண்டான்  என்ன அவங்களுக்குள்ள வயசு வித்தியாசம் கம்மி   தமிழ் சீக்கிரம் படிச்சு முடிச்சு டா

 

 

 

நமக்கு வயசு வித்தியாசம் அதிகம்  அதோட உனக்கும் சீக்ரம் கல்யாணம் பண்ணிட்டாங்க அவ்வளவுதான் எனக்கும் நம்ம குழந்தையை பாக்கணும்னு ஆசை இருக்கு டா   நான் ஒன்னும் குழந்தை வேணாம்னு சொல்லலையே!!!

 

 

 

இப்போ நீ குழந்தை உண்டா நாளும் எனக்கு சந்தோஷம்தான் நம்ம பாப்பா வரதுக்குள்ள உன்ன ஒரு நல்ல பொசிஷன்ல பாக்கணும்  நம்மள  பாத்து தான அவங்க வளருவாங்க  அதான் சரியா   நமக்கு இன்னும் வயசுக்கு ஸ்ரீ   தேவை இல்லாம எதையும் யோசிச்சு உன்ன கொழப்பிக்காத நாளைக்கு இன்டெர்வியூபோ

 

நம்ம காலேஜ் விஷயமா டெல்லில ஒரு மீட்டிங் அட்டென்ட் பண்ணனும் வர ரெண்டு நாள் ஆகும்னு நெனைக்கிறேன்  நான் கெளம்பறேன் என்றவன் அவளை ஒரு முறை இறுக அணைத்து நெற்றியில் முத்தமிட்டு

 

 

 

அட்லீஸ்ட் ஒரு ஆறு மாசமாவது ஒர்க் பண்ணு  என்று விட்டு சென்றான்  இவ்வளவு பேசியவன் உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்  நீ இல்லாம என்னால இருக்க முடியாது அப்படி எதுவும் சொல்ல வில்லை அவனை பொறுத்த வரை ஒவொரு செயலிலும் காதலை தன் பிடித்ததை  உணர்த்துவதால் சொல்ல தேவை இல்லை என நினைத்து விட்டான்

 

ஒரு வேலை சொல்லி இருக்க வேண்டுமோ !!!மதுவின் மனம் அவனிடம் இருந்து இதை தான் எதிர் பார்கிறதோ !!!!

 

கணவன் சொன்னதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் நாம சேர்ந்து வாழ்ந்தும் ஏன் குழந்தை பிறக்கல என்று யோசித்துக் கொண்டிருந்தாள்

 

 

 

மறுநாள் இன்டர்வியூ போகாமல்  அவள் சென்று நின்ற இடம்  தன் அண்ணி வேலைப்பார்க்கும் மருத்துவமனை  அன்றைய நாள் முழுவதும் அல்ட்ராசவுண்ட்   பிளட் டெஸ்ட் என அனைத்துப் பரிசோதனைகளையும் பரிசோதித்துவிட்டு “ஹெல்த்ல    பிராப்ளம் இல்லை

 

 

 

போலிக் ஆசிட் மட்டும் சாப்பிடு போதும்  சீக்கிரம் நீ ஆசைப்படுவது நடக்கும் “என்று வாழ்த்தினாள்  தமிழனி   அனைத்தும் நார்மல் எனும்போது இதுவரை கருத்தரிக்காத காரணம் என்ன என்று யோசித்தபடி வீட்டிற்கு சென்றாள்

 

 

 

அவளுக்கு தெரியவில்லை கணவன் தன் மருத்துவ நண்பன் பைந்தமிழின்   ஆலோசனையை கேட்டறிந்து இவளின் மாதவிடாய் நாட்களை கணக்கிட்டு குழந்தை உருவாக வாய்ப்பு குறைவாக உள்ள நாட்களில் மட்டுமே இல்லற வாழ்வில் ஈடுபடுகிறான் என்று

 

 

 

இன்றைய ஆண்ராய்டுகளில் இதற்கு எத்தனையோ செயலிகள் இருக்கின்றன

 

 

 

இரண்டு நாட்கள் கழித்து வருகிறேன் என்று விட்டு உடனே வந்து நின்ற கணவனை  வியப்புடன் ஏறிட்டுப் பார்க்க

 

அவனோ வந்ததும் வராததுமாய் அடக்கப்பட்ட கோபத்துடன் “ஏன் ஸ்ரீ இன்டெர்வியூ போகலை”   என்றான்

 

“பிடிக்கலை” என்று பதில் உடனே வர

 

சக்தியின் கோபம் எல்லை தாண்டியது “ஏண்டி படிச்சு படிச்சு சொல்லிட்டு போனா  நீ பாட்டுக்கு பிடிக்கலை போகலைனு ஈஸியா சொல்ற    உனக்கு எவ்வளவு திமிரு உனக்கு பிடித்த வேலைக்கு தானே போகச் சொல்றேன்

 

உன்னையெல்லாம் அத்தை சொல்ற மாதிரி கண்டித்து வச்சிருக்கனும்  உன் பின்னாடி நாய் மாதிரி கொஞ்சிட்டு   கெஞ்சுட்டு இருந்தேன் இல்லை  இப்படித்தான் பண்ணுவ”   என்று காட்டமாக கூற

 

பழைய அய்யனாராய் மாறி நிற்கும் கணவனை கன்னட மதுவிற்கும் கோபம் தலைக்கு ஏறியது

 

“இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன்  உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணி வச்சது என்கூட வாழ்றதுக்கா இல்லை  உங்க காலேஜ்ல வேலை செய்ய ட்ரெயின் பண்றதுக்கா

 

 

 

நீங்க பண்ற டார்ச்சல்ல எனக்கு பிடிச்ச வேலை கூட பிடிக்காமல் போய்டுசு  இப்போ சொல்றேன் கேட்டுக்கோங்க என்னால எங்கேயும் வேலைக்கு போக முடியாது  நான் ஊருக்கு வர தான் போறேன்  பேபி பெத்து கிட்டு செட்டில் ஆக போறேன்

 

 

 

மாமாங்க    அத்தைங்க      எல்லாம் பார்த்துக்குவாங்க   உங்களால முடிஞ்சத பாருங்க  ” என்று அவனிடம் சவால் விட

 

இவ்வளவு சொல்லியும் புரிஞ்சிக்க மாட்டிங்கறாளே என்று ஆயாசமாக இருந்தது

 

“மாமா   அத்தை   அண்ணி  அண்ணண்    அம்மா இவங்க எல்லாரையும் டிப்பன் பண்ணாம ஒரு நாள் கூட உன்னால வாழ முடியாது  நீ எல்லாம் கிணற்று தவளை டீ வெளில வந்து பாரு உலகம் எவ்ளோ பெருசுன்னு

 

உன்னால முடியாததை நான் செய்ய சொல்லலை அதுக்கான ஆளுமையும் திறமையும்  இருந்தும் பிடிவாதம் பிடிக்கிற பாரு  நீலாம் எதுக்கு ரெண்டு டிகிரி படிச்ச  கல்யாணம் பண்ண உடனே குழந்தை பெத்துக்கிட்டு  செட்டில் ஆக வேண்டியது தான  ”

 

மதுவின் மனமோ நானா மாட்டேன்னு சொன்னேன்  நீதான்ஊரை விட்டு ஓடி போய்ட்ட  பர்ஸ்ட் டிகிரி படினு சொன்ன  அப்புறம் மாஸ்டர்ஸ்   இப்போ வேலை  நாளைக்கு PHD பண்ண சொல்லுவ  அப்புறம் இப்போ தன் காலேஜ் பொறுப்பு ஏத்துருக்க பேபி பெத்துக்க ஒன்னு இயர் போகட்டும்னு சொல்லுவ  எனக்கான வாழ்க்கையை நான் எப்போ வாழறது கிழவி ஆன பின்னாடியா  என்று கவுண்ட்டர் கொடுத்தது

 

ஆசைப்பட்ட டிரஸ்ஸ கூட வாங்கிப் போட முடியாமல்    நினைச்ச படிப்பு படிக்க முடியாம  மனசுக்கு பிடிச்ச வாழ்கை கிடைக்காம கிடைச்ச வாழ்க்கையை ஏத்துக்கிட்டு  சம்பாரிக்கிறதுல கைக்கும் வாய்க்கும்  எட்டாம எத்தனையோ பேர் எவ்வளவு கஷ்டப்பட்டு வாழ்றாங்க தெரியுமா

 

ஒரு ரூபாய் சம்பாதிச்சாலும் நீயா சம்பாரிச்சு சாப்பிட்டு பாரு அதோட சுகமே தனி   நீ என்ன பண்ணுவ பிறந்ததிலிருந்து மகாராணி மாதிரி உன்ன வளத்தாங்க இல்லை இப்படித்தான் பேசுவ

 

கஷ்டபட்ற வீட்ல பொறந்து இருந்தா தெரிஞ்சிருக்கும்

 

உன்னால யாருக்காவது யூஸ்  இருக்கா  எல்லாரும் தாண்டி கல்யாணம் பண்ணி கொழந்தை பெத்துக்கறாங்க   இந்த உலகத்தில் நீ பொறந்ததுக்கு  புரியோஜனமா என்ன செஞ்சே!!!

 

சாப்பிடற ஒரு வேளை சாப்பாட்டுக்கு இதுவரைக்கும் நீ சம்பாரிச்சு இருக்கியா   நம்ப வீட்ல இருக்க யாருடைய துணையும் இல்லாமல் நீ யா தனியாக ஒரு வாரம் வாழ்ந்து காட்டு பார்க்கலாம் முடியாது டீ உன்னால  ” என்று மதுவின் தன்மானத்தை சீண்டி விட அதுவும் தன பங்குக்கு கொழுந்து விட்டு எரிந்தது வேறு விதத்தில்

 

“மனசுக்கு பிடிச்ச வாழ்கை கிடைக்காம கிடைச்ச வாழ்க்கையை ஏத்துக்கிட்டு வாழ்றது நீங்கதான   அப்படி ஒன்னும் என்னை ஏத்துக்கிட்டு வாழணும்னு அவசியம் இல்லை

 

என்னை டிவேர்ஸ் பண்ணிட்டு உங்களுக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழுங்க  என்னால தனியாக வாழ முடியும்  நான் யாரையும் டிபன் பண்ணி இருக்கல   “என்று கத்த

 

நான் எதை சொன்ன இவ என்ன சொல்ற பாரு  எப்போ பாரு  டிவர்ஸ் குடுக்கிறதுல குறியா இருக்கா   எதையும் யோசிச்சு பேசுற பழக்கமே இல்லை   அப்படியே அவள் கன்னத்தில் ஓங்கி ஒன்று வைக்கும் ஆவேசம் எழ  தன்னை அடக்கி கொண்டு அவளை முறைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டான்

 

இன்னும் சிறிது நேரம் இருந்திருந்தால்  என்ன செய்திருப்பானோ!!!

 

இங்கே மதுவோ “எப்போ பாரு இவங்க எடுக்கற முடிவுக்கு நான் தலைஆட்டணுமா  நெவெர்” என்று கத்தியவள்    அதற்கு இது தான் முடிவு என்பது போல் கோயம்புத்தூர் செல்ல கிளம்பி விட்டாள்

 

தன் மகளை பார்த்த பரிமளாவிற்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை  “அங்க போய் என்ன பண்ணப் போற   நாம ஊருக்கு  போலாம் நான் சக்தியிடம் பேசுகிறேன் “என்று சமாதான படுத்த

 

 

 

” அம்மா நான் கோயம்புத்தூர் போக தான் போறேன்  அங்கே ஒரு ஐடி கம்பெனியில் வேலை கிடைச்சிருக்கு ஹாஸ்டல் பார்த்துட்டேன்  நானே போய் விடுவேன்  என்னை நானே பார்த்துக்குவேன்” என்றவள் மனதில் இனி நான் ஊருக்கு போக மாட்டேன் நான் வேணும்னா அவனா வந்து கூட்டிட்டு போகட்டும் என்று நினைத்துக்கொண்டே !!!

 

வீம்பாக வாயிலில் வந்து நின்ற கேபிள்  ஏறி சென்று விட

 

[the_ad id=”6605″]

 

 

 

பரிமளா தன் மகனிடம் புலம்ப ஆரம்பித்துவிட்டார்  “இதையேதான் சக்தியும் சொன்னான்  இத்தனைக்கும் அவள் ஆசைப்பட்ட வேலை தானே செய்ய சொன்னான் அவளுக்கு அதிக செல்லம் குடுக்காதிங்கனு படிச்சு படிச்சு சொன்னேன் இப்போ பாரு யாரு பேச்சையும் கேக்காம அவ பாட்டுக்கு போறா  ”

 

தன் அன்னையை சமாதான படுத்திய அர்ஜுன் சக்திக்கு அழைப்பு விடுக்க   முதலில் அதிர்ச்சியடைந்தாலும் தன்னையே தேற்றிக்கொண்டவன்  “அவள் விருப்பப்படி இருந்திட்டு வரட்டும்   நீ  யாரையாவது அனுப்பி அவ போய் சேர்ற வரைக்கும்  பத்திரமா இருக்கலானு கண்காணிக்க சொல்லு

 

கொஞ்ச நாளைக்கு தனியா இருந்து வாழ்க்கை  பாடத்தை படிச்சிட்டு வரட்டும் அவளோட இந்த முடிவு நல்லதுக்கு தான் “என்று விட

 

ஆர்ஜூன்க்கு ஆச்சர்யமாகி விட்டது “ஏன் மச்சான் உனக்கு அவள் மேல் கோவமே வரலையா  உன்ன மதிக்கமா நடந்துக்கறானு  ”

 

“ஹாஹா கோவம் வராம இருக்குமாடா   நானும் மனுஷன் தானே!!! ஒரு முறை கோவப்பட்டு அவளை ஹாஸ்பிடல படுக்க வச்சது போதாதா   அவளுக்கு சில விஷயங்கள்ல கொஞ்சம் மெச்சூரிட்டி கம்மி டா அதான் இப்படி நடந்துக்கறா

 

 

 

வெளில  போயிருக்கா  இல்லை கூடிய சீக்ரம் அதுவும்  வந்துடும்”  என்றுகூலாகசொல்ல

 

“எல்லாம் ஓகே டா ஆனா   அவ எதாவது காலேஜில ஜாயின் பனிருந்தா பரவால்லை IT ல ஜாயின்  பன்றேன்னு  சொல்லிட்டு  போயிருக்காளே!!!”

 

“மச்சான் உன்ன விட என் பொண்டாட்டிய பத்தி எனக்கு நல்லா தெரியும் அவளால IT ல ரொம்ப நாளைக்கு ஒர்க் பண்ண முடியாது நீ  வேன்னா பாரு சீக்ரம் அவ அங்கேயே ஒரு காலேஜில  ஜாயின்  பனிடுவா” என்க

 

சக்தி சொன்னது போலவே ஒருவாரம் கூட மது கம்பெனி செல்லவில்லை கோவையிலுள்ள புகழ் பெற்ற கல்லூரியில்  பணியில்  அமர்ந்து விட்டாள்

 

மொழி தொடரும்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!