Un Vizhigalin Mozhi Ennavo 11
ஜெய் ஸ்ரீ ராம்
EPI -11
சக்தி அவளிடம் குனிந்து” நிமிர்ந்து என்னை பார்டி “என்றான் கட்டாய குரலில். நிமிர்ந்து பார்க்க அவளுக்கு பிடித்த அழகான மீசையோடு நின்றிருந்தான் அவளின் அய்யனார்.
Advertisement
இடது கையால் மீசையை முறுக்கி இரு விழிகளையும் உயர்த்தி எப்படி?? என்று கண்ணடித்து கேட்க, முகம் முழுக்க வெட்கத்தோடு அவனைப்போலவே ஒற்றைக் கண்ணடித்து சூப்பர்!!!! என்று தலையசைத்தாள். அந்த விழிகளில் வா என்ற அழைப்பு இருக்க,
அவளின் விழிகளின் மொழியை புரிந்தவன். முத்தமிட நெருங்க அவள் வேண்டாம். என்று தலையசைத்து பின்னால் நகர்ந்தாள்.
“ஏமாற்றத்தோடு…… ஏன் பிடிக்கலையா??? என்று அவளைப் பார்க்க அவள் தூரத்தில் கை காட்டினாள். கைகாட்டிய திசையில் திரும்பிப் பார்க்க கங்காவும், காவேரியும் மற்றவர்களோடு பூ பறித்துக் கொண்டு தீவிரமாக ஏதோ பேசுவது போல் பாவனை செய்து இவர்களையே ஆராய்ச்சியாய் பார்த்திருந்தனர்.
Advertisement
இந்தப்பக்கம் வைக்கோல் போர் போடுவது போல் அதே ஆராய்ச்சி பார்வையை தான் பார்த்திருந்தனர் திருப்பதியும், பழனியும்.
Advertisement
தன் இடது கையை மனைவி தோளில் வைத்து அதே கையால் தன் தாடயை தாங்கி நின்றவன். சத்தமாக” ஸ்ரீமா, காலங்காத்தால இந்த கொசுங்க தொல்லை தாங்க முடியல டி, நிம்மதியா என் பொண்டாட்டி கூட ரொமான்ஸ் கூட பண்ண முடியலை.”
“அதுங்க மட்டும் வயசான காலத்துல ஜோடி ஜோடியா சுத்துதுங்க பாரேன்”. என்று பெருமூச்சு விட,
“ஐயோ !பிரியன் அமைதியாய் இருங்களேன் ப்ளீஸ்.” என்று அவள் முணுமுணுத்து அவன் கையை தட்டி விட,
Advertisement
“நீ… ஏண்டி செல்லம் டென்ஷன் ஆகுற, அந்த கொசுங்களுக்கெல்லாம் பயப்படக்கூடாது சரியா, ” அவள் தலையோடு தலையை முட்டியவன். அனைவரும் பார்த்திருக்க நெற்றியில் முத்தமிட்டு விட்டான்.
மல்லிகை மொட்டு பறித்து முடித்து தோட்டத்தை விட்டு வெளியில் வந்த சில பெண்களில் ஒருவர்.” என்ன காவேரி உன் நாத்தனார் பொண்ணு உன் பையன கைக்கொள்ள போட்டுட்டா, போலவே “
“ஒத்த புள்ள பெத்து வச்சிருக்க, இனி உன் பாடு கஷ்டம்தான். கொஞ்சம் சூதானமா இரு, இல்லன்னா சீக்கிரம் தனிக்குடித்தனம் தான் “என்க
காவேரி அமைதியாக கங்காவை பார்த்துவிட்டு மதுவிற்கு, உடைக்கு மேட்சான ஆரஞ்சு நிற ரோஜாவை பறித்துக்கொண்டு மதுவை நோக்கி சென்றார். அவர் எப்போதும் அமைதிப்படை தானே!!!!!!!
[the_ad id=”6605″]
இங்கு நம் அதிரடிப்படையோ….. ” வந்தமா, பூவப் பரிச்சமானு இருக்கணும். இந்த குடும்பத்தை பிரிக்கற வேலை எல்லாம் இங்கே வேண்டாம்”. என்று கடிய
அப்பெண்மனியோ!”நாட்டுல நடக்காதத சொன்ன மாதிரி குதிக்கற, என் வீட்ல நடந்தது நான் சொன்னேன்”.
“ஆமா, எப்போ பாரு வீட்ல, உன் மருமகளை குத்தம் சொல்லிட்டு இருந்த, அதுவும் எவ்ளோ நாள் தாங்கும். அதான் தனியா போய்ட்டாங்க, குடும்பம் ஒண்ணா இருக்கறதும் தனியா பிரியரதும் அந்த வீட்டு பொம்பளயாளதான்.
“கொஞ்சம் விட்டு குடுத்து போனா, என்ன குறைய போது. அதோட, என் மருமகள் என்னைக்கும் தனி குடுத்தனம் போக மாட்டா , எங்க வளர்ப்பு அப்படி.””
ஒன்னுக்கு ஒன்னு சண்டை போடுங்களே தவிர குடும்ப மானத்த வாங்காதுங்க, என்று காட்டாமாக முடித்து அப்பெண்னையும் அனுப்பி விட்டார்.
இவை அனைத்தும் தோட்டத்தில் நடந்ததால் மதுசக்தி காதில் கேட்கவில்லை.
காவேரி ரோஜாவை மதுவின் தலையில் சூடி விட, கங்கா அந்தப் பெண்ணின் கால் பிடி மண்ணை எடுத்து ” மூணு வருஷம் கழிச்சு இப்பதான் ஒன்று சேர்ந்து இருக்காங்க, அதுக்குள்ள கண்ணு வைக்குது பாரு என்று முணுமுணுத்துக்கொண்டே…….. இவர்களுக்கு திருஷ்டி எடுத்தார்.
சக்தி மதுவை பார்த்து கிளம்பலாம் என்பது போல் , தன் வண்டியை எடுக்க அவளோ தன் மாமாவை நோக்கினால். என்னதான் புருஷனாக இருந்தாலும்.
மூன்று வருடம் இவன் இல்லாத போது அவளைக் கண்ணுக்குள் வைத்து பாதுகாத்த வரில்லையா, அதோடு தனக்காக அவர்… பெற்ற மகனோடு பேசாமல் இருக்க,
தான் மட்டும் எப்படி அவனோடு உறவாட, இவர் இல்லை எனில் அவன் உறவு எப்படி கிடைத்திருக்கும்.அவள் அமைதியாய் தன் ஸ்கூட்டியை எடுக்க போக,
காவேரியும், கங்காவும்” சக்திகூட போடா என்க”, இல்லை என தலையசைத்து , மீண்டும் ஒரு முறை பெரிய மாமாவை பார்த்து விட்டு வண்டியை எடுத்தால்.
சட்டென்று அவளை நிறுத்திய சக்தி, “அப்பா…. என்று சத்தமாய் அழைத்தவன், உங்க தங்கச்சி பொண்ணு என் கூட வண்டில வரதுக்கு உங்க கிட்ட பர்மிஷன் கேட்கிறா,
வாய் விட்டு சத்தமாக சிரித்தவர், உன் பொண்டாட்டிய நீ கூட்டிட்டு போறே, என்கிட்ட எதுக்குப்பா பர்மிஷன் கேட்கனும் என்று சிரிப்போடு கேட்க,
மது சட்டென்று தன் நெஞ்சில் கை வைத்து, இது எப்போ என்றபடி சக்தியை பார்க்க, உன்னை ஊருக்கு அனுப்பனதே இதுக்குத்தான்.
“ஸ்ட்ரைட்டா காலிலேயே விழுந்துட்டேன்.” எப்படி….. என்று தன் சட்டை காலரை உயர்த்தி கேட்க, மதுவிற்கு தான் ஹார்ட் அட்டாக் வந்தது. ஒரே நாளில் இப்படி அடிப்பது எல்லாம் சிக்சராக, அடித்தால் அவளும் தான் என்ன செய்வாள்…….
இருவரும் தலையசைத்து விட்டு கிளம்ப, பெரியவர்கள் தங்கள் துணையோடு நின்று கை அசைத்தனர். அவர்கள் சென்றதும் கங்கா, ” அவ புருஷன் கூப்பிட்டும் மாமாகாக பாக்கறா, மது நம்ம குடும்பத்த பிரிச்டுவானு நீங்க நினைக்றிங்களா அக்கா “என்க,
“அச்சச்சோ, என்ன சொல்ற, மது நான் பார்த்து வளர்த்த பொண்ணு அப்படில்லாம் நெனச்சேன்வை, கடவுளே என்ன இந்த உலகதுல விட்டு வைக்க மாட்டான் என்றவர் அங்கேயே அமர்ந்து அழுக ஆரம்பித்து விட்டார்.
பழனி” ஊருல ஏதோ சொன்னா நீ அண்ணிய கேள்வி கேப்பியா, கங்காவை அடிக்க கிளம்ப, அவரை சமாதானம் செய்த திருப்பதி சும்மா சும்மா பொண்டாட்டிய அடிக்க பாயாத, உன்ன பார்த்து தான் சக்தி காத்துக்கிட்டான் போல, “
என்ன தான் சக்தியை மன்னித்து விட்டாலும் , சக்தி….. அன்றைய நாள் மதுவை அடித்ததை அவரால் தாங்க முடிய வில்லை. “ஏய் உனக்கு வேற தனியா சொல்லணுமா எதுக்கு அழுதுட்டு இருக்க உள்ள போ என்று காவேரியை திட்ட “
கங்கா , மாமா தனக்காக கணவரை அதட்டியதை மறந்தவர், “தேவை இல்லாமல் அக்காவை திட்டாதிங்க மாமா, அப்புறம் யனுக்கு கெட்ட கோபம் வந்துடும். என்று சண்டைக்க்கு செல்ல,
[the_ad id=”6605″]
மறுபடியும் பழனி “அண்ணாவை எதுத்து பேசுற, என்று கங்காவை அடிக்க போக, மனோ மட்டும் இருந்திருந்தால் சபாஷ் சரியான போட்டி என்றிருப்பான்.
இதைப்பார்த்த பெண்களுக்கு, அது சண்டையாக தெரியாமல் ஒரு குடும்பத்தின் ஒற்றுமையாக தெரிந்தது. பெற்ற பிள்ளைகளை விட தங்கை மகள் மேல் இவர்களின் பாசம் பார்க்க,
மது மிகவும் கொடுத்து வைத்த பெண்ணாகத்தான் தோன்றியது, இந்த காலத்துல என்னதான் நாத்தனார் மகளாக இருந்தாலும். மருமகளை கைக்குள் வைத்து பாதுகாக்கும் மாமனார், மாமியார் எங்கே இருக்கிறார்கள்…..
ஆயிரம் சொல்லுங்க தாய் மாமான்ற, உறவே ஒரு உன்னதமான உறவு தாங்க, பொறந்ததுல இருந்து நம்ம கூட சண்டை போடற நம்ம உடன் பிறப்பு, நம்ம குழந்தைனு வரும் போது அப்படி பாத்துபான்.
என்னமோ அவனே திரும்ப பொறந்த மாதிரி பாத்துபான், பெத்தவங்களுக்கு அப்புறம் தாய்மாமன நம்பி குழந்தைய வெளியில் அனுப்புலாம்ங்க,
அப்படி பட்ட தாய் மாமா கெடச்ச அர்ஜுன், மதுஸ்ரீ, யாழினி எல்லாம் குடுத்து வச்சவங்க தான். இவங்கள மாதிரி குடுத்து வச்சவங்க நம்ம ஊருல எவ்ளவோ பேரு இருக்கும்ங்க……….
வீட்டில் அவ்வளவு அலப்பறையை கிளப்பியவன் முகம் இப்போது ஏனோ உம்மென்று இருக்க, ஸ்ரீ யால் தாங்க முடியவில்லை.
“ஏன் மாமா என்ன ஆச்சி” என்று விசாரிக்க, “ம்ம்ம்ம் ச் ச் போடி” என்றான் இறங்கிய குரலோடு,
“சொல்லு மாமா”என்ன ப்ரோப்லம், அதற்கும் அமைதியாய் இருக்க நீ சொல்லல நான் வண்டில இருந்து குதிச்டுவேன் , என்று விழபோக சட்டென்று பிரேக் போட்டு அவளை முறைக்க அதை கண்டு கொள்ளாமல் “சொல்லு பிரியன் ” என்றாள்.
வண்டியை ஸ்டார்ட் செய்தவன் ஆழ்ந்த குரலில் “இல்லடி அப்பா சொல்லலனா, நீ என் கூட வர மாட்டியா, அப்போ நான் உனக்கு முக்கியம் இல்லையா”, எல்லார விட நீ மட்டும் தான் முக்கியம்னு சொல்லு என்று அவன் மனம் எதிர் பார்க்க,
அவன். மனைவியோ !!! “நிச்சயமா வந்திருக்க மாட்டேன் . நீங்க மாமா கூட சமாதானம் ஆகலை நாளும், உங்க கூட அனுப்பிருப்பார். அதுக்காக நீங்க முக்கியம் இல்லைனு இல்லை”.
“என் மனசுல உங்களுக்கான இடம் வேற, அதே சமயம் யாருக்காகவும் யாரையும் நான் விட்டு குடுக்க மாட்டேன். நம்ம குடும்பம் எப்பவும் இதே மாதிரி ஒண்ணா இருக்கணும்” என்க,
கணவனோடு தனியாக இருக்க ஆசைபடும் பெண்களுக்கு இடையில், தன்னை அனுஅனுவாய் காதலித்தாலும். தன்னை விட தன் குடும்ப ஒற்றுமை முக்கியம் என்று நினைக்கும் மனைவியை இன்னும் இன்னும் பிடித்தது ……
“இவளையா நான் சின்ன புள்ள, மெச்சூரிட்டி இல்லைனு சொன்னேன்”. வியந்து போய் சைடு மிரரில் அவளை பார்த்தான்.
சூழ்நிலை கனமாய் இருப்பதை உணர்ந்தவள்.பின்னால் இருந்து மீசையை இழுத்து, ” இதை வைக்க தான் தாடி வச்சிருந்தயா, நான் கூட என்ன பிரிஞ்சு இருந்த சோகதுல வச்சிட்டனு நெனச்சேன் “என்க,
ஹா ஹா என்று சிரித்து, “ஆமா செல்லம், நீ கேட்டேன்னு தான் வச்சேன். உனக்கு சர்ப்பரைஸ் குடுக்கலாம்னு தான். நீ மாட்டேன்னு சொல்லியும் ஊருக்கு அனுப்பினேன்.
ஆனால் மனசே கேக்கலை, உன் பர்த்டே அன்னிக்கு உன் கூட இருக்கணும்னு தோணுச்சு அதான் வந்துட்டேன்.. உனக்காக வச்ச மீசை நீ தான் முதல்ல பாக்கணும் நெனச்சேன். “
அதனால” நேத்து வைக்காம இன்னைக்கு வச்சிட்டேன்.எப்படி உன் அய்யனார் மாதிரி இருக்கேனா “என்று மிரரில் அவளை பார்த்து கண்னடிக்க,
கொல்றடா என்னை……… என்று நினைத்து ” ம்ம்ம்ம் , அப்டியே நம்ம மேரேஜ் அப்போ இருந்த மாதிரியே செமயா இருக்கு, “
“அடி பாவி, அப்போ இருந்தே என்ன சைட் அடிக்கிறயா, பிடிக்கல பிடிக்கலனு சொன்ன”,
“நீங்க சொன்னிங்க நானும் சொன்னேன்,”
“அப்போ நான் பிடிச்சிருக்கு சொல்லி இருந்தால், நீ பிடிச்சிருக்கு சொல்லிருப்பயா, பப்ளி” என்க
அதற்குள் காலேஜ் வந்திருக்க “பாய் மாமா, “என்றபடி அவள் இறங்க
“ஏய் பதில் சொல்லிட்டு போ” என்றவன் அவள் கையை பிடித்து இழுக்க, அவனிடமிருந்து கையை மீட்டவள்.
“பதில் தெரிஞ்ச கேள்விக்கு எதுக்கு ஆன்சர் தேடுற, இனிமேல் காலேஜ்ல கை லாம் பிடிச்சு இழுக்காதிங்க, லெக்சரர் ஸ்டுடென்ட் கிட்ட ஈவ்ட்டிசிங்… பண்றீங்கனு, யாராவது கரஸ் கிட்ட கம்பளைண்ட் பண்னிட போறாங்க” என்றபடி நகர,
முதல் பதிலில் தன்னை மறந்தவன், பின் சுதாரித்து “அடியேய்….. என் பொண்டாட்டி நான் கை பிடிச்சி இழுக்குறேன், எவண்டி என்ன கேப்பான்” என்று எகிற,
“போடா அய்யனார்” , என்று உதடசைத்து புன்னகையோடு வகுப்பிற்கு சென்று விட்டாள்.
இந்த மகிழ்ச்சி எல்லாம் முதல் ஹவர் முடியும் வரை மட்டுமே, வகுப்பில் எல்லாரும் பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்கள் கூட மீசை சூப்பரா இருக்கு சார் என்க .
மதுவின் முன்பே அவனிடம் ஒரு பெண்” இப்போ தான் தமிழ் ஆக்டர்ஸ் மாதிரி இருக்கு” என்று வர்ணிக்க, அவனும் குறும்பு சிரிப்புடன் “அப்போ!! இவ்ளோ நாள் பாக்கிற மாதிரி இல்லயா” என்க,
” இல்லை சார், இவ்ளோ நாள் ஹிந்தி ஆக்டர் மாதிரி இருந்திங்க”என்க, “ஹ்ம்ம் என்றவன்” எவ்ளோ!! ஐஸ் வச்சாலும் ப்ராஜெக்ட் கரெக்டா இருந்தா தான் சைன் பண்ணுவேன்”. என்று அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டான்.
பிறகு, என்ன……. மது என்ற வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டது. இது போல் ஆசிரியர்களை கமெண்ட் அடிப்பது அவர்களுக்கு சாதாரணம் தான். சக்தி இடத்தில் வேறு ஒருவர் இருந்திருந்தால் இவளும் செய்திருப்பாள்.
சக்தியை பிறர் சைட்டு அடிப்பதை அவளால் தாளமுடியவில்லை. இந்த ஒரு கிளாஸ்ல மட்டும் இப்படி என்றால் காலேஜ் முழுவதும் நினைத்தால், இதயம் நின்று விடும் போலானது.
[the_ad id=”6605″]
அன்று மாலையே !!!அவனிடம் வந்தவள் முறைப்போடு, “இதை இன்ணைக்கே! எடுத்துடுங்க எனக்கு பிடிக்கல” என்று விட்டாள்.
சக்தி நீ என்ன லூசா என்பது போல் பார்த்து,” ஏன் பிடிக்கல சரியானா காரணம் சொல்லு” என்க
“அதெல்லாம் சொல்ல முடியாது……. எனக்காக, தான வச்சீங்க எனக்கு இப்போ பிடிக்கலை, எடுங்க… ” என்று தீர்மானமாய் கூற,
“யேய், என்னடி நெனச்சிட்டு இருக்க, நீ??????? நான் என்ன உன் வீட்டு வேலைகாரனா, இல்ல நாய் குட்டியா நீ வை சொன்னா வைக்கவும் வேணாம் சொன்னா எடுக்கவும்..” என்று பாய,
“இது தவிர வேற ஒருத்தன்ங்களும் இருக்காங்க, நான் சொல்றத செய்றதுக்கு””” என்று, அவள் எப்போதும் கொடுக்கும் போஸ்சான, இரு கைகளையும் இடுப்பில் வைத்து முறைக்கும் போஸ் குடுக்க,
மனோனு மட்டும் சொல்லு உனக்கு இருக்கு, என்று கோபமாய் இவன் நினைக்க, அவன் மனைவி அவன் அருகில் வந்து நிறுத்தி நிதானமாக” என் புருஷன்” என்றால் அழுத்தமானகுரலில்.
கோபம் இருந்த இடத்தில் மகிழ்ச்சி வந்து விட கெஞ்சும் குரலில்” ஸ்ரீ செல்லம், ஏன்னு மட்டும் சொல்லுடி, ப்ளீஸ்….. “என்க,
பிரியன் கோபக்குரலில் இறங்க சண்டிதனம் செய்த வேதாளம் கெஞ்சல் குரலில் இறங்கி விட்டது.
“இங்கே!!! பாரு மாமா, உன்ன யாரும் சைட்டு அடிக்கறதையும் கமெண்ட் பண்றதையும் நான் விரும்பல, என்று திட்ட வட்டமாய் கூற, சிரிப்பு தான் வந்தது இவனுக்கு.
காலையில் தான் இவளை மெச்சூரிட்டியானவனு நெனச்சேன் அதுக்குள்ள சின்ன புள்ள தான்னு நிரூபிக்கராளே !!!என நொந்து.
“என்ன பாரு ஸ்ரீ, நான் ஒரு ஆசிரியர்.. என்ன பாக்கற என்னோட ஸ்டுடென்ட்ஸ் என்ன கமெண்ட் பண்ண தான் செய்வாங்க. அது எல்லாம் ஈசியா எடுத்துகணும் சரியா, இதுவரைக்கும் நீயும் மத்தவங்களை கமெண்ட் பன்னிட்டு தானே இருக்க,
“அப்போ, என்ன யாராவது கமெண்ட் பண்ணா ஈஸியா விட்ருவிங்களா”, அப்படி பட்ட வேலை வேணாம் விட்ருங்க, பழைய மாதிரி விவசாயம் மட்டும் பண்ணுங்க, அதுவே நமக்கு போதும்…… “
உன்ன எவனாவது கமெண்ட் பண்ணாங்க மூஞ்சி முகர எல்லாம் பேத்ருவேன் என நினைத்தவன், “ஸ்ரீ அப்டிலாம் விட முடியாதுடா , இங்க நமக்கு நெறய ஷேர்ஸ் இருக்கு, ஒரு நாளைக்கு கண்டிப்பா விட்டுருவேன். ஆனால் இப்போ இல்லை என் பொண்டாட்டி படிச்சி முடிச்சிட்டு, இங்கேயே ஜோய்ண்ட் பண்ணதும் நான் விலகிடுவேன்”.
“ம்ம்ம்ம்ப்ச்…. இப்போ என்ன மீசை எடுக்க முடியாது. அப்படி தான போடா”, என்று அவனை முறைத்து சென்று விட்டாள். மறுநாள் காலை கல்லூரி செல்லும் வரை அவனோடு பேசவே இல்லை.
எப்போதும் போல் ஸ்ரீ வகுப்பில் நுழைய தோழிகள் இவளை கண்டு கொள்ளாமல் தங்களுக்குள், எதையோ கிசுகிசுக்க , மதுவும் ஆர்வமாய் கவியிடம் கேக்க, “இது சக்தி சார் விஷயம் உனக்கு தான் அவரை பிடிக்காது இல்ல விடுடி “என்று வேறு கதை பேச,
“ஏய், என்னடி ப்ளீஸ் சொல்லுடி “என்று கெஞ்சிகேக்க “அது ஒன்னும் இல்லடி, சக்தி சார்க்கு கல்யாணம் ஆகிடுச்சாம், நேத்து பஸ்ட் இயர் கிளாஸ்ல மீசை சூப்பர்னு சொன்னதுக்கு, என் வைப் ரொம்ப ஆசை பட்டாங்க அதான் வச்சிருக்கேன்னு சொன்னாராம். அதான் எல்லாம் சோக கீதம் வாசிக்கறாங்க,
அடுத்த ஹௌர் கிளாஸ்க்கு சக்தி வந்தவன் , இப்போ ஹாப்பியா என்பது போல் இவளை பார்க்க, அவன் விழிகளின் மொழியை புரிந்தவள். இரு கைகளையும் கன்னத்தில் தாங்கி பிறருக்கு தெரியாமல் முகம் மறைத்தவள்.
தன் இரு உதடுகளை குவித்து முத்தம் வைப்பது போல் சைகை செய்ய, ஆளானப்பட்ட சக்தியே!!! ஒரு நொடி ஜர்க்காகி விட்டான்……..
மொழி தொடரும்……….
