Un Vizhigalin Mozhi Ennavo 14
ஜெய் ஸ்ரீ ராம்
EPI -14
மது” சரி அப்போ எல்லாரும் போய்ட்டு வரலாம்”, என்று வீட்டினரை அழைக்க தோட்டத்தை காரணம் காட்டி, அதிக வேலை இருக்கிறது என்றுவிட்டனர்.
Advertisement
மது, மனோவை பார்க்க”, போகலாம் “என்று தலையசைத்தவன். கங்காவின் முறைப்பை கண்டு “நான் சென்னை போறேன் வேலை இருக்கு” என்று விட்டான். யாழி பேபி கூட சமத்தாக “நான் வரலை பாட்டி கூட இருக்கேன்” என்றது .
சக்திக்கு தான் இதெல்லாம் மதுவோட எக்ஸாம் முடிஞ்ச பின்னாடி வைத்துக்கொள்ள கூடாதா…. என்று இருந்தது. அவன் தன் மறுப்பை கூற நினைக்க….
அர்ஜுன் இவன் எண்ணத்தை புரிந்து. என்றும் இல்லாமல் “மது போய் ட்ரெஸ் பேக் பண்ணு” என்று சத்தமாய் சொல்ல,
Advertisement
யோசனையாய் சக்தி அர்ஜுனை பாக்க,” டேய் நீ எதும் பேசாத, அமைதியா கெளம்பு, வீட்டுல இருக்கவங்க பேச்சை கேட்டு நட.. ” என்று சக்திக்கு மட்டும் கேக்குமாறு முணு முணுத்து செல்ல,
Advertisement
“ச்ச் ச” என்று சலித்து கடைசியாய் மதுவின் அறைக்கு வந்தவன். “யேய்! உங்க அண்ணன் என்னடி நெனச்சிட்டு இருக்கான் “என்று பொறுமியவன்.
“போய் !வீட்ல சொல்லிடு நாம எங்கயும் போகல “என்று காட்டமாக கூற,” “
என்னதான் மாமா ப்ரோப்லம் சொன்னா தான தெரியும். இந்த கிளைமேட் ரொம்ப நல்லா இருக்கும் போய்ட்டு வரலாம்”. ப்ளீஸ்…. என்று முடிக்க.
Advertisement
“ஏன்டி… நீ தெரிஞ்சு தான் பேசுறயா, நம்மள அவங்க பிக்ணிக் அனுப்பல.. ஹனி மூணுக்கு அனுப்புறாங்க, இதெல்லாம் நெக்ஸ்ட் இயர் போலாம் இப்போ வேண்டாம்.”
“சோ வாட் மாமா, அவங்க எங்க அனுப்புனா என்ன, நம்ம பிக்கணிக் தான் போக போறோம்.” பயப்படாதிங்க, எனக்கு வேற எந்த ஐடியாவும் இல்லை….” என்றுவிளையாட்டாய் முடிக்க,
மதுவை நெருங்கி நின்றவன், “என் பயம் உன்னை நெனச்சி இல்ல.. என்ன நெனச்சி, என்னால…… உன்ன பக்கத்துல வச்சிட்டு சும்மா இருக்க முடியாது. புரிஞ்சிக்கோடி ப்ளீஸ்… “என்று ஏக்கத்தோடு கூற
“நானும் உன்ன சும்மா இருக்க சொல்லலியே… “என்று அவனை விட ஏக்கமாய் அவள் கூற,” அடிப்பாவி உன்னை சின்ன பிள்ளைனு நெனச்சேன்.”
“நீ, நனச்சிக்கோ காயவச்சிகோ, நீ வேஸ்ட் மாமா, உன்னால அம்மா என்ன திட்றாங்க, வேற யாராவது உன்ன கல்யாணம் பன்னிருந்தா உனக்கு பேபி இருந்துருக்குமாம்,” என்று அவள் சொல்லி முடிக்கும் முன் காவேரி அவளை அழைக்க வெளியில் சென்று விட்டாள்.
மறுநாள் காலை அவர்கள் ஏற்காடு வந்து இறங்கினர்.மது அப்படி சொன்ன பிறகு சக்தி எதுவும் பேசவில்லை. அமைதியாக கிளம்பிவிட்டான்.
ஏழைகளின் ஊட்டி எனும் ஏற்காட்டில் வந்திறங்க, அழகான மலைகள், பள்ளத்தாக்கு, காப்பித் தோட்டம் சிலுசிலுவென வீசும் காற்று என வேறு உலகத்திற்கு இட்டுச் சென்றது.
அன்று முழுவதும் போட்ஹவ்ஸ், லேக், குதிரை சவாரி, கிளியூர் நீர்வீழ்ச்சி, என்று சென்று வந்தனர். பின் பக்கோடா பாயிண்ட் சென்று அழகான வ்யூ பார்த்து சேர்வராயன் குகை கோவில் சென்று தரிசித்து இரவு உணவு முடித்து காட்டேஜ் திரும்ப,
தனிஅறையில்…. இருவரின் பார்வையும் ஒன்றோடொன்று உரசிக் கொள்ள, என்ன செய்வதென்று தெரியாமல் டிவி போட்டு எதோ மியூசிக் சேனல் மாற்றியவள். ஏற்கனவே அடுக்கி வைத்திருந்த உடைகளை கலைத்து திரும்ப அடுக்கி வைத்திருந்தாள்.
இதுவரை அவளுக்கு அவள் வாழ்நாளில் உடையை மடித்து வைத்ததாக நினைவே இல்லை. முகத்தில் அப்படி ஒரு வியர்வை ஜனவரி மாத ஏற்காட்டின் குளிரிலும் வியர்த்திருந்தது.
சேர்வராயன் கோயிலுக்கு சென்றதால் சேலை உடுத்தியிருந்தாள். நெற்றியில் பெரிய பொட்டு வகிட்டில் சக்தி இட்ட குங்குமம் அந்த வியர்வையிலும் அழகாய் இருந்தது.
அவளின் பயம் எல்லாம் பார்க்க சக்திக்கு சிரிப்பு தான் வந்தது “நேத்து என்ன வேஸ்ட்னு சொல்லிட்டு இன்னைக்கு எதுக்கு இப்படி பயப்படுறா” என நினைத்தவன். அவளை சீன்டும் விதமாய் நெருங்கி நின்றான்.
[the_ad id=”6605″]
ஸ்ரீமா……… மாமா கிட்ட என்ன பயம், என்று மேலும் நெருங்கி நிற்க மதுவின் இதயம் வேகமாக துடிக்க…., அவனை விட்டு பின்னகர்ந்து விட்டால், அவளின் கறத்தை சட்டென்று பிடிக்க,
“ப்ளீஸ் மாம்ஸ் விடு…….என்று தட்டு தடுமாறி அவள் உரைக்க, கலகலவென்று சிரித்து” யாரோ! என்ன வேஸ்ட்னு சொன்னதா நியாபகம்.” என்று அவளை கையில் ஏந்தினான்.
கண்ணை மூடி அவன் சட்டையை இருக்க பற்றியவளின் கை அப்படி நடுங்கியது. “சில் பப்ளி…. ஏன் இப்டி பயப்படுற, உனக்கு பேபி வேணும் தான, இப்டி பயப்படுற அப்புறம் பேபி எப்டி வரும்.அவளின் காதோரம் ரகசியமாய் கிசுகிசுக்க,
அழுகைக்கு அவள் முகம் தயாராக, விளையாட்டை கை விட்டவன் கோபமாய்… ” இங்க பாரு ஸ்ரீ அம்மா சொன்னாங்க, ஆட்டு குட்டி சொன்னாங்கனு எல்லாம் பேபி பெத்துக்க முடியாது. உனக்கா தோணனும்,”
“இதுக்கெல்லாம் உனக்கு என்னை பிடிச்சிருக்கனும், மத்தவங்க சொன்னதுக்காக மனைவின்ற கடமையை செய்ய நினைக்காத, படிச்சி முடி அப்புறம் பாக்கலாம்”.. என்று அடக்கப்பட்ட கோப குரலில் கூறி இறக்கி விட்டவன். படுக்க ஆய்தமாக,
இப்போது என்ன செய்ய….. என்று மதுவிர்க்கு தெரியவில்லை. அவன் கையை பிடித்து “உங்கள பிடிக்கலனு நான் சொன்னனா,” என்று கேட்க அவனுக்கே! அவன் கேள்வி ஞாயமாய் தெரியவில்லை.
இருந்தாலும் திரும்ப கேட்டான்.”என்ன உண்மையா லவ் பண்றியா, இல்ல வீட்டுல சொன்னதால பொண்டாட்டி…. கடமைய செய்ய நினைக்கறியா”,
மதுவின் விழிகள் அவனின் முதல் கேள்வியில் மயக்கத்தை காட்டி, பின் அடுத்த கேள்வியில் அக்னியை காட்ட…. அவள் விழிகளின் மொழியை புரிந்தாலும்” ப்ளீஸ் சொல்லு, லவ் பண்றியா…… ஸ்ரீ என ஏக்கமாய் கேட்ட்டான்.
அவள், அவனோடு கடமைக்காய் வாழ்ந்தாள் போதும் என்று நினைத்திருந்தால். அவன் ஏன் மூன்று வருடம் அவளை நெருங்காமல் விரதம் இருந்திருப்பான்.
அவனுக்கு வேண்டியது அனுஅனுவாய் அவனை காதலித்து, அவனோடு வாழ்வை, ரசித்து வாழும் மனைவி தானே !தவிர அவன் நெருங்கி நின்றால் இப்படி பயத்தில் நடுங்கும் மனைவி இல்லை.
“எனக்கு சொல்லவெல்லம் தெரியாது, எப்பவும் உங்க கூட சண்டை போடணும் போல இருக்கு, உங்கள சீண்டிட்டே இருக்கணும் போல இருக்கு, நீ என்கிட்ட கெஞ்சிட்டு, கொஞ்சிகிட்டே இருக்கணும் . “
“உன் கூடவே எப்பவும் இருக்கணும் போல இருக்கு. இதுக்கு எல்லாம் பேரு லவ் னா நான் பிறந்ததிலிருந்து உன்ன லவ் பண்றேன் மாமா, “
“ஐ லவ் யூ சோ மச்…… “
என்று தன் கைகளை விரித்து காட்டி விழிகளில் மின்னல் வெட்ட கூற,
அவளைப் பார்த்து இன்னும் இன்னும் ஆசை பொங்கியது. நாம காதலிப்பதை விட நம்மள அதுவும் நமக்கு பிடிச்சவங்காளால் காதலிக்கபடுற, சுகமே வேறங்க… அத அனுபவிச்சாதான் தெரியும்.
சக்திக்கும் அப்படி தான் இருந்தது அவ்வளவு நேரம் இருந்த , இருக்கமான மனநிலை மாறி, உல்லாச மனநிலைக்கு வந்தவன். “அப்போ ஏண்டி, நான் கிட்ட வந்தா பயப்படுற “என்று சரசமாய் கேக்க,
“நான் பயபடல மாமா, ” ஆனா…… என்று இடைவெளி விட “ஆனா” என்று சக்தியும் அவளை போலே….. கேக்க, “
“ஏன்னு தெரியல, இப்போ…… நீங்க தூரமா இருந்தா, உங்க பக்கத்துல வரணும்னு இருக்கு, பக்கத்துல வந்தா…… என் ஹார்ட் பட பட னு அடிக்குது மாமா…..” என்றாள் திக்கி திணறி,
“ம்ம்ம்ம்….. அது ஏன்னு கண்டுபிடிச்சிடலாம், சரியா,” என்றவன். தன் நீண்ட நாள் சந்தேகமான கேள்வியை கேட்டான். “ஏண்டி என்ன அந்த பிரியா கூட சேத்து வச்சி பேசின , அதுவும் டிவோர்ஸ் தரேன்னு சொன்ன, எவ்ளோ !கஷ்டமா இருந்துச்சி தெரியுமா, அதான் கோபமா உன்ன அடிச்சிட்டேன் சாரிடி….. “என
“இல்ல, மாமா… நான் தான் சாரி சொல்லணும், சாந்தி சித்தி சொன்னதை நம்பி உங்களை கஷ்டப்படுத்தனது என் தப்பு தானே!!!!”
[the_ad id=”6605″]
“ஆனா, அப்போ கூட நான் நம்பலை, நீங்க வீட்டுக்கு வராமல் ட்ரிங்க்ஸ் பண்ண ஆரம்பிச்சீட்டிங்களா, அதான் அப்படி சொல்லிட்டேன் சாறி மாம்ஸ்” யென்றால் உண்மையான வருத்தத்துடன்.
நான் ட்ரிங்க்ஸ் பண்ணது எல்லாம் உன்னால தாண்டி என்று நினைத்து வெளியில். “சரி விடுடி….” (ஒரு வேளை இதை அவளிடம் சொல்லியிருந்தால் பின்னால் பிரச்சனை வராமல் இருந்திருக்குமோ…….)
“ம்ம்ம்ம் சரி விடுடி….. இனிமேல் நமக்குள்ள இந்த சாரி, தேங்க்ஸ் எல்லாம் வர கூடாது, சரியா…….”
அவள் “ம்ம்ம்ம்” என்று தலையை அசைக்கவும்.
“சரி நம்ம அந்த ஹார்ட் க்கு என்ன ப்ரோப்லம்னு பாக்கலாமா…..”என்று அவளை இழுத்து அனைத்து அவள் இதயம் இருக்குமிடத்தில் முகம் புதைத்தான்.
இருமனம் இணைந்த பின் பேச்சுக்களுக்கு அங்கே என்ன வேலை…….
குங்குமம் ஏன் சூடினேன்
கோலமுத்ததில் கலயத்தான்
கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன் கூடல்
பொழுதில் கசங்கதான்
மங்கை கூந்தல் மலர்கள் எதற்கு
கட்டில் மேலே நசுங்கத்தான்
தீபங்கள் அணைப்பதே புதிய பொருள்
நாந்தேடத்தான்……….
டிவியில் பாடல் ஒலிக்க அந்த பாடல் வரிகளை போல் அங்கு அனைத்தும் நடந்தது.
மது அறிந்தும் அறியாத பெண் தான், எப்போதும் போல் சக்தி ஆசிரியராக கற்று குடுக்க, மது என்னும் மாணவி தட்டு தடு மாறி கற்று கொண்டிருந்தாள்…..
அடுத்த நாள் மது கண் முழிக்க காலை பதினோரு மணி, சக்தியை அறையில் காணவில்லை. அமைதியாய் சென்று குளித்து முடித்து வர, கையில் டிபனோடு சக்தி அவளுக்காய் காத்திருந்தான்.
அவள் அவனை பார்த்ததும் நேற்றைய நினைவில் வெக்கத்தில் தலையை குனிந்தவள் நிமிர்த்தவேயில்லை. அவளை சகஜமாக்கும் பொருட்டு பேச்சை சக்தியே! ஆரம்பித்தான்.
“யேய் பொண்டாட்டி என்னடி……அநியாயதுக்கு வெக்கபடுற, இங்க மதுஸ்ரீ னு ஒரு மங்கம்மா இருந்தாலே அவளை பார்த்தியா…. “என்று சிரிப்போடு கேக்க,
“நான் ஒன்னும் மங்கம்மா இல்ல, ம்ம்ம்ம்ஹ்ம்ம் என்று உதடு சுழிக்க… அவளின் இதழை தன் இதழால் அணைத்து விடுவித்தவன்…. “ம்ம்ம்ம் சமத்துடி நீ….. “என்று நேற்றைய இரவின் நினைவில் கண் சிமிட்ட,
“ச்ச் சி போ… “என்று விரட்டியவள் முகம் அவ்வளவு புன்னகையில் மலர்ந்திருந்தது.
“ச் ச்சீ போவா….. இனிமேலல்லாம் உன்ன விட்டு எங்கயும் போற ஐடியா இல்லமா…….” என்று உணவை அவளுக்கு ஊட்டினான்.
ஏர்காட்டில் இருக்கும் வரை இருவரும் ஈருடல் ஓர் உயிராய் இருந்தனர்.
[the_ad id=”6605″]
இவர்களை விட அர்ஜுன் தம்பதிகள் தான், புதுமன தம்பதி போல் இணை பிரியாமல் இருந்தனர்.
பின் இரண்டு நாட்களில் ஊர் திரும்ப வந்தவர்களின் முகத்தை பார்த்தே பரிமளா தெரிந்து கொண்டார் . இனி மகளின் வாழ்வோடு அண்ணனின் குடும்பமும் விருத்தி அடைந்து விடும் என்று.
சக்தி எப்போதும் போல் அவன் இப்போதய அறையில் நுழைய அங்கு அறை காலியாய் இருந்தது. கேள்வியாய் தாயை பார்க்க, “அத்தைக்கு இந்த ரூம் வேணும் சொன்னாங்க பா, “
“உன்னோட, பழய ரூம்ல உன் திங்ஸ் எல்லாம் இருக்கு,” என்றவர் அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டார்.
வீட்டினற்கு மது சக்தி குழந்தையை பார்க்கும் ஆசை, சக்திக்கோ! மனைவி படித்து முடித்து கல்லூரியை நடத்த வேண்டும் என்ற ஆசை.
இதில் யாரின் ஆசை நிறைவேற போகிறது என்று மதுவின் கையிலும் காலத்தின் கையிலும் தான் இருக்கிறது, பொறுத்திருந்து பார்ப்போம்………
மொழி தொடரும்…………
