Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Un Vizhigalin Mozhi Ennavo

Un Vizhigalin Mozhi Ennavo 18

       ஜெய் ஸ்ரீ ராம் 

EPI -18

 

சக்தி  வீட்டில் இருந்து கிளம்பி  நேராக சுரேஷ் அட்மிட் செய்திருக்கும் மருத்துவ மனையில் நுழைந்தான். சுரேஷ் இன்னும் மயக்கதில் இருந்து விழிக்க வில்லை. அவன் அருகில்   ஒரு இளம் பெண் வயது 21 குள்ள தான் இருக்கும் குழந்தையுடன்அமர்ந்து இருந்தாள். 



Advertisement

  அவள் சக்தியை கேள்வியாய் நோக்க, ” கூட வேலை பாக்கறேன். இப்போ எப்டி இருக்காரு,கை  குழந்தையோடு நீ மட்டும் இருக்க வீட்டு ஆளுங்க யாரும் கூட இல்லையாமா என்று கரிசனத்தோடுகேக்க  , 

விழிகளில் நீரோடு  இல்லை என தலையசைத்து ” இவருக்கு யாரும் இல்லை. இவர் கூட வந்த தாள எனக்கும் யாரும் இல்லாமல் போய்ட்டாங்க,

 

Advertisement

இப்போ கொஞ்சம் பரவால்ல அண்ணா, ஒரு மணி நேரத்துல முழிச்சுடு வாங்கனு சொன்னாங்க, 

Advertisement

அவனை அடித்ததில் இதுவரை தப்பே இல்லை என்று நினைத்திருந்தவன் மனதில் ஏதோ  சுறுக்கென்று தைத்தது.  இவளின் அண்ணா என்ற அழைப்பு.    

அவன் செய்தது தவறு தான், ஆனால் அவனுக்கு ஏதாவது யென்றால்  குழந்தையோடு  இந்த பெண் அனாதையாகி  விடுவாளே !என்று நொந்தவன். 

“போய்  சாப்டு,  குழந்தைக்கு எதாச்சும் வாங்கி குடுத்து கூட்டிட்டு வா மா அது வரைக்கும் நான் பாத்துக்குறேன்.மறுத்தவளையும்  வற்புருத்தி பணம் குடுத்து அனுப்பி வைத்தான். 

Advertisement

அவள் திரும்பிய பின் கொஞ்சம் பணம்  அவளிடம் குடுத்து “ஹாஸ்பிடல் பீஸ்க்கு வச்சிகோமா, இது என் போன் நம்பர் எதாச்சும் தேவன்னா கூப்டு உன்னோட அண்ணனா என்னால முடிஞ்சத செய்றேன். என்று விடை பெட்றான்.  

மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது. கனத்த மனதுடன் வண்டியை கிளப்பியவன். கல்லூரி வந்து சேர்வதற்கு காத்திருந்தார் போல் அவன் போன் சினுங்க,  

 

 பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு

 வாழ வைக்க அவனைத் தவிர உறவுக்காரன் யாரும் எங்கில்ல 

உள்ளமட்டும் நானே என் உசிரக் கூடத்தானே

 என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்

இந்த பாடல் வரிகளில் அதை பார்க்காமலே தெரிந்தது. யார் என்று  அவனையும் அறியாமல் முகம் புன்னகையை தத்தெடுத்தது. 

அன்று மது காய்ச்சல் வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும், அவனை பெற்றவர்களே அவன் மீது கோபமாய் இருந்த நேரத்தில். தங்கையுடன் நிற்காமல் தன்னோடு நின்றவன் ஆயிற்றே!!! 

 

[the_ad id=”6605″]

 

 

பள்ளிப் பருவத்தில் இருந்து இன்றுவரை எத்தனையோ நttண்பர்கள் இருந்தாலும் அவனுக்கு கஷ்டம் என்றால் அத்தை மகன், தங்கையின் கணவன் என்பதை எல்லாம் தாண்டி நண்பனாய் வந்து நிற்பவன் ஆயிற்றே!!!

 இந்த மூன்று வருடமாய் அந்த இடத்தில் பைந்தமிழும், ஆனால் அவனின்  பணபலம்  கண்டு அவனை நெருங்க எப்போதும்   சக்திக்கு யோசனையாய் இருக்கும். சக்தி  பணம் இருந்தாலும் தேவைக்கு மட்டும் உபயோகிப்பவன். அவன் அனுதினமும் பணத்தில் மூழ்கி இருப்பவன். 

சக்தி ” சொல்லுடா “என்று  அழைப்பை ஏற்க பரஸ்பர நலன் விசாரிப்புக்கு பின் இவன் சொல்வதற்குள்” மச்சான்  ஏதாவது பிரச்சனையா என்று அர்ஜுன் கேட்டதுடன், எனக்கு மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு. உனக்கு இல்ல  வீட்ல எதாச்சும் பிரச்சனையா,  

“ஆமாம் எனக்கு தான் பிரச்சனை என்றவன் . சதீஷ் சுரேஷ் தினகரன் அனைவரைப் பற்றியும் ஒன்றுவிடாமல் கூறியவன். காவியா  மேல் தன் சந்தேகத்தையும் கூறினான். இடைமறிக்காமல்   கேட்ட அர்ஜுன் சற்று நேரம் அமைதியாய் இருக்க, 

” மச்சான் என்னடா ஏதும் சொல்ல மாட்ற,  எப்படி இதைத் தீர்க்க “என்று அவனிடம் ஆலோசனைக் கேட்க, 

அந்த காவல் அதிகாரிக்கு பிரச்சனை பெரிது என்று தோன்றினாலும் நண்பனை சமாதானம் செய்யும் பொருட்டு ” இது எல்லாம் ஒரு பிரச்சனை என்று நீ ஏண்டா இவ்வளவு டென்ஷன் ஆகுற,  தேவை இல்லாமல் எதுக்கு சுரேஷ்ஷ  அடிச்சு ஹாஸ்பிடல்ல படுக்க வச்சு இருக்க, 

 அதுல போய் பாத்துட்டு  வேற வந்திருக்க,  இவன் பிரச்சனை எப்படி சமாளிக்கறது. ஃபர்ஸ்ட்  யோசி இந்த லிவிங் லைஃப் பத்தி நாம ஒன்னும் பண்ண முடியாது. 

ஒரு காவல் அதிகாரியாய்  அவன் தினமும் பார்த்து பழகிப் போனது தான் கல்லூரியிலோ அல்லது வேலை செய்யும் இடத்திலோ ஆணும் பெண்ணும் பழகி,  பின் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து. இருவரும் திருமணம் செய்ய  விருப்பம் இருந்தால் பண்ணலாம். இல்லையெனில்  பிரிந்து விடலாம் என்று முடிவெடுத்து ஒன்றாய் தங்குவதும்.

 பின் ஆணோ இல்லை பெண்ணோ உடன் இருப்போர் மேல் அதிக காதல் காரணமாய்    சந்தேகம் ஏற்பட்டு எங்கே தன்னை விட்டு போய் விடுவாரோ என்று எண்ணி அவரை இருக்கப்பிடிக்க பார்க்க,  பின் சுதாரித்த மற்றொருவர் இட்ஸ்  ஓவர் என்று விலகிச் செல்ல,  அதைத் தாங்க முடியாமல் தற்கொலை அல்லது கொலை செய்வதை அவன் பார்த்துக் கொண்டிருக்கிறானே!!!!

 அதனால் இதை அவன் பெரிதாக எண்ணவில்லை.   ஆனால்  சக்தியால் அதை விட முடியவில்லை. “நீ சொல்றது எல்லாம் ஓகே தான், ஆனா எல்லா பொண்ணும் அப்படி இருக்க மாட்டாங்க, மத்தவங்களை விடு  நம்ம காவியா அப்படி இருப்பான்னு நீ நினைக்கிறாயா, ” என்று ஆற்றாமையுடன்  கேட்ட இவன் கேள்வியில்

 மது மாதிரி காவியாவும் தனக்கு தங்கை தானே!! அவன் எப்படி ஆம் என்று சொல்வான்.  இவ்வளவு நேரம் காவல் ஆணையரை இருந்தவன் ஒரு நொடி அண்ணனாக  மாறி யோசிக்க நம்ப முடியவில்லை தான். 

“இதில் ஏதோ தப்பு இருக்குனு தான் எனக்கும்  தோணுது. நான் அங்க இருக்க ஸ்டேஷன்ல சொல்லி அவங்க பத்தி விசாரிக்க சொல்றேன்.

 

 ஆனா நம்ம மனசுக்கு தோன்றியது மட்டும் வச்சு ஒன்னும் பண்ண முடியாது. சட்டத்துக்கு முன்னாடி ஆதாரம் தான் வேணும். நீ பொண்ணுங்க கிட்ட பேசி பாரு அவங்க விருப்பப்பட்டுதான் இப்படி நடக்கிறார்கள் என்றால்  ஒன்னும் பண்ண முடியாது.

 அதோடு அந்த சுரேஷ் மேலேயும் ஒரு கண்ணை வைத்து  கவனிக்கணும் அவன்  உன்மேல மேனேஜ்மென்ட்  இல்ல ஸ்டேஷன்ல  ஏதாவது கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கான்னு நான் விசாரிச்சு பார்க்கிறேன். 

நீ அவனை அடிக்கும் போது  பார்த்தவர்கள் யாராவது இருக்காங்களா இல்ல அங்க ஏதாவது சிசிடிவி இருக்கான்னு செக் பண்னு,  சிசிடிவி இருந்தா உடனே அதுல இருக்க ஆதாரத்தை யாருக்கும் சந்தேகம் வராமல்  கிளீன் பண்ணிடு.

    நான் இன்னும் ஒன் ஹௌர்ல உன்ன  கூப்பிடுறேன்.  என்று  காவல் அதிகாரியாய்  மாறியவனை கண்டு  சக்தியை சற்று திணறிப் போனான். 

அவன் சொன்னது எல்லாம் செய்து முடித்தவுடன் தான், அவனுக்கு மனைவியின் நினைவு வந்தது.  பிரவீன் இவர்களை தவறாய் நினைத்தது போல தானே !!மற்றவர்களும் நினைத்திருப்பார்கள். 

என் மனைவியை யாரும் அப்படி நினைக்க கூடாது. கூடிய விரைவில் மதுவை அறிமுகப்படுத்தி விட வேண்டும். என்று நினைத்தவன் கேன்டீன் சென்று அமர்ந்து காபி அருந்திக் கொண்டிருந்தான். 

அவனின் யோசனை நாயகியே அவள் தோழியோடு கேன்டீனில் நுழைந்து கொண்டிருந்தாள்.  கிளாஸ்டைம்ல இவ எதுக்கு இப்படி கேன்டீன் வரா என நினைத்தவன். அவளை அழைக்கும்  முன் அங்கிருந்த சேரில் அமர்ந்தாள்.

 சக்தியும் உணவருந்திக் கொண்டே அவர்களை கவனிக்க ஆரம்பித்தான்.” ஏன்டி ஏற்கனவே எனக்கு மூன்று அரியர்  இந்த லாஸ்ட்  செமஸ்டர்ல  எப்படியாவது எல்லாத்தையும் கிளியர் பண்ணணும்ணு  கிளாஸ் கவனிச்சுட்டு இருந்தா,  நீ ஏண்டி இங்க கூட்டிட்டு வந்தே!!! உனக்கு என்னடி பிரச்சனை. சொல்லிதொலை  அடுத்த ஹௌர் கிளாஸ்  போகணும்  என்று கவி மதுவிடம்  பொறிந்து  கொண்டிருந்தாள்.

 எப்போதும் சக்தியை பார்த்து கண் சிமிட்டுவதைப்போலவே சிமட்டி “இப்படி பண்ணா தப்பா, ” என்று பச்சை பிள்ளையைப் போல் கேட்க  

“இத கேட்க வா இங்க வரைக்கும் கூட்டிட்டு வந்த, என்று அவள் தலையில் கை வைத்து கொண்டாள்.  பின்  பெருமூச்சு விட்டு இந்த ரொமாண்டிக் லுக் யாருகிட்ட விட்டே” என்று கேட்க, 

 “கேள்விக்கு மட்டும் பதில் சொல்லடி என்று மது முறுக்கிக் கொள்ள, “இங்கே பாரு லூசு அது தெரிஞ்சா தானே கரெக்டா தப்பா ன்னு சொல்ல முடியும்”

” என்னோட மாமானு   வச்சுக்கோ !!  மனோவா  என்று கேட்க இல்லை என்று தலையசைக்க,  “அவங்க அப்பாவா  என்று போலியாக கவி  தன் வாய் மேல் கை வைக்க, 

 

[the_ad id=”6605″]

 

 

 “சனியனே” என்று அவளை கொட்டியவள்”.நான் கட்டிக்கப்போற  வங்க, “அப்போ நீ மனோவை கட்டிக்க போவதில்லையா, “

” அவன் ஒரு லூசு அவனை போய் நான் கட்டி பேனா என்றவள். தூரத்தில் அவர்களை நோக்கி வந்த காவியாவை காட்டி இந்த லூசு தான் அந்த லூஸ்  மனைவி  ஆக போகுது என்றவள். “இப்போ சொல்லு சொல்லு டி” என்றிட, 

“ஏண்டி மனோவை,    ஏண்டி அந்த அழுமூஞ்சி புள்ளைக்கு  கட்டிவைக்க பாக்குறீங்க,பேசாமல் நீயே கட்டிக்கோ!! இல்லன்னா எனக்கு அவர ரெக்மன்ட் பண்ணுடி என்று  குறும்புடன் கூற 

ஆவேசமாக எழுந்து அவளை தீப் பார்வை பார்த்தவள்.” சீ போ உன் கிட்டே போய் கேட்டேன் பாரு, என்று கோபமாய் கத்தி அந்த இடத்தை விட்டு நகர்ந்து கிளாஸ் ரூம் நோக்கி போய் விட்டாள்.

 அவள் இருந்த கோபத்தில் அங்கிருந்த சக்தியை அவள் கவனிக்கவில்லை. ” என் பொண்டாட்டி செம கோவமா  இருக்கா போலவே!! என்னடா இது சக்திக்கு வந்த சோதனை. 

அவளை எப்படி மலை  இருக்கப் போறேன்னு தெரியலையே !!என்று புலம்பியவன்.தூரத்தில் வரும் காவ்யாவை கண்டதும். கல்லூரியில் அவளை விசாரிக்க பிடிக்காது.  அடுத்து அவன் செல்ல வேண்டிய வகுப்பிற்கு குறிப்பு  எடுக்க சென்று விட்டான்.

 காவியா “மதுக்கா” என்று அழைக்க,  கவியின் மேல் இருந்த கோபம் சக்தி மேல் இருந்த கோபம் எல்லாம் சேர்ந்து இவள் மேல் திரும்பியது.” ஏய் என்னடி அக்கான்னு கூப்பிடறே !!நான் உனக்கு அக்கா கிடையாது. நான் உன்னோட சீனியர் மட்டும் தான் ஒழுங்கா  சீனியர்னு   கூப்பிடு” என்றிட, 

“ம்ம்ம்ம்  சாரி”, என்று  பயத்துடன் காவ்யா மதுவை பார்க்க, 

 யாரு மேலயோ  இருந்த கோபத்தை இந்த பச்ச புள்ள மேல காட்டுற மது  உள்ளுக்குள் நொந்தவள்.” சாரி காவியா ஏதோ கோபத்துல திட்டிட்டேன். என்ன சொல்லு, “

” அக்கா அக்கா என்று அவள் தயங்க  அடுத்த கிளாஸ்  பெல் அடித்து ஓய்ந்தது. “இப்போ உங்க சக்தி அத்தான் கிளாஸ். ஏற்கனவே என் மேல ஏதோ காண்டுல இருக்காங்க,  சீக்கிரம் சொல்லு.”

  அக்கா மனோ……மா.. மா..  அக்கா,  நம்பர் தரீங்களா  திக்கி திணறி கேட்டே விட்டாள்.” ஒரு நொடி யோசித்த மது மனோவை கேட்காமல் நம்பர் தர விருப்பம் இல்லாமல் “என்கிட்ட இல்லை ” என்று சொல்லிவிட்டு வகுப்பின் உள்ளே  நுழைந்து கொண்டாள். காவியா விழிகளில் நீருடன் செல்லும் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.

அர்ஜுன்  சொன்ன நேரத்திற்கு முன்பே போன் அடித்தவன். “மச்சான் நீ சந்தேகப்பட மாதிரி இவனுங்க மேல தான் தப்பு இருக்கும்னு எனக்குத் தோணுது. அவங்கள பத்தி விசாரித்த வரைக்கும் அவ்வளவு நல்லதா தெரியல. அதுலயும் சதீஷ் ரொம்ப மோசமானவனா  இருக்கான்.

 பொண்ணுங்க விஷயத்துல  படிக்கிற காலத்திலிருந்தே அவன் மேல நிறைய கம்ப்ளைன்ட் வந்து இருக்கு. ஆனா பெருசா எதுவும் வெளியில வரல.

 அதுக்கு காரணம் அவனோட மாமனார். நம்ம ஏரியாவில் பெரிய அரசியல்வாதி,  அதோட ஆளும்கட்சி வேற அந்த ஆள்  நல்லவன் கிடையாது. நிறைய ஏழைங்க வயித்துல அடிச்சு நிலத்தை  எல்லாம் பிடுங்கி இருக்கான்.

 அதோட கொலை செய்யவும் தயங்க மாட்டான். அதெல்லாம் அவனுக்கு அல்வா சாப்பிடுற மாதிரி, மாப்பிளைன்ரதை விட தங்கச்சி மகன் சதீஷ் மேல ரொம்ப பாசம். அதனால  இவன்கிட்ட மோதிரத்திற்கு முன்னாடி பலதடவை யோசிக்கணும். 

மத்தபடி தினகரன் அவ்வளவு ஒன்றும் நல்லவன் இல்லைனாளும் சதீஷ் அளவிற்கு மோசம் கிடையாது.

 எடுப்பார் கைப்பிள்ளை அவன் அப்பா இருக்க வரைக்கும் அவர் பேச்சைக் கேட்டவன். இப்போ சதீஷ் கூட சேர்ந்து தான்  இப்டி. ஆனா அவனோட மாமனார் தங்கமான மனுஷன். ஜட்ஜ் ஆக  சான்ஸ் இருந்தும் சாதாரண வக்கீலாக இருக்கார். நியாயமானவர்……. இவன் மேல தான் தப்புனு  ஆதாரத்தோடு நிரூபித்தால் அவரே  இவனுக்கு எதிராக நிப்பார். 

அடுத்து சுரேஷ் அவன்  ஒன்னும் சொல்லிக்ற அளவு  இல்லை. இவனுங்க பேச்சை கேட்டு ஆமாம் சாமி போடுவான் அவ்ளோதான் . என்று அர்ஜுன் பேசியதெல்லாம் அமைதியாய் கேட்டவன்.

” மச்சான் கையில் எவ்வளவு பணம் இருக்கு,முதலில் இவனுங்க ஷேர் பிரிச்சு குடுத்து வெளியில் தொரத்தி விடணும்.   என்கிட்ட அவ்வளவு இல்லை அதான். 

“ம்ம்ம்ம் சரிடா அவ்வளவுதான ஒன்னும் பிரச்சனை இல்லை நான் பார்த்துகிறேன். நீ ஆதாரத்தை ரெடி பண்னு. இவனுங்களுக்கு ஆப்போசிட்டா ஒரு பொண்ணு கம்பளைண்ட்  பண்ணா போதும் சட்டப்படி  இவனுங்களை பாத்துக்கலாம். 

 சக்தியும் பிரவீன்  மூலம்  நர்மதாவிடம்  பேசிப் பார்த்தான் அவள் அசையவில்லை. நாளை மேனேஜ்மென்ட்லிருந்து சுரேஷ் வழக்கில் இவனுக்கு விசாரணை இருக்கிறது.

 ஒரு ஆண்மகனாய் பெண்ணிடம் சென்று அந்தரங்கத்தை பேச அவனால் முடியவில்லை. மதுவிடம் பேசச் சொல்லலாம் என்றால் எந்த அளவுக்கு நாசுக்காய் விஷயத்தை கையாழுவாள் என்று தெரியவில்லை. 

என்ன தான் அவளுக்கு இருபத்தி ஒரு வயது ஆனாலும் அவனைப் பொறுத்தவரை விவரம் தெரியாத சிறு பிள்ளைதான் அவள். 

 

[the_ad id=”6605″]

 

 

அதோடு நாளை இந்த விஷயம் வெளியில் தெரிந்து போலீஸ் கேஸ்ஆகி ஷேர் ஹோல்டர் என்றுதான் ஸ்டேஷன், கோர்ட் செல்ல வேண்டி வருமோ என்று அவள் பயந்து விட கூடாது.

 இப்போது ஃபைனல் செமஸ்டர் நெருங்கும் நேரம். அவள் மனம் அலை பாயாமல் கவனம் முழுவதும் படிப்பிலேயே இருக்க  வேண்டும் என்றும்அவளின்  காதல் கணவனாய் நினைத்தான். 

 

 பொதுவாக எப்போதும் அதிக வயது வித்தியாசதிருமணம் முடிக்கும் கணவன் மனைவிக்குள்  வரும்  பிரச்சனை இதுதான்.  மனைவி சிறியவள் அவளுக்கு சூழ்நிலையை சரியாகக் கையாளத் தெரியாது  பிரச்சினையை பெரிதாக்கி விடுவாள். இல்லையெனில் பயந்து விடுவாள். 

என்று நிறைய கணவன்மார்கள் சாதாரணமாய் பகிர்ந்து கொள்ள வேண்டிய விஷயங்களை கூட பகிர்ந்து கொள்வதில்லை. அதனாலேயே குடும்பத்தில் நிறைய பிரச்சனை  வந்துவிடுகிறது.

சாதாரணமாகவே பெண்கள் சமாளிக்கும் திறன் உடையவர் தான் , கணவனுக்கோ மனைவிக்கோ இல்லை குடும்பத்தில் உள்ள தனிப்பட்ட நபருக்கு ஏதாவது ஒரு பிரச்சனை. மன சங்கடம் என்றால் கணவன் மனைவியிடத்தில் நிச்சயம்  பகிர்ந்து  கொள்ள வேண்டும். அதே போல் பெண்ணும். முதல் முறை அவர்கள் சற்று தடுமாறினாலும் அடுத்த  பிரச்சனை வரும்போது இது அனுபவ பாடமாய் இருக்கும்.

 

இதை செய்யாததால்  கணவன் தன்னை நம்ப வில்லையே,என்னை ஒரு  மனுஷியாக மதிக்க வில்லையே,  என்ற ஆதங்கம்  சில நாள் சண்டையாக மாறி  சிலருக்கு விவாகரத்தில் சென்று   முடிவடைந்து விடுகிறது. 

   சக்தி  யாருக்காக இதையெல்லாம் செய்தானோ இவனால் அந்த இதயம் காயப்பட்டு கொண்டிருக்கிறது. அவனையே அறியாமல் காயப்படுத்தி கொண்டுதான் இருக்கிறான். அதை அவன் அறியும் பொழுது அந்த இதயத்தின் காயத்தை சரிசெய்ய முடியுமா, உங்களைப்போல் கேள்விகள் உடனே நானும்………

 

மொழி தொடரும்………….. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!