Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Un Vizhigalin Mozhi Ennavo

Un Vizhigalin Mozhi Ennavo 24

ஜெய் ஸ்ரீ ராம்

 

EPI- 24

இருள் சூழ்ந்த ஏகாந்த வேளையில்  தன் மன்னவனை  தேடி  ஏதோ அசட்டு  தைரியத்தில்  வந்தவளுக்கு  தோட்டத்து வீட்டின்  உள்ளே நுழைய  அவ்வளவு பயமாக இருந்தது.



Advertisement

அம்மாவாசை  இரண்டு  ஒரு  நாள் முன்பு தான் முடிந்திருக்கும் போல, நிலவின் குறைவான வெளிச்ச்த்தில் பார்க்க கண்னுக்கு எட்டிய தூரம் வரை இருள் மட்டுமே சூழ்ந்திருந்தது.

 

 

Advertisement

மொபைல் டார்ச்   வெளிச்சத்தில்  பயத்துடன்  நடந்து சென்றாள். இருள் பயத்தை விட தன்னவன் என்ன செய்ய போகிறானோ என்று அவன் மேல்  தான் அதிக பயம் இருந்தது.

Advertisement

 

 

 

Advertisement

தோட்டது  வீடு அப்படி ஒன்றும் வசதியானது கிடையாது . மேலே கடம்பு கோரைப்புல்லால் வேயப்பட்டு ,மண் தரையோடு  ஒரு கதவு கொண்ட  குட்டி அறையும்,  அதோடு ஹால் போன்ற  ஒரு  பெரிய அறையை கொண்டு இருந்தது.  இதற்கு கதவு கிடையாது.

 

அந்த குட்டி அறையில்  கயிற்று கட்டிலில் படுத்து   விடி விளக்கின் ஒளியோடு  மேற் கூறையை  பார்த்து கொண்டு  மனைவியை பற்றிய யோசனையில் இருந்த  சக்தியை  ஏதோ ஒரு வண்டியின் சத்தம் கலைத்தது .

 

இந்த நேரத்துல யாரு என்று வெளியில் வந்து அந்த காரிருளில் பார்க்க, ஒரு கையில் பையோடு  மற்றொரு கையில்  டார்ச்சோடு  ஒரு பெண்ணுருவம் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது .

அந்த உருவம்நடந்து வரும் அழகிலே. . சக்திக்கு தெரிந்தது யார் என்று

 

 

 

அவள் அருகில் வரும் முன்னே அவள்   தலையில்  வைத்திருக்கும் மல்லிகையின் வாசம் .  கூத  காற்றோடு  வந்து சக்தியின் நாசியை தொட்டது. விரிந்திருந்த          கூந்தலுடன் ,இவன் பரிசளித்து இருந்த கொலுசின் மென்னொலியோடு, இரவு உடையில் அவள் வைத்திருந்த டார்ச்சின் ஒளி முகத்தில்  பட்டு மின்ன, அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள் அந்த மோகினி.

 

சக்தியை மயக்கி  சொந்த ஊரை விட்டு ஏன் சொந்த நாட்டை விட்டே  துரத்தி அடித்த மாய மோகினி ,அவன் எப்போதும் மயங்க ஆசைப்படும் அழகு மோகினி . . . . . . . . .

 

[the_ad id=”6605″]

 

 

 

அவளை கண்டு  அவனின் ஹார்மோன்கள் பேயாட்டம்  போட அதை அடக்கியவன். வர வழைத்த கோபத்துடன் இந்த நைட் நேரத்துல இவளை  தனியா   யார் வர சொன்னாங்க என நினைத்தவன் . வெடுக்கென்று உள்ளே சென்று விட்டான்.

 

 

 

ஆஹா  மது உன் மச்சான் செம பார்ம்ல இருப்பான் போல இன்ணைக்கு நீ செத்த,பேசாம போய் அவன் கால்ல  விழுந்துடு என்றது அவளின் மனசாட்சி.

 

 

 

 

 

அமைதியாக  உள்ளே நுழைந்து பையை  கீழே வைத்தவள். அவனே பேசுவான் எதிர் பார்க்க ,அவன் பேசப்ப்போவதில்லை என்று தோன்றவும் . “மாமா. . நான் வேணும்னு தட்டி விடல, கை தவறி தட்டி விட்டுட்டேன் . . . ” என்றது தான் தாமதம் .

 

 

 

 

 

“யேய்,அது எனக்கும் தெரியும் . இப்போ எதுக்கு நைட் டைம்ல இங்க வந்த,இது என்ன உங்க ஊரு சென்னைனு நெனச்சியா,

 

வர வழில  எவனாவது  வம்பு  பண்ணி இருந்தா, என்னடி பண்ணி இருப்ப,பகல்லவே  உன்ன தனியா அனுப்பாத  இந்த அம்மா ,அப்பா  இப்போ எப்டி அனுப்பினாங்க,சொல்லிட்டு தான் வந்தியா , இல்லை சொல்லாமல் நீ பாட்டுக்கு வண்டி எடுத்துட்டு வந்துட்டியா,”என்று சந்தேகமாக அவளை பார்க்கவும் .

 

 

அவளின்  என்னிற்க்கு காவேரி அழைக்கவும் சரியாக இருந்தது . அழைப்பை உடனே ஏற்றவள். ” வந்துட்டேன் அத்தை”  என்க,

 

 

 

“சாப்டிங்களா”  என்ற  காவேரியின் கேள்விக்கு  “இனிதான் அத்தை ” என்றதும் .

 

“ஒன்னும் பிரச்சனை இல்லைல”

 

“ம்ஹும் ”

 

“அப்போ சரி சாப்பிடுங்க” என்று வைத்து விட்டார் .

 

தாயின் அழைப்பில் இருந்தே வீட்டில் சொல்லிவிட்டு வந்திருக்கிறாள் என்று தெரிந்தாலும் . முறைப்பை  கை  விடாமல் தான் பார்த்த்து இருந்தான்.

 

அவன் முறைப்பை  கண்டு, அப்பா தட்டை தட்டி விட்ட கோபம் போய்டுச்சு போல,  இனி அமைதியை  கடை பிடித்தல் சரி வராது ,வேதாளம் ஏற்கனவே பாதி மரத்துல இருக்கு . அதை முழுசாயேற விடாமல் தடுக்கனும் என்று  தோன்றவும்.

 

“இப்போ என்ன மாமா நான் தனியா வந்தது தானே பிரச்சனை,நம்ம சொந்த ஊருல எனக்கு என்ன பிரச்சனை வந்துட போது .

 

 

 

 

 

 

 

நீங்க சொன்ன மாதிரி இது சென்னை கிடையாது . பக்கத்து பிளாட்ல யிருக்கவங்க பேரு கூட தெரியாம இருக்குறதுக்கு . இங்க வர வழில இருக்குற  எலோருக்கும் நான் யார் வீட்டு பொண்ணு, எங்க போறேன்னு நல்லாவே தெரியும்

 

அப்டியே பிரச்சனை வந்தாலும் ஊருக்குள்ள இருக்க பொண்ணுங்களை எல்லாம்  காப்பாத்துற  என் புருசனுக்கு என்ன காப்பாத்த தெரியாதா,என்ன,” என்று தன் இரு புருவத்தையும் உயர்த்தி,தலை சாய்த்து கேக்க ,

இவளுக்கு காலேஜ் விஷயம் தெரிந்து விட்டது என்று புரிந்ததும் . அதற்கு சக்தி ஏதோ பதில் சொல்ல வர ,

 

“ப்ளீஸ் மாமா,நாம அதை பத்தி பேச வேண்டாம் . எனக்கு ரொம்ப பசிக்குது பர்ஸ்ட் சாப்பிடலாம். “என்று மண் தரையிலே அமர்ந்து விட்டாள்.

 

 

அவன் இதை பற்றி தன்னிடம் சொல்லவில்லை என்ற கோபம் இருந்தாலும்.  சொல்லாமல் விட்டதுக்கும் ஏதாவது காரணம் இருக்கும் என்று நினைத்து . அவள் வண்டியில் வரும் போதே இதை பற்றி கேட்க கூடாது என்ற முடிவோடு தான்  வந்தாள்.

 

சக்தி அன்று தன் மேல் கோவப்பட்டதுக்கு காரணம் . தான்னில்லை என்றும் நர்மதா போன்ற மற்ற பெண்களின் மேல் இருந்த கோபம் தான் அது என்று  புரிய ,அவன் தன் கோபத்தை மனைவியிடம் காட்டாமல்  வேறு யாரிடம் காட்டுவான். என்று அவள் மனம்  அவன்  பக்கம் சாய்ந்து விட ,அவள் மூளையும் அதையே ஏற்று கொண்டது .

 

சக்திக்கு தறையில் அமர்வது சாதாரணம் தான். அவன் சிரியவனாய் இருக்கும் போது நிறைய முறை   வரப்பில்  தன் சேலையை விரித்து. அதன் மேல் அவனை தூங்கவைத்து விட்டு காவேரி தோட்ட வேலைகளை செய்து உள்ளார் .

 

ஆனால் மது. . . . . . .   அப்படி வளர  வில்லையே !!! அவள் தந்தை வெறும்  தரையில் . .  அவள் பாதம் கூட படாமல் வளர்த்தவர் . அவர்கள் வீட்டில் பத்து வயதிலேயே அவளுக்கென்று  AC உடன் கூடிய தனி அறை  இருந்தது.

 

 

 

அப்படி இருந்தவள்  இப்படி மண் தரையில் அமருவது  பிடிக்காமல் ” நீ கட்டில்ல உட்காந்து சாப்பிடு  டீ,கிழ ஒரே மண்ணா   இருக்கு . “என்றவன் தாமதிக்காமல் அவள் கை பிடித்து எழுப்பி  கட்டிலில் அமர வைத்து விட்டு ,அவள் காலடியில். . . . அவன். . . . . .  தரையில் அமர்ந்து கொண்டான் .

 

மதுவிற்கு தான் இவன் செய்கை  ஓரு மாதிரி இருந்தது. அவளை பொறுத்த வரை சென்னையில் அவள் வளர்ந்தது எல்லாம் போன ஜென்மம் போல் இருந்தது. “ஏன் நீங்க உட்க்காரும்  போது நான் உக்கார மாட்டனா “என்றவள் தானும் இறங்கி கீழே அமர,

 

அவளை பார்த்து  சக்தி திரும்பவும் முறைக்க  ஆரம்பிக்க . “ஐயோ !!!மாமா  அந்த கட்டில்ல இருக்க கயிறு  உறுத்துது, “என்று அவள்  நெளியவும்  அவளை அப்படியே சிறு பிள்ளை போல்  இடுப்பில் கைகொடுத்து தூக்கி தன் மடியில் அமர வைத்தான்.

 

அப்படியே அவன் நெஞ்சில் சாய்ந்தவள். அவனை அன்னாந்து   பார்த்து மாமா நெஜமாவே நீங்க அய்யனார் தான்  அசால்ட்டா ,அப்டியே !!!நம்ம யாழினிய தூக்குற மாதிரி தூக்கிட்டீங்க ,என்று அதிசயிக்க ,

 

அவளின் மூக்கை பிடித்து ஆட்டியவன் .   “எனக்கு  நீயும் யாழினி  மாதிரி குட்டி பாப்பா தான். என்னமோ இப்பதான் நான் உன்ன பர்ஸ்ட் தூக்குற மாதிரி அதிசயமா பேசற”  என்றவன்.  மனதில் மதுவை முதல் முறை சேற்றில் விழுந்து விடாமல் தூக்கியதும் அவள்  பேட் டச் பண்றிங்கனு சண்டையிட்டு பின் சாரி கேட்க சொன்னதும் நினைவு வர,

 

“என்னடி பேட்  டச்  பண்ணவா , என்று குறுப்பு சிரிப்புடன் கேட்டவனின்  கரங்கள் அவளின் வேற்று இடையில் பரவ ,மதுவும் அன்றய நாளின் நினைவில்  கிளுக்கி சிரித்தாள்.

 

 

‘ஹேய் பொண்டாடி  என்னடி   சிரிச்சிட்டு  இருக்க ,நான் பேட் டச் பன்றேன்னு உங்க அம்மாட்ட போய் சொல்லு ” என்றவன் அவளுக்கு கிச்சு கிச்சு மூட்ட,அவன் கரங்களை தன்னுடலில்  பரவாமல்  இறுக்கி பிடித்தவள்.  “அப்படி சொன்னா   உங்க மாமியார் .  என் பொண்ணுக்கு ஏதோ ஹார்மோன் ப்ரோப்லம்ன்னு   அவங்க மருமகள் கிட்ட அப்பாய்மெண்ட்  வாங்கிட்டு ஹாஸ்பிடல் கூட்டு போய்டும் . எனக்கு அது தேவையா,”என்று தன்வனை பார்த்து கண்ணடித்து கேக்க ,

 

 

 

“அதுக்கு எதுக்குடி பப்ளி ஹாஸ்பிடல்  போனும்.  ஹோர்மோன் எப்படி வேலை செய்யுதுனு மாமனே கண்டு பிடிச்சி  சொல்றேன் “என்றவன்.  நீ அண்ணைக்கு அப்பிடி சொல்லவும்  உண்மையாவே உங்கிட்ட பேட் டச் பண்ணனும்னு தோணுச்சு தெரியுமா,. . . . ” என்று சரசமாக பேசவும்  அவனிடம் இருந்து விலகியவள் .

 

 

“அடப்பாவி,  அய்யனாரே !!!அன்னைகேவா!!!! என்று  வாய் மேல் கை வைத்து கேக்க ,

 

 

[the_ad id=”6605”]

 

 

 

“ம்ம்ம்ம் ” என்று  மர்ம புன்னைகையை  உதிர்த்தவன். ” என் அத்தை மகள் . எவன் என்னை கேப்பான் . ஏதோ நீ சின்ன பிள்ளைன்னு பெரிய மனசு பண்ணி விட்டுட்டேன்”. .  என்றவன் தட்டில் உணவை பரிமாறி  அவளின் வாயருகில்  நீட்ட ,

 

உணவோடு சேர்த்து  அவன் கையையும் நறுக்கென்று கடித்தவள். அப்போ ஏன் என்னை விட்டுட்டு அமெரிக்கா போன என்று கேட்க வந்த கேள்வியை கேக்காமல் உணவோடு அதையும் விழுங்கினாள் . “ம்ம் ரொம்ப பெரிய மனசு தான் “என்றால் நக்கலாக ,

 

உணவை  அவன் அவளுக்கே ஊட்டி கொண்டு இருக்க , அவன் கையை அவனின் வாயருகே திருப்பி அவனையும் சாப்பிட வைத்தாள். இருவரும் உண்டு முடித்ததும் அங்கிருந்த பெரிய  தண்ணீர் தொட்டியில்  கை கழுவியவன். அவள் கொண்டு வந்த பாத்திரங்களையும் கழுவ ,

 

 

 

“நான் கழுவுறேன் குடுங்க”என்று மது கைநீட்டவும்,

 

“தள்ளி நில்லுடி டிரஸ் நனைஞ்சுரும்”   என்று   தானே கழுவ  ஆரம்பிக்க,

 

“நனைஞ்சா பரவா இல்லை. ”  என்று மேலும் அவன் பக்கம் சாய்ந்து நிற்க, நிமிர்ந்து அவளை ஒரு பார்வை பார்த்தவன்.

 

 

 

 

 

 

 

அவள் கையில் வைத்திருந்த பாத்திரங்களை வாங்கி ஓரமாக வைத்து நனைஞ்சா  பரவாயில்லையாயென்று”      ஓரப்பார்வை   பார்க்க ,அதன் அர்த்தம் புரியாமல் ,ம்ம் என்று  தலையசைக்கவும் . அவளை அப்படியே தூக்கி  தொட்டியில் போட்டுவிட்டான் .

 

 

 

“ஐயோ!! மாமா  என்ன பண்றீங்க,  எனக்கு பயமா இருக்கு தூக்குங்க ,”என்று  சிறு பிள்ளை போல் தன் இருகைகளையும் உயர்த்தி கத்த ,

 

“அடியே கேடி. .   பொண்டாட்டி , ரொம்ப நடிக்காத இதே தொட்டில தான்  நீ நீச்சல் கத்துக்கிட்டனும் . உனக்கு நல்லாவே நீச்சல் தெரியும்னு எனக்கு தெரியும் . ”

 

 

 

 

“ஆமா  தெரியும்.  அதுக்கு இப்படி நடு ராத்திரில  தன்னில தூக்கி போடுவீங்களா சடனா  போடவும் நான் பயந்து போய்ட்டேன். ” என்று அவள் பேசிக் கொண்டே போக,

 

‘நைட் டைம்ன்கிறதாலதான் தொட்டி இல்லைனா, நீ பண்ற வேலைக்கு கிணத்துல தூக்கி போற்றுபேன். உட்காந்த இடத்துல  அடுத்தவன்  சிஸ்டம்  எல்ல்லாம் ட்ராக் பண்ற  நீ ,”என்று கோபமாய் அவள் தலையை  பிடித்து  தண்ணீருக்குள் அழுத்தினான் .

 

தண்ணீரில் இருந்து தலையை எடுத்தவள்.  ‘ஆஹா இந்த அய்யனார் இதை மறக்காது போலவே!!!! எப்படி சமாளிக்க,

 

“இல்லை பிரியன் அது ப்ராஜெக்ட்  பண்றதுக்காக ஒரு  சாப்ட்வேற  நோண்டும் போது தான் கத்துக்கிட்டேன் . ”

 

என்று அசடு வழிந்தவளை திரும்பவும் தண்ணீருக்குள் முக்கிவிட்டு, மோட்டார் ரூமினுள் நுழைந்தவன் மோட்டாரை போட்டு விட்டு, பின்   தொட்டிக்கு பக்கத்தில் இருக்கும் குண்டு  பல்ப்பை போட்டு. தன் சட்டையை கழட்டி வைத்து விட்டு நீருக்குள் பாய போக அதற்குள் அவள் மொபைல் சிணுங்கியது .

“இந்த நேரத்துல யாரு உன்ன கூப்டறது” என்றவன் போனை எடுத்து பார்க்க அவன் அப்பா,அவர் இந்த நேரத்தில் அழைக்கவும் பதற்றம் வந்து தொற்றி கொள்ள

“சொல்லுங்கப்பா ,”

 

 

 

“ஹான் சக்தி  மோட்டார் போட்டா தீவன பயிருக்கு மடையை திருப்பி விடுப்பா, தக்காளி நாத்துக்கு இப்போ தான் விட்டுட்டு வந்தேன் . “என்றவர் அவன் பதில் பேசும் முன்னே வைத்து விட்டார்.

 

சக்தியும் அவர் சொன்னது போலவே செய்த்து விட்டு வர . . . . . . . வந்தவனிடம்.  “போன்ல மாமா என்ன சொன்னாங்க’ என்று கேக்க ,அவர் சொன்னதை  அவளிடம் சொன்னவன்.

 

நீருக்குள் பாய்ந்து  மோகத்துடன் மதுவை நெருங்கி அவளை  தீண்ட ஆரம்பிக்க,அவன் கைகளில் இருந்து திமிறியவள்.

 

[the_ad id=”6605”]

 

 

 

“நீங்க இப்போ மோட்டர் போடுவீங்கன்னு மாமாக்கு எப்படி தெரியும். ”என்று கேள்வி எழுப்ப ,

 

இனிய கனவு களைந்த எரிச்சலில் “அது ரொம்ப முக்கியம் “என்று எரிந்து விழுந்தவன் . அதற்கு மேல் தாமதிக்காமல் அவளின் மேல் படர்ந்து விட்டான் .

 

 

 

 

நீண்ட நேரம் கழித்து இருவரும் நீரில் இருந்து மேலேற ஈர உடையில் மது வெடவெட வென்று உதற ஆரம்பித்தாள். “ட்ரெஸ்ஸ பிளிஞ்சி விடுடி ,சீக்ரம் வீட்டுக்கு போலாம் மோட்டார்  ஆப் பன்னிட்டு வரேன். ‘என்று வேகமாக விரைந்தான்.

 

 

அவன் திரும்ப  வரும் போது தொட்டியின் அருகில் அவளை காணாமல் வீட்டினுள் தேட சக்தி அப்படியே ஜெர்க்காகி நின்று விட்டான் . அவள் உடையை களைந்து விட்டு சக்தி அணிந்திருந்த சட்டையை மட்டும் அணிந்து கொண்டு அங்கிருந்த துண்டில் தலையை துவட்டி கொண்டு  ஏதோ ஒரு பாடலை ஹம் பண்ணி கொண்டிருந்தாள்.

 

திருடன் போல் பதுங்கி பின்னாலிருந்து அணைத்தவன். “வீட்டிற்கு போலாம் .  போய்  உன் ட்ரஸ் போட்டுடுவா ,என்றவனின் கைகள் அவள் மேனியில் ஊர்ந்து கொண்டு இருந்தது . வாய் சொன்னதே தவிர அவனிற்கு செல்ல மனமே இல்லை .

 

 

 

அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தவள் .  அவன் சட்டையின் வாசம் முகர்ந்து கொண்டே !!! இருக்க ,

 

உன் இடையோடு நடமாடும்  உடையாக நான் மாறி

எந்நாளும் சுடேரவா

என்  ஜென்மம் ஈடேரவா

 

 

 

சக்தி அவள் விழிகளின் மொழியை புறிந்தது போல் . அவள் ஹம் செய்து கொண்டிருக்கும் பாடலை பாட , அவளின் காதுமடலில் அவனின் மீசை உரச கழுத்தில் முகம் புதைத்து , ஏதேதொ செல்ல சீண்டல்கள் செய்ய,

 

மதுவிடம் இருந்து உம்,  இம்  என்ற  சத்தம் தவிர வேறு எதுவும் வரவில்லை

 

உன் தின்னென்ற கன்னத்தில்

திம்மென்ற நெஞ்சத்தில்

இச்சென்ற இதழ் வைக்கவா

இச்சைபோல் இலை வைக்கவா

 

 

உன் உம்மென்ற சொல்லுக்கும்

இம்மென்ற சொல்லுக்கும்

இப்போதே   தடை வைக்கவா

மௌனத்தில்  குடி வைக்கவா

 

அகம் பாதி முகம் பாதி

நகம் பாயும் சுகம்  மீதி

மறைத்தாலும் மறக்காது அழகே

 

அடிவானம்  சிவந்தாலும்

கொடி பூக்கள் பிளந்தாலும்

உன்னை போல இருக்காது  அழகே

என்று பாட ,

அவனின் சீண்டல்களிலும் ,பாடல் வரிகளிலும்  கிறங்கி  போனவள் அவன்  தோல் சாய

 

 

 

அப்டியே அணைத்து  அந்த  கட்டிலில் விழுந்தான். இருவரும் ஒருவரை விட்டு மற்றொருவர் பிரிய மனமில்லாமல் பிணைந்து கிடந்தனர் .

 

விடிந்து வெகு நேரம் கழித்து பறவைகளின் சத்தம் கேட்டு முதலில் கண்விழித்தவன்.  அவன் நெஞ்சில் சாய்ந்திருந்த மனைவியை பார்க்க அயர்ந்து உறங்கி  கொண்டிருந்தாள் .

அவளை விளக்கி கட்டிலில் கிடத்தியவன். காய்திருந்த அவளின் உடைகளை கொண்டுவந்து அவள் அருகில் வைத்து விட்டு ,முகம் கழுவி விட்டு ,மரத்தில் ஏறி இளநீர் பறித்து கொண்டு வர

 

அவனின் மனையாள் அதற்குள் எழுந்து உடை மாற்றி இருந்தவள்.  கட்டிலை சுற்றி எதையோ பரபரப்பாக தேடி கொண்டு இருந்தாள் .

 

 

 

அருகில் சென்றவன் “என்ன ஸ்ரீ “என்க ,அவனை  முறைத்தவள் ,மீண்டும் தேட ஆரம்பித்தாள்.    “என்னனு சொன்னா நானும் தேடுவேன் இல்லை சொல்லுடி” என்ன காணோம் .

 

 

 

 

 

“எல்லாம் உங்களால் தான் மூணு வருஷம் கழட்டாமல்  போட்டுட்டு இருந்தேன்.  குத்துதுன்னு  கழட்டிஇருட்டுல எங்க போட்டிங்களோ காணோம். அப்படியே அய்யனார் மாறி நிக்காம போய் தேடுங்க,”என்றவள்.

 

சுற்றி சுற்றி தேடிவிட்டு  கிடைக்காமல் போக அழுக ஆரம்பித்து விட்டாள் .

 

 

மொழி தொடரும் . . . . . . . . .

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!