Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Un Vizhigalin Mozhi Ennavo

Un Vizhigalin Mozhi Ennavo 29 1

ஜெய் ஸ்ரீ ராம்

 

EPI-29

 



Advertisement

இப்படியே ஆறுமாதம் சென்றுவிட,

 

அர்ஜுன் மாதம் ஒரு முறை வந்து பார்த்து விட்டுச் செல்வான் .   மனோ நேற்று தான் மும்பையிலிருந்து திரும்பி இருந்தான் .   மாதம் இருமுறை சக்தி மூலம் உடைகள் பொருட்கள் என்று யார் மூலமாவது வந்து கொண்டிருந்தது.

Advertisement

 

Advertisement

கணவன் தன் மேல் கொண்ட காதலையும் ,   அக்கறையையும் புரிந்து சக்திக்கு மனைவியாய் இருக்க தான் தகுதி இல்லாதவள் என்று தான் தோன்றியது மதுவிற்கு,     இப்போது மதுவும் ,   வருணியும் உற்றத்தோழிகளாக மாறி விட்டிருந்தனர்.     ஒருத்தர் இல்லாமல்  ஒருத்தர் உணவைக்கூட உண்பதில்லை.

 

மாலை வகுப்பு முடியும் நேரத்தில் மதுவின் அலைபேசிக்கு புது எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.    இது அவள் எதிர்பார்த்தது தான் இந்த வாரம் நியூ இயர் வரப்போகிறது .   அதோடு மதுவின் பிறந்தநாளும் வரப்போகிறது இல்லையா,

Advertisement

 

அழைப்பை ஏற்கவும் “ஹான் மதுஸ்ரீ  பைந்தமிழ் ஹியர்,   ஆம்  வெய்ட்டிங் பார் யூ,   ப்ளீஸ் கம் ஆன் மெயின் கேட் ,   ”

 

கனவன்  யாரையாவதுஅனுப்புவான் என தெரியும்.    ஆனால் பெண்கள் என்றால் பேயை பார்ப்பது போல் பார்க்கும் பைந்தமிழை அனுப்புவான் என அவள் நினைக்கவில்லை.    ஒரு புன்னகையோடு அவசரமாய் ரெஸ்ட்ரூம் சென்று அங்கிருந்து நிலைக் கண்ணாடியில் தன்னை சீர்படுத்திக் கொண்டு வந்தாள் .

 

ஏனெனில்

 

பைந்தமிழ் இவளிடம் பேசிவிட்டு விடைபெறும் நேரம் வரை அவளின் கணவனுக்கு லைவ் டெலிகாஸ்ட் செய்வான் .   என்பது இவளுக்கு தெரியும் .   அதே போல் தான் பைந்தமிழும் மொபைலில் கேமரா வெளியில் தெரியுமாறு,    தன் சட்டையின் மேல் பாக்கெட்டில் வைத்து இருந்தான்.

 

இவள் போன் பேசியதையும் பாத்ரூம் கண்ணாடியில் தன்னை அழகுபடுத்திக் கொண்டு ஒரு ஆணோடு பேசிக் கொண்டிருப்பதையும் கண்ட பிரியாவின் தோழி முதல் முறை இவளை மனோவோடு பார்த்தவள்.

 

பிரியாவிற்கு அழைப்பை விடுத்து விபரம் கூற பிரியா உண்மையில் அதிர்ச்சியாகி விட்டாள் .   ஏனென்றால் அவள் இப்போது கணவன் ஊரில் தான் இருக்கிறாள்.    சற்று முன்தான் சக்தியும் ,   மனோவும் தென்னந்தோப்பில் வேலை செய்வதைப் பார்த்தால் அப்போ அவ கூட இருக்கிறது யாரா இருக்கும் என்று யோசித்தவள்.

 

யோசனையோடு தன்னிடம் இருந்த அர்ஜூனின் புகைப்படத்தை அனுப்பி இவறா என்று தோழியிடம் கேக்க,    அதைப் பார்த்தவள் இல்லை என்று திரும்ப பதில் அனுப்பினாள்.

 

திரும்ப சக்தியின் போட்டோவை அனுப்பி தியேட்டரில் பார்த்தது இவரா என்க அதற்கும் இல்லை என்ற பதில் வரவும்.    ப்ரியாவின் முகத்தில் வில்லங்கமான சிரிப்பு ஒன்று உதிர்ந்தது.

 

என்ன வேணாம்னு சொல்லி  உன் அத்தை மகளை கல்யாணம் பண்ணல்லை.    நல்லா உன்னை ஏமாத்றா என்று நினைத்தவள்.    சாந்தியிடம் இருந்து ஏற்கனவே சக்தி.   மது பிரிவின் காரணம் கேட்டிருக்க,

 

அவர் மது குழந்தை வேண்டும் என்று அடம் பிடித்ததாகவும் சக்தி அதை மறுத்ததாகவும் கூற,   ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கணக்கு போட்டுவிட்டாள்.

 

அவள் மனோவின் போட்டவைக் காட்டியும் ஒரு முறை கேட்டிருக்கலாம்.   அவன் கடந்த ஆறு மாதமாக மும்பையில் இருந்ததால் கேக்காமல் விட்டு விட்டாள்.

 

மது இங்கு பைந்தமிழை கண்டவள் .   இவனிற்கு பெண்களை கண்டாளே பிடிக்காது வெட்டவா குத்தவானு பாப்பான்.   அதுவும் நான் இவன் பிரன்ட்ட பேசின பேச்சுக்கு என்ன பண்ண போறானோ!!!!! இவன் கிட்ட நான்  என்ன பேச .   .   .   .   .   .   .   என்று தெரியாமல் ஹீ ஹீ  என்று சிரித்து வைத்தாள்.

 

இவர்களை கடந்து சென்ற பெண்கள் பைந்தமிழை மையலுடன் பார்த்து விட்டு செல்ல,   அந்த பெண்களை நோக்கி அனல் கக்கும் பார்வையை வீசிவிட்டு,

 

தன் பாக்கெட்டிலிருந்த போனை அனைத்தவன்.   “ஐ திங்க் யுவர் ஒர்க் பினிசிடு நௌ.    ஷெல் வி  மூவ்,   ஐ வான்ட் டாக் டு யு ”

 

மதுவின் இதயம் செத்தடி நீ என்று    வேகமாய் துடிக்க,   ஆம் என்பது போல் தலை அசைத்தாள்.

 

அவளுக்கு தன் கார் கதவை திறந்து விட்டவன் மறுபக்கத்தில் அமர்ந்து காரை கிளப்பியவாறு.     “நான்உங்க பர்சனல்  பேசறனு  தப்பா நினைக்க வேண்டாம் .   ஒரு பிரன்ட்டா  அவனை எனக்கு 6  வருசமா தெரியும்.

 

அவன் 24×7 யோசிக்கிறது உன்ன பத்தி மட்டும் தான்.   அவன் எது செஞ்சாலும் உன்னோட நல்லதுக்கு தான் .   கொஞ்சம் அவன் மனசை காயப்படுத்தாமல் இரும்மா,   ”

 

என்று பைந்தமிழ் முடிக்கவும் அவளின் ஹாஸ்டல் முன் கார் நிற்கவும் சரியாய் இருந்தது.   அவனை பார்த்து தலை அசைத்தவள்.   ” ம்ம்ம் சரி அண்ணா இனி இந்த மாதிரி எதுவும் நடக்காது.   உங்க பிரன்ட்டய் ஹேட்  பண்ண மாட்டேன்.   என்றுவிட்டு கீழிறங்க ,

 

அவளை ஆச்சர்யமாய் பார்த்தவன் அவளோடு இறங்கிய கார் டிக்கியிலிருந்து ஒரு பார்சலையும்,   பழங்கள் அடங்கிய பையையும் அவளிடம் குடுத்து விட்டு,   “அட்வான்ஸ் ஹாப்பி பர்த் டே “என்று விட்டு கிளம்ப போக,

 

“தேங்க்ஸ் அண்ணா ,   அப்புறம் கங்கிராட்ஸ்  அண்ணா நியூ இயர் க்கு உங்க முதல் படம் ரிலீஸ்ஆக போது  இல்லையா,   டீசர் பாத்தேன் ரொம்ப நல்லா இருக்கு” என்றவள்.      ஏதோ சொல்ல தயங்கி பின் “அண்ணா,   மேரேஜ் பண்ணி கோங்க லைப் நல்லா இருக்கும்.   எங்க சண்டை எல்லாம் உதாரணமா எடுத்துக்காதீங்க,

 

அண்ணா ,   அண்ணி பாருங்க எவ்ளோ ஹாப்பியா இருக்காங்கன்னு,    நாங்க  கூட கொஞ்ச நாள்ல சரி ஆகிடுவோம்.   தனியா இருக்கது ரொம்ப கஷ்டம்னா என்னோட அனுபவத்துல சொல்றேன்.   ”

 

மதுவை பார்த்து வாழ்த்துக்கு நன்றி சொன்னவன்.   ” படத்தை நீயும்  அவனும் ஒண்ணா போய்ப்பாத்திங்கனா ரொம்ப ஹாப்பியா பீல் பண்ணுவேன் “.

 

பின் திருமணம் பற்றி அவள் பேசியதை  எண்ணி விரக்தியாய் சிரித்தவன்.   “அர்ஜுனும் சரி நீங்களும் சரி அன்பை மட்டும் அடிப்படையா வச்சி கல்யாணம் பனிங்க,    இப்போல்லாம்  பணத்தை  வச்சி மட்டும் தான் கல்யாணம் பண்ண முடியும்.

 

பணத்துக்காக பொய்யான பாசத்தை பார்த்து பார்த்து வெறுப்பு ஆய்டுச்சுமா,   எனக்கு கல்யாணம் லாம்  செட் ஆகாது” எனவும் இதுவரை மலர்ந்திருந்த மதுவின் முகம் வாடியது .

 

இதுவரை மதுவை எல்லா பெண்களையும் போல் திமிர் பிடித்தவளாய் எண்ணியவன்.   அவளின் இந்த உண்மையானா அக்கறையில்   கவரப்பட்டவனாய்  அவளிற்காக.   .   .   .   .   .   .   .   .

 

“பணத்தை மதிக்காம,    என் மனசை மட்டும் மதிக்கிற பொண்ணு கிடைச்சா கல்யாணம்  பன்ணிக்கிறேன்.   ” என்று சமாதானமாய்  கூற

 

அவன் இவ்வளவு பேசியதே மதுவிற்கும்   சந்தோசமாய் இருக்க “அப்படி ஒருத்தவங்க சீக்கரம் கிடைப்பாங்க பாருங்க,   அப்போ என்கிட்ட கண்டிப்பா சொல்லணும்” என்றவள்.   மனதில் ஏனோ வருணியின் முகம் மின்னி மறைந்தது.

 

இதை கேட்ட பைந்தமிழின் மனமோ அப்படி ஒருத்தி இந்த உலகத்துலயே இல்லை என்றது.   வருகிறேன் என்பது போல் சிரித்து தலை அசைத்து வண்டியை கிளப்ப திரும்ப சாலையின் மறுபுறத்தில் இருந்து ஒரு பெண் நடந்து வந்து கொண்டிருந்தாள்.

 

எங்கோ அவளை பார்த்தது போல் தோன்றவும் திரும்பி பாரு என்ற மனதை அடக்கி தோலை குலுக்கி விட்டு காரை எடுத்து கொண்டு சென்று விட்டான்.

 

கார் சென்ற திசையில் சிறிது நேரம் மது பார்த்திருக்க  அவள் தோள் தொட்டு திருப்பிய வருணி “என்ன மது ரிலேட்டிவ் வா “,    ஆம் என தலையசைத்து “அண்ணா” என்க ,

 

“என்னது மாமா வா இவ்வளவு தூரம் வந்து தங்கச்சிய பார்த்தவரு ,   என்ன பாக்காம போயிட்டாரு ,   நெக்ஸ்ட் டைம் வரட்டும் நான் அவர்கிட்ட பேசவே மாட்டேன்.   ” என்று முறுக்கிக்கொண்டு ஹாஸ்டலில் உள்ளே சென்றுவிட்டாள்.

 

அது அர்ஜுன் அண்ணா இல்ல,   இது வேற என்று மது சொன்னது காற்றில் கரைந்தது,    இவளும் அவளை தொடர்ந்தே தங்களின் அறையின் உள் நுழையவும் சென்ற வேகத்திலேயே  கோபமாய் இருப்பது போல் கன்னத்தில் கை வைத்து அமர்ந்து இருந்தாள்.

 

அவளை கண்ட மதுவிற்கு சற்றுமுன்  பணத்திற்காக இல்லாமல் பாசத்திற்காக பெண் வேண்டும் என்று பைந்தமிழ் சொன்னது நினைவு வர,    இருவரையும் இனைத்துப் பார்த்தாள் .   மதுவிற்கு தெரிந்த வரை பணம் என்ற அடிப்படையை வைத்து இதுவரை வருணி பழகியது கிடையாது

 

ஹாஸ்டல் ரூம் கிளீன் பண்ண வரும் பணியாளரிடம் கூட சிரித்து பேசும் குணம் உடையவள்.    இருவரும் இணைந்தால் பொருத்தமாக இருக்கும் என உணர்ந்தாள்.

 

கணவனுடன் பேச ஆரமித்ததும் இதை பற்றி பேச வேண்டும் என மனதில் குறித்து கொண்டாள்.   பின் பைந்தமிழ் இருவரையும் இனைந்து படத்திற்கு அழைத்தது நினைவில் வர,   இது நாள் வரை மனோவோடும் குடும்பத்தாரோடும் எத்தனையோ முறை தியேட்டர் சென்றிருந்தாலும் சக்தியோடு சென்றது இல்லை.

 

இந்த படத்துக்கு போனா நல்ல நல்லா இருக்கும் என்று யோசனையில் இருக்க மனோ அழைப்பு விடுத்திருந்தான் .   அவனிடம் பேச ஆரம்பித்ததும் மற்றவை மறந்து விட்டால் நீண்ட நாள் கழித்து மனோ ஊர் திரும்பி இருந்ததால்  மும்பை சென்று வந்த கதைகளை இவர்கள் பேசிக் கொண்டிருக்க,    வருணி மற்ற தோழிகளுடன் கதை பேசிக்கொண்டே சென்று உண்டு விட்டு மதுவிற்கும் கொண்டு வந்து கொடுத்து விட்டு உறங்கிவிட்டால்

 

மறுநாள் காலை மது கல்லூரியில் நுழைந்ததில் இருந்து அங்கிருந்த சக ஆசிரியர்களின் பார்வை மதுவிலே பட்டு மீண்டு கொண்டிருந்தது.    முதுகுக்குப் பின்னால் ஏதோ கிசுகிசுத்துக் கொண்டே இருந்தனர்.    இவள் பழகிய சிலரும் இவளின் வழக்கமான புன்னகையை  கண்டு முகத்தை சுளித்து விட்டு சென்றனர்.

 

மதிய உணவு வரை இவர்களை கடந்து சென்றவளால் அதற்குப் பின்னும் முடியும் என்று தோன்றவில்லை

 

அவளை இதுவரை யாரும் குறைவாய் ஒரு பார்வை பார்த்ததில்லை.    வீட்டினர் பார்க்க விட்டதும் இல்லை .   சக்தி இவளை விட்டு சென்ற பின் சாந்தியும் பிரியாவும் மதுவின் மனம் சங்கடப்படும் படி பொதுவெளியில் பேச ஆரம்பித்தால் கங்கா அவர்களை ஒரு வாங்கு வாங்கிவிடுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!