Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Un Vizhigalin Mozhi Ennavo

Un Vizhigalin Mozhi Ennavo 29 2

 

 

ஒரு முறை கங்கா பிரியாவை அடிக்க பாய்ந்து விட பின்னரே மது.   .   .   .    சொந்தம் என்பதால்  இவர்கள் வருவார்கள் என்று எந்த சுப நிகழ்ச்சிகளுக்கும் கோவில்களுக்கும் செல்வதை தவிர்த்து விட்டாள் .

 



Advertisement

அதன்பின் சுரேஷ் ஒருமுறை அவளைப் குறைவாய் பார்க்க இவள் அறியும் முன்னரே சக்தி அடித்து துவைத்து விட்டு இருந்தான்.    ஆனால் இப்போது .   இந்த வீட்டு புறாவிற்கு.   .   .   .   .     என்ன செய்வது என்று தெரியாமல்.

 

ஏன் இப்படி கேவலமாக பார்க்கிறார்கள் .   அதுவும் யாரும் தன்னோடு பேசவும் இல்லை என்று மன உளைச்சலுக்கு உள்ளாகி போனாள் .

Advertisement

 

Advertisement

என்ன என்று தெரிந்தால் கூட பரவாயில்லை எதுவுமே புரியாமல் தலை வெடித்து சிதறி விடும் போல தோன்றவும் .   அமைதியாக தலையை பிடித்துக் கொண்டு ஸ்டாப் ரூமில் உட்கார பிடிக்காமல் கிரவுண்டில் மரத்தடியில் சென்று அமர்ந்தாள்.

 

அப்போது தான் உண்டு முடித்து விட்டு கதை பேசிக்கொண்டே தன் தோழிகளுடன் வந்த பிரியா  மதுவின் காது பட ஜாடை பேச தொடங்கினால்.

Advertisement

 

ஒருத்தி  “ச்ச்ச எப்படி தான் கல்யாணம் ஆன பின்னாடியும் புருஷன விட்டுட்டு கண்டவனோட ஊர் சுத்துதுங்களோ !!!புருஷனுக்கு துரோகம்  பண்றோமேன்னு தோணவே தோணாது.    சரியான வெக்கங்கெட்ட ஜென்மங்கள்”  என்று நொடித்துக் கொள்ள,

 

மற்றொருத்தி “என்னடி நீ புருஷன் கூட இருந்தால்  பிரச்சனை.   அது வசதி படாததால் தான் ஹாஸ்டல்ல இருக்காங்க,   ” மதுவிற்கு முதலில் சுத்தமாய் புரியவில்லை இவங்க என்ன பேசுறாங்க என்று பார்த்து இருக்க

 

பிரியா “அவ புருஷன் ஆம்பளையா இருந்தா அவ ஏண்டி கண்டவனோட சுத்த போறா அவளுக்கு பின்னாடி கல்யாணம் ஆன நானே என் பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பிட்டேன்.

 

இவளும் எவ்வளவுநாள் தான் குழந்தைகளுக்கு வெயிட் பண்ணுவா,    அதான் அவளே வேற வழி தேடி டா போல,    என்று வக்காலத்து வாங்குவது போல் பேசி,    பின் அவளே தேடிட்டாலோ இல்ல அவ புருஷனே அனுப்பி வச்சானோனு தெரியலையே!!!” என்று குத்தலாய் முடிக்க ,

 

சட்டென்று மதுவின் கரம் ப்ரியாவின் கண்ணத்தில் பதிந்து இருந்தது .   பிரியா பேச ஆரம்பித்த பின்தான் மதுவிற்கு புரிந்தது.    இவர்கள் பேசுவது தன்னை பற்றியும்,    நேற்று பைந்தமிழ் வந்து சென்றதை பற்றியும் என்று.    முதலில் பொறுமை காத்தாள்.

 

அவளின் கணவனை பற்றி பேசவும் பொறுக்க முடியாமல் காளி அவதாரம் எடுத்து விட்டால்.    கோபம் வந்துவிட்டால் முன்பின் யோசிக்காமல் ஆடுபவள் காலில் சலங்கை கட்டி விட்டால் அமைதியாய் இருப்பாளா ,

 

அதுவும் இவர்கள் பேசியதெல்லாம் இதுவரை வாழ்நாளில் அவள் கேட்டிராத வார்த்தைகள் .   ப்ரியாவின் கையை கோபமாய் பற்றி ,   “ஹோ என் புருஷன் ஆம்பளை இல்லாம தான்  நீ அவரை கல்யாணம் பண்ணிக்க சமைஞ்ச நாள்ல இருந்து அவங்க பின்னாடியே சுத்திட்டு இருந்தியா,

 

இல்லை எங்க கல்யாணம் மான பின்னாடியும் உன்ன பெத்த அம்மாவே உன்னையும் அவரையும் சேர்த்து வைத்துப் பேசி,   என்னை சந்தேகப்பட  வச்சாங்களே!!  அப்போ எல்லாம் அவரு ஆம்பளையா இருந்தாரா ,   என்று கைப்பிடியில் அழுத்தத்தை கூட்ட ப்ரியாவின் கையில் இருந்த கண்ணாடி வளையல்கள் உடைந்து

 

கையில் ரத்தம் வர ஆரம்பித்தது.    மதுவின் உள்ளங்கையிலும் கண்ணாடி துகள்கள் குத்தி சில சொட்டு ரத்தம் பூமியில் பட்டது.

 

ஒருத்தன் ஆம்பளைன்னு நிரூபிக்க குழந்தை பெற்று கிட்டா மட்டும் போதுமா,    உண்மையாவே ஆம்பளனா .     பெத்தவங்க பேச்சுக்கு மரியாதை கொடுத்து அவனோட ஆயுசுக்கும் அவன் குடும்ப கௌரவத்தை சிதைக்காமல் கட்டின பொண்டாட்டிய கண்கலங்காமல் சந்தோஷமா வச்சுக்கணும் .   அதோட உனக்கு என்ன ஆனாலும் நான் இருக்கேன் என்ற நம்பிக்கையை அவளுக்கு கொடுக்கணும்.

 

இப்படி எல்லாம் பார்த்தா என் புருஷன் ஆம்பளைதான் அதே மாதிரி ரெண்டு குழந்தை பெத்துட்டா நீ பொம்பளையாகி விட முடியாது.    நாளைய சமுதாயத்திற்கு  பாடம் கற்றுக் கொடுக்கிற பொறுப்பான ஆசிரியர் பணியில் இருந்து கிட்டு ,

 

ஒரு பொண்ணோட கற்பு பற்றியும்,     ஆண்மையை பற்றியும் அவதூறா பேசுறே!!! நீ எல்லாம் மனுஷி கிடையாது.   ராட்ஷசி என்று அழுத்தத்தை கூடிக்கொண்டே போக பிரியா வழியில் கத்தியே விட்டாள்.    பிரியாவின் சத்தம் கேட்டதும் ஆசிரியர்கள் பலர் எட்டிப்பார்க்க,

 

வேகமாய் வந்து  மதுவிடம் இருந்து அவளை பிரித்து முதலுதவி செய்ய ஆரம்பித்தனர்.    இவளைப் பற்றி அவதூறாக பேசிய மற்ற இருவரையும் நோக்கி ஒரு வெட்டும் பார்வையை வீச,

 

இவர்கள் இருவரும் ஒரு அடி பின்னால் நகர்ந்து நின்றனர்.

 

மது தன் கைபையோடு கல்லூரியை விட்டு வெளியேறிவிட்டாள்.    விடுதி அறைக்கு வந்த பின்னும் கோபம் அடங்காமல் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தால்.

 

இன்னும் அவள்  விரல்களில் ரத்தம் உறையாமல் சொட்டிக்கொண்டே இருந்தது.    ஞாயிறு கேம்ப் சென்று வந்ததால் இன்று  ஆப் எடுத்து ரூமில் உறங்கிக்கொண்டிருந்த வருனி சத்தம் கேட்டு கண் விழித்து பார்க்க,

 

புடவை கசங்கி இடுப்பு வரை உள்ள கூந்தல் விரிந்து ரத்தம் சொட்ட சொட்ட பெண் புலி போல் உறுமிக்கொண்டிருந்தவளை  பார்த்ததும்

 

ஆ.   .   .   .   .   .   .   .   .   .    என்று அலறி விட்டாள்.

 

அதோடு அவளின் வாய் சும்மா இராமல் மதியம் பார்த்த அன்னை காளியம்மன் படம் ரம்யா கிருஷ்ணன் மாதிரியே இருக்கு என்று  கூற,   பின் கண்ணை தேய்த்து விட்டு திரும்ப பார்க்க ,   அது மது.   .   .   .   .   அடச்சே இதுதான் பழைய படம் எல்லாம் பார்க்க கூடாது என்று சொல்வது என்று தன்னையே திட்டிக் கொண்டு,

 

“ஹேய்ய் .   .   .   .   மது என்ன ஆச்சி  “என்றாள் ரத்தத்தை பார்த்ததும் பதறியவளாய்.

 

அதுவரை கோபத்தில் உறுமிக்கொண்டு இருந்தவள்.    வருணியை அனைத்து கொண்டு ஹோ வென்று அழுகை ஆரம்பித்து .   பின் அழுகையின் ஊடே” அவரு என் சொந்த அண்ணா போல இப்படி பேசிட்டாங்களே!!!!

 

அதுவும் என்னோட ப்ரியன் ரொம்ப நல்லவரு வருணி,   எனக்காக பார்க்க போயி  இப்போ அவரை எவ்ளோ அசிங்கமா பேசுறாங்க,   ”  என்று கல்லூரியில் நடந்ததை  கூறி இனிமேல் அந்த காலேஜ்க்கு போக மாட்டேன்”

 

என்று மேலும் மேலும் அழுது கொண்டிருக்க ,   பொறுத்து பொறுத்து பார்த்த வருணி அதற்கு மேல் முடியாமல் மதுவின் தலையில் நங்கென்று கொட்டிவிட்டால்.   மது அதிர்ச்சியாய் பார்க்க,

 

“தப்பா பேசுன வாய ஒடச்சிடு வராமல்,   அவ கைக்கு மசாஜ் பண்ணிட்டு  இங்க வந்து அழுகுறியா ,    எந்த பிரச்சனை வந்தாலும் கெத்தா இருக்கணும்.

 

தப்பா பேசுன அவளே ஜாலியா இருக்கும் போது.    தப்பே பண்ணாத நீ ஏன் அழுகணும் காலேஜை விட்டு போகனும்.    அப்படி போனா அவ பேசினது உண்மையாகிவிடும் இதுக்கு மேல உன்னை சீண்ட யாராயிருந்தாலும் பயப்படனும் அந்த மாதிரி நீ நடந்துக்கனும் புரிஞ்சதா என்று அதட்ட .   ”

 

புரிஞ்சது என்பது போல் வருனியை பார்த்து புன்னகைத்து “ஆமாம்ல கொஞ்சம் எமோஷனலாகிட்டேன்.     எப்படி இருந்தாலும் அடிச்சதுக்கு மெமோ இல்ல சஸ்பெண்ட் வரும் .   பேசாம இப்போ போய் அவ வாய ஓடச்சிட்டு வரவா,   “என்று ப்ரோபஸ்னல் ரவுடி போல கேட்க,

 

வருணி இவளுக்கு மேலே போய்” இப்போ வேண்டாம் போலீஸ் கேஸ் ஆகிடும் கொஞ்சம் அடக்கி வாசிப்போம்.    பின்னாடி ஸ்கெட்ச் போட்டு  தூக்கிறாளாம் “என்க

 

இருவரின் முகமும் புன்னகையை பூசி கொண்டது .   மது சகஜமாகி விட்டாலும் பிரியாவை இப்படியே வளர விட மனமில்லாமல்  வருணி தமிழினியிடம் கூறிவிட்டாள்.

 

அடுத்த நாள் காலை மது தைரியமாக தான் கல்லூரி சென்றிருந்தால்.    குற்றமுள்ள நெஞ்சம் தானே குறுகுறுக்கும்.    இவள் வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த சமயம் ஸ்டாஃப் மீட்டிங் என்று தகவல் வர அப்போதும் அங்கு நிமிர்வாதாய் சென்று அமர்ந்தாள்.

 

பிரின்ஸ்பல் விசாரணை தொடங்கியதும் தான் பேசியதை கூறாமல் மது அடித்ததை மட்டுமே பிரியா கூறினாள்.

 

அவரும் கேள்வியாய் மதுவை பார்க்க அவளும் காரணம் கூறாமல் அடித்ததை ஒத்துக்கொண்டாள்.

 

பிரண்ட்ஸ்பல் யோசனையோடு மதுவை பார்த்தார்.    சக ஆசிரியரை அடித்தது தவறு என்றாலும் அவளின் விழிகளில் கயமையும் தயக்கமும் இல்லை .   மாறாய் நேர்கொண்ட பார்வையோடு பார்வையில்  தீட்சண்யமும் கலந்து நின்றிருந்தாள்.

 

தவறு செய்தவர்களிடம் இந்த நேர்மை இருக்காது ஆனால் அனைவரும் முன்னும் அடித்ததாய் ஒப்புக்கொண்டவளை என்ன செய்ய,

 

என்ன காரணத்திற்காக அடித்தாய் என்று கேட்க” என்னோட பர்சனல் பத்தி தேவையில்லாமல் பேசுனா,    இப்படித்தான் செய்வேன்,   யாராக இருந்தாலும் ” என்று திமிறாய்  பதில் வரவும் அவருக்கும் கோபம் வந்து விட்டது.

 

உடனடியாய் அனைவர் முன்னும் ப்ரியாவிடம் மன்னிப்பு வேண்ட சொல்ல,   ஒரு நொடி அவரை அலட்சியமாய் ஏறிட்டவள்.   அங்கிருந்த லெட்டர் பேடை எடுத்து அவசரமாய் ரெசிக்னேஷன்  லெட்டர் எழுதி “என்னோட சுயமரியாதையை  விட்டுட்டு தான் இங்க வேலை செய்யணுன்னா,    அப்படி பட்ட வேலையே எனக்கு வேண்டாம் “என்று  கூற,

 

சட்டென்று அறைக்கு வெளியில் இருந்து கைதட்டல் ஒலிக்கவும் அனைவரும் வாசலை நோக்கி திரும்ப  அங்கு நின்ருந்தவரை பார்த்து அதிர்ச்சியாக மதுவோ அவரின் பின்னால் நின்ருந்தவரை பார்த்து அதிர்ச்சியாகி விட்டாள்.

 

அவளின் வாய் தானாய் பிரியன் என்று உச்சரித்தது .   ஆம் அவளின் கணவன் கிட்டத்தட்ட 10 மாதங்களின் பின் சந்திக்கிறார்கள் .   மதுவின் விழிகள் சொந்ததோடு அவனை தொடர,    சக்தியோ அறிமுகமில்லா பார்வையைப் பார்த்து வைத்தான்.

 

இதுவரை அவனின் கோபம் ,   பாசம்  ,   சீண்டல் ,   காதல்  என்று எல்லா பார்வையையும் பார்த்திருக்கிறாள் .   ஆனால் இப்படி யாரோ என்பது போல் ஒரு பார்வையை பார்த்ததில்லை.    மதுவின் மனம் வாள் கொண்டு அறுத்தது போல் வலித்தது.

 

அவன் விழிகளை நோக்கிய இவள் விழிகள் “உன் விழிகளின் மொழி என்னவோ” என்று எப்போதும் போல் கேட்டு வைக்க .   இவளை அலட்சியப்படுத்திய அவனின் விழிகள் பிரியாவின் மேலும்,    கட்டுப் போட்டு இருந்த அவள் கைகளின் மீதும் ஒரு நொடி படிந்து மீண்டது.

 

மொழி தொடரும் .   .   .   .   .   .   .   .   .   .   .   .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!