Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Uyir KaaKkum Uyir Kolli – 10

அத்தியாயம் -10

மறுநாள் காலையில் இளம்பருதி ரகுவுடன் எப்போதும் அமர்ந்திருக்கும் மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தான்.
ஏதோ நினைவு வந்தவனாய் தன்னுடைய கைப்பேசியை எடுத்தவன் அவனுடைய அத்தைக்கு அழைத்தவன் “ஹலோ அத்தை ரீச்  ஆகிட்டீங்களா?” என்றான்
“ஆமா சின்னு இப்போ தான் ரீச் ஆனோம்” என்று அவர் கூற…
“அத்தை நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குல்ல பாத்து கவனமா இருங்க” என்று கூறி கைபேசியை அணைத்து விட்டான்.
அங்குள்ள சீதோஷண நிலையை பற்றி மட்டுமே கவலைப்பட்ட அவன் அறியவில்லை, அங்கே இருக்கும் பேராபத்தை.

“யாருடா?…. நளினியோட அம்மாவா?  ஊருக்கு போய்ட்டாங்களா?” என்று கேட்ட தன் நண்பனிடம் “என்னோட அத்தை பத்திரமா போய்ட்டாங்களாம்” என்று பதிலளித்தான்.

‘இது எப்போல இருந்து’ என்று அவன் தன் நண்பனை அதிர்ச்சியாக பார்த்துக்கொண்டிருக்கையில் அங்கு வந்து சேர்ந்தாள் நளினி.



Advertisement

“ஹாய் அண்ணா….. என்ன கிளாஸ் போலையா” என்றவள் தன் புத்தகப் பையில் இருந்து ஒரு பாத்திரத்தை எடுத்து அதை ரகுவிடம் கொடுத்து, “இந்தாங்க அண்ணா பால்கோவா சாப்பிடுங்க…..” என்றாள்

உடனே இளம்பருதி “ஏய் நீ எதுக்கு பால்கோவா எடுத்துட்டு வந்த அத்தை எனக்காக பண்ணி கொடுத்தது”

“அத்தான்…. ஸ்கூல்ல சொல்லிக் கொடுக்கல ஷேரிங்……
பாவம் அண்ணா ஹாஸ்டல்ல இருக்காங்க”

Advertisement

“தோ பாருடா….. ஹாஸ்டல் இருக்கானாம்……. இவன்  சாப்பிடாம இருக்கான்னு நீ நினைச்சிட்டு இருக்க…..  காலேஜ் கேன்டீன்னே இவனால தான் காலி ஆகுது அது உனக்கு தெரியுமா?”

Advertisement

“அத்தை எனக்காக ஆசையா பண்ணி கொடுத்தாங்க….. அத நீ எடுக்கறதே மொத்தல்ல தப்பு…… இவனுக்கு வேற கொண்டு வந்து கொடுத்துட்டு இருக்க”

இவர்களுடைய சண்டையை சிறிதும் கவனிக்காமல் பால்கோவா தான் முக்கியம் என்ன பாத்திரத்தை காலி செய்திருந்தான் ரகு.

அதன்பின் தான் அவன் பேசவே ஆரம்பித்தான்.

Advertisement

“டேய் என்னடா வந்ததிலிருந்து என் அத்தை…. என் அத்தை… ங்கிர இது எப்போ இருந்து?? ஒரே ஒரு நாள்தான் லீவு விட்டாங்க அதுக்குள் இவ்ளோ பெரிய ஷாக் கொடுக்கிற?”

“ஐயோ அண்ணா….  நேத்துல இருந்து தான்……. ஏன் தான் இவங்க சேர்ந்தாங்கன்னு இருக்கு” என்று அவள் குறைபாட ஆரம்பிக்க.

“ஏன்மா அப்படி சொல்ர உன் ரூட் இனி கிளியர்ன்னு சந்தோஷ படாம? என்று  அவளிடம் சந்தேகமாய் கேட்டான் ரகு

“ரொம்ப ஓவரா அளப்பறியா இருக்கு அண்ணா….. பாசத்தை அப்படியே போழியுராங்க”

“ஆமா ஆமா நான் கூட இப்போ ஒரு ஷோ பார்த்தேன்” என்று அவனும் தன் பங்கிற்கு நக்கலடிக்க

“பாத்தீங்களா……. ஒரு ஷோ பார்த்த உங்களுக்கே இப்படி இருக்குன்னா??
முந்தாநாள் நைட்ல இருந்து நான் ஒரு பத்து பதினஞ்சு ஷோ பார்த்திருப்பேன் எனக்கு எப்படி இருக்கும்??”

“போதும் போதும் பொறாமையில் பொங்காதீங்க……” என்றவன் இருவரின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
இப்படியே இவர்களுடைய கல்லூரி நாட்கள் மகிழ்ச்சியாய் கழிய இரண்டு வாரங்கள் உருண்டோடியது. அன்று தான் அவனுடைய அத்தையும் மாமாவும் வீட்டிற்கு திரும்பும் நாள்.

அவரை அழைத்து வர விமானநிலையத்தில். இளம்பருதி ரகு நளினி மூவரும்  காரில் கிளம்பினார்கள். மகிழ்வுந்து விமான நிலையத்தை அடைந்தது. விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் கடந்து வெளியில் வந்த மீனாட்சியும் சுந்தரமும் மிகுந்த சோர்வுடன் காணப்பட்டனர். அது பயணக் களைப்பாக கூட இருக்கலாம் என நினைத்த இளம்பருதி அவர்களை வாகனத்திற்கு அழைத்துச் சென்றான்.

[the_ad id=”6605″]

” என்னாச்சு அத்தை ரொம்ப டயர்டா இருக்கீங்க” என்று அவன் கேட்க….

“நாலு நாளா காய்ச்சல்…. சின்னு, சளி புடிச்சிருக்கு” என்றார் அவர் சோர்வாய்

“என்ன சொல்றீங்க? பார்க்கவே ரெண்டு பேரும் டயர்டா இருக்கீங்க…” என்று நளினி கேட்க…

” எனக்கு லைட்டா தான் மா அம்மாக்கு தான் ரொம்ப அதிகமா இருக்கு….” என்று சுந்தர் கூறினார் அவருடைய குரலுமே சற்று தொய்வுற்றிருந்தது.

“உடம்பு சரியில்லைன்னா உடனே கிளம்பி வர வேண்டியது தான?” என்று பரிதி சிடுசிடுத்தான்.

“டிக்கெட் கிடைக்கல பா கிடைச்சதும் கிளம்பிட்டோம். எங்களுக்கு ஒன்னும் இல்ல சின்னு அங்குள்ள கிளைமேட்  ஒத்துக்கல அவளவு தான்…. நீ வீட்டுக்குப் போ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா எல்லாம் சரியா போயிடும். ” என்று மீனாட்சி விளக்கம் அளிக்க….

அப்பொழுதும் இளம்பரிதியின் முகம் தெளிவடைய வில்லை. அதற்கு காரணம் இரு தினங்களுக்கு முன் அவன்  தொலைபேசிக்கு வந்த ஒரு குறுஞ்செய்தி ஆகும். அதில் அவன் அத்தை சென்றுவந்த கிராமத்திற்கு அருகிலுள்ள நகரத்தில் ஒரு மர்ம நோய் பரவி வருவதாக அவனுக்கு தகவல் வந்திருந்தது…. மேலும் அந்த நோயினால் பலரும் இறந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

“அத்தை ஹாஸ்பிடல் போய் பார்க்கலாம் என்னன்னு” என்று அவன் கூற

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்… நல்லா சுக்கு காபி வச்சு குடிச்சு……ஒரு மணி நேரம் படுத்து எழுந்தா எல்லாம் சரியா போயிடும்” என்றார் மீனாட்சி.
அவருக்கு எப்பொழுதுமே மருத்துவமனைகள்  மீது ஒரு பிடித்தம் இருந்ததில்லை.

“சரி” என்றவன்…. அவர்கள் அனைவரையும் காரில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டான்.

வீட்டிற்கு வந்தவுடன் முதல் வேலையாக அவன் அத்தை மாமா இருவருக்கும் ரத்தப் பரிசோதனை செய்தான்.

“என்ன அத்தான் நீங்க டாக்டர் பண்ண வேண்டியத எல்லாம் நீங்க செய்றீங்க?”

“கொஞ்சம் சும்மா இரு…. டாக்டர்ஸ்  டெஸ்ட் எடுக்க மாட்டாங்க டெஸ்ட் ரிசல்ட்ஸ் படிச்சு டிரிட் பண்ணுவாங்க.   நம்ம என்ன படிக்கிறோம்னே தெரியாம படிக்கிற ஒரே ஆள் நீ ஒருத்திதான்.”

“அன்னைக்கே சொன்னேன்ல….. நான் ஏன் இங்க படிக்க வந்தேன்னு? திரும்ப  சொல்லணுமா?”  என்று அவள் கேட்க.

இப்பொழுது அவளுடன் வம்பு வளர்க்கும் நிலையில் அவன் இல்லை. அவனுடைய சிந்தனை முழுதவதையும் அந்த மர்ம நோயே ஆக்கிரமித்திருந்தது.

அவன் வீட்டிலேயே ஒரு சிறிய சோதனை கூடத்தை அமைத்திருந்தான்.  அது அவனைக் கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்த பொழுது அவன் தனக்காய் உருவாக்கிய ஆய்வுக்கூடம். அங்குதான் அவனுடைய அத்தை மற்றும் மாமாவின் இரத்த மாதிரிகளை பரிசோதித்துக் கொண்டிருந்தான்.

சோதனை முடிவுகள் அவன் எதிர்பார்த்ததை போல் இல்லை அவனுக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தருவதாக இருந்தது.

“சாதாரண ஃபீவர் தானடா? என்று ரகு அவனிடம் கேட்க….

“இல்ல மச்சான்….. இது சாதாரண ஃப்ளூ வைரஸ் இல்லை. ஆக்சுவலா இது 2003 ல வந்த ஒரு உயிர் கொல்லி நோய் கிருமியோட 90% ஒத்து போகுது……. அது மட்டுமில்லாமல் எனக்கு ஒரு சந்தேகமும் இருக்கு. வௌவால்ல  மட்டும் பாதிப்பை ஏற்படுத்திய வைரஸ் ஓட ஜெனிடிக் மெட்டீரியல் இது கூட ஒத்து போகுது.
யாராவது இதை மனுஷங்களை பாதிக்கிற மாதிரி மாத்தி அமைத்திருக்கலாம்.

“அத்தான் அம்மா இப்படி படுத்து நான் பார்த்ததே இல்லை….. ரொம்ப பயமா இருக்கு” நளினியின் கண்கள் தன் அன்னை தந்தையை நினைத்து கலங்க ஆரம்பித்தது.

“என்னடா சொல்ற….. உங்க அத்தைக்கும் மாமாக்கும் ஒன்னும் ஆகாது இல்ல?” அவன் கூறிய செய்தியால் பதட்டம் அடைந்த ரகு கேட்க.

“அது அவங்களோட இம்யூன் சிஸ்டம் பொருத்து, இம்முநிடி ஸ்ட்ராங்கா இருந்தா அவங்க இதை ஓவர் கம் பண்ணிடலாம்…..
அது மட்டும் இல்ல இப்போ அந்த வைரஸ் நம்ம உடம்புலையும் இருக்கலாம்……. ஏன்னா இது அவ்ளோ பாஸ்டா ஸ்பிரட்  ஆகக்கூடியது.”

“டேய் அதான் நீ கண்டுபிடிச்ச sv2020 இருக்கே!! அத வச்சு எந்த வைரஸையும் அழிக்க முடியும்ன்னு நீ தானடா சொன்ன? இப்போ என்ன யோசனை அதை எடு” என்றான் ரகு

[the_ad id=”6605″]

“அதை நான் இது வரைக்கும் எந்த ஹியூமன் மேலேயும் டெஸ்ட் பண்ணதே இல்ல டா அதுமட்டுமில்லாமல் அதுக்கு கவர்மெண்ட் அப்புரூவல் வேணும்.” என்று விளக்கமளித்தான் இளம்பருதி.

“நீதான் அன்னைக்கு எனக்கு சிஸ்டம்ல காட்டுனியேடா? நல்லா வேலை செஞ்சதே?”

“அது வெறும் சிஸ்டம் சிமுலேஷன் எப்படி ஒர்க் ஆகுதுன்னு ஒரு ட்ரையல் பார்த்தோம்….  பட் ஹியூமன் பாடில நிறைய நிறைய விஷயம் இருக்கு. ஒவ்வொருத்தருடைய உடம்புமும் ஒவ்வொரு மாதிரி…. யோசிச்சு தாண்டா பண்ணனும். கவர்மெண்ட் அப்புரூவல் இல்லாமல் பண்ணுது ரிஸ்க் ” நிதர்சனத்தை உறைத்தான் இளம்பருதி.

“ரெண்டு, மூணு  நாள் முன்னாடி எனக்கு ஒரு நியூஸ் வந்தது அப்ப நான் அத சீரியஸா எடுத்துக்கல….. நிறைய பேர் இறந்து இருக்காங்க டா
அத்த போயிட்டு வந்த ஊருக்கு பக்கத்து ஊர்தான்….” என்று அவன் மேலும் தான் அறிந்தவற்றை கூற

“என்ன அத்தான் சொல்றீங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று நளினி அழவே ஆரம்பித்து விட்டாள்.

“நீ பயப்படாத அத்தைக்கு ஒன்னும் ஆக நான் விடமாட்டேன்” என்று அவன்
நளினியை சமாதானப் படுத்தினான்.

“டேய் யோசிக்கலாம் டைம் இல்ல டா… இப்போ நீ கவர்மெண்ட்டுக்காக  வெயிட் பண்ணிட்டு இருக்க முடியாது…..”

“மொதல்ல நான் சொல்றத நீங்க ரெண்டு பேரும் கேளுங்க……. எந்த ஒரு வியாதியாய் இருந்தாலும் மொதல்ல நம்மளோட உடம்பே அதை எதிர்த்துப் போராடும்…… அதற்கான சக்தியை நாம அதுக்கு கொடுக்கணும்…… அதுக்கு நல்ல சத்துள்ள சாப்பாடா சாப்பிடணும்….. இப்போ நம்ம அத்தைக்கு கொடுக்க வேண்டியதும் அதுதான். நம்ம உடம்பால முடியாம போற பட்சத்தில தான்  நாம மாற்று வழியை தேடனும்….
நம்ம யாரும் கடவுள் இல்லை நம்மளால எந்த விஷயத்துக்கும் 100% கேரண்டீ கொடுக்கமுடியாது எல்லாமே 99.9% தான்….. என்னோட கண்டுபிடிப்பா அதுக்கு விதி விலக்கு இல்லை புரிஞ்சுக்கோங்க.” என்றவன்,

முதலில் தாங்கள் வந்த வாகனத்தை நன்கு சுத்தப்படுத்தினான். அதன்பிறகு ரகுவையும் தங்களுடனேயே தங்கிக் கொள்ளுமாறு கூறினான். மேலும் வீட்டில் இருக்கும் யாரும் வெளியில் செல்வதற்கும், வெளி மனிதர்கள் வீட்டிற்குள் வருவதற்கும் தடை விதித்தான். இவையெல்லாம் அவன் மற்றவர்களுக்கும் நோய் பரவாமல் இருப்பதற்காக எடுத்த சில நடவடிக்கைகள்.

இதற்கிடையில் அவன் நண்பர்களுக்கே தெரியாமல் மற்றொரு வேலையையும் அவன் செய்திருந்தான். அந்த வேலையால் அனைவரது உயிரும் காப்பாற்றப்படுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!