Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

uyir kaakkum uyir kolli

Uyir Kaakum Uyir Kolli – 8

“ஆராய்ச்சியும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் ஒழுங்கா எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு வா” என்றான் ரகு கோவமாக

“டேய் என்னடா பேசுற நீ இது என்னோட ட்ரீம் தெரியும்ல்ல? இந்த உலகத்தில இனி வைரஸ் ஆல  டிசீஸ் வரக்கூடாது”

“போதும் நிறுத்துடா…… அதுக்காக உயிர விடுவியா? இங்கயே எவன் நல்லவன் எவன் கெட்டவன்னு எனக்கு புரியல இங்க காலேஜ்ல மட்டுமே இவ்ளோ பாலிடிக்ஸ். …… இன்னும் வெளிய என்னென்ன நடக்கும்னு தெரியல……… போதும்டா இதோடு நிறுத்திக்கோ……. வீட்ல வச்சு இருக்கிய குப்பை அது எல்லாத்தையும்போட்டு எரிச்சிடு.

“ஏண்டா இவ்வளவு பயப்படுற? மெலிதாக சிரித்துக்கொண்டே கேட்டான் பரிதி.



Advertisement

“பயப்படாம இருக்க நீ என்ன சூப்பர் ஹீரோவா?……  சாதாரண மனுஷன் செத்தா கூட வேற யாருக்கும் தெரியாது……. அவ்ளோ பெரிய ப்ரொஃபஸர் அவருடைய டெத்க்குகே  இன்வெஸ்டிகேஷன் வைக்கல?… உன்னலாம் கொன்னு  தூக்கி போட்டுட்டு போயிட்டே இருப்பாங்க டா”
ரகுவிற்கு ஜெயராஜின் மரணம் மிகுந்த அச்சத்தை கொடுத்திருந்தது. அவனுடைய நண்பன் எவ்வித ஆபத்திலும் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பது மட்டுமே அவன் எண்ணம்.

“டேய் நான் சொல்றேத தெளிவா கேட்டுக்கோ….. அப்புறமா எனக்கு ஒரு பதில் சொல்லு” என்றவன் தொடர்ந்தான்.

” இப்போ என்கிட்ட ஒரு பொருள் இருக்கு….. அந்தப் பொருல உனக்கு கொடுத்தா நீ உயிரோட இருப்ப இல்லனா செத்து பொய்டுவ அந்தப் பொருளை இப்ப நான் உன்கிட்ட கொடுக்கலைன்னா உனக்கு நான் நண்பனா இல்ல துரோகியா?”

Advertisement

 

Advertisement

[the_ad id=”6605″]

 

 

Advertisement

…….

“டேய் நான் துரோகியா வாழ்வதைவிட நண்பனா சாக தயார் புரிஞ்சுக்கோ…. நான் சூப்பர் ஹீரோ இல்ல தான் என்ன கொல்லனும்னு நினைச்சா ஒரு நிமிஷம் கூட ஆகாது….. எல்லாத்தையும் ஒத்துக்கிறேன்….. ஆனா என்னோட கனவ விட்டு கொடுத்துட்டு என்ன வாழ சொல்லாத”

“டேய் என்னடா பேசுற நீ செத்துப் போயிட்டா உன்னோட கனவு பளிச்சிடுமா?  நீ வாழற வரைக்கும் தாண்டா உன்னோட கனவுக்கு மதிப்பு
இந்த ஆராய்ச்சி உன்னுடைய ஏம் மட்டும் தான் டெஸ்டினி இல்ல”

“புரியுதுடா எனக்கும் ஆபத்து வராமல் இத எப்படி  பண்ணனும்னு எனக்கு தெரியும் நீ அத நினைச்சு ரொம்ப டென்ஷன் ஆகாதே……. ரிலாக்ஸ்”

சரிடா டைமாச்சு நான் வீட்டுக்கு  கிளம்புறேன் நீயும் ஹாஸ்டல் போ நாளைக்கு மீட் பண்ணலாம்……” என்றபடி இளம்பருதி தன் வீடு நோக்கி சென்றான்.

இளம்பருதியின் வீட்டிற்கு நளினியின் அன்னை மீனாட்சியும் தந்தை சுந்தரும் வந்திருந்தார்
“அத்தான் வாங்க அம்மாவும் அப்பாவும் வந்து இருக்காங்க……” அவன் வந்ததும் அவனைக் ஆர்வமாய் வரவேற்றாள் நளினி

“என்ன மாப்பிள்ளை காலேஜ்ல இருந்து வர இவ்ளோ நேரம் ஆயிடுச்சு?  இன்னைக்கு  காலேஜ் சீக்கிரமாவே முடிஞ்சிட்டுன்னு நளினி சொன்னா”

“ஆமா மாமா ஒரு ப்ரொபசர் இறந்துட்டாரு…… அதான் அவரை போய் பார்த்துட்டு வர டைம் ஆயிடுச்சு”

“உன் அத்தை வந்துருக்கா பாருடா…. பேசிட்டு போ” என்று அவன் அன்னை கூற……அவனோ அவர்கள் யாரையும் காணாமல் தன் அறைக்குள் சென்று விட்டான்.

” இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்த கோபத்தை கட்டிக்கிட்டு அழப்போறான்னு தெரியல நீங்களாவது கொஞ்சம் சொல்லலாம்ல” என்று தாமரை தன் கணவனிடம் குறை படிக்க அவரோ வழக்கம்போல் வீட்டில் நடக்கும் எந்த விஷயத்திலும் தலையிட தயாராக இல்லை.

“விடுங்க அண்ணி அவன் மட்டும் என் முகத்தை பார்த்தா உடனே அழுதுருவான். ….. இத்தனை பேர் முன்னாடி அவன அழ வச்சி பாக்கணுமா?  சும்மா இருங்க.” மீனாட்சி அவனை விட்டு கொடுக்காமல் பேச….

“அப்ப நீ யாவது அவன்கிட்ட பேசலாம் இல்ல”

“என்னோட நிலைமையும் அதே தான் அண்ணி அன்னைக்கு அவன் என்ன போகாதீங்கனு கெஞ்சுனது கண்ணுல நிக்குது…. நான்  இங்கயே இருந்திருக்கும்……. அவனுக்கு கொஞ்சம் விவரம் தெரிகிற வரைக்குமாவது……” என்று அவர் வருத்தப்பட

“ஐயோ போதும் போதும் உங்க ரெண்டு பேரோட பாசம்……. எனக்கு தாங்க முடியல அத்தான் என்னடான்னா பர்ஸ்ல உங்க போட்டோ தான் வச்சிருக்காரு, ஃபோன்லயும் உங்க போட்டோ தான் வச்சிருக்காரு….. நீங்க என்னடானா அவருக்காக செய்றத வேற யாரும் சாப்பிட கூடாதுன்னு சொல்றீங்க? அது மட்டுமல்லாம….. அவன் தான் என் மூத்த புள்ளன்னு கொஞ்சறீங்க? என்னால முடியல ஓவரா போய்க்கிட்டு இருக்கு ரெண்டு பேரும் பேசிக்க மாட்டாங்க…… பார்த்துக்க மாட்டாங்க…… ஆனா பாசம் மட்டும் ஓவரா பொழி வாங்கலாம்”

“ஆமாடி நீ சொன்னாலும் சொல்லலனாலும் அவன்தான் என் மொத புள்ள”

“ஹலோ ஹலோ நிறுத்துங்க இப்படியே சொல்லி சொல்லி அத்தான எனக்கு அண்ணன் ஆக்கலாம் பார்க்காதீங்க……. நான் அவரை கல்யாணம் பண்ணிக்க  முடிவு பண்ணிருக்கேன்.
யாராவது நடுல வரலாம்ன்னு ட்ரை பண்ணிங்க கத்தி எடுத்து ஸ்……ஸ்…….ஸ்”  என்றவள் உண்மையாகவே கத்தி எடுத்து பாவனையோடு செய்து காட்ட….  அதுவரை அமைதியாய் இருந்த ஆதித்தன் வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.

“பாத்தீங்களா….. அண்ணி எப்படி பேசுறான்னு நம்ம காலத்துலலெல்லாம் பொண்ணுங்க இந்த மாதிரி பேசிகிட்டா இருந்தோம்?”என்று தன் அண்ணியிடம் ஆரம்பித்தவர் ” நீங்க இருக்கீங்கன்னு கூட பயம் இல்லை” என்று தன் அண்ணணிடம் முடித்தார்.

“சரி விடு மா உரிமையை தானே கேட்டா என் புள்ளையை கட்டிக்க என் மருமகளை தவிர வேற யாருக்கும் உரிமை கிடையாது” என்று ஆதித்தன் அவளுக்காக பேச…..

“அப்படி சொல்லுங்க மாமா….. சோ ஸ்வீட் மாமா மாமா தான்” என்று நளினி தன் மாமாவின் கழுத்தினை கட்டிக் கொண்டாள்”.

“அது சரி….. அண்ணி தான் இவளுக்கு ரொம்ப செல்லம் கொடுக்கிறங்கன்னா  நீங்களுமா அண்ணா?”

“அவனுக்கும் பிடிக்கணும் இல்ல அண்ணா?  இன்னும் என்கிட்ட அவன் பேசவே ஆரம்பிக்கல….. நம்ம இப்படி தேவையில்லாமல் மனசுல ஆசைய வளர்த்துக்க கூடாது இல்லை.”

“அம்மா நீங்க அதை பத்தி எல்லாம் கவலை படாதீங்க அத்தான எப்படி கரெக்ட் பண்ணறதுன்னு எனக்கு தெரியும்”.

“கொஞ்சம் அடக்க ஒடுக்கமா வாயை மூடிட்டு இருடி. இல்ல நானே இந்த மாதிரி பொண்ணு எல்லாம் என் புள்ளைக்கு தேவையில்லைன்னு சொல்லிடுவேன்” என்று மீனாட்சி இளம்பரிதிக்காக பேச.

“சொல்லுவடி சொல்லுவ என் மருமகளுக்கு என்ன குறைச்சல்ன்னு நீ இப்ப இப்படி பேசிட்டு இருக்க அவள மாதிரி ஒரு பொண்ணு தேடுனாலும் அவனுக்கு கிடைக்க மாட்டா” என்று தாமரையோ நளினிக்காக பேசினார்.

வரவிருக்கும் ஆபத்தை அறியாமல் இவர்களது குடும்பம் இனிமையாய் பொழுதைக் கழித்தது.

இளம்பருதி தன்னுடைய SV2020யை எப்படி மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்பதனைப் பற்றி வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தான். இவ்வுலகில் பிறரின் நன்மையைப் பற்றி யோசிப்பவர்களைவிட தன்னுடைய நன்மையைப் பற்றி யோசிப்பவர்களே உயர்ந்த பதவியிலும், உயர்ந்த இடத்திலும் இன்று இருக்கிறார்கள். இல்லை, சுயநலமாய் இருப்பவர்களால் மட்டுமே அத்தகைய இடத்தை அடைய முடிகிறதா? என்பதும் மிகப்பெரும் கேள்விக்குறியே…..

சுயலாபத்திற்காக…. தொழிற்சாலைகளையும், பெரிய ஆலைகளையும், அணுமின் நிலையங்களையும், நிறுவவும் இயங்கவும் அனுமதிப்பவர்கள்….. ஏனோ சிறு தொழிலாளர்கள் நடத்தும் செங்கல்சூளைகளையையும், தீப்பெட்டி தொழிற்சாலைகளையும் மாசு கட்டுப்பாடு என கூறி முடக்க நினைக்கிறார்கள்.

 

[the_ad id=”6605″]

 

 

“அத்தான் இங்க ஏன் தனியா நின்னுட்டு இருக்கீங்க?” என்றபடி அவனை நோக்கி வந்தாள் நளினி.

“என்ன திடீர்னு…… உங்க அம்மா அப்பா வந்திருக்காங்க?
உன்ன பிரிஞ்சி ஒரு மாசம் கூட இருக்க முடியலையா?” என்று அவன் நக்கலாக கேட்க…

“கிளிச்சாங்க அதுக்கெல்லாம் ஒன்னுமில்ல ரெண்டு பேரும் *** சிட்டி போறாங்க…..  டாக்குமென்டரி பண்ணிட்டு இருக்காங்க ஒவ்வொரு ஊரா போயி அங்க வாழும் மக்களுடைய கல்சர், உணவு பழக்கம் எல்லாம் பத்தி.

“இப்ப ஊர் எல்லாம் முடிச்சாச்சு….. வெளிநாட்டுக்கு கிளம்பியாச்சு….. வேலையெல்லாம் வெறும் சாக்கு தான் அத்தான் ஹனிமூன் போயிட்டு இருக்காங்க…..

பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி ஹனிமூன் அனுப்புற வயசாயிடுச்சு ஆனா இன்னும் அவங்க போய்க்கிட்டு இருக்காங்க” என்றவள் குறைபட,

“அப்படியே அடிச்சு வாய உடைச்சேன்னா……. உனக்கு என்ன வயசாகுது 19 வயசு கல்யாணம் பண்ற வயசுன்னு உனக்கு யார் சொன்னா?
உன்ன எல்லாம் உங்க அப்பா இவ்வளவு செலவு பண்ணி படிக்க வைக்கிறார் இல்ல அந்த ஆள சொல்லனும்”

“அத்தான் நான் அந்த காலேஜ்க்கு வந்ததே உங்களுக்காகத்தான்…. சொல்லுங்க நாம எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்? நீங்க காலேஜ் முடிச்ச அப்பறம் பண்ணிக்கலாமா நான் வெயிட் பண்றேன்” என்று அவனை சற்று நெருங்கி நின்றவாறு அவள் கூற…

“நான் எப்போ டி உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன்?

“அப்போ கல்யாணம் பண்ணிக்க மாட்டிங்களா?” என்று அவள் கண்களை சுருக்கி கேட்க….

“கண்டிப்பா மாட்டேன்” உடனே வந்தது அவன் பதில்.
“ஏன்? ஏன் பண்ணிக்க மாட்டீங்க….. நான் அழகா இல்லையா” சற்றே நழுங்கி இருந்தது அவள் குறள்.

ஏனோ  அவள் குரல் அவன் மனதையும் பாரமாக்கியது.

“உங்கம்மா ஒத்துக்க மாட்டாங்க” என்றான் அவன்

“எங்க அம்மா ஒத்துக்க மாட்டாங்க அது மட்டும் தான் உங்க பிரச்சினையா”

“ஆமாடி அதான் என் பிரச்சினை”
அப்பாடா என்றிருந்தது அவளுக்கு.

“அப்போ அம்மா ஒத்துக்கிட்டா?”

“வாய்ப்பே இல்லை” என்றான் அவன்

“லூசா அத்தான் நீங்க?
உங்க பேர் என்ன?” என அவள் கேட்க…

” ஏன்டி இப்படி கேக்குற மறதி முத்திடுச்சா? உனக்கு தெரியாதா என் பேரு?

“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க” என்றாள் அவள் கட்டளையாக.

“சரிங்க மேடம்”…….. என்று அவளை சீண்டியவன் “இளம்பரிதி” என்றான்

“அப்படின்னா என்ன அர்த்தம்”
“சூரியன்”

“வெரி குட்……இப்ப சொல்லுங்க என் பேர் என்ன?” என்றவள் மீண்டும் கேள்வி எழுப்ப….. சலிப்புடனே
“நளினி” என்றான் அவன்.

“அப்படின்னா என்ன அர்த்தம்?……” என்றவள் நிறுத்த
“என்ன அர்த்தம்?” என்று அவளைப் போலவே ராகம் பாடினான் அவன்.

“நளினினா தாமரைனு அர்த்தம்”
அது அவனுக்கு புதிய செய்தியே….
“தாமரையா?” என்றான் வியப்பினுடே

“ஆமா தாமரை இப்போ இன்னொரு கேள்வி……. உங்களுக்கு யாரு பேரு வச்சா”
“உங்க அம்மா”
‘அத்தைனு சொன்னா நாக்கு ஒட்டிக்குமோ? என அவனை மனதிற்குளே திட்டியவள்…….. இருங்க உங்களை எங்க அத்தை, எங்க அத்தைனு அம்மா பின்னாடியே சுத்த வைக்கல என் பேரு நளினி இல்லை’ என்று சபதம் எடுத்துக் கொண்டாள்.
அவள் அப்போது அறியவில்லை அவள் எந்த முயற்சியும் எடுக்காமல் அது கூடியவிரைவில் நடக்கப் போகிறது என்பதனை.

“எனக்கு யாரு பேரு வச்சா?”

“அதுவும் உங்க அம்மாதான் “

“எக்ஸாக்ட்லி அதான் அம்மா பேரு கூட நமக்கு பொருத்தமா தான் செலக்ட் பண்ணி வச்சிருக்காங்க பாத்திங்களா?”

அது அப்ப அவங்களுக்கு என்ன பிடிச்சது….. அதனால வச்சிருக்காங்க இப்பதான் அவங்களுக்கு என்ன பிடிக்காதே…..”

“யாரு?  அவங்களுக்கு உங்கள பிடிக்காதா?….. உங்கள தவிர வேற யாரையும் பிடிக்காதுன்னு சொன்னா கூட நான் நம்புவேன். ஆனா இத மட்டும் என்னால நம்ப முடியாது”

“பிடிக்காமத்தான அப்படி என்ன விட்டுட்டு போனாங்க” என்றான் அவன் ஆதங்கத்துடன்

“அதயே சொல்லாதீங்க…..
இப்போ உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் ஆச்சுன்னு வெச்சுக்கோங்க…….” என்றவள் ஆரம்பிக்க
“அப்படிலாம் வைக்க முடியாது……” என்று அவன் வேண்டுமென்றே அவளை சீண்ட

“சரி வைக்க வேண்டாம் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சுனு நினைச்சுக்கோங்க
நீங்க வீட்டோட மாப்பிள்ளையா உங்களோட பொண்டாட்டி வீட்ல போய் இருப்பீங்களா?”

“நான் ஏன் பொண்டாட்டி வீட்டில போய் இருக்கணும்?” என்று வாயால் கேட்டவன் மனதிற்குள் ‘என் அத்தை வீட்ல இருப்பேன் என நினைத்துக் கொண்டான்.

“நீங்க மட்டும் இருக்க மாட்டீங்க ஆனா எங்க அப்பா மட்டும் இங்க இருக்கணுமா?”

“அதான் போனாங்களா? அப்போ நான் செஞ்ச தப்புக்காக போகலையா?” என்றவன் கேட்க…..

“இல்ல அப்பாவோட பத்திரிக்கை ஆஃபீஸ்ல யாரோ அப்பாவை வீட்டோட மாப்பிள்ளைன்னு தரக்குறைவா பேசினார்களாம் அது எப்படியோ அம்மா காதுக்கு போயிடுச்சு…… அதனால அம்மா அப்பாவை தனியா கூட்டிட்டு போயிட்டாங்க”

“ரியலி” என்று கூறிய அவன் முகம் பூரிப்பை காட்ட…..
“அப்போ நீங்க அம்மா உங்களை விட்டுப் போனதுனால கோவமா இல்ல  நீங்க எதோ தப்பு பண்ணிட்டீங்க…. அதனால போயிட்டாங்களோன்னு நெனச்சுதான் கோவமா இருக்கீங்க”

அவன் எதுவுமே பேசவில்லை அமைதியாக இருந்தான்…..
அவன் மனதினை விட்டு பல கலக்கங்கள் விடை பெற்றதைப் போல் உணர்ந்தான். அவன் செய்த காரியத்தால் தான் அவர் நளினியையும் கூட்டிக்கொண்டு, அவனுடைய கெஞ்சல்களையும் மீறி சென்றுவிட்டார் என நினைத்துதான் என அவன் கோபமாக இருந்தான். கோபம் என்பதனை விட குற்ற உணர்ச்சியே மேலோங்கி இருந்தது அவனுக்கு. அதுவும் இன்று விலகிவிட்டது.

“ஆமா அப்படி என்ன தப்பு பண்னீங்க ஒழுங்கா என்கிட்ட சொல்லுங்க….”
என்றவள் கேட்க….

 

[the_ad id=”6605″]

 

 

“அவளை நெருங்கியவன் …… சொல்லட்டுமா……. என்று அவள் காது மடல்களை உதடுகளால் உரசி உன்னை கிஸ் பண்ணேன்” என்றான்.

அவளுக்கு அவனது நெருக்கத்தால் உடலில் புது விதமான உணர்வு உண்டனாலும்…… அவன் கூறிய வார்த்தைகளின் தாக்கத்தால்….. அவன் மார்பில் கை வைத்து அவனை தன்னை விட்டு விலக்கியவள்….

“அடப்பாவி கேடி அத்தான்…… அப்பவே வா? இதுல உனக்கு பேரு உத்தமன் வேற காலேஜ்ல” என்று அவள் நக்கலாய் சிரிக்க

“நான் கேடி தாண்டி …….. ஆனா உனக்கு மட்டும்” என்றான் கண்ணடித்தபடி
இவ்வளவு நாள் மறைத்து வைத்திருந்த காதல் அவன் குற்ற உணர்ச்சி மறைந்ததால் இன்று அவனையும் மீறி வெளிவந்தது.

இப்பொழுது நளினி உடைய கால்கள் தான் தரையில் நிற்கவில்லை அவள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தாள் என்று சொல்லலாம்.

“இவ்ளோ லவ் வெச்சுட்டா என்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்ன?…. இனிமே எதாவது ரீசன் சொல்லி என்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்ன….. “

“கண்டிப்பா உன்ன கல்யாணம் பண்ணிப்பேன்……. அத்தை சொன்னா” என்று முடித்தான்

“யார் சொன்னா?……என்று அவள் மீண்டும் அவனை சொல்ல வைக்க முயல…..  “அதான் உங்க அம்மா” என்றுவிட்டான்.

“அவங்க இவ்ளோ நேரம் கீழ என்ன பேசிட்டு இருந்தாங்கன்னு தெரியுமா ?  என்ன மாதிரி அடங்காப்பிடாரி எல்லாம் அவங்க புள்ளைக்கு வேண்டாமாம்….. நல்ல அழகான அடக்கமான பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வைப்பாங்களாம்”

என்று அவள் கீழே நடந்தவற்றை கூற…. வாய்விட்டு சிரித்தவன்
“அப்போ…… அத்தை சொன்னா கரெக்டா தான் இருக்கும்…… எனக்கு இந்த அடங்காபிடாரிலாம் வேண்டாம்….. அடக்க ஒடுக்கமான நல்ல பொண்ணா பாக்கலாம்” என்று அவன் கூறியது தான் தாமதம்.

உடனே அவனை நெருங்கி  அவன் கழுத்தை நெருக்கியவள்….. “அப்படி எவளாவது வந்தா? இரண்டு பேரையும்  கொன்றுவேன்” என்றாள்.

“ஏய்…… ஏய் விடுடி, கொன்னுறாத இன்னும் இருந்து சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு” என்றபடி அவள்
கைகளை விலக்கினான்.

சந்தோஷமான இவர்கள் இல்லத்தை நோக்கி வரும் ஆபத்து என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!