Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Vannam Theda vaarayo -epilogue

 

இரண்டு வருடங்களுக்கு பிறகு…

வீடே பரபரப்பாக இருந்தது அனைவரும் எங்கோ கிளம்பிக் கொண்டு இருந்தனர்..

நான்கு வயதான ஜானு குட்டி தன் தம்பியை தூக்கிக் கொண்டு உதயின் அறைக்கு வந்தாள்..



Advertisement

” அப்பா சிரஞ்சீவிக்கு என்ன ட்ரெஸ் போட்டு விடுறது ” என்றபடி வந்தாள் அந்த வீட்டின் தேவதை .

”  நாம ஜானு குட்டி போட்டுருக்க கலர்லையே ட்ரெஸ் போட்டு விடலாம் ” என்று சொல்லி ” ஒரு ப்ளு கலர் சேர்ட் மற்றும் ப்லேக் கலர் ஜீன் எடுத்து மாட்டி விட்டான் உதய்..

” ஜானு குட்டி சிரஞ்ஜீவிக்கு இந்த ட்ரெஸ் எப்படி இருக்கு ” என்று கேட்க

Advertisement

” அழகா இருக்கு அப்பா தம்பி ரொம்ப க்யூட்டா இருக்கான் ” என்று அவனின் பிஞ்சு கைகளில் முத்தம் வைத்தாள் ஜானு குட்டி. அவளின் முத்தத்தில் ஒரு வயதே ஆன சூர்யா சுமியின் புதல்வன் சிரஞ்ஜீவி ‌தன் பொக்கை வாயை காட்டி சிரித்தான்.

Advertisement

அதனை கண்ட இருவரும் அவனை போட்டோ எடுக்க ” ரெண்டு பேரும் இன்னும் கிளம்பளையா என்ன ” என்று கேட்ட படி நந்தினி உள்ளே வந்தாள்.

” நாங்க கிளம்பிட்டோம் அம்மா இன்னும் நீங்க தான் கிளம்பல ” என்றாள்.

” வாயாடி அங்க சுமி மம்மி உன்னையும் சிரஞ்சீவையையும் தேடிட்டு இருந்தா. போ போய் தம்பிய மம்மி கிட்ட போய் கொடு ” என்றாள்..

Advertisement

” சரி மா ” என்றவள் குழந்தையை பத்திரமாக தூக்கி கொண்டு சென்றாள்..

ஜான்விக்கு நந்தினி உதயும் அம்மா அப்பா என்றால் சுமியும் சூர்யாவும் மம்மி டாடி யாக இருந்தனர்.

அறைக்குள் வந்தவள் அமைதியாக கப்போர்டிலிருந்து ஒரு புடவை தேர்ந்தெடுக்க செல்ல ” நிதி மா என்ன இந்த கிருஷ கண்டுக்காம போறீங்க ” என்று அவளின் இடையினை பிடித்து அவனின் புறம் கொண்டு வந்து கேட்டான்..

” ஆங் எனக்கு வேலை இருக்குன்னு அர்த்தம் உதய் சார் ” என்றாள்..

” அப்படியா ” என்று அவளை முழுங்குவது போல் பார்த்து வைக்க

” இப்பவே மணி மூணு நாலு மணிக்கெல்லாம் கிளம்பனும் அப்போ தான் கரக்டா இருக்கும் .சோ இப்போ விடுறீங்களா ” என்று அவனின் கையை தன் இடையிலிருந்து எடுக்க முற்பட அவனின் பிடி மேலும் அவனுடனே ஒன்றிணைத்தது.

அதில் அவனின் மூச்சு காற்று அவளின் மேல் பட அவளுக்கு சிலிர்த்து அடங்கியது..

” என் பொண்டாட்டிக்கு இன்னும் புது பொண்ணுன்னு நினைப்பு போல இன்னும் உடம்பெல்லாம் சிலிர்த்து அடங்குது ” என்று அவள் காது மடலில் இதழ் பதிக்க

அவனை தள்ளி விட்டவள் ” மணி ஆச்சி கிருஷ் நான் போய் கிளம்புறேன் ” என்று இதழ் சுழித்து சொல்ல

” எனக்கு சொந்தமான ப்ராப்பெர்ட்டிய எதாவது செஞ்ச அப்புறம் உனக்கு இது தான் ” என்று கூறி அவளின் இதழில் உள்ள தேனை சுவைக்க தொடங்கினான். சிறிது நேரத்தில் அவளை விடுவித்தவன் ” போ போய் கிளம்பு ” என்று அவளை அனுப்பி வைத்தான்.

சிறிது நேரத்தில் நந்தினி கிளம்பி அழகு பதுமையாய் வெளியே வந்தாள்.‌ அவளை கண்ட கிருஷ் இமைக்க மறந்து பார்க்க பாவையவள் அவனின் பார்வை வீச்சு தாங்க இயலாமல் தலை கவிழ்ந்தாள். அதற்குள் ஜான்வி ” அப்பா அம்மா ” என்று கத்த அவர்களுக்குள் இருந்த போன நிலை கலைந்து கீழே சென்றனர்..

வீட்டை பூட்டிவிட்டு எல்லாரும் வெளியே கிளம்பி சென்றனர். நேராக கார் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் முன்பு நிறுத்தியது. இவர்கள் போலவே அங்க  நிறைய குடும்பங்கள் வந்திருந்தனர்.

இன்று நந்தினியின் திறமையை வெளி படுத்த வேண்டிய நாள். அதாவது இன்று அவளுக்கு பாட்டு போட்டியின் கிராண்ட் ஃபினாலே .அதற்காக தான் குடும்பத்தோடு வந்திருந்தனர். அவளின் இந்த நிலைக்கு காரணம் சாஷ்டார்த் அவளின் கிருஷே..

பின்னர் உள்ளே சென்று அனைவரும் ஓர் இடத்தில் அமர்ந்துக் கொண்டனர். வெங்கி மற்றும் கீர்த்தி மட்டும் வரவில்லை. அவளுக்கு இது ஒன்பதாம் மாதம் என்பதால் வீட்டிலே இருந்து கொண்டனர்..

விந்தியதேவி மகாலிங்கம் சிவசங்கரன் கங்கா மரகதம் என பெரியவர்கள் ஒரு புறத்திலும் சிறியவர்கள் கவி ஜீவா சுஜி விஷ்ணு ஹரி கார்த்திக் உதய் சுமி மற்றும் சூர்யா என அனைவரும் ஒரு புரத்தில் அமர்ந்தனர். ஜான்வி உதயின் மடியில் அமர்ந்துக் கொண்டாள். சிரஞ்சீவி கங்காவிடம் இருந்தான்.

பாட்டு போட்டி ஆரம்பிக்க அந்த ஐந்து பேரும் பாடத் தொடங்கினர். ஒவ்வொருவராக பாடி முடிக்க இறுதியில் நந்தினியின் பெயரை அழைத்து பாட சொன்னார்கள்..

மேடை ஏறி வந்தவளுக்கு கரகோஷங்கள் வர அமைதியாக கண்களை முடியவளுக்கு கிருஷ் முகம் வர பாட தொடங்கினாள்..

காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாஹ
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா

பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பு அறியும்
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பு அறியும்
வருந்தும் உயிருக்கு
ஆ …
வருந்தும் உயிருக்கு
ஒரு மருந்தாகும்
இசை அருந்தும் முகம் மலரும் அரும்பாகும்
இசையின் பயனே இறைவன் தானே
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா

ஆதார சுருதி அந்த அன்னை என்பேன்
அதற்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்
ஸ்ருதிலயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த நல்ல இசை குடும்பம்
திறந்த கதவு என்றும் மூடாது
இங்கு சிறந்த இசை விருந்து குறையாது
இது போல் இல்லம் எது சொல் தோழி
ப ம ரி க ரி க ரி க நி த த நி
ப ம ரி க ரி க ரி க நி த த நி
…..

காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாக
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா

கிருஷிற்கு பிடித்த பாடல் அவளின் அறிமுகம் அறிந்தது அந்த பாடலினாலே ..

இருவரின் மனமும் அவர்களின் வாழ்வினை பின் நோக்கி நகர்த்தியது. கிருஷை கண்டவாறே அந்த பாடலை பாடி முடித்தாள்..

பின் சிறிது நேரத்திலே வின்னர் யாரென்று அறிவிக்க முதல் பரிசு நந்தினியே வென்றிருந்தாள்..

அவளிடம் மைக் கொடுத்து பேச சொல்ல ” எனக்கு என்ன சொல்றதுனே தெரியல ஆனா இந்த ப்ரைஸ் எல்லாமே என்னோட கிருஷ்க்கு தான் போய் சேரனும். அவனால தான் நான் இந்த மேடையில இப்போ இங்க நிக்கிறேன். எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சது கூட இந்த பாட்டு தான். எனக்கு பாட்டு பாட ரொம்ப பிடிக்கும் அதை கேட்டு இரசிக்க என்னோட கிருஷ்க்கு புடிக்கும். இப்படி பட்ட புருஷன் கிடைக்க நான் ரொம்பவே கொடுத்து வச்சிரக்கனும் லவ் யூ கிருஷ் திசிஸ் ஃபார் யூ உதய் ” என்று நீட்டிக் காட்டினாள்..

அவன் அவளை கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அருகில் வந்த நந்தினி அவனை அணைத்துக் கொண்டு ” நான் ஜெயிச்சிட்டேன் கிருஷ் உன்னோட நிது ஜெயிச்சிட்டா ” என்றாள்..

” தினு மா எல்லாரும் பாக்குறாங்க மா ” என்க

” யாரு பாத்தா எனக்கு என்ன என்னோட புருஷன தான ஹக் பண்ணேன் ” என்றாள் ‌அவனின் அணைப்பில் இருந்த படி…

” என்னோட நிது வா இது நான் அவள பாக்கும் போது சின்ன பொண்ணா பயந்துட்டு இருந்தா. ஆனா இப்போ எவ்ளோ தைரியமா நடந்துக்கிறா ” என்று சந்தோஷ பட

” இதுக்கு காரணம் எல்லாமே என்னோட புருஷனுக்கு தான் போய் சேரும் . அவனுக்கு நான் தைரியமா இருந்தா தான் புடிக்கும் அது மட்டும் இல்லாமல் அவன் என்கூட இருக்கும் போது நான் எதுக்கு பயப்படனும் சொல்லு “

” சரி தான் ” என்று அவளை இறுக அணைத்து விடுவித்தவன் அவளின் நெற்றியில் இதழ் பதிக்க அதை சரியாக ஜீவா படம் எடுத்துக் கொண்டான்.

அதன் பின் அனைவரும் வீட்டிற்கு சென்றனர்…

அடுத்தநாள் காலை பரபரப்பாக வேலைகள் எல்லாம் நடக்க சுமியும் நந்தினியும் நிற்க நேரமின்றி அனைத்து வேலையையும் செய்தனர்…

” சூர்யா எல்லா வேலையும் முடிஞ்சதா ” என்ற படி சுமி கேட்க

” எல்லாம் முடிஞ்சிருச்சு டி பொண்டாட்டி இன்னும் கொஞ்ச நேரத்துல கெஸ்ட் எல்லாம் வந்துடுவாங்க நீ என்னென்னா இன்னும் கிளம்பாம இருக்க போய் கிளம்பு ” என்று அவளை அவர்களது அறைக்கு அனுப்பி வைத்தான்.

அவளும் சிரித்த படியே பறக்கும் முத்தத்தை கொடுத்து விட்டு சென்றாள். இன்று கீர்த்திக்கு வலக்காப்பு வைத்திருந்தனர். அதற்காக தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமும்..

அறையில் இருந்த கீர்த்தி புடவையை கட்ட முடியாமல் கட்டிக் கொண்டு இருக்க அப்போது உள்ளே வந்த வெங்கி அதனை கண்டு ” எதுக்கு இவ்வளவு கஷ்டபடுற கீர்த்தி மா சொல்லிருந்தா சுமியோ நந்தினியோ வந்து புடவை கட்டி விட்ருப்பாங்கல ” என்று சொல்ல

கீர்த்தியோ ஏகத்துக்கும் அவனை கண்டு முறைத்து வைத்தாள்..

” இப்போ எதுக்கு கீர்த்தி மா இப்படி முறைக்கிற ” என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு கேட்க

” முதல ரியாக்ஷன் சேஞ்ச் பண்ணுங்க பாக்க சகிக்கில நான் உங்களுக்கு யாரு ” என்று இடுப்பில் கை வைத்துகொண்டு கேட்க

” இது என்ன கேள்வி நீ என்னோட பொண்டாட்டி ” என்றான்.

” நான் உங்க பொண்டாட்டி தான அப்போ நீங்களே கூட எனக்கு கட்டி விடலாம்ல உங்க புள்ளைய‌ சுமந்துட்டு இருக்கேன் .அப்போ இதெல்லாம் செய்ய வேண்டியது உங்களோட கடமை தானே வெங்கட் ” என்று தன் ஆசையையும் கோபமாகவே சொல்ல

” அடியே என் செல்ல ராட்சசி ” என்றவன் புடவையை அழகாக கட்டி விட்டான்.

” ஏன் வெங்கட் உங்களுக்கு இன்னும் அந்த தயக்கம் உங்க கிட்ட போக மாட்டேங்கிது . நான் என்ன பண்ணா தான் அந்த தயக்கம் உங்கள விட்டு போகும் ” என்று கவலையாக கேட்டாள் கீர்த்தி..

” அந்த மாதிரிலாம் எதுவும் இல்ல கீர்த்தி மா நீ தேவை இல்லாம யோசிச்சு உன்ன போட்டு குழப்பிக்காத சரியா ” என்று அவளை சமாதானம் பண்ண

அவனின் சட்டை காலரை பிடித்து இழுத்து தன் அருகில் கொண்டு வந்தவள் அவனின் இதழை தழுவினாள் பாவையவள்.

” அய்யோ நான் பாக்கல பா ” என்று திரும்பி நின்று விட்டாள் விஷ்ணுப்ரியா.

அசடு வழிந்த படி உடனே இருவரும் பிரிந்து நின்றனர்.

” சீக்கிரமா கீழ வாங்க நேரமாச்சி ” என்று விட்டு ஓடி வருகையில் யாரோ ஒருவனின் மீது மோதி நின்றாள்..

யாரென்று பார்க்க அங்கே ஹரி இருக்கவும் ” ஆத்தி இவனையா இடிச்சோம் சும்மாவே முறைப்பான் இப்ப சொல்வா வேணும் ” என்று எண்ணியவள் ” சாரி ” கூறிவிட்டு சிட்டாக பறந்து விட்டாள் விஷ்ணுப்ரியா.

ஹரியின் இதழ் புன்னகைத்து விட்டு சாதாரண நிலைக்கு வந்தது…

வெங்கட் கீர்த்தியை கை தாங்களாக அழைத்து வந்தான். நாயகிகளின் புடவை கலருக்கு ஏற்றதாக நாயகர்கள்  சட்டை அணிந்திருந்தனர்…

கீர்த்தியை அமர வைத்தவர்கள் வலக்காப்பை தொடங்கினர். முதலில் நாத்தனார் முறைக்கு சுமித்ரா வலையல் போட அதற்கு பிறகு அனைவரும் வந்து வலையல் போட்டு விட்டனர்..

நந்தினியை அழைத்து வந்த சுமி அவளை வைக்க சொல்ல நந்தினி சிறிது தயங்கியவாறு வேண்டாம் என்று மறுக்க சுமி கெஞ்சவும் அவள் கிருஷை பார்க்க அவனோ ” போ ” என்று சைகை செய்தான்..

அதனால் நந்தினி சந்தோஷமாக வலையல் போட்டு விட வலையலை எடுத்துக் கொண்டு சென்றவளின் கைகளை பிடித்து நிறுத்தியது ஒரு கரம்..

” நீ என்ன பண்றன்னு தெரிஞ்சு தான் பண்றியா நந்தினி . நீ வலையல் போட்டு ஆசிர்வாதம் பண்ணா குழந்தை எப்படி ஆரோக்கியமா பிறக்கும் சொல்லு .உன்னோட வயித்தெரிச்சல் அந்த குழந்தைய வாழ விடாது “என்று அவளின் கையில் இருந்த வலயலை வாங்கினாள் கங்கா..

உதய்க்கு கோபம் வர கங்காவிடம் வந்தவனை கை பிடித்து தடுத்து நிறுத்தினாள் நந்தினி கலங்கிய விழிகளுடன்..

அவளின் கண்ணீரை கண்ட ஜீவா வேகமாக தன் அன்னையும் முன் வந்து ” என்ன பேசுறோம்னு தெரிஞ்சு பேசு மா. நீ வலையல் போட்ட வேன்னா குழந்தைக்கு எதாவது பிரச்சினை வரும். ஆனா என்னோட அம்மு போட்டு விட்டா குழந்தை ஆரோக்கியமா பொறக்கும். உன்னோட மனசுல தான் வஞ்சகம் அது இதுன்னு நிறையா இருக்கு. ஆனா என்னோட அம்மு மனசளவுல குழந்தை மாதிரி ” என்றான். கங்காவிற்கு அவமானமாக போனது..

இதனை கேட்ட கவிக்கு கோபமாக வந்தது. ஆனாலும் அமைதியாக நின்றிருந்தாள் தன் அக்காவிற்காக.

அழுகையுடன் நந்தினி உதயுடன் அவளது அறைக்கு செல்லும்போதே நந்தினி மயங்கி சரிந்தாள்.

அவளை தாங்கி பிடித்த உதய் அவளை தூக்கிக்கொண்டு அறைக்கு சென்றான். அவன் பின்னே கார்த்திக் ஜீவா சுஜி விந்து என அனைவரும் சென்றனர்..

கார்த்திக் என்னவென்று அவளது நாடியை பிடித்து பார்க்க அதில் அவனுக்கு இரண்டு துடிப்பு கேட்கவும் அவன் கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது..

அவனது கண்ணீரை கண்டு பயந்த உதய் ” டேய் கார்த்திக் என்ன ஆச்சி டா ” என்று பதறிப்போய் கேட்க ” மச்சி நீ அப்பா ஆயிட்ட டா ” என்றான்…

அங்கிருந்த அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. அனைவரும் அவர்களுக்கு தனிமை கொடுத்து கீழே வந்தனர்.

கங்காவிடம் வந்த ஜீவா ” நீங்க அம்முவ அவமான படுத்தனும்னு நினைச்சு பண்ற‌ ஒவ்வொரு காரியமும் உங்கள தான் அசிங்க படுத்தியது ” என்று விட்டு சென்றான்.

கீர்த்தி கங்காவை ஓர் ஆழ்ந்த பார்வை பார்த்து விட்டு சென்றாள். அதில் கூனி குறுகி போய் நின்றார் கங்கா…

அறையில் இருந்த நந்தினிக்கு கடத்தலிற்கு பின் நடந்த நினைவுகள் ஞாபகத்திற்கு வந்து கண்ணீரை ஊற்றெடுத்தது…

நந்தினியின் நினைவில் மருத்துவமனையில் இருந்து வந்த ஒரு மாதம்  கழித்து..,,,

விந்தியதேவி அனைவரிடமும் சிறிது தள்ளியே இருந்து வந்தார். இன்று வரை நந்தினிக்கு விந்திய யார் என்று கூறப் படவில்லை. அவளும் கிருஷ் என்றே உலகத்தை அமைத்துக் கொண்டதால் அவளும் அதை கேட்க வில்லை…

அனைவருக்கும் தெரியும் நந்தினி விந்துவின் பெண் என்று ஆனால் நந்தினிக்கு தெரியாது. அதற்கு காரணம் அவளின் உடல் நிலை தான். அவளிடம் எந்த ஒரு அதிர்ச்சிக்குறிய விடயத்தையும் சொல்ல கூடாது என்பது தான். அதனால் அவளிடம் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தனர்..

கங்கா அவளை காய படுத்தும் நோக்கில் ” சுமிக்கும் உனக்கும் ஒரே நாள்ல தான கல்யாணம் நடந்துச்சி அவ கர்ப்பமா இருக்கா ஆனா இன்னும் உன்னோட வயித்துல ஒரு புழு  பூச்சி கூட அண்டல . எல்லாம் உன்ன பெத்தவளும் வளத்தவளும் தான் . அவுங்களுக்கு லேட்டா தானே புள்ள பொறந்துச்சி .அது மாதிரி தான் உனக்கும் பொறக்கும் போல ” என்றார் கங்கா..

இதனை கேட்ட நந்தினி அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றிருந்தாள்..

” அம்மா சும்மா இருக்க மாட்டியா நீ உனக்கு எதுக்கு இந்த வேலை உதய் வேற ஊர்ல இல்லை ” என்று படி வந்தான் சூர்யா ..

” அத்த என்ன சொல்றீங்க கண்ணகி அம்மா என்னோட உண்மையான அம்மா இல்லையா ” என்று அதிர்ச்சியில் கேட்க

” அவ உன்ன வளத்த‌ அம்மா தான் உன்ன பெத்தவ அவ இல்ல இதோ அங்க கிட்சென்ல வேலை செஞ்சிட்டு இருக்கா பாரு அவ தான் .‌ அப்புறம் உன்னோட அப்பா யாரு தெரியுமா ” என்று குரோதத்தை மனதில் வைத்து கேட்க

அழுகையுடனே அவரை பார்க்க ” உன்ன கடத்திட்டு போனாறே ரத்தினம் அவரு தான் உங்க அப்பா உனக்கு மட்டும் இல்ல கீர்த்திக்கும் அவரு தான் அப்பா ” என்றார் கங்கா . அப்போதே அனைவருக்கும் டீ கொடுக்க வந்த விந்து இதனை எல்லாம் விட்டு அமைதியாக நின்று விட்டார்..

அப்போதே உள்ள வந்த கார்த்திக் அனைத்தையும் கேட்டு விட அவளின் பக்கத்தில் அமர்ந்த கார்த்திக் எல்லாவற்றையும் பொறுமையாக எடுத்துச் சொன்னான்…

உங்க அப்பாவுக்கு எங்க அப்பாவையும் அத்தையையும் பழி வாங்கனும்கிறதுக்காக என்ன தூக்கிட்டு வந்து விந்து அத்தைய அடச்சி வச்சிருந்த ரூம்லயே அடச்சி வச்சிட்டு பொயிட்டாரு. அதுக்கப்புறம் வீடே புகை வரவும் தான் தெரிஞ்சது வீட்ட எரிச்சு விட்டுட்டாருன்னு. நானும் அத்தையும் எப்படியோ அதுல இருந்து தப்பிச்சி வந்துட்டோம். அப்புறம் நாங்க ரெண்டு பேரும் யாருக்கும் தெரியாத இடத்துலே தங்கிக்கிட்டோம். நான் பத்தாவது படிக்கும்போதே வேலைக்கு போய் பணம் சேமிச்சு வச்சி அத்தைய ப்ரக்கெர்யினுக்கு அனுப்பி வச்சிட்டு நான் சென்னைக்கு வந்துட்டேன். அதுக்கப்புறம் நீ எங்க இருக்கிறன்னு கண்டு பிடிச்சு உன்ன பாதுகாக்க ஆரம்பிச்சேன். எனக்கு நீ உதய லவ் பண்ணது தெரிஞ்சது ஆனா நீங்க ஏன் பிரிஞ்சு இருக்கீங்கன்னு தான் தெரியாம போச்சி. ஆனா உதய் ஜீவா மூலமாக உன்ன கவனிச்சிட்டு தான் இருந்தான். அதுனால உங்கள சேத்து வைக்க முடிவு பண்ணி உன்கிட்ட தப்பானவனா இன்ட்ரோ ஆனேன். வெங்கட் கிட்டயும் அதே மாதிரி தான் சொன்னேன். நான் நினைச்ச மாதிரியே வெங்கி உதய் கிட்டயும் சொல்ல‌ அவன் உடனே உன்ன ஊட்டிக்கு கூட்டிட்டு பொயிட்டான். ஆனா என்ன பத்தின விவரம் சீக்கிரமாவே உதய் கண்டு புடிச்சிட்டான் ” என்றான் கார்த்திக் முச்சிரைக்க….

இதனை எல்லாம் கேட்டவள் மயங்கி விட்டாள். உடனே அவளை செக் செய்த கார்த்திக் ஒன்றும் இல்லை என்று கூறிய பிறகே நிம்மதி அடைந்தனர்…

அவள் விழிக்கும் நேரம் பார்த்து ” நான் கூட மசக்கை மயக்கம்னு நினைச்சேன் ” என்று விட்டு கீழே சென்றார்..

அதனை கேட்டவள் அழுகத் தொடங்க அன்னையாய் விந்திய தேவியை அணைத்துக் கொண்டாள்…

அவளும் அவளை அணைத்து ஆறுதல் படுத்தி உறங்க வைத்தார்..

இதனை எல்லாம் யோசனை செய்தவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க அதனை பார்த்தவாறு உள்ளே வந்த உதய்” உனக்காக ஒரு விஷயம் கொண்டு வந்துருக்கேன் ” என்று புதிர் வைத்தான்..

அழுகையை மறைத்தவள் ” என்ன கிருஷ்” என்க

” உன்னோட ஃபோட்டோஸ் மட்டுமே இருந்த ரூம்ல இன்னொருத்தரும் சேர பொறாங்க .அதோட போட்டோ தான் இது ” என்று நீட்டினான்..

அதனை வாங்கி பார்த்தவளின் கண்ணில் கண்ணீர் கரைபுரண்டு ஓடியது. அதில் ஒரு பெண்ணின் கர்ப்பக் கால நிலைகள் வரைந்திருந்தது

” கிருஷ் இது உண்மையா நா..ன் நா..ன் அம்மா ஆக போறேன்னா ” என்று கேட்க

” ஆமா நிது மா நமக்கு இரண்டாவது குழந்தை வர போகுது. நம்ம ஜானு குட்டிக்கு தங்கச்சி பாப்பா வரப் போகுது ” என்று அவனை அணைத்துக் கொண்டு நெற்றியில் இதழ் பதித்தான் ‌…..

வாழ்வின் ஆதாரம் குழந்தைகள் மட்டும் மில்லை. அவர்களுக்குள் இருக்கும் காதல் ஒற்றுமை விட்டு கொடுத்தல் போன்ற அனைத்தும் சார்ந்தது தான் குடும்ப வாழ்க்கை……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!