Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Varam Vaangi Vanthaval

Varam Vaangi Vanthaval Naan 17 1

வரம் வாங்கி வந்தவள் நான்

 

                                   அத்தியாயம்   17

 



Advertisement

 

பாலாவும் வேலுவும் தர்ஷினியை தள்ளிக் கொண்டு உள்ளே வர, ஏய் பாலா என்ன பண்ற..?” பதறியவள்,

 

Advertisement

கெட் அவுட் பாலா வீட்ல யாருமில்ல.. போ வெளியில..??”

Advertisement

 

ஹாஹாஹா இதுக்குத்தான் தர்ஷூ நானும் இவனும் இத்தனை நாள் வெயிட் பண்ணினோம்.. ப்பா இதென்ன வீடா இல்ல சத்திரமா எப்ப பார்த்தாலும் யாராச்சும் இருந்திட்டே இருக்காங்க.. அவள் கையை பிடித்து இழுக்க..

 

Advertisement

அதுவரை அவனை பற்றி தவறாக நினைக்காதவளுக்கு இப்போதுதான் அவனுடைய எண்ணம் புரிந்தது..

 

அவன் கையை உதறியவள் ஏ.. ஸ்டுப்பிட் என்ன வேலை மேன் பார்க்கிற..?? மென்டல் போடா வெளிய..??”

 

வேலுவோ, போறதுக்காமா இத்தனை நாள் கொக்கு மாதிரி காத்திருந்தோம்.. உங்க அப்பத்தாக்கிட்ட முறையாத்தான் பொண்ணு கேட்டேன்.. அவங்க அப்பவே ஒத்துக்கிட்டிருந்தா நீ முறையா என்னோட குடும்பம் நடத்திருக்கலாம் இப்ப பாரு முறையில்லாம நான் தொடவேண்டியிருக்கு..” அவனும் அவள் கையை பிடிக்க வர அவன் மார்பில் கைவைத்து தள்ளியவள் வேகமாக அங்கிருந்த அறைக்குள் நுழைய பார்க்க,

 

அவள் இதைத்தான் செய்ய போகிறாள் என்பதை அறிந்து சட்டென அவளை பிடித்து இழுத்தவன் டேய் வேலு அந்த ரூம இழுத்து பூட்டுறா.. இந்த ரூம்ல எவ்வளவு நேரம் இவளால ஓட முடியும்னு பார்ப்போம்..

 

ஏற்கனவே வயிறு வலியால் அவதிப்பட்டவளுக்கு இப்போது இவங்ககிட்ட இருந்து எப்படி தப்பிக்க போறோம்.. தெரியவில்லை.. இருவரும் இரு மலைகளாக தெரிய வேகமாக கதவை நோக்கி ஓடியவள் அதை திறந்து பார்க்க வேலு வந்து அவளை திறக்க விடாமல் தடுக்கவும் வேகமாக கதவை தட்டி

 

ஹெல்ப் யாராச்சும் இருக்கிங்களா.. ஹெல்ப் ஹெல்ப்..

 

[the_ad id=”6605″]

 

 

ஐயோ ஏம்மா உள்ள எனர்ஜியையும் இப்படி கத்தி வீணாக்குற.. நீ கத்துறது எனக்கே பேசுற மாதிரிதான் இருக்கு.. வா..” அவளை இழுக்க தன் முழு பலத்தை உபயோகித்தாலும் கையை அவனிடமிருந்து ஒரு இன்ச் கூட நகர்த்த முடியவில்லை.. கோபத்தில் அவன் கையை கடிக்க போக பளார் என ஒரு அறை வைத்திருந்தான்..

 

இவள் சுழன்று கீழே விழ அங்கு சௌந்தரத்திற்காக போட்டிருந்த கட்டிலின் முனை அவள் நெற்றியில் இடித்திருந்திருந்தது.. அதிலிருந்து ரத்தம் கசிய ஆரம்பிக்க தர்ஷினி மயக்கத்திற்கு செல்ல ஆரம்பித்தாள்..

 

டேய் டேய் அடிக்காத ஏற்கனவே ஒருத்திய அடிச்சு பிரச்சனையில மாட்டினது பத்தாதா.. இருடா..?” மயங்கி கிடந்தவளின் மூக்கில் கைவைத்து பார்க்க மூச்சு வந்தது.. டேய் இவள நம்ம இடத்துக்கு கொண்டு போயிரலாம்.. தர்ஷினியின் நைட்டி விலகி முழங்கால் வரை ஏறியிருக்க அதை தடவிப்பார்த்தவனோ..

 

ப்பா இப்படி ஒருத்தி கிடைக்க என்ன வேணும்னாலும் பண்ணலாம்.. தகதகன்னு மின்றாடா..!!” பாலா அவளை தூக்கி தன் தோளில் போட்டவன் ,”முன் கதவை தாழ் போட்டுரு.. நாம பின் பக்கமா போயிருவோம்..

 

…………………………………………………………

 

தர்ஷினிக்கு வயிற்று வலி என தெரிந்தவுடன் சுந்தருக்கு அங்கு இருப்பு கொள்ளவில்லை.. திருமணம் முடிந்த இந்த இரு மாதங்களில் அவள் எதையும் வெளிக் காட்டிக் கொண்டதில்லை.. முடிந்த அளவு அட்ஜஸ்ட் செய்து கொள்வாளே தவிர எதையும் வாய் திறந்து சொன்னதில்லை.. அவளுக்கு இது டேட் டைம் கூட இல்லையே..

 

தர்ஷினி வாய்திறந்து சொல்லாவிட்டாலும் அவளை சுந்தர் கவனித்தபடிதான் இருந்தான்.. அவள் சாப்பிட்டாளா, எதுவும் தேவையா, மகிழ்ச்சியா இருக்காளா. இல்லை அவங்க வீட்டை நினைக்கிறாளா என்று.. மாதவிலக்கு முடிந்து இப்போதுதான் பத்து நாட்கள் முடிந்திருந்ததால் வயிற்று வலிக்கு என்ன காரணமா இருக்கும்..

 

அவள் தனிமையில் வேறு இருப்பதால் இவனுக்கு மனம் கிடந்து அடித்துக் கொண்டது.. அதற்கு மேல் முடியாமல் மீதி வேலையை நாளை வந்து பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்தவன் அங்கு வேலை செய்தவர்களிடம் முடிக்க வேண்டிய வேலையை மட்டும் சொல்லிவிட்டு அடுத்த ஐந்து நிமிடத்தில் தன் வண்டியை கிளப்பியிருந்தான்..

 

அங்கிருந்து ஒரு பத்துநிமிட பயணம்தான்.. ஊருக்குள் நுழையும்போதே வேட்டுச் சத்தமும் கொட்டு தப்பு சத்தமும் காதை கிழித்தது.. மைக்கில் வயதான அப்பத்தாக்கள் ஒப்பாரி மாட்டு சொல்ல சில பெண்கள் இறந்தவரை சுற்றி மாரடித்துக் கொண்டிருந்தார்கள்..

 

ஒரு பக்கம் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், டிரம்ஸ்செட் என அவர்கள் தங்கள் திறமைகளை காட்டிக் கொண்டிருக்க இறந்தவருக்கு அஞ்சலி செலுத்துவதைவிட இதை வேடிக்கை பார்க்க வந்த கூட்டம்தான் அதிகம்.. கூட்டத்தை ஒதுக்கிக் கொண்டு தங்கள் வீட்டை நோக்கி வண்டியை விட தங்கள் தெரு திரும்பும்போதுதான் கவனித்தான் தன் தந்தை நடந்து போவதை அவர் அருகில் வண்டியை நிறுத்தவும்,

 

தன் மகனை பார்த்த ராமையா, வந்திட்டியா.. மருமக ஒத்தையில வீட்ல இருக்கே ஒரு எட்டு போய் பார்த்துட்டு வருவோம்னு கிளம்பினேன்ய்யா..

 

தன் தந்தையின் அக்கரையில் எப்போதும்போல அவரை நினைத்து மகிழ்ந்தவன் ஏறுங்கப்பு வண்டியில போகலாம்..

 

அதான் நீ வீட்டுக்கு போறியே அப்புறம் எதுக்கு நான்.. நீ போ நான் கிளம்புறேன்.. இன்னும் அந்த அம்மத்தாவ தூக்க லேட்டாகும் போல..!!”

 

அப்பு வாங்க இவ்வளவு தூரம் வந்தாச்சு.. களைச்சு போய் இருக்கிக.. வீட்ல ஒரு வாய் மோர குடிக்கவும் நானே கொண்டு வந்து இங்கன விடுறேன்.. அவுக தூக்குறவரைக்கும் இப்படியே இருக்கனுமா ஏறுங்கப்பு .. மகன் வற்புறுத்த அவன் பின்னால் ஏறிக் கொண்டார்..

 

வெளி வாசலில் வண்டியை நிறுத்த, ஏய்யா அந்தா நிக்குதே அது பாலா பயலோட ஜீப்பு மாதிரி தெரியல..??”

 

ம்ம்…”

 

இங்கன ஏன் அவன் வண்டி நிக்குது..??”

 

[the_ad id=”6605″]

 

தெரியலப்பு.. நீங்க முகத்த கழுவிட்டு வாங்க நான் மோர கலக்குறேன்.. அவன் முன்புறமாக கதவை தட்டச் செல்ல ராமையா கிணற்றடியை நோக்கி நடந்தார்.. வீட்டு வேலை நடப்பதால் அவர்கள் வீட்டை சுற்றி இருபக்கமும் புது வீட்டிற்கு போகும்படி பாதை அமைத்திருந்தார்கள்.. இவர் ஒரு பக்கம் கிணற்றடிக்கு போக அப்போதுதான் தர்ஷினியை பாலா தோளில் போட்டபடி வேலுவின் துணையோடு கொல்லைப்பக்கம் வெளியில் வர காலடி சத்தம் கேட்கவும் சட்டென பார்த்தவர் அப்படியே ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டார்..

 

மறு நொடியே வேட்டியை மடித்துக்கட்டி. “டேய்ய்ய்ய் எவன்டா அவன் என் வீட்டுக்குள்ளயே புகுந்து என் புள்ள மேல கைய வைச்சது…?? டேய் சுந்தரு எடுறா அந்த அருவாள..??”

 

ராமையாவை எதிர்பார்க்காத இருவரும் ஒரு நிமிடம் திகைக்க அதை பயன் படுத்திக் கொண்ட ராமையா அங்கே கிடந்த அந்த பெரிய துரட்டி கம்பை (ஆடு மாடு மேய்க்க போகும்போது பெரிய கம்பில் சிறு அரிவாளை கட்டி பெரிய மரங்களின் இலை தளைகளை பறிக்க கைகளில் வைத்திருப்பார்கள்) எடுத்து அதன் முனையில் இருக்கும் அரிவாள் வேலுவின் கழுத்தில் பதிந்திருந்தது..

 

டேய் அடுத்த அடி வைச்ச சங்க அறுத்துருவேன் பார்த்துக்க..??” கரெக்டாக வேலுவின் குரல்வளைக்கு நேராக அந்த அரிவாள் இருந்தது.. பளபளவென மின்னியபடி அதன் கூர்மையை பார்த்தாலே வேலுவுக்கு சாவு அவன் கண்முன்னால் தெரிந்தது..

 

தந்தையின் சத்தம் கேட்கவும் சட்டென சுதாரித்த சுந்தர் மறுபக்கம் ஓடிவர பாலா தர்ஷினியை தோளில் போட்டிருப்பதை பார்த்த நொடியில் அங்கு குவிக்கப் பட்டிருந்த ஒரு விறகு அவன் கைக்கு எப்படி வந்தது என்பதை அறியும் முன் ஓங்கி ஒரு அடி பாலாவின் உச்சந்தலையில் விழுந்திருந்தது..

 

அப்படியே கண்முன்னால் பூச்சி பறக்க அவன் தடுமாற தர்ஷினியை எட்டி பறித்து தன் தோளில் போட்டபடி அவன் நெஞ்சில் ஓங்கி ஒரு மிதி மிதிக்க அவன் தடுமாறி பின்னால் சாய்ந்திருந்தான்.. தன் கண்முன்னால் பாலா அடிவாங்கினாலும் வேலுவுக்கு ஏதும் செய்ய முடியாத சூழல்..சற்று அசைந்தாலும் தன் உயிர் போவது நிச்சயம் .. இதுவரை அப்பாவியாக பார்த்திருந்த தன் சித்தப்பா இன்று அப்படி ஒரு கோபத்தோடு உக்கிரமாக நின்றிருக்க அதைவிட சுந்தர் கருப்பனாகவே மாறியிருந்தான்.. இப்படி வந்து எசகு பிசகாக மாட்டுவோம் என இருவருமே எதிரபார்க்கவில்லை..

 

ராமையாவோ சுந்தரு அவன அடிச்சு கைகால ஒடிய்யா.. யாரு வீட்டுக்குள்ள வந்து என்ன வேலை பார்க்குறாங்க..??”

 

தர்ஷினியை அங்கிருந்த அடுப்படி திண்ணையில் படுக்க வைத்தவன் கீழே விழுந்த பாலா எழுவதற்குள் தன் கையில் இருந்த விறகு கட்டையால் அவன் முட்டியை பேர்த்திருந்தான்.. அவனுக்கு இருந்த வெறிக்கு பாலா எழ முடியாமல் அடித்தவன் அடுத்து வேலுவையும் புரட்டி எடுக்க அவர்கள் போட்டிருந்த வெள்ளை வேட்டி சட்டை இரண்டும் ரத்தக்களரியாக மாறியிருந்தது.. அவர்கள் இருவரும் இளைஞர்கள் தான் ஆனால் அவர்கள் சுதாரிப்பதற்கு இடம் கொடுக்காமல் அடி விளாச ஆரம்பித்திருந்தான்.. அவர்கள் மேல் இருந்த வெறிக்கு ஒவ்வொரு அடியும் இடி மாதிரி விழ..

 

நன்கு படித்து ஆஸ்திரேலியாவுக்கெல்லாம் சென்று வந்த சுந்தருக்குள் இப்படி ஒரு காட்டான் இருப்பான் என இருவருமே அறிந்திருக்கவில்லை.. அந்த அளவுக்கு ருத்ர தாண்டவன் ஆடிக் கொண்டிருந்தான்.. இருவர் மண்டையும் உடைந்து முகமெல்லாம் ரத்தம்.. கைகால்களில் எத்தனை எலும்பு உடைந்தது என அவர்களே அறியவில்லை.. இருவரும் குற்றுயிரும் குலையுயிருமாக கிடக்க சுந்தருக்கு இன்னும் ஆத்திரம் தீர்ந்த பாடில்லை.. இருவரையும் கொன்று போடும் அளவிற்கு வெறியில் இருந்தான்..

 

சற்று நேரம் மகன் அடிப்பதை வேடிக்கை பார்த்தவர் அவர்கள் நிலைமை மோசமாக மாறவும்.. “போதும் விடுய்யா.. இந்த நாய்களை இழுத்து கொண்டு போய் அந்த ஜீப்புக்கிட்ட போட்டிரு..

 

டேய் இனி ஒரு தரம் எங்க வாசல்படியில உங்கள பார்த்தேன் அதுதான் உங்க ரெண்டு பேருக்கும் கடைசி நாள்.. டேய் வேலு அண்ணன் மகன்னுனெல்லாம் பார்க்க மாட்டேன்.. அமைதியா இருக்கிறதால எங்கள என்ன நினைச்ச… தன் மீசையை நீவிவிட்டவர்.. என் மருமவ மேல உங்க கண்ணு பட்டாக்கூட அது இனி அங்கன இருக்காது.. சொந்தக்கார பயலுகன்னு இதோட விடுறேன்.. இல்ல பஞ்சாயத்து கூட்டி உங்க ரெண்டுபேர் மானத்த சந்தி சிரிக்க வைச்சிருவேன் பார்த்துக்கோங்க..

 

தந்தை பேசிக் கொண்டிருந்தாலும் சுந்தருக்கு ஆத்திரம் அடங்கவில்லை.. என் பொண்டாட்டி மேலயே கைய வைக்கிறதா இருந்தா உனக்கெல்லாம் என்ன திமிரு..!!” தர்ஷினியை தூக்கியிருந்த கையை தன் செருப்பு காலுக்கு கீழே போட்டு மிதித்து கையிலிருந்த கட்டையால் அடித்து நொறுக்க எலும்பு உடையும் சத்தம் அவர்களுக்கே கேட்டது.. ரத்தம் எங்கிருந்து வருகிறதென்றே தெரியாமல் அவர்கள் மேலிருந்து ரத்தம் சொட்டு சொட்டாக வடிய ஆரம்பிக்க தன் மகனை பிடித்து தடுத்த ராமையா அவனை தட்டிக் கொடுத்து சற்று ஆசுவாசப்படுத்த,

 

விடுங்கப்பு இவனுகள இன்னைக்கு கொன்னு புதைச்சிருறேன்..??”

 

[the_ad id=”6605″]

 

 

விடுய்யா இன்னைக்கு வாங்குனதுக்கே அவனுக இந்த ஜென்மத்தில இந்த பக்கம் தலைவைச்சு படுக்க மாட்டானுக. நாம அவனுக மாதிரி இல்லப்பு …தூக்கி வெளியில வீசிட்டு மருமகள பாருய்யா..” அவர் தர்ஷினியிடம் செல்ல,

 

இரண்டு கையிலும் இருவரின் ஒரு காலை பிடித்தவன் அந்த மண் தரையில் தரதரவென இழுத்தபடி செல்ல தரையில் கிடந்த கல் கம்பு எல்லாம் அவர்களின் முதுகை குத்தி கிழித்தது.. அப்படியே ஜீப் வரை இழுத்து சென்றவன்.. இனி ஒரு தரம் என் பொண்டாட்டிக்கிட்ட உங்க வேலையை காட்டினிங்க. உங்க உசிரு உடம்புல தங்காது சொல்லிட்டேன்..” அவர்கள் முகத்தில் மீண்டும் ஓங்கி ஒரு குத்துவிட்டவன்.. அதோடு தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்..

 

ராமையா தர்ஷினி அருகில் கவலையாக அமர்ந்திருக்க சுந்தரு புள்ள தண்ணிய தெளிச்சாலும் எழுந்துக்க மாட்டேங்குதுப்பு..

 

 தன் மடியில் அவள் தலையை வைத்தவன் அவர்கள் அடித்ததில் பதிந்திருந்த கைதடத்திலும் நெற்றியில் காய்ந்து போயிருந்த ரத்தத்தை பார்க்க பார்க்க அவனுக்கு ரத்தம் கொதித்தது..

 

கை முஷ்டிகள் இறுக பல்லை கடித்து கோபத்தை அடக்கி அவனுகள  கொன்னுருக்கனும்ப்பு.. இல்லைனா பஞ்சாயத்துலயாவது ஒப்படைச்சிருக்கலாம்..

 

ம்கூம் அவனுக ஆம்பளைக இதெல்லாம் அவனுகளுக்கு பெருசில்ல.. பொண்ணு நம்ம வீட்டு பொண்ணு.. இதெல்லாம் நாம பார்த்து பதனமாத்தான் செய்யனும்.. நாம யாருமே வீட்ல இல்லைன்னு தெரிஞ்சுதான் இவனுக இந்த காரியம் பார்த்திருக்கானுங்கன்னா அப்ப நம்ம வீட்டையே நோட்டம் விட்டிருக்கனும்.. நம்ம வீட்டுக்குள்ளயே வந்து நம்ம புள்ளையை தூக்கிறதா இருந்தா இவனுக சாதாரணமானவங்க இல்லப்பு.. ரொம்ப மோசமானவங்க.. நாம இன்னும் ரொம்ப சூதானமா இருக்கனும்..

 

ஏற்கனவே மாட்ட தேடிப்போன பொண்ணையே கெடுத்து கிணத்தில வீசின ஊரு இது.. இது மாதிரி உலகம் தெரியாம பொண்ணு மேல என்ன கரிய வேணா பூச அஞ்ச மாட்டானுக இவனுக.. அத அப்புறமா பார்த்துக்கலாம் நான் போய் நம்ம ராவுத்தர் டாக்டர கூட்டிட்டு வாரேன் நீ புள்ளைய வீட்டுக்குள்ள தூக்கிட்டு போ.. அவர் தன் வயதைக்கூட பொருட்படுத்தாமல் ஓட..

 

தர்ஷினியை பார்க்க பார்க்க சுந்தருக்கு மனது ஆறவில்லை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!