Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Varam Vaangi Vanthaval

Varam Vaangi Vanthaval Naan 17 2

அழுந்த முத்தமிட்டால்கூட மனைவிக்கு வலிக்கும் என நினைப்பவன்.. இப்போது இப்படி வாடிய கொடி போல கிடப்பவளை நெஞ்சோடு அணைத்தவனுக்கு தன்னை அறியாமல் கண்கள் கலங்கி கண்ணீர் துளிகள் அவள் மேல் துளிதுளியாய் வழிய ஆரம்பித்தது..

 

லட்டு.. அவள் முகத்தை வருடி லட்டுமா எழுந்திரிடி.. மாமனால இப்படி உன்னை பார்க்க முடியல.. அவளை தூக்கி தங்கள் அறையில் படுக்க வைத்தவன் மீண்டும் தண்ணீரை முகத்தில் தெளித்து எழுப்ப பார்க்க அவளுக்கு மயக்கம் தெளியவில்லை…. அதற்குள் தந்தையோடு அந்த வயதான டாக்டரும் வந்திருந்தார்.. பல வருடங்களாக இங்கேதான் சிறு கிளினிக் வைத்திருக்கிறார்..

 



Advertisement

தர்ஷினியை பரிசோதித்து நெற்றி காயத்திற்கு மருந்திட்டவர் மயக்கம் தெளிய ஊசியும் போட்டார்.. ஒன்னும் பிரச்சனையில்ல சுந்தர் இன்னும் பத்து நிமிசத்தில கண்ணு முழிச்சிருவாங்க..

 

அவருக்கு நன்றி சொன்னவன் தந்தைக்கும் டாக்டருக்கும் மோர் கலக்கி கொண்டு வந்து கொடுக்க அவரும் அங்கே அமர்ந்து அவர்களுடன் பேச ஆரம்பித்தார்.. சற்று நேரத்திலேயே தர்ஷினிக்கு மயக்கம் தெளிய கண்விழித்தவள் முதலில் பார்த்தது சுந்தரைத்தான்.. சட்டென கட்டிலை விட்டு எழப்போக அதற்குள் சுந்தர் தன் மனைவியை பாய்ந்து அணைத்திருந்தான்..

Advertisement

 

Advertisement

இருவரும் இறுக அணைத்து ஒருவரிடம் ஒருவர் ஆறுதலை தேட தர்ஷினி தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.. அவள் முதுகை தட்டி ஆசுவாசப்படுத்தியவன் அவள் காதிற்குள் டாக்டர் வந்திருக்கிறாரு அவரு போகவும் நாம பேசலாம்டா.. நீ கண்ண துடை உனக்கு எதுவும் ஆகல.. ஆகாது.. மாமன் விடமாட்டேன்.. நான் உன்கூடவே இருக்கேன்..  அவளை சமாதானப்படுத்த,

 

அதுவரை வெளியில் பேசிக் கொண்டிருந்த ராமையாவும் டாக்டரும் உள்ளே நுழைந்தனர்.. அவளை பரிசோதித்தவர் அவள் வயிறு வலி என சொல்லவும் என்ன சுந்தர் வாய் வயிறெல்லாம் இப்படி வெந்து போயிருக்கு.. என்ன சாப்பிட்டாங்க ரொம்ப காரம் சேர்ப்பிங்களா..??”

Advertisement

 

அப்படியெல்லாம் இல்ல டாக்டர் .. இவளுக்கு காரம் ஆகாதுன்னு ஆத்தா எப்பவும் காரம் கம்மியாத்தான் வைப்பாங்க..

 

[the_ad id=”6605″]

 

இப்படியே விட்டா அல்சர்ல கொண்டு வந்து விட்டுரும்.. வயிற்று புண் ஆறுவதற்கு மருந்து மாத்திரை எழுதிக் கொடுத்து நெற்றி காயத்திற்கும் ஆயின்மென்ட் கொடுத்தார்..

 

டாக்டர் கிளம்பவும் ராமையாவும் மகனிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினார்.. நீ வீட்லயே இருய்யா.. மருமகளா பத்திரமா பார்த்துக்க நான் வர எப்படியும் ஆறு மணிக்கு மேலாகிரும்.. ஆத்தா தாயி வரவாத்தா..” மருமகளிடமும் சொல்லிக் கொண்டு கிளம்ப கதவை அடைத்துவிட்டு வந்த சுந்தரை தர்ஷினி பாதி வழியிலேயே ஓடி வந்து அணைத்திருந்தாள்..

 

மீண்டும் கேவி கேவி அழ ஆரம்பிக்க அவளை கைகளில் ஏந்தியவன் என்னடா பட்டு அதான் ஒன்னும் ஆகலைதான அதுக்கப்பறமும் ஏன்டா அழற.. நீ அழுதா மாமனுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. அழாத.. அவள் கண்ணைத்துடைத்துவிட அவன் நெஞ்சில் தன் முகத்தை புதைத்துக் கொண்டாள்..

 

பா.. பாலா இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கவே இல்ல மாமா..??”

 

பொறுக்கி அன்னைக்கே அவன் உன்னை பார்த்த பார்வை சரியில்லடா.. அப்பத்தா உனக்கும் எனக்கும் உடனே கல்யாணம் பண்ணி வைக்க அந்த பொறுக்கிதான் முக்கிய காரணம்.. அவங்களால உன்னை கவனமா பார்த்துக்க முடியலைன்னுதான் நம்ம ரெண்டுபேர் மேல தப்பில்லைன்னு தெரிஞ்சாலும் அவங்க அவசரமா நம்ம கல்யாணத்தை நடத்தினதா சொன்னாங்க ..

 

அவனை ஆச்சர்யமாக பார்க்க நம்மள மாதிரியே எல்லாரும் நல்லவங்களா இருப்பாங்கன்னு நாம நினைக்கக் கூடாது.. இதெல்லாம் அவனோட பிறவி குணம் இத மாத்த முடியாது.. இதுவரைக்கும் அவனப்பத்தி தெரிஞ்சுச்சேன்னு சந்தோசப்படு.. வா சாப்பிட..

 

ப்பச் வேண்டாம்.. அது ரொம்ப காரமா இருக்கு..

 

அப்படியெல்லாம் சொல்லக்கூடாது வா.. காலையில் தானும் அந்த குழம்பைத்தான் சாப்பிட்டு போனான் அப்போது அவ்வளவு காரம் தெரியவில்லை.. மனைவியை அடுப்படிக்கு தூக்கிச் சென்றவன் குழம்பை நாக்கில் வைத்து பார்க்க காரம் தாங்கமுடியவில்லை.. தயிர் கிண்ணத்தை பார்க்க அது காலியாக இருக்கவும் பச்சரிசியை எடுத்தவன் அதை மிக்ஸியில் உடைத்து பூண்டு, வெந்தயம், தேங்காய் பால் சேர்ந்து கஞ்சியாக காய்ச்சினான்..

 

அவன் வேலை செய்யும் அழகை அடுப்படி திண்டில் அமர்ந்தபடி வேடிக்கை பார்த்தவள் அவனுக்கு நொடிக்கு ஒரு தரம் அணைப்பும் முத்தமும் கொடுத்துக் கொண்டிருக்க அதை அனுபவித்தபடியே வேலை செய்து கொண்டிருந்தான்..

 

கஞ்சியை ஒரு கிண்ணத்தில் ஊற்றி ஆறவைத்தவன் ..அவள் இடுப்பில் கைகோர்த்து அணைத்து மாமன வேலைப்பார்க்க விடாம டிஸ்டர்ப் பண்ணினதுக்கு தண்டனை… கொடுக்க வேண்டாமா..!!” அவள் இதழில் தன் இதழை புதைக்க அவன் முதுகில் கைகோர்த்து இழுத்தவளின் கண்ணீர் அவன் உதட்டை வந்தடைந்தது..

 

அதன் உவர்ப்பு சுவையை அறிந்தவன் என்னாச்சுடா பேபி..

 

மாமஸ் அவனுககிட்ட மாட்டினப்போ மறுபடி உங்கள பார்க்காம போயிருவனோன்னு ரொம்ப பயந்திட்டேன்.. நான் உங்களவிட்டு போயிட்டா நீங்க ரொம்ப கஷ்டப்படுவிங்கதானே..” அவளை பேசவே விடவில்லை.. அவள் வாயை கைகளால் அடைத்தவன்..

 

அப்படியெல்லாம் பேசாதடா..சத்தியமா மாமனால தாங்கமுடியாது.. நம்மள யாராலும் பிரிக்க முடியாது…மாமன் உன் மேல உசிரே வைச்சிருக்கேன்.. நாம நிறைய குழந்தைகளோட சந்தோசமா இருப்போம் பாரு..

 

அண்ணியோட பேபி மாதிரியா..??”

 

அவன் கிடக்கான் கருப்பன்..!!! என் பையனோ பொண்ணோ உன்னை மாதிரி நல்ல கலர்ல வேணும் இப்பவே சொல்லிட்டேன்..

 

அச்சோ அவனப்போய் பிளாக் சொல்றியா வா.. வா நாளைக்கு அண்ணி வீட்டுக்கு வந்திருவாங்களாம் நான் சொல்லிக் கொடுக்கிறேன்..

 

சொல்லு சொல்லு நேத்தே நான் அவனோட அப்பன்கிட்ட சொல்லிட்டேன்..

 

[the_ad id=”6605″]

 

ஹாஹாஹா… அவன் முகத்தை வருடியவள் உன் கலர்ல நமக்கு குழந்தை பிறந்தா நல்லாதான் மாம்ஸ் இருக்கும்.. உனக்கென்ன குறைச்சலாம்..

 

அப்படியா சொல்ற.. அப்ப மாமன உனக்கு பிடிச்சிருக்கா..??”

 

அவனை முன்னால் இழுத்தவள் அவன் நெற்றியோடு தன் நெற்றியை பதித்து மூக்கோடு மூக்கை உரசியவள் தன் வழுவழு கன்னத்தை அவன் கன்னத்தோடு உரசி எனக்கு உன்னை ரொம்பபப… தன் கைகளை விரித்தவள் இவ்ளோ பிடிச்சிருக்கு.. ஐ லவ் யூ மாம்ஸ்..

 

ஏஏஏஏஏ என் பொண்டாட்டிக்கு என்னப்பிடிச்சிருக்காம்.. அவளை கைகளில் ஏந்தி சுற்ற..

 

தர்ஷினிக்கு சிரிப்பு தாங்கவில்லை.. விழுந்துவிடாமல் அவனை இறுக அணைத்துக் கொள்ள அவள் சிரிப்பதை ரசித்தபார்த்தவன் அவன் முகத்தில் இருந்த கலக்கம் சற்று மறையவும்,

 

 வாடா பேபி.. சாப்பிட..” அந்த கஞ்சியில் சிறிது சர்க்கரை சேர்த்து ஊட்டி விட்டவன் அவளை தனியே விடாமல் சுடிதார் மாற்றச் சொல்லி மெடிக்கலுக்கு கூடவே கூட்டி சென்று கூட்டி வந்து மருந்து மாத்திரைகளை கொடுத்து, நெற்றிக்கு ஆயின்மெண்ட் தடவி தூங்க சொல்லியவனுக்கு இன்னும் பாலா, வேலுவின் மேலிருந்த கோபம் குறையவில்லை..

 

நாம வராம கொஞ்ச நேரம் கழிச்சு வந்திருந்தாக்கூட தர்ஷினிய அவனுக எதுவும் செஞ்சிருப்பானுகளா.. அப்பத்தா சொல்லும்போதுகூட நாம இத சீரியஸா எடுத்துக்கல..  அப்பத்தா இத்தனை வயதிலும் தன் பேத்திக்காக துணையிருப்பதை நினைத்தவனுக்கு அவர் மேல் ஒரு தனி மரியாதை வந்தது..

 

தர்ஷினியின் அருகே படுத்தவன் அவளை இறுக அணைத்துக் கொள்ள இவளுக்கு ஏன்தான் இப்படி துன்பமெல்லாம் வருதோ..

 

அவன் மனசாட்சியோ டேய் சோனமுத்தாஆஆஆஆ நீயெல்லாம் ஆம்பள.. புருசன்னு குத்துக்கல்லா இருக்கும்போதே அவனுக தூக்க வந்திருக்கானுக.. அவனுகள கைகால் ஒடிச்சதோட விட்டுட்ட.. தலையை ஒரே சீவா சீவியிறுக்க வேணாமா..

 

இன்னைக்குத்தான் நீ உருப்படியா பேசியிருக்க .. இரு நல்ல நேரம் வரட்டும்.. தூக்குறேன் அவனுகள..’ அப்படியே கண்ணயர்ந்தான்..

 

ஒரு அரைமணி நேரம் கழித்து கதவு தட்டும் சத்தம் கேட்டு சுந்தர் கதவை திறக்க சுந்தரி பள்ளி விட்டு வந்திருந்தாள்.. அவள் வீட்டு வேலையை பார்த்து முடிக்க சற்று பொறுத்தவன் சுந்தரி சுந்தரி..

 

என்னண்ணே..?”

 

இங்க வா..

 

கொல்லைப்புறத்தில் இருந்து அண்ணன் அழைக்க அவனிடம் சென்றவள் சொல்லுண்ணே..??”

 

இங்க உட்கார்.. பக்கத்தில் கைகாட்ட அந்த திண்ணையில் அண்ணன் அருகில் அமர்ந்தாள்.. உனக்கு அண்ணிய பிடிக்கலையாத்தா..??”

 

ஒரு மாதிரி முழித்தவள் ஏண்ணே.. இல்ல.. புடிக்குமே.!!”

 

இல்ல உனக்கு பிடிக்கல.. அதான நீ அவ குடிக்கிற பால்ல தண்ணிய ஊத்துற, வழுக்கி விழ எண்ணெய ஊத்த வைக்கிற, இப்ப குழம்புல மிளகாய்தூள அள்ளிப் போட்டு வைச்சிருக்க…??”

 

இ.. இல்ல.. இல்லண்ணே..” அவள் தடுமாற..

 

அன்னைக்கு அப்பு உன்னை அடிச்சாக.. அந்த காரணத்தை தவிர தர்ஷினி உன்னை ஏதாச்சும் தப்பா பேசினாளா.. இல்ல நடந்துக்கிறாளா..

 

ச்சே ச்சே இல்லண்ணே..

 

பின்ன..

 

அதுவந்து அந்த மெடிக்கல் சர்டிப்பிக்கேட் உண்மைதான. அவங்க ஒரு மென்டல்தான..?”

 

தங்கையின் வார்த்தையில் பல்லை கடித்தவன் கோபத்தை அடக்கி.. “நான் ஒன்னு கேட்கவா..??”

 

ம்ம்..

 

நான் செத்து போனா என்னத்தா பண்ணுவ..??”

 

[the_ad id=”6605″]

 

 

ஐயோ அண்ணே வாயில போட்டுக்க.. அப்படியெல்லாம் சொல்லாத நீதான் எங்க எல்லாரோட உயிரு … கருப்பா எங்க அண்ணன நல்ல வை..!!” வானத்தை நோக்கி கையெடுத்து கும்பிட,

 

தங்கையின் பாசத்தில் நெகிழ்ந்தவன்..  அண்ணன் பாதிநாள் வெளியூர்லதான் வேலைப்பார்த்தேன்.. நான் உங்க எல்லாரோட செலவழிச்ச நேரமும் குறைவு.. பின்ன நான் செத்தா உனக்கென்ன..??”

 

கண்ணீர் கரகரவென ஊற்ற.. ப்ளிஸ்ண்ணே அப்படியெல்லாம் சொல்லாத.. உனக்கு மட்டும் ஏதாச்சும்னா நானும் செத்து போயிருவேன்.. எங்களோட இருந்தாலும் வெளியூர்ல வேலைப்பார்த்தாலும் நீன்னா எங்க எல்லாருக்கும் உசிருண்ணே.. போ எனக்கு இப்பவே நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு..

 

ஏத்தா நான் சும்மா சொன்னதுக்கே உனக்கு இப்படி வலிக்கிதே.. நம்மளவிட ஒத்துமையா, நல்ல வசதி வாய்ப்போட, ரொம்ப செல்லமா வளர்ந்துட்டு இப்ப அவங்க எல்லாரையும் ஒரே நேரத்தில பிரிஞ்ச உன்னோட அண்ணி நிலைமைய நினைச்சுப்பாரு.. அதுவும் அவங்க இயற்கையா சாகாம கொன்னு போட்டிருந்தா… அத நேரா அனுபவிச்ச அவளுக்கு எப்படி இருக்கும்..” தர்ஷினியின் குடும்பத்தை பற்றி அவர்கள் இறந்ததை பற்றி சொல்ல…

 

ஓஓஓஓவென ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்துவிட்டாள்.. ஆத்தி அத்தாச்சி அம்புட்டு கஷ்டப்பட்டாகளா.. நான் தப்பு பண்ணிட்டேன்ணே… தெரியாம பண்ணிட்டேன்.. போச்சு போச்சு கடவுள்கூட என்னை மன்னிக்க மாட்டாரு..!!” அவள் தன் தலையில் அடித்துக் கொள்ள,

 

அவள் கையை பிடித்தவன் இப்ப சொல்லு உன் அண்ணி ஒரு மனநோயாளியா..??”

 

இல்லண்ணே இல்ல நான்தான் லூசு, கிறுக்கு , மென்டல் எல்லாமே நான்தான்..!!”

 

அவள் தலையில் கைவைத்து அழுத்தியவன் ஹாஹாஹா சரி விடு அதுக்காக உண்மையை நீயே ஒத்துக்காம..!! அவளும் பாவம்டா.. அவளுக்குன்னு யார் இருக்கா … நாமதான பார்த்துக்கனும்..

 

கண்களை துடைத்துக் கொண்டவள் அண்ணே சொல்லிட்டில்ல நான் இனி அத்தாச்சிய நல்லா பார்த்துக்குறேன்..

 

எனக்கு தெரியும்தா என் தங்கச்சிக எல்லாம் ரொம்ப நல்ல பிள்ளைகன்னு..” இருவரும் பேசிக் கொண்டிருக்க தர்ஷினி எழுந்து வந்தாள்..

 

மனைவியை கண்ணை காட்டி தன் அருகில் அமர வைத்தவன் சுந்தரி அண்ணனுக்கு காப்பி போட்டு தாறியா..??” தர்ஷினி அவன் அருகில் அமர,

 

இதோ ஒரு நொடி… வேகமாக ஓடியவள் அடுத்த ஐந்து நிமிடத்தில் அண்ணனுக்கு காப்பியும் தர்ஷினிக்கு பாலும் கொண்டு வந்து கொடுத்தாள்..

 

பாலை குடிக்கலாமா வேண்டாமா என்பது போல பார்க்க,

 

குடிங்க அத்தாச்சி நீங்க குடிக்கிற சூட்டுலதான் ஆத்தி கொண்டாந்தேன்.. முதல்முதலாக சரளமாக தன்னிடம் பேசும் சுந்தரியை பார்த்தபடி அந்த பாலை குடிக்க ஆரம்பித்தாள்..

 

                                                  இனி………????

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!