Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Varam Vaangi Vanthaval

Varam Vaangi Vanthaval Naan 18 2

 “என்னப்பத்தா பண்ணலாம் அவங்களுக்கு திதி கொடுக்கலாமா..??”

 

இல்லய்யா.. அவங்கள இந்த நிலைமைக்கு ஆளாக்குனது யாருன்னு நமக்கு தெரியனும்ப்பு.. அத அப்புறமா பார்ப்போம்.. நீயும் தர்ஷினியும் அவுக ஊருக்கு போய் அவங்க படத்தை வைத்து சாமி கும்பிட்டுட்டு வாங்க..திதிய அப்புறமா கொடுத்துக்கலாம்..”

 



Advertisement

ராமையா ஆமா சுந்தரு கலியாணம் செஞ்சு இம்புட்டு நாளாச்சு .. நீயும் மருமகளும் அங்கன போய் சாமி கும்பிட்டுட்டு எங்கயாச்சும் ரெண்டுநாள் தங்கிட்டு வாங்கய்யா.. பாவம் புள்ள வீட்டவிட்டு வெளியில எங்கயும் போகாம இருக்கு..

 

அப்பு வயல்…!!”

Advertisement

 

Advertisement

வேலை எப்பவும் இருந்துட்டுதாப்பு இருக்கும்.. நாமதான் நம்ம குடும்பத்தையும், நம்ம நம்பி வந்த பொண்டாட்டியையும் பார்க்கனும் .. அலை ஓஞ்சுதான் கடல்ல குளிக்கனும்னு இருந்தா நாம அங்கனயே இருக்க வேண்டியதுதான்.. நீங்க கிளம்புங்க நான் வேலையை பார்த்துக்கிறேன்..

 

தெய்வானை ஏங்க வள்ளி போன் பண்ணியிருந்தா அவ நாத்தனாருக்கு வேற இடத்தில மாப்பிள்ள பார்த்து முடிச்சிட்டாங்களாம்.. பாருங்க எல்லாருக்கும் சொல்லி பேசி முடிச்சிருக்காக நம்மகிட்ட ஒரு வார்த்தை சொல்லல..?”

Advertisement

 

ஆத்தா அதனால என்ன.. அந்த பொண்ணு கல்யாணம் நல்லபடியா முடிஞ்சா சரி.. நமக்கு சொல்லாட்டா பரவாயில்ல இதெல்லாம் ஒரு குறைன்னு கொண்டு வராதிக..

 

[the_ad id=”6605″]

 

 

ஏய்யா இருந்தாலும் நாம அந்த வீட்ல பொண்ணு கொடுத்திருக்கோம்.. நமக்கு மரியாதை கொடுத்து ஒருவார்த்தை சொல்ல வேணாமா..??”

 

விடுங்கத்தா.. அங்கன வள்ளிய நல்லா வைச்சிருக்காகளா அது போதும் .. தர்ஷினி நீ போய் படு மணி பத்தாக போகுது.. குழந்தையை வாங்கியவன் அதை மடியில் போட்டு தட்டிக் கொடுக்க அவனோ மாமனின் மடியை மெத்தையாக்கி தூங்கிக் கொண்டிருந்தான்..

 

அனைவரும் படுக்கச் செல்ல அண்ணே உங்க மச்சான் 30 செல்லவும் என்னை அங்கன கூட்டிட்டு போறாகளாம்..

 

எதுக்குத்தா.. ஒரு மூனு, நாலு மாசம் இங்கனதானா இரு.. உடம்பை நல்லா கவனிச்சிட்டு அப்புறமா போகலாம்.. அங்கன கூட்டுக்குடும்பத்தில நீ போய் வேலைப்பார்க்காம புள்ளைய சாக்கு சொன்னா அவுக தப்பா நினைப்பாக … நான் மச்சான்ட்ட சொல்றேன்.. அதுக்குள்ள நீயும் புள்ளையும் உடம்ப நல்லா தேத்திக்கோங்க..  நம்ம வீட்டு வேலையும் முடிஞ்சிரும்.. ஒரே வேலையா பால்காய்ச்சவும் போகலாம்.. குழந்தையை தூக்கி தொட்டிலில் போட்டு லேசாக ஆட்டிவிட்டவன் அடுப்படியில் தாயின் குரல் கேட்டு அங்கே சென்று தங்கைக்கு பாலை வாங்கி ஆற்றிக் கொடுத்தான்..

 

அண்ணே நீ குடிக்கல..??”

 

 எனக்கும் தர்ஷினிக்கும் எடுத்துட்டு போறேன்..

 

பதினைந்து நாட்களுக்கு பிறகு இன்றுதான் இருவரும் ஒன்றாக அறையில் இருக்கிறார்கள்.. தர்ஷினி வெளியில் படுக்கும்போது சுந்தரும் ஹாலில்தான்.. கதவு திறக்கும் சத்தம் கேட்டு கண்ணை திறந்து பார்த்தவள் கணவனை பார்க்கவும் தன் கைகளை விரிக்க பாலை டேபிளில் வைத்தவன் அடுத்த நிமிடத்தில் தன் மனைவியை கைகளில் அள்ளியிறுந்தான்..

 

கணவனின் முகமெங்கும் முத்தமிட கண்ணை மூடி அனுபவித்தவனுக்கு தான் எங்கோ சொர்க்கலோகத்தில் இருப்பதை போலிருந்தது.. கண்கள், இமை , கன்னம் என முத்தமிட்டவள் அவன் இதழில் தன் இதழை பதித்திருந்தாள்.. இருவராலும் அந்த நிமிடத்தை தாங்கமுடியவில்லை.. மனைவியிடம் முதல்முதலாக வாங்கும் முத்தம் அவனை பித்தம் கொள்ள வைக்க அவளிடம் தன்னை ஒப்புக் கொடுத்துவிட்டான்..

 

அவள் மட்டுமே முத்தமிட்டு கொண்டிருக்க சுந்தருக்கு வேறெதுவுமே தோன்றவில்லை.. மாமஸ் ஐ லவ் யூ.. நொடிக்கு ஒரு முத்தமும் ஒரு ஐ லவ் யூவும் சொல்லி கொண்டிருந்தாள்.. அவளை கட்டிலில் அமர வைத்து தன் தலையை அவள் மடியில் வைக்க தன் தளிர் கைகளால் அவன் முகத்தை வருடி, அவன் தலையை கோதவென இருந்தவளின் மென்மையை உள்வாங்கி கொண்டிருந்தான்..

 

ப்பா மாமன படுத்தி எடுத்திட்டடி..?”

 

மாம்ஸ்…

 

ம்..

 

மாம்ஸ்..

 

சொல்லுடா லட்டு..??”

 

நான் ரொம்ப அசிங்கமாயிட்டேன்ல..

 

மனைவியின் மென்மையை அனுபவித்துக் கொண்டிருந்தவன் கண்ணை திறந்து பார்க்க,

 

[the_ad id=”6605″]

 

 

இந்த பேஸ் இப்ப நல்லாவே இல்லை.. முகமெங்கும் புள்ளி புள்ளியாய் அம்மை தழும்புகளை காட்ட,

 

எழுந்தமர்ந்தவன் அவளை தன் மார்பில் சாய்த்து அழகுன்னு எதடா சொல்ற.. இந்த முகத்தை மட்டுமா.. நம்ம எல்லாருக்கும் இதே முகம் எத்தனை நாளைக்கு இருக்கும் சொல்லு.. வயசானா சுருக்கம் விழுமே அப்ப என்ன சொல்வ.. ஒருவேளை எனக்கு அம்மை போட்டிருந்தா நீ என்ன அசிங்கம்னு சொல்வியா..?”

 

ச்சே ச்சே ..

 

பின்ன..!!”

 

நீ எப்பவும் எனக்கு அழகுதான்டி செல்லக்குட்டி.. இது சீக்கிரமே மாறிரும்டா குட்டிமா.. முதல் முதலா பார்க்கும்போது உன்னோட அழகு என்னை கவர்ந்துச்சுத்தான் நான் இல்லைன்னு சொல்ல.. ஆனா அதைவிட இப்போ மனசுதான்டி மாமனுக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு.. லட்டுக்குட்டி..

 

உண்மையாவா..??” கண்களை விரித்துக்காட்ட..

 

ம்ம் இப்படியெல்லாம் பார்க்காத மாமன் ரொம்ப வீக்காயிருவேன்.. உன்னை எங்கயாச்சும் தனியா கூட்டிட்டு போகலாம்ன்னு நினைச்சேன்.. ப்பா சாமி அதுக்கே உன்பக்கத்தில படுக்க பதினைஞ்சு நாளு கடவுள் ஆப்பு வைச்சிட்டாரு.. இப்ப பாரு கொஞ்சம் அழுத்தி அணைச்சாக்கூட நீ அப்படியே ஒடிஞ்சு போயிருவ போல அந்த அளவுக்கு மெலிஞ்சிட்ட.. ப்பச் என்னத்த சொல்ல..??

 

அப்புறம் முக்கியமா உன்கிட்ட ஒன்னு சொல்லனும்னு நினைச்சேன்.. நமக்கு ஒரு கார் புக் பண்ணியிருக்கேன்.. கொஞ்சம் காசு கம்மியா இருந்திச்சு அதான் உன்னோட அக்கவுண்ட்ல பணம் எடுத்துக்கவா..??”

 

எழுந்து தன் பர்ஸிலிருந்து ஏடிஎம் கார்டை எடுத்து அவன் சட்டை பையில் வைத்தவள்.. மீண்டும் அவன் மடியில் படுத்துக் கொண்டு என்கிட்ட இதெல்லாம் கேட்காத மாம்ஸ்.. நீ என்னமோ பண்ணிக்கோ..?”

 

ஏன்டி நீ இப்படியே இருந்தா போதுமா.. கணக்கு வழக்க கவனி, மில்லுக்கு வா.  உன்னோட பேரண்ட்ஸ் நீ நல்லா பெரியாளா வரனும்னு கனவு கண்டிருப்பாங்கள்ல.. நீ இன்னும் வளரனும்டி..??”

 

அதுக்கு கொஞ்ச நாள் பொறுங்க.. நான் இப்போ உயரம் கம்மியாத்தான் இருக்கேன் கொஞ்சநாள்ல வளர்ந்திருவேன்..

 

ஏய் நான் சொன்ன உயரம் வேறடி.. லூசு..??”

 

அவன் மார்பில் முகத்தை புதைத்தவளோ.. அடப்போய்யா நீயெல்லாம் சரியான லூசு, மென்டல், ஸ்டுப்பிட், இடியட்..!!!”

 

அடிப்பாவி எதுக்கு இத்தனை அர்ச்சனை..!!”அவள் முகத்தை தூக்கி பார்க்க

 

“ ஏய் விடு மேன் ஸ்டுப்பிட் எனக்கு தூக்கம் வருது.. இத்தனை நாள் கழிச்சு வொய்ப் பக்கத்தில வந்திருக்காளே.. அவள ரொமான்ஸ் பண்ணுவோம், ஹக் பண்ணுவோம், கிஸ் பண்ணுவோம்ன்னு இல்லாம நான் வளர்றத பத்தி பேசுர.. போ மேன் போ நீ சீக்கிரமா சாமியாரா ஆக எல்லா தகுதியும் பொருத்தமா இருக்கு.. இதுக்குத்தான் மேன் ஓவர் பொறுப்ஸ்க்கு எல்லாம் கட்டக்கூடாது.. எங்க கிரான்மா பாரு இப்படி ஒரு ஆளுக்கு கட்டி வைச்சு என் ப்யூச்சர வேஸ்ட் பண்ணிருச்சு..

 

நீயெல்லாம் ஏதாவது காலேஜ்ல போய் லெக்சர் கொடுக்கத்தாய்யா லாயக்கு.. போய்யா போ… நீ கார வாங்கு.. கழுதையை மேய் எனக்கு தூக்கம் வருது இப்ப ஆளவிடு.. இதுக்கு போய் 11 மணி வரை முழிச்சிருந்தேன் பாரு என்னைச் சொல்லனும்.. அவள் குப்புற படுத்து தன் தூக்கத்தை தொடர..

 

சுந்தரோ தன் மனைவியை ஆஆஆவென பார்த்திருந்தான்.. அடிப்பாவி இவ இப்ப என்ன சொல்றா.. எனக்கு ரொமான்ஸ, வரலைன்னு சொல்றாளா..? பாவம் ரொம்ப வீக்கா இருக்காளே நம்ம லட்டு பேபி கொஞ்சம் பாவம்னு நினைச்சேன்.. அதுக்கு நல்ல பேர கொடுக்குறா.. சாமியாரா போகவா..!! செல்லக்குட்டி ரொம்ப எதிர்பார்த்திருப்பாளோ.. அடச்சே நாமதான் தேவையில்லாம பேசி மூட ஸ்பாயில் பண்ணிட்டோம் போல..பேபி பேபி அவளை எழுப்ப பார்க்க ம்கூம் அவள் அசையவே இல்லை..

 

ஹாஹாஹாஹா அடேய் சோனமுத்தாஆஆஆஆ போச்சா… ஊஊஊஊஊ..!!” சங்கை ஊத..

 

ஆமா அதான் ஊதிட்டாளே என் பொண்டாட்டி நீ வேற தனியா எதுக்கு ஊதுர.. ஏய்ய்ய் பேபி..” அவள் கன்னத்தை வருட, அவளோ அவன் கையை தன் கன்னத்தில் வைத்து அழுத்தியபடி ஆழந்த தூக்கத்திற்கு சென்றிருந்தாள்..

 

டேய் சுந்தரு இன்னைக்கு உனக்கு நாக்குல சனி இருந்திருக்கும் போலடா.. ச்சே இந்த ரூமுக்குள்ள வரவும் என் லட்டு எப்படி கிஸ்ஸெல்லாம் கொடுத்தா.. அத அப்படியே டெவலப் பண்ணி போயிருக்கலாம் ஐயோ எல்லாம் போச்சே.. அவளையே பார்த்தபடி படுக்க எங்கே தூக்கம்தான் தூரமாக ஓடிவிட்டதே..

 

மறுநாள் இருவரும் தாங்கள் வாங்கிய புதுக்காரில் தர்ஷினியின் ஊரை நோக்கிச் செல்ல அப்பத்தா வீட்டை சுத்தப்படுத்தி வைக்கும்படி அவர்கள் வீட்டின் சாவி வைத்திருந்தவர்களிடம் சொல்லியிருந்தார். இருவரும் போய் இறங்க அவ்வளவு பெரிய வீடு அழகான கலையம்சத்தோடு கம்பீரமாய் நின்றிருந்தது.. கொஞ்சம் பழைய வீடுதான்.. முன்னால் சீமையோடு பதித்த நீள வராண்டா..தரை நல்ல சிவப்பு வர்ணத்தில் பளபளத்தது.. காரை நிறுத்தியவர்கள் சாவியால் கதவை திறக்க அந்த கதவை திறக்கவே இரண்டுபேர் வேண்டும்போல அவ்வளவு கணம்..

 

அதை தன் கையால் அழுத்தி தள்ளியவன் அவர்கள் கொண்டு வந்த பேக்கோடு உள்ளே வர ப்பா…வீடு அப்படி ஒரு அழகு.. சுந்தர் வியந்து போய் நின்றிருந்தான்.. தரையெல்லாம் ஆத்தங்குடி கல் பதிக்கப்பட்டு.. உள் முற்றம் அதில் வளைவு வளைவாக கம்பிகள் போடப்பட்டு வளை அடிக்கப்பட்டு எந்த பயமும் இல்லாமல் இருக்க, சுவரெல்லாம் அழகழகான சித்திரங்கள்.. அந்த ஹாலின் நடுவில் பெரிய ஊஞ்சல் மாட்டப்பட்டிருக்க அந்த அறையின் நடுவில் அவர்கள் குடும்ப போட்டோ பெரிது செய்யப்பட்டு நடுவில் மாட்டப் பட்டிருந்தது.. ஏற்கனவே சுந்தர் பார்த்த படம்தான் இப்போது அதில் தர்ஷினியை மட்டும் எடுத்துவிட்டு மற்றவர்கள் இருப்பது போல லேமினேட் செய்யப் பட்டிருந்தது..

 

சற்று தள்ளி சுந்தர் தர்ஷினி திருமண போட்டோ.. மேரேஜ் ரிஜிஸ்டர் செய்த அன்று எடுத்த போட்டோ..பெரிது படுத்தப்பட்டிருந்தது.. பேக்கை வாங்கி ஊஞ்சலில் போட்டவள் கணவனை அழைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக ஒவ்வொரு அறையாக காட்ட சுந்தருக்கு தன்னை யாரோ பார்ப்பது போன்றே ஒரு உணர்வு.. சட்டென திரும்பி பார்க்க யாருமில்லை.. அந்த புகைப்படத்தில் இருந்தவர்கள் அவனை பார்த்து சிரிப்பது போல ஒரு தோற்றம்.. அவனுக்கு பயமெல்லாம் வரவில்லை .. மனைவியோடு கைகோர்த்து சென்றவன் அனைத்தையும் பார்வையிட தோட்டம்தான் பராமரிப்பின்றி கிடந்தது..

 

[the_ad id=”6605″]

 

 

இலைகள் அனைத்தும் காய்ந்து சருகாய் தோட்டமெங்கும் உதிர்ந்துகிடக்க மனைவியை போகவிடாமல் தடுத்தவன் நாளைக்கு யாராச்சும் ஆள்விட்டு சுத்தம் செய்யலாம்டா..??”

 

என்னவோ இந்த வீட்டிற்குள் காலை வைத்ததிலிருந்து தன் மனைவி அதிக மகிழ்ச்சியாய் இருப்பது போலிருக்க அதை பார்த்து இவனுக்கும் மகிழ்ச்சிதான்.. இருவரும் தாங்கள் வாங்கி வந்திருந்த மாலையை தர்ஷினி குடும்ப போட்டோவிற்கு போட்டு சாம்பிராணி ஊதுபத்தி பற்ற வைத்து அவர்களை வணங்க தர்ஷினிக்கு ஒரே அழுகை.. அவளை அணைத்து சமாதானப்படுத்தியவன் ஏதேதோ சொல்லி அவள் மனதை மாற்றினான்..

 

இரவு மணி எட்டிருக்கும் ஹோட்டலில் சாப்பிட்டு வந்தவர்கள் தர்ஷினி தனது அறையை காட்ட அதில் சிறு வயதில் அவளும் அவள் தம்பியும் சேர்ந்திருந்த ஆல்பங்கள் நிறைய இருந்தது.. அதை ஒவ்வொன்றாக பார்க்க  எட்டாவது ஒன்பதாவது படிக்கும் வயதில் ஒரு கவுன் போட்டு தன் தம்பியோடு நிற்கும் படம் அவனை மிகவும் கவர்ந்தது.. அதை தடவிப் பார்த்தவன்

 

இந்த போட்டோ ரொம்ப நல்லாயிருக்குடி..?”

 

இந்த டிரஸ் இன்னும் இங்கதான் இருக்கு மாம்ஸ்.. இரு போட்டுட்டு வர்றேன்..” சொல்லிக் கொண்டே அவள் செல்ல.. அது எப்படி இவளுக்கு இப்போ பத்தும்..

 

சற்று நேரத்தில் அந்த உடையில் அவள் வர பார்த்தவன் ஆஆஆவென நின்றான்.. கையில்லாமல் தொடைவரைக்கும் மட்டுமே முக்கியமாக அந்த டாட்டூ அப்படியே பளிச்சென தெரியும் கருப்பு நிற கவுன்.. தலையை விரித்துவிட்டு நல்ல அடர்ந்த நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டிருக்க ஒரு மயக்கும் மோகினியைப் போல் அவன் கண்களுக்கு தெரிந்தாள்..

 

                                                        இனி………..?????

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!