Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Varam Vaangi Vanthaval

Varam Vaangi Vanthaval Naan 19

வரம் வாங்கி வந்தவள் நான்

                                                        

                                    அத்தியாயம்  –  19

 



Advertisement

தன் முன் மயக்கும் மோகினியாய் நிற்பவளை பார்த்து ஜெர்க்காகி கையில் இருந்த ஆல்பத்தை பார்த்தான் .. அந்த டிரஸ் இதுதானான்னு.. அவளிடம் ஏதோ கேட்க வாயை திறந்து பின் வேணாம் சுந்தரு நேத்துமாதிரி ஏதாவது தத்துபித்துன்னு உளறி வைக்காம வாய மூடிக்க.. கம் போட்டு ஒட்டினாற் போல நறுக்கென்று மூடிக் கொண்டாலும் கண்ணென்னவோ ஆடை மறைக்காத இடங்களைதான் ஆசையாய் வருடியது..

 

தர்ஷினியோ தன் உடையை பற்றி ஏதாவது சொல்லுவான், ஆசையாக ஏதாவது பேசுவான் எனும் ஆசையில் வந்திருக்க அவனோ ஆல்பத்திற்கும் அவளுக்கும் ஆறு வித்தியாசங்களை கண்டுபிடிப்பவன் போல இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து வாயை திறக்காமல் இருக்க,

Advertisement

 

Advertisement

 தர்ஷினியோ பல்லை கடித்து இவனுக்கும் லவ்வுக்கும் ரொம்ப தூரம் போல, நம்ம மம்மி சின்ன வயசா இருந்தப்போதான் அந்த சினிமால பார்க்காம காதல், தொடாம காதல்,லெட்டர்ல காதல், டெலிபோன்ல காதல்ன்னு நிறைய படம் வருவாமே அப்ப பிறக்க வேண்டியவன் இப்போ பிறந்திருக்கான் … யேய் மேன் வாயத்திறந்து ஏதாச்சும் சொல்லுயா.. மனதிற்குள் அவனை திட்டியவள் ம்கூம் இதெல்லாம வேலைக்கு ஆகாது.. அவள் திரும்பி ரூமுக்கு நடக்க,

 

ஐயோ நாமதான் ஒன்னுமே பேசலையே.. அப்புறமும் ஏன் லட்டு கோபமா போற மாதிரி இருக்கு.. வேகமாக அவளை மறித்தவன்..

Advertisement

என்னாச்சு பேபி..!!”

 

அவன் வாயை தன் கையால் மூடியவள் பேபி அப்படி மட்டும் என்ன சொல்லாத மேன்.?. என்ன பார்த்தா பேபி மாதிரியா இருக்கு..!!” தன்னை சுற்றி காட்ட..

 

அவன் நெஞ்சோ படபடவென அடித்தது.. டேய் சுந்தரு அவனை இறுக்கி அணைச்சு ஒரு உம்மா கொடுத்திருடா..!!’

 

தன் கணவனையே பார்த்தவள் அவன் அருகில் நெருங்கி அவன் தோளில் கைப்போட்டு என்னாச்சு மேன்.. இந்த டிரஸ் நல்லாயில்லையா..??”

 

 

[the_ad id=”6605″]

 

ஐய்யய்யோ.. சூப்பர்.. இல்ல… ஆமா.. ச்சோ… இப்படியெல்லாம் மாமன மயக்காதடி.. என்னால என்னை கண்ட்ரோல் பண்ண முடியல..!!” அவள் இடுப்பில் கைகொடுத்து தன்னை நோக்கி இழுத்து தன் உயரத்திற்கு தூக்கி அந்த டாட்டூவில் தன் முத்தத்தை பதித்திருந்தான்..

 

ஏதோ ஒரு கிராமத்தில் பத்தாவது பனிரெண்டாவது படித்து தன் குடும்பத்தை அனுசரித்து செல்லும் ஒருத்தி தனக்கு மனைவியாய் வருவாள் என நினைத்திருக்க இப்படி ஒருத்தி தன் மனைவியா.. இந்த வெள்ள பிகர் ,ரிச்சு கேர்ள் நமக்கே நமக்கா..!! அதுவும் இவளும் நம்ம விரும்புறாளா.. அவனாலே அவன் அதிர்ஷ்டத்தை நம்ப முடியவில்லை..

 

தன் முத்தத்தை ரசித்து கைகளுக்குள் குழைந்து போய் நிற்கும் மனைவியை எப்படி கையாளுவது என்பது கூட இந்தநேரம் அவனுக்கு தெரியவில்லை.. அவளை ஏதேதோ செய்ய நினைத்து கைகள் பரபரக்க ரெண்டுபேருக்கும் பத்து வயசு வித்தியாசம் நாம என்னமும் முரட்டுதனமா நடந்துக்குவோமோ என பயந்து தன்னை கட்டுப் படுத்தினாலும் கைகள் என்னவோ அவளை வருடியபடிதான் இருந்தது.. சற்று நேரத்திலேயே அவன் கைகள் செய்த வேலையை அவன் உதடுகள் எடுத்துக் கொள்ள தர்ஷினியின் நெஞ்சுக்குள்ளோ ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறந்தன.. கூச்சத்தில் தன் மேல் உரசியபடி இருக்கும் அவன் உதட்டில் கைவைத்து தடுத்தவளை..

 

கெஞ்சுவது போல பார்த்தவன் லட்டுமா மாமா உனக்கு கஷ்டமில்லாம பார்த்துக்கிறேன்டி.. ப்ளிஸ் ப்ளிஸ் .. எப்போதும் போல இப்போதும் தன் சுகத்தைவிட மனைவியிடம் கெஞ்சி நிற்பவனை பார்க்கையில் ..

 

மாமஸ் ஐ லவ் யூ.. நீ என்னோட வாழ்க்கையில வந்தது காட்ஸ் கிப்ட்.. கைகளுக்கு விடுதலை அளித்து தன்னை அவனிடம் ஒப்புக் கொடுத்தாள்..

 

                          வெறெதுவும் தேவை இல்லை

                               நீ மட்டும் போதும்

                          கண்ணில் வைத்து காத்திருப்பேன்

                                என்னவானாலும்

 

                           உன்னெதிரில் நான் இருக்கும்

                                ஒவ்வொரு நாளும்

                           உச்சி முதல் பாதம் வரை

                                 வீசுது வாசம்……”

 

 

அவளை தன் கைகளில் ஏந்தியபடி கட்டிலை நோக்கி இன்ச் பை இன்சாக நகர்ந்து கட்டிலில் படரவிட்டவனின் பார்வை அவளை மொய்த்துக் கொண்டிருந்தது.. லிப்ஸ்டிக் போட்டு பளபளவென மின்னும் இதழில் மெதுவாக தன் இதழ் வைத்து தேனெடுத்தவன்..

 

பேபி உண்மையிலே என்னை பிடிச்சிருக்கா..??”

 

அவன் கன்னத்தை நறுக்கென கடித்து இன்னும் உனக்கு சந்தேகம் தீரலையா மேன்..??”

 

இந்த மயக்கம் என் ஆயுசுக்கும் தீரவே தீராதுடி..?”

 

ம்ம்ம் அப்படியா சொல்ற.. எங்க என்னைத் தூக்கு.. அவளை இடுப்பில் கைகொடுத்து தூக்க போக.. நோ நோ பின்னால திரும்பு.. அவன் முதுகில் உப்பு மூட்டை ஏறியவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டு அங்க ஹாலுக்கு தூக்கிட்டு போ மேன்.. தன் முதுகில் அழுந்திய மென்மைகளில் மயங்கியவன் அதை உணர்ந்தபடியே ஹாலுக்கு செல்ல அங்கு அவர்கள் பேம்லி போட்டோ முன் இறக்கி விடச் சொன்னவள்..

 

அவனை இறுக அணைத்தவாறு மம்மி, டாடி.. உங்க எல்லாருக்கும் மாமாவ பிடிச்சிருக்கா.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. பேசிக் கொண்டிருக்கும் போதே கண்ணீர் வழிய.. இவங்களோட இருந்தா உங்க எல்லாரோட இருக்கிற மாதிரி இருக்கு டாடி.. டேய் தர்ஷூ மாமாவ பிடிச்சிருக்காடா.. நீ இங்க இருந்திருந்தா இவங்கள விடவே மாட்ட.. அவங்களும் உன்னை அவ்ளோ கேர் எடுத்து பார்த்துக்குவாங்க.. கிரான்மா, கிரான்பா உங்களுக்கும் இவங்கள ரொம்ப பிடிக்கும் என்னை எப்படியெல்லாம் இருக்கனும்னு சொல்விங்களோ அதே மாதிரி.. நோ நோ அதவிட சூப்பரா இருக்காங்க.. அந்த கிரான்மாக்கு இவங்கன்னா ரொம்ப பிடிக்கும் தெரியுமா… அவங்க பேம்லி, சிஸ்டர்ஸ்.. எல்லார் மேலயும் அவ்ளோ லவ்.. கேர்  தெரியுமா..

 

ஆனா எல்லார்க்கும் லவ் கொடுத்தாலும் எனக்கு மட்டும்தானே ஹஸ்பண்ட்.. அப்ப என்  மேலதான இவங்க லவ் அதிகமாயிருக்கும்.. ஆனா இவங்களுக்குத்தான் டவுட்.. ரெண்டு பேருக்கும் மேட்ச் இல்லையோன்னு.. இப்ப நீங்க எல்லாரும் சொல்லுங்க இவங்க எனக்கு மேட்ச் தான..அவன் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டவள் நீங்க பார்த்திருந்தா இந்த மாதிரி ஒருத்தரதான எனக்கு ஹஸ்பண்டா செலக்ட் பண்ணியிருப்பிங்க.. எனக்கு மாம்ஸ ரொம்ப பிடிச்சிருக்கு.. அவங்கள நிறைய லவ் பண்றேன்.. நான் அவங்க மேல உயிரே வைச்சிருக்கேன்.. எனக்கு நம்ம பேம்லி மாதிரி மாமாவையும் பிடிச்சிருக்கு.. உங்க எல்லார்க்கும் பிடிச்சிருக்கு தானே..இவங்களையும் நம்மளோட சேர்த்துக்கலாமா.. ப்ளிஸ் ப்ளிஸ்..

 

என்னவோ அவர்கள் நேரே இருப்பது போல இவள் பேசிக் கொண்டிருக்க அவளையே காதலோடு பார்த்துக் கொண்டிருந்தான்.. ஒன்மினிட்.. இதோ வர்றேன் மாம்ஸ்..” வேகமாக அறைக்கு ஓடியவள் வரும்போது நகை டப்பாவை கொண்டு வர,

 

டாடி இங்க பாருங்க மாமா எனக்கு செயின் வாங்கி கொடுத்திருக்காங்க.. நீங்க எனக்கு கொடுத்த செயின் நெக்லஸவிட இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அதை திறந்து அவர்கள் படத்தின் முன் வைத்தாள்.. இதுதான் மம்மி, கிரான்மா என்னோட தாலிச் செயின் ரொம்ப சூப்பரா இருக்குல்ல..!!” அவள் பாட்டுக்கு பேசிக் கொண்டே இருக்க சுந்தரோ வாயடைத்துப் போயிருந்தான்..

 

இத்தனை நாட்களில் தன் மனைவி இப்படி பேசுவதை இப்போதுதான் பார்க்கிறான்.. அவளின் மனதில் உள்ளவற்றை  அவள் சொல்லிக் கொண்டிருக்க அவன் கட்டிய மஞ்சள் தாலி மட்டும் அணிந்து இரு கயிறு மட்டும் தோளை இணைத்திருக்க அந்த கறுப்பு நிற உடை அவளை பேரழகியாய் காட்டியது.. கண்கள் மின்ன அவர்களிடம் அவள் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க அசையும் இதழையே பார்த்திருந்தான்..

 

ஏனோ அவள் அதிக மகிழ்ச்சியாய் இருந்தாள்.. வாய் பேசிக் கொண்டிருந்தாலும் அவனின் பிடித்த கையை விடவே இல்லை.. ஓரிடத்தில் நிற்காமல் அசைந்து கொண்டே.. அவர்களிடம் பேசியபடி அவ்வப்போது எட்டி அவன் கன்னத்தில் முத்தமிட்டுக் கொண்டு அவனை இடுப்போடு சேர்த்து அணைத்து , கைகளை சொடுக்கெடுத்து, அதை தன் கன்னத்தில் வைத்தபடி என அவர்களோடு இருக்கும்போது இவள் இப்படித்தான் இருந்திருப்பாளோ.. எவ்வளவு நேரம் அப்படி மனைவியை ரசித்தபடி நின்றிருப்பானோ..

 

[the_ad id=”6605″]

 

டேய் தர்ஷூ மாம்ஸ் எனக்கு லவ் பேர்ஸ் எல்லாம் வாங்கி கொடுத்திருக்காங்கடா.. மாம்ஸ் அது எனக்காகத்தானே வாங்கினிங்க..??” அவன் கையை உலுப்ப..

 

என்ன..??”

 

சொல்லுங்க..

 

என்ன..??”

 

அடப்போங்க மாம்ஸ் இப்படித்தான் அப்பப்போ ப்ரீஸ் ஆகிருறிங்க.. எனக்கு கால் வலிக்கிது தூக்குங்க.. தன் கைகளை அவனை நோக்கி நீட்ட, விருப்பமாகவே அவளை தூக்கிக் கொண்டான்.. அறைக்கு திரும்ப ஒன் நிமிட் அந்த பாக்ஸ் எடுத்துக்குறேன்.. கையை அங்கு கொண்டு செல்ல போட்டோவில் அவர்கள் போட்டிருந்த மாலையில் இருந்து ஒரு ரோஜாப்பூ அந்த நகை டப்பாவில் விழுந்தது..

 

இருவரும் அந்த போட்டோவை பார்க்க அதில் உள்ளவர்கள் இவர்களை பார்த்து புன்னகைப்பது போல தெரிந்தது.. மாம்ஸ் அவனை ஆச்சர்யமாக பார்க்க,

 

அவங்களுக்கும் அவங்க பொண்ண போல என்னை ரொம்ப பிடிச்சிருக்காம் லட்டு..!!” துள்ளலுடன் அவளை அணைத்து இறுக்கியவன் மறுவார்த்தை பேச விடாமல்… போதும்டி ரொம்ப பேசி டயர்டாயிராத..”  இதழை சிறைசெய்தபடி அறைக்கு தூக்கிச் சென்றான்..

 

 கட்டிலில் அவள் மேல் படர்ந்தபடி அவள் முகமெங்கும் முத்தமிட்டு இதுவரை இருந்த தயக்கமெல்லாம் மறைய தன் காதலை மென்மையாக உணர்த்த துவங்கினான்.. தனக்குமே இது புது உலகம் தனக்கு தெரிந்ததை வைத்து ஆரம்பிக்க அதுவே அடுத்த கட்டத்திற்கு அவர்களை கொண்டு சென்றது.. அவன் கைகள் அனுமதியின்றியே அவள் உடலில் தன் தேடலை துவங்க தர்ஷினிக்கு கூச்சமாக இருந்தாலும் அவனுக்கு மறுப்பு சொல்லவில்லை.. பேபி, லட்டு ,செல்லம் என ஏதேதோ அவள் காதிற்குள் கிசுகிசுத்தவன் அவன் கொஞ்சல், கெஞ்சல் ,காதல் , மோகம் என அனைத்தையும் தன் மனைவிக்கு காட்டத் துவங்கியிருந்தான்..

 

இதுவரை குடும்பம், பொறுப்பு , தங்கைகளின் திருமணம் எனும் ஏதோ ஒரு கட்டுக்குள் இருந்தவன் இப்போதுதான் தனக்கான வாழ்க்கையை மகிழ்ச்சியோடு வாழத் துவங்கினான்.. அதிலும் அவனுக்கு பிடித்த தன் மனைவியோடு.. மனைவி அமைவதெல்லாம் வரம்.. அதிலும் விரும்பிய மனைவி.. தன் இளமைக்கு அவளிடம் பதிலை தேடத்துவங்கியிருந்தான்..

 

இத்தனை வருடம் கட்டுப்பாடாய் இருந்த அவன் மனம் இன்றோ அவன் பேச்சை கேட்காமல் இஷ்டம் போல தன் இஷ்டமான மனைவியோடு ஆடியது.. அவளை ஒரு நிமிடம் கூட பிரிய மறுத்து தன் கைகளுக்குள்ளேயே வைத்துக் கொள்ள கட்டளையிட்டது.. அவளை மென்மையாக கையாண்டவன் இப்போதுதான் உடல்நிலை தேறிவருவதால் எங்கும் எப்போதும் அவளை கஷ்டப்படுத்தவில்லை.. இருந்தாலும் இறுதியில் கண்ணீர் வழிய படுத்திருந்தவளை பார்த்து பதறி எழ அவனை எழவிடாமல் தடுத்தவள் அவனை மஞ்சமாக்கி அவன் மேல் தலைவைத்திருந்தாள்..

 

அவள் தலையை வருடி ஸாரி பேபி..

 

ப்பச் போ மேன்.. விருப்பத்துடனேயே அவனை அணைத்துக் கொள்ள.. சுந்தருக்குள் அப்படி ஒரு பரவசம்.. ஏதோ தான் அந்தரத்தில் படுத்திருப்பது போலிருக்க மனைவியை இறுக அணைத்தவன் தன் முகத்தை அந்த டாட்டூவில் புதைத்திருந்தான்..

 

அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவன் கன்னத்தில நறுக்கென ஒரு கடி வைத்து ஏய் பிராடு.. எனக்கு கொடுத்த கிஸ்ஸவிட அந்த டாட்டூவுக்கு கொடுத்த கிஸ்தான் மேன் அதிகம்..

 

அச்சோ பேபிமா நோ கோபம்..  அந்த இடம் எனக்கே எனக்கானது.. இப்ப என்ன மத்த இடத்தில கிஸ் கம்மியா இருக்கா… இதோ கொடுக்கிறேன்..” அவளை முத்தமிட போனவனை கிச்சுகிச்சு மூட்ட மீண்டும் இருவருக்குள்ளும் ஒரு காதல் யுத்தம் துவங்கியது..

 

மறுநாள் காலை எழும்போது மணி ஒன்பதிருக்கும்.. படுக்கையில் மனைவியை பார்க்க அவள் இல்லை… இப்போதுதான் பசி தெரிந்தது.. அவனுக்கே ஆச்சர்யம் எப்பொழுதும் ஐந்து மணிக்கே விழித்துவிடுவான்.. ப்ரஷாகி வந்தவன் மனைவியை தேட அவளோ ஊஞ்சலில் அமர்ந்து கம்பியில் தலைசாய்த்து  அவர்கள் குடும்ப போட்டோவை பார்த்தபடி இருந்தாள்.. தலைக்கு குளித்ததால் தலையை விரித்து விட்டு ஏதோ பத்தாம் வகுப்பு மாணவியை போல நல்ல மாம்பழ நிற மஞ்சளில் அரக்கு நிற பார்டர் வைத்த பட்டு பாவாடை சட்டை அணிந்திருந்தாள்..

 

ஹாய் பட்டு குட்மார்னிங்டா..

 

ம்ம் வாங்க மாம்ஸ்.. நீங்க இன்னைக்கு லேட் ..பாருங்க நான் முதல்லயே எழுந்து குளிச்சிட்டேன்..

 

அவளருகில் அமர்ந்து அவளை தன் மடியில் வைத்து அவள் வாசம் பிடித்தவன் இதெல்லாம் போங்காட்டம் பேபி.. தூக்கம் முழிச்சா மாமன எழுப்பியிருக்கனும்.. நான் ஏதாவது வேலை கொடுத்திருப்பேன்.. இப்படி என்னை விட்டு குளிக்கிறதெல்லாம் ரொம்ப பேட் ஹாபிட் சொல்லிட்டேன்.. அவளை பார்த்து கண்ணடிக்க..

 

ச்சோ… போங்க… அவளுக்கு வெட்கத்தில் முகம் ரத்தநிறம் கொண்டது..

 

இந்த டிரஸ் எப்போ பேபி எடுத்தது.. செமயா இருக்கே..?”

 

நல்லாயிருக்குள்ள.. நான் டென்த் படிச்சப்போ எடுத்தது ..”

 

ஓகே நீ போய் வேற டிரஸ் மாத்திட்டு வா நாம ஹோட்டலுக்கு போவோம்..மாமனுக்கு பசிக்கிது..

 

வொய் மேன் இப்போதான் இந்த டிரஸ் நல்லாயிருக்குன்னு சொன்ன இப்போ வேற டிரஸ் மாத்த சொல்ற..?”

 

ஏய் போடி நாம ரெண்டு பேரும் ஒன்னா போனா நான் என்னமோ ஸ்கூல் பிள்ளைக்கு தாலி கட்டிட்டேன்னு என்னைப்பிடிச்சு ஜெயில்ல போட்டுருவாங்க.. இதுல நீ ரொம்ப குட்டிப் பொண்ணா தெரியிறடா.. இதெல்லாம் நாம தனியா இருக்கும் போது மாமனுக்கு மட்டும் போட்டுக்காட்டு.. இப்ப சுடிதார மாத்திட்டு வா ரொம்ப பசிக்கிது… அப்புறம் நான் உன்னை கடிச்சு சாப்பிட்டுருவேன்.. அவளை கடிக்க வர துள்ளி இறங்கியவள் வேகமாக உடை மாற்ற அறைக்கு ஓடினாள்..

 

இவன் மறுபடி வீட்டை சுற்றி பார்க்க ஆரம்பித்தான்.. ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து அலங்கரிக்கப் பட்டிருந்தது.. அனாவசியமான பொருட்கள் எதுவுமே இல்லை.. இன்று மதிப்பிட்டால்கூட இந்த வீடும் சுற்றியுள்ள இடமும் ஐந்தாறு கோடிக்கு மேல் போகும்.. அவள் சுடிதார் மாற்றி வர..

 

லட்டுமா நாம வெளியில எங்கயும் போகாம இங்கேயே ஒருவாரம் தங்கிட்டு போகலாமா இல்ல வெளியில சுத்திப்பார்க்கனுமா..??”

 

அவனை கட்டி அணைத்தவள் இங்கயே இருப்போம் மாம்ஸ்… எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு.. நானே இத கேட்கலாம்னு நினைச்சேன்.. நீ ரொம்ப ரொம்ப ஸ்வீட்.. நான் நினைச்சத சொல்லிட்ட..?” அவனுக்கு இதழ் முத்தம் தர அவளை இடுப்பில் கைகொடுத்து தூக்கியவன் முத்தத்தை அனுபவித்தபடியே காரை நோக்கிச் சென்றான்..

 

இருவரும் சாப்பிட்டு ஒரு ஷாப்பிங் மாலுக்கு காரை விட்டவன் ஒரு வாரத்திற்கு தேவையான மளிகை சாமான்கள், காய்கறிகளை வாங்க ஆரம்பித்தான்..

 

ஒரு கையில் ஐஸ்கிரீமும் மறுகையால் கணவனின் கையை பிடித்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள் இங்க எதுக்கு மாம்ஸ்..?”

 

ம்ம் வீட்லதான் எல்லாப் பொருளும் இருக்கே நாமளே சமைச்சுக்குவோம்..?” அவளுக்கு பிடித்ததையும் எடுக்க சொல்ல அவளுக்கு பிடித்த ஸ்நாக்ஸை பார்வையிடத் துவங்கினாள்..

 

 

[the_ad id=”6605″]

 

இந்த ஒரு வாரமும் இருவரும் காதல்கிளிகளாக கொஞ்சி கூடி மகிழ்ந்திருந்தனர்.. ஒருவரை விட்டு ஒருவர் பிரிவதே இல்லை அவன் சமைக்கும் பொழுதுகளில் இவள்தான் அசிஸ்டென்ட் போல அவனுக்கு ஹெல்ப் என்ற பெயரில் முடிந்த அளவு சேட்டைகள், உபத்திரங்கள் செய்து கொண்டிருக்க அவளின் குறும்புகளை ரசிப்பவன் சேட்டைகள் அதிகமாகும் போது வேலையை அப்படியே விட்டுவிட்டு அவளோடு அறைக்குச் சென்று விட்ட வேலையை அங்கு தொடர்ந்திருப்பான்..

 

வேலைக்கு ஆட்கள் வைத்து தோட்டத்தை சுத்தப்படுத்தி காய்ந்த செடிகளை- வெட்டிவிட்டு மற்ற செடிகளுக்கு தண்ணீர் விட சில பூச்செடிகள துளிர்க்க ஆரம்பித்திருந்தது.. இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து தர்ஷினிக்குதான் கால் தரையிலேயே பாவவில்லை..

 

ஒரே ஓட்டம்தான் , ஆட்டம்தான், அவனோடு வம்பிழுப்பது, கொஞ்சுவது , செல்ல சண்டைகள் போடுவது என பழைய தர்ஷினி மீண்டிருந்தாள்.. ஏதாவது பாடலை போட்டுவிட்டு டான்ஸ் ஆடிக் கொண்டிருப்பாள்.. இப்படி துறுதுறுவென இருக்கும் மனைவியை அவனுக்கு ரொம்பவே பிடித்தது.. தான் தந்தையிடம் வேலையை ஒப்படைத்துவிட்டு எந்த பொறுப்பும் இல்லாமல் இப்படி இருப்பது மனதை சற்று வறுத்தினாலும் இத்தனை நாள் எதுவுமே வெளியில் காட்டாமல் , சிறு முகச்சுழிப்பு இல்லாமல் தன்னோடு இருந்த மனைவியை நினைத்துப் பார்த்தவனுக்கு இந்த மகிழ்ச்சி நிறைவையே தந்தது..

 

நாளை ஊருக்கு போகலாம் என முடிவெடுத்தவர்கள் அன்று தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று, சுற்றி பார்க்க தர்ஷினி தந்தையின் பார்ட்னர் போன் செய்திருந்தார்.. தான் நாளை அங்கு வரப்போவதாக சொன்னவர் சுந்தரையும் தர்ஷினியையும் தன்னை வந்து பார்க்கும் படி சொல்லி ஏதோ முக்கியமாக பேச வேண்டும் என்று சொல்லியிருந்தார்,..

 

மாம்ஸ் நாளைக்கு நாம அங்கிளை பார்த்துட்டு ஊருக்கு போவமா..?”

 

ம்ம் சரிடா பட்டு..

 

அவன் கைகளோடு தன் கைகளை கோர்த்தவள் நாம எப்ப நேரம் கிடைக்குதோ அப்பல்லாம் இந்த வீட்டுக்கு வருவமா..?”

 

கண்டிப்பா பேபி … அதை அவன் முதலிலேயே முடிவு செய்திருந்தான்..

 

இன்று முழுவதும் வெளியில் நன்றாக சுற்றிவிட்டு இரவு வரும் போதே வெளியில் சாப்பிட்டுவிட்டு வந்தவர்கள் தர்ஷினி குளிக்கச் செல்ல சுந்தர் தன் தந்தைக்கு போன் செய்து இங்கு தங்கி தோட்டத்தையும் வீட்டையும் பார்த்துக் கொள்ள யாராவது ஆள் இருந்தால் அனுப்பி வைக்கும்படி சொன்னவன் தோட்டத்தை ஒட்டி ஒரு சிறு வீடு ஒன்றிருக்க அவர்களை அங்கேயே தங்கி கொள்ள சொல்லலாம்.. சிறு குடும்பமாக இருந்தால் பரவாயில்லை என நினைத்து தர்ஷினியிடம் கேட்க அவளோ இன்று முழுவதும் அலைந்ததால் வந்த அசதியில் அவன் மடியில் படுத்தபடி..

 

இதெல்லாம் என்கிட்ட கேட்காத மாம்ஸ்.. நீயே பார்த்துக்கோ எனக்கு தூக்கம் வருது..

 

[the_ad id=”6605″]

 

 அவள் கன்னத்தில் முத்தமிட்டவன்.. எனக்கு தூக்கம் வரலையே ஜாமூன்.. உனக்கு மட்டும் எப்படி தூக்கம் வரலாம்..”

 

                 ஏ..ஏ..வாடி வாடி வாடி cute

                        பொண்டாட்டி..

                 நான் தாங்க மாட்டேன் தூங்க

                        மாட்டேன் நீ இல்லாட்டி…

                 அடி.. அடி.. வாடி வாடி என் hot

                         பொண்டாட்டி

                 நான் தாங்க மாட்டேன் தூங்க

                       மாட்டேன் நீ இல்லாட்டி..

 

ஆஹா நீயா மாம்ஸ் இது.. தேறிட்ட போ… செம செம.. அவனை கேலி செய்ய..

 

என்னையவே கேலி செய்ற அளவுக்கு வந்திட்டியா.. உன்னை.!!”அவள் போட்டிருந்த அந்த சிறு மிடியின் மேல் சட்டை விலகி அவள் இடுப்பு பளிச்சென தெரிய அதில் முகம் புதைத்தவன் தன் வேலையை காட்டத் துவங்க அவள் சிணுங்கினாலும் விடவில்லை..  பாதி இரவுக்கு மேல் கண்ணயர்ந்திருந்தவர்கள் அதிகாலையில் போனடிக்க சுந்தருக்கு கண்ணை திறக்க முடியவில்லை..

 

ப்பச் மாம்ஸ் போன அந்த பக்கம் தூக்கிப் போடு.. நைட்டும தூங்க விடல.. எனக்கு தூக்கம் தூக்கமா வருது..”  சத்தம் அவளுக்கு இடையூராக இருக்க அதை வேகமாக ஆன் செய்து காதில் வைத்தவன் அந்த பக்கம் கேட்ட செய்தியில் அதிர்ச்சியாகி பதறி சட்டென எழுந்திருந்தான்..

 

                                                          இனி…………?????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!