Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Varam Vaangi Vanthaval

Varam Vaangi Vanthaval Naan 22 2

 

நமக்கிருக்கிற டென்ஷன்ல நான் அவள பார்க்கலையா.. ஆனா அவ பண்ணினதும் தப்புதானே.. எது உன் தங்கச்சி புருசன காப்பாத்த ஹாஸ்பிட்டலுக்கு பணம் கொடுத்ததா..!! போடா எருமை நேத்து பிறந்தவ முதக்கொண்டு உனக்கு அட்வைஸ் பண்றா.. அந்த அளவுக்கு இருக்கு நீ உன் பொண்டாட்டிய பார்த்துக்கற லெட்சனம்..

 

வேகவேகமாக அவளுக்கு நூடுல்ஸ் கிண்டியவன் பாலை காய்ச்சி அவர்கள் அறைக்கு கொண்டுச் செல்ல பார்த்திருந்த தங்கைகள் இருவருக்கும் சிரிப்பு தாங்கவில்லை..



Advertisement

 

ஏய் என்னட்டி சிரிக்கிறிங்க.. என் பொண்டாட்டிக்கு நான் கொண்டு போறேன்..

 

Advertisement

சுந்தரி பார்த்துண்ணே ஓவரா பில்டப் பண்ணாத எத்தனை தோப்புக்கரணம் போடப்போறியோ..??”

Advertisement

 

இருடி விடியட்டும் ஆத்தா வந்தா நல்லா நாலு குடுகுடுக்கச் சொல்றேன்..??”

 

Advertisement

ஆத்தி நான் இந்த ஆட்டைக்கு வரலப்பா..??” புத்தகத்தை பிரித்தவள் படிக்க அமர்ந்தாள்..

 

இவன் அறைக்குள் நுழைய தர்ஷினி தூங்கிக் கொண்டிருந்தாள்..

 

மணி ஒன்பதுதான் ஆகுது.. அதுக்குள்ள செல்லக்குட்டிக்கு தூக்கமா. தட்டை டேபிளில் வைத்தவன் அவள் அருகில் அவளை ஒட்டியபடி படுத்தான்..

 

அவள் நகர்ந்து படுக்க.. பச்சமொளகா முழிச்சுத்தான் இருக்கா.. அவன் இன்னும் நெருங்க அவள் நகர்ந்து கட்டிலின் விளிம்பிற்கே சென்றுவிட்டாள்.. அவள் இடுப்பில் கைகொடுத்து தன் மேல் போட்டுக் கொண்டவனோ ஏய் இன்னும் கொஞ்சம் போனா நீ கீழ விழவேண்டியதுதான்..!!” அவள் முகத்தை தன் முகத்தை வைத்து உரச அவன் சொரசொரப்பான கன்னம் அவள் வழுவழு கன்னத்தை ஏதோ செய்தாலும் முகத்தை திருப்பிக் கொண்டாள்..

 

ஏய் பேபி உன் கோபத்தை அப்புறமா பார்க்கிறேன் இப்போ சாப்பிடு..??” அவன் ஊட்டப்போக சிறுபிள்ளை போல முகத்தை திருப்பி கொண்டாள்..

 

ஏய் பச்சை மொளகா என்ன.. ஒழுங்கா சாப்பிடுடி..??” அவள் கன்னத்தை அசையாமல் பிடித்தவன் அவள் வாய் நிறைய திணிக்க..

 

அவன் கையில் ஒரு அடி போட்டவளோ டேய் பொறுக்கி என்ன ஸ்ரீவித்யாக்கு விசம் கொடுத்த மாதிரி இப்படி கேப் இல்லாம திணிக்கிற நான் முச்சடைச்சு செத்துப் போயிருவேன்டா பாவி..!!”

 

ஹாஹாஹாஹா ஏய் ரௌடி பேபி என்ன புருசன வாடா போடால்லாம் சொல்ற.. இந்த சுந்தரியோட ரொம்ப சேராத அவ உனக்கு ரொம்ப வாய் பேச கத்துக் கொடுத்திருவா ..?”

 

பரவால்ல நான் உன்கூட சண்டை அவளோட மட்டும் சேர்ந்துக்குறேன்..

 

சண்டையா… நோ… மீ பாவம் லட்டுமா..??” நூடில்சின் சில பகுதிகள் அவள் உதட்டில் ஒட்டியிருக்க அதை தன் உதட்டால் சுத்தப்படுத்தும் வேலையை பார்க்க, அவன் மார்பில் கைவைத்து தள்ளியவளின் கைகளை தன் தோளில் மாலையாக கோர்த்தவன் அவளை இன்னும் நெருங்கி இப்போது அவள் வாய்க்குள் இருந்த நூடில்ஸை தன் வாய்க்குள்  வாங்கும் வேலையில் இறங்கியிருந்தான்..

 

அச்சோ என்ன பண்றிங்க விடுங்க மாமா.. சிணுங்கியவளை இன்னும் இன்னும் நெருங்கி அவளின் இத்தனை நாள் வருத்தத்தை போக்கும் வேலையில் இறங்கியிருந்தான்.. அவனின் ஒவ்வொரு செயலிலும் அவள் மேல் காதலை காட்டினான்.. சில சமயம் மென்மையாக சில சமயம் வன்மையாக அவளை எவ்வளவு பிடிக்கும் என காட்டிக் கொண்டிருக்க.. ஒரு நிலைக்கு மேல் அவன் காதலை, மோகத்தை, தாபத்தை, காமத்தை அவளால் தாங்கமுடியவில்லை என்றே சொல்லலாம்.. அவன் முகத்தை தன்னைவிட்டு விலக்கியவள் .. அவன் முகமெங்கும் முத்தமிட்டு ஐ லவ் யூ மாமா..

 

[the_ad id=”6605″]

 

அவளின் கன்னத்தில் தன் மீசையால் குறுகுறுக்க செய்தவன் நீதான் லட்டுமா மாமாவோட உயிரு .. அன்னைக்கு நான் பேசினது உன்னை ரொம்ப பாதிச்சிருச்சா.. எல்லாரும் இருக்கும்போது உன்னை மட்டும் காணாம நான் ஒரு நிமிசம் செத்துட்டேன்டி.. அதான் நான் அப்ப கோபத்தில என்ன பேசினேன்னு எனக்கு நியாபகமே இல்லை.. எனக்கு உன்னை அவ்ளோ பிடிக்கும்டா.. அன்னைக்கு ரொம்ப திட்டிட்டேன்னா உன்னை வருத்தப்படுத்தியிருந்தா ஸாரி பேபி.. அவனை பேசவிடாமல் தன் இதழால் அவன் பேச்சை தடை செய்ய, இன்னும் சிலவிசயங்களை எடுத்துச் சொல்லலாம் என நினைத்திருந்த மனம் இப்போது மனைவியின் மென்மையில் மயங்கி மீண்டும் மீண்டும் தன் கைக்கும் இதழுக்கும் வேலை கொடுக்க ஆரம்பித்திருந்தது.. இருவரும் எப்போது உறங்கினார்கள் என்றே அவர்களுக்கு தெரியவில்லை.. சுகமான அயர்வில் நன்கு களைத்து போயிருந்தவளின் நெற்றியில் முத்தமிட்டு, களைந்திருந்த தலையை சரிசெய்தவன் அவளை தன் மேல் போட்டு பேபி நான் ஒன்னு கேட்கவா..??”

 

எனக்கு செம டயர்ட் மாமா.. ப்ளிஸ் நாளைக்கு பேசலாம்..

 

ம்கூம் இதுக்கு இப்ப நீ பதில் சொல்லாட்டா எனக்கு தூக்கமே வராது.. உனக்கு இந்த கருப்பன் பொறுத்தமில்லையா.. ஜெயம்ரவி மாதிரி சாக்லேட் பாயா சிகப்பா இருக்கிறவன்தான பிடிக்கும்..!!”

 

தங்கை சொன்னது இவன் வாயில் வந்திருக்க.. ச்சு மறுபடி ஆரம்பிச்சிட்டான்டா.. எனக்கு இந்த கருப்பனத்தான் பிடிச்சிருக்கு.. அவனோட அழகு, குணம், என்னை கேர் பண்றது என் மேல வைச்சிருக்க லவ்.. என்னை திட்டிட்டு அதுக்காக இப்படி ஸாரி கேட்கிறியே இந்த மொமென்ட், எத்தனை பேர் வந்தாலும் நீதான் எனக்கு பொருத்தம் ஓகேவா.. இப்ப தூங்கு..” அவன் ஏதோ கேட்கவர மீண்டும் அவன் இதழை தன் கையால் மூடியவள் அவன் கன்னத்தை நறுக்கென கடித்து மூச்… அவன் மேலேயே தூங்க ஆரம்பித்திருந்தாள்..

 

அடுத்த நாளே வள்ளி கணவரை டிஸ்சார்ஜ் செய்திருக்க இன்னும் இரண்டு மூன்று நாட்களில் புதுவீட்டிற்கு நிலை வைப்பதால் அது முடிந்து வீட்டுக்கு போகலாம் என இங்கேயே அழைத்து வந்திருந்தார்கள்,, அதோடு சௌந்தரத்தின் கணவரும் தன் மகனோடு இரண்டு மூன்று நாட்கள் தங்க ஆசைப்பட்டு வந்திருக்க எல்லாரும் இருக்கும் போது நாயகியையும் இங்கேயே விட்டு செல்லுமாறு சுந்தர் தன் மச்சானிடம் கேட்டிருந்தான்.. அவளும் வந்திருக்க வீடே களைகட்டியது.. ஒரே கும்மாளமும் சிரிப்புமாக இருந்தது..

 

சுந்தர் எப்போதும் தன் மனைவி மேல் இரு கண்களை வைத்திருந்தான்.. வீட்டில்  நாளை நிலைவைப்பதால் அதற்கு மாலையும் இன்னும் சிலபல பூஜை சாமான்கள் வாங்க வெளியில் கிளம்பினான்., தன்மனைவியை கவனிக்க அவளோ தன் தங்களோடு அரட்டை அடித்தபடி இருக்க வள்ளி கணவரும் சௌந்தரத்தின் கணவரும் வெளியில் கிளம்பினர்..

 

என்ன மாப்பிள்ள கடைக்கு கிளம்பிட்டியா..??”

 

ஆமா மச்சான் கொஞ்சம் பூஜை சாமான் வாங்க போறேன்.. நீங்க எங்க கிளம்பிட்டிங்க..?”

 

இப்படி உட்கார்ந்திருந்தே ஒரு மாதிரி இருக்குயா.. அதான் வண்டியில ஒரு ரவுண்ட்..

 

 

[the_ad id=”6605″]

 

சரி மச்சான்.. ரொம்ப கைகால்க்கு அழுத்தம் கொடுக்காதிக.. வரவா..?” அவன் கிளம்ப சற்றுநேரத்திலேயே ,

 

சுந்தரி நாம ரெண்டுபேரும் மெடிக்கல் வரைக்கும் போய்ட்டு வருவோமா..?”

 

எதுக்கு அத்தாச்சி அண்ணே வெளியிலதான் போயிருக்கு என்ன வேணும்னு போன்ல சொல்லுங்க அது வாங்கிட்டு வந்திரும்.. உங்கள தனியா எங்கயும் போககூடாதுன்னு கண்டிப்பா சொல்லியிருக்குதானே..??”

 

அதுக்குத்தான் சுந்தரி உன்னை ஹெல்ப் கேட்கிறேன்.. உனக்குத்தான இந்த ஊர் நல்லா தெரியும் ப்ளிஸ் வாவா.. அவள் கன்னத்தை பிடித்து கெஞ்ச,

 

கூச்சத்தில் நெளிந்தவள் ஹிஹிஹி வாங்க அத்தாச்சி இதுக்கு போய் கெஞ்சுறிக வாங்க.. நான் வரும்போது என்ன நடந்திரும்.. இந்த ஊரே நான் சொல்றதத்தான் கேட்கும்னா பார்த்துக்கோங்களேன்..

 

ஏன் சுந்தரி நீதான் இந்த ஊரோட சொர்ணாக்காவா…!!” அவள் கலகலவென சிரிக்க,

 

இடுப்பில் கைவைத்து முறைத்தவளோ பாவம் உங்களுக்கு துணைக்கு வரலாம்னு நினைச்சேன்ல.. போங்க போங்க..” அவள் முறுக்கி கொள்ள,

 

ச்சோ பேபி.. வா வா..” அவள் கையை பிடித்தவள் இழுத்துக் கொண்டு வெளியில் வர அவரவர்கள் பார்த்த வேலையில் யாரும் இவர்கள் இருவரையும் கவனிக்கவேயில்லை..

 

அப்படி என்னதான் வாங்கப்போறிங்க அத்தாச்சி..??”

 

கண்களை உருட்டியவளோ அது சஸ்பென்ஸ்.. உங்க அண்ணாக்கிட்ட மட்டும்தான் சொல்வேன்..??”

 

சரி சரி பொழைச்சுப்போங்க..” அவர்கள் பின்னாலேயே சுந்தர் நியமித்திருந்த ஆட்களில் ஒருவன் கூடவே வர அவர்கள் மெடிக்கலில் ஏதோ ஒரு பொருள் வாங்கிவரவும் சற்று தள்ளி நின்று கொண்டான்.. இருவரும் வாங்கிகொண்டு திரும்பி வர அதற்குள் வீட்டிற்கு வந்திருந்த சுந்தர் பொருட்களை தாயிடம் கொடுத்தவன் தர்ஷினியை தேட ஆரம்பித்திருந்தான்..

 

தங்கள் வீடு இருக்கும் தெருவில் நுழைய ஆள் நடமாட்டமே இல்லை..மணி ஆறரை இருக்கும்.. லேசாக இருட்டத்துவங்கியிருக்க அனைத்து பெண்களும் சீரியலில் மூழ்கியிருந்தார்கள்.. இருவரும் கைகளை பிடித்தபடி ஜாலியாக ஏதோ அரட்டையடித்தபடி வர இருவரும் எதிர்பார்க்காத போது மிகவேகமாக இவர்களை உரசியபடி வந்து நின்ற காரில் இருந்து இறங்கிய மூன்று நான்கு பேர் சுந்தரியை தள்ளிவிட்டு தர்ஷினியை தன் காரில் ஏற்றியிருந்தார்கள்..

 

கண்ணிமைக்கும் நேரத்தில் இது நடந்திருக்க சுந்தரி கீழே விழுந்தவள் அதிர்ச்சியில் அப்படியே கிடந்தாள்.. வண்டியில் இவர்களை தொடர்ந்த அந்த ஆளோ சுதாரித்து காரை விரட்ட வேகமாக எழுந்த சுந்தரியும் காரின் பின்னாலேயே கத்திக் கொண்டு ஓடி வந்து கொண்டிருந்தாள்.. எதிரில் சௌந்தரம் கணவரும் வள்ளி கணவரும் வந்து கொண்டிருக்க மச்சான் அத்தாச்சிய அந்த காருல யாரோ கடத்திட்டு போறாங்க போங்க போங்க காப்பாத்துங்க..” அவள் கதற,

 

தூரத்தில் தெரிந்த காரை நோக்கி தங்கள் வண்டியில் விரட்டிச் சென்றார்கள்.. சுந்தரி வீட்டை நோக்கி ஓட அதற்குள் சுந்தர் இவர்களை தேட தன் வண்டியை கிளப்பியிருந்தான்.. சுந்தரி பதறி அவனிடம் விபரத்தை சொல்ல கோபத்தில் தங்கையை பளார் என அறைந்தவன் எவ்வளவு படிச்சு படிச்சு சொன்னேன்.. ரெண்டுபேருக்கும் அறிவுங்கிறது கொஞ்சம்கூட இல்லை..  கண்மை மூடி தன் கோபத்தை கட்டுப்படுத்தியவன் தங்கை காட்டிய திசையை நோக்கி வண்டியை விட்டான்..

 

 

[the_ad id=”6605″]

 

இந்த முறை அண்ணன் அறைந்தாலும் அது உறைக்காமல் நின்றவள் ஐயோ கருப்பா அத்தாச்சிக்கு ஏதும் ஆகாம காப்பாத்து..

 

வள்ளியின் கணவரோ டேய் தம்பி வண்டியை கொஞ்சம் ஸ்லோ பண்ணுடா..!!” அடிபடாத கைகளால் ரோடு போடுவதற்காக கொட்டிக்கிடந்த ஜல்லிக் கற்களை அள்ளியவர் அதை அவர்கள் காரை நோக்கி குறிபார்த்து எறியத்துவங்கியிருந்தார்.. அது குறிதவறாமல் அவர்களின் கண்ணாடிகளை தாக்கத்துவங்க கண்ணாடிகள் உடையத் துவங்கியிருந்தது.. சலீர் சலீர் என கண்ணாடிகள் தூளாக தங்கள் முன்னால் போன அந்த அடியாள் காரின் முன்னால் போய் காரை வழிமறிக்க முயல.. அங்கிருந்து வேகமெடுக்க முயன்ற கார் தன் தடம்பிரண்டு அந்த பெரிய சரிவில் இறங்கி அங்கிருந்த புளியமரத்தில மோதி நின்றது..

 

இவர்கள் மூவரும் அந்த காரை நெருங்க அதிலிருந்து இறங்கிய நான்கைந்து அடியாட்கள் அவர்கள் கையில் வைத்திருந்த உருட்டு கட்டைகளால் இவர்களை தாக்கத்துவங்க ஏற்கனவே அடிப்பட்டிருந்த வள்ளியின் கணவரின் கையை மீண்டும உடைத்திருந்தார்கள்.. சௌந்தரத்தின் கணவருக்கும் நல்ல அடி.. அந்த அடியாளையும் வெளுத்து  வாங்க காரில் தர்ஷினியின் கையை பிடித்திருந்தவனோ அவளோடு காரில் இருந்து இறங்கினான்..

 

டேய் விடுடா… பொறுக்கி .. கையை உதற.. முடியாமல் தவித்தவள் மாமா வந்தாங்க.. உனக்கு அவர் கையாலதான்டா சாவு..

 

ஹாஹாஹா குரூரமாக சிரித்தவனோ நீ கவலைப்படாத தர்ஷூ உன் ஹஸ்பண்ட்ட உன் கண்முன்னால கொன்னுட்டுத்தான் நான் உன்னை  உஸ்ஸ்ஸ் என்று விமானம் பறப்பது போல கையை காட்டியவன் நாம ரெண்டுபேரும் நாளைக்கு வேற பேர்ல ஹஸ்பண்ட் வொய்ப்பா நியூயார்க் போறோம்.. நமக்கு அங்க எல்லாம் தயாரா இருக்கு நீ இங்க இருந்ததவிட ரிச்சா என்னோட ஹாப்பியா இருக்கலாம்.. ஓகே பேபி..” அவள் கன்னத்தை தொடவர,

 

ச்சீ போடா நாயே அவன் கையை தட்டிவிட்டவள் தனக்கு யாராவது உதவ வரமாட்டார்களா.. மாமா…. ஸாரி நீங்க எவ்வளவு சொல்லியும் கேட்காம வந்திட்டேன்

 

மாமா…மாமா..!!” கத்த துவங்கினாள்..

 

காதில் விரலை விட்டு ஆட்டியவன் அவள் கத்துவதை பொருட்படுத்தாமல் டேய் அவங்க மூனுபேர அடிக்க இவ்வளவு நேரமா.. இந்த கார தூக்க முடியுமா பாருங்க..??”
 அந்த சரிவிலிருந்து தூக்க முயன்று பார்த்துவிட்டு முடியாமல் நிற்க,

 

சற்று யோசித்தவன் சரி வாங்க இந்த காட்டுவழியா நாம போனா இங்கயிருந்து ஒரு நாலஞ்சு கிலோ மீட்டர்ல வேற ஊர் வந்திரும் அங்க போய் வேற டாக்சி பிடிச்சிக்கலாம்..??” தர்ஷினியை இழுத்துக்கொண்டு அந்த சரிவில் இறங்கத்துவங்கினான்..

 

                                                                                                                                இனி………?????

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!