Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Varam Vaangi Vanthaval

Varam Vaangi Vanthaval Naan 23 2

 

இந்த விசயம் வரதராஜன் குடும்பத்திற்கு தெரிந்து ஒரே பிரச்சனை.. காதலை விட்டுவிட்டு தாங்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்துகொள்ள சொல்லி அவர்கள் மிரட்ட.. இவரோ தன் காதலில் உறுதியாக நின்று வேறு பெண்ணை திருமணம் செய்ய சொன்னால் செத்துப் போவதாக சொல்லி விசத்தையும் அருந்திவிட்டார்.. கடைசியில் வெகு போராட்டத்திற்கு பிறகுதான் அவரை காப்பாற்றினார்கள்.. மீண்டும் அவர் தனது உண்ணாவிரத போராட்டத்தை துவங்க ஒருவழியாக தங்களைவிட உயர்ந்த ஜாதி பெண்ணான லெட்சுமியை திருமணம் செய்ய சம்மதம் சொல்லி இருவருக்கும் திருமணம் முடிந்தது..

 

 இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத லெட்சுமி குடும்பத்தினர் மகளிடம் எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் அவள் கேட்கவில்லை… அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு சொல்லவில்லை ஆனால் இவர்கள் குடும்பத்தை பற்றி விசாரித்ததில் இது ஒரு சரியில்லாத குடும்பம் என்பதை அறிந்து மகளுக்கு எடுத்துச் சொல்ல அந்நேரத்தில் மகளுக்கு காதல் கண்ணை மறைத்தது.. இதில் வெறுப்படைந்த அவர்கள் திருமணம் முடியவுமே அவளுக்கு சேரவேண்டிய சொத்தை பிரித்துக் கொடுத்து தங்கள உறவை முடித்துக் கொண்டனர்..



Advertisement

 

தர்ஷினி தந்தையும் வரதராஜனும் நல்ல நண்பர்கள் அவர் ஆஸ்திரேலியா சென்று கொஞ்சநாட்கள கழித்து இவரும் செல்ல அங்கு நட்பு இன்னும் பலப்பட்டது.. அதோடு அங்கேயே நகைக் கடையை திறக்கவும் வரதராஜன் தன் மனைவியை அங்கேயே அழைத்துக் கொண்டார்.. அதற்குள் லெட்சுமி அடைந்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமில்லை.. வரதராஜனின் மூத்த அண்ணன் மகன்கள்தான் ராம், ஜெய் இருவரும்.. இருவரும் ஒரே உருவம்.. சிறு வேறுபாடு கூட தெரியாது.. பெற்றவர்களே பலநேரம் யார் என்று தெரியாமல் திணறுவார்கள். இருவருமே அந்த குடும்பத்தின் ஜெராக்ஸாகவே பிறந்தார்கள் அதிலும் பிறந்ததில் இருந்து ராமைவிட ஜெய் அதிக மூர்க்கமானவன் நினைத்தது எப்படியாவது நடக்கவேண்டும் அதற்காக எதை வேண்டுமானாலும் செய்வான்.. பலநேரம் ஜெய் செய்யும் தவறுக்கு ராம் மாட்டுவான் அதற்காக இவன் ஒன்றும் வருந்தியதும் இல்லை, தன்னை மாற்றிக் கொண்டதும் இல்லை..

 

Advertisement

ஆரம்ப காலத்தில் தர்ஷினி தந்தைக்கு குழந்தைகள் இல்லாதது போல வரதராஜனுக்கும் குழந்தைகள் இல்லை.. அந்த குறையே தெரியாமல் அவர் தன் மனைவியை கண்ணுக்குள் வைத்து காத்துக் கொண்டார்.. இருவரும் அன்றில் பறவைகள் போல ஒருவரை ஒருவர் அப்படி நேசித்தனர்.. இயல்பிலேயே நல்ல குணமாக இருந்த லெட்சுமி குழந்தைகள் இல்லாவிட்டால் பரவாயில்லை தன் புகுந்த வீட்டில்தான் இவ்வளவு குழந்தைகள் இருக்கிறார்களே அவர்களில் ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என நினைத்திருந்தார்..

Advertisement

 

இங்கு தர்ஷினியும் தர்ஷனும் பிறந்திருக்க தங்களுக்கும் இதுபோல காலம் தாழ்த்தி குழந்தை பிறக்குமோ என நினைத்திருந்தவர்கள் இவர்களுக்கு அது நடக்கவே நடக்காது என டாக்டர்கள் கைவிரிக்கவும் அந்த முறை ஊருக்கு சென்றிருக்கும் போது ஜெய்  தத்து எடுத்து கொள்ளலாம் என எல்லோரோடும் பேசி முடிவெடுத்தனர்..

 

Advertisement

அப்போது இருவரும் ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்ததால் பத்தாவது முடிக்கவும் முறைப்படி தத்து எடுத்து தங்களோடு ஊருக்கு அழைத்துச் செல்லலாம் என முடிவு செய்தார்கள்.. வரதராஜனின் அண்ணன்களின் குடும்பத்திற்கு தம்பியின் நகைகடையின் மீதும் அவன் சம்பாத்தியத்தின் மீதும் ஒரு கண்.. லெட்சுமிக்கு குழந்தை பிறக்காமல் போனதற்கு இவர்கள்தான் காரணம்.. நல்லது செய்வது போல ஏகப்பட்ட நாட்டு மருந்தை குடிக்கச் சொல்லி கொடுத்திருக்க அது எல்லாமே கர்ப்பப்பையை புண்ணாக்கும் மருந்துகள்.. அந்த திருமணத்தை நிறுத்தமுடியாமல் வரதராஜனிடம் காட்டமுடியாத கோபத்தை அவன் மனைவியிடம இதுபோல காட்டியிருந்தனர்..

 

 லெட்சுமிக்கு தர்ஷன் பிறந்ததில் இருந்து அவன் மேல் தனிப்பாசம்.. அவனும் மாயக்கண்ணனாய் அவளிடம் அதிகம் ஒட்டிக் கொள்ள தர்ஷினி குடும்பத்திற்கு லெட்சுமியை பற்றி நன்கு தெரிந்ததால் அவனை அவளிடமே விட்டிருந்தனர் இருவரின் வீடும் சற்று அருகருகே இருக்க அக்கா தம்பி இருவரின் பாதி நேரமும் அங்கேதான்..

 

எல்லாம் சரியாகத்தான் போய் கொண்டிருந்தது இவர்கள் மறுமுறை ஊருக்கு செல்லும்வரை மட்டும்.. அந்த முறை ஊருக்கு சென்றிருக்கும்போது வீட்டு வேலைக்கார பெண்ணிடமே ஜெய் தவறாக நடக்க அப்போது அவனுக்கு வயது வெறும் பதினைந்துதான் அந்த பெண் தற்கொலை செய்துகொள்ள அதை அந்த குடும்பமே மூடி மறைத்தார்கள்.. அவனை ஒருவார்த்தை கூட திட்டவில்லை அதை பார்த்த லெட்சுமிக்குத்தான் மனதே ஆறவில்லை.. அவன் மேல் வெறுப்புதான் வளர்ந்தது.. தத்து எடுப்பதற்கு எல்லா ஏற்பாடும் செய்தும் லெட்சுமிக்கு இதில் உடன்பாடில்லை.. இந்த விசயம் எதுவுமே தெரியாத தன் கணவரிடம் காரணத்தை சொல்ல விரும்பாமல் தன் புகுந்த வீட்டினர் எவ்வளவு எடுத்து சொல்லியும் பிடிவாதமாக மறுத்து இன்னும் கொஞ்சநாள் போகட்டும் என மட்டும் சொல்லியிருந்தார்..

 

காலங்கள் ஓட அண்ணன் தம்பி இருவரும் பொறுக்கியாகவே வளர்ந்தனர்.. ஆள் பார்க்க அவ்வளவு அழகாக கம்பீரமாக இருக்க இவர்களின் ஊதாரிதனத்திற்கே பணம் ஏகப்பட்டது தேவைப்பட்டது.. இவர்களின் தாயும் ஜெய்தான் வரதராஜனின் அனைத்து சொத்திற்கும் ஒரே வாரிசு என ஏற்றி விட்டிருக்க நகைக்கடைக்கும் அவ்வளவு சொத்திற்கும் வாரிசானதான் ஏன்  பணத்திற்காக அடுத்தவர்களிடம் கையேந்த வேண்டும் என நினைத்தவன் ஆஸ்திரேலியாவே சென்றுவிட்டான் டூரிஸ்ட் விசாவில்..

 

[the_ad id=”6605″]

 

 

அங்கேதான் அவன் தர்ஷினியை பார்த்தது.. தர்ஷினியை இவன் பார்த்த பார்வையே சரியில்லை.. அவளை தவறாக பார்ப்பதை கண்ட லெட்சுமியும் ஜெய் ஊருக்கு செல்லும்வரை இங்கு வரவேண்டாம் என அவளை தடுத்திருந்தார்.. தான் இதுவரை பார்த்த பெண்கள் தர்ஷினியின் கால்தூசுக்கு கூட வரமாட்டார்கள் என்பதை உணர்ந்தவன் அவளின் அழகு இவனை பித்தம் கொள்ள வைத்தது..

 

இவன் தர்ஷினியை திருமணம் செய்து இங்கேயே இருந்துவிட்டால் சொத்துக்கு சொத்தும் பெண்ணும் கிடைக்கும் என நினைத்து வரதராஜனிடம் தர்ஷினியை தனக்கு பெண் கேட்கச் சொல்லி தான் இனி உங்களுக்கு மகனாக இங்கேயே தங்கி நகைக்கடையை பார்த்துக் கொள்வதாக சொல்ல வரதராஜன் தன் மனைவியிடம் இதைப்பற்றி கலந்து பேசினார்.. அவருக்கு இதில் சம்மதம்தான்.. அவருக்கும் தர்ஷினி தர்ஷன் இருவரையும் பிடிக்கும்.. தன் நண்பன் குடும்பத்தோடு சம்பந்தம் செய்வதில் அவருக்கு விருப்பமே ஆனால் லெட்சுமி அதற்கு ஒத்துக் கொள்ளவேயில்லை..அவர் அண்ணன் பையன்களை பற்றி கணவரிடம் சொல்ல தயக்கம்.. எதுவும் சொல்லாமல் காலத்தை கழித்தவர் அவன் ஊருக்கு கிளம்பும் நாள்வரவும் அடுத்த முறை ஊருக்கு வரும்போது மற்றதை பேசிக் கொள்ளலாம் என சொல்லியிருந்தார்..

 

இவனுக்கு லெட்சுமி மீது சந்தேகம்தான்.. இது சித்தப்பன்ட்ட சொல்லி சொத்த நமக்கு கொடுக்க விடாதோ.. அதைவிட தர்ஷினியை விடமனதில்லை.. அவன் ஊருக்கு வந்தபோது அனைவரும் அவனை திட்டி தீர்த்துவிட்டனர் ஒரு பொம்பளக்கிட்ட உன்னோட ஜம்பம் செல்லல.. அவ என்ன யோசிக்கிறது நீதான் அவளோட வாரிசு.. இந்த தரம் வரட்டும் அவங்க.. இந்த ஊருக்கே தெரியும் நீதான் அவங்க வாரிசுன்னு என்ன நினைச்சிருக்கா அவ மனசில.. இவனும் அவ பேச்சுக்கு ஆடுறானா.. போனில் வரதராஜனை திட்டி தீர்க்க தன் மனைவியை பற்றி தெரிந்தவர் அவள் வேண்டாம் என்றால் கண்டிப்பாக ஏதாவது ஒரு காரணம் இருக்கும். நேர்ல பேசிக்கலாம் என போனை வைத்திருந்தார்..

 

ஒரு ஆறுமாதத்திற்கு பிறகு தர்ஷனின் அப்பத்தா பேரன் பேத்திகளின் ஜாதகத்தை பார்க்க அதில் அவர்கள் குடும்பத்திற்கே கிரகம் கடுமையாக இருப்பதால் தர்ஷனை கோவிலில் யாராவது ஒருவருக்கு தத்து கொடுக்கும்படி சொல்லியிருக்க இது ஒரு கிரக பரிகாரம் என்பதை உணர்ந்தவர்கள் அவனை ஏதாவது ஒரு முருகன் கோவிலில் பிள்ளையாய் எழுதலாம் என முடிவு செய்திருந்தார்கள்.. அதை பேச்சுவாக்கில் லெட்சுமியிடம் சொல்ல அப்போதுதான் அவர் தனக்கே தர்ஷனை பிள்ளையாய் தத்து கொடுங்கள் கிரகம் சரியானவுடன் தான் அவனை உங்களுக்கு மாற்றி எழுதி தருவதாக சொல்ல அதில் ஒன்றும் தவறில்லை என நினைத்து ஒரு நல்ல நாளில் அவனை வரதராஜன் லெட்சுமி இவர்களுக்கு ஒரு கோவிலில் வைத்து தத்து கொடுத்தார்கள்.. தர்ஷன் குடும்பத்தினர் இதை ஒரு கிரக தோசமாகத்தான் நினைத்தார்கள்..

 

ஆனால் ஒரு பத்துநாள் கழித்து வரதராஜனும் லெட்சுமியும் தங்கள் சொத்து அனைத்திற்கும் தர்ஷன்தான் வாரிசு என சட்டபடி அதை மாற்றியிருக்க ஒருவேளை அவனுக்கு ஏதாவது நடந்தால் தர்ஷினிக்கு அனைத்தும் செல்லுமாறு ஒரு பத்திரத்தை கொடுக்க அதிர்ந்த குடும்பம் அதை வாங்கவே இல்லை.. என்ன லெட்சுமி இது..?” அவன் அப்பத்தாவும் ஐயாவும் கடுமையாக திட்ட,

 

அப்பா, அம்மா.. ரெண்டு பேரும் என்னை மன்னிச்சிருங்க.. தர்ஷன எங்க சொந்தப் பிள்ளையாத்தான் நினைக்கிறோம்..??”

 

நல்லா நினைச்சுக்கோங்க நானும் அதை தப்புன்னு சொல்லலையே.. அதனாலதான் நாங்க அவன பாதி நேரம் உங்கவீட்ல விட்டிருக்கோம்.. அதுக்காக சொத்தெல்லாம் அவன் பேர்ல மாத்துறது நல்லதில்ல லெச்சு.. உன் புகுந்த வீட்லயும் அவ்வளவு சொந்தபந்தம் இருக்கு இதுனால நிறைய பிரச்சனைகள்தான் வரும்.. நாங்களே என் பேரன் கிரகம் சரியாகத்தான் அவன தத்து கொடுத்தோம்.. நீ இதனால அவனுக்குத்தான் பிரச்சனைய கொண்டு வர்ற..

 

இல்லம்மா.. நாங்க அவன தத்து எடுத்தத இப்ப யாருக்கும் சொல்ல போறதில்ல அவனுக்கு பதினெட்டு வயசு வரட்டும் அப்ப பார்த்துக்கலாம்.. இது எங்களோட மனதிருப்திக்காக வேணாம்னு சொல்லாதிக..?”

 

வரதராஜனோ இது என்னோட சுயசம்பாத்தியம் இதை நாங்க யாருக்கு வேணாலும் கொடுக்கலாம். . அதோட தர்ஷன்தான்மா எங்க பையன்.. வயசான நாங்க அவனோடதான் இருக்க ப்ரியப்படுறோம்.. நாம எல்லாரும் ஒன்னா இருக்கலாம் அதுக்காத்தான்..” அவர் கண்கலங்க,

 

இல்ல வரது இது தப்பு.. நாம எல்லாரும் ஒத்துமையா இருப்போம் அதுக்கு சொத்து கொடுத்துதான் இருக்கனும்னு அவசியம் இல்ல.. பிள்ளைங்க ரெண்டும் உங்க மேல எப்பவும் ரொம்ப ப்ரியம் வைச்சிருக்குக.. இந்த சொத்த நீ வேற யாருக்காச்சும் மாத்தி கொடுத்திரு.. என் பேரனுக்கு வேண்டிய அளவு நாங்க சொத்து வைச்சிருக்கோம்.. அத வைச்சு அவன் நல்லா இருந்தாளே போதும்..

 

இல்லம்மா நாங்க எழுதினது இப்படியே இருக்கட்டும் நாங்களே இத வைச்சிருக்கோம்… தர்ஷனுக்கு பதினெட்டு வயசாகட்டும் அவனா சுயமுடிவெடுக்கட்டும் அப்புறமா பார்த்துக்கலாம்.. ப்ளிஸ் ப்ளிஸ் வேணாம்னு சொல்லாதிக..

 

இத நாங்க வாங்க மாட்டோம்… அப்புறம் உங்க ப்ரியம்.. அந்த பத்திரத்தை அவர்கள் தங்கள் வீட்டிலேயே வைத்திருக்க அந்த வருடம் அவர்கள் ஊர் திருவிழாவிற்கு வரும்போது ஜெய்யை உடனே வாரிசாக தத்து எடுக்கச் சொல்லி பெரிய பிரச்சனையாய் கொண்டுவந்தார்கள்..

 

பெரிய சண்டை வாக்குவாதம், அடுத்தவரின் சொத்திற்கு ஆளாய் பறந்தார்கள்.. கடைசியில் பொறுக்க மாட்டாமல் சத்தமாக பேசிய வரதராஜன் எல்லாரும் கொஞ்சம் நிப்பாட்டுங்க.. எங்களுக்கு வாரிசா ராமையோ ஜெய்யையோ எடுக்க மனசில்ல..

 

அனைவரும் அதிர்ந்தவர்கள் அப்ப என்ன பண்ண போறிங்க அனாதையா இருக்க போறிங்களா..?”

 

[the_ad id=”6605″]

 

 

அதப்பத்தி உங்களுக்கு என்ன நாங்க என்னமோ பண்றோம் அனாதையா சாகுறோம் அது எங்களோட விருப்பம்.. எல்லாரும் அவங்கவங்க வேலையை பாருங்க.. இந்த பேச்சு மறுபடி வந்தா நான் ஊருக்கு வர்றது இதுதான் கடைசி தடவையா இருக்கும்..” கேட்டிருந்த ஜெய்க்கு அப்போதே அவர்களை கொன்று போடும்வெறி..  எனக்கு அப்பவே தெரியும் அவன் பொண்டாட்டி என்னை வாரிசா எடுக்க விடமாட்டான்னு..அங்கு பார்த்த அந்த நகைக்கடையும் வீடும் அதுபோக இங்கிருக்கும் அவரது இவ்வளவு சொத்தும் வேற யாருக்காவதா.. எவ்வளவு திமிர்.. என்ன செய்ய என்ன செய்ய தூங்காமல் இரவு பகல் தூங்காமல் அப்படியே வெறிபிடித்து போய் திரிந்தவனுக்குள் ஒரு சந்தேகம் இவங்க வேற யாராவது ஆள் பார்த்திட்டாங்களோ.. இப்ப நாம இவங்கள கொன்னா நாமதான் செஞ்சோம்னு எல்லார்க்கும் தெரிஞ்சிருமே..

 

 

இன்னும் பத்துநாட்கள் இவர்கள் இங்கிருப்பார்கள். . அனைவரிடமும்  மனது சரியில்லை உள்நாட்டிலேயே சுற்றுலா செல்வதாக சொன்னவன் அப்போதே ஆஸ்திரேலியா கிளம்பி வந்திருந்தான்.. அங்கு தங்கியிருந்து விசாரிக்கும்போதுதான் தர்ஷனை அவர்கள் தன் சொந்தபிள்ளையாக நினைப்பதாக சொல்ல யாருக்கும் சட்டப்படி அவனை வாரிசாக்கியது தெரியாது..

 

அதெப்படி அவன மகனா நினைக்கலாம்… அவன.. முதல்நாளே தர்ஷன் அப்பாவை யாருக்கும் தெரியாமல் சென்று சந்தித்தவன் தனக்கு தெரிந்த ஒருவருக்கு உயர்ந்த ரக வைரங்கள் நிறைய வேண்டுமென சொல்ல அவருக்கு ஜெய்யை ஏற்கனவே தெரிந்ததால் அவரை கடைக்கு அழைத்துவரும்படி சொன்னார்.. நீயென்னப்பா இங்க வரது அங்க ஊருக்கு போயிருக்கானே ..??”

 

நான் என் பிரண்டோட வந்தேன் அங்கிள் நாளைக்கு கிளம்பிருவேன் ஆனா அங்கிள் அவர் தன்னோட பிளாக் மணியில வாங்குறார் நீங்க வீட்டுக்கு கொண்டு வந்திருங்களேன் நான் அவரை அங்க அழைச்சிட்டு வர்றேன்..

 

இல்ல ஜெய் நானோ உங்க வரதுவோ இதுமாதிரி வீட்லயெல்லாம் வைச்சு சேல் பண்ணினதில்ல.. உனக்காக வேணும்னா எதுக்கும் வரதுகிட்ட போன்ல கேட்கிறேன்..

 

நோ நோ அங்கிள் இது முதல்முதலா நானே பார்க்கிற பிசினஸ்.. அப்பா அம்மாக்கு தெரியவேணாம்.. எல்லாம் சக்சஸ் ஆனா அப்புறம் அவங்ககிட்ட சொல்லலாம்னு நினைக்கிறேன்.. ப்ளிஸ் அங்கிள் நான் வாழ்க்கையில முன்னேற ஒரு சான்ஸ்.. அது அவங்களுக்கு சர்பிரைஸா இருக்கட்டுமே ..”அவரிடம் கெஞ்ச அந்த முகத்தில் அவருக்கு எதுவும் தெரியாமல் தனது மகன் போல நினைத்து,

 

சற்று யோசித்தவர் ம்ம் சரிப்பா நீ கூட்டிட்டு வா.. நிறைய உயர்ந்த ஜாதி வைரங்களையும் நகைகளையும் கொண்டு வந்திருந்தார்.. இருந்தாலும் மனது கேட்காமல் இரவு போன் செய்யும்போது வரதராஜனிடம் நகை கொண்டு வந்ததை சொல்ல அவரோ தன் நண்பனை திட்டி தீர்த்துவிட்டார்..

 

டேய் ஏன் இவ்ளோ ரிஸ்க் எடுக்கிற.. நமக்கென்ன வியாபாரத்துக்கா குறைச்சல்.. யார்ல கொண்டுவரச் சொன்னா..?”

 

[the_ad id=”6605″]

 

 

ஏனோ அவருக்கு ஜெய்யை காட்டிக் கொடுக்க மனதில்லை.. ஏதோ அந்த பையன் சஸ்பென்ஸ்ன்னு சொன்னானே.. தனக்கு தெரிந்த நண்பன் என மட்டும் சொல்லியிருக்க இதில் ஜெய்க்கு ஒரு ப்ளஸ் நண்பர்கள் இருவரும் ஒரே மாதிரி அமைப்பில் வீடு கட்டியிருந்தனர்.. எங்கே கேமரா இருக்கும் செக்யூரிட்டிகள் இருப்பார்கள் எல்லாம்

கணக்கிட்டவன் பணத்தை தண்ணீராய் செலவு செய்து நான்கு கொலைகாரன்களை செட் செய்திருந்தான்..

 

முதலில் அவன்தான் அவர்கள் வீட்டிற்குள் நுழைய தர்ஷினி டூர் போனது அவனுக்கு சாதகமாய் இருந்தது.. முதலில் கேமராவை உடைத்தவர்கள் நகைகளை கொள்ளையடித்து அவர்களின் குடும்பத்தையே ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவித்தார்கள்.. தர்ஷனை பார்க்க பார்க்க அவனுக்கு வெறி… இவன் எனக்கு எதிரியா.. என்ன திமிர் இருந்தா அவங்க என்னை விட்டுட்டு இவன வாரிசா எடுக்க முடிவெடுத்திருப்பாக.. அவன் முகத்தில் பழிவெறி இருந்த கோபத்தில் வீட்டையே அடித்து நொறுக்கினான்.. தர்ஷன் என்று பெயர் போட்டிருந்த பறவைகளை கூட விடவில்லை..

 

ஜெய் சொல்ல சொல்ல தர்ஷினிக்கு அதிர்ச்சியில் மயக்கம் வந்திருந்தது.. சுந்தரை முறைத்தவன் டேய்ய்ய் நான் சொத்துக்காக எல்லாரையும் போட்டுத்தள்ளினா நீ எங்களுக்கே வக்கீல் நோட்டீஸ் அனுப்புவியா.. வாரிசு யார்ன்னு தெரியாம சும்மா இவ தம்பியை புள்ளையா வளர்க்கிறாங்கன்னு சொன்னப்பவே இவ குடும்பத்தை போட்டுத் தள்ளினேன் நான்.. இப்ப இவ சொத்து என் சித்தப்பன் சொத்து நான் கொள்ளையடிச்ச சொத்து எல்லாம் எனக்கு வரப்போகுது… விடமுடியுமா..??”

 

ரொம்ப தேங்க்ஸ்…ஜெய் உன்வாய்ல இந்த உண்மை வர்றதுக்காகத்தான் நான் இவ்வளவு நேரம் வெயிட் பண்ணினேன்… ஸார் வாங்க..” அவர்கள் பின்னால் பார்த்து கூப்பிட அவன் திரும்பி பார்ப்பதற்குள் தன் கையை பின்னால் வளைத்திருந்தவனை ஓரே தூக்காக தூக்கி முன்னால் போட்டு அவன் வயிற்றில் குத்தியவன் தன் பலத்தை எல்லாம் சேர்த்து முகத்தில் குத்துவிட்டிருந்தான்.. அப்படியே பல்டி அடித்து தன் மனைவி மயங்கி கிடந்த இடத்திற்கு சென்றவனின் தோளில் மறுநிமிடம் தர்ஷினி..

 

தன் உயிர் போல அவளை தன்னுள் புதைத்தவன் அடுத்து அவனை எதிர்கொள்ள தயாரானான்.. பின்னால் திரும்பி பார்த்த ஜெய் ஆளில்லாமல் ஆனால் சற்று தூரத்தில் நிறைய டார்ச் வெளிச்சமும் நிறைய பேர் ஓடிவரும் சத்தமும் கேட்டு ஒரு நிமிடம் திகைத்து திரும்பி பார்க்க தர்ஷினி அவன் தோளில் டேய்ய்ய்ய் என கத்தியபடி அவனை நோக்கி வந்தவன் தன் பின்பையில் கத்தி இருக்கும் இடத்தில் கைவைத்திருந்தான்..!!

 

                                                                 இனி…………..?????

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!