Varam Vaangi Vanthaval Naan 24 1
வரம் வாங்கி வந்தவள் நான்
அத்தியாயம் – 24
Advertisement
கத்தி எடுக்க போன ஜெய் அந்த இடம் வெற்றிடமாக இருக்க மறுபையில் தேடினான்.. “என்னடா கத்திய தேடுறியா முதல்ல உன்னோட சண்டை போட்டேனே எதுக்குன்னு நினைச்ச..? அதெல்லாம் அப்பவே எடுத்து தூர வீசிட்டேன்..”
Advertisement
அவன் மேல பாய வர அதற்குள் அவன் தலையில் ஒரு பெரிய அடி பின்னால் கந்தப்பன் நின்றிருந்தான்.. “என்னடா தம்பி யார் இவன்..?” திமிறியவனை பின்னால் வளைத்தபடி நிற்க ,
Advertisement
சண்டைக்கு தயாராக இருந்தவன் அண்ணனை பார்க்கவும் “அவனை உன்னோட துண்டால அந்த மரத்துல கட்டுண்ணே.. இவன்கிட்ட கொஞ்ச கணக்கு வழக்கு இருக்கு..” தன் மேல் மயங்கியிருந்தவளை பூ போல மெதுவாக தரையில் படுக்க வைக்கபோக அதற்குள் கந்தப்பன் மனைவி தன் மடியில் தாங்கியிருந்தாள்.. மனைவியின் உடைகளை சரிசெய்தபடி,
Advertisement
“என்னண்ணே அத்தாச்சியும் நீயும் இந்த நேரத்தில இங்க..?”
திமிறியவனை தன் துண்டால் பின்கைகளை சேர்த்து அந்த மரத்தில் கட்டியவன் “உன்னை மாதிரிதான் எனக்கும் ஒரு கணக்கு தீர்க்க வேண்டியிருந்துச்சு ஒருத்தன கணக்கு தீர்த்துட்டேன் ஒருத்தன பார்க்க முடியல..?”
“யார உன் அண்ணன சொல்றியா..?”
“அந்த நாயா என் அண்ணே.. த்தூ கருமம்.. இந்த பாலாவும் இவனும் சேர்ந்து இன்னைக்கு என்ன காரியம் செய்ய பார்த்தாங்க தெரியுமா..?”
“என்ன அத்தாச்சிய கையபுடிச்சு இழுக்க பார்த்தானுகளா..?”
அவனை ஆச்சர்யமாக பார்த்தபடி “எப்புடி தம்பி.?”.
“ஏற்கனவே ஒரு மாசம் ஆசுபத்திரியில இருந்தாங்களே எதுக்குன்னு நினைச்ச என் வீட்டுக்குள்ளயே நுழைஞ்சு என் பொண்டாட்டிய தூக்க நினைச்சா விடுவனா ஏதோ அன்னைக்கு அப்பு பக்கத்தில இருந்ததால அவனுக உயிரோட தப்பிச்சாங்க.. அந்த பாலா நாய என்ன பண்ணின..?”
“அந்த கிணத்துக்குள்ள பிடிச்சு தள்ளிட்டேன்..!!”
“உசிரு இருக்கா..?”
“தண்ணியில்ல நாயி மண்டை உடைஞ்சு கிடக்கு..”
“ஓஓஓ…. பேசியபடியே ஜெய்யை நெருங்கியவன் பளார் என அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை.. என்ன திமிர் இருந்தா என் பொண்டாட்டிய கைநீட்டி அடிப்ப..? ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு அறை.. என்ன சேட்டை உனக்கு..? இருடி… உன் செட்டைய ஒடிக்கிறேன்..? அவன் கைகட்டை அவிழ்த்துவிட்டவன் வாடா நாயே என்னமோ என்னை கொன்னுட்டு என் பொண்டாட்டிய கூட்டிட்டு போறேன்னு சொன்ன வா..வா.. இப்ப தொடுறா பார்ப்போம் என் பொண்டாட்டிய..!!”
[the_ad id=”6605″]
இருவரும் நேருக்கு நேராக நிற்க சுந்தருக்குள் இருந்த காட்டானும் கணவனும் ஒன்றாக வெளிவந்திருக்க.. எதிரில் நின்ற ஜெய்யும் வெறியோடுதான் நின்றிருந்தான்..டேய்ய்ய் அவன் மேல் வெறியாக பாய சுந்தர் ஒரே குத்தில் அவன் சில்லுமூக்கை உடைத்திருந்தான்.. தன் மனைவிக்கு இத்தனை கொடுமை செய்தவனை அவனுக்கு சாதாரணமாக விடமனதில்லை.. புலியாய் உருமியவன் சிங்கமாய் பாய்ந்து அந்த அசுரனை வதம் செய்ய ஆரம்பித்திருந்தான்..
“ வா அசுரா வா
அசுரா வா
அசுரத்தலைகள் சிதற
வா அசுரா வா
அசுரா வா
அசுரப் பகைகள் கதற
வா அசுரா வா
அசுரா வா
அசுர ரத்தம் தெறிக்க ..”
அந்த நேரத்தில சுந்தர் உடலுக்குள் கருப்பனே புகுந்தாற்போல அப்படி ஒரு கோபம், வெறி, ஆக்ரோசம் கொஞ்ச நேரத்திலேயே ஜெய்யின் கை பின்வாங்க இப்படி ஒரு ஆவேசத்தை அவன் எதிர்பார்க்கவில்லை.. ஒவ்வொரு அடியும் இடி போல அவன் மேல் இறங்கி கொண்டிருந்தது..
“இந்த கைதான என் பொண்டாட்டி கையை பிடிச்சு இழுத்துச்சு..?” அவனை கீழே தள்ளியவன் தோள்பட்டையில் கால்வைத்து கையை பிடித்து திருகி அதை ஒரே திருப்பாக திருப்பி அந்த கையை உடைத்து அவன் வயிற்றில் ஓங்கி மிதித்தான்.. பார்த்த கந்தப்பனே சற்று அதிர்ந்துதான் போயிருந்தான் சுந்தரின் மறுமுகத்தை பார்த்து.. இதில் அவனுக்கு அவன் மனைவி மேல் இருந்த பிரியமே தெரிந்தது..
சுந்தர் அடுத்தடுத்து கொடுத்த அடியால் அவன் அழகான முகம் அலங்கோலமாக மாறிக் கொண்டிருந்தது.. தடதடவென போலிஸ் வந்திருக்க அந்த கிரைம் பிரான்ச் இன்ஸ்பெக்டரும் வந்திருந்தார்..போலிஸை பார்க்கவும் கந்தப்பன் தம்பியை பிடித்து அவனை சற்று சமாதானப்படுத்த,
இன்ஸ்பெக்டர் “விடுங்க சுந்தர் இனி நாங்க பார்த்துக்குறோம்..?”
“வாங்க ஸார்.. தன் சட்டை பட்டனில் இருந்த கேமராவை கழட்டி அவரிடம் கொடுத்தவன் இதுல அவன் வாயாலேயே தர்ஷினியோட குடும்பத்தை சுட்டு கொன்னேன்னு ஒத்துக்கிட்டு இருக்கான் இதான ஸார் நீங்க கேட்ட ஆதாரம்..”
ஜெய்யின் கழுத்தில் கைவைத்து தூக்கியவன் “டேய் உன் அடியாளை எல்லாம் தூக்க தெரிஞ்ச எனக்கு முதல்லயே உன்னை தூக்க தெரியாதா..? நீ என்னோட பொண்டாட்டிய அடிச்சத பார்த்தும் பொறுமையா இருந்தேனே எதுக்குன்னு நினைச்ச..? இதுக்காகத்தான்.. எல்லாத்தையும் நான் கண்டுபிடிச்சிட்டேன்.. ஆனா எவிடென்ஸ் வேணுமே அதான் தர்ஷினி குடும்பத்தை சுட்டத உன் வாயால ஒத்துக்க வைக்கத்தான் இத்தனை நாள் நீ என் மனைவிய சுத்தும்போது கொஞ்சம் விட்டுப்பிடிச்சேன்..
அன்னைக்கு ஹாஸ்பிட்டல் பாத்ரூம்ல நீதான் இருந்தன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா.. இல்ல பஞ்சாப் சிங் மாதிரி தாடியும் தலைபாகையும் வைச்சிருந்தா நீ வேற ஆளா மாறிருவியா.. நீ பாத்ரூம்ல ஒளிஞ்சிருந்தியே அப்பவே உன்னை பிடிச்சிருப்பேன்.. எங்க வீட்டு ஆளுக எல்லாரும் இருந்ததாலதான்டா நான் அப்ப அமைதியா வந்தேன்.. அவ என் உசுருடா அவளுக்கு நீ கெடுதல் நினைச்சா நான் விடுவனா..!!” இன்னும் அவனுக்கு கோபம் தீரவில்லை..
“அந்த பச்சப்புள்ள என்னடா பண்ணினான் அவனக்கூட ஈவு இரக்கம் இல்லாம கொன்னிருக்க.. அதோட உன் சித்தப்பா சித்திய நீதான் வேற ஆளுக்கு பணம் கொடுத்து ஆக்ஸிடெண்ட் பண்ண வைச்சிருக்க ..” இருந்த ஆத்திரத்தை எல்லாம் அவன் மேல் கொட்டிக் கொண்டிருந்தான்.. ஒருநிலைக்கு மேல் அவன் அடிதாங்காமல் மயங்க போக அவனை தடுத்த இன்ஸ்பெக்டர்
“விடுங்க ஸார் செத்துகித்து போயிடப் போறான்..”
“சாவட்டும் நாயி இதெல்லாம் நாட்ல இருந்து நாட்டுக்கு என்ன பிரயோஜனம் மக்கள் தொகையாச்சும் ஒன்னும் குறையட்டும்..”
போலிஸ் ஜெய்யோடு அங்கிருந்தவர்களையும் அரெஸ்ட் பண்ண வேலு கத்தி குத்து பட்டு உயிருக்கு துடித்துக் கொண்டிருந்தான்.. “ஸார் அந்த கிணத்துக்குள்ள ஒரு நாய் அடிபட்டு கிடக்கு அதையும் யாராவது ஆளவிட்டு தூக்கச் சொல்லுங்க ..”
“சுந்தர் நீங்க வந்து கம்பிளைன்ட் எழுதி தரனுமே..?”
[the_ad id=”6605″]
“வர்றேன் ஸார் நாளைக்கு வர்றேன்..” தன் மனைவியை தூக்கி தோளில் போட்டவன் பாதை வழியாக வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.. அவனுக்கு இப்போது மற்றதெல்லாம் மறைந்து தன் மனைவி மட்டுமே நினைவில்.. வியர்வை ஆறாக பெருகியிருக்க தன் மனைவியின் காலில் ஏதோ பிசுபிசுக்க செல்போன் வெளிச்சத்தில் பார்த்தவன் அவள் காலில் முட்கள் நிறைய இடத்தில் கீறி ரத்தம் கோடாய் வழிந்து காய்ந்து போயிருந்தது.. காலில் சில முட்கள் குத்தியபடி இருக்க அதை மெதுவாக எடுத்துவிட்டான்.. சேலையை முள்பிடித்து இழுத்ததில் பாதிக்கு மேல் கிழிந்து தொங்கியது.. வாடிய கொடியாய் தன் மேல் துவண்டிருந்தவளை பார்த்த சுந்தருக்கு நெஞ்சில் ரத்தம் வடிந்தது.. தன் மூச்சை இழுத்துவிட்டு தன்னை சமன் படுத்த முயன்றாலும் அவனுக்கு முடியவில்லை.. தர்ஷினியின் முகம் லேசாக வாடினாலே அவனுக்கு தாங்காது.. மில்லில் இருக்க முடியாமல் வீட்டுக்கு வருபவன் அவள் முகம் மலர்ந்தால்தான் அவனுக்கு நிம்மதி.. ஆனால் இன்று..
“என்னடா தம்பி நின்னுட்ட வா..??”
“இதோ வர்றேன்ணே..” சுந்தர் முன்னால் நடக்க கந்தப்பன் தன் மனைவியின் கையை பிடித்தபடி பின்னால் வந்தான்.. குறுக்கு வழியாக வந்தவர்கள் சீக்கிரமே கந்தப்பனின் தோப்பை அடைந்திருந்தார்கள்..
“உள்ள வாடா.. தண்ணி குடிச்சிட்டு போகலாம்.. அப்பு வேற பதறிட்டு இருப்பாக..?” சுப்பையா வாசலிலேயே அமர்ந்திருந்தவர் சுந்தரை இப்படி பார்க்கவும் பதற அவரை சமாதானப்படுத்தி தன் மனைவியோடு உள்ளே நுழைந்தான்.. தர்ஷினியை உள்ளே கட்டிலில் படுக்க வைத்து தண்ணீரை அவள் முகத்தில் தெளிக்க தர்ஷினிக்கு லேசாக மயக்கம் தெளிந்தது..
மயக்கம் தெளிந்தவள் தன் கணவனை பார்க்கவும் பாய்ந்து அவனை கட்டிப்பிடித்து அழ அவனுக்கும் கண்கலங்கியது..
“மா..மாமா..மாமா.. அ.. அவன்..தான்.. எல்லாரையும் சூட் பண்ணினானாம்..” அவள் ஓஓஓவென அழ வரும்போதே சுந்தர் அவள் குடும்ப விபரங்களை மேலோட்டமாக சொல்லியிருந்ததால் பார்த்திருந்த இருவருக்குமே வேதனைதான்..
அவளை அணைத்து சற்று நேரம் அழவிட்டவன் அது இப்போது முடிவது போல தெரியாமல் அழுது கொண்டே இருக்க அவளை நிமிர்த்த ஏற்கனவே களைத்து போயிருந்த இருந்த முகம் இப்போது தக்காளியாய் சிவந்து முகமெல்லாம் வீங்கி பார்க்கவே பரிதாபமாய் இருந்தது..
கந்தப்பன் மனைவி தர்ஷினியிடம் மாற்றுவதற்கு ஒரு சேலையை கொடுத்தவள் காப்பி போட செல்ல இப்போதுதான் தான் வேறு ஒருவர் வீட்டில் இருப்பதை உணர்ந்தாள்..
தேம்பிக் கொண்டே கணவனை நிமிர்ந்து பார்க்க அவனும் ஒன்றும் சொல்லாமல் அவளையே பார்த்தபடி இருந்தான்.. வெளியில் சுப்பையாவின் குரல்.. “சேலைய மாத்திட்டு வா வீட்டுக்கு போவோம்.. மத்தத அங்க பேசிக்கலாம்.. தந்தை நூறுதரம் போன் செய்திருக்க போனை எடுத்தபடி வெளியில் வந்தவன் இதோ வந்திட்டேன்ப்பு.. ஒன்னும் பிரச்சனை இல்ல… அவ நல்லா இருக்கா.. இல்லப்பு உங்க மருமகளுக்கு ஒன்னமில்ல நீங்க வரவேணாம்… நான் பெரியப்பா வீட்லதான் இருக்கேன் இப்ப கிளம்பிருவேன்..”
சுப்பையா அப்படியே இடிந்து போய் அமர்ந்திருந்தார்.. மூத்தமகன் செய்த செயல்களை கேட்டு, அவனின் இப்போதைய நிலையை நினைத்து அவருக்கு பேச்சே வரவில்லை.. தர்ஷினி சேலை மாற்றிவரவும் காப்பியை குடித்துவிட்டு உடனேயே கிளம்பிவிட்டார்கள்.. அதற்குள் கந்தப்பன் தன் வண்டியை எடுத்து வந்து கொடுத்திருக்க இருவருக்கும் வரும் வழியெல்லாம் பேச்சே இல்லை கணவனை அப்படியே கட்டி அணைத்தவள் முகத்தை அவன் முதுகில் பதித்திருக்க, அவனின் ஒருகை வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தாலும் மறுகை தன் வயிற்றில் பதிந்திருந்த மனைவியின் கையை பிடித்தபடிதான் தர்ஷினியின் கண்ணீர் அவன் பின்சட்டையை நனைத்தது..
வண்டியை நிறுத்தியதுதான் தாமதம் சத்தம் கேட்டு அனைத்து பெண்களும் வாசலுக்கே வந்துவிட்டார்கள் அப்பத்தா பேத்தியை கட்டிக் கொண்டு ஒப்பாரியே வைக்க, தெய்வானையும் மருமகளை அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டார்.. சௌந்தரம், நாயகி, சுந்தரி மூவரும் தர்ஷினியின் கையை பிடித்தபடி அழுது கொண்டிருக்க இவளுக்கு இவர்கள் அனைவரையும் பார்க்க அழுகை இன்னும்தான் பொங்கியது.. சத்தமாக ஓஓஓஓவென அழ..
ராமையாவும் கண்கள் கலங்கியவர் இவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்துவீட்டினர் லைட்டை போட்டு வாசலில் வந்து வேடிக்கை பார்க்கத்துவங்க அதில் சில கிழவிகள் இவர்கள் வீட்டை நோக்கி வருவதை கண்டவர் அனைவரையும் அதட்டி உள்ளே போகச் சொல்லி வெளி விளக்கை அணைத்தார்..
வந்த கிழவிகளுக்கு வடபோச்சே பீலிங்..!!
“ஆத்தா புள்ளைக்கு கொஞ்சம் வென்னித்தண்ணி காயவைச்சு கொடுங்க குளிக்கட்டும் இன்னையோட அதுக்கு புடிச்ச எல்லா சனியும் விலகட்டும் ..” தர்ஷினியின் சின்ன மாமாவும் இங்குதான் இருந்தார்.. விசயம் தெரியவுமே அப்பத்தாவும் மகனும் பதறி கிளம்பி வந்திருந்தனர்..
“அப்பு மச்சான் ரெண்டுபேரும் எப்படி இருக்காங்க..??”
“வள்ளி மாப்பிள்ளைக்குத்தான் மறுபடியும் கையில காயம்.. சௌந்தரம் மாப்பிள்ளைக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.. அவர ராத்திரியே வீட்டுக்கு போகச் சொல்லிட்டாக.. வள்ளிக்கும் மாப்பிள்ளைக்கும் துணையா ராத்திரி அங்கன இருக்கச் சொன்னேன்.. மூத்த மாப்பிள்ள இன்னும் ரெண்டு நாள் அங்கன இருக்கனும் போல.. பட்ட கையிலே படவும்தான் அவருக்கு வேதனை அதிகம்..”
“ப்பச்…ரொம்ப கஷ்டப்படுறாரோ .”.சுந்தருக்கு வருத்தமாக இருந்தது..
“இல்ல சுந்தரு மருமள காப்பாத்த முடியலையேன்னுதான் அவுகளுக்கு ரொம்ப வருத்தம்.. ரெண்டு ஆம்பளைக இருந்து வீட்டு பொண்ண இப்படி அடுத்தவன் கடத்த விட்டுட்டமேன்னு அவுகளுக்கு மனசு ஆறல.. இதோட வள்ளியும் மாப்பிள்ளைகளும் பத்துதரம் போன் பண்ணிட்டாக.. நீ கொஞ்சம் விபரத்தை சொல்லுய்யா..”
அவன் போனோடு வெளியில் போக அப்பத்தா பேத்தியை குளிக்க அழைத்துச் சென்றார்.. அவன் தங்கையிடமும் இரு மச்சானிடமும் போன் பேசி வர அங்கு பின் வாரத்தில் அப்பத்தாவின் மடியில் தர்ஷினி அவளை அணைத்தாற்போல மாமியாரும் மூன்று நாத்தனார்களும் சௌந்தரம் மகன்கூட தர்ஷினி மேல்தான் படுத்திருந்தான்.. மாமனாரும் தாய்மாமனும் சற்று அருகில் தரையில் அமர்ந்திருக்க சுந்தரும் குளித்துவிட்டு வந்து தன் குடும்பத்தாரின் அருகே அமர்ந்தான்..
“என்ன சுந்தர் நாம போட்ட பிளான் என்ன..? கடைசியில வேற மாதிரி நடந்திருச்சே..?”
[the_ad id=”6605″]
“ஆமா சித்தப்பா நாம ஊருக்கு வெளியில கார்ல மடக்கலாம்னு பார்த்தோம் … மச்சான்க ரெண்டுபேரும் வரவும் காட்டுக்குள்ள போயிட்டான்.. எல்லாம் நன்மைக்கேன்னு வைச்சிக்குவோம்..”
“ஏன் சுந்தரு அப்ப என் தங்கச்சி குடும்பத்துக்கு அநியாயம் பண்ணினது இவன்தானா..??”
“ஆமா சித்தப்பா.. எல்லாத்தையும் அவன் வாயாலே சொல்லிட்டான்..” அனைத்தையும் சொல்ல கேட்டிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியும் வேதனையும் தாங்கவில்லை.. தர்ஷினியும் அழுதுகொண்டே இருக்க..
அப்பத்தா ஓஓஓவென அழ ஆரம்பித்துவிட்டார்.. “அடப்பாவி யாரோ சொத்துதரலைன்னு என் மவ குடும்பத்தை இல்லாம ஆக்கிட்டானே.. அவன் நல்லாயிருப்பானா..? ஐயோ கருப்பா இந்த அநியாயத்தை எல்லாம் நீ பார்த்துட்டுத்தான் இருக்கியா..!!” அவர் இன்னும் இன்னும் அழ தர்ஷினியும் அழுகையை நிறுத்தவே இல்லை.. குடும்பத்தினர் எவ்வளவு சமாதானம் செய்தும் அழுகையை நிறுத்த முடியவில்லை..
