Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Varam Vaangi Vanthaval

Varam Vaangi Vanthaval Naan 24 2

 

அவர் மகனோ தன் தாயை அதட்டி ஆத்தா..அழாதிக சும்மாவே தர்ஷூ அழுதுட்டு இருக்கு நீங்க வேற ஏன் அவள இன்னும் அழ வைக்கிறிக ..இப்பவாச்சும் அந்த கொலைகாரன் யாருன்னு தெரிஞ்சுச்சே.. கடவுள் ஒருத்தன் இருக்கிறதாலதான் தங்கம் மாதிரி நம்ம சுந்தர் தர்ஷூக்கு மாப்பிள்ளையா அமைஞ்சாரு.. இனி எல்லாம் நல்லதா நடக்கும்.. அவ குடும்பம் அவளுக்கு துணையா நிக்கும்.. விடுங்கத்தா சும்மாவே உங்களுக்கு வீசிங் இருக்கு சாயங்காலத்தில இருந்துதான் அழுதுட்டு இருக்கிக.. அப்புறம் உங்களுக்கு ஏதாச்சும் வந்திரும்..பாவம் புள்ள இன்னைக்கு படாத பாடுபட்டு வந்திருக்கு.. இப்படியே அழுதா உடம்பு என்னத்துக்காகும்..” பேத்தியை சொல்லவும் அப்பத்தா சட்டென தன் அழுகையை நிறுத்தியவர் பேத்தியையும் சமாதானப்படுத்தினார்..

 

ராமையா தன் மகள்களை அழைத்து எல்லாருக்கும் சாப்பாடு போடுங்கத்தா மணியாச்சு..



Advertisement

 

ஆளாளுக்கு ஒரு யோசனையில் அறைகுறையாக சாப்பிட தர்ஷினி மாட்டேன் என சொன்னவளை சுந்தர்தான் வற்புறுத்தி ஏதோ பேருக்கு சாப்பிடவைத்தான்.. மணி பனிரெண்டை நெருங்கவும்,

 

Advertisement

போங்கத்தா எல்லாரும் படுங்க.. சௌந்தரம் பச்சை உடம்புகாரி நீ ஏன்தா இம்புட்டு நேரம் முழிச்சிருக்க.. இன்னும் செத்தநேரத்துல உம்மவன் எழுந்து ராத்திரி காவக்காரன் மாதிரி திருதிருன்னு முழிச்சிட்டு இருப்பான்.. நீயும் எந்திரிச்சு உட்கார்ந்திருக்கனும்.. போத்தா அவன் தூங்கும்போதே நீயும் செத்த கண்ணசரு… மகளை அதட்டியவர் தர்ஷினியின் சின்ன மாமாவோடு வெளி தாழ்வாரத்திற்கு படுக்கச் சென்றார்..

Advertisement

 

சுந்தர் அறைக்கு சென்றிருக்க தர்ஷினி வெளியில்தான் சுந்தரியோடு இருந்தாள்.. சுந்தரி தன் அத்தாச்சியை பூனை குட்டியாய் சுற்றியபடி ஈஷிக்கொண்டிருந்தாள்.. அத்தாச்சி உங்களுக்கு ஒன்னும் ஆகலைதான நான் ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா..?” அவள் கையை பிடித்து தன் மேல் வைத்துக் கொண்டாள்..

 

Advertisement

சுந்தரியின் முகத்தை பார்த்து பதறியவள் என்ன சுந்தரி யார் உன்னை அடிச்சா கன்னமெல்லாம் இப்படி வரிவரியா இருக்கே..?”

 

அதவிடுங்க அத்தாச்சி அப்பத்தாவையும் சித்தப்பாவையும் தவிர எல்லாமே என்னை இன்னைக்கு அடி வெளுத்திருச்சுக.. ஏன் உங்கள சொல்லாம கூட்டிட்டு போனேன்னு… அதிலயும் அண்ணே விட்டாக பாருங்க ஒரு அறை..!!”

 

அவள் கன்னத்தை தடவியவள் ச்சோ ஸாரிப்பா நான்தான உன்னை வம்பு பண்ணி கூட்டிட்டு போனேன்.. ரொம்ப ஸாரி சுந்தரி..

 

இதுக்கு எதுக்கு அத்தாச்சி ஸாரி எல்லாம் நீங்க நல்லபடியா வீட்டுக்கு வந்தீகளே அது போதும் அதுக்கு நான் இன்னும் எத்தனை அடிவேணாலும் வாங்குவேன் இதெல்லாம் ஒரு அடியா.. கவலைய விடுங்க.. நீங்க நல்லபடியா வந்தா தெப்பக்குளத்து பிள்ளையாருக்கு நூத்தியெட்டுகுடம் தண்ணி ஊத்துறேன்னு வேண்டியிருக்கேன்.. நான் வெள்ளன முழிச்சாத்தான் அத செய்யமுடியும்..நான் படுக்க போறேன்.. நீங்களும் போய் படுங்க..

 

தன்னால் அடியும் வாங்கி தனக்காக நூத்தியெட்டு குடம் தண்ணி தூக்க போறாளா.. சுந்தரியை இறுக அணைத்து கன்னத்தில முத்தம் வைக்க சுந்தரியும் தர்ஷினியை அணைத்துக் கொண்டாள்… தன் குடும்பத்தை இழந்ததிலிருந்து அவள் அடி மனதில் எப்போதும் கொழுந்துவிட்டு எறிந்து கொண்டிருக்கும் அனாதை என்ற உணர்வு அப்படியே கரைந்தாற்போல..காணாமல் போக துவங்கியது.. இல்ல எனக்காக இவ்வளவு பேர் இருக்காங்க..

 

சற்று பொறுத்து தர்ஷினி அறைக்குள் வர சுந்தர் கட்டிலில் படுத்திருந்தான்.. ஒரு கையால் கண்களை மறைத்தபடி படுத்திருக்க தர்ஷினி அவன் அருகில அமர்ந்து அவன் மேல் கைவைத்தாள். அவன் கண்திறந்து பார்க்க ஸாரி மாமா நீங்க அவ்வளவு சொல்லியும் நான் கேக்காம போனதாலதான் இவ்ளோ ப்ராபளம்.. ஸாரி..” அவன் முகமெங்கும் முத்தமிட்டு ஸாரி கேட்டுக் கொண்டிருக்க அந்த முத்தத்தை வாங்கியபடி அவளை இறுக அணைத்தவனுக்கோ பேச்சே வரவில்லை.. அவளின் ஸ்பரிசத்தை உள்வாங்கி கொண்டிருந்தான்..

 

இருவருமே இந்த நிமிடம் மீண்டும் வராமலே போய்விடுமோ என பயந்திருந்தார்கள்.. அவன் அவளை இறுக தன்னுள் புதைத்திருந்தான்.. காற்றுக்கூட புகமுடியாமல் அவ்வளவு நெருக்கம்.. எவ்வளவு நேரம் அப்படியே கடந்ததோ.. கண் தூங்கவில்லை.. என்னவோ பெரிய துன்பத்தை கடந்தாற்போல,  வாழ்வின் கடைசி எல்லைவர சென்று வந்தாற்போல அப்படி ஒரு அசதி.. இருந்தாலும் ஒருவரை ஒருவர் பிரியமனதில்லை..  தன் கணவனின் இதயதுடிப்பு சத்தத்தை மட்டுமே உணர்ந்தவள் அதில் தன் முத்தத்தை வைத்தாள்..

 

மாமா..

 

ம்ம்..”

 

மாமா..

 

ப்பச் சொல்லுடி..

 

அவன்தான் கொலைகாரன்னு உங்களுக்கு எப்படி தெரிஞ்சிச்சு..?”

 

அதுதான் இப்ப முக்கியமா..!!”

 

ஆமா.. அது…

 

[the_ad id=”6605″]

 

எனக்கு அது முக்கியமில்ல.. சொல்லு நீயும் சுந்தரியும் எங்க போனிங்க..?”

 

அது வந்து.. அது..???”

 

இழுக்காம சொல்லுடி பச்சமொளகா..!!”

 

அசடு வழிந்தவள் அது.. அது…போங்க மாமா உங்களுக்கு ஒரு சர்பிரைஸ் கொடுக்கலாம்னு நினைச்சேன்..!!”

 

அவளை கீழே தள்ளி அவள் மேல் படர்ந்தவன் அவள் கன்னத்தை நறுக்கென கடித்து, எது நீ கொடுத்ததுக்கு பேரு சர்பிரைஸா..!! அம்மா தாயே இதுக்கு பேர் ஷாக் ட்ரீட்மென்ட்.. உன்னை கண்ணுல பார்க்கிறவரைக்கும் மனுசன பைத்தியம் பிடிச்சு அலையவைச்சிட்ட.. நியாயப்படி நான் உன்மேல இருக்க கோபத்துக்கு உன்கிட்ட பேசவே கூடாது.. ஆனா என்னால அப்படி இருக்க முடியலையே..!!” அவள் கழுத்துக்குள் தன் முகத்தை புதைக்க,

 

அவன் முறுக்கேறிய புஜத்தை தன் கைகளால் வருடியவள் அவன் வெற்றுமுதுகில் கோலமிட்டு சாயங்காலம் நாயகி அண்ணி.. அவங்க மாசமா இருக்கேன்னு சொன்னாங்களா. எல்லாரும் என்னை கேட்டாங்க.. நீங்க எப்போ குழந்தை பெத்துக்க போறிங்கன்னு… அப்போதான் எனக்கு நியாபகம் வந்திச்சு டேட் தள்ளி போயிருக்கிறது அதான் சுந்தரியோட போய் அந்த கிட்வாங்கி டெஸ்ட்பண்ணி உங்கள சஸ்பிரைஸ் பண்ணலாம்னு நினைச்சேன்.. அது.. அது .. ??”அவள் குரல் உள்ளே போக,

 

அதுக்கு ஏன் வாய்ஸ் உள்ள போகுது..?” தன் மனைவியின் சேலையை ஒதுக்கியவன் அவள் வயிற்றில் அழுந்த முத்தமிட்டு ஹாய் பேபி… வாங்க வாங்க.. நல்லாயிருக்கிங்களா.. நான்தான் குட்டி உங்க அப்பா..!!” என்னவோ நேரே பேசுவது போல பேசி நொடிக்கு ஒரு முத்தமிட மீசை முடிகள் அவளை கூச செய்தாலும் தானும் அதை ரசித்தபடி, கணவனை காதல்பொங்க பார்த்திருந்தாள்..

 

என்ன லட்டு என்னை சைட் அடிக்கிறியா.. என்னையும் பேபியையும் கண்ணு வைக்காத..!!”

 

தன் கைகளை விரித்தவள் போதும் மாமா உன் குட்டிய கொஞ்சினது.. உங்கள சைட் அடிக்கிற உரிமை எனக்கு மட்டும்தான் இருக்கு..” தன் மனைவியை பார்த்தவன்,

 

இவளுக்காக அவனவன் கொலைகூட பண்ண தயங்க மாட்றான்.. இவ என்னை சைட் அடிக்கிறாளா..!! தன் தேவதையை தனக்குள் தாங்கியவன் அவளுக்கு தன் காதலை உணர்த்த துவங்கினான்.. தன் முத்தத்தால் அவளை மூழ்கச் செய்தவன் அவளின் மென்மையில் எப்போதும் போல இப்போதும் வீழ்ந்து அவள் இதழில் கவி படிக்கத் துவங்கினான்..கணவனின் காதலில் கரைந்தவள் தன் கணவனின் வன்மையில் மயங்கி இன்று தான் பட்ட காயங்களை எல்லாம் மறக்க துவங்கினாள்.. வெகுநேரம் கழித்து தன்னை மீட்டவனுக்கு அப்போதுதான் அவள் கால்காயங்கள் நினைவுவந்தது.. விளக்கு வெளிச்சத்தில் அவள் காலை பார்க்க அதில் வரிவரியாக நீளக் கோடுகள் அவள் நிறத்தை விட இன்னும் சிவப்பாக தெரிய வலிக்கிதா.. அம்மு..??”

 

இப்போ பரவாயில்ல மாமா கிரான்மா மருந்து போட்டுவிட்டாங்க..

 

அந்த இருட்டுல ரொம்ப பயந்திட்டியோடி..

 

பயம்தான் மாமா இருந்தாலும் என் மனசு சொல்லுச்சு உன் மாமா வந்திடுவாருன்னு.. அதான் நீங்க சீக்கிரம் வரனும்னு காட்கிட்ட வேண்டிக்கிட்டே இருந்தேன்.. அசந்திருந்த மனைவியின் நெற்றியில் முத்தமிட்டு,

 

தூங்குடா லட்டு காலையில பேசிக்கலாம்.. அவளை தன் மார்போடு அணைத்திருந்தான்.

 

காலையில் கண்விழிக்கும்போதே மணி எட்டிருக்கும் பக்கத்தில் கணவனை காணவில்லை.. அப்படியே திரும்பி படுத்தவள் சுவற்றில் மாட்டியிருந்த அவர்கள் திருமண போட்டோவை பார்க்க அதில் தன் கணவனின் கம்பீரத்தை ரசிக்க ஆரம்பித்தாள்.. அதை பார்த்தபடியே படுத்திருக்க நேரம் போனதே தெரியவில்லை..

 

[the_ad id=”6605″]

 

சற்று நேரம் கழித்து அறைக்குள் நுழைந்த சுந்தர் மனைவி இன்னும் படுக்கையில் இருக்க ஏய் இன்னும் கிளம்பலையா..? என்ன பார்த்துட்டு இருக்க..?”

 

எங்க மாமாவத்தான் பார்த்துட்டு இருக்கேன்.. எங்க கிளம்ப சொல்றிங்க..?”

 

மாமன போட்டோல சைட் அடிக்காம நேராவே பாரு.. அவளை பார்த்து கண்ணடித்தவன் இப்ப மச்சான பார்த்துட்டு அப்படியே உன்னையும் ஹாஸ்பிட்டல்ல செக் பண்ணிரலாம்.. கிளம்பு கிளம்பு..

 

அவளை தூக்கி பாத்ரூமில் கொண்டு விட,

 

அவள் கிளம்பி வர வீடே அமைதியாய் இருந்தது.. எங்க மாமா வீட்ல யாரையுமே காணோம்..?”

 

நம்ம வீட்டு ஆளுங்க எல்லாம் மச்சான பார்க்க போயிருக்காங்க.. கார்ல அனுப்பி வைச்சிருக்கேன்.. அப்பத்தாவும் சித்தப்பாவும் அவங்க வீட்டுக்கு போயிருக்காங்க.. வா நாம டிபன் சாப்பிட்டு வண்டியில கிளம்புவோம்..

 

இருவரும் சாப்பிட ஏன்டா லட்டு மாசமா இருக்கவங்களுக்கு வாந்தி வரும், தலை சுத்தும்னு எல்லாம் கேள்விப்பட்டிருக்கேன்.. உனக்கு அதுமாதிரி எதுவுமே தெரியலையே..??”

 

ச்சோ அப்ப இது பேபியா இருக்காதா..??”

 

போடி லூசு.. ஒரு சிலபேர் நார்மலாவும் இருப்பாங்க.. சரி இது பேபியா இல்லாட்டாலும் என்ன நமக்கென்ன கல்யாணமாகி பத்து வருசமா ஆச்சு.. அப்படியே ஆனாலும் நீதான்டி எனக்கு முக்கியம் எந்த எதிர்பார்ப்பும் வைச்சிக்காத.. பட் என் கியூரியாசிட்டி சொல்லுது நமக்கு இது பேபிதான்னு.. சிரிடாம்மு..!!”

 

பளிச்சென சிரித்தவள் எனக்கும் அப்படித்தான் மாமா தோனுது..  லேசாக கண்கலங்கியவள் இப்ப எங்க அம்மாவ பார்க்கனும் போல, அவங்க மடியில தலை வைச்சுக்கனும் போல இருக்கு மாமா..

 

அவளை தன் மடியில் அமர வைத்தவன் விடுடா.. அதையே நினைக்க கூடாது.. உனக்கு எல்லாமா நான் இருப்பேன்..நீ எப்பவும் ஹாப்பியா இருக்கனும் அதுதான் மாமாக்கு முக்கியம்.. ஆனா உங்க பேம்லி எல்லாரும் எப்பவும் உன்கூடத்தான் இருக்காங்க..

 

எப்படி மாமா சொல்றிங்க.. அதோட இவன்தான் கொலைகாரன்னு எப்படி மாமா கண்டுபிடிச்சிங்க..??”

 

எனக்கு உங்க குடும்ப விசயம் கேள்வி பட்டவுடன உங்க அப்பாவோட பார்ட்னர் மேலதான் முழு டவுட்.. நான் வேலைபார்த்த கம்பெனி மூலமா டிடெக்டிவ் வைச்சு கண்டுபிடிக்க முயற்சி பண்ணினேன்.. ஆனா அவங்களால கண்டுபிடிக்க முடியல.. அதோட அவர நம்ம நேரா பார்க்கும்போது சில க்ளு கிடைக்கும் நினைச்சேன் பட் அதுவும் நடக்கல.. நாம அவங்க டெத்துக்கு போயிருந்தோம் பாரு..

 

அப்ப எனக்கு ராம் மேல டவுட் அவனையேதான் வாட்ச் பண்ணிட்டு இருந்தேன்.. பட் எந்த க்ளுவும் கிடைக்கல.. நாம அங்க பேசிட்டு இருக்கும்போதுதான் பார்த்தேன் அண்ணன் தம்பி ரெண்டுபேர் சேர்ந்து எடுத்துக்கிட்ட போட்டோ அங்க மாட்டியிருந்தாங்க.. பட் அவன் அங்க இல்ல.. நாம கார்ல ஏறவந்தோம் பாரு அங்கதான் பார்த்தேன் அவன் அவனோட கார்ல இருந்தத.. அந்த கார எப்பவோ பார்த்த நியாபகம் ஆனா எனக்கு அப்ப அது நியாபகத்துக்கு வரல..

 

நைட் அங்க உங்க வீட்ல தங்கிட்டு..

 

 

[the_ad id=”6605″]

 

மாமா அது நம்ம வீடு..

 

சரிடா லட்டு நம்மவீட்ல தங்கிட்டு காலையில கிளம்பினோம் பாரு அப்பதான அந்த சூட்கேஸ் எடுத்தேன் அதுலதான் எல்லா சொத்தும் தர்ஷனுக்கும் அவனுக்கப்பறம் உனக்கும் கிடைக்கிறமாதிரி எல்லாம் பக்காவா எழுதியிருந்தாங்க..”

 

 அந்த டாக்குமென்ட் ஆன்ட்டி வைச்சிருந்தாங்கன்னு சொன்னிங்க அப்புறம் எப்படி மாமா நம்ம வீட்ல..??”

 

ம்ம் உங்க பேம்லி டெத்துக்கு அப்புறம் நீ ஹாஸ்பிட்டல்ல ரொம்பநாள் இருக்கவும் முக்கியமான பொருளெல்லாம் அவங்கதான் பேக் பண்ணி உங்க மாமாட்ட கொடுத்திருக்காங்க…இதெல்லாமே உங்க மாமா செக் பண்ணாம இந்த வீட்ல வைச்சிட்டு போயிட்டாங்களாம்.. அதோட இந்த சின்ன சூட்கேஸூம் இருந்திருக்கும்னு நினைக்கிறேன்.. ஆனா வீடு சுத்தம் பண்ணும் போது அத திறந்தே பார்க்காம வேலைபார்க்கிறவங்க அந்த வீட்ல எடுத்து போட்டுட்டாங்க போல.. அனேகமா அதைப்பத்தி நம்மகிட்ட சொல்லதான் அவங்க நினைச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன்..

 

இதுல இவன் மேல உங்களுக்கு எப்படி மாமா டவுட் வந்திச்சு..?”

 

ரொம்ப சிம்பிள்டி அந்த சொத்து கிடைக்காம யாருக்கு ரொம்ப லாஸ்ன்னு அந்த கோணத்தில விசாரிக்க ஆரம்பிச்சேன்.. இவங்க அண்ணன் தம்பி ரெண்டுபேரும் மாட்டினாங்க.. அதுல யாருன்னு கண்டுபிடிக்கத்தான் கொஞ்சம் கஷ்டமாச் போச்சு..

 

அவங்க அண்ணனாவது நல்லவனா மாமா..??”

 

பாம்புல எதுடி நல்ல பாம்பு, கெட்ட பாம்பு ரெண்டுமே கருநாகம்தான்.. என்ன செஞ்சது இவன் மூளை அவன்.. ரெண்டு பேரும் எல்லா விசயத்திலயும் ஒத்துமையா இருக்கவங்க ஒரே ஒரு வித்தியாசம் அவங்க வைச்சிருந்த கார்.. அது ஒன்னுதான்.. எனக்கு கிடைச்ச ஒரே ஒரு ஆதாரம்.. சௌந்தரத்துக்கு பெயின் வந்த அன்னைக்கு உன்ன வழிமறிச்சான் பாரு.. அன்னைக்கு அப்புறம் ஒருதரம் நம்ம பக்கத்து ஊருல ஒரு தரம், அன்னைக்கு மச்சான் ஆக்சிடென்ட் அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல எல்லாம்  இவன் மிஸ்பண்ணின ஒரே ஆதாரம்.. இதை வைச்சுத்தான் நாங்க ஒரு பிளான் போட்டோம்.. எப்படியும் உன்னை அவன்கிட்ட அனுப்பினாதான் அவன் வாயிலயிருந்து உண்மையை வரவழைக்க முடியும் அதான் நாங்க நல்ல நேரத்துக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தோம்.. என்ன என் கண்பார்வையில இருக்கும்போது உன்னை அவன் கடத்தினா அவன சீக்கிரமா பிடிச்சிரலாம்னு பிளான் போட்டோம்.. அதுக்குல்ள நீயா போய் அவன்கிட்ட மாட்டிட்ட..!!”

 

ஹிஹிஹி.. ஸாரி மாமா.. அவள் சிரிப்பை பார்த்து இவனுக்கு வாய்கொள்ளா சிரிப்பு..

 

ஹாஹாஹா போடி பச்சமொளகா.. இன்னும் கேள்வி இருக்கா அவ்ளோதானா..??”

 

இருக்கு ஆனா நியாபகம் வரும்போதெல்லாம் கேட்கிறேன்..

 

 தன் கைகளை விரித்தவன் ம்ம் மாமா உனக்காக இவ்ளோ வேலை பார்த்திருக்கேனே எனக்கு ஒன்னும் கிடையாதா..!!”

 

அதான் நைட் வேணும்ங்கிற அளவுக்கு வாங்கிட்டிங்களே.. அப்புறம் நான் உங்களுக்கு ஏதாவது தரனுமா.. உங்க வொய்ப்புக்காக நீங்க பண்ணுனிங்க.. அதுக்கு ஏன் நான்  தரனும்.. அவள் இடுப்பில் கைவைத்து அவனை கேள்விகேட்க..

 

அதானே நீ ஏன் தரனும்… அவளை இடுப்போடு சேர்த்து மார்பு உயரத்திற்கு தூக்கியவன் நான் உன்னை முதல்முதலா பார்த்ததில இருந்து என்னை எப்போதும் டிஸ்டர்ப் பண்ற அந்த டாட்டூக்கு நான் வேண்டிய அளவு கொடுத்துட்டு போறேன்.. அவன் தன் முத்த எண்ணிக்கையை ஆரம்பித்திருந்தான்..

 

அவன் மனசாட்சியோ டேய் சோனமுத்தாஆஆஆஆ…. அந்த டாட்டூ போட்டவ மட்டும் என் கையில கிடைச்சா…!!! இவன் ரொம்பத்தான் ஓவராப்பண்றான்..க்கும்..

 

                                                 இனி………???

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!