Varam Vaangi Vanthaval Naan 25 2
சுந்தர் மனைவி பேரிலேயே சுகர் பேக்ட்ரியும் வாங்கியிருக்க இப்போது அவன் தொட்டதெல்லாம் பொன்தான்..மனைவி அங்கும் இங்கும் அலைவதை பார்த்தவன்
“லட்டுமா ஒரு இடத்துல உட்காருடி.. நைட்ல கால் வீக்கம் வந்திரும்..” அவள் கையில் ஜூஸை திணிக்க ..
Advertisement
“சின்ன அண்ணி வராதது நல்லாவே இல்ல மாமா..” நாயகிக்கு இது ஒன்பதாவது மாதம் தர்ஷினிக்கு ஏழு.. இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டாம் என நினைத்து நாயகி குடும்பத்தினர் மட்டும் வந்திருக்க அடுத்த வாரம் தர்ஷினியை அவள் சின்ன மாமா வீட்டில் விட்டு நாயகிக்கு வளைகாப்பு நடத்தலாம் என முடிவு செய்திருந்தார்கள்..
விருந்தினர்கள் எல்லாம் சென்றிருக்க வீட்டாட்கள் மட்டும்தான் .. மாலை ஐந்திருக்கும்.. வள்ளி கணவரும் நாயகி கணவரும் வண்டியில் எங்கோ சென்றுவிட்டு வர கையில் நிறைய நுங்குகள்.. ஒரு சாக்குநிறைய கொண்டு வந்தவர்கள் அதை வாசலில் கொட்ட..
Advertisement
Advertisement
தர்ஷினியோ “அண்ணே.. வாங்கிட்டு வந்திட்டிங்களா.. இப்போ சீசன் இல்லைன்னு சொன்னாங்க..??”
“ஆத்தா நீ ஒன்னு ஆசைப்பட்டு கேட்டு அத வாங்காம இருப்போமா..??” அவர்கள் அமர்ந்து அதை சீவி நுங்கு , கடுக்காய் தனியாக பிரித்து தர்ஷினியிடம் கொடுத்துக் கொண்டிருக்க அதை எப்படி சாப்பிடுவது என திணறியவளுக்கு குடும்பமே பாடம் கத்துக் கொடுத்தது.. அவள் போதும் என்று சொன்னாலும் அவர்கள் விடவில்லை.. பார்த்துக் கொண்டிருந்த சுந்தருக்கு சிரிப்பு.. இவ நம்மள மட்டுமில்ல எல்லாரையும் வளைச்சிட்டா கேடி… இவர்கள் அனைவரும் தர்ஷினியின் உண்மையான பாசத்துக்கு கட்டுப்பட்டிருந்தார்கள்..
Advertisement
அப்பத்தாவிற்கு தன் பேத்தியை இந்த குடும்பமே தாங்குவதை பார்த்து கண்கலங்கியது.. அனைவரும் அவளை சுற்றி அமர்ந்து அவளோடு பேசிக் கொண்டிருக்க என் பேத்தி கொடுத்து வைச்சவதான்.. குழந்தைகள் கூட இயல்பாய் அத்தையோடு ஒட்டிக் கொண்டன.. ஒன்று அவள் மடியிலும் மற்றொன்றோ அவள் முதுகில் சாய்ந்தும் விளையாடிக் கொண்டிருந்தது..
பணம் இருந்தா போதுமா.. இந்த புள்ளைய நான் எப்படி இந்த ஊருக்கு கூட்டிட்டு வந்தேன்.. மனநோயாளியா, சாகுறேன்னு சாகுறேன்னு துடிச்சவ வேற குடும்பத்துக்கு போயிருந்தா இவ்வளவு சந்தோசமா இருந்திருப்பாளா..இல்ல சுந்தரு மாதிரி ஒரு புருசன்தான் கிடைச்சிருப்பானா.. இப்படி அவபுருசன் கண்ணுக்குள்ள வைச்சு பாதுகாத்து அவள சந்தோசமா வைச்சு அந்த கொலைகாரனையும் பிடிச்சிருக்கான்.. அவர் உள்மனதே சொல்லியது தன் பேரன் பாலாவ கட்டியிருந்தாக்கூட அவ நிம்மதியா இருந்திருக்க மாட்டா.. சட்டென தன் கண்ணை துடைத்தவர் தன் காலடி மண்ணை எடுத்து குடும்பத்தோடு அனைவரையும் அமர வைத்தவர் திருஷ்டி கழித்தார்..
இரவு ஏழுமணியிருக்கும் “தர்ஷூ கிளம்பு கொஞ்சம் வெளியில போயிட்டு வருவோம்..”
“போங்க மாமா கால்வலிக்கிது நாளைக்கு வாக்கிங் போவோம்..”
“வாக்கிங்கா… ஓஓஓஓ மேடம் நீயும் சுந்தரியும் சாயங்காலம் வாக்கிங்கிற பேர்ல ஊர்ல இருக்கிற கடையில எல்லாம் தேன்மிட்டாய், தேங்காய் பர்பி, கடலச்சு, இலந்தப்பழம், நவ்வாப்பழம்னு வாங்கி திண்ணுட்டு திரியிறது எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா.. அதெல்லாம சுத்தமா இருக்குமான்னு கூட பார்க்காம சாப்பிட்டா உடம்புக்கு ஏதாச்சும் ஆகும்டி.. என்கூட வாக்கிங் வான்னு சொன்னா கேட்காம ரெண்டுபேரும் ரொம்ப கேடி வேலை பார்க்கிறிங்க சொல்லிட்டேன்..”
அவள் உர்ரென்று முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள,
“இதுக்கொன்னும் குறைச்சல் இல்ல.. இப்ப நாம கார்லதான் போறோம் கிளம்புடி பச்சைமொளகா..??” அவன் கோபத்தில் பல்லை கடிக்க
“இவர் பச்சை மொளகா மாதிரி சுள்ளுன்னு விழுந்திட்டு என்னை பச்சமொளகான்னு சொல்றது..” தனக்குள் முனங்கி கொள்ள,
“ஏய் என்ன வாய்க்குள்ளயே முனங்குற..??”
“இதோ கிளம்புறேன்னு சொன்னேன் மாமா..” அவனை பார்த்து உதட்டை சுழித்தவள் வேறு உடை மாற்ற சென்றாள்.. குட்டி ரதம் போல அசைந்தாடி செல்பவளை ரசித்தவன் கோடி கோடியா சொத்திருக்கு இந்த லூசு என்னன்னா அந்த கேடியோட சேர்ந்துகிட்டு இழந்தமிட்டாயும், தேன்மிட்டாயும் தின்னுட்டு இருக்கு.. அவள் பணத்தில் கவனம் வைக்காமல் இருக்க சுந்தர் அதன் மேல் அதிக கவனம் செலுத்தினான்.. பக்காவாக எல்லாம் திட்டமிட்டு நிறைவேற்றினான்.. அவ்வப்போது தர்ஷினியின் சின்ன மாமாவிடமும் வக்கீலிடமும் கலந்தாலோசித்தான்..
எவ்வளவு வசதி வந்தும் ராமையாவும் தெய்வானையும் மாறவே இல்லை.. அது மருமகளுடைய பணம், சொத்து என்பதில் தெளிவாய் இருந்தார்கள் .. ராமையா இந்த வயதிலும் தன் டிவிஎஸ் பிப்டிதான்.. தெய்வானையும் வேலை முடித்து ஆடு மேய்க்க சென்றுவிடுவார்..வீட்டு வேலைக்கு ஆள் வைக்கவா என்று கேட்டால் வேண்டாம் என்பதில் குறியாக இருந்தார்கள்.. தர்ஷினியும் கொஞ்சம் கொஞ்சம வேலைகளை பழகியிருந்தாள்.. ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் பெண்களோடு சேர்ந்து ராமையா, சுந்தர் இருவரும் வீட்டு வேலை பார்த்தார்கள்..
தர்ஷினி மெல்லிய காட்டன் புடவை உடுத்திவர, குடும்பமே வாசலில் கிளம்பி நின்றார்கள்.. “எல்லாருமா வர்றாங்க.. மாமா இத சொல்லவே இல்ல.. சுந்தரி எங்க போறோம்..”
“தெரியல அத்தாச்சி அண்ணே கிளம்ப சொன்னுச்சு அதான்..”
அனைவரையும் அவர்களது பெரிய காரில் ஏறச் சொன்னவன் டிரைவரை கார் எடுக்கச் சொல்ல இவர்கள் மட்டும் ஏறாமல் நின்றார்கள்..
“மாமா நாம வண்டியில போறோமா..??”
அவள் கண்ணை மூடியவன் சற்று தள்ளி அழைத்துச் சென்று கண்ணை திறக்க புத்தம் புதிய கார்.. “மாமா.. !!!”
[the_ad id=”6605″]
“இது உனக்காக வாங்கினது .. நீதான் ஓட்டுற..?? அவன் பாதை சொல்ல இவள் காரை கிளப்பியிருந்தாள்.. இனி இத நீ யூஸ் பண்ணிக்கோ இத்தனை நாள் உனக்கு ஏதாவது பிரச்சனை வரும்னுதான் தனியா போகாதன்னு சொல்லிட்டு இருந்தேன்.. இனி உன்னோட சாய்ஸ்.. நீ எப்ப வேணா எங்க வேணா போயிக்கலாம்..” இவன் பாதை காட்ட அவர்கள் ஊரிலிருந்து 4 கிலோ மீட்டர் தூரமிருக்கும்.. அனைவரையும் வரவேற்றது ராஜலெட்சுமி ஆதரவற்றோர் இல்லம்.. ஐந்து ஏக்கர் இடமிருக்கும் அதன் நடுவில் அந்த கட்டிடம் கம்பீரமாய் நிற்க..
“இங்க எதுக்கு மாமா..?”
“கண்டுபிடி பார்ப்போம்..”
யோசித்தவள்” தெரியலையே..”
அனைவரையும் உள்ளே அழைத்துச் சென்றவன் “உங்க அப்பா பார்ட்னர் வரதராஜன் லெட்சுமி அவங்களோட சொத்துல இருந்து இந்த டிரஸ்ட் ஆரம்பிச்சிருக்கேன்.. இது இனி உன்னோட பொறுப்புதான் கவர்மெண்ட்ல சில அப்ரூவ் எல்லாம் வாங்க வேண்டியிருக்கு.. இப்பவே நிறைய பசங்களோட படிப்பு செலவுக்கு இதுல இருந்து கொஞ்சம் கொடுத்திருக்கேன்.. எல்லாத்துக்கும் நான் வக்கில் கிட்ட கணக்கு கொடுத்திருக்கேன்.. நீயும் எல்லாத்துக்கும் ஹெல்ப்புக்கு ஆள்வைச்சிக்கோ.. உனக்கு பணக்கணக்கு சரிவராதுடி அன்பு மட்டும்தான் செலுத்த வரும் இங்க வர்றவங்களுக்கும் அதுதான் தேவை.. அவங்க சொத்துல இருந்து ஒரு பைசாக்கூட உனக்கு தேவையில்ல.. அதுக்காகத்தான் இத ஆரம்பிச்சிருக்கேன்..”
“உள்ள போய் பாருங்க..பின்னாடி தோட்டமும் இருக்கு..” அனைவரும் விலக, “என்ன லட்டு பார்த்துட்டே இருக்க உனக்கு பிடிக்கலையா..??”
ஒன்றுமே சொல்லாமல் தன்கைகளை விரிக்க.. வயிறு இடித்ததால் அவளை பின்னால் இருந்து அணைத்தவனின் கன்னத்தில் முத்தமிட்டு “லவ் யூ மாமா..!!” தன் மகிழ்ச்சியை எப்படி காட்டுவதென்று தெரியவில்லை.. குடும்ப ஆட்கள் இருப்பதால் கொஞ்சம் அமைதியாக இருந்தாள்..
அனைவரும் சுற்றிப்பார்த்து கிளம்ப தன் மாமனாரிடம் சென்றவள் “அப்பா நீங்க எனக்கு ஹெல்ப் பண்றிங்களா..??” இப்போதெல்லாம் அவர்களை அப்பா அம்மா என்றே அழைக்க பழகியிருந்தாள்..
“எனக்கென்னத்தா தெரியும்.. வேற படிச்ச பிள்ளையா வைச்சுக்கோயேன்..”
“இல்லப்பா.. நீங்க உங்க பிள்ளைங்க எல்லாரையுமே நல்லா வளர்த்திருக்கிங்க.. அதோட மாமா… அவங்க உங்கள மாதிரி.. இங்க வளர்ற பசங்களுக்கு உங்களோட கைட் இருந்தா அவங்க ப்யூச்சர்ல ஒரு நல்ல மனிதனா வளர சான்ஸ் இருக்குப்பா.. ரொம்ப வொர்க் எல்லாம் இல்ல அப்பப்போ அவங்கள வந்து கவனிச்சு அவங்களுக்கும் எனக்கும் அட்வைஸ் பண்ணுங்களேன் ப்ளிஸ்..”
“அதுக்கு எதுக்குத்தா பெரிய வார்த்தை எல்லாம்… வர்றேன்..” அவருக்கு மகிழ்ச்சிதான்.. தன் மருமகள் தன்னை தந்தையாக நினைப்பதை நினைத்து..
“சுந்தரி நீயும் ஸ்கூல் விடவும் இங்க வந்திரு.. நீதான் அவங்க எல்லாருக்கும் கேம்ஸ் கத்துக் கொடுக்கனும்..” அடுத்து தன் கிரான்மாவுக்கு ஒரு வேலை கொடுக்கவென அடுத்தடுத்து திட்டமிட அதுவே சொல்லியது இது எவ்வளவு பிடித்தமென..
ஐந்து வருடங்கள் கழித்து ,
அனைவரும் தர்ஷினியின் தாய்வீட்டில் வீடே கோலாகலமாக இருக்க சுந்தர் தர்ஷினி மகன் மகளுக்கு இன்று காதுகுத்து.. தர்ஷினிக்கு இது ஐந்தாம் மாதம்.. அவள் மீண்டும் தாய்மை அடைந்திருந்தாள்.. அவள் பிள்ளைகளின் காதுகுத்தை இங்கேயே வைக்க பிரியப்பட சுந்தர் தங்கள் குலதெய்வ கோவிலில் இரட்டை கிடாய் வெட்டி எப்போதும போல நேர்த்தி கட்டனை செலுத்தி கருப்பனை வணங்கி இரண்டு பஸ் பிடித்து தன் சொந்தபந்தங்கள் என அனைவரையும் தஞ்சாவூர் அழைத்து வந்திருந்தான்..
இவர்களின் மகள் அப்படியே தர்ஷினியை போல உருவம் ஆனால் செயல் அனைத்தும் சுந்தரை போல அடுத்தவர்களை அனுசரித்து செல்வது பாசம், அக்கறை ,கண்டிப்பு காட்டுவது மகன் தந்தையே போல உருவத்தில் தாயை போல குணத்தில் தனக்கு இருக்கோ இல்லையோ மற்றவர்களிடம் கொடுத்துவிட்டு அவர்களின் மகிழ்வில் மகிழ்ச்சி அடைவான்.. நாயகிக்கும் மகனே பிறந்திருக்க சுந்தரிக்கு திருமணம் முடிந்து ஒரு மாதமாகியிருந்தது..
தர்ஷினியின் உறவான ராஜாவையே திருமணம் முடித்திருந்தார்கள்.. உள்ளுரில்.. இப்போது ராஜாதான் சுந்தரின் வலது கைபோல அனைத்திலும் உதவியாய் இருக்க சுந்தரி தர்ஷினிக்கு உதவி.. ஆசிரமத்தில் அவள் இல்லாமல் ஒன்றும் நடக்காது பத்துபேரோடு ஆரம்பித்த ஆசிரமம் இப்போது 200 பேர் தங்கியிருந்தார்கள்.. குழந்தைகள் , பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள், ஊனமுற்றோர் என அனைவரும் இருக்க தர்ஷினியின் முக்கால்வாசி நேரம் அவர்களோடுதான்.. ராமையாவின் துணையோடு அதை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்தாள்..
சுந்தரை பற்றி அந்த சுற்றுவட்டாரத்தில் தெரியாதவர்கள் யாருமே இல்லை.. அந்த அளவிற்கு பிரபலமாகியிருந்தான்.. விவசாயம், பிசினஸ், நாயகி குடும்பத்தோடு சேர்ந்து ஹோட்டல் தொழில், சௌந்தரம் குடும்பத்தோடு சேர்ந்து பெரிய பெரிய ஷாப்பிங்மால், வள்ளி கணவரோடு சேர்ந்து பைனான்ஸ் என அனைத்திலும் காலூன்றி தானும் வளர்ந்து அவர்களையும் வளர்த்துவிட்டிருந்தான்.. அந்தந்த தொழிலில் அவர்களுடைய மூளையை சரியாக பயன்படுத்திக் கொண்டான்.. தன் பேரில் சொத்தே வாங்காமல் தர்ஷினி பெயரிலும் தன் பிள்ளைகளின் பெயரிலும்தான்.. தர்ஷினிக்கே அது வருத்தமாக இருக்கும் … “ஏம்மாமா எல்லாத்தையும் என் பேர்லயே வாங்குறிங்க..??” நாளுக்கு நாள் மனைவி மேல் காதலும் அன்பும் பெருகியதே தவிர அவன் வாழ்வில் அவள் எப்போதும் துன்பத்தை தரவில்லை..
அவள் மடியில் படுத்து “நீவேற நான் வேறயா ரெண்டுபேரும் ஒன்னுதான்..ம்ம்ம் எங்க பிள்ளைங்க ரெண்டும் ..”
“கீழ அண்ணிங்க வந்திருக்காங்கள்ள.. அதான் அப்பாவோட படுத்துக்கிறாங்களாம்.. அப்பா சோ ஸ்வீட் மாமா..”
“அப்ப நான்..”
“நீங்கதான் ஸ்வீட் பேக்டரியாச்சே..!!”
[the_ad id=”6605″]
“அப்படியா..சொல்ற..??” தன் மனைவியின் முகத்தை தன்னை நோக்கி இழுத்தவன் தன் இதழை புதைக்க எவ்வளவு நேரம் அப்படியை இருந்தார்களோ சுந்தர் எப்போதும் போல தன் காதலை காட்டத்துவங்க இருவருக்குமே ஒருவரை ஒருவர் பிரிந்திட மனதில்லை.. அவள் காதிற்குள் ஏதோ சொல்ல..
“ச்சு போங்க மாமா.. அதெல்லாம இப்போ பத்தாம போயிருச்சு..??”
“அத நான்தான் சொல்லனும் வா..” தன் கையில் கிடைத்த உடையை எடுத்து கொடுக்க அதுஒரு மினிஸ்கர்ட். டாப்ஸ்…
“இதுவா வேணாம் மாமா..”
“போடி..” அவளை முதுகில் கைவைத்து தள்ள.. இந்த இரவு வெளிச்சத்தில் அந்த உடையில் பார்த்தவன் அப்படியே மூச்சடைத்து போனான்… அவளை கையில் ஏந்தியவன்..
“ப்பா முடியலடா சாமி… என் அழகிடி நீ ..” அவன் லட்டுவை தன்னுள் புதைத்துகொண்டான்..
டேய் சோனமுத்தாஆஆஆ வரவர உன் ரொமான்ஸ் ஓவரா போயிட்டு இருக்குடா..
ம்கூம்.. என்னால எல்லாரையும் அடக்க முடியிது உன்னை… மட்டும்..
தர்ஷினியை பொறுத்தவரை அவன் கணவனாக மட்டுமில்லாமல் அவன் உலகமே அவன்தான்.. குழந்தைகள் பிறந்திருந்த பொழுது ஒரு தாயாக கவனித்து கொண்டான்.. இரவெல்லாம் குழந்தைகளை கண்விழித்து கவனித்துக் கொள்வான்.. வெளியில் ஆயிரம் டென்சன் இருந்தாலும் அதை அவளிடம் காட்டாதவன்.. என்றும் போல இன்றும் அவன் காதலில் கரைந்தவள்
“நான் காட்கிட்ட ஏதோ வரம் வாங்கி வந்திருக்கேன் மாமா..”
“ஏண்டி அப்படி சொல்ற..??”
“பின்ன வாழவே வேண்டாம் சாகத்தான் வேணும்னு பிடிவாதமா இருந்தவள.. இன்னும் உங்களோட பலவருசம் சந்தோசமா வாழனும் நினைக்க வைச்சிருக்கிங்க.. அப்ப நீங்க காட் கிப்ட் தான..”
“ம்கூம் நீதான்டி என் தேவதை..” தன்னை போல தன் கணவன் நினைவில் மூழ்கியிருந்தவளை,
“யார் மடியில வைத்து காது குத்தனும் தாய்மாமன வரச் சொல்லுங்க…” சத்தம் கலைக்க
நான்கு சகோதரர்களுமே எழுந்து வந்தார்கள்.. சுந்தர் மகனை வள்ளி கணவரும், சௌந்தரம் கணவரும் சேர்ந்தாற்போல மடியில் வைத்துக்கொள்ள மகளை நாயகி கணவரும் சுந்தரி கணவரும்.. பார்த்திருந்த தர்ஷினிக்கு தன் தம்பியை நினைத்து ஒரு நிமிடம் கண்கலங்க கணவன் தன் கையை பிடிக்கவும் அதை மறைத்து கொண்டாள்.. இப்போது நான்கு சகோதரர்கள் கிடைத்ததில் அவ்வளவு மகிழ்ச்சி.. தாய் மாமன் சீரை நால்வருமே கொண்டு வந்திருக்க உறவினர்கள் அனைவரும் பொறாமையில் பொங்கி தவித்தார்கள்.. அதெப்படி ஒரு பொண்ணால நாலு நாத்தனாரோட ஒத்துமையா இருக்க முடியும்..
காது குத்து முடியவும் குழந்தைகளை பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கச் சொல்லி திருநீறு பூசிவிடச் சொன்னார்கள்… எல்லாம் முடிந்து கடைசியில் தன் குடும்ப போட்டோவின் முன் விழுந்து கும்பிடச் சொல்ல அன்று போல இன்றும் ஒரு ரோஜா விழுந்து அவர்களை ஆசிர்வாதம் செய்தது..
[the_ad id=”6605″]
கறிவிருந்து நடந்து கொண்டிருக்க சாப்பிடவும் இரண்டு பஸ் கிளம்பிவிட்டது..
வீட்டாட்கள் அனைவரும் ஒரே பந்தியில் தர்ஷினி சுந்தர் அவள் தங்கைகள் அவர்கள் கணவர்கள், குழந்தைகள் என அனைவரும் அமர்ந்து சாப்பிட போகையில்,
சுந்தரி “அண்ணே எல்லாரும் சேர்ந்து ஒரு டிக்டாக் பண்ணலாமா..??”
“ஏய் சாப்பிடும்போதா.. ராஜா அந்த சாப்பாட்ட அவ வாயில திணிங்க அப்பவாச்சும் கொஞ்சம் பேசாம இருப்பா..”
“போங்க மச்சான் உங்க தங்கை வாய நான் அடக்க முடியுமா..??”
அவனை முறைத்தவள் “அண்ணே அதுதான் டிக்டாக்கே… ஒருவர் அடுத்தவருக்கு ஊட்ட இப்படி பக்கத்தில் இருப்பவருக்கு அடுத்தடுத்து ஊட்டிக் கொண்டே செல்ல.
“யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும்
சொந்தமும் பந்தமும் கூட வரும்
நாம் வந்த பின்னாலும் நான் சென்ற பின்னாலும்
சொந்தமும் பந்தமும் பேரு சொல்லும்..
இந்த குடும்பம் ஒரு கோவில் அதில் நீதானே சாமி
இங்க நிலவுகள் பல கோடி அதில் நீ தானே பூமி
சுற்றமும் முற்றமும் யாருமே இன்றி
வாழ்ந்திடும் வீட்டினில் தெய்வம் இல்லை
பாசங்கள் நேசங்கள் ஏதுவே இன்றி
வாழ்ந்திடும் வாழ்க்கையோ வாழ்க்கையில்லை
இன்னோர் ஒரு ஜென்மம் அது கிடைத்தாலும் கூட
இது போல ஒரு சொந்தம் கிடைத்திட நாம் வரம் தேவை..”
அங்கே ஒரே பாட்டும், சிரிப்பும் கும்மாளமுமாய் இருக்க அவர்கள் பாசம் என்றும் தொடரட்டும் நாம் இதோடு விடைபெறுவோம்..
….முற்றும்….
…..வாழ்கவளமுடன்….
