Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Varam Vaangi Vanthaval

Varam Vaangi Vanthaval Naan 3 2

 

சுந்தர் இருக்குமிடம் இருவரும் வர தர்ஷினி இவனை கண்டு கொள்ளவே இல்லை.. கூட வந்த பையன்தான் மச்சான் என அழைத்து நலம் விசாரித்தான்.. யார் என்று யோசித்தவனிடம்,

 

 என்ன தெரியலையா மச்சான்.. நான்தான் பேச்சி மகன் ராஜா..”



Advertisement

 

டேய் ராஜா நீயாடா.. நல்லா வளர்ந்திட்ட.. வீட்ல அத்தை மாமா எல்லாரும் நல்லாயிருக்காங்களா.. இப்ப என்ன பண்ற..”

 

Advertisement

ரொம்ப நல்லாயிருக்காங்க மச்சான்…நான் மதுரை காலேஜ்ல பி. காம் ரெண்டாவது வருசம் படிக்கிறேன்.. இப்ப செமஸ்டர் லீவுக்கு வந்திருக்கேன்.. அதான் மச்சான் அம்மாச்சி அக்காவோட கோவிலுக்கு வந்தேன்.. பேச்சியம்மாளும் உறவு முறையில் அழகம்மைக்கு மகள் முறைதான் வரும்.. இருவரும் சற்று நேரம் பேசிக் கொண்டிருக்க தர்ஷினியோ வைத்தகண் வாங்காமல் அந்த கருப்பரையே பார்த்தபடி இருந்தாள்.. அவள் கண்கள் கடவுளை ஏதோ கோபமாக கேட்பது போலிருக்க கடவுளோடு சண்டைபோடும் பாவனையில் இருந்தாள்..

Advertisement

 

அவள் கண்ணில் இருக்கும் வேதனையை பார்த்தவனுக்கு தன்னை அறியாமல் அவளை அணைத்து ஆறுதல் சொல்ல மனம் எழ இப்போது அவள் உடல் அழகைவிட அவள் மனதிற்குள் என்ன வேதனை இருக்கிறதென கேட்க வேண்டும் போலிருந்தது.. ஆத்தாக்கிட்ட இந்த பொண்ணப்பத்தி கேட்கவே மறந்திட்டமே..!!

 

Advertisement

சற்று நேரம் அப்படியே நின்றிருந்தவளை ராஜா தெப்பகுளத்திற்கு அருகில் கூட்டிச் செல்ல பின்னாலேயே செல்ல மனம் விரும்பினாலும் கட்டுப்படுத்தியவன் மீண்டும் அங்கேயே அமர்ந்தான்.. ‘என்னடா சோனமுத்தாஆஆஆ பின்னாடியே போகாம உட்கார்ந்திட்ட.. அவன் மனது அவனை வார..

 

ம்ம்ம் நேத்து காலையிலயே பெரியமச்சான் அவங்க தங்கச்சிய எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க சம்மதம் சொல்லிட்டாரு.. பொண்ணு பார்க்க வரச் சொல்லி போன் மேல போன் பண்ணிட்டு இருக்காங்க.. இப்ப போய் இந்த பொண்ண சைட் அடிக்கலாமா..

 

ஓஓஓகோ அப்ப நீ சைட் அடிக்கல..

 

ச்சே..ச்சே.. இல்ல..

 

அப்ப நீ அந்த பொண்ணு இங்க வர்ற வரைக்கும் கண்ணசிமிட்டாம தலையில இருந்து கால்வரைக்கும் பார்த்தது என்ன..??’

 

ஹிஹிஹி அது சும்மா…சேலை நல்லாயிருந்திச்சா.. அதான் சேலைய மட்டும்தான் பார்த்தேன்..

 

உலகத்திலேயே மனசாட்சிக்கிட்டயே பொய் சொல்றவன் நீ மட்டுமாதான்டா இருப்ப.. இருடி கண்டுப்பிடிக்கிறேன்..

 

[the_ad id=”6605″]

 

அங்கு தனியாக அமர்ந்து பொறியை தின்று கொண்டிருக்கும் மீன்களை ரசித்தபடி அமர்ந்திருந்த சுந்தரியை பார்க்கவும் ராஜா, ஏட்டி நீ சுந்தரிதான தெய்வானை அத்த மவ..??”

 

எவன்டா அவன் என்பது போல பார்த்தவள், அடிங் என்னடா குட்டி கிட்டின்னு பேசுற மண்டைய பொளந்திருவேன் பார்த்துக்க.. மரியாதையா கூப்பிடுடா எருமை..?”

 

அவனோ ஆஆஆஆவென பார்த்துக் கொண்டிருந்தான்.. சாதாரணமா ஒருவார்த்தை பேசினதுக்கா இவ்வளவு வார்த்தை அதிலயும் இவ்வளவு மரியாதையா பேசுறா.. ஒருவேளை ஆள் தெரியலையோ.. “ஏய் சுந்தரி நான் ராஜா என்னை தெரியல..??”

 

எந்த நாட்டுக்குடா ராஜா.. போடா..லூசு.. பொறியை போட்டு முடித்திருந்தவள் இப்போது அங்கிருந்த படித்துறை கல்லில் ஏதோ உரச ஆரம்பித்தாள்..

 

ஏய் என்னடி வார்த்தைக்கு வார்த்தை டா போடுற.. ஓங்கி ஒரு அறை வைக்க போறேன் பாரு..??”

 

ம்ம் யாரு நீ என்னை அறைவ.. அங்கிட்டு போடா காமெடி பண்ணாம.. என்னமோ வெளியூருல காலேஜ் படிக்கிறதா கேள்விப்பட்டேன் என்ன இங்கிட்டு..!!” அசால்டாக அவனை வாரியவள்

 

தர்ஷினி மெதுவாக முதல்படியிலிருந்து காலை இரண்டாம் படியில் வைத்து தண்ணீருக்குள் இறங்கவும் தன் வேலையை பார்த்துக் கொண்டே,” ஏங்க ரொம்ப இறங்காதிங்க.. ரொம்ப பாசம்பிடிச்சு கிடக்கு.. வழுக்கி விழுந்தா அங்கன தாமரை கொடி காலை சுத்திரும் அப்புறம் வெளியில வர கஷ்டமாயிரும்.. ராஜாவை முறைத்தவள் ஏண்டா செவ்வாழை சும்மாதான நிக்கிற இதெல்லாம் சொல்லமாட்டியா…அவனை வம்பிழுக்க..

 

அவன் கண்களில் சுவாரஸ்யம் ஏறியிருந்தது.. இவ இப்படியெல்லாம் வாய் பேசுவாளா..

 

அங்கு தெய்வானை தன் மகனை அழைத்தவர் தம்பி சின்னவள வரச் சொல்லுப்பா.. சாமி கும்பிட நேரமாச்சு போனா போன இடம் வந்தா வந்த இடம்.. அவர் புலமபி கொண்டிருக்க..

 

சுந்தருக்கு சின்ன சந்தோசம் ப்பா நாமளும் அங்கன போக ஒரு காரணம் கிடைச்சிருச்சே வேட்டியை மடித்து கட்டியவன் வேகமாக குளக்கரையை நோக்கிச் நடையை கட்டினான்..

 

இங்கு சுந்தரி சொன்னதை காதில் வாங்காத தர்ஷினி மெதுவாக அடுத்தபடியில் காலை வைக்க வழுக்கி தவறி உள்ளே விழுந்திருந்தாள்..

 

ராஜாவோ பதறியவன் ஐயோ அக்கா.. அக்காவென மேலேயிருந்தே கத்திக் கொண்டிருக்க,

ஏன்டா எருமை.. மேலயிருந்து கத்திக்கிட்டு இருக்க போடா உள்ள இறங்கி காப்பாத்துடா..

 

ஏய் லூசு எனக்கு நீச்சல் தெரியாது.. ப்ளிஸ் ப்ளிஸ் நீ போய் காப்பாத்துடி..?”

 

அடச்சீ கருமம் நீயெல்லாம் ஒரு ஆம்பளைன்னு வெளியில சொல்லிறாத..??”

 

[the_ad id=”6605″]

 

ஏண்டி எனக்கென்ன குறைச்சல்.. எனக்கு தண்ணியில கண்டம்னு 20 வயசுவரைக்கும் அம்மா தண்ணியில இறங்கக் கூடாதுன்னு சொன்னதால நீச்சல் பழகல.. இப்பதான் 20 வயசு முடிஞ்சிருக்கு அடுத்த முறை உன்னை பார்க்கும் போது கண்டிப்பா நீச்சல் கத்துக்கிட்டு இருப்பேன்.. இப்ப நீ போடி..ப்ளிஸ் ப்ளிஸ்..

 

என்னை நல்லா பார்த்தியாடா.. என்னை போய் தண்ணியில இறங்கச் சொல்ற..?” அங்கு தர்ஷினி வெளியில் கையை நீட்டியபடி முங்கி முங்கி வெளியே உள்ளே வந்து கொண்டிருக்க இங்கு இருவருக்கும் சண்டை நடந்து கொண்டிருந்தது..

 

அவளை பார்த்தவன் உனக்கென்னடி முன்னவிட கொஞ்சம் கும்முன்னு இருக்க..??”

 

..அடிங் என்ன வாய் நீளுது.. போறதுக்குள்ள ரெண்டு பல்ல பேத்து கைல கொடுக்கப் போறேன் பாரு.. நான் சொன்னது நான் போட்டிருக்கிற மேக்கப்படா எருமை.. எங்க அண்ணனே இத்தன வருசத்துக்கு அப்புறம் இப்பதான் மேக்கப் செட் வாங்கி தந்து நான் பார்த்து பார்த்து மேக்கப் போட்டிருக்கேன்.. இப்ப தண்ணிக்குள்ள குதிச்சா அதெல்லாம போயிறாதா..?”

 

நீ போட்டிருக்கறது மேக்கப்பா …ப்பா…. வரும்போதுதான் நினைச்சேன் நம்மூர் டான்ஸ்காரி மாதிரி யாரோ உட்கார்ந்திருக்காளே யாரு இவன்னு.. உங்க அண்ணன பார்க்கவும்தான் ஒரு வேளை நீ சுந்தரியோன்னு தோனுச்சு..?”

 

ஏன்டா குரங்கு என்னை பார்த்தா டான்ஸ்காரின்னு சொல்ற..?” அதுவரை கல்லில் உரசிக் கொண்டிருந்ததை எட்டி அவன் கையில் வைத்தாள்..

 

ஐயோ அம்மா எறியுதே..” அவன் கையை உதற அவள் வைத்த இடத்தில் கை தோல் பொசுங்கி போயிருந்தது..

 

ஐயோ அம்மா என் கை பொத்து போச்சே ..ஏய் பஜாரி என்னத்த கையில வைச்ச..?”

 

ம்ம்ம் இப்படி பேசினதுக்குத்தான் கையில சுடுகொட்டையை வச்சேன்.. மறுபடி பேசினா வாயில வைச்சிருவேன் பார்த்துக்க..??”தர்ஷினியை மறந்து இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்..

 

தொப்பென சத்தம கேட்டு இருவரும் குளத்தை பார்க்க சுந்தர் தண்ணீருக்குள் குதித்திருந்தான்..சற்று நேரத்தில தர்ஷினியோடு மேலே வந்தவன் அவளை தன் கைகளில் ஏந்தியபடி படியேறி இருந்தான்.. அண்ணனை பார்க்கவும் சுந்தரி வேகமாக அவர்கள் அருகில் வர தங்கையை முறைத்து,

 

 என்ன சுந்தரி இது..?? இவங்க ஊருக்கு புதுசு.. இங்கன இறங்காதிங்கன்னு சொல்ல வேணாமா.. டேய் கூட்டிட்டு வந்தியே பக்கி..? பத்திரமா பார்த்துக்க வேணாமா.. பத்தாததுக்கு ரெண்டு பேரும் காப்பாத்தாம சண்டைப் போட்டுட்டு இருக்கிங்க..??”

 

அவளை அப்படியே மேல் படியில் படுக்க வைத்தவன் அவள் கன்னத்தை தட்ட தர்ஷினி அங்கு மயங்கியிருந்தாள்..

 

சுந்தரியோ ராஜாவை முறைத்து.. அண்ணே நான் அப்பவே சொன்னேன்.. அவங்க திமிரா இறங்கினதுக்கு என்னை சொல்லா….???” சுந்தர் சட்டென அவளை முறைக்க வாயை கப்பென மூடியிருந்தாள்..

 

யாரையும் பார்த்தவுடன நீயா ஒரு முடிவுக்கு வர்றது என்ன பழக்கம் சுந்தரி..?” ஆங்காங்கே சேலை விலகி அவள் அழகை வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருக்க முக்கியமாக அந்த டாட்டூ அப்படியே தெரியவும் வேகமாக சேலையை சரிசெய்தவன் ராஜாவிடம்,

டேய் போய் அப்பத்தாவை வரச் சொல்லுடா..

நீ இங்க வா..??” தங்கையின் கையை பிடித்து தர்ஷினியின் வயிற்றில் வைத்து அதன் மேல் தன் கையை வைத்து அழுத்தினான்..இரண்டு மூன்றுமுறை அழுத்தியவன்.. மீண்டும் குப்புற படுக்கவைத்து அதே போல் அழுத்த அவள் குடித்த தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து கொண்டிருந்தது..

 

அங்கு அப்பத்தா, தெய்வானை, நாயகி மூவரும் பதறியபடி ஓடிவர அப்பத்தா நெஞ்சில் அடித்து கொண்டு கதற ஆரம்பித்தார்.. ஐயோ தங்கம் நான் என்ன பண்ணுவேன்.. .கடவுளே உனக்கு கண்ணில்லையா இந்த பச்ச மண்ணுக்கு இன்னும் எவ்வளவு சோதனையைத்தான் கொடுப்ப..?” அவளை தன் மடியில் படுக்க வைத்து கன்னத்தை தட்ட மயக்கம் தெளிந்து மெதுவாக கண்விழித்துப் பார்த்தாள்..

 

அப்போதுதான் எல்லோருக்கும் நிம்மதி வந்தது.. எந்திரிடா.. மெதுவாக அவளை அப்பத்தா மெதுவாக நிமிர்த்த அப்போதுதான் பார்த்தான்.. சிலர் அவளை வெறித்தபடி நின்றிருப்பதை.. வேகமாக அவர்கள் கொண்டுவந்த பொருள் வைத்திருக்கும் இடத்திற்கு சென்றவன் திரும்பி கையில் துண்டோடு வந்து அப்பத்தா கையில் கொடுத்தவன்,

 

[the_ad id=”6605″]

 

அப்பத்தா இத மேல போர்த்திக்க சொல்லி செத்தநேரம் வெயில்ல நிக்கச் சொல்லுங்க டிரஸ் காஞ்சிரும்..?”

 

இல்லப்பு நாங்க வீட்டுக்கு கிளம்புறோம்… கருப்பர கும்பிட்டா நல்ல வழிகிடைக்கும்னு தான் இங்க கூட்டிட்டு வந்தேன்.. இப்புடி ஆயிருச்சேப்பு.. நீ மட்டும் இல்லைனா என் பேத்தி கதி என்னாகிருக்கும்.. வாத்தா போவோம்..

 

அப்பத்தா இது என்ன சின்ன பிள்ளையாட்டம்.. கருப்பன்தான் இன்னைக்கு உங்க பேத்திக்கு வந்த ஆபத்திலயிருந்து காப்பாத்தியிருக்காருன்னு நினைங்க.. எப்பவும் அவர நம்பி வர்றவங்கள கைவிடமாட்டாருன்னு நீங்களும் எங்க அப்பாத்தாவும் கதையா சொல்விங்க.. இப்ப நீங்களே இப்படி பேசலாமா..எல்லாம் நல்லதே நடக்கும் வாங்கப்பத்தா..

 

சுந்தரி இவங்களோட செத்த துணைக்கு நில்லு டிரஸ் காயவும் உள்ள கூட்டிட்டு வா.. ஆத்தா அப்பத்தாவ கூட்டிட்டு போய் தண்ணி குடுங்கத்தா..?” சற்று நேரம் யோசனையில் இருந்தவன் தர்ஷினியை ஒரு பார்வை பார்த்து அப்பத்தாவிடம் செல்ல அங்கு தாயும் தங்கையும் கோழி, சேவலோடு பூசாரியிடம் நின்றிருந்தார்கள்.. அப்பத்தா தளர்ந்து போய் அமர்ந்திருந்தார்.. இந்த பொண்ணுக்கு அப்படி என்ன துன்பமா இருக்கும்..!! சுந்தருக்கு தர்ஷினியை யோசித்து யோசித்தே மனம் அவள்பக்கம் மெல்ல சாய ஆரம்பித்திருந்தது..

 

 

 

                                                              இனி………..?????

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!