Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Intersteller Love

Vinto’s Interstellar Kaadhal Episode 16

அத்தியாயம் – 16

பொசய்டனின் நினைவுகளுள் சென்று, கயா கிரகத்தினருக்கு எப்படி மற்ற உயிரினங்களை விட அதிக சக்திகள் கிடைத்தது என்று அறிந்துகொண்ட அவர்கள் மூவருக்கும், அந்தச் சிறு விதையான பிரச்சனை என்னவென்று நன்றாகவே புரிந்தது.



Advertisement

 

“இது எல்லா இடங்களிலும் நடப்பதுதான். நம்முடைய அரிய கண்டுபிடிப்பை, அந்தக் கண்டுபிடிப்பிற்கான பலனைச் சம்பந்தமே இல்லாதவர்களுடன் பகிரச் சொன்னால் கோபம் வருவது இயல்பான விஷயம் தான். ஆனால் செலினாவின் இடத்திலிருந்து பார்க்கும்போது, அது தான் சரியான முடிவு. ஏனென்றால் அவர் இதற்கு முழுமையாக ஒத்துக் கொண்டிருந்தால் தான் ஏற்படுத்திய சமன்பாட்டைத் தானே உடைத்திருப்பார் “ என்று தோன்றியது நந்தினிக்கு.

 

Advertisement

 பொசய்டனிடம், நந்தினி தன் கருத்தைக் கூற, “ நீ கூறுவது அனைத்தும் மிகச் சரியானது, நந்தினி. இதுவே என் எண்ணமும். ஆனால், அந்தக் கோபத்தை வெளிப்படுத்திய முறை பல பிரச்சனைகளுக்கு வழிகோலியது “ என்றார் பொசய்டன்.

Advertisement

 

 “இந்த யோசனைக்கு எப்படி செலினா சம்மதித்தார் ? இது தவறானவர் கைகளுக்குக் கிடைத்தால் என்ன செய்வது என்று யோசித்திருக்க மாட்டாரா ?” என்று கேட்டான் ஆரியன்.

 

Advertisement

 “நீ கூறுவதை வேறு கோணத்தில் யோசித்துப் பார் ஆரியன். படைப்பாளிகளுக்கு மட்டுமே இருக்கக்கூடிய தனித்தன்மை அது. அவர்கள் அனைவரும் ஏதாவது வித்தியாசமாக, புதுமையாக, மாற்றத்தை உருவாக்கக்கூடிய கண்டுபிடிப்பைத் தான் தேடுவார்கள். அதன் பலன் எந்த விதத்தில் வேண்டுமானாலும் வரலாம். சுருக்கமாகக் கூறினால் ‘Leap of faith’ அவ்வளவுதான்” என்றார் பொசய்டன்.

 

 அனைவரும் சிறிது அமைதியாகவே, “சரி வாருங்கள், நாம் நம்முடைய அடுத்த பயணத்திற்குச் செல்வோம். நான் எதற்காக இவ்வளவு விஷயங்களைக் கூறுகிறேன் என்று இந்த முறை உங்களுக்குப் புரிந்து விடும்” என்றார் பொசய்டன்.

 

 ஆதித்யன் மட்டும் சற்று யோசனையோடு, “ஒரு நிமிடம், பொசய்டன். நாம் அனைவரும் உங்கள் நினைவுகளில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், உங்களுக்கு எப்படி இந்த நினைவுகள் கிடைத்தன ? நீங்கள் எப்படி அந்த காலத்தில் இருந்திருக்க முடியும் ?” என்று கேட்டான்.

 

அவன் கூறியதைக் கேட்டு, ஆரியன் மற்றும் நந்தினியின் முகத்தில் யோசனை கோடுகள் தெரிய, அதற்குள் பொசய்டன், “கயா கிரகத்தை நிர்மாணித்த சிற்றரசர்கள் அனைவரும் தங்கள் சக்திகளைப் பயன்படுத்தி ஒரு புத்தகத்தை உருவாக்கினார்கள். அது தான் ‘பிரம்ம கிரந்தம்’. அதில் கயா கிரகத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் பதிவு செய்யப்படும்.

 

இந்த அண்ட சராசரத்தில் செலினாவுக்கு அடுத்து அதிக நினைவுகளை கொண்டிருக்கும் பொருள் என்றால் அது பிரம்ம கிரந்தம் தான். கயா கிரகத்தின் தலைமை மந்திரியாக, அதனை உபயோகிக்கச் சகல உரிமைகளும் எனக்கு உண்டு. அதிலிருந்து தான் இந்த விஷயங்கள் அனைத்தையும் தெரிந்துகொண்டேன். அந்த நினைவுகளில் தான் நீங்களும் இப்போது பயணிக்கின்றீர்கள் “ என்று விளக்கம் கொடுத்தார்.

 ஆதித்யன், அவரை தவறாக நினைத்ததை எண்ணி வருந்த, அதைக் கண்ட பொசய்டன், “ நீ இதைக் கேட்டதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன், ஆதித்யன். இப்பொழுது அனைவருக்கும் தெளிவு ஏற்பட்டு விட்டது அல்லவா?” என்று கேட்டார்.

 

அடுத்த நினைவு பயணத்திற்கு அனைவரும் தயாராக, பொசய்டன் தன் நினைவுகளை ஒருங்கிணைத்தார்.

 

சில நொடிகள் அமைதியாகச் செல்ல, அதன் பிறகு, ஒரு புதிய உலகிற்குள் நுழைந்து விட்டார் போலிருந்தது. அந்த இடம் முழுவதும் அவ்வளவு ஒளி பரவியிருந்தது. காரணம் புரியாமல் நந்தினி நிமிர்ந்து பார்க்க, அங்கே ஒரு பெரிய பந்து போன்ற ஒரு பொருள் ஒளி வீசிக் கொண்டிருந்தது. அது இருந்த இடத்தை கூர்ந்து கவனித்த போது, அங்கு இதற்கு முன்னர், கயா கிரகத்து அரசர்களால் ‘செயற்கை சூரியன்’ – ஆக மாற்றப்பட்ட நிலவு இருந்தது நினைவுக்கு வந்தது.

 

 கண்கள் கூசத் தொடங்க, மூவரும் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டனர். பிறகு ஏதோ மாற்றம் ஏற்பட்டதாகத் தெரிய கண்களைத் திறந்து பார்த்தனர். முன்னர் ஒளி வீசிக் கொண்டிருந்த பந்து இப்பொழுது ஒரு சாதாரண கோள் போல மாறிவிட்டது.

 

கண் மூடி மறுபடியும் திறக்கும் நேரத்தில், அவர்கள் முன் இருவர் நின்றிருந்தனர். இதுவரை இவ்வளவு அருகில் நினைவுகளில் ஆதித்யனும் ஆரியனும் யாரையும் பார்த்திராததால், சிறிது பயந்து விட்டனர்.

ஆனால், அவர்கள் இருவரும் இவர்களைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. அவர்களது உரையாடல் மூவருக்கும் தெளிவாகக் கேட்டது.

“மிக்க நன்றி, செலினா ! இந்தக் காரியத்தைச் செய்து முடிப்பதற்கு தாங்கள் அளித்த வரம் தான் எனக்குப் பெரிதும் உதவியது” என்றான் டைட்டன்.

 

“இதில் என்னுடைய பங்கு எதுவும் இல்லை, டைட்டன். இந்த யோசனை இதுவரை எனக்குத் தோன்றியது இல்லை. இப்பொழுதும் நான் கூறும் விஷயம் ஒன்றுதான். உங்களுக்குப் பல பரிமாணங்கள் கொண்ட அறிவை கொடுத்துவிட்டு அதை நான் முடக்கி வைக்க விரும்பவில்லை. ஆனால், அதே சமயத்தில் இதை நல்ல காரியங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்” என்றார் செலினா.

 

 “அந்த அளவிற்கு இதை நான் விட்டுவிட மாட்டேன் என்று வாக்களிக்கிறேன் செலினா” என்றான் டைட்டன்.

 “சரி, நீயும் மற்ற அரசர்களுடன் கயா கிரகத்தைப் பார்த்துக்கொள், டைட்டன். நான் சில நாட்கள் கழித்து இங்கு வருகிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றார் செலினா.

 

 அவர் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த டைட்டனின் கண்கள் மெல்ல மெல்லச் செந்நிறத்திற்கு மாறிக் கொண்டிருந்தது. பின்னர், அவர் வேகமாக அங்கிருந்து சென்று, தனது அறைக்குள் நுழைந்தார்.

 

அவருக்குப் பின்னாலே, இவர்கள் மூவரும் இழுத்துச் செல்லப்பட்டனர். அங்கு டைட்டன் கோபமாகத் தனது அறையை அளந்து கொண்டிருந்தார். வேட்டையாடுவதற்காகப் பொறுமையாக இறையை வேவு பார்க்கும் புலியின் பார்வை அவரின் கண்களில் தெரிந்தது.

 

 அவர், பின்பு சில தாள்களை ஆராயத் தொடங்கினார். ஏதோ எழுதுவதும் பின்பு அதை மாற்றி அமைப்பதுமாக நேரம் செல்ல, அவர் மட்டும் தனது வேலையை நிறுத்தினாற் போல் தெரியவில்லை. நந்தினி சற்று நடக்க முயற்சி செய்து, அதில் வெற்றி பெற, பின் நன்றாக நகரத் தொடங்கினாள்.

அவளைத் தொடர்ந்து ஆதியும் ஆரியனும் நடக்கத் தொடங்க, அவர்களால் ஒரு சிறு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை.

 

அதற்குள் நந்தினி டைட்டனிடம் சென்று, அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று பார்த்தாள். அந்தத் தாள்களில் பல்வேறு கருவிகள் வரையப்பட்டிருக்க அவள் கண்களை மற்றொரு தாள் கவர்ந்தது.

 

 அதில் ஓர் அழகிய கவசம் தெரிந்தது. கைதேர்ந்த சிற்பியால் செதுக்கப்பட்ட ஒரு சிற்பத்தைப் போல வெகு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது அது.

“அழகுக்குப் பின்னால் தான் ஆபத்தும் இருக்கும்” என்று அப்பொழுது நந்தினி அறிந்திருக்க வாய்ப்பில்லை.

 

*****

 

அந்தக் காட்சி சிறிது சிறிதாக மறைய, அடுத்த காட்சி மெல்ல மெல்ல அரங்கேறியது. முன்னர், கயா கிரக அரசர்கள் சபதம் எடுத்த அதே காட்டில் வந்து நின்றனர் மூவரும். ஆனால் இந்த முறை, அரசர்கள் அனைவரும் தங்களது சொல் அம்புகளால் சண்டையிட்டுக் கொண்டிருக்க, அந்த இடமே சற்று பயங்கரமாக இருந்தது.

 

 “தவறை என் பக்கம் திருப்ப முயற்சிக்காதே, நிகேடர் ! நீ தான் அவனுக்கு அந்தக் கவசத்தை முழுவதுமாகவும் அவன் கேட்ட வடிவமைப்புகளோடு அத்தனை கருவிகளையும் உன் சக்திகள் மூலம் தயார் செய்து கொடுத்து இருக்கிறாய்” என்றார் க்ரோனன்.

 

“பொய் சொல்லாதே, நான் அந்த காரியங்கள் அனைத்தையும் என் சுய நினைவு இல்லாமல் தான் செய்துள்ளேன். நம்மில் எண்ணங்களை மாற்றி அமைக்கக் கூடிய சக்தி உனக்கு மட்டும் தான் உள்ளது. என்ன தான் செலினா எங்களது மனதை மாற்றும் சக்திகளை உனக்குத் தராமல் இருந்தாலும் அதை எப்படியோ நீ அறிந்து வைத்துள்ளாய்” என்று பதிலுக்குக் குதித்தார் நிகேடர்.

 

 அந்தச் சண்டையில் மெட்லடனும் சேர்ந்துக்கொள்ள, மெட்லடன், “நீ செய்தது சின்ன காரியம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா ? அவனது கருவிகளைத் தேவைப்படும் நேரத்திற்கு ஏற்ப அதை மாற்றி கொள்ளுமாறு செய்து கொடுத்துள்ளாய். அதன் மூலமாக அவனால் அந்த கவசத்தையே அவனது கைக்குள் வைத்துக் கொள்வது போல வடிவமைத்துத் தந்து இருக்கின்றாய்” என்றார்.

 

 நிக்கேடரோ, “அப்படி என்றால் நீங்கள் செய்திருக்கும் காரியத்தை என்னவென்று சொல்வது ? அவனுக்குச் சாகா வரத்தை மட்டும் தான் நீங்கள் தரவில்லை. மற்றபடி அவனுக்குக் காயம் ஏற்பட்டதற்காக, யாராவது எந்தக் காயம் ஏற்பட்டாலும் சரியாகக் கூடிய மருந்தைத் தருவார்களா ?” என்று சீறினார்.

 

 இப்படியே எரேகனும் ஆர்கஸூம் ஹெஸ்பரஸும் தாங்கள் ஏமாந்த விதத்தை மறைக்க மற்றவர்களைச் சாடிக்கொண்டிருக்க, எப்பொழுதுமே டைட்டன் விஷயத்தில் சிறிது எச்சரிக்கையாக இருக்கும் வல்கன் மட்டும் இந்த வலையிலிருந்து தப்பிவிட்டார்.

 

என்னதான் டைட்டனை கண்கொத்தி பாம்பாக வல்கன் கவனித்து வந்தும், அவர் கண்ணில் மண்ணைத் தூவி சரியாகத் திட்டமிட்டு அதை நேர்த்தியாக பல ஆண்டு காலமாகப் பொறுமையாக இருந்து அவன் நினைத்ததை அடைந்து விட்டான்.

 

அவனுடைய அறிவைத் தவறாகப் பயன்படுத்த வைக்க தானும் ஒரு காரணமாகி விட்டோமே என்ற குற்ற உணர்வு அவர் மனதை அரித்தது. ஆனால், அதற்கு முன்னால் தான் தீர்க்க வேண்டிய பெரிய பிரச்சனை தன் முன்னால் இருப்பதை உணர்ந்தவர், அங்கு இருந்த வட்டக்கல் மேடையில் தனது பலத்தை உபயோகப்படுத்தி குத்தினார்.

 

அதில் விரிசல்கள் ஏற்பட்டுச் சிறு சிறு துண்டுகளாக நொறுங்கி விழ, அது ஏற்படுத்திய சத்தத்தில் மற்ற ஆறு அரசர்களும் அமைதியாகி விட, வல்கன் தனது வெண்கலக் குரலில், “இன்னும் எவ்வளவு நேரம் இவ்வாறு சிறு பிள்ளைகள் போலச் சண்டை போட்டுக் கொள்வீர்கள் ? உங்களுக்கும் சாதாரண கீழ்நிலை மனிதப் பிறவிகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது ? உங்களது பதவிக்கு ஏற்றார் போல் சிறிது நேரம் நடந்து கொள்ளுங்கள்” என்றார்.

 

 அவரது கூற்றில் இருந்த உண்மை அவர்களைச் சுட, அவர்கள் ஒருவரை ஒருவர் கண்களில் மன்னிப்புடன் பார்த்து கொண்டார்கள். பின் இந்தப் பிரச்சனைக்குத் தான் யோசித்து வைத்திருந்த தீர்வை கூறத் தொடங்கினார் வல்கன்.

 

 “இந்த தவறுக்கு நாம் அனைவரும் ஒரு வகையில் காரணம் தான். அன்று யோசிக்கும் போது நமக்குத் தவறாக தெரிந்ததை எதிர்த்தோம். ஆனால், அதுவே டைட்டனின் கோபத்தையும் பிடிவாதத்தையும் தூண்டிவிட்டது. சரியாக செலினா வேறொரு கிரகத்தை உருவாக்கச் சென்று சேர்ந்திருக்கும் நேரத்தில், தனது திட்டத்தைச் செயல்படுத்த தொடங்கிவிட்டான்.

 

இப்பொழுது நாம் அவரைக் கூப்பிட்டாலும் அவர் வருவதற்கு சில காலமாகும். அதற்குள் டைட்டன், முன்னரே விண்ணில் செலுத்தி இருந்த சோல் பாக்ஸிலிருந்து சக்திகளைப் பெற ஆரம்பித்து விடுவான். அவன் முழுமையாகச் சக்திகளைப் பெறுவதற்குள் நாம் அவனை எப்படியாவது அழிக்க வேண்டும்” என்றார்.

 

 அவர் கூறியதைக் கேட்டு, ஒவ்வொருவரும் தங்கள் யோசனைகளைக் கூறத் தொடங்கினர்.

மெட்லடன், “அதற்கு முன்னர் நாம் அவனை எந்த விதத்தில் அழிக்க முடியும் என்று யோசிக்க வேண்டும். நாம் அவனுக்குச் செய்த சிறு சிறு உதவியால் அவனுக்கு மலையளவு பலம் பெருகி விட்டது. அதை நாம் எதிர்க்கும் விதமாக ஏதாவது புதிய திட்டத்தைத் தீட்ட வேண்டும்” என்றார்.

 

 வல்கன், “நீங்கள் சண்டை போட்டுக் கொண்டதில் இருந்தே, நீங்கள் அவனுக்கு என்ன செய்து கொடுத்தீர்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். சுருக்கமாக, அவனது கருவிகளைப் பறக்க வைத்துச் செயல்பட வைக்க முடியும். அவனுக்கு எப்பேர்ப்பட்ட காயங்கள் ஏற்பட்டாலும் அவனால் அதைக் குணமாக்கிக் கொள்ள முடியும். ஆனால், அவன் உயிரைக் காப்பாற்றும் அளவுக்கு அது சக்தி வாய்ந்தது அல்ல”

 

“நிகேடரின் உதவியோடு அவனது ஆயுதங்களை தன் கைக்குள்ளே, அவனால் வைத்துக்கொள்ள முடியும். க்ரோனன் நிகேடரின் நினைவுகளை மாற்ற முடியவில்லை. முயன்று இருந்தாலும் மாற்றியிருக்க முடியாது. ஏனெனில், செலினா அவனுக்கு அப்படிப்பட்ட வரத்தை தான் தந்தார். அதனால் டைட்டன் தான், நிகேடரின் எண்ணங்களை மாற்றியிருக்க வேண்டும். வாய்ப்பு இருந்தால், அதற்கு அவன் ஹெஸ்பரஸின் உதவியை அவனுக்குத் தெரியாமலே பெற்றிருக்க வேண்டும். எரேகனின் உதவியால், அவனால் சில பெரிய ஆயுதங்களைக் கூட மறைய வைக்க முடியும் “ என்றார்.

 

அவர் கூறியதைக் கேட்டு, அனைவரும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போய் விட்டனர். சின்னஞ்சிறு விஷயங்கள் என்று அவர்கள் செய்த உதவிகள் எல்லாம் இப்பொழுது ஒன்றாகச் சேர்ந்து மலைபோல நின்றன.

 

 அறிவை வைத்துக்கொண்டு ஒரு சின்ன கட்டெறும்பைக் கூட வீரனாக மாற்றலாம். ஆனால், அதற்குத் தேவையானது அளவு கடந்த பொறுமை. வேகம் யுத்தகளத்தில் தேவைப்பட்டாலும், புத்தி களத்தில் விவேகமே வேண்டும்.

 

அறிவை சரியாகப் பயன்படுத்தினால், ஆச்சாரியர் சாணக்கியர் போல ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையும் படைக்க முடியும். அதே அறிவைத் தவறாகப் பயன்படுத்தினால், ஜூலியஸ் ஓப்பன்ஹெய்மர் போல ஒரு நாட்டையே அழிக்கவும் முடியும்.

 

அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்ட நந்தினியும், ஆதித்யனும், ஆரியனும் டைட்டனை வியந்து பாராட்டினார்கள் என்றே கூறவேண்டும்.

என்னதான் தன் கிரகத்தை அழிக்க முயற்சி செய்தவன் என்ற கோபம் நந்தினிக்கு ஏற்பட்டாலும், அவன் தீட்டிய திட்டத்தைக் கண்டு வாயடைத்துப் போனாள். அவர்களுள் ஒருவரை வைத்தே அவர்கள் அனைவரையும் வென்ற விதம்.

 

அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, ஒரு சிறிய பறக்கும் கருவி ஆரியனின் உடலுக்குள் புகுந்து செல்ல, ஆரியன் அலறிவிட்டான். அவன் குரலில் மற்ற இருவரும் திரும்பிப் பார்க்க, அந்தக் கருவியுடனே இவர்களும் இழுத்துச் செல்லப்பட்டனர். வேக வேகமாக முதல் முறையாகப் பறக்க ஆரம்பித்தனர். அந்தக் காட்டைக் கடந்து, நகரத்துக்குள் நுழைந்து, மாளிகைகளுக்குள் புகுந்து இறுதியாக வெலாரிஸ் கோட்டையை அடைந்தனர். அந்தக் கருவியைப் பின்பற்றி, இவர்களும் செல்ல அங்கிருந்த அரசவைக்குச் சென்றனர்.

 

 முன்னர் இருந்த நிலைக்கும், இப்போதைக்கும் பெரிய மாற்றமே தெரிந்தது அந்த நீண்ட அறையில் இருந்த எட்டு சிம்மாசனங்களும் இடிக்கப்பட்டு ஒரே ஒரு சிம்மாசனம் மட்டும் புதிதாக அழகாக உருவாக்கப்பட்டிருந்தது. இதுவரை அரசர்களுக்கு விசுவாசமாக இருப்பவர்களைக் கூட அந்த சிம்மாசனத்தின் அழகு துரோகியாக மாற்றி விடும்.

 

அந்த அளவிற்கு அது அருமையாக இருந்தது. அந்தச் சிம்மாசனத்தில் டைட்டன் அமர்ந்து அந்த இன்பத்தைச் சுவைத்துக் கொண்டிருந்தான்.

அந்தச் சிறிய கருவி, நேரே அவன் கையில் சென்று அமர, அவன் முகம் மலர்ந்தது. அதை தனது கையில் அணிந்திருந்த மற்றொரு ஆபரணத்தில் வைக்க, அவனுக்கு முன்னே மற்ற அரசர்கள் பேசியது அனைத்தும் ஒரு திரை போலத் தோன்றி ஓடியது.

 

 அதை முழுவதுமாக பார்த்த டைட்டன், “பரவாயில்லை, வல்கன். ஹெஸ்பரஸை நான் பயன்படுத்திக் கொண்டதைச் சரியாக கண்டுபிடித்து விட்டாய். ஆனால், நீ இன்னுமும் முட்டாளாகத் தான் இருக்கின்றாய், வல்கன். அனைத்து நபர்களின் சக்தியையும் அவர்கள் அறியாமலே பெற்ற எனக்கு, உன்னிடம் இருந்து மட்டும் எடுக்கத் தெரியாதா என்ன ? மற்றவர்கள் பங்கு அனைத்தும் சிறியது தான். ஆனால், நீ செய்த உதவிதான் பேருதவி. ஹாஹாஹா”

 

“என் கவசங்களுக்கு உன்னிடம் இருந்து தான் வலிமையைக் கொடுத்துள்ளேன். நீயே நினைத்தாலும் அதை உன்னால் அழிக்க முடியாது. மற்றவர்கள் விபரம் தெரியாத முட்டாள்கள், நீ விபரம் தெரிந்த முட்டாள். அவ்வளவு தான் வித்தியாசம். இன்னும் சில நாட்களுக்குத் தான் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு” என்று அந்தப் பறக்கும் கருவியைப் பார்த்துக்கொண்டு கூறியவன்,

இறுதி வாக்கியத்தை அவன் கூறும் போது அவன் முகம் கோபத்தில் சிவந்தது. இதை அனைத்தையும் கண்ட மூவர் கூட்டணிக்கு மயக்கம் வராத குறைதான்.

 

பிறகு அவர்கள் மெல்ல மெல்ல அந்த நினைவுகளில் இருந்து தூக்கி எறியப் படாத குறையாக வெளியே வந்தனர். ஆனால், இந்த முறை நீண்ட நேரம் நினைவுகளில் இருந்துவிட்டதால் அவர்கள் மூர்ச்சை அடைந்தனர். மெல்ல மெல்ல சுய நினைவை நந்தினி இழக்க, அவள் மனதில் டைட்டன் ஆழமாகப் பதிந்தார்.

 

சிறிது நேரம் கழித்து, நந்தினி மெல்ல மெல்லக் கண்விழிக்க, அவளைச் சுற்றி ஆதித்யனும், ஆரியனும், பொசய்டனும் பார்த்து இருக்க, அவள் மெல்ல எழ முயற்சித்தாள். தான் யார் மடியிலோ படுத்து இருப்பது தெரிந்ததும், விருட்டென எழுந்து அமர, அது ஆதித்யன் என்று தெரிந்ததும் ஆசுவாசமாக உணர்ந்தாள்.

 

ஆரியன், “நந்து தான் எழுந்திரிச்சுடாளே, பொசய்டன். வாங்க நாம அடுத்த நினைவுக்குள் போகலாம். நீங்களும் சில எழுத்தாளர்கள் போல முக்கியமான நேரத்தில் தொடரும் போடாதீங்க. அப்புறம் என்ன நடந்துச்சுனு, எனக்கு இப்ப தெரிஞ்சாகணும்” என்று மேலும் எதையோ கூற வந்தவன், பொசய்டனின் கோபப் பார்வையில் அப்படியே நிறுத்தி விட்டான்.

 

 நந்தினி அவரது கோபத்தின் காரணத்தை உணர்ந்தவள், “ஐ ஆம் ஃபைன், பொசய்டன். பாருங்க, நான் இப்போ எழுந்திருத்து விட்டேன். இனி நாம அடுத்த நினைவுக்குள் போகலாம்” என்றாள்.

 

“இல்லை, க்ரிசான்டா. அதிக நேரம் மற்றவருடைய நினைவுகளில் நீங்கள் பயணம் செய்தால், உங்களுடைய உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், உங்கள் மூளை அந்த அளவுக்கு வளர்ச்சி அடையவில்லை. இனி என்ன ஆனாலும் சரி, நான் உன்னை இழக்க மாட்டேன், க்ரிசான்டா. ஏற்கனவே உன்னை ஒருமுறை பிரிந்தது போதும்” என்று கண் கலங்கக் கூறினார்.

 

அவரது அன்பில் நெகிழ்ந்த நந்தினி, “இனி அவ்வாறு எதுவும் நடக்காது பொசய்டன். ஆனாலும், உங்கள் மன திருப்திக்காக இப்போது எதுவும் செய்ய வேண்டாம். பொறுமையாக நாம் நாளைக்கே அனைத்தையும் பார்த்துக் கொள்ளலாம்” என்றாள். மனதில் ஆயிரம் கேள்விகள் எழுந்தாலும் அப்போதைக்கு அவருக்காக ஒத்திவைத்தாள்.

 

அவர் மகிழ்வுடன், “சரி இப்பொழுது அனைவரும் தூங்கச் செல்லுங்கள். உங்கள் ஆசைப்படி நாளை அந்த முக்கியமான கட்டத்தைப் பார்ப்போம் “ என்றார்.

 

பின்னர் அவர் எழுந்து சென்றுவிட, அவரையே பார்வையால் பின்தொடர்ந்த நந்தினி, “அவரு கொஞ்ச நாட்களிலே என் மேல் ரொம்ப பாசம் வச்சுட்டார் போல. எப்ப எல்லாம் ரொம்ப எமோஷனலா மாறுறாரோ, அப்போதெல்லாம் என்ன க்ரிசான்டா- னு தான் கூப்பிடுறார். ஆனா, ஒரு அஞ்சு நிமிஷம் மயக்கம் போட்டதுக்கு எதுக்கு இவ்ளோ அலப்பறை ?” என்று கேட்டாள்.

 

அவள் கூறிய கடைசி வரியைக் கேட்ட ஆரியன், “என்னாது அஞ்சு நிமிஷமா ? பூமி நேரப்படி நீ ஒரு மணி நேரமா மயக்கத்திலே இருந்த. உன்னைய எழுப்ப நாங்க மூணு பேரும் எவ்ளவோ முயற்சி பண்ணியும், நீ எந்திரிக்கல. பொசய்டன் ரொம்ப தவித்து விட்டார்” என்றான்.

 

“ஓ ! அதனால தான் இவ்வளவு எமோஷனலா மாறிவிட்டாரா ? நான் கூட வேற ஏதோ பெருசா நடந்திருக்குமோ என்று நினைச்சேன்” என்று ஆதியைக் கடைக் கண்ணால் பார்த்தபடி கூற,

 

அதைத் தவறாக புரிந்து கொண்ட ஆதியோ, “ஆமாம் இதை விட என்ன பெருசா நடக்கணும் ? மத்தவங்க எப்படி ஃபீல் பண்ணி இருப்பாங்கன்னு தெரியாம, அத க்ரிட்டிசைஸ் பண்றது” என்று பொசய்டனைப் பற்றி அவள் குறை கூறியதாக, நினைத்து இப்படிக் கூறிவிட்டு சென்றான்.

 

நந்தினியின் நிலை தான் மோசமாகி விட்டது. “என்ன நான் எதையோ சொன்னா, இவரு எதையோ புரிஞ்சிக்குறாரு, சரியான மங்குனி மீட்டியர் (மாங்காய் சொல்வதற்கு விண்வெளியில் மாங்காய் இல்லாதது குறிப்பிடத்தக்கது)” என்று நினைக்க,

 

“என்ன நந்து ? இப்படி பேசிட்டே ? உனக்கு மயக்கம் தெளியலனதும் எங்க எல்லாரையும் விட ஆதி தான் ரொம்ப தவிச்சி போயிட்டான். ரொம்ப பதறி சனா, சனா-னு ரொம்ப பீல் பண்ணிட்டு இருந்தான். அவனை இதுவரைக்கும் நான் இப்படி உணர்ச்சி வசப்பட்டு பார்த்ததே இல்லை.”

 

“பொசய்டன் கொஞ்சம் அதட்டுனதுக்கு அப்புறம் தான், கொஞ்சம் அமைதியானான். அப்பயும், சின்ன குழந்தைங்க விளையாட்டு பொம்மையை யாரிடமும் கொடுக்காமல் கட்டிப்புடிச்சு வச்சிக்கும்ல, அது மாதிரி உன்னைய மடியில போட்டு வைத்திருந்தான். அவனைப் போய் கோபப்படுத்திட்டியே ?” என்று கேட்க, நந்தினிக்கு ஆரியன் கூறியது எல்லாம் மனக்கண்ணில் ஓட அதைத் தனது நினைவுப் பெட்டகத்தினுள் சேமித்து வைத்தாள் நந்தினி.

 

தான் இவ்வளவு சொல்லியும், எதுவும் கூறாமல் உட்கார்ந்திருக்கும் நந்தினியைப் பார்த்த ஆரியன், “நான் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் நியூஸ் சொல்லட்டுமா, நந்து ?” என்று கேட்க,

“என்ன ?” என்பது போலப் பார்த்தாள் நந்தினி.

 

 “I think Aadhi is in love with you (ஆதி உன்னைக் காதலிக்கிறான் என்று நினைக்கின்றேன் )” என்று கூற, அதைக் கேட்ட நந்தினி மனதுக்குள் வெட்கப்பட்டாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல்,

 

 “நான் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் நியூஸ் சொல்லட்டா ?” என்று அவன் பாணியிலே கேட்க,

 

அவன் குழப்பம் அடைந்தாலும், “என்ன நந்து ?” என்று கேட்க,

 

“I too love him from the bottom of my Hypothalamus( நானும் அவனை காதலிக்கிறேன் )” என்று கூற, ஆரியன் இதை ஒரு சதவீதம் கூட எதிர்பார்க்கவில்லை என்று அவன் முக பாவனையே காட்டியது.

 

 ‘ஆஆஆஆ…’ என்று வாயைப் பிளந்தபடி அவன் பார்க்க, அவள் சிரித்துக் கொண்டே கண் சிமிட்டினாள்.

 

ஆரியன் சோகமாக, “பார்த்தியா, நந்து ? நான் லவ் பண்ணும் போதெல்லாம் உன்கிட்ட சொல்லாம இருந்து இருக்கேனா ?” என்று கேட்க,

 

அவன் சோகத்திற்குள் மறைந்து இருந்து நக்கல் தெரிய, “டேய், ஆரி ! நீ பண்றதெல்லாம் காதல்னு சொன்ன கொன்னுடுவேன். போற இடத்துல எல்லாம் ஒரு புக்கை வாங்கிட்டு வந்துட்டு இப்படி பெனாத்துறது ? நாங்க அப்படியா ?” என்று கூறியவள்,

 

அவன் முறைப்பதைப் பார்த்ததும், “சரி, சரி, நானும் ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தேன். ஆனால், அது ஆதி வர்றதுக்கு முன்னாடி” என்றாள்.

 

 அவன் உண்மையாகவே, கவலை அடைந்தானோ, என்று எண்ணி, “இல்ல ஆரி, இன்னும் நாங்க ரெண்டு பேரும் ப்ரொபோஸ் பண்ணிக்கல” என்று கூற, ஆரியன் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான்.

 

 “அதானே பாத்தேன். நீயாச்சும் ப்ரபோஸ் பண்றதாச்சும், ஒரு உண்மையை வாங்குறதுக்கு எவ்வளவு நடிக்க வேண்டியதா இருக்கு” என்று கலாய்க்க, அவனை மொத்தினாள் நந்தினி.

 

 பிறகு, “சரி சரி என் ஆளு வரவேண்டிய நேரம் வந்துடுச்சு, கிளம்பு. நேத்து மாதிரி ஒட்டு கேட்க கூடாது, சரியா ? இதெல்லாம் பெரியவங்க பேச வேண்டிய விஷயம், சின்னப்பையன் நீ கேட்கக் கூடாது” என்று சிறு குழந்தைக்குக் கூறுவது போலக் கூற,

 

“இந்த சிங்கிள் பாய் சாபம் உங்கள சும்மா விடாது” என்று கூறிக்கொண்டே அறைக்குச் செல்ல, அறையை விட்டு வெளியே வந்தான் ஆதித்யன்.

 

 அவனை, “என்ன ?” என்பது போல ஆரியன் பார்க்க,

 

“இல்லடா, நந்தினிட்ட கொஞ்சம் ஹார்ஷா பேசிட்டேன். அதான், சாரி கேக்கணும்” என்று கூற, ஒரு மார்க்கமாகத் தலையை ஆட்டி விட்டு உள்ளே சென்றான் ஆரியன்.

ஆதி அங்கே செல்லும் போது, நந்தினி வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, அவள் அருகில் சென்று அமைதியாக நின்றான்.

அவன் வந்ததும் நந்தினி அவனைப் பார்க்க, “சாரி, நந்து. நான் அப்படிப் பேசி இருக்கக் கூடாது” என்று சொல்லிவிட்டு, வேகமாக நகர முயல,

 அவன் கையைப் பற்றிய நந்தினி, “ஆரி எல்லாத்தையும் சொல்லிட்டான்” என்று அவனைப் பார்க்காமல் கூறினாள்.

 

 அவள் தன்னைப் பாராமல் கூறியதால், தன் மேல் கோபமாக இருப்பதாக நினைத்து, அவன் ஏதோ கூற முயல, “இப்ப கூடச் சொல்ல மாட்டீங்களா ?” என்று கேட்க,

 

அவள் விழியில் இருந்த காவியத்தைக் கண்டவன், அது கூறிய மறைபொருள் விளங்க, அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.

 

நந்தினி இதைச் சற்றும் எதிர்பாராமல் இருக்க, அவளை விடுவித்தவன் “சாரி நந்தினி, கொஞ்சம் ஓவர் எக்ஸைட்மென்ட்” என்று கூற,

 

 “இருந்தாலும், இது ஏதோ ப்ளான் பண்ணி எக்ஸைட் ஆன மாதிரி இருந்துச்சே. இனிமே இப்படி நடக்கட்டும், அப்புறம் பார்த்துக்கறேன்” என்று நமட்டுச் சிரிப்படன் சொல்ல, ஆதி இல்லையென்பது போல, அசடு வழிந்தான்.

 

பின் அவளே, “இன்னும் நான் முதல்ல கேட்டதைத் தரலயே ?“ என்று தலை குனிந்து கேட்க, அவளின் தலையை நிமிர்த்தியவன்,

 

“நீ எப்பவுமே கம்பீரமா தான் இருக்கணும், சனா பேபி” என்று கூறி, பின்,

I found a love for me

Darling, just dive right in
And follow my lead
Well, I found a girl, beautiful and sweet
I never knew you were the someone waiting for me

I will not give you up this time
Darling, just kiss me slow, your heart is all I own
And in your eyes, you’re holding mine

Baby, I’m dancing in the dark with you between my arms
Barefoot on the grass, we’re listenin’ to our favorite song
When you said you looked a mess, I whispered underneath my breath
But you heard it, darling, you look perfect tonight

Well, I found a woman, stronger than anyone I know
She shares my dreams, I hope that someday I’ll share her home
I found a love, to carry more than just my secrets
To carry love, to carry children of our own

We are still kids, but we’re so in love
Fightin’ against all odds
I know we’ll be alright this time
Darling, just hold my hand
Be my girl, I’ll be your man
I see my future in your eyes

Oh, no, no
Mm

Baby, I’m dancing in the dark, with you between my arms
Barefoot on the grass, we’re listenin’ to our favorite song
I have faith in what I see
Now I know I have met an angel in person
And she looks perfect
No, I don’t deserve this
You look perfect tonight

 

என்று பாடி தன் காதலை வெளிப்படுத்தினான். ஆதித்யன் நந்தினிக்கு ‘ஆது’ பேபியாக மாறிவிட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!