Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Intersteller Love

Vinto’s Interstellar Kaadhal Episode – 26

அத்தியாயம் – 26



Advertisement

அந்த விண்கலம் ஆர்ட்டர் கிரகத்தை நெருங்கிக் கொண்டிருக்க, நால்வரும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். லூனாவுக்கும் அந்தக் கிரகத்தின் பெயர் மட்டுமே தெரியுமே ஒழிய, அதைப்பற்றிய விபரம் ஏதும் தெரியாது. இப்போது அவர்களது கண்களுக்கு முன் அந்த அதிசயம் விரிந்திருந்தது.

ஆர்ட்டர்என்பது ஒரு கிரகமாய் அல்லாமல் ஐந்நூறு கிரகங்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்து இருப்பது போல அவர்களுக்கு தென்பட்டது. இதில் எந்த இடத்தில் இறங்கி, எங்குச் செல்வது என்று அவர்களுக்குப் புரியவில்லை. சிறிது நேரம் யோசித்தவர்கள் அந்தக் கிரகங்களின் மையத்திலிருந்த கிரகம் ஒன்றில் விண்கலத்தைத் தரை இறக்கினர்.

விண்கலத்தில் இருந்து வெளியே வந்து பார்த்த போது, முன்பைவிட அதிர்ச்சியில் உறைந்தனர். அந்தக் கிரகம் முழுவதும் இயற்கையின் காவலர்கள் வசிக்கும் காடுகளால் நிறைந்து இருந்தது. ஆனால், ஒரு மரத்தின் வேர் கூட மண்ணில் இல்லை. அனைத்தும் பறந்துகொண்டிருந்தன.

Advertisement

இவர்கள் நால்வரும் இறங்கியபோது கூட, அவர்கள் கால்கள் தரையில் படாமல் காற்றில் மிதப்பது போலவே உணர்ந்தனர்.

Advertisement

                             

Advertisement

ஆதி, “அடுத்து இப்ப நாம என்ன பண்றது ? எனக்கு என்னமோ இந்த இடம் சரியா இருக்கும்னு தோணல, ஏதோ தவறா தோணுதுஎன்றான்.

லூனா, “இது ஆர்கஸோட லெவல். அதான் இப்படி இருக்கு. இந்த கிரகத்தோட பெயர் ஆர்ட்டர். ஒருவேளை ஆர்கஸூம் நிக்கேடரும் சேர்ந்து இந்த கிரகத்தை உருவாக்கி இருக்கலாம். அப்படினா, இந்த ரெண்டு பேரையும் தான் நம்ம இப்ப சந்திக்க போறோம்என்றாள்.

நந்தினி, “எதுக்கும் இந்த கிரகத்துல நாம கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்குறது தான் நல்லதுஎன்றாள்.

ஆரியன், “அது சரி. ஆனால், எப்படியும் இந்த இடத்துல ஒரு பிரச்சினை வந்தே ஆகணுமே. அத வச்சி தானே உன்னை சோதிக்க முடியும். அதுக்கு நீ பதில் சொன்னதுக்கு அப்புறம் நாம அடுத்த லெவலுக்கு போவோம். இதுதான் நடக்கப் போகுது. அதுக்கு ஏன் இவ்வளவு யோசனை பண்ணனும் ?” என்று கேட்டான். ஆனால் அவனது எண்ணம் அன்று பொய்க்கப் போவது அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அவனது கூற்றிலிருந்த உண்மை புரிந்தாலும், அனைவரும் அமைதியாகவே நடந்தனர். அதாவது நடப்பது போல மிதந்தனர். இப்படியே இவர்கள் பேசிக் கொண்டே செல்ல, திடீரென்று அந்த இடத்தில் பனிமூட்டம் உருவாக ஆரம்பித்தது. அவர்களுக்குள்ளேயே ஒருவருக்கு மற்றொருவர் இருக்குமிடம் தெரியாத அளவுக்கு அந்த இடம் மாறியது.

நந்தினிக்கு ஏதோ தவறு நடக்கப் போகிறது என்று அவளது உள்ளம் சொல்ல, “எல்லாரும் யாருடைய கையையாவது கெட்டியா புடிச்சுக்கோங்க. இது நம்மள பிரிக்கிறதுக்கான ஒரு டிராப்பா கூட இருக்கலாம்என்று கத்த, அதே நேரம் அவர்கள் கால்களில் கொடி போன்ற தாவரங்கள் ஏறத் தொடங்கின.

ஆரியன், “ஐயோ! பாம்புஎன்று கத்தினான். லூனாவுக்கும் தன் கால்களில் கூசுவது போன்ற உணர்வு ஏற்பட, அவளும் கீழே குனிந்து பார்த்தாள்.

 ஏதோ தாவரம் போலத் தெரிய உற்றுப் பார்த்தவள், “அது சாதாரண கொடி இல்ல, அது ஒரு ராட்சச தாவரத்தோட கொடி. அதுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காததால நம்மள மாதிரி உயிரினங்கள தான் சாப்பிடும். இததான் உங்க கிரகத்துல இன்செக்டிவோரஸ் தாவரங்கள்னு…” என்று அவள் கூறி முடிப்பதற்குள், அவர்களை அந்தத் தாவரங்கள் இழுத்துச் செல்ல தொடங்கின.

ஆரியனும் ஆதியும் ஒரு பக்கம் செல்ல, நந்தினியும் லூனாவும் இன்னொரு பக்கம் சென்றனர். இரு பிரிவினரும் அலறிக்கொண்டே செல்ல, நந்தினி தனது சக்தியைப் பயன்படுத்த முயன்றாள்.

லூனா, “வேண்டாம்என்று கூறியது, அவள் காதில் விழாமல் போக, அவள் அந்தக் கொடியைத் தன் சக்தியால் அறுக்கவும், அந்தக் கொடி மேலும் வளர்ந்து இறுக்கமானது.

அங்கு ஆதியும் அதே வேலையைச் செய்ய, கொடிகள் இறுக்கமாகியதே தவிர, வேறு எதுவும் நடக்கவில்லை.

இறுதியில், அந்தக் கொடிகள் அவர்களை ஒரு ராட்சச மலர் இருந்த இடத்திற்கு அழைத்து வந்தன. அதன் அழகில் லூனாவைத் தவிர மற்ற அனைவரும் மயங்க, அவள் மட்டும் கண்களை இறுக மூடிக் கொண்டாள். பிறகு அந்த பூ அவர்களைத் தனது வாய் போல இருந்த ஒரு பகுதிக்குள் இழுத்துக் கொண்டது. அடுத்த நிமிடம் அவர்கள் நினைவிலிருந்து அனைத்தும் மறைந்தது.

 

******

( 1. இனி வரும் காட்சிகள் இருவேறு இடங்களில் நடக்கப் போவதால், அவற்றை பிரித்து காண்பிக்க இரு நிறங்கள் பயன்படுத்த பட்டிருக்கும்.

2. கீழே வரும் கணக்கு புரியவில்லையென்றால், ஆதி = நந்தினி, ஆரியன் = லூனா என்று வைத்துக் கொண்டு படிக்கவும்.)

******

எவ்வளவு நேரம் அப்படி மயங்கி இருந்தார்களோ தெரியவில்லை. இந்தப் பக்கம் நந்தினி முதலில் மயக்கம் தெளிந்து எழுந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தவளின் கண்களில், லூனா பட, அவளிடம் சென்று அவளை எழுப்ப முயன்றாள். சில நொடிகளில் லூனாவும் மயக்க வலையிலிருந்து எழுந்தாள்.

******

அந்தப் பக்கம் ஆரியன் முதலில் எழுந்திரிக்க, அவன் ஆதியை எழுப்பினான். அவனும் சுற்றிலும் இருந்த மாறுபட்ட சூழ்நிலையைக் கண்டு வேகமாக எழுந்தான்.

******

ஒரு பிரிவினர், மற்ற பிரிவினரின் பெயரை அழைத்துப் பார்க்க, எந்த பதில் குரலும் வரவில்லை. அதற்குப் பதிலாக ஒரு பெரிய மரத்திலிருந்து தன்னை பிரித்துக் கொண்டு ஓர் உருவம் அவர்களை நோக்கி நகர்ந்து வந்தது.

அந்தச் சிற்றரசரை, நந்தினியும் லூனாவும் ஒரு கோணத்திலும், ஆதியும் ஆரியனும் மற்றொரு கோணத்திலும் பார்த்தனர்.

அந்தச் சிற்றரசர், “என் பெயர் ஆர்கஸ். எனது சக்தியைப் பற்றி இந்தக் கிரகத்தைப் பார்த்தவுடனேயே உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த இடத்தில் இருக்கும் பறக்கும் சக்திக்குக் கூட நான் தான் காரணம். இப்போது உங்களுக்கான சோதனைக்கு வருவோம். உங்களுடைய நண்பர்கள் இப்போது என் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்க வேண்டுமா?” என்று கூறிவிட்டு, தன் கைகள் மூலம் ஏதோ செய்ய, இரு பிரிவினருக்கும் தனித்தனியாகத் திரை போன்ற அமைப்பு தோன்றியது.

ஆதிக்கும், ஆரியனுக்கும் தோன்றிய திரையில், நந்தினி ஒரு தீவிலும் லூனா ஒரு தீவிலும் இருப்பது போலத் தெரிந்தது. நந்தினிக்கும், லூனாவுக்கும் தோன்றிய திரையில், ஆதி ஒரு தீவிலும், ஆரியன் ஒரு தீவிலும் இருப்பது போலத் தெரிந்தது.

ஆர்கஸ், “உங்கள் நண்பர்கள் இருவரும் தனித்தனி தீவுகளில் உள்ளனர். ஒருவர் இருக்கும் தீவை மற்றவர் பார்க்க முடியாது. இனி நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்.

அந்த இரு தீவுகளுள் ஒன்றில் பன்னிரண்டு உருவச்சிலைகள் இருக்கும், மற்றொரு தீவில் எட்டு உருவச்சிலைகள் இருக்கும். ஒரு தீவில் இருக்கும் உருவச்சிலைகளை மற்றொரு தீவில் இருப்பவர்களால் பார்க்க முடியாது. ஒவ்வொரு நாளும் நான் அவர்கள் ஒருவரிடம், ‘இந்த இடத்தில் மொத்தமாக பதினெட்டு உருவச்சிலைகள் இருக்கிறதா இல்லை இருபது உருவச்சிலைகள் இருக்கிறதா ?’ என்று கேட்பேன். அந்த நபர் பதில் தெரியவில்லை என்று கூறினால், மற்றொரு நபரிடம் அதே கேள்வியைக் கேட்பேன்.

அந்த நபரும் தெரியவில்லை என்று கூறினால், அடுத்த நாளும் இதே செயல்பாடு தொடரும். அந்த இருவரில் யாராவது ஒருவர் தவறாகச் சொன்னால் கூட, அவர்கள் எப்போதும் இந்தக் கிரகத்திலே சிறை பட்டு இருப்பார்கள். ஒருவர் சரியாகக் கூறினால் கூட, இருவரும் விடுவிக்கப்படுவார்கள். இப்போது அவர்கள் எப்படி தப்பிப்பார்கள் என்று நீங்கள் கூறினால், அவர்களை விடுதலை செய்வேன்என்றார்.

அவர் கூறியதைக் கேட்ட அனைவரும் அதிர்ந்தனர்.

 

******

 

ஆரியன், “ மை காட் ! எப்பவுமே நந்தினி தான் நம்மள காப்பாத்துவானு சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா, அதுக்காக இப்படியா பண்ணுவாங்க ? இப்ப நாம என்ன பண்றது ?” என்று கேட்டான்.

 ஆதி, “இப்ப நாம கவலைப்பட்டு பிரயோஜனம் இல்ல. நாம அடுத்து ஏதாவது செஞ்சு நந்தினியையும் லூனாவையும் காப்பாத்தணும். அதுக்கு நாம இப்ப நந்தினி மாதிரி யோசிக்கணும்என்றான்.

 

******

அவர்கள் இருவரும் என்ன செய்வது என்று குழம்பிய, அதே நேரத்தில், இங்கு நந்தினியும் லூனாவும் பேசிக் கொண்டனர்.

 லூனா, “நந்தினி அவங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் தவறா சொன்னாலும் மாட்டிக்குவாங்க. எனக்கு என்னமோ ஆரியன் மேல சந்தேகமா தான் இருக்கு. அவங்க ரெண்டு பேரையும் எப்படி காப்பாத்துறது ?” என்று கேட்டாள்.

 நந்தினி, “இந்த கேள்விக்கு அவங்க ரெண்டு பேரும் பதில் சொல்லணும்னு அவசியம் இல்ல. அவங்க என்ன சொல்வாங்கன்னு நாம சொன்னா போதும், அவங்க ரெண்டு பேரையும் காப்பாத்திடலாம் லூனாஎன்றவள், தரையில் அமர்ந்து ஆழ்ந்து யோசிக்கத் தொடங்கினாள்.

 

******

 

அங்கு ஆதி, “எனக்கு ஒரு யோசனை வந்திருக்கு. எல்லா விஷயத்தையும் பெருசா பார்க்காம ரிவர்ஸ்ல பார்த்தா ஈசியா பதில் சொல்லலாம். இது சரியா தப்பான்னு தெரியல. வாடா, ட்ரை பண்ணி பாப்போம். லெட்ஸ் திங்க் அவுட் ஆஃப் பாக்ஸ்என்றான்.

 

******

இங்கு நந்தினி உற்சாகத்துடன், “கண்டுபுடிச்சிட்டேன். அவங்க எப்படி தப்பிப்பாங்கன்னு இப்போ புரியுதுஎன்றவள், அந்தச் சிலைக்கு அருகில் சென்றவள், தன்னுடைய பதிலைச் சொல்லத் தொடங்கினாள்.

 நந்தினி, “முதல் நாள் ஆதி பத்தொன்பது இல்லனா இருபது உருவச்சிலைகளைப் பார்த்தான்னா, அவன் மொத்தமாக இருபது உருவச்சிலைகள் இருக்கும்னு சொல்லிடுவான். ஆனா, அவன் வெறும் பன்னிரண்டு உருவச்சிலைகள தான் பாக்குறான். அதனால அவன் தெரியலன்னு சொல்லிடுவான்.

 ஆனா, ‘ஆரியன் இத வச்சு ஆதி அதிகபட்சமா பதினெட்டு சிலைகள தான் பார்க்க முடியும்னு கண்டுபிடிச்சுடுவான். ஏன்னா அதுக்கு மேல ஆதி பார்த்திருந்தா பதில் சொல்லிருப்பான்’.

 அதே மாதிரி ஆரியன், ஜீரோ இல்லனா ஒரு உருவச்சிலைய பார்த்தா, ஆதியோட அதிகபட்ச பதினெட்டு சிலைகளையும் சேர்த்து மொத்தமா பதினெட்டு சிலைகள் இருக்குன்னு முடிவு பண்ணிடலாம். ஆனா, அவன் எட்டு சிலைகள பாக்குறான். அதனால, அவனும் தெரியலன்னு சொல்லிடுவான். ‘இத வச்சு ஆதி, ஆரியன் குறைந்தது இரண்டு சிலைகளையாவது பாக்குறான்னு தெரிஞ்சுக்குவான்’. ஏன்னா ஆரியன் எந்த உருவச்சிலையையும் பார்க்காம இருந்தா பதில் சொல்லிருப்பான்என்றாள்.

******

அங்கு ஆதி, “இரண்டாவது நாள், நந்தினி பதினேழு இல்லன்னா பதினெட்டு உருவச்சிலைகள பார்த்தா, லூனாவோட குறைந்தபட்ச இரண்டு சிலைகள சேர்த்து மொத்தம் இருபது உருவச்சிலைகள் இருக்குனு சொல்லிடுவா. ஆனா, அவ பன்னிரண்டு உருவச்சிலைகள தான் பாக்குறா. அதனால நந்தினி தெரியலனு சொல்லிடுவா. ‘இத வச்சு லூனா நந்தினி அதிகபட்சமா பதினாறு சிலைகள தான் பார்க்க முடியும்னு தெரிஞ்சுக்குவா’.

 அதே மாதிரி, லூனா ரெண்டு இல்லனா மூணு சிலைகளப் பாத்தா, நந்தினி அதிகபட்சமா பதினாறு சிலைகள பார்க்க முடியும்ன்றத வச்சி, மொத்தம் பதினெட்டு சிலைகள் இருக்குனு சொல்லிடுவா. ஆனா லூனா வெறும் எட்டு சிலைகள தான் பாக்குறா. அதனால அவளும் தெரியலன்னு சொல்லிடுவா. ‘இத வச்சு நந்தினி, லூனா குறைந்தது நாலு சிலைகளயாவது பாக்குறான்னு தெரிஞ்சுக்கலாம்’” என்றான்.

******

இங்கு லூனா, “இந்த முறை, நான் முயற்சி செய்கிறேன் நந்தினி. மூன்றாம் நாள், ஆதி பதினஞ்சு இல்லன்னா பதினாறு சிலைகளைப் பார்த்தா, ஆரியனோட குறைந்தபட்ச நான்கு சிலைகள சேர்த்து மொத்தம் இருபது சிலைகள்னு சொல்லிடுவான். ஆனா, அவன் பன்னிரண்டு சிலைகள தான் பார்க்குறான். அதனால தெரியலனு சொல்லிடுவான். ‘இத வச்சு ஆரியன் ஆதி அதிகபட்சமா பதினாழு சிலைகள தான் பாக்கமுடியும்னு தெரிஞ்சுக்குவான்’.

 அதே மாதிரி ஆரியன், நாலு இல்லன்னா அஞ்சு சிலைகள பாத்தா, ஆதியோட பதினாழு சிலைகளோட சேர்த்து மொத்தம் பதினெட்டு சிலைகள் இருக்குன்னு சொல்லிடுவான். ஆனா அவன் எட்டு சிலைகள பாக்குறதால தெரியலன்னு சொல்லிடுவான். ‘இத வச்சு ஆதி, ஆரியன் குறைந்தபட்சம் ஆறு சிலைகள பார்ப்பான்னு தெரிஞ்சுக்குவான் என்றாள்.

 நந்தினி, “சூப்பர் லூனா ! சரியா சொல்லிட்டஎன்றாள்.

******

அங்கு ஆரியன், “இப்ப நந்தினி, பதிமூனு இல்லனா பதினாழு சிலைகள பார்த்தா, லூனாவோட ஆறு சிலைகள சேர்த்து மொத்தம் இருபது சிலைகள் இருக்குன்னு சொல்லிடுவா. ஆனா அவ வெறும் பன்னிரண்டு சிலைகள தான் பாக்குறா. அதனால அவ தெரியலன்னு சொல்லிடுவா. இதை வச்சு லூனா, ‘நந்தினி அதிகபட்சம் பன்னிரண்டு சிலைகளை தான் பாக்க முடியும்னு தெரிஞ்சுக்குவா’.

 அதே மாதிரி, லூனா ஆறு இல்லன்னா ஏழு சிலைகள பார்த்தா, நந்தினியோட பன்னிரண்டு சிலைகள சேர்த்து மொத்தம் பதினெட்டு சிலைகள் இருக்கனு சொல்லலாம். ஆனா, அவ எட்டு சிலைகள பாக்குறதால, தெரியலன்னு சொல்லிடுவா. இதை வச்சு நந்தினி, ‘லூனா குறைந்தபட்சம் எட்டு சிலைகள பாப்பானு தெரிஞ்சுக்குவா’ “ என்றான்.

 ஆதி புன்னகையுடன், ‘ஆமாம்என்பது போல தலையசைத்தான்.

******

இங்கு நந்தினி, “கடைசியா அஞ்சாவது நாளப்ப, ஆதி பன்னிரண்டு சிலைகள பாப்பான். அதுமட்டுமில்லாம அவனுக்கு ஆரியன் குறைந்தபட்சம் எட்டு சிலைகள பார்ப்பான்னு தெரியும். அதனால அது ரெண்டையும் சேர்த்து அஞ்சாவது நாள் ஆர்கஸ் கிட்ட, மொத்தம் இருபது சிலைகள் இருக்குன்னு சொல்லிடுவான். ரெண்டு பேரும் தப்பிச்சுடுவாங்கஎன்றாள். அதே நேரம் அங்கு ஆதியும் அதே விளக்கத்தை கூறி முடிக்க, இருபக்கமும் இரு வேறு சூறாவளிகள் தோன்றின.

******

சிறிது நேரத்தில், அது வானுயரத்திற்கு வளர, மரங்கள் அனைத்தும் அதில் சிக்கிக் கொண்டன. அவர்கள் நால்வரும் எவ்வளவு முயன்றும் அதிலிருந்து தப்பிக்க முடியாமல், அதில் விழுந்து அதனுடன் சுழல தொடங்கினர். அந்தக் காற்று சுழல் அவர்களை அப்படியே ஒரு பெரிய மரத்திற்கு அடியில் வந்து விட்டு சென்றது.

சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர்கள் ஒவ்வொருவராக எழ, அந்த இடத்தை சுற்றிப் பார்த்து ஆராய்ந்தனர். அந்த மரம் ஓர் ஊரையே மறைக்கும் அளவிற்குப் பெரியதாக வளர்ந்திருந்தது. அவர்கள் நால்வரும் பழைய நிலைக்குத் திரும்பி விட,

ஆரியன், “பார்த்தீங்களா ? இந்த தடவை நாங்கதான் உங்கள காப்பாத்துனோம்என்று தற்பெருமையாகக் கூற,

உடனே லூனா, “சுழல்ல மாட்னதுல இருந்த கொஞ்ச நஞ்ச அறிவும் போயிடுச்சு போல, உங்க ரெண்டு பேரையும் தான் நாங்க காப்பாத்துனோம்என்றாள்.

ஆரியன், ‘இல்லை’, லூனா, ‘ஆமாம்என்று கூறி, தங்களது போரைத் தொடர,

நந்தினி, “ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் சண்டை போடாம இருக்கீங்களா ?” என்று அழுத்தமாகக் கேட்கவும், தான் ஆரியனும் லூனாவும் அமைதியானார்கள்.

பிறகு நந்தினி ஆதியிடம், என்ன நடந்தது என்று கேட்க, அவன் நடந்ததை விளக்கிக் கூறினான்.

நந்தினி, “அப்படின்னா நாம எத்தனை பேர் வந்திருக்கோம்றத பொறுத்து சோதனைகள மாத்துறாங்க .அதாவது, நம்மள அவங்க உன்னிப்பா கவனிக்கிறாங்க. யாருமே ஆபத்துல இல்லாதப்ப இருக்குற மாதிரி காமிச்சிருக்காங்க. பிரில்லியண்ட் பிளான்என்றாள்.

மற்ற இருவரும், ‘ஆமாம்என்பது போல தலையசைக்க,

லூனா, “நாம இப்போ அடுத்த கட்டத்துக்கு, அதாவது நிகேடரோட லெவலுக்கு போகப் போறோம்என்றாள்.

ஆரியன், “எப்படி ?” என்று வேகமாகக் கேட்க, லூனா, மேலே கையை உயர்த்திக் காட்டினாள். அனைவரும் மேலே பார்க்க, அங்கிருந்த மரத்தின் உச்சியில், ஒரு பெரிய வட்ட வடிவ துளை போல தெரிந்தது.

லூனா, “உங்களுக்கு புரியுற மாதிரி சொல்லனும்னா, அது ஒரு ட்ரான்ஸ்போர்டேசன் டிவைஸ் மாதிரி தான். செலினாவிடம் மட்டும் நேரத்தையும் கடந்து செல்லும் இது மாதிரி டிவைஸ் இருக்கும்னு கேள்வி பட்டிருக்கேன்என்றாள்.

நந்தினி, “அப்படின்னா உங்களால, அதாவது நம்மளால டைம் ட்ராவல்லாம் பண்ண முடியாதா ? இன்னும் சொல்லப்போனா செலினா அதைப் பயன்படுத்தி டைட்டனுக்கு அந்த சக்திய கொடுக்காம இருந்திருக்கலாமே ?” என்று கேட்டாள்.

லூனா, “நந்தினி டைம் ட்ராவல்னா நீ எதை சொல்வ ? எங்களப் பொறுத்த வரைக்கும் டைம் ட்ராவல்னா எங்களோட நினைவுகள கடந்த காலத்துக்கு அனுப்புறத தான். ஆனா நீ செலினா ஏன் அப்படிச் செய்யக் கூடாதுன்னு கேட்டீல, அதற்குக் காரணம் ஏதாவது இல்லாமல் இருக்காது. இல்லையென்றால் பிரச்சினையை இவ்வளவு பெரியதாக வளர விட்டிருக்க மாட்டார்என்றாள்.

ஆதி, “ஓகே இப்ப பிரச்சனை என்னன்னா, நாம இங்கே இருந்து அந்த டிவைஸ் மூலமா வேறு கிரகத்துக்கு போயிட்டோம்னா, மறுபடியும் எப்படி இங்க வரது ? எனக்கு தெரிஞ்சு அதுல ஸ்பேஸ் ஷிப் நுழையமுடியாதுஎன்றான்.

லூனா, “அது கரெக்ட் தான். ஆனா என்னாலயும் இது மாதிரி போர்ட் ஹோல உருவாக்க முடியும். அதனால பிரச்சனை இல்லைஎன்றாள். பிறகு அவர்கள் நால்வரில் லூனா எளிதாக அந்த மரத்தில் ஏறி விட, நந்தினி தன் சக்தியைப் பயன்படுத்தி பறந்து மரத்தில் ஏறினாள். ஆதிக்கும் ஆரியனுக்கும் மற்ற இருவரும் அவர்கள் ஏறுவதற்கு உதவி செய்தனர். பிறகு நால்வரும் ஒன்றாக அந்த porthole-க்குள் நுழைந்தனர்.

 

******

 

கிரகம் : கயா

இடம் : வெலாரிஸ் கோட்டை

 

ப்ரொமேத்தியஸ், ஏதோ ஓர் அவசரத்தில் இருப்பது போல தென்பட்டான். இதுவரை தான் தீட்டிய திட்டங்கள் அனைத்தையும் சரி பார்த்தான். அவை ஓரளவுக்கு அவன் எதிர்பார்ப்பை எட்டியிருக்க, அவற்றை மூடி வைத்துவிட்டு தனது சிம்மாசனத்தில் அமர்ந்தான். அவன் மனதை ஒருவித வெறுமை ஆட்டிப் படைத்தது. எதுவுமே செய்யாமல் அமர்ந்திருப்பது நல்லது இல்லை என்று தோன்ற, தனக்கு முன்னால் இருந்த மூன்று பொருட்களையும் சரிபார்த்தான்.

முதலாவது, பிரம்ம கிரந்தம். இரண்டாவது, அவன் தன் சக்திகளைப் பயன்படுத்தி உருவாக்கிய டோக் (TORC). மூன்றாவது, எதிர் படையினரைத் தன் பக்கம் திருப்பிக் கொள்ளப் பயன்படும் கருவி. அவை அனைத்தையும் தனது கவசத்தில் மறைத்தவன், அந்தக் கோட்டையை விட்டு வெளியேறினான்.

மெல்ல அவன் சக்தியைப் பயன்படுத்தி, பெருங்கடல் சிறைக்குச் சென்றான். அங்கிருந்த டிராகன்கள் அவன் முன் வந்து மண்டியிட, “இனி வரும் போரில், உங்கள் உதவி எனக்குக் கண்டிப்பாக தேவைப்படும். அதுவரை சுதந்திரமாகச் சுற்றுங்கள்என்றவன் கூற, அவன் கூறியது புரிந்தது போல அவை வேகமாகப் பறந்து தண்ணீரில் இருந்து வெளிவந்து காற்றில் பறந்தன.

பின் ப்ரொமேத்தியஸ், பல ஆண்டுகளுக்கு முன் அங்கு தான் இருந்த அறைக்குச் சென்றான். அந்தக் காலத்தில் அவன் எழுதியிருந்த குறிப்புகள் இன்றும் அப்படியே இருக்க, அதை பார்த்த அவன் மனதில் பல எண்ணங்கள் தோன்றின.

 பின்னர், மெல்ல அந்தப் பெருங்கடல் கோட்டையிலிருந்து வெளியேறியவன், அடுத்து ஓர் இடத்திற்குச் சென்றான். அந்த இடத்திலும் அவன் மறக்க நினைக்கும் நினைவுகள் அவனைத் துரத்த, அங்கு, தான் வந்த வேலையை முடித்தவன், மறுபடியும் அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தான்.

அடுத்து சோல் பாக்ஸ் இருந்த இடத்திற்குச் சென்றான். கயா கிரகத்தின் முன்னாள் நிலவாகவும் இந்நாள் சோல் பாக்ஸை இருக்க, அங்கு சென்று, அந்தப் பொருளை முழுமையாகச் சரி பார்த்தான். இனி தான் செய்ய வேண்டிய வேலை எதுவும் இல்லை என்று தோன்ற, வெலாரிஸ் கோட்டைக்குத் திரும்பினான்.

அவனது வரவுக்காகக் காத்திருந்த ஒரு காவலன், “பேரரசர் ப்ரொமேத்தியஸ் வாழ்க !” என்று கூற, ப்ரொமேத்தியஸின் முகத்தில் குறுநகை தோன்றியது.

பேரரசே இரு நாட்களுக்கு முன்பு, இந்தக் கிரகத்தை விட்டு வெளியேறிய விண்வெளி வாகனத்தில் க்ரோனனின் மகள் லூனா இருந்தார் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது. 176C, கைகன்டா, மெராடஸ் மேலும் இப்போது பொசய்டன் ஆர்ட்டர் கிரகத்தில் இருக்கிறார். அவருடன் தான் இப்போது லூனாவும் இணைந்துள்ளார்என்று கூறினான்.

அதற்கு ப்ரொமேத்தியஸ், “இனி நீ அவர்களைக் கண்காணிக்கும் பணியை விட்டுவிடு. அடுத்து அவர்கள் எங்கே செல்வார்கள் என்று எனக்குத் தெரியும் அனைத்து சிற்றரசர்களையும் அவர்களது படைகளோடு வெலாரிஸ் கோட்டைக்கு நான் வரச் சொல்லி உத்தரவிட்டதாகச் செய்தி அனுப்புஎன்றான்.

அந்தக் காவலாளி, வணங்கி விட்டுச் செல்ல, கண்மூடி அமர்ந்தான் ப்ரொமேத்தியஸ். அந்தச் சதுரங்க விளையாட்டில் அவன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டான். சதுரங்கத்தில் மற்ற காய்களை விட ராணிக்கே அதிக சக்திகள் உண்டு. ஆனால், ஒரு திறமையான சதுரங்க விளையாட்டு வீரனுக்கு அனைத்து காய்களும் சரி சமமான பலங்கள் உடையவை தான்.

 

******

 

Porthole-இல் நுழைந்தவர்கள், கண் மூடி கண் திறக்கும் நேரத்தில் அந்தப் பாலைவனத்தில் இருந்தனர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அந்த மணல் சாம்ராஜ்யம் பரந்து விரிந்திருந்தது.

லூனா, “இந்த இடம் வெறும் பாலைவனமாக இருக்க வாய்ப்பில்லை. ஏன்னா இது நிகேடரோட கிரகம். இப்படி எதுவுமே இல்லாம எப்படி இருக்க முடியும் ?” என்று கேட்டாள்.

நந்தினி, “அப்படின்னா இந்த இடத்திலயும் நாம அந்த கோட்டை எங்க இருக்குன்னு கண்டுபிடிக்கறது கொஞ்சம் கஷ்டமான காரியம்னு தான் தோணுதுஎன்றாள்.

ஆதி, “கமான் கைஸ் ! நமக்கு நேரமில்ல இன்னும் நாம ரெண்டு லெவலை தாண்டணும். நமக்கு லக் இருந்தா சீக்கிரமே கண்டுபுடிச்சிடலாம்என்றான்.

நால்வரும் அமைதியாக நடக்கத் தொடங்கினர். எவ்வளவு தூரம் நடந்தாலும், அது ஒரு முடிவில்லாத பயணம் போலவே தோன்றியது. முழுதாக கயா கிரக வாசியாக இருக்கும் லூனாவுக்கும், நந்தினிக்கும் எந்தப் பிரச்சனையும் தெரியாவிட்டாலும், திரிசங்கு நிலையில் இருக்கும் ஆதியும், ஆரியனும் அந்தச் சூழ்நிலைக்குப் பொருந்த முடியாமல் கஷ்டப்பட்டனர்.

பிறகு தூரத்தில் சின்ன காடு போல ஓர் இடம் தென்பட்டது. அதை நெருங்க நெருங்க அது விலகிப் போவது போலத் தெரிந்தாலும், அவர்கள் விடாமுயற்சியுடன் தொடர, அந்தச் சோலைவனத்தை அடைந்தனர். இந்த இடம் சிறிது குளிர்ச்சியாக இருக்க, அனைவரும் அங்கு ஓர் இடத்தில் அமர்ந்தனர்.

ஆரியன், “இன்னும் எவ்வளவு நேரம் தான் இந்த கிரகத்தையே சுத்துறது ?” என்று கேட்டான்.

லூனா, “அந்த பார்ச்மென்ட் கிடைக்கும் வரையில்என்றாள். நந்தினிக்கு திடீரென ஏதோ யோசனை தோன்ற வேகமாக அந்த இடத்தை சுற்றி விட்டு வந்தாள்.

நந்தினி, “கண்டுபிடிச்சுட்டேன் ! அந்த புதிரில் Till it meet with square of side elevenனு இருந்துச்சுல்ல, அதான் இந்த காடு எவ்ளோ அளவுன்லாம் தெரியல. ஆனா, இந்த இடம் கண்டிப்பா சதுர அமைப்பு தான்என்றாள்.

ஆதியும், ஆரியனும் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு, அந்த இடத்தின் மையத்திற்கு வந்தனர். அந்த இடத்தில் ஒரு சிறிய குட்டை இருப்பது போல் தெரிய, அதைக் கண்டவுடன் மீண்டும் பழைய இடத்திற்கே திரும்பி வந்தனர்.

ஆதி, “இந்த இடத்தில் ஒரு சின்ன நீர்நிலை ஏதோ இருக்கு. நாம பேசாம அதுல குதிச்சு பார்த்தா என்ன ?” என்று கேட்டான். நந்தினிக்கும் அது சரியென படவே, ஆரியனையும், லூனாவையும் பார்த்தாள். அவர்களும் சம்மதமாக தலையசைக்க, நால்வரும் அந்தச் சோலைவனத்தின் மையத்திற்குச் சென்று, குட்டைக்குள் குதித்தனர்.

உள்ளே குதித்த நால்வருக்கும், அதிர்ச்சியில் ஹார்ட் அட்டாக்கே வந்து விட்டது. அங்கு இருந்த கோட்டை அவர்கள் இதுவரை பார்த்ததிலேயே, இல்லையில்லைவேறு எந்தக் கோட்டையையும் ஒப்பிட முடியாத அளவுக்கு இருந்தது.

அந்தக் கோட்டையை ரத்தினக் கற்களால் நிரப்பி, அதை மேலும் அழகுறச் செய்திருந்தார் நிகேடர். அவர்கள் அந்த அழகை ரசித்துக் கொண்டிருக்கும்போதே, இரு விலங்குகள் அவர்களை நோக்கி வந்தன. கரிய நிறத்தில், அவர்கள் நால்வரையும் ஒரே நொடியில் விழுங்கிவிடும் அளவுக்குப் பெரியதாய் இருந்தன அவை.

அவற்றைத் தாக்குவதற்கு லூனா தயாராக, நந்தினி அவளைத் தடுத்தாள். பின்னர், அவள் தனியாக முன்னே நீந்திச் செல்ல, அவளைத் தொடர்ந்து பின்னால் செல்ல முயன்ற ஆதியை, லூனா தடுத்தாள்.

ஆதி அவளைக் கேள்வியாகப் பார்க்க, அவனைப் பொறுமையாக நடப்பதைப் பார்க்குமாறு சைகை காட்டினாள் லூனா. அந்த விலங்குகளை நோக்கிச் சென்ற நந்தினி, க்ரிசான்டாவாக மாற, அதே நேரத்தில் அவளுக்குள் அடக்கப்பட்ட நந்தினியும் வெளியே வந்தாள். அந்த விலங்குகள் அவளை நெருங்கியதும், பூனை போல மாறி அவளிடம் அடங்கின.

நந்தினி தனது இரு கைகளாலும், அந்த விலங்குகளைத் தொட, அவற்றின் விழிகளும் தங்க நிறமாக மாறின. இதையெல்லாம் ஆரியனும், ஆதியும் வாய் பிளந்து பார்க்க, நந்தினி அந்த இரு விலங்குகளுள், ஒன்றின் மீது ஏறி அமர்ந்தாள். மற்ற மூவரையும் பார்த்துக் கையசைக்க, அவர்கள் அவளிடம் விரைந்து வந்தனர். நந்தினி அமர்ந்திருந்த விலங்கின் மீது ஆதி அமர்ந்து கொள்ள, லூனாவை சிரிப்புடன் நோக்கினான் ஆரியன். அவனைப் பார்வையால் எரித்த லூனா, அவனுடன் மற்றொரு விலங்கின் மீது அமர்ந்தாள். நால்வரும் அமர்ந்ததும், அந்த விலங்குகள் நிகேடரின் கோட்டையை நோக்கிப் பாய்ந்தன.

                                                             

                                 

                                 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!