Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Viswakarma

Viswakarma 8 1

8

 

“காஞ்சனா…”



Advertisement

 

“சொல்லுங்க சார்…”

 

Advertisement

“விஸ்வா உங்களை ரூம்ல வந்து பார்க்கச் சொன்னான்…”

Advertisement

 

“எதுக்கு??”

 

Advertisement

“எல்லாமே என்கிட்ட தான் கேட்பீங்களா?? உள்ள போய் பாருங்க, நான் உங்களை எதுவும் சொல்லிட்டா அவன் என்னை என்னமோ வில்லன் மாதிரி பார்க்குறான்…” என்றுவிட்டு போனான் டேவிட்.

 

காஞ்சனா விஸ்வாவின் அறைக்கதவை தட்டி அனுமதி பெற்று உள்ளே சென்றாள்.

 

“வரச்சொன்னீங்கலாமே சார்…”

 

“ஆமா உட்காருங்க…”

 

“சொல்லுங்க சார்…”

 

“நாம டிசைன்ஸ் பத்தி பேசினோம்ல”

 

“ஹ்ம்ம்…”

 

“அதைப்பத்தி எதுவும் யோசிச்சீங்களா??”

 

“யோசிக்க என்ன சார் எனக்கு, அதான் டேவிட் சார் நேத்து அவ்வளவு சொன்னாங்களே சார்… எனக்கு நான் இப்போ பார்க்கற வேலையே போதும் சார்…”

 

“இதை வைச்சு என் தம்பியை என்ன படிக்க வைக்க முடியுமோ அதை செய்யறேன் சார்…”

 

“காஞ்சனா உங்ககிட்ட இந்த வேலை செய்வீங்களான்னு கேட்டது நானு. எனக்கு பதில் சொல்லுங்க, அவன் சொன்னதை எல்லாம் பிடிச்சுட்டு பேசாதீங்க…”

“இல்லை எனக்கு இஷ்டமில்லை…”

 

“நிஜமாவா?? என்னை பார்த்து சொல்லுங்க…”

 

அவள் குனிந்த தலையை நிமிரவேயில்லை. “இல்லை சார்… நான் கிளம்பறேன்…” என்று அவள் எழப் போக விஸ்வா அவள் தோளின் மீது கை வைத்து அமரச் செய்தான்.

 

வேண்டுமென்று செய்யவில்லை அவளை இருக்க வைக்க வேண்டும் என்று செய்தது. ஆனால் அதற்காய் அவளை தொட்டது அதிகப்படி என்று தோன்ற “சாரி” என்றான்.

 

“நான் யார்கிட்டயும் எனக்கு ஹெல்ப் பண்ணச் சொல்லி இதுவரைக்கும் கேட்டதில்லை. என்னன்னு தெரியலை உங்ககிட்ட தான் இவ்வளோ நேரம் கேக்கறேன்…”

 

“யோசிச்சு ஒரு பதில் சொல்லுங்க, இப்போ நீங்க போகலாம்…” என்றான்.

 

அவள் மேற்கொண்டு எதுவும் சொல்லவில்லை. அவள் அதிர்ந்த முகமே அவன் தொடுகையினால் வந்தது என்பதை உணர முடிந்தது அவனால்.

 

‘என்னாச்சு எனக்கு இப்படிலாம் யார்கிட்டயும் நான் பீகேவ் பண்ணதில்லையே. என்னை இந்த பொண்ணு ஏதோ ஒரு வகையில டிஸ்டர்ப் பண்ணுறா…’

 

நாட்கள் மெதுவாய் செல்லவாரம்பித்தது. அவள் இன்னமும் அவன் கேட்டதிற்கு பதில் சொல்லவேயில்லை.

 

அவள் எதுவாவது சொல்லியிருந்தாலாவது இவனுக்கு நிம்மதியாய் இருக்கும் போல. தன்னை தவறாக எண்ணியிருப்பாளோ என்ற குற்ற குறுகுறுப்பு வேறு இப்போது.

 

அதுவே அவனறியாமல் அவன் பார்வை அவளையே தொடர்ந்தது. சிசிடிவியின் பதிவுகளில் கூட அவளைத் தான் தேடி தேடி பார்த்தான்.

 

இதெல்லாம் அவள் அவனை பார்க்க வைக்க செய்த வேலை என்றென்பதை அவனறியான்.

 

அவளுமே அவன் எண்ணம் தன்னை சுற்றி இருக்க வேண்டும், தன்னை அவன் முழுதுமாய் நம்ப வைக்க வேண்டும் என்று எண்ணித் தான் செய்தாள். அவன் அவளை விரும்புவான் என்பதை அவள் எதிர்பார்க்கவில்லை.

 

ஆனாலும் அதை அவள் தனக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொண்டது முழுக்க முழுக்க அவளின் பழிவாங்கும் எண்ணமேயன்றி வேறேது.

 

ஒரு மாதம் தன்னைப் போல ஓடியிருந்தது. டேவிட் கூட சொன்னான் “விஸ்வா நான் கூட அந்த பொண்ணை ரொம்ப தப்பா நினைச்சுட்டேன்டா… ஏதோ அவ வேணுமின்னே செய்யறான்னு பேசிட்டேன்…”

“ஆனா இப்போ பார்த்தா அப்படி தெரியலை விஸ்வா. ரொம்ப நல்ல மாதிரியா இருக்கா, நான் அன்னைக்கு அவ்வளவு பேசியும் என்கிட்ட எப்பவும் போல இயல்பா தான் இருக்கா…”

 

விஸ்வா அவனை முறைத்தான் இப்போது. “அன்னைக்கு என்ன பேசணுமோ பேசிட்டு இப்போ வந்து இப்படி சொல்லுடா…”

 

“இல்லை விஸ்வா அன்னைக்கு என்ன தோணிச்சோ அதை தான் நான் சொன்னேன். ஒருத்தரை பத்தி முழுசா தெரிஞ்சுக்காம சொல்லக்கூடாதுன்னு இப்போ புரியுது விஸ்வா…”

 

“அவ நான் கேட்டதுக்கு கூட இன்னும் பதில் சொல்லவேயில்லை டேவிட்”

 

“என்ன அந்த டிசைனிங்க்கு ஹெல்ப் பண்ணச் சொல்லி கேட்டியே, அதுவா…”

 

“ஹ்ம்ம் ஆமாடா…”

 

“நான் வேணா பேசிப் பார்க்கட்டுமா…”

 

“வேணாம் விடு…”

 

“ஏன்டா??”

 

“நானே பேசிப் பார்க்கறேன்…” என்றான் விஸ்வா.

 

“நீ தான் ஏற்கனவே பேசிட்டியே??”

 

“கடைசியா ஒரு முறை கேட்டுப் பார்க்கறேன், அப்புறம் அவங்க ரெஸ்பான்ஸ் பண்ணலைன்னா விட்டிறலாம்…”

 

“ஹ்ம்ம் சரி, நான் போய் அவங்களை வரச் சொல்றேன்…”

 

“வேணாம்… நானா சந்தர்ப்பம் பார்த்து பேசிக்கறேன்…”

 

“ஓகே…”

 

பத்து நாட்கள் சென்றிருக்கும். எப்போதாவது வெளியில் வந்து சுற்றிப்பார்க்கும் விஸ்வா அன்றும் அது போல் வந்தான். ஒவ்வொரு இடமாக சுற்றிப்பார்த்துக் கொண்டே வந்தான்.

 

காஞ்சனா வாடிக்கையாளர் ஒருவருக்கு நகை தெரிவு செய்ய உதவிக் கொண்டிருந்தாள். அவர் கேட்பதற்கு இதமாய் பதமாய் அவள் பதிலளித்துக் கொண்டிருப்பதை பார்த்தான்.

 

அவர்கள் கடையில் வேலை செய்பவர்களுக்கென்று பிரத்யேக சீருடை உண்டு. அடர் குங்கும நிறத்தில் இருந்த சேலை அவளுக்கு வெகுபாந்தமாய் இருந்தது. காதில் ஒரு முத்து வைத்த தொங்கட்டான். கழுத்தில் ஒரு முத்துமாலை பார்க்க அவ்வளவு அழகாய் இருந்தது.

 

அவ்வளவையும் தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வை தன்னையுமறியாமல் அவளின் கூம்பியிருந்த கரத்தில் பதிய ஏனோ அதில் அப்படி ஒரு வலியை உணர்ந்தான். அவளுக்கு அழகை கொடுத்த ஆண்டவன் ஏன் இப்படி ஒரு குறையை கொடுத்தான் என்று தான் அவனுக்கு புரியவில்லை.

 

வெகு நேரமாய் தான் அங்கேயே நின்றிருக்கிறோம் என்ற தோன்ற அங்கிருந்து நகர்ந்தான்.

 

அவன் அறைக்கு சென்ற அரைமணி நேரத்தில் கதவை தட்டும் சத்தம் கேட்டது. “எஸ்…” என்றான்.

 

அங்கு சத்தியமாய் காஞ்சனாவை அவன் எதிர்பார்க்கவில்லை. தன் எண்ணத்தின் நாயகியே அங்கு நின்றிருக்க அவன் முகத்தில் தன்னைப் போல் மலர்ச்சி வந்திருந்தது.

 

“வாங்க காஞ்சனா…”

 

“உள்ளே வாங்க, அங்கேயே ஏன் நிக்கறீங்க??”

 

“நீங்க என்கிட்ட எதுவும் பேசணுமா சார்??”

 

“ஏன் அப்படி கேட்கறீங்க??”

 

“இல்லை கொஞ்ச நேரம் முன்னாடி நீங்க என்னையே பார்த்திட்டு இருந்தீங்களா அதான் கேட்டுப் போகலாம்ன்னு வந்தேன்…”

 

‘அடடா இவ நம்மை நோட் பண்ணியிருக்கா போல, இவகிட்ட கவனமா தான் இருக்கணும்…’ என்று எண்ணிக் கொண்டவன் “ஆமா காஞ்சனா பேசணும்ன்னு தான் நினைச்சேன்…”

 

“சொல்லுங்க சார்…”

 

“நான் உங்ககிட்ட ஏற்கனவே பேசினது தான். நீங்க பதிலேதும் சொல்லவேயில்லை…”

 

“அந்த டிசைன்ஸ்க்கா சார்…”

 

“ஆமா…”

 

“நான் என்ன பண்ணனும்ன்னு நீங்க நினைக்கறீங்க…”

 

“எனக்கு கொஞ்சம் ஹெல்பா இருந்தா போதும்”

 

“ஹெல்ப்ன்னா…”

 

“என்னோட டிசைன்ஸ் எல்லாம் எப்பவும் சரியா இருக்கணுங்கற அவசியம் இல்லை. அதுல உங்களுக்கு தோணின கரெக்ஷன்ஸ் செய்யலாம்…”

 

“புது டிசைன் கூட நீங்க நம்ம கடைக்காக செஞ்சு தரலாம்…”

 

“உங்களுக்கு முழு நேரமும் வேலை இருக்காது. நீங்க எப்பவும் செய்யற வேலையை செய்ங்க… வாரத்துல ரெண்டு நாள் இதுக்காக கொஞ்சம் செலவு பண்ணுங்க…”

 

“இதுக்கான சம்பளம் உங்களுக்கு தனியா கொடுக்கச் சொல்லிடறேன்…”

 

“அவ்வளவு தானா சார்…”

 

“காஞ்சனா உங்களுக்கு நான் கேட்டதை செய்ய விருப்பமில்லைன்ன இல்லைன்னு சொல்லிட்டு போய்டலாம்… நீங்க பேசுறதை பார்த்தா ஏதோ நான் உங்களை கஷ்டப்படுத்தறது போல இருக்கு…”

 

விஸ்வாவிற்கு லேசில் கோபம் வருவதில்லை தான். அவளின் பேச்சு அவனுக்கு அலட்சிய பாவத்தையே கொடுக்க அதில் சற்று கோபம் வந்திருந்தது அவனுக்கு.

 

“நான் உங்களை எதுவுமே சொல்லலையே சார்…”

 

“அன்னைக்கு கேட்டீங்க, அதுக்கு அப்புறம் நீங்க எதுவுமே சொல்லலை. சரி நானும் உங்களுக்கு தேவையில்லை போலன்னு இருந்திட்டேன்…” என்றாள் அவள்.

 

“வாட்?? அன்னைக்கு நான் தான் உங்ககிட்ட தெளிவா சொன்னேன்ல, உங்களுக்கு சரின்னு தோணிச்சுன்னா சொல்லுங்கன்னு…”


“நீங்க தான் எதுவுமே சொல்லவேயில்லையே
??”

 

“நான் வேணாம்ன்னு சொல்லவே இல்லையே சார்…”

 

“அதெல்லாம் விடுங்க, இப்போ சொல்லுங்க, உங்க விருப்பம் என்ன… நான் கேட்டதுக்கு உங்க பதில் எஸ் ஆர் நோ??”

 

“எஸ் சார்…”

 

“தேங்க்ஸ்…”

 

“நான் தான் சார் அதை சொல்லணும்” என்றவள் தன் வேலையை அந்த வாரத்தில் இருந்தே ஆரம்பித்தாள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!