Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மழை 16

இரவு உணவு முடிந்து எல்லோரும் கூடத்தில் ஆங்காங்கே அமர்ந்திருக்க, மஞ்சள் மிளகு போட்ட பாலை மிதமான சூட்டில் ஆற்றி கொண்டு வந்து அன்பழகனிடம் நீட்டினார் புவனா. அதை வாங்கக்கூட செய்யாமல் கவனமின்றி அவர் அமர்ந்திருக்க, “ஏங்க! புடிங்க” என்றதும், கவனம் சிதற, அவர் கொடுத்ததை பெற்றுக்கொண்டார் அவர். “என்ன பாக்குறீங்க அப்படி?” “ம்ம்… எல்லாம் உன் மவன் பண்றது தான்! முன்னாடி பொறுப்பில்லாம இருந்து என் நிம்மதியை கெடுத்தான்! இப்போ ஒரு வாரமா ஓவர் பொறுப்பா இருந்து […]

Readmore

மழை 15

மொட்டை மாடியில் வெறும் தரையில் கையை தலைக்கு கொடுத்து படுத்திருந்தான் மனோகர். இரவு வானின் இருளை அவன் கண்களில் வெறித்திருந்தாலும் மனம் முழுவதும் இரு நாட்கள் முன்பு கெளசி பேசிவிட்டு சென்றதிலேயே தான் நின்றது. கழுத்தில் கிடைந்த சங்கலியை அவள் எடுத்து நீட்டிய நொடி, அதில் இருந்த மங்கல்யத்தை கண்டவனுக்கு தன்னை மீறி ரோமக்கால்களில் சிலிர்ப்பு ஓடியது நிஜம். அதை அவன் கட்டிய நிமிடமும், அதை தொடர்ச்சியும்….மனம் தன்னால் பின்னோக்கி ஓடியது. அந்த நடுநிசி நேரம் வீட்டின் […]

Readmore

மழை 14

“வீட்டுல வயசு பொண்ணு இருக்கும்போது ஆம்பளைபயலுக்கு இப்போ என்ன அவசரங்குறேன்?” வயது மூத்த பெண்ணொருத்தி புவனாவிடம் இதையே தான் வந்தது முதல் கேட்டுக்கொண்டிருந்தார். இன்னும் சற்று நேரத்தில் சொந்தபந்தம், அங்காளி பங்காளி முன்னிலையில் நிச்சய தாம்பூலம் மாற்றப்பட இருக்கும் நேரத்தில், மண்டபம் சூழ ஆட்களை வைத்துக்கொண்டு இவர் இப்படி கேட்டுக்கொண்டே இருப்பது புவனாவிற்கு எரிச்சலை உண்டாக்கியது. “உண்மையை சொல்லு தப்புத்தண்டா எதுவும் நடந்து போச்சா?” ரகசியம் போல கேட்டாலும் அவரது கணீர் குரல் அங்கிருந்தவர்களையும் எட்டிவிட, கூட்டமாய் […]

Readmore

மழை 13

அன்பழகனின் நம்பத்தகுந்த சில ஆட்கள் அந்த இரவு நேரத்தில் நாலாப்பக்கமும் கௌசல்யாவை தேடி சென்றனர். ‘எந்நேரமும் வந்துடுவேன்’ என மழை வேறு அவ்வப்போது இருமலுடன் பூச்சாண்டி காட்ட, தன் பங்குக்கு அன்பழகனும் மனோகரை அழைத்துக்கொண்டு தேட சென்றுவிட்டார். கார் ஓட்டிக்கொண்டிருந்த மனோகருக்கு அத்தனை ஆத்திரமாய் வந்தது. ‘தப்பை சரி செய்யப்பாரு!’ என்று சொன்ன பிறகு அவள் அழுகையை விட்டு வீட்டிற்க்குள் அமைதியாய் வலம் வந்ததை ‘மனமாற்றம்’ என அவன் நினைத்து நிம்மதி கொண்டிருக்க, இப்படி ஒரு கிறுக்குத்தனம் […]

Readmore

மழை 12

  “ஜவுளிக்கடை சுந்தரம் புது அட்டைக்கு மாடல் தரேன்னு வர சொல்லிருக்காரு… நம்ம ஏற்கனவே செஞ்ச சாம்பிளையும் கொண்டு வந்து தரேன்னு சொல்லிருக்கேன் இன்னைக்கு” காலையிலேயே அன்பழகனின் முன்வந்து நின்ற மனோகர் இப்படி சொல்ல, “மணி எட்டு தானே ஆகுது?” என்று கடிகாரத்தை பார்த்தார் அவர். “அவரை பார்த்து பேசிட்டு கயிறு பேக்டரி போனும்! சில கணக்கு சரிபார்த்து ஆடிட்டருக்கு தரனும்!” அவன் குரலே எதிராளி மறுத்து சோள முடியாதபடி பிடிவாதமாய் இருந்தது. அன்பழகன் யோசனையோடே, “அட்டைபெட்டி […]

Readmore

மழை 11

  “அங்க ஒருத்தன் என்னை பார்த்து ‘நீ யாருய்யா கேள்விகேட்க?’ன்னு ஒரு சத்தம் போட்டான். அப்போ கையை முறுக்கிக்கிட்டு அவனை அடிக்க ஓடுனான் பாருங்க! விட்டா சில்லி மூக்கை உடைச்சுருப்பான்! அவ்ளோ கோவம் அவனுக்கு!” முற்றத்தில் அமர்ந்து தன் ‘பத்து நாள் போராட்டக்கதையை’ சொல்லிக்கொண்டிருந்தார் அன்பழகன். “மனோகரு அப்படியா செஞ்சான்?” தனப்பாக்கியம் ‘ஆஆ’ என கேட்டார். “ஆமாம்மா! நானே ஒரு நிமிஷம் அசந்துட்டேன்! நமக்காக துடிக்குறானான்னு!” புவனா, “பின்ன சம்பளம் தர முதலாளியை ஒன்னு சொன்னா கோபம் […]

Readmore

மழை 10

அந்த அந்தக்கார வேளை அத்தனை ஆர்ப்பாட்டமாய் இருந்தது கௌசியின் வீட்டில். கூடைக்கூடையாய் பூக்கள் வந்து இறங்கிக்கொண்டிருந்தன. வாழை இலைக்கட்டும், மேசைகளும், பந்தல் போடுபவர்களும் என அங்கும் இங்கும் ஆட்கள் நடமாடிக்கொண்டிருக்க, வீட்டின் உள்ளே, அரமியத்தின் {முற்றம்} நடுவே நாற்காலி போட்டு அமரவைக்கப்பட்டிருந்தாள் ஆர்த்தி. முகம் முழுக்க மஞ்சள் பூசி, தலை நிறைய பூச்சூடி, புது பட்டு தாவணியில் கண்ணை சுழற்றும் தூக்கத்தை சமாளித்துக்கொண்டு அவள் அமர்ந்திருக்க, அருகே தனபாக்கியம் அமர்ந்து அவள் கைகளில் தங்க வளையல்களை திணித்துக்கொண்டிருந்தார். […]

Readmore

மழை 9

“எதுக்காக என்னை தவிர்க்குற கௌசி?” கொஞ்சம் விட்டால் அழுதுவிடுவேன் என்ற பாவத்தில் நின்றுக்கொண்டிருந்தான் ஹரி. “இப்படி ரோட்ல வழி மறிச்சு நின்னா யாராது பார்த்து பிரச்சனை ஆகும்!” முன்னும் பின்னும் அவஸ்தையுடன் பார்த்துக்கொண்டே சொன்னாள் கௌசி. “அதான் தனியா பேசலாம் வா’ன்னு மூணு நாளா கூப்பிடுறேன்… நீ என் முகத்தை கூட பார்க்க மாட்டேங்குற?” சலித்தவனுக்கு துளிர் கோபம் கூட வந்தது. அவன் அத்தனை தைரியமாய் தன்னிடம் பேச, அதற்கு இடம் கொடுத்த தன்னை மானசீகமாய் கடிந்துகொண்டவள், […]

Readmore

மழை 8

  “என்னடி ரெண்டு நாளா உன் ரோமியோவ ஆளே காணோம்?” கௌசியின் தோழி கிண்டலாய் ஆரம்பித்தாள். மதிய உணவு இடைவெளியில் மரத்தடியில் அமர்ந்து அப்போது தான் உணவு டப்பாவை திறந்திருந்தாள் கௌசி. “யாருடி அந்த ரோமியோ?” அருகே இருந்த இன்னொரு தோழி புரியாமல் கேட்க, ‘சொல்லவா?’ என கௌசிக்கு ஜாடை காட்டி அவளை தவிக்க விட்டவள், “நம்ம கௌசியோட ஆளுடி!” என்றிருந்தாள் மற்றவளிடம். அதை கேட்டவளோ ஏகப்பட்ட திகைப்புடன், ‘நிஜமாவா?’ என்ற வினாக்கொண்டு அவளை பார்க்க, கௌசியின் […]

Readmore

மழை 7

தனப்பாக்கியம் தன் சின்ன பேத்தியை கெஞ்சிக்கொண்டிருந்தார். “இந்த மூட்டு வலியோட ரெண்டு மாடி ஏறி எப்படிடி போவேன்? இந்த ஒருமுறை மட்டும் கொண்டு போய் குடுத்துட்டு வாயேன் என் ராசாத்தி ல?” அவர் கையில் இருந்த தூக்கை இவள் புறம் நீட்டிக்கொண்டிருக்க, அதை கிஞ்சித்தும் கவனியாமல் டிவியில் மூழ்கி இருந்தாள் ஆர்த்தி. “வயசானவ இத்தனை தூரம் இறங்கி வந்து கெஞ்சுறேனே! பேச்சுக்கு மரியாதை இருக்காடி இந்த வூட்டுல? அப்படியே உன் ஆத்தாக்காரியாட்டம் மனுஷன மதிக்காமையே திரிங்கடி!” கெஞ்சி […]

Readmore