Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ32-2 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்

கொல்லை துளசி எல்லை கடந்தால் 32(cont…)   கோபப்பட்டுப் போனவனால் ஏனோ பாதி தூரம் செல்லயியலவில்லை. வேகம் மட்டுமே அவன் மூளையில் இருக்க, வீட்டில் உடல் சோர்வோடு இருந்த பெண் பின்சென்றிருந்தாள்.   சென்று கொண்டிருந்தவன் பார்வையில் விழுந்தது சாலையின் நடுவே இருந்த மதிலுக்கு மறுபுறம் விபத்துக்கு உள்ளாகியிருந்த வாகனமும், போலீசும், ஆம்புலன்சும்! அந்த வாகனத்தின் நிலை பார்த்தவன் மனம் பிசைந்தது.   தன் வாகனத்தின் வேகம் பார்த்தான். மனோவின் கார் 96மயில் வேகத்தைத் தொட்டிருந்தது. இந்த […]

Readmore

அ32-1 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்

கொல்லை துளசி எல்லை கடந்தால் 32   பூமியின் சீதோஷனத்திற்கு ஏற்றார் போல் காலங்கள் மாறும். அலர்விழி வாழ்ந்த இடத்தில் வசந்த காலத்தில் துளிர்க்கும் அழகிய இலைகள், இலையுதிர் காலத்தில் விதவிதமான நிறத்தில் பழுத்து விழுந்துவிடும். அங்கு இலையுதிர் காலம் என்பதால் மரங்களைப் பலவகை நிறங்கள் அலங்கரித்திருந்தது.   இலைகள் மட்டுமா பலவர்ணத்தில்? மக்களும் பச்சோந்திகளாய் நிறம் மாறுவதால், நல்லவன் யார் கெட்டவன் யார் என்று முகத்தைப் பார்த்தோ தோற்றம் வைத்தோ கண்டுபிடிக்க முடிவதில்லை.   முன்தினம் […]

Readmore

அ31-3 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்

கொல்லை துளசி எல்லை கடந்தால் – (கடைசி அத்தியாயம்)   பிரவீன் அலர்விழியோடு உறவாடும் எண்ணத்தோடு நெருங்க,  சில நிமிடங்களில் பெண்ணின் கை கால் இழுத்துக் கொள்ள ஆரம்பித்தது. வலிப்பு போல் ஆரம்பிக்கவுமே 911 அழைத்தான்.   அலர்விழியை ஏந்திக் கொண்டு பிணியூர்தி போக பின்னோடு சென்ற பிரவீன் வாகனத்தின் உருளிப்பட்டை வெடிக்கவும், நிலை தடுமாறிய வாகனம், சாலை ஓரமிருந்த சுவரில் இடித்து உருண்டு பற்றிக் கொண்டு எரிந்தது. சற்றும் எதிர்பார்க்காத விபத்து. வாகன கதவில் Child […]

Readmore

அ31-3 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்

கொல்லை துளசி எல்லை கடந்தால் 31_2 (cont…)     அடுத்த பத்து நிமிடங்களில் பாயல் சென்றுவிட, இருவரும் இரு அறைகளில். பிரவீன் மனம் ஆரவேயில்லை. எபி பற்றி ஏற்கனவே நல்ல அபிப்பிராயம் இல்லை. இன்று மீதமிருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பும் சாம்பலாய் போனது.   அடி வாங்கியதாலோ, மன உளைச்சலாலோ… தலை வலித்தது! போட்டுக் கொள்ளும் மாத்திரையும் இல்லை.   வாங்கிவந்திருந்த மது பாட்டிலோடு அடுக்களைக்குச் சென்றான். என்றாவது மனம் களைக்கும் வேளை ‘வாட்கா’ மட்டுமே […]

Readmore

அ31_2 – Shoba Kumaran’s – கொல்லை துளசி எல்லை கடந்தால்

கொல்லை துளசி எல்லை கடந்தால் 31_2   இலக்கியா கிளம்பவும் பிரவீன் வந்து சேர்ந்தான். அவனும் முடிந்தவரை அலர்விழியை படுத்தக் கூடாது என்று நினைக்கத்தான் செய்தான்! நாய் வாலை நிமிர்த்த முடியாதென்பதால் அவன் நினைப்பும் அப்படி தான் போனது.   மதிய உணவு முடியும்முன் மெல்ல மெல்ல முதுகு வலி ஏறிக்கொண்டே போக, ஒரு கட்டத்தில் அது கழுத்து தலை என்று கிளை பரப்ப ஆரம்பித்தது. வலி பொறுக்க முடியாது மருத்துவன் முன் நின்றாள்.   “ஒரு […]

Readmore

அ31_1 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்

கொல்லை துளசி எல்லை கடந்தால் 31_1   உடன் வேலை செய்த மருத்துவரோடு காலை உணவிற்கு பிரவீன் சென்றிருக்க, அவனில்லாத அந்த திங்கட்கிழமை காலை மிகவும் ரம்மியமாகவே புலர்ந்தது அலர்விழிக்கு.   முன்தின முதுகு வலி மட்டும் அலர்விழியை விட்டு போகமாட்டேன் என்று ஒட்டிக் கொண்டிருக்க, வலியை அதிகப்படுத்த மருத்துவன் இல்லாதது பெருத்த ஆறுதல். உதவியோடு காலை செய்த வெண்பொங்கல், இட்டி, சட்டினி, வடை, சாம்பார் அமோக வரவேற்பைப் பெற, பாடில்லாமல் சென்றது காலை உணவு.   […]

Readmore

அ30-2 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்

கொல்லை துளசி எல்லை கடந்தால் 30_1 (cont)   “என்ன டாக், நின்னுடீங்க?”   “அவன லவ் பண்றியா?”   கீற்றாய் புன்னகை வந்தது. “இதில ஷாக் ஆக என்ன இருக்கு டாக்?”   “விளையாடுறியா அலர்விழி?”   “இதில விளையாட என்ன இருக்கு? அவர் அநியாயத்துக்கு ஸ்மார்ட் தான்! அதுக்காக நான் அவருக்குப் பொருத்தமில்லையா என்ன? நாங்க நல்ல பேர் தான் டாக். மேட ஃபார் ஈச் அதர்!”   ஓரளவிற்கு எதிர்பார்த்தான் தான்! இருந்தும் […]

Readmore

அ30_1 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்

கொல்லை துளசி எல்லை கடந்தால் 30_1   மாலை நேரம் வீடு மீண்டும் அதன் இயல்புக்கு மாறியது. மதியம் உணவில் மீதமிருந்த சிக்கன், மட்டன் பஃப்சாக பாயல் மாற்றிக் கொண்டிருக்க, எபி டீ போட இஞ்சியை இடிக்க ஆரம்பித்தான்.   நடமாடும் உயிரினங்களை உண்ணாதவனுக்காக, பஃப்சிற்கு உள்ளே வைக்க, உருளைக்கிழங்கு-பச்சைப்பாட்டானி மசாலாவை தயாரித்துக் கொண்டிருந்தவளை பாரத்த எபி வாய் திறந்தானில்லை.   “இப்போ டீ வேண்டாம் மனோ. இந்த பஃப்ஸ் ரெடி ஆகிறதுக்கு பத்து நிமிஷம் முன்ன […]

Readmore

அ29_2-2- Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்

கொல்லை துளசி எல்லை கடந்தால் 29_2(cont…)   கதவு ‘டமார்’ என்று திறக்கப்பட, கூடவே, “யாரு அது… பொண்ணுக்கிட்ட வம்பு பண்றது?” என்ற பலமான சத்தமும் வர, பார்க்காமலே, வந்தது யார் என்று தெரிந்தது இருவருக்கும். அவள் நின்று கொண்டிருந்த நிலையில், எப்படி அவனைச் சந்திக்க? எபியின் நெஞ்சுக்குள் சுருண்டு கொண்டாள் அலர்விழி.   அணைத்திருந்தவனை இறுகப்பற்றவுமே, “என்ன டி? இவனுக்கு எல்லாம் இவ்வளவு சீன் குடுத்துகிட்டு” என்றவனிடம், “ப்ளீஸ் மனோ நகந்துடாதீங்க..” என்றவளுக்குத் தவிப்பாய் போனது. […]

Readmore

அ29_2-1 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்

 கொல்லை துளசி எல்லை கடந்தால் 29_2   கேலியும் கும்மாளமும் போதவில்லை என்று பாயலின் பக்கத்து வீட்டு வாண்டுகள் மூன்று வந்திருக்க, பிள்ளைகளோடு பிள்ளைகளாக மாறி ஆட்ரேயும் எபியும் விளையாட, குட்டிகளில் சத்தம் காதை அடைத்தது.   பிள்ளைகள் படுக்கையறைக்குள் ஒளிந்து விளையாட ஆரம்பிக்கவும், எபி விளையாட்டை முடித்துக்கொண்டான். அறைக்குள் அமர்ந்திருந்த பிரவீனுக்கு இம்சையான மனநிலை. உள்ளே எழுந்த கூச்சலில் அமர முடியாமல், வெளியே வந்துவிட்டான்.   விளையாட்டு வாக்கில் ஒரு குட்டிப்பெண், கதவை உள்பக்கம் பூட்டிக் […]

Readmore