Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

praveenraj
Reaction score
3,345

Profile posts Latest activity Postings About

  • காதலுக்கு வயதேது?
    காதலிக்க வயதேது?
    அன்றாடம் பூக்களும் பூக்கிறதே?
    அன்றாடம் நாட்களும்
    விடிகிறதே?
    இன்று போய் நாளை வா
    இது யுத்தத்திற்கு மட்டுமில்லை
    முத்ததிற்கும் பொருந்தும்...
    காதல் செய்யுங்கள்
    காதலிக்க செய்யுங்கள்
    இதயம் காதல் வசப் படட்டும்
    அகிலம் காதலால் வசப் படட்டும்...
    Bid Adieu TNW?? Thanks for your support. Signing off ? Desocializing
    காரிகை வாசம்
    காற்றில் கமழ (மண்வாசம்)
    தூரிகை முழுதும்
    நின்முகம் தீட்ட (மழையின் சாரல்)
    பேரிகை எங்கும்
    உன்பெயர் முழங்க (இடி முழக்கம்)
    நீயும் காரும் ஒன்றோ? (கார்காலம்)
    உங்கள் வருகையில்
    நானும் கலாபம் ஆகிறேன் (ஆண்மயில்)
    காலமும் நித்தியம் ஆகாதோ?
    இந்த
    ஆனந்த தாண்டவம் தொடராதோ?
    (பேரிகை - இசைக்கருவி, நித்தியம் - ஆதி அந்தமற்ற நிலை)
    சமீப காலமாக நான் அதிகம் முணுமுணுக்கும் பாடல் வரிகள்
    எறும்புகள் சுமந்து போகுதே
    சக்கரை பாறை ஒன்றினை
    இருதயம் சுமந்து போகுதே
    இனிக்கின்ற காதல் ஒன்றினை
    என் சின்ன நெஞ்சின் மீது
    இன்ப பாரம் ஏற்றி வைத்தார்?
    கம்பன் சொல்ல வந்து ஆனால்
    கூச்சங்கொண்டு எழுதா ஓர் உவமை நீ
    எல்லோரா சிற்பங்கள் உன் மீது காதலுறும்
    உயிரே இல்லாத கல் கூட காமமுறும்
    உன் மீது காதல் கொண்ட மானுடன் தான் என்ன ஆகுவான்?
    இப்படிபட்ட கற்பனைகள் எப்படி வருகிறது??Intriguing
    வறண்ட பூமியில்
    வருணனின் கொடை போல்...
    ஏகாந்த வேளையில்
    ஏழிசை ஸ்வரமாய்...
    கடற்கரை மணலில்
    கவிஞனின் கற்பனை போல்...
    கூடலின் உச்சத்தில்
    காதலின் மிச்சமாய்...
    என் நெஞ்சின் அறை தனில்
    உன் மைவிழிச் சித்திரம் போல்...
    திக்கற்ற காட்டில்
    திசைகாட்டும் விண்மீனாய்...
    வழிப்போக்கன் வாழ்க்கையில்
    வழித்துணை வருகை போல்...
    எதாக நீ எதிர்படுவாயென
    எதிலும் உன்னை எதிர்பார்க்கும் எதிர்பார்ப்புகளுடன் நான் ♥️
    என் சிரிப்பின் ஒரு சிட்டிகை சேர்த்து
    என் தவிப்பின் ஒரு துளி தெளித்து
    என் அழகின் ஒரு சுவை கூட்டி
    என் நாணத்தின் சில நிறம் தூவி
    என் இதய அறையில் செய்யப்பட்ட
    இந்தக் காதல் பானத்தை
    என்று பருக நீ வருவாயோ?
    காலமும் உனக்காக நான் காத்திருப்பேன்...
    ஆனால் இந்தக் காதல் பானமும் அதுவரை உறைந்திருக்குமோ?
    விடையை உன்னிடம் கொடுத்து
    கேள்விகளுடன் நான்? உன் சமையலறையில் (இதயம்) நான்
    உப்பா? சக்கரையா?
    உன் குறுநகை
    போலொரு
    பன்மொழி கவிதை
    ஒன்றை நான்
    இதுவரை
    வாசித்ததே இல்லை...
    நீ கவிதை என்றால்
    நான் கவியா?
    கவிதைதாசனா சொல்?
    நிரந்தரமில்லா வாழ்வில்
    நிரந்தரமற்ற க்ஷணம்
    மட்டுமே நிரந்தரம்
    என்று உணரும் வேளையில்
    ' நீ ' மட்டுமாவது நிலைத்திருக்க
    நித்தமும் நினைக்குதே மனம்...

    இதன் பெயரும் காதலோ?
    அஞ்சனா ♥️ நவிரன்
    குழந்தையா?
    குமரியா?
    குழப்புகிறாய்...
    உன் அராத்து செய்கையில்
    ஆர்ப்பரிக்கும் முன்னே
    உன் அடாவடியால்
    என்னை அடிமைப்படுத்தி
    ஆச்சர்யமூட்டுகிறாய்...

    கண்ண கண்ண கண்ண
    உருட்டி உருட்டி என்னை மெரட்டுனா
    நான் என்ன சிறு பிள்ளையா?

    வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்(ள்)
    நவிரன் அஞ்சனா விரைவில்...
    Kindly recap earlier episodes...
    எதிர்பார்ப்புகள்
    ஏமாற்றங்களை தரும்
    என்றாலும்
    ஏனோ
    என்னால்
    எதிர்பார்ப்புகளை
    எதிர்பார்க்காமல்
    என்றும் இருக்க முடிவதில்லையே?

    என்றும் அன்புடன்
    எதிர்பார்ப்புகளின் ஏதிலி (refugee)
  • Loading…
  • Loading…
  • Loading…
Top