Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 4 1

Advertisement

Admin

Admin
Member
ஹாய் FRIENDS,

அனைவருக்கு இனிய ஆயுத பூஜை , விஜயதசமி நல்வாழ்த்துக்கள். நாம் அனைவரும் கல்வி , செல்வத்துள் சிறக்க நம் இறைவ இறைவியை வணங்கிக் கொள்வோம். மல்லிகா இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல் லா முடிக்காம நிக்குற கதையெல்லாம் முடிச்சு விரைவில் ஒரு பெரிய கதையை விரைவா எழுதணும்னு வேண்டிக்கறேன்.

அப்புறம் ஒரு வேண்டுகோள் உங்க எல்லோர் கிட்டயும், இந்த youtube வீடியோல precap போடறது எங்க ஒரு புதிய முயற்சி. இப்போ தான் நாங்களே கத்துக்கறோம். அதனால அந்த வீடியோ நல்லா வர நாள் ஆகும். போட போட தானே அதுல இருக்குற குறைகள் தெரிஞ்சு அதை சரி செய்ய முடியும்.

அதாகப்பட்டது ரீடர்ஸ் இல்லைன்னா நாங்க இல்லை , எழுதறது எதுக்கு படிக்க தானே , இந்த முயற்சி கண்டிப்பா நல்லா வரும் , அதுவரை கொஞ்சம் பொறுமை தேவை , வீடியோ போட்டு ஒரு அரை நாள் விட்டு தான் precap எழுத்துல போடுவோம். இல்லைன்னா நாங்க சிரமப் பட்டு பண்ற வீடியோ உங்க எல்லோரையும் வந்து அடையாது. இது கூட வீடியோ நல்லா வந்து உங்களுக்கு பழகும் வரை தான்.

precap க்காக youtube வீடியோ ஸ் கிடையாது. நம்ம ஸ்டோரி ஆடியோ புக்ஸ் காகத் தான் இது. நம்ம பசங்க நிறைய பேருக்கு இப்போ இருக்கிற தலைமுறைல தமிழ் படிக்கவே தெரியறதில்லை. சோ அதுக்கான முயற்சி இது. அவங்களையும் நம்ம கதைகள் ரீச் பண்ணும் முயற்சி. அதுக்கு கொஞ்சம் நாள் பிடிக்கும். அதுவரை youtube பழக தான் இந்த முயற்சி.

KINDLY COOPERATE WITH US!

எங்களோட புது முயற்சிக்கு நீங்க துணை நிற்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இன்னும் நிறைய நிறைய ப்ளான்ஸ் இருக்கு. அதை நடைமுறைபடுத்த நேரமில்லை. அவ்வப் போது இந்த மாதிரி புது முயற்சி வரும் போது வேண்டாம்னு சொல்லாதீங்க. கண்டிப்பா அதை இன்னும் நல்லா கொடுக்க முயற்சிப்போம்.

சில பேர் கதை முடிச்ச பிறகு போடலாம்னு கூட சொல்றீங்க , கதையை பாதில விடணுன்றது intension கிடையாது. சில தவிர்க்க முடியாத சூழல்கள் முடிக்க முடியலை, கண்டிப்பா முடிச்சிடுவேன். இங்க வராம புக்காவும் வராது. நான் எழுத்தாளார் ஆன பிறகு ஆன்லைன்ல எழுதலை , ஆன்லைன்ல எழுத ஆரம்பிச்சு தான் எழுத்தாளர் ஆனேன். சோ இங்க எழுதாம என்னால எழுத முடியாது. என்னை என் வழில வேலை செய்ய விடுங்க.

THERE ARE A VERY FEW WHO ARE TRYING TO DICTATE THINGS, KINDLY DON'T DO THAT.
THANKS TO MY FRIENDS WHO STAND WITH ME, I DON'T CALL THEM AS JUST READERS , ALL ARE VERY SPECIAL TO ME.

THANK YOU VERY MUCH FOR YOUR SUPPORT AND ENCOURAGEMENT


அத்தியாயம் நான்கு:

“என்ன மாமா, என்ன விஷயம்?” என்று தன் முன் வந்து நின்ற ராமுவிடம் கேட்க,

“கரண்ட் பிரச்சனை தம்பி, இந்த மாசமாவே இருக்குறதுதான், இப்போ ரொம்ப அதிகமா இருக்கு, இப்போ நமக்கு கொள்முதல் அதிகம், இப்போ இந்த பிரச்சனைனால வேலை தாமதமாகுது”

“நாம தான் ரெண்டு மூணு முறை சொல்லிட்டோம், புகார் எழுதியும் வெச்சிட்டோம், சரி பண்றேன்னு சொன்னவங்க என்ன பண்றாங்க? நான் இன்னைக்கு என்னன்னு பார்க்கறேன்?” என்றான்.

“தம்பி” என்று அவர் இழுக்க,

“என்ன மாமா சொல்லுங்க?”

“அந்த கரண்ட் ஆபிசுல வந்திருக்குற புது ஆஃபிசரு ஆத்மன் ஐயாக்கு வேண்டப்பட்டவர்ன்னு ஒரு சேதி”

“அப்படியா நல்லா தெரியுமா?”

“அதுவும் தெரியலை பேச்சு தான்”

“சரியா தெரிஞ்சு சொல்லுங்க என்னன்னு பார்த்துடலாம், இவ்வளவு நாளா இல்லாம இப்போ என்ன புதுசா?”

ஆம்! இந்த சில வருடங்களாக எந்த தொல்லையும் இல்லை, தற்போது ஏன் என்ற கேள்வி ராஜராஜனின் மனதினில் உதித்தது. ராஜராஜன் தலையெடுத்த பிறகு ஆத்மனால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை. ராஜராஜன் முரடனாய் இருக்க ஏதாவது செய்ய ஆளை அனுப்பினால் அவர்கள் மோசமாய் தாக்கப்பட்டனர்.

இப்போது வரை ஆத்மனை ராயரின் வீட்டினர் திருப்பி அடிக்கவேயில்லை. ஏன் தடுக்க கூட இல்லை, ஊருக்கு ஒரு பிரச்சனை என்றால் போய் நிற்பர். அதுவே அவர்களுக்கு என்றால் என்னவோ நடக்கட்டும் என்று விட்டு விடுவர். அவர்களின் தப்பிற்கு பிராயச்சித்தமாய் இதனை கடை பிடித்தனர். பிள்ளைகள் அனைவருக்கும் இது முட்டாள் தனமாய் தோன்றும் ஆனால் ராயரும் சுவாமிநாதனும் இதில் ஸ்திரமாய் இருந்தனர்.

ராஜராஜன் தலையெடுத்த பிறகு அவன் தடுக்க ஆரம்பித்தான். அப்போதும் அவனாய் எதுவும் தொல்லை கொடுக்கவில்லை. தாத்தாவிடமும் பெரியப்பாவிடமும் சொல்லிவிட்டான். நானாய் போகவில்லை ஆனால் வருவதை விடமாட்டேன் என்று.

ஆத்மனும் போதும் என்று நினைத்தாரோ என்னவோ விட்டு விட்டார். இப்போது அவராய் இருந்தால் ஏன் என்ற கேள்வி உதிக்க?

ராமுவிடம் அதற்கு பதில் இருந்தது, “இப்ப சில மாசம் முன்ன உங்க கல்யாணம் உங்க அத்தை பொண்ணோடன்னு அவர் காதுக்கு போயிருக்கு போல” என தயங்கி சொல்ல..

ராஜராஜனின் முகம் தீவிரத்திற்கு மாறியது.

“அது கல்யாணம்னு பெருசா நடக்கலை, உங்களோட சேர்ந்தும் இருக்கலை, அதனால இப்போதான் தெரிஞ்சது போல”

“இவ்வளவு நாளா பெரியப்பா வார்த்தைக்காக விட்டேன், அப்போவும் நாம திருப்பி அடிக்கறோம்னு தெரிஞ்ச பிறகு தான் அவன் விட்டான், இப்போ மட்டும் இது அவனோட வேலையா இருக்கட்டும், திருப்பி எல்லாம் அடிக்க மாட்டேன், நான் புதுசா அடிக்கறேன்” என்று சொன்ன ராஜராஜனின் முகத்தினில் இருந்த ரௌத்திரம்,

“ரௌத்திரம் பழகு” என்று சொல்லத் தூண்டியது.

அவன் அவ்வளவு கோபமாய் பேசிக் கொண்டிருக்கும் போது நாச்சியம்மால் வர, எப்போதும் இருக்கும் துறுதுறுப்பு அவரிடம் இல்லை சோர்வாய் வந்தார்.

“என்ன கிழவி?” என்று அவரிடம் சென்றான்.

பதில் பேசாமல் அவனை பார்த்தார்.

“எதுவோ சரியில்லை?” என்று புரிந்தவன், “வா வந்து உட்காரு” என்று அவரை அழைத்து வந்து அவனின் இருக்கையில் அமர்த்தி, “மாமா, டீ ஒன்னு வாங்கிட்டு வாங்க” என்று அனுப்ப,

இதோ தம்பி என்று அவர் விரைந்தார்.

“என்ன கிழவி பண்ணுது?” என்றான் அக்கறையாய்.

“தெரியலை உடம்புக்கு என்னவோ பண்ணுச்சு, அதான்யா உன்கிட்ட சொல்லலாம்னு வந்தேன்” என்றார்.

“ஏன் உன்கூட உன் பேத்தி இருப்பாளே?”

“சொல்லலையா, சொன்னா பயந்துக்குமோ என்னவோன்னு”

“அதெல்லாம் பயப்படற ஆள் கிடையாது, உன்னை உடனே ஆசுபத்திரிக்கு கூட்டிட்டு போயிருக்கும், நீ வா நாம போகலாம்” என்றவன் காய்ச்சல் அடிக்கின்றதா என்று தொட்டு பார்க்க, லேசாய் காய்ச்சல் இருந்தது.

“காய்ச்சல் இருக்கு, வேற என்ன பண்ணுது?” என்றான்.

“வயிறு வலிக்குது, வயித்தாலையும் போகுது”

“சாப்பிட்டது சேராம இருக்கும், வா ஒரு குளுக்கோஸ் போட்டா சரியாகிடும்” என்றான்.

அவன் கைபிடித்து எழுப்ப எழுப்ப வே மயங்கி சரியபயந்து விட்டான்.

“டேய் யாருடா இருக்கீங்க?” என்று அவன் கத்திய கத்தலுக்கு அங்கிருந்தவர்கள் ஓடி வர,

“என்ன வண்டி இருக்குடா?” என்று பார்க்க சொல்ல லோடு ஏற்றும் மினி வேன் இருக்க, அவனே நாச்சியம்மாளை தூக்கினான்.

“அண்ணே நாங்க ஒரு கை பிடிக்கறோம்” என்றவர்களிடம்,

“டேய் அசல் ஆளுங்க எல்லாம் தொட விடாதுடா என் கிழவி, அப்புறம் என் குரவலைய கடிச்சிடும், வண்டிய எடுங்கடா” என்று சொல்லி,

விரைவாய் அங்கிருந்த அரசு மருத்துவமனைக்கு சென்றான்.

அங்கே அதுதான்! பெரிய மருத்துவமனைகள் என்ன, சின்ன மருத்துவமனைகள் கூட கிடையாது.

சாயங்கால நேரம் கிளினிக்கிற்கு வருவார்கள் ஒன்றிரண்டு டாக்டர்கள். அரசு மருத்துவமனையிலும் டாக்டர்கள் இல்லை. கேம்ப் சென்றிருந்தனர். அங்கிருந்த நர்ஸ் ட்ரிப்ஸ் போட, அவர் கண்விழிக்க காத்திருந்தவன், வீட்டில் இருக்கும் அம்பாசிடரை எடுத்து வரச் செய்தவன், அதில் அவரை ஏற்றி பக்கத்தில் இருபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நகரத்திற்கு சென்றான்.

பின்பு அங்கே அவரை சேர்க்க, அவர்கள் எல்லாம் டெஸ்டும் எடுத்து உணவு ஒவ்வாமை என்று சொல்லி மீண்டும் க்ளுகோஸ் ஏற்ற,

“என்ன கிழவி, நீயும் உன் பேத்தியும் சமைச்சு சாப்பிடறீங்க, இப்படி இழுத்து வைக்கிற அளவுக்கு” என்று அவன் கேட்க,

“ராஜா அவ கிட்ட சொல்லணும்டா, காலையில உன்னை பார்க்க போறேன் சொல்லி வந்தேன். புள்ள பயந்துக்கும் என்ன இன்னும் காணோம்னு” என்று சொல்ல,

“அதெல்லாம் தகவல் சொல்ல சொல்லிட்டேன்” என்றான்.

அதற்குள் இவனின் வீட்டினில் இருந்து பெரியப்பா, பெரியம்மா, அப்பா, அம்மா வந்தனர்.

வந்தவுடனே பெரியப்பா பொறியத் துவங்கினார், “வயசாச்சுன்னு உங்களுக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா, வீட்டுக்கு வந்து மருமகள்களை ஏவி வேலை வாங்கிட்டு சௌகரியமா உட்கார்ந்து இருக்காமா, ஏம்மா அங்க இங்க போய் தங்கி இப்படி பண்றீங்க?” என்று கத்த,

இவனின் அப்பா, “என்னம்மா நீங்க? அப்பா சில வருஷமா படுக்கையில இருந்தார், அவரை கவனிக்கவே முழு நேரமும் இருந்தீங்க, சிரமப்பட்டீங்க. இப்போ ஹாயா இருக்குறதை விட்டு அந்த பொண்ணோட போய் இருக்கீங்க. அங்க வேலைக்கும் ஆள் இல்லை, நீங்களே செய்யறீங்க” என,

“அங்க இங்க, அந்த பொண்ணு” அங்கையர்கன்னியை பற்றி இப்படி பேசியவர்களை தில்லை வெறித்து பார்க்க, பெரியப்பாவை எதுவும் பேச இயலாதவனாக ராஜராஜன் அப்பாவை முறைத்து பார்த்தான்.

“டேய், சமையல் மட்டும் தான் நானு, பாக்கி எல்லாம் என் பேத்தி தாண்டா செய்யறா”
 
Hi,
அடடா பாட்டி பாவம்
எப்படியோ பேரனை தேடி வந்துட்டாங்க..
பெரியப்பா மட்டும் தான் ரொம்ப எதிர்ப்பு
அவரை சரிகட்டிட்டா
போதும்...
 
Last edited:
???

பெரியப்பாக்கு பயம்.....
தில்லைக்கு மரியாதை போலவே......
வீட்டுக்காரர் மூடிக்கிட்டார்......
பையன் முறைக்கிறான்......

அப்போ அம்மாவும் பையனும் துணிஞ்சு இறங்கினால் அங்கையை சேர்த்துக்குவாங்களோ.......
 
Last edited:

Advertisement

Latest Posts

Top